“குளிர்ந்த நீர் உடலை வேகமாக நனைக்க அதில் நடுங்கி எழுந்து அவனை “ஆதி…” என வேதனையோடு பார்த்தாள்.
அவன் அவளின் கையில் போடப்பட்டிருந்த கைவிலங்கைக் கழட்டிவிட்டு கையிலிருந்த உணவுத் தட்டை நீட்டி “சாப்பிடு…” என்று கொடுக்க
“எனக்கு வேணாம்.” என தட்டை தூக்கி எறிந்து முகத்தைத் திருப்பிக் கொண்டாள்.
அதில் அவனுக்கு கோபம் வந்துவிட கழுத்தை வேகமாகப் பிடித்தவன், “இத சாப்பிடாம செத்து போக போறியா?” என்றான் பல்லைக் கடித்து.
“ஆமாம்… இப்படி ஒரு பச்ச துரோகிக்கு அக்காவா இருக்குறத விட செத்துப் போறதே மேல்…” என்றாள் துளியும் பயமில்லாமல்.
“செத்துப் போகணுமா?” எனக் கொடூரமாக சிரித்தவன
“சரி… செத்துப் போ…” என கையில் வைத்திருந்த பிஸ்டலை எடுத்து அவள் தலையில் வைத்தவன் ட்ரிகரை அழுத்த எத்தனிக்க அவள் கொஞ்சம் கூட மரண பயமில்லாமல் அவனை ஏளனமாக பார்த்திருந்தாள். அவள் தைரியத்தைப் பார்த்து எதையோ யோசித்தவன் சற்று விலகி நின்று உச்சிக் கொட்டினான்.
“இல்லை. நீ செத்துப் போறதுல எனக்கு எந்த ஒப்ஜெக்சனும் இல்லை. எங்க அந்த டொக்யூமென்ட்? சொல்லிட்டு செத்துப் போ.” என்றான் அவள் கழுத்தை நெரித்தபடி.
கழுத்து வலியில் முடியாமல் கண்கள் மூடி ழலியை பொறுத்துக் கொண்டாள். கண்ணீர் வரவில்லை. “நான் கேட்குறதுக்கு பதில் வந்தா உன்னை இப்போ விடக் கூட நான் தயாரா இருக்கேன். ஆனால் நீதான் நாலு வருசமா என்கிட்ட உண்மைய சொல்லவே மாட்டேங்குறியே. நீ உண்மைய சொல்லலன்னா, இனிமேல் நாலு வருடம் இல்லை. நாப்பது ஜென்மம் எடுத்தாலும் இங்கருந்து உன்னால வெளில போக முடியாது. இப்போ சொல்லு எங்க அந்த டொக்யூமென்ட்?” என அவன் அழுத்தமாக கோட்டவனின் கைகளை தட்டி விட்டவள்,
“அதுதான் சொல்றேன்ல? எனக்கு தெரியாது. எனக்குத் தெரியாது. தெரிஞ்சாலும் சொல்ல மாட்டேன். அவ்ளோதான் ஆதி. ஆனால்… ப்ளீஸ் விட்டுடு. நீ விடலன்னாலும் பரவால்ல. ஒன்னு என்ன கொன்னுடு. இப்படி சித்தரவதை பண்ணாத. உன் கையாலையே என்ன கொன்னுடு ஆதி…” என அவன் கையைப் பிடித்து கெஞ்சினாள்.
“செத்துப் போகப் போறியா? இவ்ளோ சாதாரணமா சாகவா நாங்க உன்னை இத்தனை வருசமா அடச்சி வெச்சோம்?’ எனக் கேட்டான் ஈவு இரக்கம் இல்லாதவன்.
