“மச்சி அனகோண்டா குரலுடி” என்ற கனிஷ்காவிடம் என்னது “அனகோண்டா குரலா” என்று கேட்டாள் நிலவேனில். “அதாண்டி எல்ஓஈ க்கு ஒரு புது சார் வந்தாரே, வந்த அன்னைக்கே உன் காலை பிடிச்சாரே அந்த ஆள் தான்” என்று கனிஷ்கா கூறிட ஏன் டீ நாயே அந்த ஆளு என் காலை பிடிக்க வில்லை சுளுக்கு எடுத்து விடுகிறேன் என்ற பெயரில் இன்னும் வலியை ஏற்படுத்திட்டாரு” என்றவள் “அந்த ஆளு எதுக்கு இங்க வந்திருக்காரு” என்று கேட்டபடி ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்தாள் நிலவேனில்.
எதிர்த்த வீட்டிற்குள் துருவநேத்ரன் சென்று கொண்டிருப்பதை கண்டவள் இந்த வீட்டுக்கு எதுக்கு இந்த ஆள் வந்திருக்காரு” என்று யோசித்தாள் .
“ஒருவேளை இந்த ஆளு உன்னோட பக்கத்து வீடு தானா, என்கிட்ட ஏண்டி சொல்ல வில்லை ” என்ற கனிஷ்காவிடம் “ஐயோ கிடையாதுடி அந்த வீட்ல சாந்தினு ஒரு அக்கா இருக்காங்க என்கிட்ட கூட நேற்று நல்லா பேசினாங்க இந்த ஆளு அந்த வீட்டுக்கு எதுக்கு வந்திருக்கிறார்” என்று எனக்கு தெரிய வில்லை என்று கூறினாள் நிலவேனில்.
” சரி அந்த ஆளு எதுக்கு வந்தா நமக்கு என்ன வா நம்ம வேலையை பார்க்கலாம்” என்ற நிலவேனில் அவளுடன் கதை அடித்துக் கொண்டிருந்தாள் .
“ப்ளஸ் ஒன் என்ன குரூப் எடுக்க போகிற மச்சி” என்ற கனிஷ்காவிடம் “அம்மா பயாலஜி எடுக்க சொல்றாங்க, எனக்கு அதுல இன்ட்ரஸ்ட் இல்லை பர்ஸ்ட் குரூப் எடுத்தால் கம்ப்யூட்டர் சயின்ஸ், இல்லைனா தேர்ட் குரூப் தான்” என்றாள் நிலவேனில்.
தேர்ட் குரூப் எல்லாம் வேண்டாம் டி ஃபர்ஸ்ட் குரூப் எடுக்கலாம்” என்ற கனிஷ்காவிடம் “மூதேவி மேத்ஸ் இருக்குடி செத்துருவோம்” என்றாள் நிலா.
“அதெல்லாம் பார்த்துக்கலாம் மச்சி” என்ற கனிஷ்காவிடம், “என்ன மச்சி உன் பேச்சில் ஆணவம் தெரிகிறதே, ஸ்டேட் ஃபர்ஸ்ட் வாங்கிருவியோ?” என்று நக்கல் அடித்தாள் நிலா.
“ஸ்டேட் ஃபர்ஸ்ட் நானா கண்ணாடியில் டெய்லி என் மூஞ்சிய பார்க்கிறேன் மச்சி ஸ்டேட் ஃபர்ஸ்ட் வாங்குற எந்த ஒரு அங்க அடையாளமும் என் முகத்துக்கு கிடையாது ,அதனால இந்த மாதிரி எல்லாம் காமெடி பண்ணாமல் எல்லாம் சப்ஜெக்ட்லயும் ஜஸ்ட் பாஸ் ஆவேனான்னு பார்க்கலாம்” என்றாள் கனிஷ்கா.
“ஜஸ்ட் பாஸ்க்கு எல்லாம் கம்ப்யூட்டர் சயின்ஸ் குரூப், அதுவும் ஃபர்ஸ்ட் குரூப் கொடுக்க மாட்டாங்களே” என்ற நிலவேனிலிடம், “நம்ம ஸ்கூல் தானடி அதெல்லாம் கொடுப்பாங்க பயாலஜி தான் கொடுக்க மாட்டாங்க. ஒன்றும் பிரச்சனை இல்லை” என்றால் கனிஷ்கா.
