16. செந்தமிழின் செங்கனியே!

4.8
(44)

செந்தமிழ் 16

 

“மகனுக்காக இல்ல என் மனைவிக்காக”, என்று அவன் சொன்னதும், “ஏன் எனக்காக?”, என்று பதற்றமாக கேட்டுக் கொண்டே அவனின் அருகில் போய் அமர்ந்தாள்.

“என்னைக்காச்சு என்ன விவாகரத்து பண்ண நினைச்சிருக்கியா?”, என்று அவன் கேட்க, உறைந்து விட்டாள் செங்கனி!

“என்ன இப்படியெல்லாம் பேசுறீங்க?”, என்றவளிடம், “நான் ரொம்ப மாறிட்டேன்ல கனி? நம்ப கல்யாணம் ஆனா போது இருந்த இனியனுக்கும் எனக்கும் நிறைய வித்யாசம் இருக்கு… ஏன் அன்னைக்கு உன்ன கை நீட்டி அடிச்சி கூட இருக்கேன்”, என்றவனை பார்த்து, “நானும் தானே அடிச்சேன்”, என்று சாதாரணமாக கூறினாள்.

“இருந்தாலும் உனக்குன்னு நான் நேரமே ஒதுக்கறது கூட இல்லையே! பசங்கள பத்தி கூட பெருசா யோசிக்கல… அம்மா கூட என்கிட்ட இருந்து வெலகிட்டாங்களோனு தோணுது… பணம் பணம்னு பண பேய்யா ஆகிட்டேனோன்னு இப்போ தோணுது”, என்றவனின் கண்களில் இருந்து ஒரு துளி கண்ணீர் கூட விழ காத்து கொண்டு இருந்தது.

அவனின் தோள்களில் கையை வைத்து, “இங்க பாருங்க… நான் நீங்க சொன்னது எதையுமே இல்லனு சொல்ல மாட்டேன்… எனக்கும் நிறைய நேரம் என்ன மனுஷன் இவருனுலாம் தோணி இருக்கு!!”, என்று அவள் சொன்னதும், அவளின் முகத்தை பார்த்தாள்.

“நான் என்ன தான் ரொம்ப தைரியமான பொண்ணா இருந்தாலும், நானும் சாதாரண பொண்ணு தான்… நினைச்சிருக்கேன் தான்… என்ன வாழ்க்கை டா இதுனு… ஆனா அதுக்காக விவாகரத்து வரைக்கும்லாம் யோசிச்சது இல்ல… யோசிக்கிற அளவுக்கு நீங்க விடல!”, என்றதும் அவனின் மனதில் ஒரு நிம்மதி பரவியது.

“ஆனா உங்க தலைய எங்கையாச்சு கொண்டு போய் முட்டலாமா? இல்ல அப்படியே அதுல தேங்காய் உடைச்சா என்னனு எல்லாம் தோணி இருக்கு”, என்று அவள் சொன்னதும், “நல்ல வேல அதெல்லாம் பண்ணல இல்லனா என் தலை துவம்சம் ஆகியிருக்கும்”, என்றவன் சொன்னதும் சிரித்து விட்டாள்.

“நான் உங்கள புரிஞ்சிக்கிட்டேன்… புரிதல் தான வாழ்க்கையே! நீங்க என்ன தான் ஸ்டேட்டஸ் அது இதுனு பேசுனாலும்… எப்பவும் பழைய பஞ்சாங்கம் தான்… என்ன மாறி!”, என்றவளை பார்த்து, “அது எப்படி சொல்ற?”, என்று கேட்டான்.

“இல்லனா இன்னைக்கு வரைக்கும் நீங்க என் கூட இருந்து இருக்க மாட்டீங்க.. உங்க ஸ்டேட்டஸ் தான் முக்கியம்னு வேற ஏவலாச்சு அந்த மேகனாவா மோகனாவா அவள மாறி இன்னொருத்தியை செட் அப் பா வச்சி இருந்திருப்பிங்க”, என்று அவள் சொன்னதும் தான் தாமதம், “ச்சீ அபச்சாரம் அபச்சாரம்… செட் அப்லாம் நான் யோசிச்சது கூட இல்லமா”, என்றான்.

