மைவிழி – 04

4.4
(14)



தன் தந்தையின் கட்டாயத்தால் என்னவென்றே அறியாமல் செல்ல சம்மதம்
தெரிவித்தாள் மைவிழி.



சினிமா எனும் கடலில் உள்ள ஆழம் அறியாமல் பணத்திற்காகவும் ஆடம்பர வாழ்க்கைக்காகவும் வலுக்கட்டாயமாக
மைவிழியை தள்ளி விட்டார்
குகன்.



அவளும் அதன் விளைவுகள் பற்றி அறியாமல் செல்லத் தயாராகையில் வீட்டின்
வெளியே வந்து நின்றது சொகுசு கார் ஒன்று.



அந்த கிராமத்தினுள் கார் வருவதைப் பார்த்து அதன் பின்னே வந்தவர்கள்
மைவிழியின் வீட்டின் முன்
கார் நிற்க
அனைவரும் வியப்புடன் அங்கு வந்து
நின்றனர்.



பல இலட்சங்களை விழுங்கிய காரை விட்டு
வெளியே இறங்கினான் ருத்ரதீரன்.



ருத்ரதீரனின் கார் வெளியே நிற்பதை பார்த்த குகன் வெளியே ஓடி வந்து,



“சார் என்னோட பொண்ணு சம்மதம் சொல்லிட்டா, நீங்க அவளை நடிக்குறதுக்கு
கூட்டிட்டு போகலாம்” என
வாயெல்லாம் பல்லாக
கூறினார்.



தீரனோ தன்னுடன் வந்த சந்துருவை பார்த்து,



“சந்துரு அவளோட ஃபுல் டீட்டெய்ல்ஸ் வாங்கிக்கோ அன்ட் நம்ம படத்துக்கான
அக்ரிமென்ட்டை ரெடி பண்ணி சைன் வாங்கு” எனக் கூறிய பின்னர்,



“நாளைக்கு மார்னிங் என்னோட கார் வரும் அப்போ உன் பொண்ணை அனுப்பி வை.” என
அங்கிருந்து சென்றான் ருத்ரதீரன்.



உள்ளே மைவிழியின் அம்மாச்சியோ,



“தங்கம் உன்னை உங்க அப்பா கட்டாயம் அனுப்பியே தீருவேன்னு
இருக்கான்
. நீதான் கவனமா
இருக்கனும்
. எல்லாரையும் நம்பாத.” என பல
அறிவுரைகள் கூற மைவிழியோ சிந்தித்துக் கொண்டே இருந்தாள்.



‘மைவிழி போறதை நினைச்சு ரொம்ப அதிகமா பயப்படுறாள் போல, குகன் ஏன்
தான் இந்த சின்ன பிள்ளையை இப்படி கஷ்டப்படுத்துறானோ தெரியலையே’ என தனக்குள்
நினைத்தார்.



ஆனால் உண்மையில் வெளியே நின்ற காரைத்தான் சென்று
பார்க்க முடியாமல் சென்று விட்டதே
எனும் சிந்தனையே
மைவிழியை ஆட்கொண்டிருந்தது.



இவ்வாறான விளையாட்டுத் தனமான ஒருத்தி எவ்வாறு ருத்ரதீரன் போன்றவனோடு
சேர்ந்து நடிக்க போகின்றாள்
.?



விதி அவளைப் பார்த்துச் சிரித்தது.



******************************



தனது படத்தின் முதல் காட்சி கிராமத்தில் அமைய வேண்டும் என வந்தவன்
தற்போது புதுமுக நடிகையை வைத்து படம் தயாரிக்கப் போகின்றான் என அங்குள்ள
அனைவருக்குமே அதிர்ச்சியாக தான் இருந்தது.



மறுநாள் காலை ருத்ரதீரனின் காரில் மைவிழியும் அவளது
தந்தையும்
ஷூட்டிங் நடைபெறும் இடத்துக்கு வந்தார்கள்.



மைவிழியை ஷூட்டிங்கிற்கு ரெடியாக கூறி
கேரவன் ஒன்றைக் காட்டி விட்டு அவளை தயார்படுத்த சொல்லி ஒரு பெண்ணை ஒழுங்கு செய்து
விட்டு தனது வேலையை பார்க்க
ச் சொன்றான்
ருத்ரதீரன்.



