இவளை இப்போ என்ன பண்ணலாம் என்று யோசித்தவன் அவன் வழியிலே போய் இவளுக்கெல்லாம் ரிப்ளை பண்ணனும் என்று நினைத்த துருவனேந்திரன் என்ன பண்றேன்னு தானே கேட்கிற பேபி என்ன ஒரு பொண்ணு லவ் பண்றேன்னு சொல்லிட்டு ஐ லவ் யூ என்று மெசேஜ் அனுப்பினாள் இன்னைக்கும் அவள் மெசேஜ் அனுப்புவாள்ன்னு நான் நினைச்சேன் அதேபோலவே அனுப்பிட்ட நான் எப்பவுமே உன்னோட செல்ல லூசு தான் செல்ல குட்டி என்று இவனும் பதிலுக்கு மெசேஜ் தட்டி விட்டான்.
மெசேஜ் வரவும் எடுத்துப் பார்த்தாள் நிலா. அட பரதேசி நான் இவனுக்கு என்னமோ ஐ லவ் யூ சொன்னது மாதிரி ஓவரா சீன் போட்டுட்டு இருக்கான். இரு மகனே உனக்கு இருக்கு என்று நினைத்தவள் ஹலோ அண்ணா அண்ணாக்கு தங்கச்சி ஐ லவ் யூ சொல்றது ஒன்னும் தப்பு இல்லையே என்று பதிலுக்கு மெசேஜை தட்டி விட்டாள்.
அதைக் கண்டு கடுப்பானவன் அண்ணன் என்றா சொல்லுற இரு உன்னை வச்சிக்கிறேன் என்று நினைத்த துருவன் அண்ணா என்றால் ஐயர் ஆத்துல எல்லாம் ஹஸ்பண்டை அண்ணானு கூப்பிடுவாங்களே அதுபோல தானே என்று அவனும் பதிலுக்கு மெசேஜை தட்டி விட்டு சிரிக்க ஆரம்பித்தான்.
எப்படி போனாலும் லாக் பண்ணிடுறானே இவனை என்ன சொல்லி ஆஃப் பண்றது என்று அவளும் தான் யோசித்துக் கொண்டிருக்கும் பொழுது அவளது அம்மாவும் அம்மு சாப்பிட வா என்று அழைத்தார் .
சரி இருக்கட்டும் இவனை வந்து வச்சுக்கலாம் முதலில் போய் வயிற்றுக்கு சாப்பாடு போட்டுட்டு அப்புறமா வந்து இவனை டார்ச்சர் பண்ணலாம் என்று நினைத்தாள்.
எவ்வளவு கொழுப்பு இருந்தால் இப்படி மெசேஜ் பண்ணுவான். இவனுக்கு நான் ஐ லவ் யூ சொன்னேனா எனக்காக இவன் காத்திட்டு இருந்தானாம் . இவன் எதிர்பாப்ப வீணாக்காமல் நான் மெசேஜ் பண்ணிட்டேனாம் என்று தனக்கு தானே புலம்பி கொண்டிருந்தவள் பேசாமல் இனிமேல் இவனுக்கு மெசேஜ் பண்ணாமல் இருந்தால் என்ன என்று யோசித்தாள் .
அதுதான் சரி நம்ம மெசேஜ் அனுப்பினால் தானே அவன் பதிலுக்கு நம்மை நோஸ்கட் பண்ணுகிறான் என்று நினைத்துக் கொண்டு சாப்பாட்டை அலைந்து கொண்டிருக்க அவளது தலையில் கொட்டினார் வெண்மதி.
மம்மி என்று அவள் பார்க்க என்னடி யோசனை சாப்பிடும் போது சாப்பாட்டை கிண்டிக்கிட்டே இருக்க எடுத்து வாயில போடு என்றார் வெண்மதி. நிலா பாவம் இல்லையா என்றாள் நிலவேனில். யாரு நீயா பாவம் உனக்கு பாவம் பார்த்தால் நான் தாண்டி பாவம் ஒழுங்கா சாப்பிடுடி என்று கூறிவிட்டு அவரும் சாப்பிட ஆரம்பித்தார்.
இருவரும் சாப்பிட்ட பிறகு அம்மு அந்த பாத்திரத்தை மட்டும் கழுவி வச்சிருறியா என்றார் வெண்மதி . நானா என்ற நிலவேனிலிடம் நீ தான் தங்கம் என் பொண்ணு கைப்பட்டா பாத்திரலாம் சும்மா வெள்ளி பாத்திரம் போல மின்னிடுமே என்றார் வெண்மதி.
