அத்தியாயம் 11

4.7
(15)

வீட்டில் இருந்து கிளம்பிய இன்னுழவன் நேரே வந்து சேர்ந்ததென்னவோ சோமசுந்தரம் இல்லத்திற்கு தான். வாசலில் பைக்கை ஸ்டாண்ட் போட்டு இறங்கிய அவனை உள்ளே இருந்து பார்த்துக்கொண்டார் சோமசுந்தரம்.

முகமதில் புன்னகை மலர “வா இன்னு…” என புன்முறுவலுடன் அவர் வரவேற்க, அவ்விடம் வந்து சேர்ந்தார் பழனியும்.

“என்ன பழனி அண்ணா நல்லா இருக்கீங்களா?”

“எனக்கென்ன தம்பி உங்களுடைய தயவுல சந்தோசமா இருக்கேன்.” இருவரும் பேசிக் கொண்டிருக்க வாசல் வரை சென்று விட்டார் சோமசுந்தரம்.

“சரி தம்பி நீங்க பேசிக்கிட்டு இருங்க நான் கொஞ்சம் வேலை இருக்கு பாத்துட்டு வரேன்” என்று பழனி அங்கிருந்து நகர்ந்தார்.

“வா இன்னு உள்ள போலாம்…” என்றவரை தடுத்து “இல்ல மாமா இதோ திண்ணையில நல்லா காத்து வருது இங்கேயே உட்கார்ந்துக்கலாம்” என்று திண்ணையில் அமர்ந்தான் இன்னுழவன் பாதம் தழுவிய வேஷட்டியை கால்களோடு மடித்து.

“ரொம்ப நன்றி இன்னு இந்த வீட்ட இத்தனை வருஷமா நீ பேணி பாதுகாத்துட்டு இருந்திருக்க. இந்த ஊருக்குள்ள நான் இன்னைக்கு தைரியமா வர்றதுக்கு காரணமாகவும் நீ இருக்க” காலையில் சக்திவேலுடன் நடந்த உரையாடலை எண்ணிக் நன்றி கூறியவர்…

“சரி என்ன சாப்பிடுற இன்னு, இரு உனக்கு நான் ஏதாவது எடுத்து வர சொல்றேன்” என்ற ஆர்வமாய் கேட்டார்.

“இப்ப ஏதும் வேண்டாம் மாமா பொறவு பார்த்துக்கலாம். அப்புறம் இது உங்க வீடு என் வீடு இல்ல மாமா, நம்ம வீடு. அத எப்படி நான் பூட்டி போட விடுவேன்.

இன்னொன்னும் நான் சொன்னது ஞாபகம் இருக்கட்டும் எனக்கு முன்னாடி இந்த உலகத்தை பார்த்தது நீரு தான். இந்த உலகத்த மட்டும் இல்ல இந்த வானம் பார்த்த பூமியை பார்த்ததும் நீரு தான்.

உமக்கு அப்புறம் தான் நான் இந்த பூமியில் பிறந்தேன், சொல்லப் போனா எனக்கு முன்னாடி சொந்தக்காரன் இந்த பூமிக்கு நீருதான்றது நினைப்புல இருக்கட்டும்” என்றவன் முகமது சற்று வாட “இப்பதான் உங்களுக்கு இன்னு இன்னுன்னு வாயி நிறைய கூப்பிட்டு இப்பிடி உரிமையா பேச தோணிச்சா மாமா?” என்றான் குரல் தளர்ந்து.

அவன் கேட்டதில் சோமசுந்தரமோ தலை குனிந்தவர் , “இந்த மாமன மன்னிச்சிரு இன்னு… என்னால என் நிலைமை என்னன்னு” மனம் சொல்லி துடித்தவகைளை அடக்கியவர்,

“எவ்ளோ கோவம் இருந்தாலும் நீ மாமன அடிச்சுக்கோ ஓகேவா” என்றவர் அவன் தோள் பிடித்தார்.

“அட போ மாமா உங்கள அடிச்சிட்டு உங்க அக்காகிட்ட நானா பாடுபடுறது” என்றவன் நகைக்க அவனுடன் அமர்ந்தார் சோமசுந்தரமும்.

