நின்னைச் சரணடைந்தேன் என் மன்னவனே.2.

5
(2)

நல்ல அக்கா தங்கச்சி தான் வாங்கடி என்ற கலைவாணி அவர்களுடன் கோவிலுக்கு கிளம்பினாள். கோவில்ல நிறைய கடை போட்டுருக்காங்கடி என்ற கயல்விழியிடம் ஆமாம்டி வா நாம போயி வளையல் வாங்கலாம் என்றாள் வேல்விழி. இவள் ஒரு கண்ணாடி வளையல் பைத்தியம் அதான் வீடு முழுக்க கலர் கலரா கண்ணாடி வளையல் வச்சுருக்கியே அப்பறமும் ஏன்டி இப்படி ஆசைப்படுற வளையலுக்கு என்ற கயல்விழியைப் பார்த்து சிரித்தவள் உனக்கு நெயில் பாலிஷ் எவ்வளவு வச்சிருந்தாலும் பத்தாது அது போல எனக்கு வளையல் அவ்வளவு தான் என்றாள் வேல்விழி.

ஏய் இந்த வருசம் நம்ம ஊரு முளைப்பாரி திருவிழாவுக்கு ராட்டினம் எல்லாம் வந்திருக்குடி என்றாள் கலைவாணி. என்ன சொல்லுற கலை ராட்டினமா சூப்பர் ஏய் கயல் வாடி போயி ராட்டினம் சுத்தலாம் என்றாள் வேல்விழி. நீ என்ன குழந்தையாடி எப்ப பாரு என்ற கயல்விழியை முறைத்தவள் சரி விடு கலை இவளை வீட்டில் தள்ளிட்டு தனியா வந்து ராட்டினம் சுத்துவோம் என்றாள் வேல்விழி. ஆமாம் வேலு நாம தனியா வரலாம் என்ற கலைவாணியை முறைத்த கயல்விழி மவளுகளா என்னை விட்டுட்டு தனியா வந்திங்க கொன்னுருவேன் என்றாள். வேல்விழி, கலைவாணி இருவரும் சிரித்து விட்டனர்.

ஏய் வாங்கடி பானிபூரி சாப்பிடலாம் என்ற கலைவாணியிடம் அதெல்லாம் வேண்டாம் முதல்ல சாமியை கும்பிடுவோம்டி என்றாள் வேல்விழி. சரி் சரி வாங்க என்று மூவரும் கோவிலுக்கு சென்றனர்.

கோவிலில் தில்லைநாயகி தன் பேத்தி கயல்விழியைப் பார்த்துவிட்டு கயலு என்றிட அம்மாச்சி என்று தில்லைநாயகியை கட்டிக் கொண்டாள் கயல்விழி. எப்பத்தா வந்த என்றவரிடம் காலையில் தான் அம்மாச்சி நீங்க எப்படி இருக்கிங்க என்றாள் கயல்விழி. எனக்கென்னத்தா நான் நல்லா இருக்கேன் என்றவர் என்னங்க என்றிட அவரது கணவர் துரைப்பாண்டியனும் தன் பேத்தி கயல்விழியிடம் நலம் விசாரித்தார்.

கதிரேசனும் தன் தங்கை மகளிடம் நலம் விசாரித்திட தெய்வானையோ வேலு நல்லா இருக்கியாத்தா என்று தன் அண்ணன் மகளிடம் நலம் விசாரித்தார். கயல்விழியிடமும் நலம் விசாரித்தவர் வேல்விழியிடமே பேசிக் கொண்டிருந்தார்.   இவள் கண்ணுக்கு என் பேத்தியை விட அவள் அண்ணன் மகள் தான் தெரிவாள் போல என்று தில்லைநாயகி நினைத்துக் கொண்டு முகத்தை வெட்டினார். தெய்வானைக்கு மட்டும் அல்ல அவரது மகன் வெற்றிமாறனின் கண்களுக்கும் வேல்விழி தான் தெரிந்தாள்.