என்ன மம்மி வின்னர் படம் பாத்தீங்களா அதனால தான் என் கை பட்டதும் இயம் பாத்திரம் எல்லாம் வெள்ளி மாதிரி மின்னுதோ என்ற நிலவேனில் எல்லாம் என் தலையெழுத்து என்று கூறிக்கொண்டு கிச்சனுக்கு சென்று விட்டாள் . வெண்மதி சிரித்தவர் தலை வலிக்கு தைலம் தேய்த்துக்கொண்டு படுத்துக்கொண்டார் .
இவளோ பாத்திரம் எல்லாம் கழுவி அடுக்கி வைத்து கிச்சனை சுத்தம் செய்து விட்டவள் தன் அறைக்கு வந்தாள்.
ஃபோனை வந்து பார்க்க அவனிடமிருந்து மெசேஜ் வந்திருந்தது. அவ்வளவு பயமா எங்கே என்ன லவ் பண்ணிருவனு ரொம்ப பயப்படலாம் வேண்டாம் நீ தான் ஆல்ரெடி என்னை லவ் பண்ணிட்டு இருக்கியே என்று மெசேஜ் வர கடுப்பாகி போனவள் கால் செய்ய ஆரம்பித்தாள் .
ஹலோ என்று இவள் கோபமாக கத்த காது வலிக்குது பேபி கொஞ்சம் மெதுவா பேசு என்றான் அவன். என்னது பேபியா யாருடா பேபி நான் உனக்கு பேபியா என்ற நிலவேனிலிடம் என்னடி திமிரா டா போட்டு பேசுற உன்னை மட்டும் நேரில் பார்த்தேன் அடிச்சு பல்லெல்லாம் பேத்துருவேன் என்றான் துருவநேத்ரன்.
பதிலுக்கு என்னது டி யா டி சொல்லிக் கூப்பிட்ட நான் என்ன உன் பொண்டாட்டியாடா பொறுக்கி என்றாள் நிலா.
யாருடி பொறுக்கி நீ தான் பொறுக்கி முன்னே, பின்னே தெரியாத ஒரு பையனுக்கு ஐ லவ் யூ சொல்லுற நீ பொறுக்கியா இல்லை நீ ஐ லவ் யூ சொன்ன பிறகு கூட உன்கிட்ட டீசண்டா பேசிட்டு இருக்கேன் நான் பொறுக்கியா.
நானா இன்னைக்கு உனக்கு மெசேஜ் அனுப்பினேன். நீ தானே எனக்கு மெசேஜ் அனுப்புனா நீயா மெசேஜ் அனுப்பிட்டு பேசுவியாம், லூசுன்னு சொல்லுவியா பதிலுக்கு நான் நேத்து நீ ஐ லவ் யூ அனுப்பியதால் தான் உன்னை வம்பிழுக்க தான் நானும் நீ என்னோட லவ்வர் என்று பேசினேன் அதுக்கு பொறுக்கினு என்னை திட்டுவியா நீயெல்லாம் என்ன பொண்ணு டீ ஒரு ஆம்பளைங்க பையனுக்கு தெரியாமல் மெசேஜ் அனுப்பி விட்டால் சரி இன்னைக்கு நான் ஒரு பையன் என்று தெரிந்து தானே மெசேஜ் அனுப்புன அப்போ நீ தான் பொறுக்கி. தப்பெல்லாம் உன் மேல வச்சுட்டு நான் பொறுக்கியாம் இன்னொரு முறை மெசேஜ், கால் எதுவும் பண்ணின பொறுக்கி என்ன பண்ணுவான் என்று உனக்கு காட்ட வேண்டியதா இருக்கும் ஃபோனை வைடி என்று கட் செய்தான் துருவன்.
இவளுக்கு முகத்தில் அறைந்தால் போல் ஆகிவிட்டது . இப்போ நான் என்ன சொல்லிட்டேன் இவ்ளோ பேச்சு பேசுறான் பொறுக்கின்னு சொன்னது அவ்வளவு பெரிய தப்பா என்று அவ்ளோ கண் கலங்கிவிட்டாள்.
பொறுக்கி பொறுக்கி நிஜமாவே இவன் பொறுக்கி தான் ஒரு பொண்ணு கிட்ட எப்படி பேசுறதுன்னு தெரியாமல் லூசு பய மாதிரி கத்துகிறான் . இடியட் உன்கிட்ட நான் பேசவே மாட்டேன் என்று நினைத்த நிலவேனில் அழுது கொண்டே உறங்கி விட்டாள்.