“ஏன்டா இப்படி பண்ற துரோகி. மாதா, பிதா, குரு, தெய்வம்னு சொல்லுவாங்க. ஆனால் நான் ஆதி, மாதா, பிதா, குரு, தெய்வம்னு தானேடா சொல்லுவேன். ஏன் எனக்கு இப்படி ஒரு துரோகத்தை பண்ண? என்னோட குழந்தைய பறிச்சிட்ட. உன்னால எனக்கு எப்படி துரோகம் பண்ண மனசு வந்தது? பச்சை துரோகியா மாறிட்டியேடா. ஒன்னு ரென்டு வருசமாடா? இருபத்து… இருபத்து வருசம் என்கூட இருந்த பாசத்தை விட உனக்கு அந்த ஆர்.ஜேதான் பெரிசாகிட்டான்ல? துரோகி… இந்த இடத்துல வேற யாராவது இருந்திருந்தா நான் இப்படி சாதாரணமா இருந்திருக்க மாட்டேன்டா.” என கத்தியவாறு அவன் கையிலிருந்த துப்பாக்கியை பிடுங்கி அவன் தலையிலேயே வைத்தாள். அதில் அவனுக்கு கதி கலங்கியது.
அவளால் முடியவில்லை. கண்கள் மூடி சிறிது நேரம் அமைதியாக அழுது விட்டு. “இல்லை ஆதி. நான் உன்ன மாதிரி இல்லை. எனக்கு உண்மைக்கு உண்மையா உயிருக்கு உயிரா பழகின உறவுங்களுக்கு துரோகம் பண்ண முடியாது.'”என கையிலிருந்த துப்பாக்கியை கைகள் நடுங்க கீழே போட்டாள்.
“என்னால உன்னை கொல்ல முடியாது. ஏன்னா இந்த பாழாப்போன பாசம் உன்ன தப்பானவனா பாக்க விட மாட்டேங்குது. ஒன்னா ஒரே தட்டுல எச்சில் சாப்பாட்ட சாப்பிட்ட இந்த கையால உன்னை கொலை பண்ண முடியாது. இப்போ கூட உன் மேல கோபமோ வெறுப்போ வரலடா. வருத்தம்தான் வரது. நீ இப்படி மாறிட்டியேன்ன வருத்தம்.” என கூறி அவன் கையைப் பிடித்து
“பளீஸ்டா ஆதி… இப்படி பண்ணாத. என்னால உன்னை இப்படி பாக்க முடியாது. என்னோட தம்பி இவ்ளோ கீழ்த்தரமானவன் இல்லை.” என அழுதாள்.
அவளை வேகமாக தள்ளி விட்டவன் “ஹேய்… இந்த பாசம் காட்டி தப்பிச்சிடலாம்ன நினைப்பெல்லாம் வேணாம். மரியாதையா அந்த டொக்யூமென்ட் எங்கன்னு சொல்லிடு.” என அவள் தலைமுடியைப் பின்னால் பிடித்து இழுத்தவன் அவளை கூர்மையாக நோக்கினான்.
அவள் அழுதவாறே “நான் தான் சொல்றேன்ல ஆதி. எனக்கு தெரியாது… தெரியாது… தெரியாது… தெரிஞ்சாலும் சொல்ல மாட்டேன். அந்த டொக்யூமென்ட்னால பச்சைக் குழந்தைங்க பாதிக்கப்படும்டா. அப்பாவி குழந்தைங்க வாழ்க்கை நாசமா போய்டும். அதனால ஆதி ப்ளீஸ் தயவு செஞ்சு இந்த விசயத்தை விட்டுடு ப்ளீஸ்… உன்னை கெஞ்சிக் கேட்குறேன்.” என அவனிடம் பாவமாக கெஞ்சிட
வேகமாக எழுந்தவன் “பளார்… பளார்…” என்று மாறி மாறி அவளை அறைந்து
“ஏய்… தெரியாது… தெரியாது… தெரியாது… இதையே எத்தனை தடவடி சொல்லுவ?” என கத்தியவாறே அருகிலிருந்த மேசையில் கையை ஓங்கிக் குத்தினான். அது இரண்டாக வெடித்து முறிந்து விட்டது.
