அகமித்ரா ஸ்கூல் வேலையை செய்து கொண்டு இருக்கும் போது புது நம்பரில் இருந்து கால் வர முதல் தடவை எடுக்கவில்லை. இரண்டாவது தடவை கால் வர அதை எடுத்தாள்.
“ஹலோ யாரு…?”
“ஹாய் அகமித்ரா நான் ரித்தேஷ்…”
“சொல்லுங்க சார் நீங்க எதுக்காக இந்த டைம்ல கால் பண்ணியிருக்கிறீங்க…?” என்று கேட்டாள். அதற்கு அவன், “அகமித்ரா நீங்க எதுக்கு என்னை சார்னு சொல்லிட்டு இருக்கிறீங்க….? ஜஸ்ட் கால் மீ ரித்தேஷ்…”
“சாரி சார்… நீங்க நான் வேலை பார்க்கிற ஸ்கூலோட கரஸ்பாண்டன்ட். உங்களை மரியாதை இல்லாமல் பேச முடியாது… இப்போ எதுக்கு கால் பண்ணீங்கனு தெரிஞ்சிக்கலாமா….?”
“இன்னைக்கு ஸ்கூல் வரலையா அதுதான் என்ன நடந்ததுனு கேட்க கால் பண்ணேன்…. ஏன் நான் உங்களுக்கு கால் பண்ணக்கூடாதா…?”
“சார் ஸ்கூல்ல என்ன நடந்ததுனு நாளைக்கு வந்து யார்கிட்ட வேணும்னாலும் கேளுங்க… எனக்கு சும்மா சும்மா கால் பண்ணாதீங்க நான் போனை வைக்கிறன்….” என்றவள், ரித்தேஷ் என்ன சொல்ல வருகிறான் என்று கேட்காமலே போனை வைத்து விட்டாள் அகமித்ரா. ரித்தேஷிற்கு கோபம் வந்தது. அந்த கோபத்தை அருகில் இருந்த பூச்சாடியின் மீது காட்டினான்.
தேவசூரனின் ஆட்கள் அவன் காட்டிய போட்டோவில் இருந்தவர்களை கண்காணிக்கும் தமது வேலையை ஆரம்பித்துவிட்டனர். காலையில் தேவசூரன் எழுந்ததில் இருந்து அவனுக்கு அப்டேட் வந்து வந்து கொண்டே இருந்தது. அதைப் பார்த்து கொண்டே கப்போர்ட்டைத் திறந்து உள்ளே இருந்த ஷர்ட் ஒன்றை எடுத்து போட்டுக் கொண்டான். கண்ணாடியில் தலைசீவும் போது தான் அணிந்திருந்த ஷர்ட்டை பார்த்தவனுக்கு கோபம் வந்தது. உடனே அந்த ஷர்ட்டை கழற்றி கப்போர்ட்டில் வைத்து விட்டு, வேறொன்றை அணிந்து கொண்டு வெளியே சென்றான்.
அகமித்ரா வழமைபோல வீட்டு வேலைகளை முடித்து விட்டு, மல்லிகாவிடம் வாங்கிய பூவை தலையில் வைத்துக் கொண்டாள். பின்னர் கதவை பூட்டி விட்டு ஸ்கூலுக்கு போகும் வழியில் ஒருவன் ஓடிக் கொண்டு இருந்தான். அவனை துரத்திக் கொண்டு ஓடினார்கள். அகமித்ராவை நோக்கி ஓடி வந்தவன் அவள் எதிர்பாராத நேரம், சட்டென்று அவளது கையைப் பிடித்து இழுத்து கழுத்தில் கத்தியை வைத்தான். அவளுக்கு உடல் வியர்த்தது. இவனை துரத்திக் கொண்டு வந்த போலீஸாரைப் பார்த்து, “இங்க பாருங்க சார் மரியாதையா போயிடுங்க…. இல்லைன்னா இந்த பொண்ணோட கழுத்தை அறுத்திடுவன்….” என்றான். அவன் சொல்வதைக் கேட்காமல் இன்ஸ்பெக்டர் ரகு முன்னேற, அவரின் அருகில் நின்றிருந்த கான்ஸ்டபிள் ஒருவர், “சார் இவன் பெரிய தீவிரவாதின்னு சொன்னதை மறந்திட்டீங்களா சார்… கிட்டப் போக வேண்டாம் சார்… அந்தப் பொண்ணை ஏதாவது பண்ணிட்டா பிரச்சனை சார்….” என்றார்.
