சித்திரம் – 2

5
(1)

“முடியவே முடியாது…. ” ஒற்றை முடிவாய் மறுத்து நின்றவளை பாவமாய் பார்த்துக் கொண்டிருந்தான் தரணி..
அவனும் வேறு என்னதான் செய்வது… நண்பன் இவர்களிடமே கேட்க சொல்லி அடம் பிடிக்க இவனின் நிலைதான் கவலைக்கிடம்…. அவனை  சமாளிப்பானோ… இதோ இவர்களை சமாளிப்பானா…

“போன தடவையே சொல்லிட்டோம்…‌ மறுபடியும் வந்து நின்னா என்ன அர்த்தம்….” கோபமாய் மிரா கேட்க நான்கு நண்பர்களும் வேடிக்கை பார்த்துக் கொண்டு நின்றார்கள்…

“அடுத்த பொண்ண பாத்துட்டான்னு அர்த்தம்….” நேரம் கெட்ட நேரத்தில் ஆவன்யன் கவுண்டர் கொடுக்க மிராவின் முறைப்பில் ஈஈ என்று இளித்து வைத்தான்…

“நீ இரு மிரா‌… நான் புரிய வைக்குறேன்….” ஈஈ என்ற இளிப்புடன் முன்னால் வந்து நின்றவன் தரணியை கொஞ்சம் கடுப்போடுதான் பார்த்து வைத்தான்…

“எங்க நாலு பேருல ஒருத்தனுக்கு கல்யாணம் ஆயிருச்சு.. ஒருத்திக்கு ஆள் இருக்கு…‌நானும் மிராவும் சுத்த சிங்கிள்.. சரி அவள விடுங்க… என் பிரச்சினைக்கு வருவோம்… இதுவரைக்கும் ஒரு பொண்ணு கூட செட் ஆக மாட்டேங்குறா…. அந்த கடுப்புல இருக்கும் போது உங்க ப்ரெண்டு ஆறு மாசத்துக்க ஒரு தடவ ஒரு பொண்ண கரெக்ட் பண்ணிட்டு வந்து நின்னா ரொம்ப எரியுது சார்…ப்ளீஸ் அன்டார்ஸ்டான்ட் மை பீலிங்….” ஆதங்கமாய் சொல்லி நிற்க மீதி மூன்று பேரும் தலையில் அடித்துக் கொண்டனர்…

“ஏய்..ஏய்… என்ன சொல்ல சொன்னா என்ன சொல்லுற…”   வடிவேல் சொல்வது போல்தான் விளக்கம் கொடுத்தான் அவன்…

“மூடிட்டு இருடா…” ஒற்றை அதட்டல்தான் வந்தது மிராவிடமிருந்து… அதன் பின் பேசவில்லை… வேண்டாம் விட்டுடு ப்ளீஸ் என்பது போல் பாவமாய் பார்த்து வைத்தான் தரணியை…

“இனிமே முடியாது மிஸ்டர் தரணி… போனவாட்டியே உங்களுக்கு லாஸ்ட்னு சொல்லியாச்சு…. இதுதான் முடிவு…” உறுதியாய் அவள் சொல்ல…

“கொஞ்சம் யோசிச்சு சொல்லலாமே….” தயக்கமாய் கேட்டான் அவன்…

“நோ வே…. இனிமே சரிப்பட்டு வராது…. ப்ளீஸ்…” கதவை நோக்கி அவள் கையை காட்ட பெருமூச்சுடன் எழுந்து கொண்டான்..
இனி‌ என்ன பேசுவது என அவனுக்கும் புரியவில்லை… வைஷாவை நினைக்கத்தான் மனம் அடித்துக் கொண்டது…
அவனிடம் எப்படி சொல்வது என அப்போதிலிருந்தே யோசிக்க தொடங்கி விட்டான்…

“தேங்க்ஸ்…” மாறாத புன்னகையுடன் நகர்ந்து விட மிராயாவுக்கு ஒரு மாதிரித்தான் இருந்தது… செய்து கொடுத்திருக்கலாமோ என்று தோன்ற இல்லை வேண்டாம்… இந்த முறை மனம் இறங்கினால் மீண்டும் வந்து கொண்டே இருப்பான் என அடுத்த பைலை புரட்டத் தொடங்கினாள்…

