என் நெஞ்சில் நீ தந்த காயம்…(9)

4.8
(5)

“குரங்கு ,குரங்கு சிரிக்காதடி உன்னை கொன்னுடுவேன்” என்ற கனிஷ்காவை பார்த்து மேலும் சிரிக்க ஆரம்பித்தாள் நிலவேனில்.

“ஏன்டி நாயே புதுசா ஒரு சாப்பாடு செஞ்சு கொடுத்தா  பேருக்கு ஒன்று ,ரெண்டு சாப்டுட்டு வைப்பாங்கன்னு பேரு. மொத்த போண்டாவையும் ஒரு பாட்டில் சாஸ் ஊத்தி மொத்தமா வழிச்சு நக்கிபுட்டு ரெண்டு நாளா பாத்ரூம்ல கிடந்தேன்னு சொல்றியே வெட்கமா இல்லை உனக்கு. நான் தான் சொன்னேன் இல்லடி உனக்கு கொஞ்சமா சாப்பிடுன்னு கேட்டியா சுட்டு வச்சவளுக்கு ஒன்று கூட வைக்காமல் தின்னு புட்டு பேதியா போகுதுன்னு சொல்லிட்டு இருக்க இடியட்” என்றாள் நிலா.

“துரோகி, துரோகி நிசமாவே போண்டாவில் பேதி மாத்திரை எதுவும் கலந்து கொடுத்துட்டியாடி” என்ற கனிஷ்காவிடம், “லூசு எதுவுமே அளவா சாப்பிடணும் .அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு! உனக்கு அது தெரியாதா?” என்று சிரித்தாள் நிலவேனில்.

“என்ன பேபி இரண்டு நாளாக பேதி புடுங்கினதில் இருபது கிலோ குறைந்து போய் விட்ட போல” என்ற நிலாவிடம் இருபது கிலோ குறைந்தால் நான் எலும்பு கூடாக ஆயிருப்பேன் , இருபது கிலோ எல்லாம் குறைந்திருக்க மாட்டேன் ஒரு ஏழெட்டு கிலோ குறைஞ்சிருப்பேன் போல குலோப் ஜாமூன் மிக்ஸில் போண்டா செஞ்சு தந்து குடல் ,குந்தாணி எல்லாம் வெளியில வர வச்சுட்டியேடி” என்று புலம்பினாள் கனிஷ்கா .

“உன் ஆளு ஏன் டீ உன்னை இப்படி பார்க்கிறான்” என்ற நிலா விடம் “என் ஆளா அது எவன் டீ “என்றாள் கனிஷ்கா.

“உன்னையே குறு குறுனு பார்க்கிறானே அந்த கருவாயன் அவனைத் தான் சொன்னேன். நீ ஏழெட்டு கிலோ குறைஞ்சதனால அவனுக்கு அடையாளம் தெரியலையோ? என்னவோ, என்றவள்  ரெண்டு நாளா வேற நீ கம்ப்யூட்டர் கிளாஸ்க்கு வர வில்லையா பையன் சோர்ந்து போயிட்டான்” என்று சிரித்தாள் நிலவேனில் .

“சிரிடி சிரி ஆமாம் உன் ஆளு கிட்ட என்ன பேசுன இரண்டு நாளாக” என்ற கனிஷ்காவிடம், “எனக்கு எந்த ஆளுடி இருக்கிறான் “என்றாள் நிலவேனில்.

“அப்படியே  தெரியாதது மாதிரியே நடிப்பா அதான் டெய்லி போன்ல பேசுறீங்களே, இப்பதான் புதுசா நாங்க வந்து இவங்க ஆளு யாருன்னு எங்க வாயால சொல்வனுமாம் ரொம்ப நடிக்காத” என்ற கனிஷ்காவிடம் “இல்லைடி இரண்டு நாளா நான் பேச வில்லை “என்றாள் நிலவேனில்.

