நேச தாழ் திறவாயோ உயிரே..!! 20, 21

4.9
(7)

Episode – 20

 

அதிலே சிறு புன்னகை புரிந்தவன் அவளை நேராக செல்லும் வழியில் இருந்த ஆடைக் கடை ஒன்றிற்கு அழைத்துச் சென்றான்.

 

தூங்கும் அவளை எழுப்ப மனம் இல்லாது தானே இறங்கிச் சென்று பேபி ஃபிங்க் நிறத்தில் ரோஜாப் பூக்கள் போட்ட சுடிதார் ஒன்றை அவளுக்காக பார்த்துப் பார்த்து வாங்கியவன் மீண்டும் வந்து காரில் ஏறி தான் தங்கி இருந்த ஹோட்டலுக்கு நேரடியாக  காரைச் செலுத்தினான்.

 

அவளோ, சற்று அசைந்தாலும் தூக்கம் கெட்டு விடும் என்பது போல நித்திரை கொள்ள அவளின் அயற்சி புரிந்தவன் ஹோட்டல் வரும் வரைக்கும் அவளைத் தொந்தரவு செய்யவில்லை.

 

அதன் பிறகும் அவளைத் தூங்க விட்டால் இன்றைக்கு முழுவதும் கார் ஓட்டிக் கொண்டு தான் இருக்க வேண்டும் என எண்ணியவன்,

 

“மகிழ்…. மகிழ் என்று அழைத்து அவளை எழுப்ப அவளோ மருந்தின் வீரியத்தில் எழ முடியாது இருந்தாள்.

 

அவளின் பெயரை கூப்பிட்டுக் களைத்துப் போனவன் கடைசியில் வேறு வழி இன்றி அவளது தோளைத் தட்டி எழுப்பினான்.

 

அவளோ, தட்டிய அவனது கையை நன்றாக இழுத்துப் பிடித்து அவனின்  தோள் வளைவில் இன்னும் வாகாக நித்திரை கொள்ள,

 

அவளின் செய்கையில் டைரக்டர் ஆக மாறியவன் அந்தக் கணத்தை ரசித்து அவளோடு டூயட் பாடச் சென்று விட்டான்.

 

சிறிது நேரம் கழித்துஅவள் கொட்டாவி விட்டபடி அசைய பாட்டை இடையில் நிறுத்தி விட்டு நனவுக்கு வந்தவன் தலையைக் கோதி தன்னை எண்ணி சிரித்துக் கொண்டான்.

 

பின்பு இந்த சந்தர்ப்பத்தை எப்போதும் பொக்கிஷமாக வைத்திருக்க வேண்டும் என்று எண்ணியவாறு அவளது நெற்றியில் தயக்கம் இன்றி மென் முத்தம் பதித்தவன் அதையே தனது ஃபோனில் பதிவு செய்தும் கொண்டான்.

 

அவனைப் பொறுத்த வரை அவள் தான் தனக்குரியவள் என முடிவு பண்ணி இரு மணி நேரங்களிற்கு மேலாகிறது.

 

அதனால் அந்த முத்தம் அவனுக்கு தவறானதாகத் தெரியவில்லை.

 

( இது மட்டும் நம்ம ஆழினிக்குத் தெரியணும் அப்போ இருக்கு ஜிதினுக்கு குடுமி பிடிச் சண்டை.)

 

மூன்று போட்டோக்களும், ஒரு வீடியோவும் எடுத்தவன் அதனை வைத்து விட்டு நல்ல பிள்ளை போல அவளை மீண்டும் எழுப்பினான்.

 

அவளும் ஒரு மாதிரி கஷ்டப்பட்டு கண்ணைத் திறந்தாள்.

 

எழுந்ததும் “அச்சோ என்னோட வீடு வந்திடிச்சா? அப்பாக்கு தெரிஞ்சா அவ்ளோ தான், நீங்க யாருன்னு கேட்டா நான் என்ன சொல்லிச் சமாளிப்பேன்?” என தன்னை மறந்து பதற்றப் பட்டவள் அவசரமாக காரில் இருந்து இறங்க முயன்றாள்.

 

எழும்பியதில் இருந்தே அவளது அழும்புகளைக் கவனித்தவன் அவள் இறங்கச் செல்லவும் எதுவும் பேசாது கார் லாக்கை விடுவித்தான்.

 

அவளோ இறங்கிய பின்பு தான் சுற்றுப்புறம் உறைக்க அது எந்த இடம் என கண்ணைச் சுழற்றிப் பார்த்தாள்.

