நிதர்சனக் கனவோ நீ! Part 2: 15

5
(22)

 அத்தியாயம் – 15

 

அனைவரும் வந்திறங்கியது என்னவோ அந்த ஊரில் மிகப் பழமையான சிவன் கோயிலுக்கு தான்.

என்ன மனநிலையில் கோயிலுக்கு வந்தாலும் மனம் அமைதி அடைந்து விடும் போலும்,

 

அந்த அளவுக்கு அக் கோயிலும் சிற்ப வேலைபாடுங்களும் மிகவும் தத்ரூபமாக இருக்க பார்ப்போரின் கண்கள் மட்டுமல்ல மனதையும் இதமாக வருடுவதை போலிருந்தது.

 

“இவ்ளோ நாளா இங்க வராம மிஸ் பண்ணிட்டேனே சோ சேட்” என்று சொல்லிக் கொண்டே அலைபேசியை எடுத்து புகைப்படங்கள் எடுக்க ஆரம்பித்திருத்தாள் ஶ்ரீநவி.

 

அவளை சிறு புன்னகையுடன் பார்த்த சித்ரா, பார்வையை திருப்பி அவளையே விழி அகலாமல் பார்த்துக் கொண்டிருந்த பவ்யாவை ஆராய்ச்சியாக பார்த்தவர் “பூஜை தட்டை என்கிட்ட தந்திட்டு  நவிகூட போய் சுத்தி பார்த்திட்டு வா பவ்யா.” என்றிட,

 

“இல்ல வேண்டாம் அத்த. அக்கா வரட்டும் அப்பறமா பூஜை எல்லாம் முடிய கோயிலை சுத்தி  பார்த்துக்கலாம்” என்றவள் பார்வை  காரை நிறுத்தி விட்டு கேசத்தை கோதிய படி வந்த விபீஷனின் மீது அழுத்தமாக படிந்தது.

என்னவோ காலையிலிருந்து மனதை பிசையும் வலி உள்ளுக்குள், தவிப்பாக இருந்தது. என்ன முயன்றும் அந்த மனநிலையை விட்டு வெளியில் வர முடியவில்லை பாவையவளுக்கு,

அவளின் பார்வை தன்மேல் அழுத்தமாக படியவும், ‘ஓஹ் கோட் என்ன இப்படி பார்த்திட்டு இருக்கா?’ என இதழ்களுக்குள் முணு முணுத்துக் கொண்டே அவளை நெருங்கியவன் “என்னடி இங்க வச்சி டெம்ப்ட் பண்றியா?” என்றவனை முறைத்தவள் “பண்ணுனா என்ன தப்பு?” என்று கேட்டாலே பார்க்கலாம்.

 

அவளின் பேச்சில் ஒரு கணம் அதிர்ந்தவன் அப்போது தான் அவள் முகத்தில் நாணத்தை தவிர்த்து எதையோ ஆராயும் முகபாவத்தோடு அவள் நின்றிருந்த தோரணையையே உணர்ந்திருந்தான்.

குரலை செருமிக் கொண்டே “தப்பில்ல தான் அதுக்கு தானே வீட்ல வச்சு கேட்டேன் அப்போ வேணாம் சொல்லிட்டு இங்க வச்சு என்னை விழுங்குற போல பார்க்குற?”

 

“ஹும் வேண்டுதலாக்கும்” என்று இதழ்களை பிதுக்கி சொன்னவள் சற்று தூரம் சென்று பின்னால் திரும்பி பார்த்தாள்.

அவளை தான் வைத்த கண் வாங்காமல் பார்த்திருந்தவன் புருவங்கள் அவள் தன்னை பார்த்ததும் கேள்வியாக உயர்ந்தன.

 

அவளோ சற்றும் சளைக்காமல் “ஐம் வாட்சிங்க்”  என்று சத்தமாக சொன்னவள்  இரு விரல்களால் சைகை செய்து விட்டு கோயில் பிரகாரத்துக்குள் நுழைந்திருந்தாள்.

 

இதழ் குவித்து ஊதிக் கொண்டே பக்கவாட்டில் வைத்திருந்த திருநீறை எடுத்து நெற்றியில் கீற்றாக பூசிக் கொண்டவன் சித்ராவின் குரலில் திரும்பினான்.

 

“டேய் ஆனந்த் எங்கடா? கால் பண்ணி கேளு” என சித்ரா பதற, “ ட்ரை பண்ணிட்டு தான் இருக்கேன் மா ரிங்ஸ் போகல நான் என்னன்னு பார்த்திட்டு வரேன்” என்று சொல்லிக் கொண்டே புறப்பட ஆயத்தமாக, “உங்களுக்காக தான் பூஜையே சீக்கிரமா  அவனை எங்கன்னு பார்த்து அழைச்சிட்டு வா” என்றிட, “ ஓகே நான் பார்த்துக்கிறேன் நீங்க பூஜைக்கு அரேஞ்ச் பண்ணுங்க” என்றவன் வேகமாக காரினை நோக்கி சென்றிருந்தான்.

