18. செந்தமிழின் செங்கனியே!

4.9
(39)

செந்தமிழ் 18

 

அவர்களை பார்த்தவள், “ரொம்ப மட்டமா இருந்ததுதா? அப்படியே நிக்குறீங்க?”, என்றவுடன், அப்பாவும் மகனும் கைதட்டினார்.

“சான்ஸ் லேஸ் கனி, நீ இன்னைக்கு சொன்ன கொன்றை வேந்தன்லாம் யாருக்கும் நினைவு இருக்காது”, என்று இனியன் புகழ்ந்து தள்ள, “அம்மா சைடு கேப்ல அப்பா மாறி ஆளையும் கலைச்சிட்டீங்க தானே! வெள்ளையா இருக்கறவன் பொய் சொல்ல மாட்டான்னு..”, என்ற அச்யுதை நங் என்று கொட்டி இருந்தான் இனியன்.

“உனக்கு வாய் கூடிருச்சு டா”, என்று சொன்னவன், “நான் பொய் எடிட்டிங் பார்த்துட்டு, அப்படியே நல்ல சோங் போடறேன்”, என்று சொல்லவும், “நானும் உதவி செய்றேன் தந்தையே!”, என்று அவனின் பின்னே வால் போல் சென்றான் அச்யுத்!

அவளின் விடியோவை அப்பாவும் மகனும் யூட்யூபில் போடு விட்டு, “கனி உன்னோட பேஸ்பூக் ஐடிளையும் ஷேர் பண்ணலாம்”, என்று சொல்லிவிட்டு முகநூல் பக்கத்திலும் போட்டு விட்டனர்.

இனியனும் கூட அவனின் முகநூல், ட்விட்டர் என்று அதை பரப்பி விட்டான்!

அவர்களுக்கு வந்த முதல் கமெண்ட், “செம்ம சிஸ் சூப்பரா பேசுறீங்க… எனக்கு பிடிச்ச செய்யுள் நாலடியார்… அதை பத்தி ஒரு நாள் பேசுங்க”, என்றதை பார்த்ததும், துள்ளி குதித்தான் அச்யுத்!

வீடியோ போட்டு அன்றைய நாள் முடிவில், அவர்களுக்கு கிட்டத்தட்ட இருநூறு போல்லோவெர்ஸ் வந்து இருந்தார்கள்.

“என்ன வெறும் இருநூறு தான் இருக்கு”, என்று அச்யுத் அலுத்து கொள்ள, “பொறுமை கடலினும் பெரிது”, என்று இனியன் சொல்ல, “பாரேன் இப்போல்லாம் அப்பா கூட அம்மா மாறி தமிழ்லயே பதில் சொல்லறாரு”, என்று கயல் சொல்ல, “உன் அப்பாக்கே அம்மா தான் சொல்லி கொடுத்திருப்பா”, என்று பொன்னம்மாள் சொல்லவும் அனைவரும் சிரித்தனர்.

அடுத்த நாள் கயலின் நடன போட்டி இருக்க, அனைவரும் அவர்களின் பள்ளிக்கு சென்று இருந்தனர்.

இப்போது தான் அவளுக்கு ஐந்து நாட்கள் முடிவு அடைந்து இருந்தது!

“நல்லா பண்ணு கயல்”, என்று சொல்லிவிட்டு அவர்கள் சென்று அமர, அவர்களின் பக்கத்தில் வந்து அமர்ந்தது என்னவோ அன்று தமிழை பற்றி கேவலமாக பேசிய அதே ஜந்து தான்!

“என்ன மிஸ்டர் இனியன் இன்னைக்கு உங்க பொண்ணு என்ன பாட்டுக்கு ஆட போறா?”, என்று கேட்க, அவனும், “செந்தமிழ் நாடெனும் போதினிலே”, என்று சொல்ல, “என்ன மிஸ்டர் இனியன் தமிழ் பாட்டா?”, என்று கேட்டவன்னுக்கு தெரியாது அன்று இருந்த இனியன் வேறு இன்று இருக்கும் இனியன் வேறென்று!

“ஏன் தமிழ் பாட்டுனா என்ன இருக்கு? நீங்க தமிழ்ல தான பேசுறீங்க? வலிச்சா அம்மானு தான கத்துறிங்க? இல்ல மம்மி, மாதாஜினு கத்துறிங்களா?”, என்று அவன் கேட்க, அந்த நபருக்கோ ஆச்சரியம், இவர்கள் பேசிய அத்தனையும் கேட்டுக்கொண்டிருந்தாலும் அமைதியா இருந்தாள் கனி!

இன்று அவள் பேச அவசியம் இருக்க வில்லை அல்லவா!

அதான் அவளுக்கும் சேர்த்து இனியன் பேசுகிறானே!