அகமித்ரா போலீஸிடம், “சார் காப்பாத்துங்க….” என்று சத்தம் போட்டாள். அவனை நெருங்கினால் அகமித்ராவின் கழுத்தை அறுத்து விடுவானோ என்று பயந்து, அவர்கள் என்ன செய்வது என்று தெரியாமல் நின்றனர். அதே நேரத்தில் தனது ஜீப்பில் அந்த வழியாக சென்று கொண்டிருந்தான் தேவசூரன். அவனது கண்களில் இங்கே நடப்பது தெரிய, ஜீப்பை நிறுத்தி விட்டு அங்கே நடப்பதை வேடிக்கை பார்க்கத் தொடங்கினான்.
தேவசூரனின் ஜீப் சத்தத்தை கேட்ட அகமித்ரா மெல்லத் திரும்பி அவனைப் பார்த்தாள். அவனோ ஜீப்பின் கதவை திறந்து வைத்துக் கொண்டு, ஸ்டைலாக ஒரு காலை அந்த கதவில் வைத்து, வலது கையில் சிகரெட்டை வாயிலும் கையிலும் மாற்றி மாற்றி வைத்துக் கொண்டு இருந்தான். அகமித்ரா அவனையே பார்த்துக் கொண்டு இருந்தாள். அங்கே நிறைய பேர் கூடி நின்று வேடிக்கை பார்த்தனரே அன்றி அவளை காப்பாற்ற யாரும் முன்வரவில்லை.
சிறிது நேரம் நடப்பதை பார்த்துக் கொண்டு இருந்த தேவசூரன், தனது துப்பாக்கியை எடுத்து அந்த தீவிரவாதியைப் பார்த்து குறி வைத்தான். அதைப் பார்த்த அகமித்ராவின் விழிகள் பிதுங்கியது.
‘என்னடா இது இவன் பொசுக்குனு துப்பாக்கியை எடுத்திட்டான்… அடேய் என்னடா பண்றீங்க… இவன் என்னனா என் கழுத்தில கத்தியை வச்சிருக்கிறான்… அவன் என்னனா துப்பாக்கியை எடுத்து குறி வைக்கிறான்…. கடவுளே எப்படியாவது என்னை காப்பாற்று….’ என்று மனசுக்குள் பேசியவள் பார்வை மட்டும் தேவசூரனை விட்டு விலகவில்லை. அவனும் அவளையே பார்த்துக் கொண்டு இருந்தான். பின்னர் விழிகளை இமை மூடித் திறக்க, அகமித்ரா சட்டென்று குனிந்தாள். தேவசூரன் வைத்த குறி சிறிதும் தப்பவில்லை. தீவிரவாதியின் நெற்றியை துளைத்துச் சென்றது புல்லட். அங்கே ஒரு நிமிடம் என்ன நடந்தது என்று யாருக்கும் தெரியாது. தேவசூரன் அகமித்ராவை பார்த்து விட்டு, ஜீப்பில் ஏறி சென்று விட்டான். அகமித்ராவிற்கு நடுக்கம் குறையவில்லை. போலீஸார் ஓடி வந்தனர். கீழே கிடந்த தீவிரவாதியை பார்க்க, அவன் உயிர் எப்போதோ விடை பெற்று சென்றிருந்தது. அகமித்ராவிடம், “இங்க இருந்து போயிடுமா….” என்றனர். அவளும் தன்னை சரிபடுத்திக் கொண்டு அங்கிருந்து சென்றாள்.
ஸ்கூலுக்குச் சென்றவள் தனது வரவினைப் பதிந்து கையொப்பம் போட்டுவிட்டு, அங்கிருந்த பெரிய மாமரத்தின் கீழே சீமெந்தினால் கட்டப்பட இருக்கையில் அமர்ந்தாள். காலையில் நடந்ததையே யோசித்துக் கொண்டே இருந்தாள். ‘கொஞ்சம் குறி தவறி இருந்தாலும் என்னோட உயிர் போயிருக்கும்… இன்னைக்கு எல்லாமே தப்புத் தப்பா நடக்குது….’ என்று யோசித்துக் கொண்டே இருந்தவள் அருகே வந்து நின்றது ஒரு உருவம். திரும்பிப் பார்க்க அமிர்தா நின்றிருந்தாள்.
“என்ன மித்து இங்க வந்து உட்கார்ந்து இருக்க….?”