பட்டுப்புடவை பளபளக்க, பீரோவில் இருந்த நகைகளை எல்லாம் அணிந்து அம்மன் விக்ரகம் போல கயல்விழி அழகுப் பதுமையாக இருந்தாலும் சிம்பிளாக பாவாடை தாவணியில், ஒற்றை டாலர் செயின் அணிந்து, காதில் ஒரு ஜிமிக்கி, கை நிறைய கண்ணாடி வளையல்கள், காலில் மெல்லிய கொழுசு, கற்றைக் கூந்தலை இரட்டை ஜடையாக பின்னல் என்று அவன் விரும்பிய படி எளிமையாக இருந்தாள் வேல்விழி.

எப்படி இருக்க வேல்விழி என்ற வெற்றிமாறனிடம் நல்லா இருக்கேன் அத்தான் நீங்க எப்படி இருக்கிங்க என்றாள். நல்லா இருக்கேன் என்றவன் அவளைப் பார்த்து புன்னகை செய்திட தானும் சிரித்தவள் சரிங்க அத்தை சாமி கும்பிட போகலாமா என்றாள் வேல்விழி.

சரி போகலாம் என்ற தெய்வானை தன் குடும்பத்துடன் வந்தார். சாமி கும்பிட்ட பிறகு வேல்விழியும், கலைவாணியும் கோவில் மண்டபத்தில் அமர்ந்திருந்தனர்.

என்னடி அவள் இன்னும் வரக்காணோம் என்ற கலைவாணியிடம் அவங்க வீட்டோட செல்லம் ஆச்சே அவளோட அம்மாச்சி, தாத்தா, மாமா எல்லோரும் அவளை கொஞ்சிட்டு இருப்பாங்க பாசமழையில் சொட்ட சொட்ட நனைஞ்சுட்டு வருவாள் என்றாள் வேல்விழி.

உனக்கு வருத்தமா இல்லையா வேலு உன்னை ஒதுக்குற மாதிரி அந்த பாட்டி, தாத்தா, வெற்றியோட அப்பா இவங்க உன்கிட்ட பேசக் கூட இல்லை. நீ எப்ப வந்த நல்லா இருக்கியானு ஒரு வார்த்தை கேட்கனுமே என்ற கலைவாணியிடம் அது தெரிஞ்ச விசயம் தானே அவங்களுக்கு என்னை எப்பவும் பிடிக்காது என்ற வேல்விழி சிரித்தாள். அவங்க பொண்ணுக்கு நீ தான் நாத்தனார் அதையும் மறந்துட்டாங்களா என்ன என்ற கலைவாணியிடம் கலை ஏன் இவ்வளவு எமோசன் கொஞ்சம் கம்மி பண்ணு என்றாள் வேல்விழி.

கலைவாணி என்று கலைவாணியின் அம்மா செல்வராணி அழைக்கவும் வேலு இருடி வந்துடுறேன் என்று கலைவாணி சென்று விட்டாள்.

என்ன மேடம் தனியா இருக்கிங்க போல என்று வந்தான் வெற்றிமாறன். அதான் துணைக்கு நீங்க வந்துருக்கிங்களே சார் என்றவளிடம்  அதானே இந்த வாய்க்கு ஒன்றும் குறைச்சல் இல்லை என்றான் வெற்றிமாறன். அப்பறம் எப்படி போகுது லைப் என்றவனைப் பார்த்து சிரித்தவள் உங்க அப்பா நீங்க என்கிட்ட பேசுறதை பார்க்கிறாரு கொஞ்சம் அந்தப் பக்கம் பாருங்க சார் என்றாள். ஐயோ அந்த மனுசன் பார்க்கிறாரா என்று பயந்து போயி திரும்பி பார்க்க அங்கு யாரும் இல்லை ஏய் பொய் சொன்னியா பிசாசே என்றவன் அவளது தலையில் கொட்டிட வர ஐயோ மாமா என்று சொல்லி விட்டு அவள் ஓடிட திரும்பியவன் மறுபடிநும் அவள் ஏமாற்றி விட்டால் என்று அவளை கொட்டிட விரட்டினான்.