“பொண்ணு போட்டாவ காட்டாமையே போயிட்டாரே….” வருத்தப்பட்டான் ஆவன்யன்… ஆனால் அந்த ஆவல் மற்ற மூவருக்குமே இருந்தது என்பது மறுக்க முடியாத உண்மை…

அந்த இடத்தை விட்டு வெளியேறியவன்‌ நேரில் பார்த்து சொல்லலாம் என நினைத்திருக்க சரியாய் அழைத்து விட்டான்…

“ஐயோ…இப்ப என்ன சொல்லுவேன்….” வாய்விட்டே புலம்பியவன் எடுக்கலாமா வேண்டாமா என ஆயிரம் பட்டிமன்றம் நடத்த அலைபேசி அடித்து ஓய்ந்தே விட்டது…
அடுத்த அழைப்பும் வர எடுக்காவிட்டாலும் பதறி போவான் என உயிர்ப்பித்து காதில் வைத்தான்…

“வைஷா… சொல்றேன்… கோபப்படாம கேளு….” எடுத்ததும் சொன்னவனுக்கு மனது திக் திக்கென்று அடித்துக் கொண்டது…
எங்கிருக்கிறானோ… கோபம் கொள்வானோ…. கத்துவானோ… ஐயோ வேறு என்னவெல்லாம் செய்வானோ என இவனுக்கே வியர்த்து விட…

“ஏய்.. ஏன்டா… கோபப்பட… ” கூலாய் வந்தது மறுமுனையில் குரல்….
ஆனால் இவனால்தான் நிம்மதி கொள்ள முடியவில்லை…

“அது வந்துடா… அவங்க முடியாதுன்னு சொல்லிட்டா..ங்க…” வார்த்தை தட்டுபட்டு வெளிவர திக்கி திணறி கூறி முடித்தவன் கைகள் அவசரமாய் முகத்தில் வடிந்த வியர்வையை துடைத்துக் கொண்டது…

“நீ எதுவும் யோசிக்காதே…. நாம வேற இடம் பாக்கலாம்… எங்க இருக்க இப்ப… நான் வாறேன்…”வெகு அவசரமாய் பதற்றத்துடன் பேச அடுத்த முனையில் அமைதி…

“வை..ஷா..‌இருக்கியா…” படபடப்பாக கேட்டவன் அப்போதே பைக்கில் ஏறி விட்டான்… அவன் இருக்கும் இடத்தை அடைந்தால் மனது நிம்மதியாக இருக்கும் என தோன்றியது…

“ப்சு.. வேற இடம் சரி வராதுடா….” நிதானமான அவன் குரலை கேட்ட பின்தான் இவனுக்கு பெருமூச்சே வந்தது… அப்பாடா என்று மூச்சை இழுத்து விட்டிருக்கவில்லை…

.”நான் அவங்ககிட்ட பேசுறேன்….” அடுத்த இடியை இறக்கி வைத்தான்…

“இல்ல… இல்ல…வேணாம்… அவங்க‌ சரிப்பட்டு வர மாட்டாங்க…. நீ பேச வேணாம்…” அவனின் பேச்சில் அவ்வளவு வேகம்…

“நான் பேசுறேன்டா… லொகேஷன் அனுப்பு நான் வாறேன்….” அத்தோடு அழைப்பையும் துண்டித்துவிட தரணிதான் விழி பிதுங்கி நின்றான்..
என்ன செய்வது என புத்தியில் உறைக்கவேயில்லை…
ஐயோ என்றிருந்தது….
வருகிறேன் என்று விட்டான்… இனி வராதே என்றாலும் கேட்க‌ மாட்டான்…

“கடவுளே…” தலையில் அடித்துக் கொண்டவன் லொகேஷனை அனுப்பி வைத்துவிட்டு என்ன செய்வது என புரியாமல் யோசனையில் ஆழ்ந்தான்..
சில நிமிடங்கள் அவனிடம் அசைவே இல்லை…
பலத்த யோசனை…
வேறு வழியே இல்லை… மீண்டும் இவர்களிடம் போய் பேசி பார்க்கத்தான் வேண்டும்… ஆனால் தயக்கமாகவும் இருந்தது… மாட்டேன் என்று சொல்பவர்களிடம் திரும்பி போய் எப்படி கெஞ்சிக் கொண்டிருப்பது….