இன்னுழவனோ நிசப்தமான வீட்டுக்குள் விழிகளை சுழல விட்டவன், “சரி கல்யாண வீடு சொன்னீங்க எங்க உங்க புள்ளைங்க யாரையும் காணோம்” என்றான் யோசனையுடன்.

“ரெண்டு பேருக்குமே பிசி ஸ்கெட்டியூல் இன்னு. பொண்ணு இன்னைக்கு ஈவினிங்குள்ள வந்துருவா, பையன் நாளைக்கு கல்யாணத்துக்கு வந்துருவான்.

அத்தைக்கு நைட்டு வந்த டிராவல் காலையில இன்னைக்கு நடந்து டென்ஷன் எல்லாம் தலைவலி அதான் படுத்து இருக்கா.

இரு நான் போய் எழுப்பிட்டு வரேன்” என்றவர் எழும்ப..

அவரை தடுத்தவன், “இல்ல மாமா அவங்க ரெஸ்ட் எடுக்கட்டும் ஒன்னும் பிரச்சனை இல்ல” என்றவனாய்…

“சரி மாப்ள வீட்டுக்காரங்க யாரையும் காணும்? அவங்களுக்கு இங்க தங்க வசதி இருக்குமா இல்லன்னா வேற எதுவும் அரேஞ்ச் பண்ணட்டுமா?” என்றான் அக்கறையோடு.

“நீ கேட்டதே போதும்டா ராசா… அவங்க எல்லாரும் டவுன்ல லாட்ஜில தங்கி இருக்காங்க. இங்க கல்யாணத்த வைக்க சம்மதித்ததே பெரிய விஷயம்.

காலைல அவங்க முகூர்த்தத்துக்கு நேரே கோவிலுக்கு வந்துருவாங்க.

முகூர்த்த முடிஞ்சு கையோட கிளம்ப வேண்டியது தான்” என்றார் பெருமூச்சு தன்னை விட்டு சோமசுந்தரம் மனதில் இங்கு இருக்கும் ஆசை இருந்தாலும் அதை பொருட் படுத்தாதவராய்.

“ஏன் மாமா உடனே நீயும் கிளம்ப போறியா…?”

“ஹிம்… கிளம்பி தானட ஆகணும் இந்த ஊர்ல எனக்கு சந்தோஷமா நிம்மதியா இருக்க கொடுத்து வைக்கவில்லையே…” என்றார் அவர் விரக்தியாய் அவன் முகம் பார்த்து.

“ஏன் மாமா நீங்க சந்தோஷமா தானே இருக்கீங்க? உங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லையே. முக்கியமா இந்த கல்யாணத்தில் இந்த பிரச்சனையும் இல்லையே. எல்லாரோட சம்மதத்தால தான இந்த கல்யாணம் நடக்குது?” கேட்டான் அன்று நிவர்த்தனனுடன் அவர் பேசிய உரையாடலை கேட்டதை குறித்து.

அதை அவரும் புரிந்து கொண்டவர், “எல்லாரோட சம்மதத்தோடு தான் நடக்குது இன்னு” என்றார் வேகமாக.

“அப்புறம் ஏன் அன்னைக்கு நிவர்… நிவர்…” நிவர்த்தனன் பெயரை யோசித்தவன் அது சிந்தையில் பிடிபடாது போக “பையன் பெயர் என்ன மாமா?”

“நிவர்த்தனன்”

“ஹான் நிவர்த்தன்ன அவன் எதுக்கு அன்னைக்கு அப்படி பேசினான்? அவன் அக்கா விஷயத்துல நீங்க ரொம்ப சுயநலமா இருக்கிற மாதிரி பேசினானே! போன்ல நான் கேட்டுட்டு தான் இருந்தேன். உங்களுக்கு சொல்லணும்னு தோணுச்சுன்னா நீங்க சொல்லலாம் என்கிட்ட” என்றான் மாமனவனுடன் நண்பனாய் பேச்சை வளர்த்து.

