அடுத்து வந்த நாட்களிலும் அவளுக்கு பரீட்சை இருந்த காரணத்தினால் அவனுக்கு மெசேஜ் அனுப்பவில்லை.
இன்னும் ஒரு காரணம் அவன் பேசிக் கொண்டிருக்கும் பொழுதே போனை வைத்தது மட்டுமில்லாமல் இவளை மோசமாக பேசிய விதம் அவளுக்கு அவன் மீது கோபத்தை ஏற்படுத்தி இருந்தது. இனிமேல் அவனுடன் பேசக்கூடாது என்ற எண்ணம் மனதில் தோன்றியதால் நிலவேனில் அவனைப் பற்றி சிந்திப்பதை கூட மறந்துவிட்டு படிப்பில் கவனம் செலுத்த ஆரம்பித்தாள்.
அவளது அம்மாவும் உடல்நிலை சரியில்லாதவர் அதனால் படிப்பிலும், தன் அன்னையின் மீதும் மட்டுமே கவனம் செலுத்திவிட்டு தன் அன்னையுடன் பொழுதை போற்றிக் கொண்டிருந்தாள்.
அதோ, இதோ என்று பத்தாம் வகுப்பு பரீட்சையும் முடிந்து விட்டது.
அம்மு இந்த ஒரு மாதமும் வீட்லயே தெண்டமா உக்காந்திருக்காமல் உருப்படி ஏதாச்சும் பண்ணலாமே என்ற வெண்மதியிடம் என்ன மம்மி பண்ணட்டும் என்றாள் நிலவேனில்.
டைப்ரைட்டிங் க்ளாஸ் இல்லைன்னா கம்ப்யூட்டர் கிளாஸ் இந்த மாதிரி ஏதாச்சும் போகலாம் இல்ல என்றார் வெண்மதி.
கம்ப்யூட்டர் கிளாஸ் போகனுமா சரி கனி வருகிறாளானு கேட்டு நானும் ஜாயின் பண்ணிக்கிறேன் என்ற நிலவேனிலின் தலையில் கொட்டியவர் ஏன் உனக்கு துணைக்கு ஆள் இருந்தால் மட்டும் தான் எதுவும் செய்வாயாடி என்றார் வெண்மதி.
மம்மி கனி கூடவே இருந்து பழகிருச்சு அவளும், நானும் பால்வாடியிலிருந்து ஃபிரண்ட்ஸ் எங்கே போனாலும் ரெண்டு பேரும் ஒன்றாக தான் போவோம் அப்படி இருக்கும் போது கம்ப்யூட்டர் கிளாஸ் மட்டும் எப்படி தனியா போவேன்.
இருங்க நான் கனி கிட்ட கேட்டு சொல்றேன் என்ற மகளைப் பார்த்து சிரித்த வெண்மதி திடீரென்று மயங்கி விழுந்து விட்டார்.
அம்மா என்னாச்சு என்று பதறினாள் நிலவேனில். தண்ணீர் தெளித்து பார்க்க அவளது அன்னை எழாமல் இருக்கவும் பயந்து போனவள் உடனடியாக தன் மாமாவிற்கு ஃபோன் செய்தா.ர் அடுத்த பத்து நிமிடத்தில் அவளது மாமா வந்துவிட்டார் .
வந்து தன் சகோதரியை தூக்கிக் கொண்டு மருத்துவமனைக்கு விரைந்தனர் .வெண்மதி ஏற்கனவே இதய நோயாளி அவருக்கு பிரசர் அதிகமானதால் மயங்கி விழுந்துவிட்டார்.
பிரஷர் அதிகமாகர அளவுக்கு என்னாச்சு அம்மு என்ற அவளது மாமாவிடம் தெரியவில்லை மாமா நானும் ,அம்மாவும் சந்தோஷமா தான் பேசிட்டு இருந்தோம் திடீர்னு மயங்கி விழுந்துட்டாங்க எனக்கு என்ன பண்றதுன்னு தெரியல என்று அழ ஆரம்பித்தாள் நிலவேனில் .
அழாதே அம்மு அம்மாவுக்கு ஒன்றும் ஆகாது என்று அவளது மாமாவும் , அவளது பாட்டி அமிர்தவள்ளியும் பேத்தியை சமாதானம் செய்து கொண்டிருந்தார்.