தலையை சிலுப்பிக் கொண்டு யோசனையிலிருந்து மீண்டவன் பைக்கிலிருந்து இறங்கி மீண்டும் உள்ளே சென்றான்….

“அதுக்கிடையில அடுத்ததா…” அவனைக் கண்டு யுகன் வாய்விட்டே சிரித்து விட கொஞ்சமாய் கறுத்து போனது தரணியின் முகம்….

“யுக..ன்…” வழமை போல் மிராவின் அதட்டல்தான் வேலை செய்தது…

“எனக்கு வேற வழி தெரில… என் ப்ரெண்ட் இங்க வாறான்…ப்ளீஸ் அவன்கிட்ட வேற எதுவும் பேசாம சரின்னு மட்டும் சொல்லுங்க‌.. நீங்க எதுவும் செய்ய வேணாம்…  சும்மா சொல்லுங்க… பிறகு நான் அவன்கிட்ட பேசிக்கிறேன்..ப்ளீஸ்…”  அவன் கெஞ்சலாய் கேட்க அதற்குள் வாசலில் கேட்டது பைக் சத்தம்…

“ப்ளீஸ்ங்க…” மீண்டும் ஒரு முறை ப்ளீஸை வைத்தவன் வெளியே ஓட்டம் பிடிக்க நால்வரும் எதுவும் புரியாமல் முழித்தனர்…
இதுவரை தரணிதான் வந்திருக்கிறான்… அவன் வந்ததே இல்லை…
இதுதான் முதல்முறை…
மிராவிற்கு தரணியின் கெஞ்சல் சரியாகவே படவில்லை….

தரணி வெளியே ஓடி விர பைக்கிலிருந்து இறங்கி கண்ணை சிமிட்டினான் வைஷாகன் ரமணா…. அழகான ‌‌கண் சிமிட்டலும் புன்னகை முகமும்தான்…. ஆனால் அது அப்படியே இருக்க வேண்டுமே… இருந்தால் நன்றாகத்தான் இருக்கும்…

“இப்ப நீ பேச வேண்டிய அவசியம் என்ன… நானே பேசிக்குறேன்டா…. ” அவன் உள்ளே செல்வதைத் தடுக்கவே முனைந்தான் அவன்…

“கூல்டா… ஏன் இவ்வளவு பதட்டம்… நான் பாத்துக்குறேன்….” சமாதனமாய் சொன்னவனைப் பார்க்க இன்னும் பீதியாகியது இவனுக்கு…

“வா போலாம்‌..‌.”கையில் பைக் கீயை சுழற்றிக் கொண்டு உள்ளே நடந்தவனின் பின்னாலேயே சென்றான்…
எதுவும் விபரீதமாக நடந்து விடக் கூடாது என்று கடவுளிடம் வேண்டிக் கொண்டே சென்றான்….

உள்ளே வந்தவனை பொறாமையுடன் பார்த்தன ஆவன்யனின் விழிகள்… தீப்தியோ ரசனையாக பார்த்துக் கொண்டே..

“இவ்வளவு அழகா இருந்தா எந்த பொண்ணுதான் விழ மாட்டா….” தீப்தி முணுமுணுக்க நண்பனின் பார்வையில் அசடு வழிந்தாள்…

“சைட் அடிக்குறது தப்பா….” தோளைக் குலுக்கி அவள் கேட்க கேவலமாய் பார்த்து வைத்தான் அவளை…

“இங்க யாரு பாஸ்….” உள்ளே நுழைந்தவன் அதிரடியாய் கேட்க மூவரின் பார்வையும் மிராவின் மேல் படிந்தது…
அவர்களின் பார்வையோடு அவன் பார்வையும் பயணிக்க அங்கே அமர்ந்திருந்தவள் இவனைத்தான் பார்த்துக் கொண்டிருந்தாள்…