 

பார்த்தவள் அந்த ஹோட்டலின் வெளிப்புற ஆடம்பரத்தில் பயந்து போய் ஒரு கணம் உறைந்து போய் அப்படியே நின்று விட்டாள்.

 

பின்பு தான்  தனது உடை பற்றி நினைவு வர குனிந்து ஒரு முறை தன்னை தானே பார்த்து விட்டு வெட்கிப் போய் உடனடியாக காரில் ஏறி அமர்ந்து மூச்சு வாங்கினாள்.

 

அவளின் செய்கைகளை பார்த்துக் கொண்டிருந்தவன் அவள் சற்று அமைதி அடைந்ததும் அவளின் கையில் தான் வாங்கிய ஆடையைக் கொடுத்தான்.

 

அதில் மேலும் சங்கடம் கொண்டவளை “நீ இப்படியே கிழிந்த ஆடைகளுடன் வீட்டிற்குப் போனால் மட்டும் உங்க அப்பா கவலைப்பட மாட்டாரா? முதலில் இறங்கி வந்து உடையை மாற்று அப்புறம் நானே உன்னைக் கொண்டு போய் வீட்டில விடுறேன்.” என்றவன்,

 

அவள் மேலே மறுத்துப் பேசும் முன்பு யார் கண்ணையும் உறுத்தாமல் அவளை தனது அறைக்கு அழைத்துச் சென்றான்.

 

அங்கு உடை மாற்றி வந்தவளைப் பார்த்து “வாவ்….”என்று கூறி தாடையில் கை வைத்து ரசித்தவனைக் கண்டு,

 

பெண்ணவள் வெட்கிச் சிவந்ததில் அவளது உடையின் நிறத்திற்கு பொருந்தும் வகையில் அவளின் கன்னக் கதுப்பும் பிங்க் கலரில் டால் அடித்தது.

 

அதைக் கண்டு ஆசை கூடி அவளை அணைக்க பரபரத்த தனது கைகளை அடக்கியவன் மீண்டும் அவளை அழைத்துக் கொண்டு அவளின் இருப்பிடத்திற்குச் செல்லும் போது,

 

அவளோ “இப்போ இந்த ட்ரெஸ்சைப் பற்றிக்  கேட்டால் நான் என்ன சொல்லிச் சமாளிப்பது?” என அவனிடமே கேட்டாள்.

 

“ம்ம்ம்ம்…. வெரி சிம்பிள். என் வருங்கால புருஷன் வாங்கித் தந்தார் எண்டு சொல்லு பேபி.”

 

“ஹா…. ஹா…. சார் உங்களுக்கு கேலி பண்ண நானா கிடைச்சேன், சும்மா விளையாடாம  ஒரு நல்ல காரணம் சொல்லுங்க ப்ளீஸ்.”

 

“ம்ம்ம்ம்ம்….” என்றவன் காரை ஓரம் கட்டி விட்டு,

 

“பேபி, நான் ஒண்ணும் விளையாட்டுக்குச் சொல்லல.நான் உண்மையாவே உன்னை விரும்புறேன். உன் கூட காலம் முழுவதும் வாழணும் எண்டு ஆசைப்படுறேன். உனக்கு என்னைப் பிடிச்சு இருக்கா? “

 

“…………..”

 

“மௌனம் வேண்டாம் சகி ஏதாவது பேசு.”

 

“ஹ்ம்ம்…. நீங்க எடுக்கிற படம் போல ஃலைப்பையும் நினைச்சிட்டீங்க போல அது ரீல் சார் இது ரியல்.”

 

“சோ, வாட் பேபி?”

 

“என்னை உங்களுக்கு எத்தனை நாளாய்த் தெரியும்?, அல்லது உங்களைப் பற்றி எனக்கு என்ன தெரியும்?, அதோட இதெல்லாம் காதல் எண்டு நான் எப்பிடி நம்புறது?”

 

“ஓஹ்…. அது தான் உன் பிரச்சனையா? என்னைப் பற்றி ஒரு வரியில சொல்லணும் எண்டா, நான் ஒரு அனாதை, எனக்கு சொந்தம் எண்டு சொல்லிக்க யாருமே இல்ல பேபி, எனக்கு ஒரே ஒரு உயிர் நண்பனும், அப்பா மாதிரி ஒரு வெல்விஷ்ஷரும் இருக்காங்க அவ்ளோ தான். இனி எனக்கு என் வாழ்வில கிடைக்கப் போற முதல் சொந்தம் நீதான் மகிழ்.” என உணர்ச்சி பூர்வமாக தன்னைப் பற்றி கூறி முடித்தான் ஜிதின்.