“அதான் சொன்னேனே நீங்களும் பழைய பஞ்சாங்கம் தான்…”, என்றவள் கையை பிடித்தான்.

“ரொம்ப தேங்க்ஸ் கனி… என்ன எப்பவோம் நீ நம்பியிருக்க”, என்றவனின் கண்ணீர் துளி அவளின் கைகளில் விழ, “என்னையும் நீங்க எப்பவோம் நம்பிருக்கிங்களே!”, என்றாள்.

அவனோ அவளை பார்க்க, “என்கிட்ட தான எப்பவோம் சம்பள பணம் கொடுக்குறீங்க?  இன்னைக்கு வரைக்கும் அத வச்சி நான் என்ன பன்றேன்னு பெருசா கணக்கு கூட கேட்டதில்லை… நீங்க நிறைய பேரு கிட்ட சொல்லி கேட்டு இருக்கேன்.. என் பொண்டாட்டி என்ன விட நல்லாவே இந்த வீட்டை பார்த்துக்குவான்னு… இவளோ ஏன் இன்னைக்கு வரைக்கும் நான் எங்க போறேன்… எங்க வரேன்… யாரு கூட பேசுறேன்னு நீங்க கேட்டது இல்ல… அதே மாறி வேலைக்கு போறேன்னு சொன்னதும்… நான் கூட எனக்கு லஞ்ச் பேக், ஹண்ட் பேக் வாங்கணும்னு யோசிக்கல…நீங்க யோசிச்சிருக்கீங்க… இவளோ ஏன் எனக்கு உடம்பு சரி இல்லாம போனா கூட எத்தனையோ நாள் நான் சொல்லமையே போய் சமைச்சி வீட்டை பாத்துட்டு இருக்கீங்க… இத விட ஒரு பொண்ணுக்கு என்ன வேணும்னு நீங்க நினைக்கிறீங்க?”, என்றவளை பார்த்து அவன் தான் தலை கவிழ்ந்தான்.

இன்று வரை அவளின் குறைகளை மட்டுமே அல்லவா அவளிடம் கூறி இருக்கிறான்.

ஆனால் அவளோ, அவனின் நிறைகளை மட்டுமே பார்த்து இருக்கிறாள்!

அவளே மேலும் தொடர்ந்தாள், “வாழ்க்கை ஒன்னும் நம்ப படிக்கிற ராஜகுமாரி காதல் கதைகள் கிடையாது… ராஜகுமாரன் வருவான் திகட்ட திகட்ட காதலிப்பானு நினைக்க, இந்த காலத்துல இருக்க நிறைய பேருக்கு அது தான் புரியர்தே இல்ல! நம்ப வாழ்க்கை ஒன்னும் கதையோ திரைப்படமோ இல்ல… அது ஒரு தொடர்கதை… தினமும் நம்ப தான் அத எழுதணும்… கதைகள்ல வர்றத விட நிஜ வாழ்க்கைல ஆயிரம் பிரச்சனைகள் வரும்…அதெல்லாம் தாண்டிட்டா போதும்… என்ன பொறுத்த வரைக்கும் நல்ல மன வாழ்வுல இருக்க வேண்டியது நம்பிக்கை, உண்மை, கொஞ்சமே கொஞ்சம் அன்பு மற்றும் காதல்!”, என்றதும், “உன்ன மாறி எல்லா பொம்பளைங்களும் யோசிச்சிட்டு நல்லா இருக்கும்”, என்றதும் சிரித்து விட்டாள்.