“என்ன இது நீங்க ரொம்ப தெனாவெட்டா பேசுறது மாதிரி இருக்கு ,உங்கள் பேச்சில் கொஞ்சம் ஆணவம் எட்டிப் பார்க்கிறதே தலைவரே” என்ற நிலவேனிலின் தலையில் கொட்டியவள் “வாயாடி இது உன் வாயிலே மிதிக்கணும் டி “என்று கூறினால் கனிஷ்கா .
“ஆமாம் உன் ஆள் என்ன கால் பண்ணாமல் இருக்காரு” என்ற கனிஷ்காவிடம், “பொழுதோட என்கிட்டே பேசிட்டு இருப்பானா அவனுக்கு வேற வேலை பொழப்பே இல்லையா, போவியா” என்றாள் நிலவேனில்.
” ஆமாம் உன் ஆளு பெயர் என்ன?” என்றாள் கனிஷ்கா. “பாண்டிமுனீஸ்வரன்”என்ற நிலாவிடம் “சாமி பேரு எதுவும் கிண்டல் பண்ணிராதே மச்சி” என்றாள் கனிஷ்கா.
“நான் கிண்டல் பண்ணுவேன் புல்லட் பாண்டி” என்று நிலவேனில் கூறிட “நோ, நோ டி திகில் பாண்டி இது எப்படி இருக்கு” என்று கனிஷ்கா தன் பங்கிற்கு கூறினாள்.
“படித்துறை பாண்டி ,ஸ்டைல் பாண்டி, புலிப்பாண்டி இப்படி நம்ம வச்சுக்கிட்டே இருப்போம் இஷ்டத்துக்கு” என்று கிண்டலடித்துக் கொண்டே இருந்தனர் தோழிகள் இருவரும்.
“உன் ஆளுக்கு இது தெரிஞ்சா என்ன பண்ணுவாரு” என்ற கனிஸ்காவிடம் “முதலில் அவனை என் ஆளுன்னே நான் இன்னும் முடிவு பண்ண வில்லை இப்போ தான் அவனுக்கு தெரிஞ்சு அவன் என்னத்த கிழிக்க போறான் போடி வேலைய பாத்துட்டு” என்றால் நிலவேனில்.
“என்ன மச்சி இப்படி சொல்லிட்ட நான் எவ்வளவு கற்பனை பண்ணி வச்சிருந்தேன் . உனக்கு ஒரு ஆள் செட் ஆயிடுச்சு நீயும் , அந்த ஆளும் லவ் பண்ணுற கதையை தினம் கேட்டு நான் என்ஜாய் பண்ணலாம். இப்படி எவ்வளவு கனவு கண்டுட்டு இருந்தால் நீ பொசுக்குன்னு இப்படி சொல்லிட்ட” என்றாள் கனிஷ்கா.
” ஏண்டி நாயே நான் நல்லா இருக்கிறது உனக்கு பிடிக்கலையா? நான் எவனையாச்சும் லவ் பண்ணி எங்க அம்மா கிட்ட மாட்டணும். எங்க அம்மா விளக்கமாத்த எடுத்து என்னை விரட்டி விரட்டி தெருத்தெருவா துரத்தி அடிக்கணும். அதை நீ பார்த்து பார்த்து ரசிக்கணும். அதானே உன் ஆசை நடக்காதுடி மகளே சிக்க மாட்டாள் நிலவேனில்” என்று சிரித்தாள் நிலா.
“லவ் இல்லாமல் தான் மணிக் கணக்கில் அவன் கூட உட்கார்ந்து பேசிட்டு இருக்கியா?” என்ற கனிஷ்காவிடம் “இதுக்கான பதிலை நான் முன்னாடியே சொல்லிட்டேன். அவனும் வேலை வெட்டி இல்லாமல் வெட்டியா இருப்பான் போல நானும் வேலை வெட்டி இல்லாமல் வெட்டியா இருக்கேன் .அதனால தான் ரெண்டு பேரும் பேசிட்டு இருக்கோம். ஸ்கூல் திறந்து விட்டால் நான் அவன் கிட்ட பேசிட்டு இருப்பேனா சொல்லு. இப்போ இந்த வீட்ல நான் மட்டும் தனியா இருக்கேன் . அம்மா ஆபீஸ் போயிட்டு ஈவினிங் தான் வராங்க பகலில் எனக்கு பொழுது போக வில்லை. அவன் வேலை வெட்டிக்க போற ஆள் மாதிரி தெரிய வில்லை வெட்டி பையனா தான் இருப்பான் போல அதனால தான் ஒரு பொம்பள பிள்ளை கிட்ட உட்கார்ந்து மணிக் கணக்குல பேசுகிறான். என்கிட்ட பேசுறது பிடிச்சிருக்காம்” என்று சிரித்தாள் நிலவேனில்.