 

அவனின் பேச்சினை இமை சிமிட்ட மறந்து பார்த்துக் கொண்டிருந்தாள் ஆழினி. அவனின் பேச்சு அவளது உயிர் வரை சென்று தாக்கியது.

 

“உங்களுக்கு என்னை விட நல்ல பொண்ணு கிடைப்பாங்க சார். “ என்று பேசியவளை இடை மறித்தவன்,

 

 “உன்னை நான் கருத்து சொல்லச் சொல்லி கேட்டேனா? நான் கேட்கிறது உனக்கு என்னைப் பிடிச்சிருக்கா? இல்லையா? என்கிறது மட்டும் தான்”

 

“இங்க பாருங்க சார், உங்க ஃசிட்டி மாதிரி இல்ல எங்க கிராமம், எங்க அப்பா கடைசி வந்தாலும் திரைத் துறை சம்பந்தமான ஒருவரை எனக்கு கட்டி வைக்க  சம்மதிக்கவே மாட்டார். அதனால வீணா கனவுக் கோட்டை கட்டாதீங்க.”

 

“ஓஹ்…. ஐ லவ் யூடி.”

 

“எதஆஆ ஆ …. சார் உங்களுக்கு நான் சொன்னது புரிஞ்சுதா?, இல்லையா?”

 

“நல்லாவே புரியுது மை டியர்.”

 

“என்ன புரிஞ்சுது?”

 

“உனக்கு என்னை ரொம்ப பிடிச்சிருக்கு எண்டு புரிஞ்சுது. “

 

“ஆஹ்…. யார் சொன்னா?”

 

“யார் சொல்லணும் பேபி?”

 

“ஹ்ம்ம்… முடில சார் ப்ளீஸ்.”

 

“ஓகே மகிழ் கூல். இப்போ வரைக்கும் நீ என்னைப் பிடிக்கல எண்டு ஒரு வார்த்தை கூடச் சொல்லல, அப்பா அப்பிடிச் சொல்லுவார், ஊர் இப்பிடிப் பேசும் எண்டு தான் சொல்லிக் கொண்டு இருக்கிறாய். இதில இருந்தே தெரியுது உன்னோட காதல்.”

 

“இல்ல…. அது…. ஏதோ….”

 

“ம்ம்ம்ம்…. சொல்லு. ஏன் இத்தனை தடுமாற்றம்?” என்றவன்,

 

“உண்மையைச் சொல்லு உனக்கு என்னை பிடிக்கவே இல்ல?” என்று அவளது கையை எடுத்து தனது தலை மேல் வைத்துக் கொண்டு கேட்டான்.

 

அதிலே துடித்துப் போனவள் கையை விலக்க முயல அவனோ அதற்கு இடம் கொடுக்காது இன்னும் தனது தலையில் அவளது கையை வைத்து அழுத்தினான்.

 

அவளோ அதற்கு மேல் முடியாது போக கண்ணில் கண்ணீர் வழிய “உங்களைப் போல ஒருத்தரை யாருக்கு தான் பிடிக்காது சார்?”

 

என் கேள்விக்கு இது சரியான பதில் இல்லை. “உனக்கு பிடிச்சு இருக்கா அது தான் கேள்வி?”

 

“ம்ப்ச்…. ரொம்ப ரொம்பப் பிடிச்சு இருக்கு பிரம்மா.” என்ற மறு நொடி அவளின் கன்னத்தில் எட்டி முத்தமிட்டான் ஜிதின்.

 

அப்போது அவர்களின் காரைக் கடந்து சத்தமாக ஹார்ன் ஒலி எழுப்பியபடி ஒரு கார் செல்ல தன் நிலை அடைந்தவர்கள் முகத்தில் புன்னகை ததும்ப விலகி அமர்ந்தனர்.

 

அதன் பின்பு அவளது கையுடன் தனது கையைக் கோர்த்தபடி காரை ஓட்டத் தொடங்கினான் ஜிதின்.

 

கண்டு இரண்டு நாட்களே ஆனாலும்,

 

இருவர் இடையிலும் வந்த காதல் இரு யுகம் வாழ்ந்த நிம்மதியை இருவருக்குள்ளும் விதைத்தது தான் விந்தை.

 

காதல் எனும் தாயின் மடியில் இருவரும் தவழும் குழந்தைகளாய்….

 

அடுத்த பதிவில் பார்க்கலாம்.