“எதுடி தெரியாது உனக்கு? இத்தனை வருசமா இதை சொல்லியே ஏமாத்திட்டு இருக்க. உனக்கு எல்லாமே தெரியும். ஆனால் சொல்ல மாட்டேங்குற. நீ தானே என்ன யூ. எஸ்ல இருந்து கூப்பிட்ட ஏதோ டொக்யூமென்ட் கிடைச்சிருக்குன்னு. பின்ன எப்படி உனக்கு தெரியாம போகும்? உன்னை எப்படி உண்மைய சொல்ல வெக்கிறதுன்னு எனக்கு நல்லாவே தெரியும்.” என கர்வமான புன்னகையுடன்
“உன் சாவு நெருங்கிடுச்சு காவ்யா…. தயாரா இரு.” என வன்மத்துடன் கூறிவிட்டு வெளியே சென்றுவிட்டான்.
வெளியில் சென்றவனுக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. அதனை ஏற்றான்.
“ஹலோ…” என்றான் நிதானமாக.
“ஹ்ம்… என்ன அவ உண்மைய சொன்னாளா இல்லையா?” எதிரில் ஆர்வமாக குரல் வந்தது.
“எங்க சொல்றா. இப்படியே அவ சொல்லுவான்னு நாலு வருசம் வேஸ்ட் ஆனதுதான் மிச்சம். மத்தபடி அவளை அப்போவே போட்டிருக்கனும். நீதான் டொக்யூமென்ட் அது இதுன்னு சொல்லி கடுப்பேத்துற. ச்சேய்…” என்றான் கடுப்பாக.
“ஹேய்… மைன்ட் யுவர் வேர்ட்ஸ். நான் சொன்னா ஒரு காரணம் இருக்கும்.” எதிரில் இருந்தவன் கூறினான்.
“சரி… சரி…” என எரிச்சலாக கூறிவிட்டு தன் வேலைகளை கவனிக்க சென்றுவிட்டான்.
யூவியின் அறையில் அபி குட்டி போட்ட பூனை போல் அங்கும் இங்கும் யோசனையோடு நடந்து கொண்டிருந்தாள். யூவியும் ஆழ்ந்த யோசனையில் மூழ்கியிருந்தாள். இவ்வளவு நேரமும் நடந்து கொண்டிருந்த அபி யூவியை “ஸ்… ஸ்… ஸ்…” என அழைக்க,
“அட… கொஞ்ச நேரம் சும்மா இருடி.” எனத் திட்டினாள் மாறி.
“என்னடி யோசனை?” என யூவியை கோபமாக ஆராய்ந்தவாறே கேட்க,
“கொஞ்சம் நேரம் சும்மா இருக்கல… என்ன கொலைகாரியா பாப்ப நீ.” என்று மிரட்டவும்
“சரி. ரைட்டு… விடு.” என வாயை மூடியவள் திரும்பி பழையது போல குட்டி போட்ட பூனை போல மண்டையை சொரிந்து கொண்டு இருந்தாள்.
சற்று நேரம் கழிய, “அபி… என்கூட வா.” என ஞானம் பிறந்தது போல் அழைத்தாள் யூவி.
“எங்கடி???” என ஆச்சரியமாக கேட்டவளை
“எங்கன்னு சொல்றேன் முதல்ல வா.” என்றாள் அவசரமாக.
“என்னடி நினைச்சிட்டு இருக்க? முதல்ல என் கைய கிள்ளு.” என்று சொன்னாள் அபி.
“வட்?” என யூவி அதிர
“கிள்ளு முதல்ல.” என்று கையை நீட்டினாள்.
யூவி இதுதான் நேரம் என்று நன்றாக கிள்ளியதும் “அம்மா… வலிக்கிது?” எனக் கத்தியவள் “என்னடி யூவி… வலிக்கிது?” என்றதும் கடுப்பாகிவிட்டாள் யூவி.
