அத்தியாயம் 24

4.7
(9)

இங்கு இன்னுழவனிடம் பேசி முடித்துவிட்டு நிவர்த்தனன் போனில் யாருடனோ தீவிரமாக பேசிக் கொண்டிருக்க.. பால்கனியில் நின்று அவனைத் தான் வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள் இனிதுழனி விழிகள் முழுதும் அவனை நிறைத்தவளாய்.

விழிகள் மட்டுமல்ல மனம் முழுவதும் அவனே தான் நிறைந்திருந்தான்.

அவனுடனான முதல் சந்திப்பு அவள் சிந்தையில் எட்டி செல்ல மனம் இதம் கண்டாலும், விழிகளில் ஈரம் சுரந்தது.

அவள் விழி உருண்டைகள் இரண்டும் அங்கும் இங்கும் நடந்தபடி அலைபேயோடு பேசிக் கொண்டிருந்த நிவர்த்தனன் மேல் பதிந்து நாட்டியம் ஆடியது மௌனமாய்.

அவளின் துளைத்து எடுக்கும் பார்வையில் சமரனை ஏற சட்டென்று திரும்பி தன் பார்வையை சூழல விட்டான் நிவர்த்தனன் சுற்றிலும்.

இனிதுழனி சுதாரித்தவள் தடுப்பு சுவர் பின் தன்னை விரைவாய் மறைத்து கொண்டாள் இதயம் படபடக்க.

நிவர்த்தனன் விழிகளில் இனிதுழனி பிடிப்படாது போக மீண்டும் தன் பேச்சை தொடர்ந்தான் அலைபேசியோடு.

பேசி கொண்டிருந்தவனை மீண்டும் பார்த்தவள் ஒரு நிலையில் உள்ளம் பதபதைக்க வருடங்கள் கடந்து “நிவர்த்து…” என குரல்வளை திறந்து மென் உச்சரிப்புடன் மிதமான சப்தத்தில் காற்றில் கலக்க வேகமாக அறைக்கதவை திறந்து ஓடிச் சென்றாள், நிவர்த்தனனை நோக்கி மானாய் துள்ளி குதித்து.

நிவர்த்தனனும் தன்னை நோக்கி ஓடிவரும் இனிதுழனியை இப்பொழுதே கண்டவன் அலைபேசியை காதில் இருந்து எடுத்தவனாய் “இப்பதான் நான் யாருன்னு தெரிஞ்சிருக்கா இவளுக்கு” என முணுமுணுத்தவன் அவளை நோக்கி முன்னேற அடி வைக்க கல் தடுக்கியிருந்தது அவன் கால். 

“ஹேய்…” என இனிதுழனி அவனை பிடிக்க போக, அவனோ கால் தடுமாறி பாதம் பின்னோடு பதிய போக… ஐயோ பரிதாபம் அங்கோ கிணறு.

நிலை இல்லாதவன் கிணற்றினுள் விழ.. அவன் கையை இனிதுழனி எட்டி பிடிக்க, “வாடி என் வெள்ளகட்டி” என அவளையும் தன்னோடு பிடித்தவன் இழுக்க.. இருவரும் பொத்தென தடுமாறி விழுந்திருந்தனர் கிணற்றினுள்.

கிணற்றுக்குள் விழுந்த வேகத்தில் நிவர்த்தனன் மேலே வந்து விட ஆனால் இனிதுழனி தான் மேலே வந்த பாடில்லை.

“எங்க போய்ட்டா இவ… இனிதுமா…” என 

பதறியவன் மீண்டும் தண்ணிக்குள் சென்று பார்த்தான்.

அங்கு இனிதுழனி நீச்சல் தெரியாது தத்தளித்துக் கொண்டிருந்தாள் வேக மூச்சுடன்.

“ஹேய் இனிதுமா…” என்றவன் வேகமா அவள் இடையோடு தூக்கி தண்ணீருக்கு மேல் கொண்டு வந்தான். 

அவளிற்கோ உடல் நடுங்கினாலும் கண்கள் முழுவதும் ஆராய்ந்தது நிவர்த்தனனை தான், அவன் நலம் குறித்து. 

காதலியவள் பார்வையில் அர்த்தம் கொண்டவன், “ஹேய் நான் நல்லா இருக்கேன் டி… நீ எதுக்கு உள்ள குதிச்ச…?” என்றவளை தன்னோடு அவன் அணைத்து நிற்க,  அவளுக்கோ மேனி நடுங்க அவனிடம் பேச நா எழும்ப கழகம் பண்ணியது குரல்வளை தடுப்பு சுவர் அமைத்து.