” தப்பா எதுனாலும் பேசினானா” என்ற கனிஷ்காவிடம் “இல்லை, இல்லை நல்லா தான் பேசினான். நல்ல பையன் தான். அதனாலதான் அவன் கிட்ட பேசிட்டு இருக்கேன் தப்பா பேசிருந்தால் அவனோட நம்பரை என்னைக்கோ ப்ளாக் பண்ணி இருப்பேன்டி” என்று சிரித்தாள் நிலவேனில். “சரி ,சரி நடத்து, நடத்து எல்லாம் நன்மைக்கே” என்று சிரித்து வைத்தாள் கனிஷ்கா .
“நீ வெட்டியா தானே மச்சி இருக்க பேசாமல் இந்த அனகோண்டா குரலை நீ கரெக்ட் பண்ண வேண்டியதுதானே” என்றாள் நிலவேனில் .
“ஆத்தி இந்த வாத்தி சகவாசம் எல்லாம் நமக்கு வேண்டாம் தாயே, எனக்கு படிப்பே வராது இதுல வாத்தியை கரெக்ட் பண்ணி அது குச்சியை வைத்து என் மண்டையிலே நொட்டு ,நொட்டுனு அடிக்கிறதுக்கா ஆள விடு கம்ப்யூட்டர் சென்டர்ல ஒரு பையன் என்னையவே பார்த்து பார்த்து சிரிச்சிட்டு இருக்கான் பேசாமங அவனை வேண்டும் என்றால் கரெக்ட் பண்ணிக்கிறேன்” என்றாள் கனிஷ்கா .
“அப்படியா யாரு அவன்” என்றவள் “நீ அவனை பார்க்கிறது ,உங்க நைனாக்கு தெரிஞ்சுச்சுன்னு வச்சுக்கோயேன் அவ்வளவுதான் உன்னை பிச்சு எடுத்துடுவாரு” என்று சிரித்தாள் நிலவேனில்.
“கண்டிப்பா தெரிஞ்சிச்சு விரட்டி, விரட்டி அடிப்பாரு உங்க அம்மாவாது வெளக்கமாத்தால அடிப்பாங்க. எங்க நைனா செருப்பை கழட்டிட்டு அடிப்பாரு அதனால சும்மா சைட் அடிச்சிட்டு நம்ம சோழியை பாத்துட்டு போயிட்டே இருப்போம்” என்று சிரித்தாள் கனிஷ்கா.
“எப்படி மச்சி எனக்கு பிரண்டா இருந்துட்டு இவ்வளவு புத்திசாலியா இருக்க, நம்பவே முடிய வில்லை “என்ற நிலாவின் தலையில் கொட்டியவள் “ஏண்டி உனக்கு என்னை வாரலைனா தூக்கமே வராதே” என்று சிரித்தாள் கனிஷ்கா.
” சரி அம்மாவுக்கு இப்போ எப்படி இருக்கு?” என்ற கனிஷ்காவிடம் “இருக்கு ஒரு நாள் மாத்திரை போடலைன்னாலும் மயங்கி விழுந்துடுறாங்க ,ரொம்ப பயமா இருக்கு டி அப்பா தான் செத்துப் போயிட்டாரு அம்மாவாவது என் கூட இருக்கணும்னு ஆசைப்படுகிறேன். அந்த கடவுள் என் அம்மாவை மட்டும் என்னை விட்டு பிரிச்சிறாமல் இருந்தால் அதுவே போதும். வேற என்ன கஷ்டம் கொடுத்தாலும் நான் தாங்கிக்குவேன் அம்மா மட்டும் இல்லைன்னா கண்டிப்பா என்னால முடியாது” என்றாள் நிலவேனில்.
“கவலைப்படாத செல்லம் ,அம்மாவுக்கு எதுவும் ஆகாது” என்று தோழிக்கு ஆறுதல் கூறினாள் கனிஷ்கா.
“அந்த நம்பிக்கை எனக்கும் இருக்குடி இருந்தாலும், ஒரு சின்ன பயம் மனசுக்குள்ள அடிச்சுக்கிட்டே இருக்கு. இவங்க வேற ஒழுங்கா மாத்திரை சாப்பிடறாங்க இல்லை வேளைக்கு நான் தான் மாத்திரை எடுத்து கொடுக்குறது போல இருக்கு .ரொம்ப பண்ணுறாங்க கேட்டால் வேலை டென்ஷனாம் பெரிய வேலை டென்ஷன் . இவங்க வேலைக்கு போய் தான் இங்க நிறையுதா பென்ஷன் பணமே போதாதா” என்றாள் நிலா.