இதுவரை தூரத்தில்தான் கண்டிருக்கிறாள்… இப்போதுதான் மிக அருகில் அவன் முகம் காண்கிறாள்… போன தடவை பார்க்கும் போது வித்தியாசமாக இருந்தான்…. கலைத்து விடப்பட்ட கேசம்… காதில் கடுக்கண்… முன் பட்டன்கள் திறந்துவிடப்பட்ட ஷர்ட் என தூர பார்க்கவே கொஞ்சமாய் பொறுக்கி தனம் தெரிந்தது‌..

இப்போது அழகாய் அயர்ன் செய்யப்பட்ட ஷர்டை அபிசீயலாய் டக்கின் செய்திருந்தான்…. வாரிவிடப்பட்டு அடக்கமாய் இருந்தது கேசம்‌.. காதில் கடுக்கன் எல்லாம் காணவே இல்லை…‌ பக்கா  ஜென்டில் மேனாக தெரிந்தான்…
ஒவ்வொரு முறையும் பார்க்கும் போதும் அவனில் வித்தியாசம் தெரிந்து கொண்டே இருக்கும்…‌
ஏதோ ஒரு விதத்தில் நடை உடை பாவனை மாறியது போல் இருக்கும்..
இப்போது அந்த மாற்றத்தை அருகிலேயே கண்டு கொண்டாள்…

எப்போதும்  மாறாதது போல் இருப்பது அவனின் கள்ளமில்லா அவன் முகமும் கொஞ்சமாய் சதை போட்ட கன்னங்களில் லிழும்  கன்னக் குழியும்தான்… அவள் காணும் போதெல்லாம் அவன் முகத்தில் பளிச்சென இருந்தது அது மட்டும்தான்…

“ஹலோ..‌பாஸ்…” அவனின் குரலில் முகத்திலிருந்து பார்வையை அகற்றியவள் இப்போது தரணியை பார்த்தாள் அழுத்தமாய்…
ப்ளீஸ் என்று பார்வையாலேயே கெஞ்சிக் கொண்டிருந்தான் அவன்….

“இங்க பாருங்க பாஸ்…. நீங்க ஏற்பாடு பண்ணி ப்ரபோஸ் பண்ணதுல்ல யாருமே எனக்கு நோ சொன்னதில்ல… இப்ப திடீர்னு மாட்டேன்னா என்ன அர்த்தம்… எப்பவும் தாரத விட டபுள் மடங்கா பேமன்ட் கொடுக்குறேன்….” புன்னகையுடன் பேசியவனை அளவிட்டது அவளின் விழிகள்…
சிரிக்கும் போது கன்னக்குழியும் சிரித்தது… கூடவே கண்களும் சிரிக்க இப்போதுதான் கண்டாள் அவனின் நீல நிற கருவிழிகளை… வெகு அரிதாக சில பேருக்கு மட்டுமே இருக்கும் என்று படித்தது ஞாபகம் வந்தது…
அது மட்டுமா… சிரிக்கும் போது மேல் இடதுபக்க வேட்டப் பல் மட்டும் கொஞ்சம் முன்னால் தள்ளியிருக்க அந்த தெத்துப்பல் கூட வித்தியாசமாய் இருந்தது அவனுக்கு‌…

“என்ன எல்லாம் வித்தியாசம் போல் இருக்கிறது….” என்று தோன்ற அவனையே ஊடுருவி பார்த்துக் கொண்டிருந்தாள்…

“என்ன பாஸ் நீங்க… இவ்வளவு பேசுறேன்…. பேசாம இருக்கீங்க….. பாலம்ல நான்… வாய் வலிக்குது….” அவனின் துருதுரு பேச்சில் கவனம் கலைந்தவள்  மீண்டும் தரணியையே பார்த்தாள்..
அவனோ அவஸ்தையாய் கையைப் பிசைந்து கொண்டு விழித்துக் கொண்டு நின்றிருந்தான்….
ஏதோ சரியில்லையே என்று மனம் கணக்கு போட…

“சரி மிஸ்டர்.வைஷாகன்… இத பண்ணி கொடுக்குறோம்… ஆனா இத்தோட உங்க லிஸ்ட்ட நிறுத்துறீங்கன்னா எங்களுக்கு ஓகே‌….” இதுதான் இறுதி என்பது போல சொன்னவளைக் கண்டு வெளிப்படையாய் தலையில் அடித்துக் கொண்டான் தரணி….