பேச முயற்சி செய்தவள் ஒரு நிலையில் பேச முடியாது போக, அவன் கழுத்தோடு கட்டி கண்ணீர் வடித்தாள் இயலாமையில்.

இப்படி ஒரு நிலை அவளவன் முன் வந்து விடக் கூடாது என்றெண்ணியே மனதிற்கு பூட்டு போட்டு அவனை கண்ட நொடி முதல் விலகி ஒளிந்தாள்.

அவன் உயிர் என்று வருகையில் பூட்டை உடைத்து தன்னிலை மறந்து அவனிடமே தஞ்சம் அடைந்திருந்தாள் பாவையவள்.

அவளை கவனித்த நிவர்த்தனன் ஒருவேளை தனக்கு ஏதும் நேர்ந்திருக்குமோ என்ற பதட்டத்தின் தவிப்பில் தான் அவளால் பேச முடியவில்லை என நினைத்தவனாய், “ஒன்னும் இல்லடி காம் டவுன் இனிது…” என அவளை அமைதிபடுத்தினான்.

அப்பவும் அவளின் பறிதவிப்பு அடங்காது.. அடுத்த கணம் அவள் செவ்விதழை தன் இதழ் கொண்டு களவாடியிருந்தான் ஆழமாய் மென்மையாய்.

அவளும் அவன் மேல் கொண்ட பதட்டத்தையும் காதலையும் அவன் இதழின் மூலம் சமர்ப்பிக்க ஆரம்பித்தாள் அழுத்தமாகவும் ஆழமாக அவனை போல், ஆனால் வன்மையாக.

அதற்கு ஏதுவாய் வர்ண தேவனும் தூறல்களை சிதற விட்டார் அழகோவியமாய்.

தன் மேல் அவனவள் கொண்ட தவிப்பை இதழ் வழி காண்பித்தவளை அறிந்துக் கொண்டவன் அவள் வன்மைக்கு வாகுவாக இயைந்து கொடுத்தான் கண்ண சிரிப்புடன் அதரங்களை பரிசளித்து.

சிறிது நேர இதழ் தீண்டலில் இருவரின் தவிப்பும் முற்று பெற, அவன் இதழில் இருந்து தன் இதழை விடுவிக்க முயன்றாள் இனிதுழனி.

முயல மட்டும் தான் முடிந்தது அவளாள். அவனோ பசையாய் ஓட்டியிருந்தான் அவள் இதழுக்குள் அவன் இதழை.

விழி திறந்தவள் திமிற, விடா கண்டன் விழி சிமிட்டி கொள்ளைக் கொண்டு உடும்பாய் தனக்குள் பிடித்து இடை அழுத்தி அவள் உயிர்சத்து வரை இதழ் கொண்டு கடத்த ஆரம்பிதான் தனக்குள் மென்மையிலும் மென்மையாய்.

அவன் தாக்கத்தில் செவ்வானமாய் சிவந்தவள் முனங்க, இதழை விடுத்து அவன் இதழ் கொண்டே அவள் செவிமடல் உரசியவனோ “ரொம்ப மிஸ் பண்ணேன் டி உன்ன. உன்ன பார்க்க முடியாமையே போயிடுவேனோன்னு ரொம்ப நாள் பயந்து இருக்கேன் டி” என்றவனாய் கழுத்துக்குள் முகம் புதைத்தவன்,

 

தன் மூச்சு காற்றை அங்கு நிறைத்து அதரம் பதிக்க, குளிர்ந்த நீரிலும் உடையவன் உஷ்ணக் காற்றால் அவளுக்கோ சுவாசக் காற்றோடு தேக மயிர் கால்களும் மேலேலும்ப சில்லிட்டது அடி வயிற்றில் பட்டாம் பூச்சி பறக்க.

அச்சமயம் “இவ எங்க போனா… அடியேய் இனி…” என குரல் கொடுத்து கிணற்று மேல் சுற்றி பார்த்த வண்ணம் நின்றார் கோதாவரி.

அதுவரை அவன் தீண்டலில் தன்னை மறந்து பாகாய் கரைந்து நின்றவள் தாயவள் குரல் கேட்டு இனிதுழனியோ அதிர்ந்தாள் என்றால், நிவர்த்தனன் எதையும் பொருட்படுத்தாது அவள் இதழில் தேன் எடுக்கும் வேலையை செவ்வன செய்து கொண்டிருந்தான் கைகள் ஊர்வலம் நடத்த.

“தண்ணிக்குள்ள என்ன சத்தம் கேக்குது” என கோதாவரி கிணற்றை நெருங்க, இனிதுழனி விழிகள் சாசராய் விரிந்து அவன் மார்பில் அடித்தாள் படபடக்கும் விழிகளுடன்.