“என்ன மாறி தான் நிறைய பொம்பளைங்க இருக்காங்க… இப்போ இருக்க பிள்ளைங்க தான்.. படங்கள், சீரிஸ், கதைகள் படிச்சிட்டு இந்த மாறி மாப்பிள்ளை வேணும் அந்த மாறி மாப்பிள்ளை வேணும்னு நினைச்சிட்டு வர மாப்பிள்ளைங்களோட சண்டை கட்டிட்டு இருங்காங்க… அது பசங்களுக்கும் பொருந்தோம்… எல்லாரும் இனியன் ஆகிட முடியாதே… எத்தனை ஆம்பளைங்க பொண்டாட்டிங்க எங்க போனாலும் பின்னாடியே போறாங்க தெரியுமா? சில பேர் அத அக்கறைனு சொல்லலாம்… ஆனா எல்லா நேரமும் கூட போறத்துக்கு பேரு அக்கறை இல்ல நம்பிக்கை இன்மை! இன்னைக்கும் பொண்டாட்டிக்கு கால் வந்தா யாரதுனு சொல்லியே ஆகணும்னு இருக்க புருஷன் மார்கள்லாம் இருகாங்க”, என்றவளை பார்த்து, “நான் அவளோ கொடூரன் இல்லமா”, என்று சரண் அடைந்து விட்டான்.

“அதான் தெரியுமே… இல்லனா என்னாலயும் இவளோ இலகுவா இருந்திருக்க முடியாது… அப்பறோம் அத்த கூட ஒரு வகையில காரணம் தான்… எனக்கு அம்மாவா தான் இருந்தாங்க”, என்று அவள் சொல்ல, “அதான் தெரியுமே, நீங்க இரண்டு பேறும் சேர்ந்து தான் என்ன கொடுமை பண்ணிருக்கீங்க இத்தனை நாள்”, என்றதும், பொய்யாக அவனை பார்த்து முறைக்க, அவனோ, “சும்மா சொன்னேன் டி” என்றான்.

“சரி தூங்கலாம்… எனக்கு நாளைக்கு வேலைக்கு போகணும்”, என்றவளிடம், “நானே ட்ரோப் பண்றேன்…நானும் சீக்கிரம் ஆபீஸ் போகணும்”, என்றதும் இருவரும் உறங்கி விட்டனர்.

அடுத்த நாள் விடிய, “என்ன அப்பா இன்னைக்கும் ஆபீஸ்ல மொழி பெயர்ப்பாளர் வேலை இருக்கா?”, என்று கயல் கேட்க, “இல்ல இன்னைக்கு அந்த ஆளே வாரேனு சொல்லிட்டான். அச்யுத் கூட நீயும் ஸ்கூலுக்கு போய் டான்ஸ் ப்ரசிட்டிஸ் பண்ணு”, என்றதும், அவளும் தலை ஆட்டி கொண்டாள்.

பிள்ளைகளை பள்ளியின் வண்டியில் ஏற்றி விட்டு, இருவரும் ஒன்றாக காரில் கிளம்பினார்கள்.

அவளின் பள்ளி வந்ததும் அவள் இறங்க எத்தனிக்க, அவன் விட்டாள் தானே!

அவன் விட்டால் தானே!

“என்னங்க?”, என்று அவளின் கையை பிடித்து இருந்தவனை பார்த்து அவள் கேட்க, “எனக்கு ரொம்ப நாளா ஒரு ஆசை, கார்ல கிஸ் பண்ணனும்னு”, என்றானே பார்க்கலாம்!

“என்ன சொல்றிங்க? லூசா நீங்க?”, என்று பதறி விட்டாள்.

பின்னே பள்ளி வளாகத்தில் அதுவும் ஆசிரியர்கள்க்கு இருக்கும் பார்க்கிங்கில் இருந்து கொண்டு இப்படி கேட்டால் அவளும் தான் என்ன செய்வாள்!

“யாருமே இல்ல டி… இது டீச்சர்ஸ் பார்க்கிங் தானா?”, என்றதும், உண்மை தான் டீச்சர்ஸ் பார்க்கிங் அவர்களின் பள்ளியில் வேறு ஒரு மூலையில் தான் இருக்கிறது அதற்காக பள்ளியில் இப்படியா என்று தான் அவளின் யோசனை!