ஓடி வந்தவள் யார் மீதோ மோதி விழுந்திட அய்யோ சித்தப்பா என்று வெற்றி ஒளிந்து கொண்டான். சாரிங்க என்று எழுந்தவளை கோபமாக பார்த்துக் கொண்டு நின்றவன் அறிவு இல்லை உனக்கு என்றிட சாரி மாமா என்றாள் வேல்விழி. பொண்ணுனா கொஞ்சமாவது அடக்கம் ஒடுக்கமா இருக்கனும் இப்படித் தான் ஆம்பளை மேல வந்து மோதுவியா அறிவு கெட்ட முண்டம் உன்னை என்று அவன் கை ஓங்கிட அவள் அதிர்ந்து விட்டாள். மன்னிச்சுருங்க மாமா தெரியாமல் என்றவளை முறைத்தவன் இன்னொருமுறை மாமானு கூப்பிடாதே என் அக்கா பொண்ணுக்கு மட்டும் தான் நான் மாமா கண்டவங்களுக்கு எல்லாம் இல்லை என்றவன் வேலு இங்கே வாப்பா என்று யாரோ அழைத்திட சென்று விட்டான்.

அவளது கண்கள் கலங்கியதை யாரும் பார்க்கா வண்ணம் துடைத்துக் கொண்டவள் அமைதியாக கடைத் தெருவிற்கு சென்றாள்.

சாரி வேல்விழி என்றவனை முறைத்தவள் உங்க சித்தப்பாவை பார்த்ததும் என்னை விட்டுட்டு ஓடிப் போயிட்டிங்கள் இனிமேல் என்கிட்ட பேசாதிங்க என்றவள் கோபமாக சென்றிட தலையில் கை வைத்து நின்றான் வெற்றிமாறன். என்னாச்சு மாப்பிள்ளை என்று வந்தான் மகேந்திரன். என்ன பண்ணடா எல்லாம் என் நேரம் என் மாமன் மகளோட ஒரு பத்து நிமிசம் கூட பேச முடியலை என்ற வெற்றிமாறன் சரி வா போயி சாமியை கும்பிடலாம் என்று நண்பனை அழைத்துக் கொண்டு சென்றான்.

எய்யா வேலு இங்கே பாரு நம்ம கயலு எம்புட்டு அழகா இருக்கானு என்ற தில்லைநாயகியிடம் என் மருமகள் எப்பவும் அழகு தான் அம்மா என்றவன் கயல்விழியிடம் பாசமாக பேசினான். அதைக் கண்ட வெற்றிமாறனுக்கு தன் சித்தப்பா வேலுவின் மீது பயங்கர கோபம் தான் வந்தது. பாவம் வேல்விழி இந்த மனுசன் மேல மோதி கீழே விழுந்தது மட்டும் இல்லாமல் இவர்கிட்ட வசவு வேற வாங்கிக் கட்டிகிட்டாள் என்று நினைத்தான்.

இந்த டிசைன் வேண்டாம் வேற காட்டுங்களேன் என்றவளிடம் இது நல்லா தானம்மா இருக்கு என்றார் கடைக்காரர். எனக்கு பிடிச்சதை தான் வாங்க முடியும் நீங்க வியாபாரத்துக்காக ஓட்டை வளையலை என்கிட்ட தள்ளி விடலாம்னு பார்க்காதிங்க என்றவளிடம் அம்மாடி நான் வியாபாரி தான் அதுக்காக ஓட்டை ஒடசலை எல்லாம் விற்கலைத்தா என்றார் கடைக்காரர்.

என்ன அண்ணன் என் மகள் கிட்ட ஏமாத்தி எதையும் விற்க பார்திங்களா என்ன என்று வந்தார் விஜயசேகரன். சித்தப்பா என்ற வேல்விழியிடம் என்ன பாப்பா வளையல் வாங்கிட்டியா என்றார் விஜயசேகரன். இல்லை சித்தப்பா இன்னும் இல்லை என்றவள் கடைக்காரரை படுத்தி எடுக்க அவரோ பாவமாக விஜயசேகரனை பார்த்தார். அண்ணன் என் மகள் அப்படித்தான் எப்பவுமே அதுக்கு பிடிச்சதை தான் வாங்கும் என்றவர் நல்ல வளையலா கொடுங்க என்றார். வளையலையே இப்படி பார்த்து பார்த்து வாங்குறியே ஆத்தா கட்டிக்கப் போற புருசனையும் தேடிக் கண்டுபிடிச்சு சல்லடை போட்டு சளிச்ச தேர்ந்தெடு ஆத்தா என்றார் வளையல்கடைக்காரர். அவரைப் பார்த்து சிரித்தவள் தன் சித்தப்பாவுடன் கோவிலுக்கு சென்றாள்.