அதை இன்பமாய் வாங்கிய நிவர்த்தனனோ இதழுக்கு விடுதலை கொடுக்காது அவளை அலேக்காக தூக்கி நீருக்கு அடியில் புகுந்து கொண்டவன், தன் பணியை விடாது செம்மையாய் செய்து அவளை சிவக்க வைத்துக் கொண்டிருந்தான் தன் மூச்சை அவளுக்குள் விடுத்து.

கிணற்றை ஏட்டி பார்த்த கோதாவரி அங்கு யாரும் இல்லாததால் “எங்க போனா இவ…?” என்றபடி அங்கிருந்து நகர… அடுத்த அரை மணி நேரம் கழித்து இனிதுழனியை கிணற்று படியோரம் ஒதுக்கி இருந்தான் நிவர்த்தனன்.

மனமே இல்லாது அவள் இதழுக்கு விடுதலை கொடுத்தவன், கிணற்று நீரில் இருந்து சற்று உயர இருந்த படியில் அவளை ஏக்கி தூக்கி வைத்தான் பூவாய்.

அவளோ மூச்சு வாங்க… தானும் ஏறிக் கொண்டவன் அவள் முதுகை வருடி கொடுத்து சமநிலை படுத்தினான்.

“ஹேய் இனிது… நீ ஓகே தான டி…” 

அவன் செய்கையில் நாணத்தில் கன்னம் சிவந்திருந்தாலும் தன்னை அடி முதல் நுனி வரை காண்பித்தவள் முறைக்க,

பிடரி வருடி கீழ் இதழ் கடித்து சிரித்தவன், “ஏய் வாய துறந்து பேசுடி… உன் குரல கேட்கணும் ரொம்ப ஆசையா இருக்கு டி. வந்ததுல இருந்து ஏன் நீ என்கிட்ட பேசவே இல்ல…?” கேள்வி எழுப்பினான் கோவமாக.

அச்சணம் சிவந்தவள் வதனம் வாடி போக ஏதும் கூறாது எழும்ப போனாள் இனிதுழனி. 

“இருடி… எங்க போற நீ… நான் கேட்டதுக்கு பதில் சொல்லு?” என்றான் பிடித்து அவன் மடியில் அமர்த்தி போக விடாது நிவர்த்தனன்.

அவள் விழிகளில் விழி நீர் கோர்க்க, “ஆமா இப்ப எல்லாம் நீ என் பாட்டு படிச்சிகிட்டே பரதம் ஆட மாட்டேங்குற. கடந்த ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி நீ பாடி ஆடுனத நான் பார்த்தது. அதுக்கு அப்புறம் நீ டான்ஸ் பண்ற பட் ஏன் பாட்டு படிக்க மாட்டேங்குற…?”

அவன் கேள்விகளுக்கு அவளிடம் பதில் மௌனம் மட்டும் தான்.

சிலையாய் அவனையே அவள் பார்க்க, “ஹேய் இனிதுமா…” உலுக்கினான் அவளை.

அதில் தெளிந்தவள் ஏதும் கூறாது தொண்டை குழி அடைக்க எச்சிலை கடத்தியவள் எழுந்து மேலே செல்ல எத்தனிக்க, அவள் கையை பிடித்து நிறுத்தியவன் எழுந்தான் பட்டென்று.

விலகி இருந்த அவள் தாவணியை சரி செய்தவனாய் “எப்போ கல்யாணம் பண்ணிக்கலாம் இனிதுமா…” என்றானே பார்க்கலாம்.

அவள் அதிர்ச்சியில் அவன் விழி பார்த்து நிற்க, அவனோ அவள் கிழாடை முதல் மேலாடை வரை சரி செய்தான் அவளை பாராது.

“சொல்லு இனிதுமா… நீ தான அன்னைக்கு சொன்ன திருப்ப உன்ன நான் இந்த டெஸ்டினில மீட் பண்ணா என்னைய கல்யாணம் பண்ணிக்கிறேன்னு” என்றவன் பார்வை அவள் கழுத்தில் படிந்தது இப்போது.

அவன் கேள்வியில் தலையை இட வலமாக வேண்டாம் என்று செய்கையில் அசைத்தவள் விழி நீர் இமை கடக்க, “ஹேய் இனிதுமா உன் கழுத்துல என்ன தழும்பு” என கூர் விழிகளுடனவன் தொட போக.. அவன் கையை வெடுக்கென்று தட்டி விட்டவள் வேகமாக பாவாடையை தூக்கி கொண்டு ஓடினாள் கண்ணீரில் கரைந்தவளாய்.