“இப்படி லூசு மாறி பேசுறத விட்டுட்டு இடத்தை காலி பண்ணுங்க”, என்று அவள் கார் கதவை திறக்க, அவனும் அவளை பிடித்து இழுத்து கன்னத்தில் முத்தம் கொடுக்க, அவளுக்கு தெரிந்த ஆசிரியர் ஒருவர், “யாரு இது? புது கார்ல”, என்று கிட்டே வந்து இந்த கண்கொள்ளா காட்சியை தான் பார்த்து விட்டார்.

இனியன் இப்படி ஒருவர் அவர்களை பார்ப்பது தெரிந்து சட்டென விலகி கொள்ள, “அறிவில்லையா உங்களுக்கு?”, என்று கனி அவளின் சிவந்த கன்னங்களை மறைத்து கொண்டு கேட்க, “என்ன கனி டீச்சர் ஒரே ரொமான்ஸ்சா?”, என்று கேட்டதும் தான் கனிக்கு தூக்கி வாரி போட்டது.

அவளுக்கோ நிலம் அப்படியே அவளை உள்வாங்கி கொண்டால் என்னவென்று தான் தோன்றியது!

இனியனுக்கு கூட தர்மம் சங்கடமான நிலை தான்.

கனி உடனே இறங்கி கொள்ள, இனியேனும் காரை எடுத்துக்கொண்டு சென்று விட்டான்.

அதற்கு பின் கேட்கவும் வேண்டுமா! எல்லா ஆசிரியர்களுக்கும் விடயம் காட்டு தீ போல் பரவ, அன்று கனியை ஒரு வழி ஆக்கி விட்டார்கள் அவளின் சக ஆசிரியர்கள்!

“கனி நீங்க கொடுத்து வச்சவங்க… உங்க புருஷன் இப்போ கூட ரொமான்ஸ் பன்றாரு… என் புருஷன்லாம் வேஸ்ட் தெரியுமா?”, என்று ஒரு ஆசிரியர் கூற, “அட நீங்களாச்சு இரண்டு பிள்ளை பெத்து இருக்கீங்க… எனக்குலாம் ஒரு வயசு குழந்தை தான்.. என் புருஷனுக்கு ரொமான்ஸ்க்கு ஸ்பெல்லிங் கூட இன்னைக்கு வரைக்கும் தெரியாது”, என்று அவர்களின் உரையாடலில் கனிக்கு தான் சங்கோஜமாகி போய் விட்டது.

அவளும் வீட்டுக்கு வர, பின்பு தான் இனியன் வீட்டிற்கு வந்தான்.

அவனோ அவளை கண்களாலேயே உள்ளே அழைக்க, அவளும் பின்னே சென்றாள்.

“என்ன நடந்துச்சு ஸ்கூல்ல?”, என்று அவன் கேட்டதும் தான் தாமதம், அதற்காகவே காத்து கொண்டிருந்தவள் போல் பொரிந்து தள்ள ஆரம்பித்து விட்டாள்.

“உங்களுக்கு கொஞ்சம் கூட அறிவில்ல… இன்னைக்கு எல்லாரும் என்ன தான் ஓட்டினாங்க..”, என்று அவர்கள் பேசியதை கூற, அவனோ அவனின் முத்து பற்கள் தெரிய சிரித்து, “நீ சந்தோஷ படணும்… உனக்கு எவளோ ரொமான்டிக் ஹாப்பி கிடைச்சிருக்காருனு”, என்று கண்சிமிட்டி கூறினான்.

“நீங்க இருக்கீங்களே.. “, என்று அவள் சொல்லிக்கொண்டே அறையை விட்டு செல்ல முற்பட்ட சமயம், “உங்கிட்ட ஒன்னு சொல்லணும் கனி…”, என்று சொன்னவன், விடயம் சொன்னதும், “முடியாதுனு சொல்லுங்க”, என்ற பதிலுக்கு, “ஏன் முடியாது?”, என்று ஒரு சேர கேட்டிருந்தனர் அவளின் மணிசெல்வங்கள்.

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.8 / 5. Vote count: 44

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!