அதே சமயம் அங்கு வந்த கயலின் வகுப்பாசிரியையோ, “மிஸ்டர் இனியன் நீங்க உண்மையாவே கிரேட்! பொண்ணு சடங்கான அஞ்சாவது நாளே அவளை டான்ஸ் காம்பெடிஷன் கூட்டிட்டு வந்து இருக்கீங்களே! சில பேறுலாம் பொண்ணு பெரியப்பொண்ணு அன்னதும் டான்சைய நிறுத்திராங்க… இதோ உங்க பிரென்ட் கூட அவங்க பொண்ண இப்போல்லாம் ஆட விடறது இல்ல… அவங்க பையன் தான் இன்னைக்கு ஆடுறான்”, என்று அவர் சொன்னார்.

இனியனோ புன்னகையுடன், “என்னோட பொண்டாட்டியும் நானும் பெண்ணியம் பேசுறவங்க.. அதுவும் எனக்கு பொன்னியின் செல்வன்ல வர  பூங்குழலி காதாபாத்திரம் ரொம்ப பிடிக்கும்.. என் பொண்ணு அவளோ தைரியசாலியா இருக்கணும்னு தான் நான் ஆசைப்படறேன்… சில பேறு மாறி நான் வெளிநாட்டு காரன் மாறி பசங்கள வலப்பேன்னு சொல்லிட்டு இப்படி அடிமை தனத்தன விரும்பல! முதல்ல எனக்கும் இந்த வெளிநாட்டு கலாச்சாரத்துல மேல ஈடுபாடு இருந்தது தான்… தேங்க்ஸ் டு மை வைப் எனக்கு நிதர்சனம் என்னனு காமிச்சிட்டாங்க”, என்று அவன் முடித்து இருதான்.

அந்த நபருக்கோ முகம் கருத்து விட்டது.

“மிஸ்ஸஸ் இனியன், கயலோட வாட்சப் ஸ்டேட்டஸ் பார்த்தேன்… செம்மயா பேசி இருந்திங்க… நானுமே உங்க யூட்யூப் சேனல் சப்ஸகிரைப்  பண்ணிருக்கேன்… என் புருஷன் கூட பார்க்கிறார்.. எனக்கு சிவபுராணம் ரொம்ப பிடிக்கும்.. அதையும் உங்க சேனல்ல பேசுங்க”, என்று சொல்லி விட்டு சென்று விட்டார்.

“அம்மா ஒரே நாள்ல செலிபிரிட்டி ஆகிட்டாங்க”, என்று அச்யுத் சொல்லிக்கொண்டே, அவளின் சேனல் பார்க்க, இப்போது ஐநூறு நபர்கள் இருந்தார்கள்..

அதிலும் நிறைய கமெண்ட்ஸ் மலேஷியா, சிங்கப்பூர், ஆஸ்திரேலியா, துபாய் என்று வெளிநாட்டு தமிழர்கள் தான் அதிகம்!

“அம்மா நிறைய வெளிநாட்ல இருக்கவங்க தான் மா கமெண்ட் பண்ணிருக்காங்க”, என்று உற்சாகத்துடன் அவன் கூற, “ஏனா அவங்களுக்கு தான் மொழிப்பற்று அதிகம் இருக்கும்… ஊர் விட்டு ஊர் போனதுக்கு பிறகு யாராச்சு ஒருத்தர் நம்ப மொழில நம்ப கிட்ட பேச மாட்டாங்களானு தான் எல்லாரும் ஏங்குவாங்க”, என்றவளை பார்த்து, “உண்மை தான் மொழி மட்டும் இல்ல நம்ப உணவுக்கும்… இட்லி தோசைக்கு எல்லாம் நம்ப சலிச்சிக்கிறோம்.. ஆனா வெளிய போனதும்.. எப்போடா இட்லி தோசை சாப்பிடுவோம்னு தான் நிறைய ஏங்குவாங்க”, என்று சொன்னான் இனியன்.

அடுத்து கயலின் நடனமும் ஆரம்பம் ஆனது!

அத்தனை ரம்யமாக ஆடினாள். எல்லா முக பாவமும், முத்திரையும் சரியாக பிடித்து தாளத்திற்கு ஏற்ப மயிலை போல் தான் ஆடினாள்.

அதற்கு மூன்றாம் பரிசும் கிடைத்தது.

“செம்மயா ஆடுன அக்கா..”, என்ற அச்யுத்தை கயலும் கட்டி அணைத்து விடுவித்தாள்.

“அம்மா என் பிரண்ட்ஸ்லாம் உங்கள பாராட்டி தள்ளிட்டாங்க”, என்று கயலும் உற்சாகமாக சொல்ல, “இன்னைக்கு என்ன கன்டென்ட்?”, என்று இனியன் கேட்க, “நம்ப முதல் கமெண்ட் கேட்ட மாறி நாலடியார் போடலாம்”, என்று சொன்னதும், “அம்மா கிட்ட நிறைய ஸ்டாக் இருக்கு அப்பா”, என்று அச்யுத் சொல்ல, கனியோ தலை ஆட்டி கொண்டாள்.