” என்ன ஏண்டி அம்மா வேலைக்கு போறதை போய் தடுக்க பார்க்கிற” என்ற கனிஷ்காவிடம் “வொர்க் டென்ஷன், பிரஷர் அதிகமாகி அவங்களுக்கு ஏதாவது ஆயிடுச்சின்னா எனக்குனு யாருடி இருக்கா?” என்று வருந்தினாள் நிலவேனில். “அதான் உன் தாத்தா, பாட்டி இருக்காங்க. மாமா அத்தை எல்லோரும் இருக்காங்க. நீ ஏன் கவலைப்படுற அம்மாவும் உன் கூடவே இருப்பாங்க” என்றாள் கனிஷ்கா.
“தாத்தா ,பாட்டி, மாமா ,அத்தை எத்தனை பேர் இருந்தாலும் என் அம்மா மாதிரி என்ன பாத்துக்க யாராலும் முடியாது பேபி” என்றாள் நிலவேனில்.
“சரி சரி அம்மாவுக்கு எதுவும் ஆகாது இந்த பேச்சை தொடர்ந்து பேசினால் நீ ரொம்ப அழ ஆரம்பிச்சிடுவ சரி இப்போ சும்மா தானே இருக்கோம் .பொழுது போக வில்லை தானே பேசாமல் உன் ஆளுக்கு கால் பண்ணு என்ன தான் பேசுறாருன்னு நானும் கேட்கிறேன்” என்ற கனிஷ்காவின் தலையில் நங்கு நங்கு என்று கொட்டினாள் நிலவேனில்.
“ஏண்டி உனக்கு வேற வேலைப் பிழைப்பே இல்லையா நான் தான் சொல்றேன்ல அவன் என் ஆள் இல்லை என்று அப்புறம் என்ன திரும்பத் திரும்ப அவன் என் ஆளு அவனுக்கு போன் பண்ணு என்ன பேசுறீங்கன்னு கேட்போம்னு சொல்லிட்டு இருக்க, போடி லூசு” என்றாள் நிலவேனில்.
” என்ன செல்லம் நீ பொழுது போகலைன்னு தானே சொல்கிறேன் என்ற கனிஷ்காவிடம் பொழுது போகலன்னா போய் பொரிகடலை வாங்கி தின்னுடி முண்டம் இப்பதான் வந்துட்டா லவ்வர் கிட்ட பேசு லப்பர் பந்து கிட்ட பேசுன்னு போடி” என்றாள் நிலவேனில் .
“கோச்சுக்காத செல்லம்” என்ற கனிஷ்கா “சரி உன் லவ்வர் கிட்ட பேச வேண்டாம் வா ஏதாவது சமைச்சு சாப்பிடலாம் உங்க வீட்ல நீ தான் புதுசு புதுசா ஏதாவது செய்வியே, இன்னைக்கு என்ன ரெசிபி செய்யலாம்” என்ற கனிஷ்காவிடம் “என்னது புதுசா ரெசிபி செய்யவா வேண்டும் என்றால் ஒன்று பண்ணுறேன் எங்க வீட்ல குலோப்ஜாமூன் மிக்ஸ் வேஸ்டா தான் கிடைக்கும் அதுல “என்று நிலவேனில் சொல்லும் முன்னே “குலோப் ஜாமுன் செய்ய போறியா?” என்றால் கனிஷ்கா.
” அது தான் இல்லை அதுல நான் உனக்கு வெஜிடபிள் எல்லாம் வெட்டி போட்டு போண்டா செஞ்சு தரேன். சாஸ் ஊத்தி சாப்பிட்டு பாரு செம்ம டேஸ்ட்டா இருக்கும்” என்றாள் நிலவேனில்.
“என்னது குலோப் ஜாமுன் மாவில் போண்டாவா அடியே எனக்கு வாந்தி பேதி வர வைக்காமல் நீ விட மாட்டியா?” என்ற கனிஷ்காவிடம் “சத்தியமா சொல்றேன்டி சூப்பரா இருக்கும். நான் செஞ்சு தரேன் நீ சாப்பிட்டு அப்பறமா சொல்லு” என்ற நிலவேனில் கடகடவென போண்டா செய்ய ஆரம்பிக்க கனிஷ்காவிற்கு தான் அவள் சொன்னதுமே வயிற்றில் புளியை கரைக்க ஆரம்பித்தது.
…. தொடரும்…