தன்முன்னே தன்னைப் பார்த்தவாறு அமர்ந்திருந்தவனை இப்போது அச்சமின்றி விழிகள் உயர்த்திப் பார்த்தாள் வைதேகி.
அவள் தன்னைப் பார்த்ததும் மீண்டும் புன்னகையை அவளுக்குப் பதிலாகக் கொடுத்தான் சாஷ்வதன்.
மீண்டும் தலையை குனிந்து கொண்டாள் அவள்.
“போதும் என்னையும் தரையையும் மாறி மாறிப் பார்த்தே உனக்கு கழுத்து வலிக்கப் போகுது வைதேகி..” என அவன் சிறு கேலியோடு கூற அவனுடைய இலகுவான கேலியில் அவளுக்கும் புன்னகை பூத்தது.
தன் தயக்கத்தை உதறிவிட்டு அவனுடைய முகத்தைப் பார்த்தவள்,
“உங்களப் பத்தி எனக்கு எதுவுமே தெரியாது… திடீர்னு கல்யாணம் நடந்து முடிஞ்சதால கொஞ்சம் பதட்டமா இருந்துச்சு. அதுதான் இவ்வளவு தடுமாற்றம்..” என்றாள் அவள்.
“புரியுது.. கல்யாணத்துக்கு முன்னாடி நமக்கு பேசிப் பழக வாய்ப்பு கிடைக்கல.. ஆனா இப்போ நாம பழகுறதுக்கு நிறைய சான்சஸ் இருக்கு… இதுக்கப்புறமா ஒருத்தரை ஒருத்தர் நல்லாவே தெரிஞ்சிக்கலாம்.. புரிஞ்சுக்கலாம்..” என்றான் அவன்.
“தேங்க்ஸ் எனக்கு கொஞ்சம் டைம் வேணும்.. நான் சொல்றேன்னு தப்பா எடுத்துக்காதீங்க.. முதல்ல நல்ல பிரண்ட்ஸாகி அதுக்கப்புறம் ஹஸ்பண்ட் அண்ட் வைஃபா நம்ம வாழ்க்கையைத் தொடங்கலாமே..” என அவள் திணறியவாறு கூற,
அவனும் மறுக்காது அவளுடைய கூற்றை ஆமோதித்தான்.
“உண்மைய சொல்லணும்னா எனக்கு அரேஞ்ச் மேரேஜ்ல கொஞ்சம் கூட இஷ்டம் கிடையாது.. என்ன நல்லா புரிஞ்சுகிட்டு ஒரு ப்ரண்ட லவ் பண்ணி கல்யாணம் பண்ணிக்கணும்னுதான் ஆசைப்பட்டேன்.. பட் என்னோட பிஸ்னஸ் அதுக்கு இடம் கொடுக்கவே இல்ல.. எப்போ பார்த்தாலும் வொர்க் வொர்க்னு பிஸியாவே இருக்கிறதால ப்ரண்ட்ஸ் சர்க்கிளே எனக்கு ரொம்ப கம்மிதான்.
இதுக்கு அப்புறம் எப்போ ஃப்ரெண்ட்ஸ கண்டுபிடிச்சு அதுல நல்ல பொண்ணா தேடி, லவ் பண்ணி கல்யாணம் பண்றதுக்குள்ள எனக்கு 60 வயசு ஆயிடும்.. அதனாலதான் வீட்ல பாக்குற பொண்ணையே கல்யாணம் பண்ணிக்கலாம்னு முடிவு பண்ணிட்டேன்…
இந்தக் கல்யாணம் கூட இவ்வளவு அவசரமா நடந்ததுக்கான காரணம் என்னன்னா இன்னும் மூணு மாசத்துல நான் மலேசியா போயாகணும். நம்ம பிஸ்னஸோட புது பிரான்ச் அங்க ஓபன் பண்ணலாம்னு இருக்கோம்.. அங்க போனா பிஸ்னஸ் செட் ஆகும் வரைக்கும் நான் அங்கதான் இருந்தாகணும்…
அதனாலதான் நான் அங்க பிரான்ச் ஓபன் பண்ணிட்டா இந்தியா பக்கமே வர மாட்டேனோன்னு பயந்து ரொம்ப அவசரமா கல்யாணத்தை நடத்தி முடிச்சிட்டாங்க..” என தன்னுடைய வீட்டார் கல்யாணத்தை மிக விரைவாக நடத்தியமைக்கான காரணத்தை அவளுக்கு விளக்கமாகக் கூறினான் அவன்.