என்ன சொல்ற செல்லம் இவ்ளோ பேசிட்டானா என்ற கனிஷ்காவிடம் ஆமாடி எனக்கு கோவம் கோவமா வருது எவ்வளவு திமிரு இருந்தால் என்னை இவ்ளோ பேச்சு பேசுவான் நான் பொறுக்கியாம். பொறுக்கி ,பொறுக்கி அவன் தான் பொறுக்கி , அவன் குடும்பமே பொறுக்காமல் ஒரு கேடுகெட்ட பொறுக்கி என்று அவள் பாட்டுக்கு திட்டிக் கொண்டிருக்க கனிஷ்கா சிரிக்க ஆரம்பித்தள்.
எதுக்குடி சிரிக்கிற என்ற நிலாவிடம் நீ என்ன பைத்தியமா செல்லம் இப்போ எதுக்கு அவன் பேமிலியவே திட்டுற என்றாள் .
ஆமாம் இவன் பண்ணிதுக்கு அவங்க பேமிலி என்ன பண்ணுவாங்க நான் ஒரு லூசுடி தேவை இல்லாமல் அவன் பேம்லியை எல்லாம் திட்டிட்டு இருக்கேன் கடவுளே மன்னிச்சுக்கோங்க அவங்க பேமிலி எல்லாம் பொறுக்கி இல்லை அவன் மட்டும் தான் பொறுக்கி என்று இவள் கூறிட கனிஷ்கா மீண்டும் சிரிக்க ஆரம்பித்தாள் .
பைத்தியக்கார நாயே எதுக்கு சிரிச்சுக்கிட்டே இருக்க என்ற நிலாவிடம் நிலா உன்னை பாத்தால் எனக்கு சிரிப்பு தான் வருது .
ஆமா நீ எதுக்கு அவனுக்கு மெசேஜ் பண்ணுன அதை சொல்லு என்ற கனிஷ்காவிடம் சும்மா பொழுது போக வில்லை விளையாடலாமென்று நினைத்தேன். ஆனால் விளையாட்டு வினையாகுகிற மாதிரி அது எனக்கே ஆப்படிச்சுருச்சு ரொம்ப சோகமா ஆயிட்டாள் நிலா என்றாள் நிலவேனில்.
சரி சரி கவலைப்படாத எல்லாம் சரியாயிடும் இனிமேல அவனுக்கு இந்த மெசேஜ் பண்ணாதே திரும்பவும் எதாவது மெசேஜ் பண்ணுனனு வச்சுக்கோயேன் உன் கன்னத்தில் குத்திடுவேன் என்றாள் கனிஷ்கா.
இனிமேல் நான் அவனுக்கு மெசேஜ் பண்ண மாட்டேன் என்று கூறினாள் நிலவேனில். சரி இன்னும் ஒன் மந்த்ல பப்ளிக் எக்ஸாம் நம்ம அதுக்கு படிக்கணும் அதை யோசி என்ற கனிஷ்காவிடம் ஆமாம்டி அதை நினைச்சாலே பயமா இருக்கு.
கடவுளே இந்த பப்ளிக் எக்ஸாம் எல்லாம் எதுக்கு வச்சீங்க முதல்ல இந்த எக்ஸாம் எல்லாம் எவன் கண்டுபிடிச்சான் எக்ஸாமை கண்டுபிடிச்சவன் மட்டும் என் கைல கிடைச்சான் அவனை அப்படியே அம்மில வச்சு நசுக்கி விடுவேன் நசுக்கி என்றாள் நிலா.
எல்லாருமே சும்மா ஸ்கூலுக்கு வாங்க, காலேஜுக்கு வாங்க ,படிங்க ,ஜாலியா சுத்துங்க ,படிச்சு முடிச்சுட்டு உங்க கைல நாங்களே டிகிரி கொடுத்திடுவோம்.
நீங்க ஏதாவது ஒரு வேலைக்கு போகலாம். இந்த மாதிரி ஒரு சிஸ்டம் இருந்தால் எவ்ளோ நல்லா இருக்கும் என்ற நிலாவை பார்த்து சிரித்தாள் கனிஷ்கா .
எவ்வளவு திமிர் இருக்கனும் அவளுக்கு அவளாவே மெசேஜ் பண்ணிட்டு பதிலுக்கு மெசேஜ் பண்ணினால் பொறுக்கினு சொகிற்ள்.