 

போன எபிக்கு லைக்ஸ் மற்றும் கமெண்ட்ஸ் போட்ட நண்பர்களுக்கு பெரிய பெரிய நன்றிகள்.😍😍😍😍😍

 

இந்த இரண்டு எபிக்கும் உங்கள் லைக்ஸ் அண்ட் கமெண்ட்ஸ் தாங்க மக்காஸ்….

கதையின் போக்கு ஓகேவா….. உங்களுக்கு பிடிச்சு இருக்கா?

Episode – 21

என்ன தான் ஆழினி அவனின் காதலுக்கு பச்சைக் கொடி காட்டினாலும் அவளுக்கு இன்னும் தனது தந்தை மேல் உள்ள பயமோ, அந்த ஊரின் கட்டுப்பாடுகள் மீதுள்ள பயமோ சற்றுக் கூட குறையவில்லை.

 

தனது காதல் கை கூடுவது என்பது பெரும் பிரயத்தனத்திற்கு உரிய விடயம் என்பதும், அதற்கு தான் நிறைய போராட வேண்டி இருக்கும் என்பதும் அவளுக்கு நன்றாகவே தெரிந்து தான் இருந்தது.

 

அதைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருந்தவள் கார் அவர்கள் இருவரும் முதன் முதலில் சந்தித்த இடத்தை தாண்டிச் செல்லவும் தான் சுய நினைவிற்கு வந்தாள்.

 

உடனே அவனது கரத்தை தட்டி காரை நிறுத்தச் சொன்னவள் “பிரம்மா ப்ளீஸ், உங்க பிடிவாதத்தை இந்த விஷயத்தில காட்டாதீங்க. எனக்கு கொஞ்சம் டைம் கொடுங்க. அதுக்குள்ள என்னோட அம்மா, அப்பாக்கிட்ட நம்ம காதலைப் பத்தி நானே பேசி அவங்க சம்மதத்தை வாங்கப் பார்க்கிறேன்.”

 

“ம்ம்ம்ம்…. எனக்கு இதில பெரிசா உடன்பாடில்லை. பட் உனக்காக நான் காத்திருக்க ரெடி மகிழ் அது எவ்வளவு  காலம் எண்டாலும் சரி தான்.”

 

“ஏன் உங்களுக்கு என்னை அவ்வளவு பிடிச்சு இருக்கு பிரம்மா சார்?”

 

“காரணம் தெரில, ஆனா ரொம்பப் பிடிச்சு இருக்கு, ஒரு வேளை பூர்வ ஜென்ம பந்தம் ஏதாவது இருக்குமோ?”

 

“ஹா…. ஹா…. இருக்கும் இருக்கும் சார்.”

 

“அது சரி, நீ என்ன அடிக்கடி பிரம்மா சார்….  எண்டு கூப்பிடுறாய்?, என்னோட பேர் ஜிதின் தெரியும் தானே.”

 

“அது மத்தவங்களுக்கு எனக்கு எப்பவுமே நீங்க பிரம்மா தான்.”

 

“ம்ம்ம்…. ஓகேடி பொண்டாட்டி அப்புறம் அதில ஏன் சார்ர்ர்ர்…. என்கிறதையும் சேர்த்துச் சொல்லுறாய்?”

 

“ஓஹ் அதுவா…. அதெல்லாம் ஒரு மரியாதைக்காகத் தான். என்ன இருந்தாலும் நீங்க பெரிய ஆள்.”

 

“ஆமாடி அது மட்டும் கொஞ்சம் உண்மை தான். நான் உன்னை விட கொஞ்சம் வளர்ந்தவன் தானே.”

 

“நான் எந்த அர்த்தத்தில சொல்றேன், நீங்க அதை வைச்சு கிண்டல் பண்றீங்க உங்களைஐஐஐ…. என அவனை விளையாட்டாக அடிக்க கை ஓங்கியவள் சிறு சிரிப்புடன் அவனிடம் இருந்து விடை பெற்றாள்.

 

அவனிடம் இருந்து விடை பெற்று போகும் போது அவளது கையைப் எட்டிப் பிடித்தவன் அவளது கையில் ஒரு ஃபோனைத் திணிக்க அவள் மிரண்டு போய் அவனைப் பார்த்தாள்.

 

“என்னோட  வேலைல நான் பிஸி தாண்டி ஆனாலும் கண்டிப்பா நைட் உனக்கு ஒரு தடவை ஃகால் பண்ணுவேன்.”

 

“ம்ம்ம்ம்…. ஆனா என்கிட்டயும் ஃபோன் இருக்கு இது வேணாமே ப்ளீஸ்.”

 

“ஓஹ் அந்த குட்டி செங்கல் மாதிரி இருக்குமே அது தானே பேபி உன்னோட ஃசெல்போன்.”