” நம்பிட்டேன் டி நல்லவளே உன்ன பத்தி எனக்கு தெரியாதா?” என்ற கனிஷ்காவிடம் “சத்தியமா மச்சி” என்றாள் நிலா.   “ஏன் டீ  பேசவில்லை” என்றாள் கனிஷ்கா.

“அவன் பேச வில்லை நானும் பேச வில்லை” அவ்வளவு தான் என்ற நிலா விடம், “செல்லம் ஒரு லவ் பண்ணுற பையன் கிட்ட பேச வில்லையா என்று கேட்டால் அவன் பேச வில்லை நான் பேச வில்லை அப்படின்னு சொல்லலாமா?” என்றாள் கனிஷ்கா .

அவளது தலையில் நங்கு நங்கென்று கொட்டியவள் “நான் எப்படி அவனை லவ் பண்றேன்னு சொன்னேன்  இப்படியே உசுப்பேத்தி உசுப்பேத்தி உடம்ப ரணகளமாக்காமல் விடமாட்ட நீ.  உனக்கு எங்க அம்மா என்னை விளக்கமாத்தால விரட்டி, விரட்டி அடிக்கணும் அதை நீ பாக்கணும் அதுக்காக நீ என்ன வேண்டும் என்றாலும் பண்ணுவ துரோகி ,துரோகி” என்றால் நிலவேனில் .

சீரியஸாவே கேட்கிறேன் என்ற கனிஷ்காவிடம் “லூசாடி நீ யாருன்னு தெரியாத ஒருத்தனை என்னால எப்படி லவ் பண்ண முடியும். இது என்ன காதல் கோட்டை படமா இதயத்தில் ஆரம்பித்து கண்களில் முடியிற காதல்னு டயலாக் அடிக்க” என்றாள் நிலா.

” இந்த காதல் கூட நல்லா தான் இருக்கும் சும்மா ட்ரை பண்ணுடி” என்றாள் கனிஷ்கா .

“அந்த தேவையானிக்கு அஜித் கிடைத்தார்.  இந்த நிலவேனிலுக்கு  எவனாவது மொக்க பீசு கிடைச்சுட்டா என்ன பண்ணுறது” என்றாள் நிலா.

“மொக்கை பீஸா இருந்தால் என்ன நம்ம ஊர்ல என்ன உனக்கு அஜித்தும்,  சல்மான்கானுமா   கிடைப்பாங்க நம்ம ஊரு பசங்க மொக்கையா தான் இருப்பாங்க, இருந்தாலும் நம்ம ஊரு பசங்க தான் நம்ம கண்ணுக்கு அழகா தெரியனும்” என்ற கனிஷ்காவிடம் “அப்படியா அப்போ இவன் உனக்கு ஓகேவா” என்று நிலவேனில்  ஒருத்தனை காட்டிட, “உன்னை கொன்று விடுவேன் இவனெல்லாம் என் ஆளுன்னு சொல்லிட்டு இருக்க” என்றாள் கனிஷ்கா.

“பின்ன போன்ல பேசுறவனெல்லாம் என் ஆளுன்னு சொல்லிட்டு இருக்கேன். போய் ஒழுங்கா படிக்கிற வேலைய பாரு” என்றாள் நிலவேனில்.

“நானும் பார்க்க தான்டி போறேன், ஒரு நாள் இல்லை ஒரு நாள் அந்த போன்ல பேசுறவனை லவ் பண்றேன்னு சொல்லி விட்டு என் முன்னாடி வந்து நிற்பாய்.  நான் பார்ப்பேன்” என்றாள் கனிஷ்கா.

“என்ன மச்சி சாபம் எல்லாம் கொடுக்கிற, உன் நாக்கு வேற கருநாக்கு  பழிச்சுருச்சுன்னா என்ன பண்றது” என்றவளது மொபைல் போனில் ஒரு குறுஞ்செய்தி வந்தது.