இன்று கயலும் அவர்களுடன் வீடியோ எடுக்க அமர்ந்திருந்தாள்!

கனியும் அவளின் பேச்சை ஆரம்பித்தாள்.

“இன்னைக்கு நம்ப பார்க்க போறது என்னோட முதல் கமெண்ட் பண்ண நபர் கேட்ட மாரி நாலடியார் தான்!

இந்த காலத்து பசங்களுக்கு தினமும் இருக்க பிரச்சனை என்ன தெரியுமா? யாரை நான் பிரென்ட்டா வச்சிக்கலாம் யாரை பிரண்டா வச்சிக்க வேண்டாம்!

இத தான் நாலடியார் அப்பவே சொல்லுது,

நுண்ணுணர்வி னாரோடு கூடி நுகர்வுடைமை

விண்ணுலகே யொக்கும் விழைவிற்றால் – நுண்ணூல்

உணர்வில ராகிய ஊதிய மில்லார்ப்

புணர்தல் நிரயத்துள் ஒன்று.

இந்த பாடலோடு அர்த்தம் என்ன தெரியுமா? நுட்பமான அறிவு வச்சிக்கவங்களோட நட்பு விண்ணுலகத்துல சொர்க்கத்துல இருக்கறதுக்கு சமம், அதே மாறி தீயவர்களோட நட்பா இருக்கறது நரகத்துல இருக்கறதுக்கு சமம்!

நீங்க கேட்கலாம் எப்படி நல்லவங்க தீயவங்கனு சொல்றதுன்னு! உங்க பிரென்ட் பரிட்சைல கோப்பி அடிக்கிறானு வச்சிக்கோங்க.. அது தப்புனு நீங்க சொல்லியும் கேட்கலானா அப்போ அவன் நல்லவனா கெட்டவனா?

இதே மாதிரி தான் நீங்களும் நல்லவங்க கெட்டவங்க கண்டு பிடிக்கணும்!

நாளைக்கு வேறு ஒரு செய்யுளில் காண்போம்!”, என்று அவள் முடிக்க, “அம்மா எங்க இருந்து இப்படி எல்லாம் யோசிக்கிறீங்க?”, என்று கயல் கேட்க, “நீங்க தமிழை படிக்கிறிங்க… உங்க அம்மா தமிழை சுவாசிக்கிறா”, என்று சொன்னான் இனியன்!

“சுயசிக்க மட்டும் இல்ல தமிழை நேசிக்கிறேன் இனியன்! அதான் உங்கள கல்யாணம் பண்ணிருக்கேன்”, என்று கண்சிமிட்டி சொல்லவும், “அப்பா உங்க பேறு மட்டும் தமிழினியன்னு இல்லாம இருந்த அம்மா உங்கள அப்பவே ரிஜெக்ட் பன்னிருப்பாங்க”, என்று அச்யுத் சொல்ல, “ஆமா டா அதனால தான் அவ கிட்ட மாட்டிகிட்டேன்”, என்று சொல்லவும், இரு பிள்ளைகளும் சிரித்தனர்.

இப்படியாக அவர்கள் நாட்கள் செல்ல, அவர்களின் யூட்யூப் சேனலிற்கும் நல்ல வரவேற்பு தான்!

ஒரு நாள் இனியனின் எம்டி ஆஸ்திரேலியாவில் இருந்து வர இருப்பதாக கூற, அன்று இரவு அனைவருக்கும் பார்ட்டி ஏற்பாடு செய்ய பட்டு இருந்தது!

பிள்ளைகளையும் கூட அழைத்து கொண்டு சென்று இருந்தார்கள்!

பொன்னம்மாள் வரவில்லை என்று மறுத்து விட்டார்!

இன்றும் மேகனா இருக்க, அவளை எல்லாம் பொருட்டாக கூட சட்டை செய்ய வில்லை கனி!

இப்போது அவர்களின் யூட்யூப் சேனலில் கிட்டத்தட்ட பத்தாயிரம் பேர் இருந்தனர்!

மிசஸ் சுரேஷ் தான் வந்து பேசினார்!

“கனி நீ செலிபிரிட்டி ஆகிட்ட போல, என் பசங்க கூட உன் சேனல் பாக்குறாங்க”, என்று சொல்ல, அவளும் புன்னகைத்தார்.

இனியனின் எம்டி வந்து, “நீங்க தான மிசஸ் இனியன் வைப்”, என்று கேட்க, அதற்கு ஆமோதிப்பாக தலை அசைக்கவும் , “உங்க கிட்ட தான் பேசணும்னு நினைச்சேன்”, என்று சொல்லி அருகில் இருந்த நாற்காலியில் அமர்ந்தவர், அடுத்து சொன்ன விஷயத்தில் மயக்கமே வராத குறை தான்!

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.9 / 5. Vote count: 39

No votes so far! Be the first to rate this post.

1 thought on “18. செந்தமிழின் செங்கனியே!”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!