“லூசாடி நீ… கிள்ளுனா வலிக்காம என்ன பண்ணும்.” என அவளை முறைத்தாள் யூவி.
“உனக்கு தெரியாது. நீ சும்மா இரு.” எனக் கூறியவள் இன்னும் யோசித்துவிட்டு அருகிலிருந்த கோபி கப்பிற்குள் கையை வைக்க கோபி சுட்டதிவ் வலி தாங்காது “ஆ…” எனக் கத்தினாள்.
அவள் தலையில் நங்கென்று ஒரு அடி போட்ட யூவி “கோபி கப்குள்ள கைய விட்டா சுடாம என்னடி பண்ணும்?” என்றாள் கோபமாய்.
“இல்லடி கோபி ஏன் சுடுது?” அவள் லூசு மாதிரி கேட்டதில் எரிச்சலானவள்
“கொ… வாயில நல்லா வந்துடப் போகுது. நானே செம்ம டென்சன்ல இருக்கேன். நீ வேற ஜோக் அடிக்கிறேன்னு சாவடிக்காத.” என்றாள் எரிச்சலுடன்.
மறுபடியும் ஊசியை எடுத்து அபி அவள் கையில் குத்த செல்ல “ஹேய்… ஹேய்… என்னடி பண்ற…” என ஆச்சரியமாக கேட்டாள்.
“இப்போ நான் கையில ஊசக் குத்துவேன். ஆனால் ரத்தம் வராது.” என்றாள் பைத்தியம் போல.
“இதெல்லாம் ஒரு பொளப்பு… ச்சேய்… பைத்தியத்தை ப்ரண்டா புடிச்ச என்ன சொல்லணும்.” என நொந்து அலுத்துக் கொண்டாள் யூவி.
கையில் ஊசி ஏறி ரத்தம் வந்ததும் “அம்மா… ரத்தம்…” எனக் அபி கத்த.
அவளை எரிச்சலாக பார்த்தவள், “ஏன்டி… ஏன்டீ… ஏன்? நீ எல்லாம் படிச்ச பொண்ணு…” என கேவலமாக பார்த்தவளை மாறி பரிதாபமாக பார்த்தாள் அபி.
“என்னடி குத்தினா ரத்தம் வருது? அப்போ இது கனவில்லையா? நிஜமா? ஒருவேளை கார்த்திக் உன்கிட்ட அப்படி ஸொப்டா பேசுன அந்த சீன் மட்டும் கனவா?” என தாடையில் கை வைத்து அமர்ந்துவிட்டாள் அபிநயா.
“ரொம்ப சீன் போடாத. அதுதான் என்னோட டவ்ட்டும்… உங்கொண்ணன் எப்படி சோரி எல்லாம் கேட்குறான்? இது சூரியன் மேற்குல உதிச்சாலும் நடக்காதே. ஐ மீன்… உலகம் அழிஞ்சாலும் நடக்காதே. எங்கேயோ இடிக்கிதே. ஹ்ம்… உள்ள ஏதோ ப்ளேன் வெச்சிருக்கான். அதனாலதான் இனிமேலும் இங்க இருக்கக் கூடாதுன்னு கிளம்பலாம்னு நினைச்சேன். பட்… குடும்பமா சேர்ந்து ஒரு சென்டிமென்ட் பில்ம் ஓட்டி காரியத்தையே கெடுத்துட்டீங்க. அதுலயும் அவனோட எக்டிங் இருக்கே. ஹைய்யோயோயோ… என்னாமா நடிக்கிறான் அவன். ஆனால் இதுவும் நல்லதுக்குதான். வெளில இருந்தா அவனை நோட் பண்றது கஸ்டம். ஆனால் உள்ள இருந்தா எல்லாமே ஈஸியா இருக்கும்.” என்றாள் பல்லைக் கடித்து ஆதியை நினைத்து கொதித்தவாறு.