“வைஷா வா போலாம்…. இங்க பேச வேணாம்…” அவனை இழுத்து போவதில் குறியாய் இருக்க இன்னும் இன்னும் சந்தேகம் எழுந்தது அவளுக்கு…

“இருடா… பேசிட்டு இருக்கேன்ல…” அப்போதும் புன்னகை முகமாகவே இருந்தவனைக் கண்டு கொஞ்சமாய் ஆசுவாசம் அடைந்தான்…

“நான் என்ன பண்ணட்டும் பாஸ்…‌ நானா வேணாங்குறேன்… அவங்கதான் வேணாம்னு போயிறாங்க பாஸ்…. பட் நீங்க சொன்னதாலே லாஸ்ட் வர கன்டினியூ பண்ண ட்ரை பண்றேன்…. ஆனா இந்த பொண்ணும் போயிட்டா நீங்கதான் திரும்பவும் பண்ணி தரணும் பாஸ்…” வார்த்தைக்கு வார்த்தை பாஸ் போட்டவனை கடுப்பாக பார்த்தவள்…

“இது சரிப்பட்டு வராது சார்…. இடத்த காலி பண்ணுங்க….” எரிச்சலாய் சொல்லி வைக்க இன்னும் படபடத்து போனது என்னவோ தரணிதான்….

“என்ன சரிப்பட்டு வராது….. என்ன விளையாடுறீங்களா….” அதுவரை புன்னகையுடன் இருந்தவன் கத்திக் கொண்டு எழுந்து மேசையில் பலமாய் ஒரு தட்டு தட்ட தூக்கி வாரிப்போட்டது மிராவின் உடல்…

“டேய்… வா போலாம்….” தரணி அவசரமாய் அவனை பிடிக்க வர ஒரே தள்ளலில் அவனை தள்ளி‌ விட்டவன்…

“பண்ணி தரணும்னா பண்ணி தரணும்…. தேவ இல்லாதத பேசாதீங்க…..” அந்த இடமே அதிர கத்த…

“என்ன சார் மிரட்டுறீங்களா…. ” யுகன் எகிறிக் கொண்டு வர…

“ப்ளீஸ்… பெருசாக்காதீங்க…. அவன் புரியாம பேசுறான்.. வைஷா‌..‌” தரணி கலக்கமாய் அவனைப் பிடித்து இழுக்க மீண்டும் தள்ளிவிட்டான்..
பலமாய் அவன் தள்ளியதில் கீழே விழுந்து விட்டான் தரணி…

“முடியாதுன்னா என்ன பண்ணுவீங்க….” தீப்தியும் கோபமாய் கேட்க அவனின் முகமோ கோபத்தில் மொத்தமாய் புடைத்து போக…

பல்லைக் கடித்தவன் மிராவின் மேசையிலிருந்த கணிணியை தள்ளியே விட்டான் கீழே…
அவன் தள்ளிய வேகத்தில் அது கீழே விழுந்து உடைந்து போக…

“வட் த ரபிஷ்….” மிரா கத்த அடுத்தடுத்து நடந்ததை ஒருவரும் எதிர்பார்க்கவேயில்லை….
மொத்த பேரும் சுதாரிக்கும் முன் தள்ளி உடைத்திருந்தான் அங்கிருந்த பொருட்கள் மொத்தத்தையும்…
அவனின் ஆவேசமும் கண்களில் கனன்ற தீயையும் கண்டு ஸ்தம்பித்து நின்றார்கள் மொத்த பேரும்…
என்ன செய்வது என புரியவே இல்லை….