 

இங்கோ, ஜீப்பினை வேகமாக செலுத்திக் கொண்டிருந்த ஜெய் ஆனந்த்தை பக்கவாட்டாக திரும்பி பார்த்து முறைத்தவள் “ஐயோ மாமா பிளீஸ் ஸ்லோவா போங்க” என்று கத்தினாள் ஆஹித்யா.

 

“நீ தானே ஸ்பீட் பத்தலன்னு சொன்ன?” என்று அவன் கேட்க…

 

‘அடேய் மக்கு ஜெய்… சரியான மர மண்டை. நான் கேட்ட ஸ்பீட் என்ன? இவன் புரிஞ்சிக்கிட்டது என்ன?’ என்று மனதில் நன்றாக அவனை வறுத்தெடுத்தவள் நெற்றியை அழுத்தி விட்டபடி அவனை மேலும் முறைத்தவள் “தெரியாம சொல்லிட்டேன் சாரே! கொஞ்சம் ஸ்லோ பண்றீங்களா?” என்று கை கூப்பி அவள் கேட்கவும் அவளறியாமல் இதழ்களுக்குள் புன்னகைத்துக் கொண்டவன் ஜீப்பின் வேகத்தை குறைத்த அதே நேரம், வண்டியோ அதற்கு மேல் நகர மாட்டேன் என்பதைப் போல நடு வீதியில் நின்றே விட்டது.

 

இதழ் குவித்து ஊதிக் கொண்டே சீட் பெல்ட்டைக் கழற்றியவன் “வெயிட் தியா என்னன்னு செக் பண்ணிட்டு வரேன்” என்றவன் கதவைத் திறந்து கொண்டு இறங்கினான்.

 

போகும்  அவனை விழி அகலாமல் பார்த்தாள். இல்லை இல்லை ரசித்தாள்.

அவன் என்னவோ சாதரணமாக தான் இருந்தான்.

 

ஆனால் அவள் தான் அவனின் ஒவ்வொரு அசைவையும் ஆளுமையையும் அணுவணுவாக ரசித்துக் கொண்டிருந்தாள்.

காதலில் அவனையே மிஞ்சிவிடும் அளவு மொத்தமாக காதலிக்கிறாள்.

 

காதல் வந்தால் கள்ளமும் சேர்ந்து விடும் அல்லவா!

 

இதழ்களுக்குள் புன்னகைத்துக்  கொண்டவள் ஜீப்பின் கதவை திறந்து கொண்டு அவளும் இறங்கி விட்டாள்.

 

இறங்கி வந்தவளை பார்த்தவன் “மழை வர்ற போல இருக்கு தியா. உள்ள போ” என அவன் கடிய, “முடியாது நானும் இங்க தான் நிட்பேன்” என்றாள் பிடிவாதமாக…

 

“டயர் சேஞ்ச் பண்ண லேட் ஆகும் சோ சொல்றதை கேளுடி”

 

அவளோ, அவன் சொல்வதை காதில் கூட வாங்காது அப்படியே நின்றிருக்க, ‘ராட்சசி’ என்று சொல்லிக் கொண்டே அவசரமாக டயரினை மாற்றிக் கொண்டு இருந்தான்.

 

அவன் தன்னைப் பார்க்கவில்லை என்று தெரிந்ததும் அவளின் பார்வையோ அப்பட்டமாக அவனை தலை முதல் கால்வரை வஞ்சனையின்றி வருடியது.

 

கருப்பு நிற ஆர்ம் கட் அணிந்து இருந்தான். சற்று முன்னர் அவனின் மேனியை தழுவி இருந்த வெண்ணிற ஷர்ட்டினை    இடையில் இறுக கட்டி முடிச்சிட்டு இருந்தான்.

 

‘ஹையோ… மேன்லி மாமா கொல்றியேடா’ என மனதில் சொல்லிக் கொண்டவள் பார்வையோ அவனின் நெற்றியில் இருந்து வழிந்த வியர்வை கழுத்தினூடு கீழிறங்க, அதை பார்த்தவள்  ஓர் உஷ்ணப் பெரு மூச்சை விட்டுக் கொண்டே ‘ ரொம்ப காஜியா திங்க் பண்றடி’ என தனக்குத்தானே எச்சரித்துக் கொண்டவள் அவனின் ஆளுமையை நட்ட நடு வீதியில் நின்று வெறிக்க வெறிக்கப் பார்த்துக் கொண்டவள் கரங்களோ தானாக உயர்ந்து முகத்தை மூடிக் கொள்ள, மீண்டும் அவனை ரசிக்க உந்திய தன் மனதை அடக்க வழியறியாது வெட்கம் பிடுங்கித் தின்ன தன் விரல்களை மெல்ல விலக்கி அவ் இடைவெளியில் மீண்டும் அவனை சைட் அடித்தாள்.