“அது சரிடி. இப்போவாச்சும் அவன் யாருன்னு உனக்கு புரிஞ்சதே. அதை நினைச்சா கொஞ்சம் நிம்மதியாவே இருக்கு.” அபி பெரும் மூச்சு விட்டாள்.
“ஆனால் இன்னொரு விசயம் இருக்கு.” என்றாள் யூவி கையை சொடக்கிட்டு.
“என்ன விசயம்?” என்று கன்னம் விரிய கேட்டாள் அபி.
“என்ன அவன் அடைச்சி வெச்சிருந்த ரூம்ல… ஏதோ அமானுஷ்யம் இருக்கு. நான் அங்க இருந்தப்போ யாரோ ஒரு பொண்ணோட வொய்ஸ் கேட்டுச்சு. என்ன காப்பாத்துன்னு ஒரு பொண்ணு கத்திக்கிட்டு இருந்தா. காலடி சத்தம் வேற கேட்டுச்சு.” அவள் பொய்ன்டை பிடித்துவிட்டாள் யூவி.
“என்னடி சொல்ற? ஒருவேளை காவ்யா அக்காவோட பேயா இருக்குமோ?” அபி பயந்துவிட்டாள்.
“முதல்ல நானும் அப்படிதான்டி நினைச்சேன்… ஆனால் அந்த காலடி சத்தம் எங்கருந்து வந்திச்சு? எங்கேயோ தப்பா இருக்குதுடி. நான் நினைக்கிறேன்… அந்த பொண்ண யாரோ அந்த ரூம்ல அடைச்சு வெச்சிருக்காங்க. அது யாருன்னு கண்டு பிடிக்கனும்னா அந்த ரூமுக்கு போகனும். அங்க ஏதாவது கிடைக்கிதான்னு தேடனும்.” என்று யூவி ஆர்வமாக கண்கள் மின்னக் கூற
“என்னாது… அந்த ரூமுக்கா? நான்லாம் வர மாட்டேன்பா. எனக்கு பேய்னா பயம்… என்னால முடியாது.” அபி பயத்தில் அலற
“உன்னால முடியாதுன்னா பரவால்ல. ஆனால் அந்த ரூம் சாவிய ஆதிக்கிட்ட இருந்து எப்படியாவது வாங்கிட்டு வந்துடு.” யூவி மெதுவாக கேட்டாள்.
“சரி. இப்போவே போறேன்.” எனக் கூறிவிட்டு உடனே ஆதியின் அறைக்குள் சென்றாள் அபி.
“அந்த ஆதிக்கிட்டதான் ரூம் சாவி இருக்கு. அவனால மட்டும்தான் அந்த ரூம்க்குள்ள போக முடியும். அப்போ இதுல மெய்ன் கல்ப்ரிட் ஆதிதான். என் கெஸ்ஸிங்க் கரெக்டா இருந்தா, ஆதி யாரையோ அந்த ரூம்ல அடைச்சு வெச்சிருக்கான். ஆதி ஏதோ டபில் கேம் ஆடுறானோன்னு தோனுது. கண்டு பிடிக்கிறேன். இந்த உண்மைய கண்டு பிடிச்சு ஆதியோட முகத்திரைய எல்லார் முன்னாடியும் கிழிக்கிறேன்.” என காற்றில் கிழிப்பது போல் பாவனை செய்தாள் யூவி.
இங்கு ஆதி லேப்டோப்பைப் பார்த்து கீபோர்ட்டை தட்டியவாறு தன் வேலைகளை மூழ்கிச் செய்து கொண்டிருக்கையில் உள்ளே நுழைந்தாள் அபி. அவள் வந்தது கூட தெரியாமல் அவன் வேலையினுள் மூழ்கியிருந்தான்.
முதலில் “ஹ்ம்…” என இருமியதும் அவன் அவளை நிமிர்ந்து ஒரு பார்வை பார்த்துவிட்டு மறுபடியும் வேலையில் மூழ்கிக் கொண்டான்.
