என் செல்ல நரகமே 1

4.6
(22)

 

 

செல்லம் – 1

“பொய் பொய் பொய் பொய்க்கு மேல்ல பொய்யா சொல்ற அர்ஜுன்?, எனக்கு பொய் சொன்னா பிடிக்காதுன்னு உனக்கு தெரியும்ல ..  எத்தனை தடவை சொல்லி இருக்கேன்.. தப்பு பண்ணினா கூட என்னால் அதை பொறுத்துக்க முடியும்.. ஆனா அதை மறைக்க பொய் சொல்றதை தான் என்னால் அக்செப்ட் பண்ணிக்க முடியாது”

“சொல்லு ஏன் பொய் சொன்னா அர்ஜுன்? என சுஹாசினி கையை கட்டியபடி கோவமாக கேட்க,

எதிரில் நின்று இருந்த அர்ஜுனோ தலையை குனிந்தபடி நின்று இருந்தானே தவிர வாயை திறக்கவில்லை.. 

“கமான் அர்ஜுன் ஸ்பீக் அவுட்”என்ற போதும் அவன் அப்படியே நின்று இருக்க, கோவமானவள் தீட்டி தீர்த்து விட்டாள..‌

“இனிமே பொய் சொன்ன அவ்ளோ தான் என்றவள், இது அர்ஜுனுக்கு மட்டுமில்ல  உங்க எல்லாருக்கும் சேர்த்து தான் சொல்றேன் யாராவது பொய் சொன்னீங்க அவ்ளோ தான்” என அந்த வகுப்பில் இருந்த ஒட்டு மொத்த மாணவ மாணவிகளையும்  பார்த்து விரல் நீட்டி எச்சரித்தவள்,

“கோ அண்ட் சிட் யுவர் ப்ளேஸ்” என எதிரே இவ்வளவு நேரம் இவளின் அர்ச்சனைகளை வாங்கி கட்டி கொண்ட அர்ஜுன் என்ற மாணவனை பார்த்து சொல்ல,

அவனும் தன் இடத்தில் சென்று அமர்ந்தான்.. 

“டேய் அர்ஜுன் அடி ரொம்ப பலம் போல” என அருகே இருந்த கார்த்தி என்றவன் மெதுவாக அர்ஜுனை பார்த்து கேட்க,

“உனக்கு மட்டும் என்ன கம்மியாவா விழுந்துச்சு, எனக்கு முன்ன போயி பயங்கரமாக அந்த அரக்கி ஹாசினி கிட்ட வாங்கி கட்டிக்கிட்ட தானே, அப்புறம் என்னடா? நக்கலாக கேட்கவும்..

ஆமாண்டா இந்த புலான்தேவிக்கு என்னாச்சு இரண்டு நாளாக பயங்கரமா வறுத்து எடுத்துக்குது என கார்த்தியும் ஹாசினியை பார்த்தபடி சொன்னான்..

ஆம் நம் நாயகி சுஹாசினி டீச்சர்ம்மா தான்.. அதுவும் ஒன்பது மற்றும் பத்தாம் வகுப்புக்கான கண்டிப்பான கணக்கு வாத்தி.. 

அவள் மாணவர்களிடையே காண்பிக்கும் கெடு பிடி கண்டிப்புக்களால் டெரர், அரக்கி ராட்சஸி புலான்தேவி என பல பட்டபெயர்களை சொந்தமாக்கி கொண்டவள்,

எவ்வளவு கண்டிப்பு காட்டுகிறாளோ, அதே அளவு திறமையான ஆளும் கூட.. அவள் வகுப்பில் கணக்கு பிரிவில் ஒருவர் கூட பெயிலாவது கிடையாது.. 

அந்தளவு பாடத்தை கணக்கை மாணவர்கள் புரிந்து கொள்ளும்படி தெளிவாகவும் எளிதாகவும் பொறுமையாகவும் சொல்லி கொடுப்பதில் கை தேர்ந்தவள்.. 

முதல் மதிப்பெண் எடுக்கும் மாணவர்கள் சராசரியாக படிக்கும் மாணவர்களிடம் மற்ற சில ஆசிரியர்கள் காட்டும் பாகுபாடு போல் எல்லாம் ஹாசினி காட்ட மாட்டாள்.. அனைவரையும் ஒரே போல் தான் நடத்துவாள்.. தப்பு செய்தால் எல்லாருக்கும் திட்டு தான்.. 