சற்றென்று அவன் கேள்வியில் திடுக்கிட்டார் சோமசுந்தரம். அதையும் தன் மனக்கண்ணில் பதித்துக் கொண்டான் அவர் அறியாது இன்னுழவன்.

எச்சிலை விழுங்கியவர் “அது ஒன்னும் இல்ல இன்னு அவளுக்கு இப்ப இப்போ கல்யாணத்துல இன்ட்ரெஸ்ட் இல்ல இன்னு. கொஞ்ச நாள் கழிச்சு கல்யாணம் நடக்கணும்னு ஆசைப்பட்டா.

ஃபாரின்ல இருந்து படிச்சிட்டு இப்பதான் ஒன் இயரா இங்க இருக்கிறா. இன்னும் கொஞ்ச நாள் எங்க கூட இருக்கணும்னு அவ நினைச்சா போல அதுக்குள்ள உங்க அத்தை கல்யாணத்தை பிக்ஸ் பண்ணிட்டா, அதுவும் லண்டன் மாப்புளைக்கு.

அதான் அக்காவோட சந்தோஷத்த நீங்க பறிக்கிறீங்கன்னு நிர்வத்தனா கோபப்பட்டுட்டு இருந்தான். வேற ஒன்னும் இல்ல” என்ன ஏதேதோ சொல்லி சமாளித்துக் கொண்டார் சோமசுந்தரம்.

அனைத்தையும் கேட்டவன், “உங்க பொண்ணு அதான் என் மாமா மக எப்போ ஃபாரின் போனா…?”

“12த் ஸ்கூல் முடிச்ச கையோட ஃபாரின் போயிட்டு அங்கேயே படிச்சு முடிச்சு இன்டெர்ன்ஷிப் எல்லாம் கிளியர் பண்ணிட்டு தான் இங்க வந்தா” என்றார் சோமசுந்தரம் பாதி உண்மையும் மறைத்து.

“ஓகே திரும்பியும் ஃபாரின்னா கொஞ்சம் கஷ்டம் தான், இன்னொரு வருஷம் கழிச்சு கல்யாணத்தை வச்சிருக்க வேண்டியது தானே மாமா மாப்பிள்ளை வீட்டுல பேசி” இன்னுழவன் கேட்க,

மனதுக்குள் புலம்பிக்கொண்டார் சோமசுந்தரம் “மாப்பிள்ளைகிட்டயே நான் இன்னும் பேசினதில்ல இதுல மாப்பிள்ளை வீட்ல பேசிட்டாலும்” என்று.

“இல்லப்பா போகப் போக சரியாயிடுவா. அக்காவுக்கு ஒன்னுனா தம்பி தான் தாம் தும்னு குதிக்கிறான், அவ்வளவு தான் வேற எந்த பிரச்சனையும் இல்ல” என்றார் சோமசுந்தரம்.

“உங்கள மாதிரி அக்கா மேல அவ்வளவு பாசம் போல” நிவர்த்தனன், மேக விருஷ்டி பிணைப்பை கண்டு நகைத்தான் இன்னுழவன்.

அனைத்தும் கேட்டவன் மாமன் மகள் பற்றிய முழு விவரமும் கேட்காது விட்டு விட்டான். கேட்டிருந்தால் மனம் கவர்ந்தவளின் மனமில்லா இத்திருமணத்தை நிறுத்திருப்பானோ என்னவோ!

அக்கா என்று கூறிய பின்பு தான் சோமசுந்தரத்திற்கு தனது சகோதரி கோதாவரி நினைவுக்கு வந்தார்.

“என் அக்கா நல்லா இருக்கா டா இன்னு. சந்தோஷமா இருக்குல” என்ன தளர்வாய் கேட்டவரிடம்,

“அவங்களுக்கு என்ன நல்லா இருக்காங்க. என்ன தினமும் ஒரு நாளைக்கு 50 நேரமாக உங்கள பத்தி யோசிச்சு புலம்பாம இருக்க மாட்டாங்க” என்றான் இன்னுழவன் இதழ் விரியா நகையுடன்.

“தூக்கி வளர்த்தவளுக்கு என்னாலயே கஷ்டத்த கொடுத்திட்டேன்னு நினைக்கும் போது மனசு ரணமாகுது டா இன்னு” என்றார் சோமசுந்தரம் கவலையுடன்.