ஜிதின் குறிப்பிட்டுச் சொன்னது அவள் வைத்திருந்த பழைய கால குட்டி ஃபோனை அதில் பேச மட்டும் தான் முடியும்.

 

அவன் கேலி செய்யவும் “போதும் ரொம்பத்தான்…. ஃபோன் கதைக்கிறதுக்கு மட்டும் தானே யூஸ் பண்றம்.”

 

“ம்ப்ச்…. நீ வேற, அவனவன் ஃபோன்ல தான் குடும்பமே நடத்துறாங்க தெரியுமா உனக்கு?”

 

“ஓஹ்…. அப்பிடியா? “

 

“இந்த அவசர உலகத்தில சாப்பிட்டியா? எண்டு புருஷன் பொண்டாட்டிக்கிட்ட கேட்கிறதே போன்ல தான். ஹ்ம்ம்…. உலகமே ஹை ஸ்பீட்ல போய்க் கிட்டு இருக்கு நீயும் உன்னோட கிராமமும் மட்டும் தாண்டி இன்னும் ஸ்லோவாவே இருக்கீங்க.”என்கவும்,

 

அவனை முறைத்தவள் “இங்க இருக்கிற உண்மையான பாசமும், அன்பும், இயற்கைக் காத்தும், போலி இல்லா முகங்களும் உங்க ஹை லெவல் ஃசிட்டில இருக்கா டைரக்டர் சார்?, உண்மையைச் சொல்லுங்க.”

 

“இல்ல தாண்டி…. எல்லாமே முகமூடி அணிந்த பொய்யான மனிதர்கள் தான். தேவைக்கும், இருக்கும் இடத்திற்கும், பகட்டிற்கும் ஏற்றாற் போல அவங்க முகமும் மாறிக் கொண்டே இருக்கும்.”

 

“ஆஹ்…. தெரியுதில்ல, அது தான் எங்க கிட்ட இல்ல எண்டு சொல்றேன். கோபம் வந்தா அடிச்சுப்போம், சந்தோசம் வந்தா சேர்ந்துப்போம். உங்களை மாதிரி வாட்ஸ் ஆப் ஸ்டேட்டஸ் வைச்சு எங்க சொந்தப் பிரச்சனையை ஊருக்கே வெளிச்சம் போட்டுக் காட்ட மாட்டோம்.”

 

“ஹா…. ஹா…. பார்றா எப்பிடி எல்லாம் பேசுறா என்னோட மகிழ். அது சரிடி ஏண்டி  இப்போ உங்க ஊரை எனக்கு விளம்பரப் படுத்திக் காட்டுறாய்.”

 

“ஏன் நீங்க ஃபோனுக்கு ஃபிரீ விளம்பரம் பண்ணும் போது நான் என்னோட ஊருக்கு பண்ணக்கூடாதா?” என்று தலையைச் சரித்து எதிர் கேள்வி கேட்டவளைப் பார்த்தவனுக்கு அவளை அப்படியே அள்ளிக் கொள்ளத் தோன்றியது.

 

எப்போதும் இயந்திரத் தனமாக இயங்கிக் கொண்டு இருந்தவனுக்கு அவனின் வாழ் நாள் முழுவதும் இளைப்பாறக் கிடைத்த மர நிழல் தான் ஆழினி.

 

அவளையே ஆசையாகப் பார்த்துக் கொண்டிருந்தவனின் முன்பு கையை ஆட்டியவள் “ஹலோ சார் கனவு கண்டது போதும் நான் கிளம்புறேன் ஒழுங்கா டைமுக்கு சாப்பிட்டு வேலையைப் பாருங்க.”

 

“அப்பிடி அக்கறை இருக்கிறவங்க சமைச்சு எடுத்துக் கொண்டு தரணும் தானே.”

 

“ஆசை இருக்கலாம் சார், ஆனா பேராசை இருக்கக் கூடாது. லவ் சொல்லி முழுசா ஒரு நாள் கூடக் கழியல அதுக்குள்ள என்னென்ன ஆசையெல்லாம் வருது உங்களுக்கு. விட்டா இண்டைக்கே கலியாணம் பண்ணிக் கூட்டிட்டு போயிடுவீங்க போல.”

 

“கண்டிப்பா இப்படியே வண்டியை ரெஜிஸ்டர் ஆபிஸ்க்கு விடவாடி?”

 

“ஆத்தாடி…. ஆளை விடுங்க.” என்றவள் அவன் அசந்த நேரம் அவனின் கன்னத்தில் அழுந்த முத்தம் இட்டு விட்டு ஓடி விட்டாள்.