எப்போதும் விழும் திட்டு என்றாலும் கடந்த இரண்டு நாளாக மாணவர்கள் இவளிடம் சிக்கி சின்னபின்னமாக ஆகிறார்கள் என்று தான் சொல்ல வேண்டும்.. அதுவும் இன்று கொடுத்த ஹோம் வொர்க்கா கொடுத்ததை ஓட்டு மொத்த வகுப்பும் தப்பு தப்பாக செய்திருக்க, கொஞ்சம் அதிகப்படி திட்டு தான் ஒட்டு மொத்த வகுப்பிற்கும்,

அதுவும் அர்ஜுன் என்ற மாணவனுக்கு திட்டு அதிகத்திலும் அதிகம் என்று தான் சொல்ல வேண்டும்..  அவன் ஹோம் வொர்க் முடிச்சிட்டேன் ஆனா நோட்டை மறந்திட்டேன் என்ற பொய்க்கு விழுந்த திட்டை விட, 

இன்று காலை ஹாசினியின் அம்மா மாப்பிள்ளை போட்டோ டி என நம் நாயகன் தேவ அர்ஜுனன் போட்டோவை காண்பிக்க அதை பார்த்து அந்த அர்ஜுன் மேல் எழுந்த கோவத்தை எல்லாம் பாவம் இந்த அப்பாவி சிறுவன் அர்ஜுன்  மீது காட்டி விட்டாள்…   

 போர்ட்டில் நேத்து ஹோம் வொர்க்காக கொடுத்த சம்மை சால்வ் செய்வது எப்புடி என ஸ்டெப் பை ஸ்டெப்பாக சொல்லி கொடுத்தபடி எழுதி முடித்தவள்,

டூ யூ அண்டர்ஸ்டாண்டு என கேட்க, எஸ் மேம் என ஓட்டு மொத்த வகுப்பும் கோரஸ் பாட,

ஓகே  புக் பேக் சைட் இதே போல இன்னோரு சம் இருக்கும் அதை சால்ட் பண்ண ட்ரை பண்ணுங்க.. ஏதாவது டவுட்ஸ் இருந்தா என்கிட்ட கேளுங்க என அனைவரையும் பார்த்து சொல்லி விட்டு, இருக்கையில் சென்று அமர்ந்தாள்.. 

“பொறுக்கி ராஸ்கல் அவனுக்கு எவ்ளோ தைரியம், இன்னைக்கு ஈவினிங் இருக்கு என்ற திட்டு அர்ஜுனனுக்கு, நம் நாயகன் அர்ஜுனுக்கானது..

சுஹாசினி மனம் ஒரு நிலையில் இல்லை.. மனம் முழுவதும் நிறைய குழப்பம் போராட்டம் தான்.. நேற்று காலை ஆரம்பித்தது இது.. இன்று அதை அதிகப்படுத்தினார் அவள் அன்னை கோமதி.. 

நேற்று காலை சுஹாசினி கண் விழித்ததே அவள் அம்மா கோமதியின் சுப்ரபாத்ததில் (புலம்பலில்) தான்.. 

“இந்த வீட்டில் நிம்மதின்னு ஒன்னு இருக்கா..  இரண்டு பொண்ணுங்க பெத்தும் இரண்டும் வேஸ்ட்”, 

“இரண்டு பேரால் ஒரு சந்தோஷமும் நமக்கு கிடைக்காதுங்க.. எங்க போனாலும் அசிங்கப்பட்டு தான் வரனும்.. எல்லாம் நாமா வாங்கி வந்த வரம்” என கோமதி சமையல் கட்டில் குக்கர் போடும் விசில் சத்தத்தை விட அதிகம் சத்தம் போட்டு கொண்டு இருந்தார்…

கேட்டபடி எழுந்த சுஹாசினி உஃப் என மூச்சை வெளியேற்றி விட்டு முடியலை என இரண்டு பக்கமும் தலை அசைத்தாள், தாயின் சுப்ரபாத்தை காதில் கேட்டபடியே குளிக்க சென்றாள்.. 

எப்போதும் அம்மா பாடும் சுப்ரபாதம் என்றாலும் இன்று கொஞ்சம் உக்கிரமாக தான் இருந்தது..  நேற்று இரவு உறவினர் ஒருவரின் வீட்டு ரிஷப்சனுக்கு அன்னை கோமதி தந்தை செல்வம் சென்று இருந்தனர்.. அங்கு வைத்து உறவினர்கள் சுஹாசினி கல்யாணம் பற்றி பேச்சை இழுத்து இருக்க வேண்டும்.. அது தான் இந்த உக்கிரத்திற்க்கு காரணம் என சுஹாசினிக்கு புரிந்தது.‌..