“அமிர்தா இன்னைக்கு நான் ஸ்கூல் வரும் போது என்ன நடந்திச்சினு உனக்குத் தெரியுமா…?” என்றவள் தீவிரவாதி கழுத்தில் கத்தியை வைத்தது முதல் தேவசூரன் தீவிரவாதியை சுட்டுக் கொன்றது வரை சொன்னாள்.
“என்ன மித்து சொல்ற… உனக்கு ஒண்ணுமில்லைதானே…”
“இல்லை அமிர்தா… நான் நல்லா தான் இருக்கிறேன்…..”
“நல்லவேளை உனக்கு எதுவும் நடக்கல… தேவதேவசூரன் சார் மட்டும் டைமுக்கு வரலனா என்ன நடந்திருக்கும்னு நினைச்சிப் பார்க்கவே பயமா இருக்கு….”
“ஆமாடி நான் வேற சரி இன்னையோட நம்ம கதை முடிஞ்சிடும்னு நினைச்சிப் பயந்திட்டேன்….”
“உன்னோட நல்ல மனசுக்கு உனக்கு எதுவும் நடக்காது மித்து… சரி அதையே யோசிச்சிட்டு இருக்காம வா போலாம்…” என்று மித்ராவுடன் பேசிய அவள் மனநிலையை மாற்றி அழைத்து வந்தாள் அமிர்தா.
இப்படியாக அன்றைய ஸ்கூல் முடிவடையும் நிலையில் ரித்தேஷ் அகமித்ராவை கரஸ்பாண்டன்ட் அறைக்குள் அழைத்தான். அகமித்ராவும் ஸ்கூல் சம்மந்தமாக இருக்கும் என்று நினைத்து வந்தாள்.
“ஸ்கூல் விஷயம்னா தாராளமாக பேசலாம் சார்…” என்றவள் உட்காரவே இல்லை. அதைப் பார்த்த ரித்தேஷிற்கு கோபம் வந்தாலும் அதை வெளிக்காட்டாமல், “மித்ரா நான் பேசப் போறது ஸ்கூல் விஷயம் இல்லை கொஞ்சம் பெர்சனல்…” என்றான். அதற்கு அகமித்ரா அவனிடம், “சாரி சார் நாம ரெண்டு பேரும் பெர்சனலா பேச எதுவும் இல்லை….” என்றவள் அங செல்ல முயன்றவளை தடுத்து நிறுத்தினான் ரித்தேஷ்.
“மித்ரா ப்ளீஸ்… ஒரு அரை மணி நேரம்.. இல்லை ஒரு பத்து நிமிடம் உங்ககூட பேசணும் ப்ளீஸ்… இங்க வேண்டாம்… பக்கத்தில இருக்கிற ஹோட்டலுக்கு போய் பேசலாம்… இதுக்கு அப்புறம் உங்களை தொல்லை பண்ணமாட்டேன்….” என்றான். அகமித்ராவும் ‘எப்படியோ இவன் தொல்லை விட்டால் சரி… இவனோட பார்வையும் சரியில்லை… ஏதாவது ஏடாகூடமாக பேசினால் வேலையை விட்டுட்டு போயிடலாம்…’ என்று மனசுக்குள் நினைத்துக் கொண்டு வெளியே, “சரி சார் நான் வர்றேன்… ஆனால் இதுக்கு அப்புறம் என்னை தொல்லை பண்ணக் கூடாது….” என்றாள். அவனும், “கண்டிப்பா மித்ரா… இதுக்கு அப்புறம் உங்களை தொல்லை பண்ணமாட்டேன்… ப்ளீஸ் வாங்க…” என்றவன் ஹோட்டலின் பெயரையும் டைம்மையும் சொன்னான். சரி என்று சொல்லிவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டாள்.
‘வாடி வா… இன்னைக்கு இருக்கு உனக்கு….’ என்றவன் தனது போனை எடுத்து, மறுபக்கத்தில் பேசுபவனிடம் அவன் செய்ய வேண்டிய வேலையைப் பற்றி சொல்லிவிட்டுச் சென்றான்.
மாலை நான்கு மணியளவில் ****என்ற ஹோட்டல் வரவேற்பில் ரிசர்வ் செய்திருந்த மேசையில் அமர்ந்து ரித்தேஷிற்காக காத்திருந்தாள் அகமித்ரா. ரித்தேஷ் ஹோட்டலின் உள்ளே வந்து மித்ராவைப் பார்க்க அவள் அமர்ந்திருப்பது தெரிந்தது. பின்னர் அந்த மேசைக்கு வந்து அகமித்ராவின் முன்னால் இருந்தான்.