அந்தப் பெண்ணோ மைவிழியின் கேள்விக்களுக்கு பதிலளித்தே சோர்ந்து போகும்
அளவுக்கு பல கேள்விகளை கேட்டாள்
நம் நாயகி.



“அக்கா அக்கா இதென்ன.? இது என்ன.?, எனக்கு
பவுடர்லாம் போடனுமா….
? நாம எங்கே போறோம்” என்று கேட்க,



“இல்லை மேடம் நீங்க கேரவன்ல ரெடியாகனும்” என்று அந்தப் பெண் கூற,



“மேடமா…., ஹா ஹா ஹா நானா…?”, அதுசரி அக்கா இந்த வண்டியா” என
சிரித்துக் கொண்டிருக்க அந்தப் பெண்ணோ கேரவனை திறந்து உள்ளே கூப்பிட அசந்து போய்
நின்றாள் மைவிழி.



“இது என்ன அக்கா வண்டிக்குள்ள மெத்தை காத்தாடின்னு வீடு மாதிரியே
இருக்கு” என்று உள்ளே ஒவ்வொன்றாக பார்த்தாள்.



அந்தப் பெண்ணோ மைவிழியின் செயலைக் கண்டு சிரிப்பதா இல்லை கோபப்படுவதா
என அறியாமல் நிற்க நம் நாயகி கட்டவிழ்த்து விடப்பட்ட நாகு போல
கேரவன்
உள்ளே துள்ளித்
திரிந்தாள்.



மைவிழியை பிடித்து அவளுக்காக வைக்கப்பட்ட ஆடையை அணிய வைத்து
காட்சிக்கு
ஏற்றாற் போல ஓரளவான மேக்கப் ஒன்றை போட்டு
எடுக்கும் கொஞ்ச
நேரமும் தன் வாழ்நாளில் அதிகம் பேசிய
நேரமும் ஒன்றாக இருந்தது.



இவளை வைத்து இந்தப் படம் முழுவதும் எவ்வாறு வேலை செய்ய போகின்றேன் என
அந்த
மேக்கப் ஆர்ட்டிஸ்ட் இப்போதே சிந்திக்கத் தொடங்கினாள்.



ஒருவழியாக அவளை தயார்படுத்தி ருத்ரதீரனின் கையில் கொடுத்தாள் அந்தப்
பெண்.



ருத்ரதீரன் நினைத்தது போலவே அவளது தோற்றம் வந்து விட்டது என தனக்குள்
நினைத்துக் கொண்டான். மேலும் அவளை
  நடிக்க வைப்பது மட்டுமே இனி அவனது இலக்காக
இருந்தது.



அவளின் அருகே வந்து படத்தில் நாயகியின் அறிமுக காட்சியை எடுப்பதற்கான
ஸ்கிரிப்ட்டை கூறினான்.



“மைவிழி நீ இப்போ ஒரு சீன் தான் நடிக்கனும் சோ நான் சொல்றதை கவனமா
கேள்,



இந்த வாய்க்கால்ல நீ காலை வைச்சு விளையாடிக் கொண்டிருக்கனும் அப்போ
நான் உன்னை அங்கிருந்து கூப்பிடுவேன் என்னோட சத்தம் கேட்க நீ என்னை பார்த்து ஓடி
வரணும் சரியா” எனக் கூறினான்.



‘இவன் என்ன சரியான முட்டாளா இருக்கான் நான் ஓடி வர்றதுக்கு ஏன்
பவுடர்லாம் போட சொன்னான்’ என தனக்குள் நினைத்தவள் அமைதியாக இருக்க,



“நான் சொன்னது உனக்கு புரிஞ்சுதா….?, நீ
ஏதும் கேட்கனுமா” எனக் கேட்டான் ருத்ரதீரன்.



அவன் கேட்டவுடன் தலையை ஆட்டிக் கொண்டு,



“ஆமா சார் ஒன்னு கேட்கனும்….” என்றாள்.



“ஓகே என்ன விஷயம் கேள்…” என்றான் ருத்ரதீரன்.



“சீனியை நான் முன்னாடி கொண்டு வரனுமா இல்லைன்னா கடைசியா கொண்டு
வரனுமா…?” எனக் கேட்டாள் மைவிழி.