கதவைத் தட்டியவள் “அண்ணா…” என மெதுவாக அழைக்க,
“என்ன… சொல்லு?” என்றான் பார்வையை லெப்டொப்பில் செலுத்தியவாறே.
“இல்லை… அந்த ரூமோட சாவிய கொஞ்சம் கொடுக்குறியா?” என்றாள் பயந்து திணறி.
“எந்த ரூம்?” என்றான் அவள் கூற வருவது புரியாது.
“அதுதான். யூவி மாட்டிக்கிட்டு இருந்தால்ல? அந்த ரூம் சாவிதான்.” என்றதும், அவன் முகம் “சடார்.” என அவள் பக்கம் அதிர்ச்சி கலந்த முகபாவனையுடன் திரும்பியது.
“அது எதுக்கு அவளுக்கு?” என்று கேட்டான் புருவம் உயர்த்தி.
“அவளோட ஏதோ பொருள் அங்க விழுந்துடுச்சாம். அது ரொம்ப முக்கியமாம். அதுதான் எடுக்க போறா.” அவள் பயத்தில் பெய்யை அடித்து விட
“நம்புற மாதிரி இல்லையே.” என்று தாடையை நீவி அழுத்தமாக பார்த்தான்.
அபிக்கு விக்கலே வந்துவிட்டது. அவளின் விக்கல் நிற்பதற்காக தண்ணியை எடுத்துக் கொடுத்தவன், “பொய் சொல்லத் தெரியலன்னா சொல்லக் கூடாது. எனக்கு காரணமே இல்லாம பொய் சொல்றது பிடிக்காது.” என அவளை முறைத்துக் கொண்டே கூறிவிட்டு அவள் முன் சாவியை நீட்டினான்.
அதை வாங்கிக் கொண்டு அபி யூவியின் ரூமிற்குள் நுழைந்தாள். “என்னடி சாவி கிடைச்சதா?” என்று ஓடி வந்து அவள் முன் நின்று கண்கள் மிரட்சியுடன் கேட்டாள் யூவி.
“ஆமாம். அவன்கிட்ட இருந்து வாங்கிட்டேனேன்.” என்று மிடுக்காக அவளிடம் சாவியை ஆட்டி ஆட்டிக் காட்டினாள் அபி.
“என்னது? வாங்கினியா?” யூவி இடுப்பில் கை குத்தி முறைத்தாள்.
“ஆமாம்.” என்றாள் எந்தவித பதற்றமும் இல்லாமல்.
“வெய்ட்… வெய்ட்… அப்டின்னா நீ அவன்கிட்ட சாவிய கொடுன்னு கேட்டு வாங்கினியா?” என்றாள் கோபமாக.
“ஆமாம். அததானே சொன்னேன். அவன்கிட்ட போய் கேட்டேன். கொடுத்துட்டான்.” என்றதும் யூவி படு கோபமாக முறைத்தாள் அபியை.
“உன்ன… உனக்கு அறிவு இருக்காடி முதல்ல. ச்சேய்… முதல்ல மூளை இருந்தாத்தானே அறிவு இருக்குறதுக்கு. உன்கிட்ட போய் இந்த வேலைய கொடுத்தேன்ல? என்ன செருப்பாலையே அடிக்கனும்…” என்று சிடுசிடுத்தாள்.
“இப்போ எதுக்குடி திட்டுற? நீதானே சொன்ன அவன்கிட்ட போய் சாவிய வாங்கிட்டு வர சொல்லி, அதுதான் கேட்டு வாங்கிட்டு வந்துட்டேன்.” என பாவமாக முகத்தை வைத்து சினுங்கி வாய்க்குள் பேசினான்.
“நாசமாப் போச்சு. நொ… நொ… நொ… வாயில நல்லா வருது… உன்னை நான் அடிக்கிற அடியில இருக்கிற இடம் தெரியாம காணாம போக போற.” என அவளை கட்டிலில் தள்ளிவிட்டு அவள் மேல் ஏறி மிதித்து, தலையணையால் அடித்து அவளை உண்டு இல்லாமல் செய்தாள் யூவி.