மருத்துவர் வெளியே வந்தவர் பயப்படுவதற்கு ஒன்னும் இல்லை பிரஷர் கொஞ்சம் அதிகமானதினால் மயங்கிட்டாங்க. டேப்லெட் எதுவும் இரண்டு நாளா சாப்பிட வில்லை அதுதான் பிரச்சனை என்று கூறி விட அமிர்தவள்ளியோ மகளை கண்ட மேனிக்கு திட்ட ஆரம்பித்தார். என்ன பொம்பளை டி நீ வயசுக்கு வந்த ஒரு பிள்ளையை வைத்துவிட்டு மாத்திரை ஒழுங்கா சாப்பிடாமல் இப்படி மயங்கி விழுந்துட்ட. உனக்கு ஏதாவது ஒன்று என்றால் அவளோட நிலைமையை யோசிச்சு பார்த்தியா என்று திட்டிக்கொண்டே போக அம்மா மாத்திரை தீர்ந்துடுச்சு வேலைக்கு போகிற அவசரத்தில் வாங்க மறந்துட்டேன் என்று வெண்மதி பதில் கூறினார் .
உனக்கு வேலை முக்கியம்தான். அதைவிட உயிர் முக்கியம் நீ உசுரோட இருக்கணும் அந்த பிள்ளைக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமைத்துக் கொடுக்கிற வரைக்குமாவது அதை முதலில் புரிஞ்சிக்கோ .
உன் புருஷன் தான் சீக்கிரமே போய் சேர்ந்துட்டாருன்னா இப்ப நீயும் இந்த பிள்ளையை தவிக்க விட்டுட்டு போகலாம் என்று பார்க்கிறீயா என்று மகளை திட்ட ஆரம்பிக்க அம்மாச்சி ப்ளீஸ் அம்மாவை திட்டாதீங்க என்ற நிலவேனில் தன் அன்னையை கட்டிக்கொண்டு அழ ஆரம்பித்தாள்.
நான் ரொம்ப பயந்துட்டேன் அம்மா என்று அவள் அழுது கொண்டிருக்க சாரிடா அம்மு அழாதே அம்மா மாத்திரை வாங்க மறந்துட்டேன் டா என்றார்.
என்கிட்ட சொல்லியிருந்தால் நான் வாங்கிட்டு வந்திருப்பேன்ல என்ற நிலாவின் கண்ணீரைத் துடைத்தவள் அம்மா உன்னை விட்டுட்டு அவ்வளவு சீக்கிரம் போக மாட்டேன் என்று மகளை சமாதானப்படுத்தினார் .
டாக்டர் ஒருவாரம் ரெஸ்ட் எடுக்க சொல்லி இருக்காங்க என்று அமிர்தவள்ளி கூறிட வெண்மதியும் ஒரு வாரத்திற்கு தன் அலுவலகத்திற்கு விடுமுறை எடுத்துக்கொண்டு மகளுடனே இருந்தார் .
அவளோ தன் அம்மாவை எந்த வேலையும் பார்க்க விடாது அன்பாக கவனித்துக் கொண்டிருந்தாள். அம்மு அம்மாவுக்கு ஒன்றும் இல்லைடா என்ற வெண்மதியிடம் ஒன்றும் பேசக்கூடாது ஒரு வாரம் நீங்க ரெஸ்ட் எடுக்கணும் இந்த வேலை எல்லாம் ஒரு வாரம் நானே பார்த்துக்கிறேன் .எனக்கு நீங்க ரொம்ப முக்கியம் மம்மி என்று அவள் கூறிட அம்மா உன்னை விட்டு எங்கேயும் போயிட மாட்டேன் செல்லம். என்று மகளின் நெற்றியில் முத்தமிட்டார் வெண்மதி. அவர் முன்பு அவள் அழுகவில்லை தான் ஆனால் அவளால் அழுகையை கட்டுப்படுத்த முடியவில்லை உறங்கிக் கொண்டிருக்கும் தாயைக் கண்டு அழ ஆரம்பித்தாள் . அவளுக்கு தெரியும் அவளது தாயின் உடல்நிலை. அவரால் ஒருநாள் மாத்திரை சாப்பிடவில்லை என்றாலும் பிரஷர் அதிகமாகி இப்படித்தான் மயங்கி விழுந்திடுவார். அவர் உணவை விட அதிகமாக மாத்திரைகளை அதிகம் உட்கொண்டிருக்கிறார் இரண்டு முறை ஹார்ட் அட்டாக் வந்துவிட்டது மீண்டும் ஒருமுறை வந்தால் அவரது உயிருக்கு ஆபத்து என்று அவள் நன்கு அறிவாள். அதனாலே தன் தாய் மீது தாய்க்காக ஒவ்வொரு மாதமும் பிரதோஷம் ,சஷ்டி என்று வரும் நாட்களில் எல்லாம் விரதம் இருந்து ஒரு கடவுள் விடாமல் அத்தனை கடவுள் இடமும் வேண்டுதல் வைத்துக் கொண்டிருக்கிறாள் .தனக்கு தன் அன்னையாவது வேண்டுமென்று.