 

அவனோ என்றும் இல்லாத உல்லாச மன நிலையுடன் கன்னத்தை தடவியபடியே காரை திருப்பிக் கொண்டு சென்றான்.

 

ஆழினி வீட்டுக்குள் பயந்து கொண்டே போகும் போது அவளது தந்தையும் தாயும் வெளியில்  பானை செய்வதற்காக களிமண்ணை காலால் பிசைந்து கொண்டிருந்தனர்.

 

அந்த வேலையிலேயே கவனமாக இருந்தவர்கள் அவள் வந்ததையோ, அல்லது அவளது உடையையோ கவனிக்கவில்லை.

 

அவளும் சத்தம் போடாமலே வீட்டுக்குள் சென்று வேறு உடை மாற்றி விட்டு, அவன் தந்த உடையை அவளது பெட்டியில் பத்திரமாக மடித்து வைத்து விட்டு வந்தாள்.

 

அதே போல அவன் கொடுத்த ஃபோனையும் ஆன் பண்ணிஅவனுக்கு மெசேஜ் செய்தவள் மீண்டும் அதனை ஆப் பண்ணி தலையணைக்குள் வைத்தாள்.

 

அவள் தனது காதல் விடயத்தை பெற்றோரிடம் இருந்து தொடர்ச்சியாக மறைத்து வைத்திருக்க வேண்டும் என்று நினைக்கவில்லை.

 

இப்போதைய சூழ்நிலையில் அவர்களிடம் கூற விரும்பவில்லை அவ்வளவு தான்.

 

அதிலும் ஜிதின் இருப்பது சினிமாத்துறையில் இங்கு வந்திருப்பதோ பட விஷயம் சம்பந்தமாக, வந்த இடத்தில் காதல் விதை முளை விட்டு விட்டது.

 

இதை சொன்னால் யார் தான் நம்புவார்கள். இதென்ன படமா ஒரே பாட்டில் ஒன்று சேர,

ஆகவே கொஞ்சம் கொஞ்சமாக எடுத்துக் கூறி பெற்றோரை சம்மதிக்க வைக்க வேண்டும் என எண்ணினாள் அவள்.

 

தன் மேல் உயிரையே வைத்திருக்கும் இருவரும் கண்டிப்பாக இதற்கு சம்மதிப்பார்கள் என உறுதியாக நம்பினாள் ஆழினி.

 

ஆனால் அவள் எண்ணியது கடைசி வரை நிறைவேறப் போவது இல்லை என்பதும் அவளது திருமணமே திருட்டுத் தனமாக யாரும் இல்லாமல் தான் நடைபெறப் போகிறது என்பதும் அந்தப் பேதைக்கு அப்போது தெரியவில்லை.

 

அதன் பின்பு நாட்கள் வேகமாக நகர, ஜிதின் மற்றும் மகிழின் காதலும் யாரும் அறியாது நாளுக்கு நாள் விருட்சமாக வளர்ந்து கொண்டே போனது.

 

அவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ள சந்தர்ப்பங்கள் தானாக அமையாது போனாலும் ஜிதின் படக் காட்சிகள் மூலம் அதனை ஏற்படுத்திக் கொண்டான்.

 

அவன் தெரிவு செய்த நிலத்தின் உரிமையாளர் ஆழினி வீட்டிற்கு அருகில் இருந்தது அவனுக்கு இன்னும் வசதியாகிப் போனது.

 

அவருடன் பேசும் சாக்கில் அடிக்கடி அங்கு செல்வான். அப்போது ஆழினிக்கும் ஃபோன் பண்ணி தான் அங்கு வரப் போவதை முதலே அறிவித்தும் விடுவான்.

 

அவளும் அவனைக் காண்பதற்காகவே ஏதாவது வேலை செய்வது போல அவன் போகும் வரைக்கும் வீட்டிற்கு வெளியே வந்து நிற்பாள்.

 

அதுவும் போதாது என்று படத்தின் சில காட்சிகளை மட்டுமே தஞ்சாவூரில் எடுப்பதாக முடிவு செய்திருந்தவன் முழுப் படத்தினையும் அங்கேயே எடுத்தான்.

 

அந்தப் படத்தின் ஹீரோயின் ஆயிஷா வளர்ந்து வருகின்ற இளம் ஃபேமஸ் நடிகை.

 

அவள் இந்தப் படத்தில் நடிக்க வந்ததே ஜிதின் தனது பால்ய நண்பன் என்பதாலும், அவனின் படம் எல்லாமே சூப்பர் ஹிட் என்பதாலும் தான்.