“அடிக்காதடி வலிக்குது…” எனக் கத்தியவள், ஒரு கட்டத்திற்கு மேல் பொறுமை இழந்து
“இப்போ எதுக்கு அடிக்கிறன்னு சொல்லு முதல்ல.” என்று தோளைத் தேய்த்தவாறே கேட்டாள்.
“நீ செஞ்ச வேலைக்கு உன்னை அடிக்க கூடாது. கொல்லனும்…” என கூறியவள்
“எனக்கு உங்கொண்ணன் ஆதி மேலதான் ரொம்ப பெரிய சந்தேகமே. நீ போய் அவன்கிட்டேயே சாவிய கொடு. உன்ன பத்தின ரகசியத்தை தெரிஞ்சிக்க போறோம்னு சொல்லாம சொல்லிட்டு வந்திருக்க. அவன் இன்னேரம் உஷார் ஆகிருப்பான். ஒரு வேலைய சொதப்பலா பண்ணி என் மொத்த வேலையையும் கெடுத்துட்டியேடி.” என்றாள் எரிச்சலாக.
“நீதானேடி சொன்ன அவன்கிட்ட இருந்து சாவிய வாங்கிட்டு வந்துடுன்னு. நீ சரியான முறைக்கு சாவிய திருடிட்டு வந்துடுன்னுல சொல்லிருக்கனும். உங்க ஊருல வாங்கிட்டு வாங்குறதுக்கு அர்த்தம் திருடுறதா?” என்றாள் சமாளிப்பாக.
“ஆனால் உனக்கு புரிஞ்சிருக்க வேணாம்? நோன்ஸென்ஸ். ச்சேய்.. உன்னப் போல ஒரு பச்சப் பைத்தியத்துக்குட்ட போய் ஒரு வேலைய கொடுத்தேன் பாரு. என்ன சொல்லனும்.” அவள் தன்னையே நொந்து கொண்டாள்.
“அதெல்லாம் சரிடி. ஆனால் எனக்கு ஒரு டவ்ட்.” அபி வ்யில் விரலை வைத்துக் கேட்க
“என்ன டவ்ட்?” என அவளை முறைத்தாள்.
“இப்போ ஏன் அடிக்கிற மாதிரி பாக்குற?” அபி கையை தடவிக் கொண்டே முகத்தை தொங்க போட்டாள்.
“என்ன டவ்ட்டுன்னு சொல்லி தொலை.” என யூவி எரிந்து விழுந்தாள்.
“நீ நினைக்கிற மாதிரி அவன்தான் கல்ப்ரிட்னா அவன் ஏன் சாவிய என் கையில தரணும்? நாம உண்மைய கண்டு பிடிச்சிருவோம்னு, சாவிய தராமல்ல விட்டிருக்கனும்?” இப்பொழுதுதான் அபிக்கு மூளை வேலை செய்தது.
“இதுல என்ன டவ்ட்? அவன் மேல சந்தேகம் வரக் கூடாதுன்னு சாவிய தந்திருக்கான்.” என யூவி தெளிவாக கூறினாள்.
“பரவால்லடி. நீ இவ்ளோ ஸ்மார்ட்டுன்னு நான் நினைக்கவே இல்லை. டக்கு டக்குன்னு பதில் சொல்ற?” என்றாள் மெச்சுதலாக.
“ரொம்ப புகழாத.” என்றாள் அலுத்துக் கொண்டே.
“எது எப்படி போனா என்ன? சாவி கிடச்சிடுச்சுல்ல? பின்ன என்ன கவலை? அந்த ரூம நோண்டிப் பாத்தா தெரிஞ்சிட போகுது.” என்று சாதாரணமாக சொன்னாள் அபி.
“நீ சொல்றது சரிதான். வா போலாம்.” என அவள் கையைப் பிடித்து இழுத்துச் சென்றாள் யூவி.