என்ன சித்தப்பா நீங்க மட்டும் தான் வந்துருக்கிங்க சித்தி, அம்மா, அப்பா எல்லோரும் எங்கே என்றிட எல்லோரும் வந்துட்டாங்கத்தா நீ வா என்று மகளை அழைத்துச் சென்றார் விஜயசேகரன்.

என்னடி கடைக்காரரை ஒரு வழி பண்ணி இருப்பியே என்ற ரேணுகாவைப் பார்த்து சிரித்தவள் போங்க அண்ணி என்றாள். சரி எத்தனை செட் வளையல் வாங்குன என்றிட ஒன்று தான் அண்ணி என்றாள். அத்தை எனக்கு என்ன வாங்குன என்ற விஷ்ணுவிடம் சாமி கும்பிட்டு போகும் போது அத்தை உனக்கு பொம்மை வாங்கித் தரேன் பட்டு என்றாள் வேல்விழி.

வேலு பெரியவங்களை கும்பிட்டியா என்ற ராஜேஸ்வரியிடம் அம்மா நாம ஒன்றும் அவங்களுக்கு அடிமை கிடையாது அது மட்டும் இல்லை இது கோவில் கோவிலில் எப்பவுமே சாமியை மட்டும் தான் கையெடுத்து கும்பிடனும் என்றாள் . வாய்  பேசாதே சொன்னதை செய் என்ற ராஜேஸ்வரியிடம் அம்மா ப்ளீஸ் எனக்கு பிடிக்காத விசயத்தை நான் செய்யவே மாட்டேன் அது உங்களுக்கு நல்லாவே தெரியும் என்னை கட்டாயப்படுத்தாதிங்க என்றாள் வேல்விழி.

என்ன ராஜி என் மகளோட காதை கடிச்சுட்டு இருக்க என்ற ராஜசேகரனிடம் உங்க அத்தை, மாமாவை கும்பிட சொன்னேன் மாட்டேன்னு சொல்லிகிட்டு ராங்கி பண்ணுறாள் என்றார் ராஜேஸ்வரி. கோவில்ல சாமியைத் தவிர யாரையும் கும்பிடக் கூடாதுனு என் பொண்ணுக்கு சொல்லி வளர்த்ததே நான் தான் அதனால அவளை கட்டாயப் படுத்தாதே என்றவர் வேலுமா நீ யாரையும் கும்பிட வேண்டாம் சாமியைத் தவிர என்றார் . அப்பானா அப்பா தான் என்றவள் தன் அண்ணன் மகன் விஷ்ணுவுடன் கோவிலைச் சுற்றி வரக் கிளம்பினாள்.

என்ன ராஜேஸ்வரி உன் மகளுக்கு திருவிழா அப்போ கூட பட்டுத்துணி வாங்கி கொடுக்க மாட்டியா பாவாடை தாவணியில் சுத்திட்டு திரியுறாள். நகைநட்டு கூட போடாமல் என்று நக்கலாக பேசினார் தில்லைநாயகி.

என் பேத்தி பட்டுத் துணி கட்டி தான் அழகா இருக்கனும்னு அவசியம் இல்லை மதனி அவள் சாதாரணமாவே அழகு தான் என்றார் வடிவுடைநாயகி. அது மட்டும் இல்லை இருக்கிற நகை நட்டெல்லாம் போட்டு சோடிச்சுட்டு திரிய அவள் என்ன ஜவுளிக்கடை பொம்மையா என்ற வடிவுடைநாயகியின் பதிலில் விஜயசேகரனும், ரேணுகாவும் சிரித்து விட தில்லைநாயகிக்கு சுருக்கென்று ஆனது. அவர் பல்லைக் கடித்துக் கொண்டு அமர்ந்து விட்டார். வடிவுடைநாயகி துரைப்பாண்டியனின் தங்கை அதனால் எப்பொழுதும் தன் நாத்தனாருடம் எந்த வம்பும் வளர்க்க மாட்டார் தில்லைநாயகி.

……தொடரும்…..

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 5 / 5. Vote count: 2

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!