புருவங்களை சுருக்கி, “சீனியா….., அது என்னதுக்கு..?” என்றுக்
கேட்டான் ருத்ரதீரன்.



“நீங்க தான் சொன்னீங்களே….” என அவள் கூற தன் தலையில் கை வைத்த
தீரன்,



“நீ சீனி எடுக்க வேணாம் நான் சொன்ன மாதிரி மட்டும் பண்ணு போதும்”
என்றான்
அவன்.



ஆம் முதலாவது சீன் என்பதை சீனியாக விளங்கிக் கொண்டவள் எவ்வாறு தான்
இந்த படத்தில் நடிக்க போகின்றாளோ
என்றிருந்தது அவனுக்கு.



மைவிழியை சிரித்தவாறு விளையாட சொல்ல தன் பற்கள் அனைத்தும் தெரியும்
படி சிரித்த
அங்கிருந்த அனைவரையும் பயம் காட்டினாள் அவள்.



பின் அதையும் ஒழுங்காக சொல்லிக் கொடுத்தான் தீரன்.



பின் கமராவை பார்த்துக் கொண்டே வர மீண்டும் அதை திருத்தும் படி
சொல்லிக் கொடுத்தான் இவ்வாறு ஒவ்வொன்றாக சொல்லிக் கொடுத்தே ஐந்து நிமிடம் வர
வேண்டிய காட்சிக்காக இரண்டு மணி நேரம் செலவழிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.



இதற்கு முன்னர் நடித்த நடிகைகளுக்காவோ அல்லது ரேஷ்மாவுக்காக கூட
இவ்வளவு பொறுமையாக வேலை செய்யாத ருத்ரதீரன் ஏன் இவளுக்காக இவ்வாறு பொறுமை
காக்கின்றான் என அங்குள்ளவர்கள் தங்களுக்குள் மு
ணுமுணுத்துக்
கொண்டார்கள்.



மைவிழியின் மீது நடிகை என்பதை விட வேறு ஏதோ தன்னை பெரிதும் கவர்ந்துக்
கொண்டுள்ளது என தீரன் அப்போது அறிந்திருக்கவில்லை.



எவ்வளவு முயற்சி செய்தும் மைவிழியை கொண்டு நடிக்க வைப்பது கடினமான
காரியமாகவே இருந்தது. இதைப் பார்த்துக் கொண்டிருந்த ப்ரோடி
யூஸர்,



“சார் இந்தப் பொண்ணு நம்ம படத்துக்கு சரிப்பட்டு வர மாட்டாள் போல இவளை
வைச்சு ஒன்னுமே பண்ண முடியாதுன்னு நினைக்கிறேன்.



இப்பவும் ஒன்னும் கெட்டுப் போகலை நம்ம ரேஷ்மா இன்னும்  சென்னை போகலை சோ
அவளையே ட்ரை பண்ணுவோமா…?” எனக் கேட்க,



நோ. ரேஷ்மாவை
வைச்சு என்னால படம் எடுக்க முடியாது, இந்த ப்ராப்ளத்தை நானே பார்க்கிறேன்” என்று
கோபத்துடன் எழுந்து மைவிழியை நோக்கி சென்றான் ருத்ரதீரன்.



தனது தெரிவு எப்போதும் சரியாகத்தான் இருக்க
வேண்டும் இல்லையெனின் அதை சரியாக மாற்ற வேண்டும் என நினைக்கும் ருத்ரதீரனிடம்
நாயகியை மாற்ற வேண்டும் என கூறியதில் சினம் பெருக்கெடுக்க மைவிழியின் அருகே
வந்தவன்,



“நான் சொல்றது உனக்கு புரியலையா…?, சின்ன பிள்ளை மாதிரி திரும்ப
திரும்ப தப்பா பண்ணிகிட்டு இருக்க…,



இதுக்கு மேலேயும் உன்னோட விளையாட்டை நிறுத்திட்டு சொல்றதை மட்டும்
பண்ணு இல்லைன்னா இனி
நான் பேச மாட்டேன். என் கைதான்
பேசும்
.” என கையை உயர்த்தியவன் தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டான்.