குளித்து பள்ளி செல்வதற்காக புடவை அணிந்து தயாராகி கொண்டு இருந்தாள் சுஹாசினி அன்னையின் புலம்பலை கேட்டவாறே,

அம்மா காலையில்லேயே இப்ப எதுக்கு இப்புடி நொய் நொய்ன்னு கத்திட்டு இருக்க, என்ன தான் உன் பிரச்சினை என தங்கை அம்மு என அழைக்கப்படும் கிருபாசினி கோமதி முன் வந்து கேட்க,

‘இந்த கிருமியை  யார் இப்ப இதை கேட்க சொன்னது இன்னும் கோமதி சத்தம் போடுமே’ என கண்ணுக்கு காஜல் போட்டபடி தங்கையை கடிந்தாள்..

ஹாசினி நினைத்தது போல் கோமதி அம்முவிடம் கொதிக்க ஆரம்பித்தார்..

“என்ன பிரச்சனையா? ஏன் நான் என்ன பிரச்சினைனு சொன்னா உடனே அதை தீர்த்துடுவியா”?,

“நீயும் உன் அக்காவும் தான்டி என் பிரச்சினை, இரண்டு பேரும் ஏழு கழுதை வயதாகியும் கல்யாணம் பண்ணிக்காம கோயில் மாடு மாதிரி சுத்துறீங்களே அது தான்டி என் பிரச்சினை”,

“என் பிரச்சினை என்னனு சொல்லிட்டனே எங்க இதை தீர்த்து வை பார்க்கலாம்.. உன் அக்கா எருமை மாட்டை கல்யாணத்திற்கு சம்மதிக்க வை பார்க்கலாம்” என்றதும்,

அம்மு அமைதியாகி விட, “முடியாதுல அப்புறம் என்னடி உனக்கு வாய், வந்துட்டா என்ன பிரச்சினை ஏது பிரச்சினைன்னு கேட்டுட்டு”,

“அதுக்கு இவ்வளோ காலையில்லேயே கத்துவியாமா, அக்காவுக்கு கொஞ்சம் டைம் கொடு” என்றாள் அக்காவுக்காக பரிந்து கொண்டு

“டைம் மா இன்னும் எத்தனை வருஷத்திற்கு தான் கொடுக்கிறது, எத்தனை வருஷத்திற்கு தான் அவளும் யோசிப்பா, அப்புடி என்ன கல்யாணம் பண்ணிக்க முடியாது அளவுக்கு பிரச்சினை, அதையும் சொல்லி தொலைய மாட்டேங்கிறா, இன்னும் ஒரு வருஷம் கழிச்சா அவ அரைகிழவி ஆகிடுவா, நீ கால் கிழவி ஆகிடுவடி டைம் வேணும்மா டைம், மண்ணாங்கட்டி டைம்” கோமதி பொரிய 

“எதே அரை கிழவி கால் கிழவியா” என அதிர்ந்த அம்மு, “கோமதி என்ன இது”? என அதிர்ச்சியாக கேட்க,

“பின்ன இன்னும் ஒரு வருஷம் ஆனா உன் அக்காவுக்கு 30 ஆகிடும்.. 30 வயதாகியும் கல்யாணம் ஆகலைன்னா எங்க ஊர்ல முதிர்கன்னி அரை கிழவி தான்டி சொல்லுவாங்க”..

“வெயிட் வெயிட் கோ… மதி, நீ ஆவேசமா பேசுறது எல்லாம் இருக்கட்டும்.. ஆனா டென்த்ல மேக்ஸ்ல பெயில்ங்கிறதை காண்பிக்கிற பாத்தியா அக்காவுக்கு 30 ஆக இன்னும் இரண்டு வருஷம் இருக்கு.. இப்ப 28 தான்” என்றாள் அம்மு தாயை மடக்கிய சந்தோஷத்தில்,

“28 இல்லடி இருபத்தி எட்டரை பெரிய கணக்கில் சூரப்புலி போல வந்துட்டா.. அவ இருபத்தி எட்டரையை முழுங்கிட்டு இருக்கா.. நீ 26 முழுங்கிட்டு எருமை மாடு மாதிரி சுத்திறீங்க” என சத்தம் போட, 

கோமதி  குழந்தைங்ககிட்ட என்ன இப்புடி எல்லாம் பேசுற என ஹாசினி தந்தை செல்வம் சத்தம் போட,