ஒரு வாரம் மகளின் அரவணைப்பில் ஓரளவு தேறி இருந்த வெண்மதி தனது அலுவலகத்திற்கு வேலைக்கு சென்று விட்டார் . வீட்டில் தனியாக இருக்க போர் அடித்துக் கொண்டிருந்ததால் கனிஷ்காவுடன் சேர்ந்து கம்ப்யூட்டர் கோர்ஸ் சேர்ந்து விட்டாள் நிலவேனில்.
கனிஷ்கா ,நிலவேனில் இருவரும் கம்ப்யூட்டர் கிளாஸ் சென்று விட்டு வந்தாலும் ஒரு மணி நேரம் ,இரண்டு மணி நேரம் வேண்டுமானால் பொழுதுபோகும் மீதி இருக்கும் நேரங்கள் எல்லாம் அவள் வீட்டில் தனியாகத்தான் இருந்தாள். டிவி பார்ப்பது ,படம் பார்ப்பது இப்படி என்ன தான் நேரத்தை செலவழித்தாலும் பொழுதே போகவில்லை அவளுக்கு.
அப்பொழுதுதான் எதார்த்தமாக அவளது எண்ணிற்கு ஒரு மெசேஜ் வந்திருந்தது. அதை கைதவறி அவன் தான் அனுப்பி இருந்தான். அவனும் வேண்டுமென்றே அனுப்பவில்லை யாருக்கோ ஃபார்வேர்ட் செய்தது இவள் எண்ணிற்கு சென்று விட்டது .
அது ஒரு ஹாப்பி பர்த்டே மெசேஜ் இன்னைக்கு ஒன்றும் எனக்கு பிறந்தநாள் இல்லையே இவன் எதுக்கு இப்போ எனக்கு பர்த்டே விஷ் அனுப்புறான். என்று நினைத்தவள் கடுப்புடன் அவனுக்கு மெசேஜ் அனுப்பினாள்.
இன்னைக்கு ஒன்னும் எனக்கு பிறந்தநாள் இல்லை நீ எதுக்கு எனக்கு மெசேஜ் அனுப்புற என்று அவள் கேட்டிட அப்பொழுதுதான் அவன் அந்த எண்ணை பார்த்தான்.
முகிலன் என்ற பெயருக்கு பதிலாக மூன் என்ற பெயரில் மெசேஜ் சென்று விட அய்யய்யோ இவளுக்கு அனுப்பிட்டனா முகிலனும் எம், மூன்ஃபையரும் எம் வெறும் முதல் எழுத்து எம் மட்டும் தான் பார்த்தேன்.
இவள் நம்பர போன்ல சேவ் ஆனதே நான் மறந்து தொலைஞ்சிட்டேன் என்று நினைத்தவன் சாரி மெசேஜ் ராங்கா அனுப்பிட்டேன் என்று ரிப்ளை செய்தான்.
அது எப்படி ராங்கா அனுப்புவீங்க வேணும்னே அனுப்பிட்டு இப்போ என்ன டிராமா பண்ணுறீங்க அன்னைக்கு என்னமோ என்னையை பொறுக்கி அது, இதுன்னு சொல்லி திட்டிட்டு ஃபோனை கட் பண்ணிட்டு இன்னைக்கு எதுக்கு எனக்கு மெசேஜ் அனுப்புறீங்க என்றாள் நிலவேனில்.
ஐயோ இந்த மூன்ஃபையரோட பெரிய இம்சையா இருக்கு என்று நினைத்தவன் அம்மா தாயே மூன்ஃபையர் நான் உனக்கு மெசேஜ் அனுப்ப வில்லை என் பிரண்டுக்கு அனுப்பின மெசேஜ் மாறி உனக்கு வந்துருச்சு இப்போ என்னங்கற ஆமாம் அன்னைக்கு உன்னை திட்டினேன் தான் அது முடிஞ்சு மூன்று மாசம் ஆச்சு இப்ப எதுக்கு அதைப் பற்றி பேசிட்டு இருக்க என்று கூறி ஒரு மெசேஜை தட்டி விட்டான்.