ஆற்றிலும் மேட்டிலும் ஓடி விளையாடிக் கொண்டிருந்த மயிலை பிடித்து
கூட்டினுள் அடைத்து நடனமாட சொல்வது போல நடிப்பைப் பற்றி எதுவும்
தெரியாத மைவிழியை
பிடித்து நடிக்க சொல்வதும் இல்லாமல் அடிக்கும் அளவுக்கு தீரன் நடக்க அவள்
எதிர்த்து கூட பேசாமல் ஓவென ஒப்பாரி வைக்கத் தொடங்கினாள்.



ஐயோ ஐயோ ஐயோஓஓஓ அம்மாச்சி….
அம்மாச்சியோவ்…
என்னை
அடிச்சிட்டாரு
.” என அவள் கதறி ஒப்பாரி வைக்க,
திகைத்துப்
போனான் தீரன்
.



அவள் அழுவதை அனைவரும் பார்த்து விடுவார்கள் என நினைத்த ருத்ரதீரனோ
மைவிழியின் கைகளை பிடித்து தனியாக அழைத்துச் செல்ல,



“நான் சும்மா வீட்ல விளையாடிக்கிட்டு இருந்தேன்.
என்னை
கூட்டிட்டு வந்து அடிக்குறாங்க…. ஸ்ஸ்ஸ்… என்னை வீட்டுக்கு கொண்டு போய்
விடுங்க” என மூக்கை சீறி சீறி விம்மி விம்மி அழுது கொண்டிருந்தாள் மைவிழி.



“ஹே நிறுத்து இப்போ என்னதுக்கு ஒப்பாரி வைக்கிற….., சொல்றதை கேட்டு
பண்ணத் தெரியலை அதுக்குள்ள சத்தம் மட்டும் போடு…., நீ ஓடி வர்றதை மட்டும்
பார்த்துட்டு உன்னை நடிக்க  எடுத்தது தான் தப்பா போயிருச்சு….” என்றவனுக்கோ சட்டென ஓர் யோசனை வந்தது.



“ஹே ஹே…. நீ நேற்று ஆட்டுக்குட்டியை பிடிக்குறதுக்கு ஓடி வந்தாதானே
ஞாபகம் இருக்கா…”



“ஆமா அப்போ நீங்க கூட ரோட்ல நின்னு பராக்கு
பார்த்துகிட்டு இருந்தீங்களே” என
அவள் அழுகை மறந்து சட்டென சிரிக்க,



“எஸ் அப்போ நீ ஓடி வந்த மாதிரி இப்பவும் பண்ணு போதும் அதோட நான்
சொல்றதையும் சேர்த்து செய்” என்று ருத்ரதீரன் கூற அவளும் ஆம் எனக் கூறினாள்.



தன் கையில் இருந்த கைக்குட்டையால் அவளது கண்ணீரைத் துடைத்து மீண்டும்
அவளை வைத்து
ஷூட்டிங்கை தொடங்கினான் ருத்ரதீரன்.



இப்போதும் மைவிழி பிழையாக தான் செய்வாள் என நினைத்த அனைவருக்கும்
அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தது அவளது இயல்பான நடிப்பு.



அனைவரும் வாயடைத்து நிற்கும் அளவுக்கு அறிமுக காட்சியை சிறப்பாக
எதிர்பார்த்ததை விட மேலாக நடிக்க அனைவரும் கைத்தட்டி
பாராட்டு தெரிவித்தார்கள். 



அப்போது தான் ருத்ரதீரன் புரிந்து கொண்டான் மைவிழிக்கு  கமராவை
பார்த்து நடிப்பதை விட தன்னைச் சுற்றி எதுவும் இல்லாமல் இயல்பாக நடப்பது போல
செய்வதால் மாத்திரமே அவளை தன் பாதைக்கு கொண்டு வர முடியும் என எண்ணி தன் அடுத்தக்
கட்ட நகர்வுகளை நம்பிக்கையுடன் ஆரம்பிக்க தயாரானான்.



தன்னைப் பார்த்து அனைவரும் கை தட்ட மைவிழியும் துள்ளிக் குதித்துக்
கொண்டு அவளும் கைதட்டிக் கொண்டு நிற்க தனக்குள் சிரித்துக் கொண்ட தீரன்,



‘இவளோட பைத்தியகாரத்தனமும் அழகாத்தான் இருக்கு’ என
எண்ணினான்
.



இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.4 / 5. Vote count: 14

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!