“ஓஹோ அப்போ இங்க இருக்க மாட்டீங்களா..? மலேசியா போயிடுவீங்களா..?”
“ஹலோ வைதேகி மேடம்.. என்ன மலேசியா போயிடுவீங்களான்னு கேக்குறீங்க..? நாம ரெண்டு பேரும்தான் போகப் போறோம்.. புரிஞ்சுதா..?” என அவன் கேட்க,
“சரிதான்..” என சிரித்தாள் அவள்.
“ஹாங்.. நான் சொல்ல வந்ததை பாதியிலேயே விட்டுட்டேனே.. ஃப்ரெண்ட்டை கல்யாணம் பண்ணிக்கணும்னு ஆசைப்பட்ட எனக்கு அதுக்கு டைம் கிடைக்கல.. சோ கிடைச்ச மனைவிய ப்ரண்டா மாத்தி நல்லா புரிஞ்சுக்கலாம்னு முடிவு பண்ணிருக்கேன்.. நீயும் டைம் கேட்டதால நல்லதா போச்சு.. அப்போ நம்ம ப்ரண்ட்ஸ் ஆகிக்கலாமா..?” எனக் கேட்டவாறு அவளை நோக்கி அவன் தன்னுடைய கரத்தை நீட்ட,
“ஹலோ நீங்க கேட்டதும் நான் ப்ரண்டாகிடணுமா..? என்னோட ஃப்ரெண்ட்ஷிப்லாம் அவ்ளோ சீக்கிரமா கிடைச்சிடாது.. உங்களை வெயிட்டிங் லிஸ்ட்ல வைக்கிறேன்.. பிடிச்சிருந்தா ப்ரண்டா இருக்கலாம்..” என தலை சாய்த்து அவள் கூற சிரித்து விட்டான் அவன்.
“அப்படிங்களா மேடம்..? சரிதான் நான் வெயிட்டிங் லிஸ்ட்ல நின்னு வெயிட் பண்ணி பிரண்டாகிக்கிறேன்.. நோ ப்ராப்ளம்.”
“ஹா ஹா..” என மனம் விட்டுச் சிரித்தாள் வைதேகி.
அவனுடன் பேசிய சில நிமிடங்களிலேயே அவளுடைய அச்சம் தயக்கம் பதற்றம் அனைத்தும் காற்றில் கரைந்து காணாமற் போயிருந்தது.
தன்னைப் போலவே அவனும் சிந்திக்கின்றான் என்ற எண்ணமே அவளுக்குள் புத்துணர்ச்சியை உருவாக்கியது.
“ஓகே வைதேகி.. நீ போய் ட்ரஸ் சேஞ்ச் பண்ணிக்கோ.. இன்னும் எவ்வளவு நேரம்தான் இந்த புடவையோடயே இருக்கப் போற..?” என அவன் அக்கறையாகக் கேட்க அவன் ஒவ்வொரு முறையும் அவளை வைதேகி என அழைக்கும் போது அவனுடைய உச்சரிப்பில் தன்னுடைய பெயர் அழகாகியதைப் போல உணர்ந்தாள் அவள்.
“எங்க வீட்ல என்ன வைஷுன்னுதான் கூப்பிடுவாங்க.. சில பேர் தேகின்னு என்னை கூப்பிடுவாங்க.. நீங்க மட்டும்தான் வைதேகின்னு முழுப் பெயர் சொல்லி கூப்பிடுறீங்க…”
“எனக்கு உன்னோட பெயர் ரொம்ப பிடிச்சிருக்கு.. சீதாவோட இன்னொரு பெயர்தான் வைதேகி. என்னோட பேர் கூட ராமனோட இன்னொரு பெயர் தான்..”