மூன்று மாசம் ஆனாலும் சரி முந்நூறு வருஷம் ஆனாலும் சரி மறக்கவே மாட்டேன் வாழ்நாளில். என்னை பார்த்து பொறுக்கினு திட்டுனீங்களே என்ற அவளும் பதிலுக்கு மெசேஜ் அனுப்ப யாரு நான் உன்னை பொறுக்கின்னு சொன்னேனா முதலில் நீ தான் என்னை பார்த்து பொறுக்கின்னு சொன்ன.
நான் உன்கிட்ட தப்பா எதுவும் பேசினேனா இல்லை ,அசிங்கமான மெசேஜ் எதுவும் அனுப்பினேனா.
நீ தான் ஐ லவ் யூ என்று மெசேஜ் அனுப்பின. சரி யாரோ விளையாடுறாங்கன்னு நினைச்சு தான் நான் பதிலுக்கு ஐ லவ் யூ சொன்னேன். முதல் நாளே நம்ம ரெண்டு பேருக்கும் உள்ள கான்வர்சேஷன் முடிஞ்சிருச்சு மறுநாள் எதுக்கு தேவையில்லாமல் எனக்கு நீ மெசேஜ் பண்ணின.
லூசுன்னு சொல்லி மெசேஜ் அனுப்பின சரின்னு சொல்லி உன்கிட்ட கலாட்டா பண்ணுறதுக்காக ஆமாம் என்னை லவ் பண்ணுற ஒரு பொண்ணு எனக்கு மெசேஜ் அனுப்பும்ன்னு வெயிட் பண்றேன்னு சொன்னேன். எடுத்த எடுப்பிலேயே பொறுக்கி என்று சொல்லுற பொறுக்கினா யார் என்று தெரியுமா உனக்கு . பொறுக்கி என்ன பண்ணுவான்னு உனக்கு தெரியுமா நான் பொறுக்கி மாதிரி உன்கிட்ட நடந்துவிட்டால் நீ என்ன ஆவ என்னைக்காவது யோசிச்சு பார்த்து இருக்கியா.
அது என்ன ஆனால் , ஊனால் ஒரு பையனை பார்த்து பொறுக்கிங்கிறிங்க நிஜமாவே ஒருத்தன் பொறுக்கியா இருந்து அவன் உங்க கிட்ட பொறுக்கி தனம் பண்ணினால் தான் உங்களுக்கெல்லாம் அந்த வார்த்தையோட ஒரிஜினல் மீனிங் தெரியும் என்று மெசேஜ் அனுப்பி வைத்தான் துருவநேத்ரன்.
அப்பா சாமி மிஸ்டர் பாண்டி முனீஸ்வரன் உங்களை பொறுக்கின்னு சொன்னது பெரிய தப்புதான் மன்னிச்சிடுங்க வேண்டும் என்றால் உங்க காலில் விழுகட்டுமா என்று அவள் பதில் அனுப்ப நீ நேரில் பார்த்து கண்டிப்பாக என் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டுதா ஆகணும் என்று அவனும் பதில் மெசேஜ் அனுப்பினான்.
சரிங்க தலைவரே எங்க இருக்கீங்கன்னு சொல்லுங்க வந்து காலில் விழுந்து மன்னிப்பு கேட்டுட்டு போயிடுறேன் என்று அவள் சொன்ன விதத்தில் அவனுக்கு சிரிப்பு வந்துவிட்டது .
அவளது மெசேஜை பார்த்து புன்னகைத்தவன் சரி சரி வேண்டாம் நான் உன்னை மன்னிச்சிட்டேன் என்று பதிலுக்கு மெசேஜ் அனுப்பியவன் நிஜமாவே இன்னைக்கு நான் தெரியாமல் தான் உனக்கு மெசேஜ் அனுப்புனேன் வேண்டும் என்று அனுப்பவில்லை என்று அவன் கூறினான் .
இன்னைக்கு ஒன்றும் எனக்கு பர்த்டே கிடையாது .எனக்கு ஜனவரி மாசம் தான் பர்த்டே வேண்டும் என்றால் அப்போ விஷ் பண்ணுங்க என்று தனது பிறந்த நாளையும் அனுப்பி வைத்திருந்தாள் மூன்ஃபையர் . சரியான லூசா இருக்கும் போல என்று அவனும் சிரித்து விட்டு சரிங்க மேடம் கண்டிப்பா உங்க பிறந்தநாளுக்கு ஃபர்ஸ்ட் விஷ் என்னோடதா தான் இருக்கும் என்று பதில் அனுப்பி இருந்தான்.
…. தொடரும்…