 

அவன் தஞ்சாவூரிலேயே ஃசிம்பிளாக படம் முழுவதையும் எடுப்பதைக் கண்டு சந்தேகம் கொண்டவள் அவனிடமே கேலியாக அதனைக் கேட்டும் பார்த்தாள்.

 

அவள் மட்டும் அல்ல அந்தப் படத்தின் ஹீரோ மற்றும் தொழில் நுட்பக் கலைஞர்கள் எல்லோருமே அரசல் புரசலாக கேட்டுப் பார்த்தார்கள்.

 

அதற்கு எல்லாம் அவனின் பதில் வெறும் சிரிப்பு மட்டுமே.

 

அவனோ தன்னவள் நடமாடும் கோவில், குளம் ஆறு என வளைத்து வளைத்து படக் காட்சிகளை எடுக்க, அது ஆயிஷா கண்ணில் தப்பாது விழ நேரடியாகவே அவனை தனியாக அழைத்து கேட்டுப் பார்த்தாள்.

 

அப்போதும் அவன் கண் அடித்து சிரித்து விட்டுப் போக அவளும் “அடப்பாவி அப்போ என்னமோ இருக்கு.” என்று அவளும் சிரித்துக் கொண்டே நகர்ந்து விட்டாள்.

 

இப்படியே நாட்கள் நகர அவன் ஒரு நாள் ஆழினியின் வீட்டிற்கு அருகே இருந்த சிறு காட்டுக்குள் ஃபைட் சீன் ஒன்றை எடுத்து முடித்து  அனைவரையும் அனுப்பி விட்டு களைப்பாக அமர்ந்திருந்தான்.

 

அந்த சோர்வுக்கு தெம்பூட்ட அவனுக்கு ஆழினியின் குரல் வேண்டும் போல இருந்தது.

 

நினைத்த உடனே சற்றும் தாமதிக்காது அவளுக்கு அழைக்க அது எடுக்கப்படாமலேயே போனது.

 

சோர்வுடன் “ஹ்ம்ம்ம்….”என்ற பெரு மூச்சு விட்டவன் கதிரையில் சாய்ந்து உட்கார்ந்தான். அப்போது அவனது தோளில் ஒரு கல் வந்து விழுந்தது.

 

அவனோ அதனை தட்டி விட்டு உட்கார மீண்டும் ஒரு கல் வந்து விழுந்தது.

 

“யாருடா அது?” என்று பார்த்தவனுக்கு விடையாக பச்சை நிறத் தாவணியில் பஞ்ச வர்ணக் கிளியாக காட்சி தந்தாள் அவனது அன்புக் காதலி.

 

அவளை அந்த இடத்தில் கண்டதும் மனம் ஆனந்தக் கூச்சலிட, அக்கம் பக்கம் பார்த்து யாரும் இல்லை என உறுதி செய்து கொண்டான் ஜிதின்.

 

அதன் பின்பு அவளை நோக்கி வேகமாகச் சென்றவன் “என்ன பேபி நீயாகவே என்னைத் தேடி வந்திருக்காய்?” எனக் கேட்டபடி அவளது கன்னத்தை நிமிண்டினான்.

 

அவளோ வெட்கப் புன்னகை பூத்தவாறே அவனின் முன்பு தனது கையில் இருந்த தூக்குச் சட்டியை நீட்டினாள்.

 

அவனோ ஒண்ணும் புரியாது கண்களில் “என்ன இது?” என்ற கேள்வியைத் தாங்கி  அவளை நோக்கினான்.

 

அவனின் பார்வையில் சிரித்தவள் “உங்களுக்காக நீங்க கேட்ட மாதிரியே, நானே  என் கையால முதன் முதலா ஸ்வீட் செய்து கொண்டு வந்து இருக்கேன்.”

 

“ஓஹ்…. எனக்காகவா பேபி?” என மகிழ்சியுடன் வாயைத் திறந்தவனது வாய்க்குள் அல்வாவை ஊட்டி விட்டவள்,

 

“எப்படி இருக்கு?” என ஆவலாக கேட்டாள்.

 

அவனோ “சூப்பர்.” என சைகை செய்து கொண்டே அந்த தூக்கு சட்டி முழுவதையும் தனியாளாக ஃகாலி செய்ய ஆரம்பித்தான்.