 

நடு வீதியில் நின்று தன்னவள் தன்னை விழுங்கி விடுவது போல பார்த்துக் கொண்டிருக்கிறாள்  என்று அறியாமலேயே டயரை மாற்றிக் கொண்டு இருந்தவன் ஏதோ ஓர் உந்துதலில் சட்டென பக்கவாட்டாக திரும்பி பார்த்தான்.

 

அவன் இப்படி சட்டெனத் திரும்பி பார்ப்பான் என்று எதிர் பாராதவள் திகைத்து தன் கரங்களை கீழே இறக்கிக் கொண்டே’ ஹி ஹி ஹி’ என சிரித்து வைத்தவள் “செம்ம வெயில் மாமா அதான் முகத்தை மூடிட்டு இருந்தேன்” என்று சொல்ல…

 

அவளை ஒரு மார்க்கமாக பார்த்த படி கழுத்தில் நெட்டி முறித்துக் கொண்டே எழுந்தவன் “ ஓஹோ வெயிலா?” என்று கேட்டுக் கொண்டே அவளை நெருங்கியவன் “நான் உன்கிட்ட எக்ஸ்ப்ளானேஷன் கேட்கவே இல்லையே” என்று தன்னை விழி விரித்துப் பார்த்துக் கொண்டிருந்தவளிடம் சொல்ல…

 

அவனின் நெருக்கத்தில் அவளுக்கோ அவஸ்தையா இருக்க, “கேட்கலைனா என்…என்ன நான் சொல்லுவேன்” என வார்த்தைகள் தந்தியடிக்க சொன்னவள்  துப்பட்டாவில் அவனின் நெற்றியில் படிந்து இருந்த கிரீஸினை துடைத்து விட்டாள்.

 

“தேங்க்ஸ்” என புன்னகைத்தவன் அவள் சுதாரிக்கும் முன்னரே  அவளைத் தன் கரங்களில் ஏந்தியிருக்க, “மாமா என்னை இறக்கி விடுங்க” என்றவளின் சிணுங்கல்களை எல்லாம் அவன் காதில் வாங்கிக் கொண்டது போலவே இல்லை. அவளை ஜீப்பின் உள்ளே அமர வைத்து விட்டு கதவினை லாக் செய்து விட்டு விலக,

 

“பிளீஸ் மாமா நானும்” என்றவளை “ஆல்மோஸ்ட் பின்னிஷ் பண்ணிட்டேன் வெளில வராத தியா” என்று சொல்லிக் கொண்டே திரும்பியவனின் ஆர்ம் கட் டீஷர்ட்டினை பிடித்து இழுத்தவள் எம்பி அவனின் இதழ்களைக் கவ்வி சுவைக்க ஆரம்பித்திருந்தாள்.

ஒருகணம் அவளின் அதிரடியில் திணறியவன் பின் அவளது முத்தத்தை விரும்பியே தனதாக்கி இருந்தான்.

 

அவனும் உணர்வுகள் கொண்ட ஆண் தானே!

நேற்றைய இரவில் அவளுடன் கலந்ததிலிருந்து அவளது அருகாமை அவனை பாடாய் படுத்தியெடுத்துக் கொண்டிருக்க, இப்போது அவளாக கொடுக்கும் முத்தம் கசக்குமா என்ன?

உணர்வுகளின் ஆர்ப்பரிப்பில் ஓர் ஆழ்ந்த இதழ் முத்தம்.

 இருவரும் கோயிலுக்கு செல்ல வேண்டும் என்பதையே மறந்து விட்டிருந்தனர்.

 

 

எவ்வளவு நேரம் இருவரும் ஒருவரிதழ்களுக்குள் ஒருவர்  புதைத்திருந்தனரோ, விபீஷனின் ஹார்ன் ஒலியில் சட்டென பிரிந்தனர்.

 

அவளுக்கோ கூச்சம். “ ஐயோ மாமா விபீஷன் பார்த்துட்டாரோ?” என்று புலம்பிக் கொண்டே கரங்களில் முகத்தை புதைத்துக் கொள்ள, “எதுக்கு டென்ஷன் ஆகுற? அவனும் இதை தான் நேத்து பண்ணிருப்பான்” என்றவன் பேச்சில் சட்டென முகம் சிவக்க நிமிர்ந்தாள்.