“என்னடி மெசேஜ் எல்லாம் வருது” என்ற கனிஷ்காவிடம், “போன் என்று இருந்தால் மெசேஜ் வரத்தான் செய்யும். ஒழுங்கு மரியாதையா கம்ப்யூட்டர்ல ப்ரோக்ராம் போட்டு பாரு ,அப்புறம் அந்த அக்கா வந்து நம்ம ரெண்டு பேரையும் திட்ட போது ரெண்டு பேரும் கிளாஸ்ல சேர்ந்து வெட்டியா அரட்டை அடிச்சிட்டு தான் இருக்கீங்க சிஸ்டம் முன்னாடி உக்காந்துட்டு ஒருவேளை உருப்படியா பார்க்கிறது இல்லை அப்படின்னு” என்றாள் நிலவேனில்.

“ஆமாம்டி கோர்ஸ் மட்டும் கம்ப்ளீட் பண்ணலைனா எங்க நைனா என்னை செருப்பாலே அடிப்பாரு. காசுக்கு புடிச்ச கேடுக்கே பிறந்து இருக்கடி நாயின்னு” என்ற கனிஷ்காவிடம், “தெரியுதுல மூடிட்டு வேலையை பாரு” என்றாள் நிலவேனில்.

கம்ப்யூட்டர் கிளாஸ் முடிந்தவுடன் தோழிகள் இருவரும் அவரவர் வீட்டிற்கு சென்றனர் .

வீட்டிற்கு வந்தவள் தனது மொபைல் போனை எடுத்து பார்க்க அதில் அவனது எண்ணில் இருந்து மெசேஜ் வந்திருந்தது.

” என்ன மேடம் ரெண்டு நாளா போன் கால் ,மெசேஜ் எதுவுமே வரல ரொம்ப பிசியா” என்று கேட்டிருக்க அவளோ லேசாக  புன்னகைத்தவள் பதிலுக்கு மெசேஜ் அனுப்பினாள் .

“இதே கேள்வியை நானும் உங்ககிட்ட கேட்கிறேன். நீங்க ஏன் ரெண்டு நாளா எனக்கு மெசேஜ் அனுப்ப வில்லை” என்று பதில் அனுப்பி விட்டு அமர்ந்திருந்தாள் .

அவனது எண்ணிலிருந்து கால் வந்துவிட்டது .அதை அட்டென்ட் செய்தவள் “ஹலோ என்ன எதுக்கெடுத்தாலும் கால் பண்ணிட்டு இருக்கீங்க.  கொஞ்சமாவது அறிவு இருக்கா?” என்றாள் நிலவேனில்.

“அறிவு எனக்கு ரொம்ப கம்மிதான் உனக்கு ரொம்ப நிறைய இருக்கும் போல” என்ற துருவனிடம் “ஹலோ நீங்க ஆம்பளை பையன் உங்களுக்கு எந்த டைம்  போன் வந்தாலும் யாரும் எதுவும் சொல்ல மாட்டாங்க, நான் பொண்ணு பாவம் நீங்க பாட்டுக்கு கண்ட நேரத்தில் போன் பண்றீங்க என் மம்மி இருக்கும்போது நீங்க போன் பண்ணிட்டீங்கன்னா நான் எப்படி பேச முடியும்” என்றால் நிலவேனில் .

“வாயில தான் பேசுவாங்க- என்று அவனும் பதில் கூறினான். “ஜோக்கா சிரிப்பே வர வில்லை . இவர் மட்டும் வாயால் பேசுவாரு மத்தவங்க எல்லாம் என்ன முக்காலையும், காதாலையுமா பேசிட்டு இருக்காங்க எல்லாரும் வாயால தான் பேசுவாங்க பாஸ்” என்றாள் .

“அப்போ உன் அம்மா கிட்ட சொல்லு நான் என் லவ்வர் கிட்ட பேசுறேன் என்று” என்றான் அவன்.