 

அவளோ அவன் சாப்பிடும் அழகை விழி விரித்துப் பார்த்தவாறு இருக்க,

 

அவனோ அவளுக்கும் எட்டி ஊட்டி விட்டு அவளையும் உண்ண வைத்து தானும் உண்டு முடிக்க,

 

“அப்போ சார் எங்களுக்கு எல்லாம் அல்வா இல்லையா? “ என்ற குரலில் இருவரும் அதிர்ந்து திரும்ப அங்கு அவர்களைப் பார்த்தபடி புன்னகையுடன் நின்றிருந்தாள் ஆயிஷா.

 

ஜிதினோ, “இல்ல இவ வந்து….” எனத் தடுமாற,

 

“என்ன ஒரு அதிசயம்?, நம்ம நம்பர் ஒன் டைரக்டர் சார் முதல் முறை வார்த்தை வராது தடுமாறுறாரே….”என்று அவனை வார்த்தைகளால் வாட்டி வதைத்தாள் ஆயிஷா.

 

அதற்கு மேல் நண்பியிடம் மறைக்க விரும்பாதவன், ஆழினியை இழுத்து தன்னுடன் அணைத்துக் கொண்டு  “இவங்க தான் மிஸஸ் மகிழாழினி ஜிதின் ஷேத்ரா.” என அவளை அறிமுகம் செய்து வைக்க,

 

வாயைப் பிளந்த ஆயிஷா, “உனக்குள்ளயும் ஒரு ரெமோ, காதல் மன்னன் எல்லாம் இருந்திருக்காங்க பாரேன்.” என்று கிண்டல் அடித்தாலும் இருவரையும் மகிழ்ச்சியாக கட்டி அணைத்து வாழ்த்துச் சொன்னாள்.

 

ஆழினியும் சிரித்துக் கொண்டே நன்றி சொல்ல,

 

“நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க ஆழினி. இரண்டு பேர் ஜோடிப் பொருத்தமும் சூப்பர்.” என்றவள், அவர்களிடம் இருந்து விடை பெற ஆய்த்தமாக,

 

அவளிடம் “இந்தக் காதல் விடயத்தை யாரிடமும் சொல்லக் கூடாது.” என கேட்டுக் கொண்ட ஜிதின், மேலோட்டமாக அவளது குடும்பம் மற்றும் ஊரைப் பற்றிக் கூறினான்.

 

“ஓஹ்…. அப்போ இவங்க அப்பாக்கு இந்த விஷயம் தெரிஞ்சா என்ன ஆகும்டா?” என கவலையாக கேட்டவளைக் கண்டு தோளைக் குலுக்கியவன்,

 

“அதற்கு இப்போதைக்கு வாய்ப்பு இல்ல, அப்படி வேறு யாரும் சொல்லித் தெரிய வருவதற்கு முன்பு ஆழினியே நெக்ஸ்ட் வீக் அவங்க கிட்ட பேசி சம்மதம் வாங்குறதா சொல்லி இருக்கா பார்ப்பம் ஆயிஷா.”

 

“ம்ம்ம்ம்ம்…. அப்படி எண்டா ஓகே ஜிதின், நீங்க பேசிக் கொண்டிருங்க நான் வர்றேன்.” என்றவள்  அங்கிருந்து செல்ல, ஜிதின் மீண்டும் ஆழினிக்கு அல்வா ஊட்டும் வேலையைச் செவ்வனே செய்தான்.

 

அவனின் காதல் கண்களை மாத்திரம் தீண்டிப் போகும் கண்ணியம் காக்கும் காதல் அன்றோ!

 

யாருக்கு தமது விடயம் தெரியக்கூடாது என்று நினைத்தார்களோ…. அவர்களுக்கே அவ்விடயம் தெரிய வந்தால்….

 

அவர்கள் முன்னாடியே இரகசியம் பரகசியமாக வெளியானால்….

 

அந்த இரு இளம் காதல் அன்றில்ப் பறவைகளின் நிலை என்னவாகும்?

 

அடுத்த பதிவில் பார்க்கலாம்.

 

போன எபிக்கு லைக்ஸ் மற்றும் கமெண்ட்ஸ் போட்ட நண்பர்களுக்கு பெரிய பெரிய நன்றிகள்.😍😍😍😍😍

 

இந்த இரண்டு எபிக்கும் உங்கள் லைக்ஸ் அண்ட் கமெண்ட்ஸ் தாங்க மக்காஸ்….💜💜💜💜💜💜💜💜💜💜

❤❤❤❤❤❤❤❤

அடுத்த எபியுடன் பிளாஷ் பாக் முடிந்து விடும்…💖💖💖💖💖💖💖

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.9 / 5. Vote count: 7

No votes so far! Be the first to rate this post.

1 thought on “நேச தாழ் திறவாயோ உயிரே..!! 20, 21”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!