“வாட் சாஷ்வதன்னா ராமனா..?”
“ம்ம் சாஷ்வதான்னு ராமனுக்கு இன்னொரு பெயர் இருக்கு..”
“வாவ் நம்ம ரெண்டு பேரோட பேரும் எப்படிப் பொருந்தி இருக்கு பாத்தீங்களா..?” என அவள் மகிழ்ச்சியோடு கூற ஆமோதிப்பாக தலையசைத்தான் அவன்.
“ஓகே நீங்க தூங்குங்க.. ட்ரஸ் சேஞ்ச் பண்ணிட்டு நானும் தூங்குறேன்…” என்றவள் ஆடை மாற்றும் அறைக்குள் சென்றுவிட அவனுக்கோ அவளை மிகவும் பிடித்திருந்தது.
அவளுடைய அச்சம் பதற்றம் அவள் தன்னைக் கண்டதும் தலையை தாழ்த்திய விதம், தான் அருகே சென்றதும் நடுங்கிப் பதறிய விதம் அனைத்திலும் ரசனைப் பார்வையை பறக்க விட்டிருந்தான் அவன்.
வைதேகியோடு தன்னுடைய வாழ்க்கை நிச்சயமாக நன்றாக இருக்கும் என்ற நம்பிக்கை அவனுக்குள் உதயமாகிவிட படுக்கையில் சென்று படுத்துக் கொண்டவன் தூங்காமல் அவள் வருவதற்காக காத்திருந்தான்.
உள்ளே சென்று ஆடையை மாற்றியவள் நைட்டியுடன் வெளியே வர சற்றே தயங்கினாள்.
பின் இனி இங்கேதானே இருந்தாக வேண்டும் என்ற பெருமூச்சோடு வெளியே வந்தவள் படுக்கையில் படுத்திருந்தவனை சற்றே தயக்கத்தோடு பார்க்க,
அவனுடைய பார்வையோ அவள் மீது ஒரு கணம் அழுத்தமாக ஆழ்ந்து படிந்தது.
பின் தன் பார்வையை மாற்றிக் கொண்டவன் வா என அவளை அழைத்து தன் அருகே இருந்த இடத்தை சுட்டிக்காட்ட,
“இல்ல நான் சோபாலையே படுத்துக்கிறேன்..” என்றாள் அவள்.
“ஓஹ் கமான் வைதேகி.. இவ்வளவு பெரிய பெட் இருக்கும்போது நீ எதுக்காக சோபால படுக்கணும்..? என்னதான் நீயும் நானும் டைம் கேட்டுருந்தாலும் கூட ஸ்டில் ஐ அம் யுவர் ஹஸ்பெண்ட்.. எப்ப வேணும்னாலும் நாம ஒருத்தர பத்தி ஒருத்தர் புரிஞ்சுக்கலாம்.. அப்புறம் ஒன்னா ஒரே படுக்கைல தூங்கத்தானே போறோம்..
சோ யாரோ மாதிரி விலகி இருக்கணும்னு எந்த அவசியமும் கிடையாது.. நீ இதிலயே படுத்துத் தூங்கு..” என அவள் மறுக்க முடியாத அழுத்தமான குரலில் அவன் கூறி விட சரி என்றாள் அவள்.
அவள் அஞ்சியது போல இப்போது எதுவும் நடக்காது எனத் தெரிந்து இருந்தும் புதிதாக ஒரு ஆணுக்கு அருகே உறங்கப் போவதை நினைத்து அவளுக்கு சற்று படபடப்பாக இருந்தது.
வெகு சிரமப்பட்டு தன்னுடைய படபடப்பை அவனுக்குத் தெரியாது மறைத்துக் கொண்டவள் புன்னகைத்தவாறே வந்து அவனுக்கு அருகே இருந்த இடத்தில் சற்று தள்ளிப் படுத்துக் கொண்டாள்.