” என்னது லவ்வரா ஹலோ ,திரும்பத் திரும்ப அப்படி சொல்லாதீங்க. நீங்க ஒன்றும் என்னோட லவ்வர் கிடையாது” என்றாள் நிலவேனில்.

“எனக்கு நீ ஐ லவ் யூனு  மெசேஜ் அனுப்பிட்டு லவ்வர் இல்லைன்னு சொன்னால் எப்படி மூனு மேடம்” என்றான் துருவன் .

அது என்ன மூனு என்ற நிலாவிடம் உன் பெயர் தான் மூன்ஃபையர் அப்படின்னு கூப்பிடுறது ரொம்ப பெருசா இருக்குற மாதிரி இருக்கு அதனால உன்னை மூனு என்று சுருக்கி கூப்பிட்டு இருக்கேன்” என்றான் துருவன் .

“சரி சரி எப்படியோ கூப்பிட்டுக்கோங்க ஐ டோன்ட் கேர்”, என்றவள் “என்ன விஷயம் போன் பண்ணி இருக்கீங்க” என்றாள் .

“ஏதாவது விஷயம் இருந்தால் தான் உன்கிட்ட பேசணுமா என்ன எனக்கு உன்கிட்ட பேசணும் தோணுச்சு போன் பண்ணினேன்” என்றான் அவன். “ஹலோ என்ன விளையாடுறீங்களா? உங்களுக்கு தோன்றினால் எல்லாம் போன் பேசுறதுக்கு நான் என்ன உங்க பொண்டாட்டியா?” என்றாள் நிலவேனில்.

“ஆக்கிக்கிட்டா போச்சு அட்ரஸ் சொல்லு வந்து பொண்ணு கேட்கிறேன் உங்க அம்மா எனக்கு கட்டி கொடுத்துட்டாங்கன்னா கல்யாணம் பண்ணிட்டு வந்து பொழுதோட உன் கிட்ட பேசிக்கிட்டே இருக்கேன்” என்றான் துருவநேத்ரன்.

“ஆசை,  தோசை, அப்பளம் , வடை அதுக்கெல்லாம் வேற ஆளை பாருங்க பாஸ் முன்னே,  பின்னே தெரியாத ஒருத்தனுக்கு பொண்ணு கட்டி கொடுக்க மாட்டாங்க எங்க அம்மா . எங்க வீட்டுல எனக்கு அத்தை பையன் ,மாமா பையன்னு ஏகப்பட்ட முறை பசங்க இருக்காங்க அவங்க கிட்ட எல்லாம் சொன்னேன் அவ்வளவுதான் உங்க வீடு தேடி வந்து தூக்கிருவானுங்க” என்றாள் நிலவேனில்.

“ஓ அப்படியா! அப்ப என்னோட அட்ரஸ் சொல்கிறேன் முடிஞ்சா உன் அத்தை பையன், மாமா பையன் எல்லாரையும் என்னை வீடு தேடி வந்து தூக்க சொல்லு பார்ப்போம்” என்றான் துருவநேத்ரன்.

” ஒருவேளை தூக்கிட்டா “என்ற நிலவேனிலிடம், “தூக்கி தான் பார்க்க சொல்லேன் ” என்றான் அவன் .

“அப்போ உங்க அட்ரஸ் சொல்லுங்க” என்று அவள் கேட்டிட அவனும் தன் முகவரியை கொடுத்துவிட்டான். “இதுதான் என்னோட அட்ரஸ் இங்கே தான் நான் இருப்பேன், உன்னோட பாடி கார்ட்ஸ் எல்லாம் வரச் சொல்லு வந்து தூக்கிட்டு போக சொல்லு பார்க்கிறேன்” என்றான் .