ஒரு நிமிடம் ஆடிப் போன அபி “ஹேய்… ஹேய்… எங்க?” என கையை உதறியவாறே அவளிடம் கேட்டாள்.
“அந்த ரூமுக்குதான்.” என்றாளஅ சாதாரணமாக.
“என்ன? அந்த ரூமுக்கா? என்னால எல்லாம் அந்த பேய் ரூமுக்கு வர முடியாதுப்பா.” என அவள் பயத்தில் அலர
“மரியாதையா என் கூட வர்ர…” என அவளை கட்டாயப்படுத்தி திமிரத் திமிர இழுத்துச் சென்றாள் யூவி.
போகும் வழி முழுக்க, கால்கள் நடுங்க நடுங்க பயத்தோடு வந்தாள் அபி. யூவி சாவியை போட்டு பூட்டை திறக்க முயல
“இது என்னடி அநியாயமா இருக்கு? நீதான் சொன்னல்ல? சாவிய வாங்கி தந்தா நான் ரூம்குள்ள வர தேவையில்லன்னு. பின்ன எதுக்கு இப்படி வாக்கு மீறுற?” என்றாள் நண்பி மீதிருந்த கோபத்தில்.
“வாக்காவது நாக்காவது. மூடிட்டு வாடி.” என அவளை இழுத்துக் கொண்டு உள்ளே சென்றாள் யூவி. உள்ளே நுழைந்தவள் இருள் சூழ்ந்த அவ் அறையில் ஸ்விட்ச்சைத் தேடினாள். கிடைக்கவில்லை. அதனால் போனில் டோர்ச் லைட்டை ஒன் செய்து வெளிச்சத்தை உண்டாக்கினாள்.
இங்கே ஒருத்தி பயத்தில் “ஹரே ராமா… ஹரே க்ரிஷ்ணா… ஹரே ராமா… ஹரே க்ரிஷ்ணா…” என கடவுளை வேண்டிக் கொள்ள,
“அடச் சீ வாய மூடு…” என வைய வாய் பசை பூசியது போல் ஒட்டிக் கொண்டது. உள்ளே நுழைந்தவள் அங்கிருந்த பொருட்களை ஆராய்ந்தாள்.
யூவிக்கு பெட்டியின் உள்ளே அவ்வளவு விசித்திரமாக எதுவும் கிடைக்கவில்லை.
“ஒன்னும் கிடைக்கலையே…” என்றவாறு யோசித்தவள் அபியை அழைத்துக் கொண்டு சோர்வாக வெளியே வந்தாள்.
“என்கூட வா.” என அபியின் கையைப் பிடித்து வேகமாக அவ் ஓவியத்தை சுருட்டி எடுத்துக் கொண்டு வெளியில் கிளம்பினாள் யூவி.
வெளியில் இருவரும் வந்ததும் அபி அவளை நிறுத்தி “என்னடி? எதுக்காக இப்படி வெளில ஓடி வர?” என்றாள் கடுப்புடன்.
“எனக்குத் தெரிஞ்சு போச்சு… உங்கண்ணனுக்கு சூனியம் வெச்சிருக்காங்க.” என்றாள் கற்பனை கட்டிக் கொண்டு.
“என்னடி சொல்ற? சூனியமா?” என்று வாயில் கை வைத்து அதிர்ச்சியானாள் அபி.
“ஆமாம். ஆதிக்கு யாரோ சூனியம் வெச்சிரு
க்காங்க. அதனாலதான் இப்படி எல்லாம் நடந்துக்குறான். ஆனால் அது யாரு? ஆதிக்கு எதுக்காக சூனியம் வெச்சாங்க? இதுக்குள்ள என்ன இருக்கு? ஆதியை உடனே இந்த மாய வலையில இருந்து காப்பாத்தனும்.” என்றாள் கண்களை பயங்கரமாக விரித்து.
தொடரும்…