 

“பீல் ப்ரீ. பார்த்துக்கலாம்” என்று சொன்னவன் பிடரியை வருடிக் கொண்டே பின்னால் திரும்பினான்.

“கரடி போல வந்துட்டேனா?” என்றவன் அடக்கப்பட்ட புன்னகையுடன் கேட்க,

 

லேசாக இதழ் கடித்து புன்னகைத்தவன் “சத்தமா பேசாத அவளுக்கு அன்காம்பர்ட்டபிளா இருக்கும் என்றவன் பட் கொஞ்சம் லேட்டா வந்திருக்கலாம்”

 

“அங்க எல்லாம் உனக்காக தான் வெயிட்டிங் பட் நீ…” என்று சொல்லிக் கொண்டே குனிந்து டயரினை சரிபார்க்க,

 

“வெயிட்… வெயிட் ,  நானே செக் பண்றேன் விபீஷன்” என்றவன் குனிந்து     பார்க்க ஆரம்பித்து விட, “காரை எடுத்துட்டு கிளம்பு. நான் ஜீப்பை எடுத்துட்டு வரேன்” என்ற விபீஷனிடம் “நோ நீட் எல்லாமே பிக்ஸ் பண்ணிட்டேன் சோ கிளம்பிடலாம்” என்று சொல்லிக் கொண்டே எழுந்தவனோ “நீ முன்னாடி போ. நான் வரேன்” என்று சொல்ல, “ நான் எதுக்கு வந்தேன்னு தெரியுமா உனக்கு?” என்று விபீஷன் கேட்க,

 

“ஓஹ் ஷிட் என்ன விஷயம்?” என்று கேட்டவனை ஒரு மார்க்கமாக பார்த்தவன் “நத்திங் சீக்கிரமா கிளம்பு” என்றவன் காரில் ஏறிக் கொள்ள, “சாரிடா”  என்றான் கேசத்தை கோதிய படி, “ம்ம், இப்படியே வந்துடாத லிப்ஸ்ல இருக்க லிப்ஸ்டிக்க க்ளியர் பண்ணிட்டு வா” என்ற சொல்லி விட்டு காரை கிளப்ப, உள்ளே அமர்ந்து அனைத்தையும் கேட்டுக் கொண்டு அமர்ந்திருந்த பெண்ணவளுக்கோ இதற்கு மேல் விபீஷனை எப்படி எதிர் கொள்ளவது என்ற தயக்கம் ஒருபுறம் என்றால் மறுபுறம் தன்னவனை பார்க்கவே வெட்கமாக இருந்தது.

 

எதிலும் மனம் லயிக்கவில்லை.

 

தலை தாழ்த்தி பேசாமல் அமர்ந்திருந்தாள்.

அவளை ஆராய்ச்சியாக பார்த்துக் கொண்டே ஜீப்பை ஸ்டார்ட் செய்தவன் “தியா” என்றான் மென்மையாக,

 

“ம்ம்” என்றவள் குரல் மெலிதாக ஒலிக்க,

“இன்னொரு கிஸ் கிடைக்குமா?” என்றான் கிண்டலாக,

அதிர்ச்சியாக அவனை திரும்பி சட்டென பார்த்தவள் அவனது அடக்கப்பட்ட சிரிப்பில் “கொன்னுடுவேன்” என்றாள் முறைத்துக் கொண்டே,

 

“சந்தோஷமா செத்துடுவேன்” என்றான் இதழ் பிரித்து சிரித்த படி,

 

“வாட்? என்ன பேச்சு இது?” என்றாள் சீறலாக,

 

இவ்வளவு நேரமும் அவளின் முகத்தில் குடி கொண்டிருந்த அதீத வெட்கமும் தடுமாற்றமும் எங்கு சென்றது? என்று கேட்டால் அவளுக்கே தெரியாது.

 

இறந்து விடுவேன் என்றதும் காணாமல்தெரியாத ஆத்திரம் சிந்தையை ஆட்கொண்டது.

 

அவனோ  அவளின் கோபத்தை ரசித்த படி “பொண்டாட்டி கையால சாகுறதெல்லாம் வரம் டி” என்க,  மெதுவாக அவனின் அருகில் தோள்கள் உரச நெருங்கி அமர்ந்தவள் “இஸ் இட்?” என்றாள் ஒற்றை புருவம் உயர்த்தி,

தன்னவளின் விழிகள் உணர்த்திய மொழியில் தன்னை சுகமாக தொலைத்தவன் “யாஹ்” என்று கண் சிமிட்டிய அதே கணம் கண நேரத்தில் எம்பி அவனது இடது கன்னத்தை வலிக்க கடித்திருந்தாள் அவனின் ராட்சசி.

 

 

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 5 / 5. Vote count: 22

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!