அவனது பேச்சில் அவள் சிரித்து விட்டாள் . “நீங்க என்ன வயசு பொண்ணா? உங்களை அவனுங்க தூக்கிட்டு போறதுக்கு நீங்க ஒரு அழகான பொண்ணா இருந்தாலும் எவனாவது ஒருத்தனை உங்களை கல்யாணம் பண்ண வச்சு அவங்க தொல்லையிலிருந்து நான் தப்பிச்சிடுவேன். நீங்களே பையனா போயிட்டீங்க சோ சேட்” என்றாள் அவள்.

“சரியான வாயாடி” என்ற துருவனிடம் “அப்படியா நன்றி” என்றாள் நிலா. “என்ன நன்றி சரியான ஆளுதான் நீ” என்றவனிடம் , “ஆமா நான் ரொம்ப ரொம்ப சரியான ஆளுதான்” என்றாள் .

“சரி சாப்பிட்டியா” என்றவனிடம் “ஏன் சாப்பிடலைன்னு சொன்னால் வந்து ஊட்டி விடப் போறீங்களா என்ன” என்றாள் அவள்.

“ஊட்டி விட்டுட்டா போச்சு மேடத்துக்கு என்ன சாப்பாடு பிடிக்கும் சொல்லுங்க வந்து ஊட்டி விடுறேன் நான் எவ்வளவு தைரியமா என்னோட அட்ரஸ் சொன்னேன் எங்க பதிலுக்கு நீயும் சொல்லு” என்றான் அவன் .

நீங்க பையன் ஈசியா சொல்லிட்டீங்க நான் ஒருவேளை என்னோட அட்ரஸ் சொல்லி நேர்ல வந்து பொளீர்னு என் கன்னத்துல வச்சுட்டீங்கன்னா, நீங்க வேற ஆள் ரெடி சொல்லி இருக்கீங்க உங்கள நேர்ல பார்க்கும்போது நான் உங்க  காலில் விழுந்து மன்னிப்பு கேக்கணும்னு சொன்னிங்க.  நான் காலில் விழ மாட்டேன்னு சொல்லிட்டால் என் கால ஒடச்சு விட்டுட்டீங்கனா அதனால இந்த விஷப்பரிட்சை எல்லாம் எனக்கு வேண்டாம் தலைவரே! நீங்க ஒன்றும் வர வேண்டாம். நீங்க உங்க வீட்டிலேயே பத்திரமா இருங்க, நீங்க வேற ஞாபகப்படுத்தி விட்டுட்டீங்களா எனக்கு லேசா பசிக்குது நம்ம நாளைக்கு பேசலாமா?” என்றாள் நிலவேனில்.

“ஏன் என்கிட்ட பேசிகிட்டே மேடம் சாப்பிட மாட்டீங்களா?” என்ற துருவனிடம் , “அது எப்படி பேசிக்கிட்டே சாப்பிடுவது, சாப்பிடும்போது பேசக்கூடாது. உங்களுக்கு இது தெரியாதா? நம்ம பேசாமல் மௌனமா சாப்பிடும்போது சாப்பாட்டில் மட்டும் கவனமா இருப்போம்.  அப்போ தான் அந்த சாப்பாட்டோட ருசி நமக்கு தெரியும் பேசிட்டே சாப்பிட்டோம்னா அந்த சாப்பாட்டுல என்ன ருசியின்னு நம்மளால கண்டுபிடிக்க முடியாது. அதனால சாப்பிடும் போது ரசிச்சு, ருசித்து சாப்பிடணும் சோ பேசாமல் சாப்பிடணும்” என்று அவள் கிளாஸ் எடுக்க ஆரம்பித்தாள்.

“சரியான டீச்சரா இருப்ப போலையே சாப்பாட்டிற்கலாம் இவ்ளோ கிளாஸ் எடுக்கிற சரி சரி நீ போனை வச்சிட்டு போ” என்று அவன் கூறிவிட்டு போனை வைத்து விட்டான்.

…. தொடரும்…

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.8 / 5. Vote count: 5

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!