மாமன் அவன் வாடிய முகம் பார்த்து தாங்காதவன், “மாமோய் அதான் நீரு வந்துட்டீற்ல அப்புறம் என்ன. இப்ப எதுக்கு போட்டு கஷ்டப்பட்டு இருக்கீங்க கல்யாண வேலையை பார்ப்போம்.

அதெல்லாம் சரியாயிடும், சரி பண்ணிடுவேன் உங்க மருமகன் மேல உங்களுக்கு நம்பிக்கை இருக்கட்டும். அழுத்த சொன்னவன் சரி நான் கிளம்புறேன் எதுவா இருந்தாலும் எனக்கு கால் பண்ணுங்க” என்றவன் கிளம்ப வாசலில் வந்து இறங்கியது தோரணங்களும் வாழை மரமும்.

“நான் எதுவும் வர சொல்லலையே” சோமசுந்தரம் வினவ…

“நான் தான் வரச் சொன்னேன் மாமா” என்ற இன்னுழவன் “எல்லாத்தையும் கட்டிருங்க” என்று அவர்களிடம் எதை எங்கெங்கு கட்ட வேண்டும் எப்படி கட்ட வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருந்தான்.

“ஏன் மருமகனே அதான் கோயில்தான் எல்லாம் அரேஞ்ன்ட்டும் முடிச்சிட்டோமே. இங்க எதுக்கு நாளைக்கு கல்யாணம் முடிஞ்ச கையோட ஊருக்கு கிளம்புறது தானே” சோமசுந்தரம் சாட…

“கோயில்ல தான் கல்யாணம் அதுக்காக வீட்ட இப்படியா போட்டு இருப்பிரு நீரு கலையிழந்து போயி. கல்யாண வீடு மாதிரி தெரிய வேண்டாமாக்கும். அது அது செய்ய வேண்டியத செய்யணும் மாமா” என்றவன்,

அவர்கள் புறம் திரும்பி “நீங்க எல்லாத்தையும் சரியா கட்டிடுங்க” என்று “சரி மாமா நான் போயிட்டு வரேன் எனக்கு வேலை கொஞ்சம் கிடக்கு” என்று பைக்குக்கு உயிர் கொடுத்து விடைப்பெற்றான் இன்னுழவன் அங்கிருந்து.

இன்னுழவன் புறப்பட்டு செல்ல அலைபேசி வாயிலாக அழைத்திருந்தான் நிவர்த்தனன் சோம சுந்தரத்தை.

“சொல்லுடா நிவர்த்தனா நீ எப்ப கிளம்புற” என்றபடி அவர் பேச ஆரம்பிக்க…

“அப்பா கல்யாண வேலை எல்லாம் எப்படி போகுது. அதுவும் உங்க ஊர்ல கல்யாணத்தை வச்சிருக்கீங்க நீங்க ஓகே தானே? உங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லையே? அக்கா கால் பண்ணாளா? இந்நேரத்துக்கு அவ சோ முடிஞ்சி கிளம்பி இருக்கணுமே! எனக்கு மெசேஜ் ஏதும் போடல? நான் கால் பண்ணேன் ரீச் ஆகல..” என்ன பல கேள்விகளை அவன் கேட்டு வைக்க…

“அடேய் கொஞ்சம் மூச்சு விட விடு டா…” என்றபடி சொந்த ஊர் காற்றை சுவாசித்தவர் பேச ஆரம்பித்தார் அவனுடன்.

“எல்லா வேலையும் நல்லபடியா போகுதுடா எனக்கு இங்க எந்த பிரச்சனையும் இல்ல. எல்லாத்தையும் முன்ன நின்னு என் மருமகன் இருந்து பாத்துக்குற போது எனக்கு என்னடா கவலை” என்றார் சந்தோஷமாக இன்னுழவனை நினைத்து.

“ங்ங… மருமகனா அந்த ஷாம்பு பாட்டில் அங்க வந்துட்டானா என்ன. அதுமட்டுமல்லாம அங்க வந்து அந்த ஷாம்பு பாட்டிலே எல்லாத்தையும் பார்க்குறானா!இருக்கா இருக்காதே..!” என்றவன் எதிர்புறத்தில் இருந்து நாடி தடவினான்.