கிணத்து படியேறி இனிதுழனி விழிகளை துடைத்தபடி வீட்டுக்குள் ஓடிச் செல்ல, செல்லும் அவளை பார்த்து படியே ஈரம் தோயிந்த மேனியுடன் மேலே வந்து நின்றவன் முன்வந்து நின்றார் அம்பிகாமா.

“என்ன பேராண்டி கிணத்துக்குள்ள ஒரே அஜால் குஜால் தான் போல” அவர் கிளுக்கி சிரிக்க..

அவர் வந்து நின்றதை கூட கவனிக்காது நின்றவன் அவர் குரலில் தெளிந்தான்.

முறைத்தவன், “ஏன் அப்பத்தா நான் குஜாலா இருந்தேன் அதை நீ பார்த்த. குஜாலா இருந்தா உன் பேத்தி எதுக்கு இப்படி தலை தெரிச்சு ஓடுறா” அவன் அலுத்துக் கொள்ள…

“அவ எதுக்காக ஓடுறான்னும் எனக்கு தெரியும். அதே நேரத்துல நீ குஜாலா இருந்தன்னு எனக்கு தெரியும்டா கள்ளாலி படவா…” அவன் கன்னம் கிள்ளினார் அம்பிகாமா முத்து பல் தெரிய.

விழிகள் விரிய “கிணத்துகுள்ள ஏதும் இருந்தியா அப்பத்தா…?” நிவர்த்தனன் கிணற்றை பார்த்தான் அதிர்வோடு.

“ம்க்கு… நீங்க பண்ற லூட்டிய பார்க்க நான் கிணத்துக்குள்ள வர வரணுமா… போடா டேய்..” அவன் தலையில் கொடியவர், “வாய தொடடா முதல்ல… என் பேத்திக்கு ஒரு முத்தா கூட கொடுக்க தெரியல கடிச்சு வச்சிருக்கா..” என்றார் நக்கலாய்.

அப்பொழுதே நிவர்த்தனன் உதட்டு ஓரம் கசிந்த குருதியை கண்டவன் ஆண்மையின் வெட்கத்தில் பிடரி வருடினான்.

அவனை முகம் கோண பார்த்த அம்பிகாமா, “டேய் என்ன வெக்கமா…?” அவனும் ஆமோதிப்பாய் தலை அசைக்க, “சகிக்கல…” என தலையில் அடித்துக் கொண்டவர்,

“ஆனா ஒன்னுடா என்ன மாதிரி ஒரு யங் சிங்கிள் கேர்ள்ல வச்சிட்டு நீங்க பண்ற லூட்டி இருக்கே.. நீ என்னடான்னா கிணத்துக்குள்ள ஜலகிரீடை பண்ற.. 

அங்க இன்னொருத்தனுக்கு அவ அம்மா சாந்தி முகூர்த்ததுக்கு நல்ல நேரம் பார்க்கா.. அவன் என்னடானா ரூம்ல ஜலகிரீடை பண்றான் போய் தொலைங்கடா..” என்றவர்,

“அடியேய் கோதாவரி இவனுங்க போற வேகத்த பார்த்தா நீ நேரா புள்ளைக்கு பேர் வைக்கிற பங்குசனுக்கு ( பங்க்ஷன்) நல்ல நேரம் பாருடி…” என அங்கிருந்து நகர்ந்தார் அம்பிகாமா பேத்தி வாழ்க்கையும் வெகு விரைவில் மல்லிகை மணம் வீச போகிறன்றது என்ற சந்தோஷத்தில்.

நிவர்த்தனனுக்கோ வெட்கம் கலைய தவிப்புடனும் காதலுடனும் விழி நீருடன் ஓடிச் சென்ற தன் காதலியின் வரிவடிவ காட்சி கண் முன் விரிய புருவமோ முடிச்சிட்டது சில கேள்விகளுடன்.

 

செங்கோதை மணம் வீசும்…

கிட்டத்தட்ட ஒரு மாசத்துக்கு அப்புறம் ud போட்ருக்கேன் ஃப்ரெண்ட்ஸ். Sorry helath அண்ட் family issue 🤗🤗. இனி தினமும் ud தரேன் 👍🏻❤️.

உங்க Golden Comments & like கொடுத்து எனக்கு boost up கொடுங்க ஃப்ரெண்ட்ஸ் ❤️😍😍.

அப்புறம் ❤️ தட்டிட்டு போங்க 🤗

 

 

 

 

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.7 / 5. Vote count: 9

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!