“இப்ப என்ன பேசிட்டேன் உங்க பொண்ணுங்களை, இதை விட மோசமா நேத்து ரிஷப்சன் வீட்டில் உங்களை பேசுனாங்களேங்க.. பொண்ணுங்களுக்கு கல்யாணம் பண்ற எண்ணம் இல்லையா, இரண்டு பொண்ணுங்களை  சம்பாதிக்க விட்டு  அதில் சொகுசா வாழ ஆசைப்படுறீயான்னு கேவலமா பேசும் போது பதில் பேச முடியாத நிலைமையில் நின்னமே, அதை விடவா பேசிட்டேன்” என கண் கலங்க,

தலையை பின்னலிட்டு கொண்டு இருந்த சுஹாசினிக்கு தந்தையை பேசுனவங்க மீது கோவம் எழுந்தது..

“யார் அப்பாவை பேசுனது? அவங்களை பேச விட்டு நீ வேடிக்கை பார்த்தியா மதி? என அம்மு சீற,

“கல்யாணத்திற்கு வந்த அத்தனை பேரும் பேசுறாங்க.. அத்தனை பேர்க்கிட்டயும் சண்டைக்கு போக முடியுமா? அவங்க அப்புடி பேச   காரணமே நீயும் உன் அக்காவும் தானடி, அவ மட்டும் நாங்க சொல்ற அப்பவே கல்யாணம் பண்ணி இருந்தா இந்த பேச்சு எல்லாம் வந்து இருக்குமா” கோமதி ஆதங்கத்துடன்  கேட்க,

“அவங்க பேசுறாங்கன்னு, அவங்களுக்காக அக்கா கல்யாணம் பண்ணிக்க முடியுமா? மத்தவங்களுக்காக அவங்க என்ன நினைப்பாங்களோ, சொல்வாங்களோங்கிறதுக்காக வாழ கூடாது கோ….மதி” தாயை அமைதிப்படுத்தவும், தமக்கைக்கு ஆதரவாகவும் அம்மு பேச,

அவள் அருகே வந்த கோமதி அம்மு அழகாக வாறி இருந்த தலை முடியை கலைத்து விட்டார்..

“கோமதி என்ன பண்ற?  நான் ஆபிஸ் போகனும்” என அம்மு கோபப்பட,

“ம்.. ஆபிஸ்க்கு தானே இப்புடியே போடி” என்றதும், 

“இப்புடியேவா”, என முகம் சுருங்கியவள், “எப்புடி போக முடியும், பார்க்கிறவங்க என்ன நினை”… என பேச வந்தவள் அன்னையின் கேலி சிரிப்பிலும் மடக்கிய விததிலும் வாயடைத்து நின்றாள் கிருபாசினி..

“பார்க்கிறவங்க என்ன நினைச்சா என்ன பேசுனா என்ன அம்மு, நீயும் உன் அக்காவும் தான் அதை பத்தி கவலைப்படுற ஆளு இல்லையே.. மை லைஃப் மை ரூல்ஸ் வாழும் ஆளுங்க.. அப்புறம் என்ன இப்புடியே போக வேண்டியது தானே” எனவும் அம்மு முறைத்தப்படி பதில் சொல்ல முடியாது நிற்க,

“முடியாதுல்ல, அப்புறம் என்னடி வாய் உங்களுக்கு”, என சத்தம் போட்டு கொண்டு இருக்கும் போதே, பள்ளி செல்வதற்காக தயாரான சுஹாசினி கைப்பையை எடுத்து கொண்டு அறையிலிருந்து வெளி வந்தாள்.. 

நேராக சமையலறைக்கு செல்ல, “இங்க எவ்வளவு கலவரம் நடக்கு, என்ன ஏதுன்னு கேட்கிறாளா பாருடி திமிர் பிடிச்சுவ” என அம்மு விடம் கிசுகிசுத்தார்.. 

சமையல் அறையில் அவளுக்காக கோமதி தயார் செய்து வைத்த டிபன் பாக்ஸை கைப்பையில் வைத்தாள் ஹாசினி,

இங்கு கோமதியோ அவள் சாப்பிடுவதற்காக டைனிங் டேபிளில் தட்டில் இட்லி எடுத்து வைத்தார்.. சமையற்கட்டிலிருந்து வெளி வந்தவள் சாப்பிடாமல் கிளம்ப,

“சுஹாமா சாப்பிட்டு போடா” தந்தை செல்வம் கூறவும், “பசிக்கலைப்பா அப்புறமா கேண்டினில் பார்த்துக்கிறேன்” என்றவள் வெளியேற போக,

“ஏய் நில்லுடி இப்புடி சாப்பிடாம போன என்ன அர்த்தம்?” கோமதி கோவமாக கேட்க,

“பசிக்கலைன்னு அர்த்தம்” அலட்சியமான பதில் வந்தது ஹாசினியிடமிருந்து,

“திமிர் பிடிச்சுவ” என முனுமுனுத்த கோமதி, “சரி பதில் சொல்லிட்டு போ”? என்றார்..