சோமசுந்தரமோ, “அவன யாருடா சொன்னா…” என அலுத்துக் கொண்டவர், “என் அக்கா பையன் டா என் மருமவன் இருக்கும் போது எனக்கு என்னடா கவலை. சொல்ல போனா இன்னைக்கு இங்க எல்லாத்துலையும் எனக்கு துணையாக நிற்கிறது அவன் தான்டா.

இங்க நான் கூட இந்த ஊருக்கு திரும்ப வரும்போது என்ன பிரச்சனை நடக்கும்னு கொஞ்சம் பயந்துட்டே தான் இருந்தேன். ஆனா, இந்த சின்ன வயசுல இந்த ஊரை எவ்வளவு ஆளுமையா அவன் கையாலுறான் தெரியுமா.

எஸ்பெஷலி என்னோட மச்சானையும் டா… அவன் ஒரு வார்த்தை சொன்னா என் மச்சானே ஆடிப் போய் வாய மூடிட்டு நிக்கிறார் டா… அன்னைக்கு நான் பார்த்த அந்த மச்சானா இவருன்னு நானே ஷாக் ஆகிட்டேன்” என்று மருமகன் அவன் பெருமையை சில்லாகித்தார் சோமசுந்தரம்.

“ஹான் பார்ரா மருமகன் பெருமை புராண ஆஸ்திரேலியா வர காது கிழியுதே. நீங்க சொல்றதெல்லாம் பார்த்தா எனக்கு அவர பாக்கணும் ரொம்ப கியூரியாசிட்டி இருக்குப்பா. ஆனா அத விட ரொம்ப சந்தோஷமா இருக்கு பா நீங்க ரொம்ப நாள் கழிச்சு இப்படி சந்தோஷமா பேசுறது கேட்கும் போது” என்றான் மனமார.

மேலுமவன் “நீங்க இவ்வளவு பேசுறத பார்த்தா இவரையே நம்ம அக்காக்கு நீங்க பேசினதுல தப்பு இல்லைன்னு தான் தோணுது” என்றான் நிவர்த்தனன் வெறுமையாக.

அதை நினைத்தவர், “ஹிம் தப்பு இல்ல தான் ஆனா உன் அம்மாக்கு தப்பா படுதே. அன்னைக்கு இருந்த நிலைமை வேற இன்னைக்கு இருக்குற நிலைமை வேறன்னு உன் அம்மாக்கு புரிய மாட்டேங்குதே.

உன் அம்மாக்கு அந்த ஷாம்பு பாட்டில் தான் சரியாப்படுது. என்ன பண்ண முடியும்? விதி யார விட்டுச்சி” என மனைவி முடிவை எண சலித்துக் கொள்ள மட்டுமே முடிந்தது சோமசுந்தரம்.

“அதே தாம்ப்பா நானும் சொல்றேன். விதி யார விட்டுச்சி கண்டிப்பா அக்கா கல்யாணத்துல ஏதாவது மேஜிக் நடக்கும். நடக்கணும் இல்லனா இந்த ரைட்டர நம்ம ஒரு கை பார்க்குறோம் டீலா ப்பா…”

“Me: ஏதேய்…”

“ஹிம் டில் டில் டா…” என அவர்கள் பேச்சை தொடர்ந்து கொண்டு இருக்க…

இங்கு கல்யாண வேலைகள் தடபுடலாக அரங்கேறிக் கொண்டிருக்க…

அங்கு இவர்களை எவ்வாறு அடியோடு சரிக்கலாம் என திட்டம் கட்டிக் கொண்டிருந்தார் சக்திவேல் எள்ளும் கொள்ளுமாய்.

செங்கோதை மணம் வீசும்…

Next ud night வரும் ஃப்ரெண்ட்ஸ் so ப்ளீஸ் உங்க likes and Comments or raitings கொடுங்க ஃப்ரெண்ட்ஸ்.

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.7 / 5. Vote count: 15

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!