அவளோடு இலகுவாக பேசியிருந்தாலும் கூட அவள் அருகே வந்து படுத்ததும் அவளுடைய உடலில் எழுந்த நறுமணம் அவனைத் தடுமாறச் செய்தது.
அழகே உருவான ஒருத்தி தன்னுடைய தாலியை சுமந்தவாறு தன் மனைவியாக தனக்கு அருகே படுத்திருக்கும் போது எந்த ஆண்மகனாக இருந்தாலும் உள்ளம் தடுமாறத்தானே செய்யும்.
அவசரப்பட்டு வார்த்தையை விட்டு விட்டோமோ..? இவளின் அருகே கட்டுப்பாடாக இருப்பதே கடினம் போல இருக்கின்றதே.. என மனதிற்குள் புலம்பியவன் மெல்ல அவள் புறம் திரும்பிப் படுத்துக் கொண்டான்.
அதே கணம் அவளுடைய பார்வையும் அவனை நோக்கித் திரும்ப இருவருடைய பார்வையும் ஒன்றோடு ஒன்று கலந்து தடுமாறி பின் தயங்கி விலகியது.
அவ்ளோ “குட் நைட்..” என வேகமாக மொழிந்துவிட்டு போர்வையை இழுத்து தலைவரை மூடிக்கொண்டு மறுபக்கம் திரும்பிப் படுத்து விட சட்டென வந்த சிரிப்பை அடக்கிக் கொண்டான் சாஷ்வதன்.
“குட் நைட் வைதேகி..” என தானும் அவளுக்கு பதில் கூறியவன் சற்று நேரத்தில் உறங்கிவிட அவனுடைய குறட்டைச் சத்தம் அவளுடைய காதுகளை வந்தடைந்த பின்னரே தலைவரை போர்த்தி இருந்த போர்வையை விளக்கியவள் அவன் தூங்கி விட்டான் என்பதை உறுதி செய்தாள்.
சாஷ்வதனின் குணம் அவளுக்கு மிகவும் பிடித்திருந்தது.
இன்று நடந்த அனைத்தையும் நினைத்தவாறே படுத்திருந்தவள் சற்று நேரத்திலே ஆழ்ந்த உறக்கத்திற்கு சென்றிருந்தாள்.
அடுத்த நாள் காலையில் தூக்கம் நீங்கி எழுந்து கொண்டவள் அருகே அவன் இல்லை என்றதும் நேரத்தைப் பார்த்தாள்.
நேரமோ காலை ஒன்பது எனக் காட்ட அவளுக்கோ தூக்கி வாரிப் போட்டது.
“ஐயோ இவ்வளவு நேரமா தூங்கிட்டேனா..? எப்பவுமே ஆறு மணிக்கு எந்திரிச்சிடுவேனே..! இன்னைக்கு ஏன் இப்படி..?” எனப் பதறியவாறு படுக்கையில் இருந்து எழ முயன்றவளின் உதடுகள் காந்துவதைப் போல இருக்க திகைத்துப் போனாள் அவள்.
தன்னுடைய உதடுகளை வருடிப் பார்த்தவளுக்கு எதுவுமே புரியவில்லை.
குழப்பத்தோடு படுக்கையில் இருந்து எழ முயன்றவள் மீண்டும் திகைத்தாள்.
அவளுடைய உடலிலும் சில இடங்களில் வலிப்பது போல இருக்க அவளுக்கோ அதிர்ச்சியாக இருந்தது.
தன்னைக் குனிந்து பார்த்தவளுக்கு தன் உடலில் வித்தியாசமாக எதுவும் தெரியவில்லை.
ஆனால் ஏன் இந்த வலி..?
தாங்க முடியாத அளவிற்கு அதீத வலி இல்லை என்றாலும் கூட மெலிதாக சில இடங்களில் வலி தெரிய புரியாது குழம்பிப் போனவள் தன்னுடைய தலையில் கரத்தை வைத்தவாறு அப்படியே அமர்ந்து விட்டாள்.
Super epiii intresting……….
Last la twist vaikuringa… interesting
Enna attchhu