“சொல்லுங்க சார் நீங்க என்ன பேசணும்….” என்று நேரடியாக விஷயத்திற்கு வந்தாள் அகமித்ரா. அதற்கு ரித்தேஷ், “இருங்க மித்ரா சொல்றன்… இப்போதானே வந்திருக்கிறன் ஒரு கூல்டிரிங்ஸ் குடிக்கலாம்….” என்றவன் வெயிட்டரை அழைத்து கூல்டிரிங்ஸ்ஸிற்கு சொல்ல, அவனும் சிறிது நேரத்தில் கொண்டு வந்து கொடுத்து விட்டு, அகமித்ரா அறியாத வண்ணம் ரித்தேஷிற்கு கை காட்டி விட்டுச் சென்று விட்டான்.
அகமித்ராவும் அவன் வற்புறுத்தலால் அந்த கூல்டிரிங்ஸைக் குடித்தாள். ரித்தேஷ் அவனது கூல்டிரிங்ஸை மெதுவாக குடித்தான். கொஞ்ச நேரத்தில் அகமித்ராவிற்கு தலை வலித்தது. பின்னர் தலை சுற்றத் தொடங்கியது. அவளைப் பார்த்து சிரித்த ரித்தேஷ், “என்ன மித்ரா தலை சுற்றுதா…?” என்று கேட்டான். அவளும், “ஆமா சார்… தலை வலிக்கிற மாதிரியும் இருக்கு… தலை சுற்றுவது போலவும் இருக்கு….” என்றாள்.
“அப்பிடித்தான் இருக்கும் மித்ரா… ஏன்னா அந்த கூல்டிரிங்ஸில கலந்தது அப்படி ஒரு மாத்திரை.. அந்த மாத்திரை இதுக்கு மேலேயும் பண்ணும்….” என்றவன், எழுந்து அகமித்ரா அருகில் வந்து அவளது தோளை பிடித்து எழுப்பினான். அவள் அவனது கையை தட்டி விட்டாள். ஆனால் அவனோ அவளை தாங்கிப் பிடித்துக் கொள்வது போல இறுக்கிப் பிடித்து, அவன் முதலிலே புக் பண்ணியிருந்த அறைக்குள் அழைத்துச் சென்றான். அவள் அவனிடமிருந்து விலக முயன்றாள். அவனின் பிடியில் இருந்து விலக முடியவில்லை. அவளுக்கு தலைவலியில் உயிர் போனது. தலையை அசைத்துக் கொண்டவள் மெல்ல ரித்தேஷிற்குத் தெரியாமல் தனது போனில் இருந்து ஒரு நம்பருக்கு கால் பண்ணினாள். மறுபக்கம் காலை அட்டெண்ட் பண்ணியதை உணர்ந்தவள், “ப்ளீஸ் ரித்தேஷ் சார்… நீங்க எங்க ஸ்கூல் கரஸ்பாண்டன்ட் சார் என்றதாலதான் நீங்க பேச கூப்பிட்டீங்கனு நான் *****இந்த ஹோட்டலுக்கு வந்தேன்.. என்னை இப்படி மயக்க மருந்து கொடுத்து றூமுக்கு இழுத்துட்டு போறது சரியில்லை…. என்னை விட்டுடுங்க…” என்று கெஞ்சினாள்.
அதற்கு ரித்தேஷோ, “உன்னை பார்த்த அன்னைக்கே உன்னை அடையணும்னு நினைச்சிட்டேன்… அதுக்கு இன்னைக்கு வாய்ப்பு கிடைச்சிருக்கு… உனக்கு ஒண்ணு தெரியுமா மித்ரா… உன்னோட கூல்டிரிங்ஸில கலந்தது போதை மாத்திரை மட்டுமல்ல… அது உடல் உணர்ச்சிகளை தூண்டக் கூடிய மாத்திரை… நானே உன்னை விட்டாலும் நீ என்னை விடமாட்ட…” என்று கேவலமாக பேசினான் ரித்தேஷ்… இவற்றை அகமித்ராவின் போனில் இருந்து கேட்டுக் கொண்டு இருந்தவர், “அம்மு பயப்படாத….” என்றார். “சரி வா மித்ரா இதுதான் நம்மளோட அறை…” என்றான் ரித்தேஷ். அதற்கு அகமித்ரா சொன்னதைக் கேட்டு குழம்பி நின்றான் ரித்தேஷ்.
படிச்சிட்டு உங்களோட கருத்துக்களை சொல்லுங்க பட்டூஸ் 😊
Yaara irukkum