பொறுக்கினா ஃபர்ஸ்ட் யார் தெரியுமா இவளுக்கு பொறுக்கினா யாருன்னு காட்டணும் அப்போ தான் அவளோட திமிர் அடங்கும் என்று நினைத்துக் கொண்டிருந்தான் துருவன் .
சரியான பைத்தியக்காரி என்று நினைத்தவன் சரி இந்த பைத்தியத்தை பத்தி யோசிச்சிட்டு நம்ம மைண்ட் செட் கெடுக்க வேண்டாம் நம்ம வேலையை பார்ப்போம் என்று நினைத்து அவன் பாட்டுக்கு வேலையை பார்க்க ஆரம்பித்தான். இவளைப் பற்றி யோசிச்சாலே தலைவலி வந்துருது போய் ஒரு டீ குடிக்கலாம் என்று நினைத்து அவன் கேண்டினிற்க வந்து கொண்டிருந்தான்.
என்ன அண்ணா நீங்க ஒரு சமோசா கூட போட மாட்டீங்களா டெய்லி இதே பருப்பு வடை தானு இதை சாப்பிட்டு என் நாக்கு செத்துப்போச்சு. ஒரு உளுந்த வடை ,ஒரு சமோசா ,ஒரு கீரை போண்டா, ஒரு வாழைக்காய் பஜ்ஜி ,ஒரு மிளகாய் பஜ்ஜி, ஒரு ஆனியன் பஜ்ஜி இந்த மாதிரி டிஃபரண்ட் டிஃபரண்டா போட்டு கேன்டினை பெருசு பண்ணுவீங்களா எப்ப பார்த்தாலும் ஒரே ஒரு மசால் வாடை போட்டு இப்படி உருப்படாமல் வச்சிருக்கீங்களே என்று கூறிக் கொண்டிருந்தாள் நிலவேனில் .
நான் என்ன பண்றது நிலா கண்ணு என் வீட்டு அம்மாவுக்கு வடை மட்டும் தான் சுட தெரியும் . வெளியில் வாங்கி விற்க ஒரு பயம் வேற நம்மளே வீட்ல சுட்டுக் கொண்டு வந்தால் நம்ம ஸ்கூல் பிள்ளைகளுக்கு கொஞ்சம் ஹெல்த்தியா இருக்கும்ல என்றார் அந்த கேண்டீன் கடைகாரஅண்ணா .
சரி சரி எனக்கு ஒரு ரெண்டு பருப்பு வடை கொடுங்க. அப்புறம் வந்து குரு பெப்சி அது ரெண்டு வேணும் என்றாள் நிலவேனில். சரிப்பா வாங்கிக்கோ என்று அவர் கொடுத்திடம் அதை வாங்கிக்கொண்டு இவளும் நடந்து சென்றாள்.
இவள் இவ்வளவு நேரம் கேண்ட்டீன் அண்ணனிடம் பேசிக் கொண்டிருந்ததை கேட்ட துருவனுக்கு சிரிப்புதான் வந்துவிட்டது.
சரியான சோத்து மூட்டையாக இருக்கும் போலையே சம்சாவாம், மிளகாய் பஜ்ஜி, ஆனியன் பஜ்ஜி அது பாட்டுக்கு லிஸ்ட் போட்டுக்கிட்டே இருக்கு என்று நினைத்து அவன் சிரித்துக் கொண்டிருக்க எதார்த்தமாக திரும்பியவள் அய்யய்யோ இந்த அனகோண்டா குரலு எதுக்கு நம்மளை பாத்து சிரிச்சுக்கிட்டு இருக்கு.
ஒரு வேளை கேண்டின் கடைக்காரர்கிட்ட கிட்ட பேசுனதை கேட்டு இருப்பாரோ என்று நினைத்துக் கொண்டே குரு பெப்சியை வாயில் வைத்துக் கொண்டு சென்று விட்டாள் .
அவள் இரட்டை ஜடை போட்டுக்கொண்டு சின்ன குழந்தை போல குரு பெப்சியை வாயில் வைத்துக்கொண்டு செல்வதை பார்த்து அவனுக்கு சிரிப்புதான் வந்தது. தலைவலியும் பறந்து போனது.
அவன் தலைவலியே அவள் தான் என்று தெரியும் பொழுது வாத்தி என்ன ஆகுமோ….
…. தொடரும்….