“மதி வேலைக்கு போற பொண்ணுக்கிட்ட சண்டை போடாத” என்ற செல்வத்தை ஒரு முறை முறைத்து கோமதி,

“நீங்க கொடுக்கிற செல்லம் தான் இவ இப்புடி திமிர் பிடிச்சு அலைய காரணம்” என அவரை அமைதியாகக்கியவர், என்ன சொல்ற? என ஹாசினியை பார்த்து கேட்க,

“எதை பத்தி கேட்கிற” சுஹாசினி கேள்வியாக பார்க்க,

“உன் கல்யாணத்தை பத்தி?”

“கொஞ்ச நாள் போகட்டும்ன்னு சொல்லி இருக்கேனே அப்புறம் என்ன”?

“இன்னும் எவ்ளோ நாள் போனா ஒதுக்குவடி, உனக்கு அடுத்து ஒருத்தி இருக்கா, அவளுக்கும் வயசு மீறிட்டு போகுது.. அவளை பத்துன அக்கறை கொஞ்சம் கூட இல்லையாடி”

“அவளுக்கு கல்யாணம் பண்ணி வைக்க வேண்டாம்னு நான் எப்ப சொன்னேன்.. எனக்கு பார்க்கிறதை விட்டுட்டு அவளுக்கு நல்ல இடமா பார்த்து சீக்கிரம் கல்யாணம் பண்ணி வைங்க.. ஸ்கூலுக்கு போற நேரம் சும்மா நொய் நொய்ன்னுட்டு” ஹாசினி கோவத்தில் கத்த, 

“அவளுக்கு மூத்த எருமை மாடு நீ குத்து கல்லாட்டம் இருக்கும் போது அவளுக்கு வரன் அமையுமாடி, கூட பொறந்தவ வாழ்க்கைக்கும் சந்தோஷத்திற்கும் இடைஞ்சல்ல கல்லு மாதிரி இருக்கோம்னு உறுத்தல் கொஞ்சம் கூட இல்லாம, தன்னை பத்தி மட்டுமே யோசிக்கிற சுயநலவாதிடி நீ”,

கோமதி கோவத்திலும் மகளை எப்படியாவது சம்மதிக்க வைக்க வேண்டும் என்ற நோக்கத்திலும் கடினமான வார்த்தைகளை வீச,

கண்மூடி பல்லை கடித்து கோவத்தை கட்டுப்படுத்தியவள்,”இப்ப உனக்கு என்ன, நான் தானே பிரச்சினை, நான் வீட்டை விட்டு போய்டுறேன்.. உனக்கு ஒரே ஒரு பொண்ணு தான்னு சொல்லி அம்முக்கு கல்யாணம் பண்ணு” என்றதும்

“வீட்டை விட்டு தானடி தாராளமா போ, போறதுக்கு முன்ன எனக்கும் உங்கப்பாவுக்கும் பண்ண வேண்டிய காரியத்தை முடிச்சிட்டு தாரளமாக போ” என்றதும்,

“கோமதி” என செல்லவமும்

“அம்மா” என அம்முவும் கண்டிக்க,

ஆத்திரமான ஹாசினி கையிலிருந்த கைப்பையை விசிறியடித்து விட்டு வேகமாக வீட்டை விட்டு வெளியேறி தன் வண்டியில் பள்ளிக்கு கிளம்பினாள்…

அவள் விசிறி  அடித்த வேகத்தில் சரியாக மூடாத காரணத்தினால் கைப்பையில் இருந்த டிபன் பாக்ஸ் கீழே விழுந்து ஹாலில்  முழுவதும் சாப்பாடு சிந்தி கிடந்தது.. 

கோமதி அப்புடியே அமர்ந்து அழ ஆரம்பிக்க செல்வமும் அம்முவும் தான் அவரை சமாதானம் செய்து கொண்டு இருந்தனர்..

 

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.6 / 5. Vote count: 22

No votes so far! Be the first to rate this post.

2 thoughts on “என் செல்ல நரகமே 1”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!