“வைஷா… வைஷா…” தரணிதான் அவன் தள்ளிவிட தள்ளிவிட மீண்டும் மீண்டும் அவனை பிடிக்க முயன்று கொண்டிருந்தான்…
ஆனால் ஒற்றை ஆளாய் சமாளிக்க முடியவில்லை…

“என்ன‌ பண்ற….”

“பைத்தி..யமா…”மற்றவர்கள் சுதாரித்து  தடுக்க வரும் முன் மொத்த இடமுமே உடைந்து சிதறி அலங்கோலமாய் கிடந்தது…
பார்த்து பார்த்து உருவாக்கிய இடம் சில நிமிடங்களில் சிதைந்து போக நண்பர்கள் நால்வருக்கும் என்ன செய்வது என்றே புரியவில்லை…

“ஆஆஆஆஆஆஆஆ….” தலையைப் பிடித்து ஆங்கரமாய் கத்தியவனின் கத்தல் வேறு காதைப் பிளக்க அவனைக் காணவே பயமாக இருந்தது‌..
ஒரு நொடியில் இப்படி மாறி விட்டான் என விழி பிதுங்கி அவர்கள் நிற்க…

“டென்ஷன் ஆகாதே‌…” அவன் தள்ளிவிட்டதில் ஆங்காங்கே அடிபட்டும் இரத்தம் வடிந்தும் மீண்டும் நண்பன் அருகில் அவன் செல்ல மீண்டும் தள்ளி விட்டான்….

“ஆஆஆ…” இப்போது விழுந்ததில் சிதறிய கண்ணாடித் துண்டு கையைக் கிழித்து விட சத்தம் போட்டு கத்தியதில் அப்போதுதான் திரும்பி பார்த்தான் தரணியை…

“தரணி…” பதறிக் கொண்டு அவன் அருகில் சென்று கலங்கிய கண்களோடு ஆராய்ந்தான் நண்பனை…

“இரத்தம் வருது….ஐயோ… நான் ஒரு பைத்தியம்….” நண்பனை ஆராய்ந்தவன் அழவே ஆரம்பித்து விட்டான்…

“எனக்கு ஒன்னும் இல்ல… அழாதே…‌இங்க பாரு…‌ஒன்னும் இல்லடா…” வலியை‌ மறைத்துக் கொண்டு  இயல்பாய் இருக்க முயல எங்கே அதெல்லாம் அவன் கேட்க…

நிலத்தில் சரிந்து அமர்ந்தவன் கைகளில் முகத்தை புதைத்துக் கொண்டு அழ ஆரம்பித்து விட்டான்…

“இதுதான்… இதுதான்… யாரும் என் கூட இருக்க மாட்டாங்க…. நீயும் இப்ப விட்டு போயிருவ…. நீயும் வெறுத்துருவ… உன்னையும் அடிச்சுட்டேன்…” சிறு பிள்ளை போல் தேம்பி தேம்பி அழுதவனை மலங்க மலங்க நால்வரும் பார்த்துக் கொண்டிருக்க தரணிக்கு சங்கடமாக இருந்தது…
ஆனால் அதை விட முக்கியம் வைஷா என நினைத்தவன் அவன் வலியை மறந்து அப்படியே அவனை தோளோடு கட்டிக் கொண்டான்…

“எதுவும் இல்லடா… நான் போக மாட்டேன்…. அழாதே… நான் எப்பவும் உன்னோடதான் இருப்பேன்….” ஆறுதலாய் அவன் சொல்ல அந்த வார்த்தைகளில் என்ன‌ கண்டானோ முகத்திலிருந்து கைகளை விலக்கி கண்ணீரைத் துடைத்துக் கொண்டான்….

“நீ சொன்னதுதான் சரி… நாம வேற இடம் பாத்திருக்கனும்… இங்க வந்துருக்க கூடாது நான்…” மொத்தமாய் பாழாய் கிடந்த அந்த கட்டிடத்தை பார்த்து கவலையாய் அவன் சொல்ல நால்வருக்கும் இதயம் அதி வேகத்தில் ஓடியது…
கொஞ்ச நேரத்தில் என்னவெல்லாம் செய்துவிட்டான்….

❤️❤️❤️தொடரும்❤️❤️❤️

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 5 / 5. Vote count: 1

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!