லவ்..❤️ லவ்..❤️ எத்தனை வயது? – 3

5
(4)

லவ்.. லவ்.. எத்தனை வயது..!! – 3

மதியழகி அந்தக் கல்லூரியில் சேர்ந்ததிலிருந்தே அவளுக்கான மாணவ விசிறிகள் மிகவும் அதிகம்.. பேசும்போது ஒரு தோழியாய் கனிவோடு பேசும் அவளின் இதமான பேச்சு எல்லோரையும் அவளுக்கு எளிதில் நண்பர்கள் ஆக்கிவிடும்.. ஆனால் வகுப்புக்குள் பாடம் எடுக்க வந்துவிட்டால் அவள் ஒரு ஆசிரியையாக மொத்தமாய் அவதாரம் எடுத்து விடுவாள்.. அந்த நேரத்தில் அவளைப் போன்ற கராரான கண்டிப்பான ஆசிரியை உலகத்திலேயே இல்லை என்பது போல் தான் நடந்து கொள்வாள்.. அதே நேரத்தில் மாணவர்கள் எத்தனை முறை அவளை திரும்ப திரும்ப சந்தேகங்கள் கேட்டாலும் சரி.. நடத்திய பாடத்தை திரும்பவும் நடத்த சொன்னாலும் சரி.. அவர்களுக்காக கொஞ்சம் கூட தயக்கம் இன்றி மீண்டும் முழுவதுமாய் அந்த பாடத்தை பொறுமையாக கற்றுக் கொடுப்பாள்..

இந்தர் அவளோடு ரொம்பவும் பேசமாட்டான்.. ஆனால் வகுப்பை எடுக்கும்போது அவள் மீது மதிப்பையும் மரியாதையையும் இயல்பாய் வரவழைக்கும் அவளின் நடை உடை பாவனை எல்லாம் இன்னும் இன்னும் அவனுக்கு அவளை பிடிக்க வைத்தது..
ஒரு நிலையில் அந்தப் பிடித்ததை காதல் என்று எண்ணிக்கொண்டான் அவன்.. இப்போது அந்த காதல் உணர்வு ஒரு பிடிவாதமாகவே மாறி இருந்தது அவனை பொறுத்தவரை..

மதியழகி கேட்ட கேள்விக்கு இந்தர் சொன்ன பதிலில் கொஞ்சம் தடுமாறித் தான் போனாள் மதியழகி..

ஆனால் சட்டென தன்னை தானே சுதாரித்துக் கொண்டு “இங்க என்ன ஃபேஷன் ஷோவா நடக்குது? நான் என்ன கேட் வாக்கா பண்ணிட்டு இருக்கேன் உங்க எல்லார் முன்னாடியும்? என்னை பார்த்து ரசிச்சிட்டு இருக்கீங்கன்னு சொல்றீங்க..? ரசிச்சு தான் ஆகணும்னா அதை கிளாசுக்கு வெளியில் பண்ணுங்க.. இந்த கிளாஸ்க்குள்ள பாடம் கவனிக்கிறது இருந்தா மட்டும் இருங்க.. அழகை ரசிக்கிறது தப்பில்ல.. ஆனா அது நம்ம செய்ய வேண்டிய கடமையை அஃபெக்ட் பண்ண கூடாது..  அழகை தான் ரசிக்கணும்னா அதுக்கு இந்த உலகத்துல நிறைய இடம் இருக்கு.. ஆனா இந்த இடம் அதுக்கு இல்ல.. ப்ளீஸ் லீவ் மை கிளாஸ் நவ்..”

மதி கோவமாய் கையை வகுப்புக்கு வெளிப்புறமாய் நீட்டி சொல்ல “கரெக்ட் தான்.. அழகை ரசிக்கறதுக்கு இந்த உலகத்துல எவ்வளவோ இடம் இருக்கு.. ஆனா எனக்கு உங்க அழகை மட்டும் தானே ரசிக்கணும்.. அதுக்கு இந்த கிளாசை விட்டா வேற இடம் என்ன இருக்கு? வேணும்னா நான் ஸ்டாஃப் ரூம் வந்து நாள் முழுக்க உங்க எதிர்ல உக்காந்து உங்களை பாத்துட்டு இருக்கட்டுமா? இல்ல உங்க வீட்டுக்கு வரட்டுமா?”

அவன் சொன்னதைக் கேட்டு கோபத்தில் முகம் சிவந்தது மதியழகிக்கு.. மற்ற மாணவர்களோ தங்களுக்குள் ரகசியமாய் கிசுகிசுவென பேசவும் சிரிக்கவும் தொடங்கினார்கள்..

“கிளாஸ்.. சைலன்ஸ்..” அவளின் அதட்டலான சத்தம் கேட்டு அப்படியே அந்த வகுப்பு மயான அமைதி கொண்டது..

“இ..ந்..த..ர்.. ஸ்டாப் திஸ் நான்சென்ஸ் அண்ட் கெட் அவுட் ஆப் திஸ் கிளாஸ் ரைட் நவ்..” கோவமாய் உச்சஸ்தாயியில் அவள் கத்த..

“ஓகே ஓகே.. டென்ஷன் ஆகாதீங்க.. ஆனா ஒரு விஷயம்.. நீங்க கோவப்பட்டாலும் ரொம்ப அழகா தான் இருக்கீங்க மதி..” கூலாக சொல்லிவிட்டு அந்த வகுப்பை விட்டு வெளியே நடையை கட்டினான் இந்தர்..

அவன் சென்ற பிறகு தன்னையே ஆசுவாசப்படுத்திக் கொள்ள கண்ணை மூடித் திறந்தவள் தனக்கு இருந்த கோபத்தை கொஞ்சம் கட்டுக்குள் கொண்டு வந்தாள்.. சிறிது நிதானத்திற்கு வந்த பிறகு வகுப்பின் பக்கம் திரும்ப அங்கு இருந்த மற்ற மாணவர்களின் பார்வை மொத்தமாய் மாறி இருந்தது..

“ஓகே ஸ்டூடண்ட்ஸ்.. இன்னைக்கு நடந்தது இனிமே ரிப்பீட் ஆகாதுன்னு நினைக்கிறேன்.. ஐ டோன்ட் வான்ட் சச் அண்வான்டட் பிஹேவியர் இன் மை கிளாஸ்.. வேற யாரும் இந்த மாதிரி பிஹேவ் பண்ண மாட்டீங்கன்னு நான் நம்புறேன்..”

எப்போதும் மலர்ந்த முகத்துடனே பாடம் நடத்துபவள் இறுகிய முகத்தோடு அதற்கு மேல் பாடம் நடத்த முடியாமல் கொஞ்சம் திணறித்தான் போனாள்..

அதன் பிறகு மாணவர்களிடம் ஒரு கேள்வியை சொல்லி அதற்கு பதில் எழுத சொல்லிவிட்டு தலையில் கை வைத்து இருக்கையில் அமர்ந்து விட்டாள் மதியழகி..

சற்று நேரத்தில் நிமிர்ந்து பார்த்தவளுக்கு ஜன்னல் வழியாய் தன்னையே இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்த இந்தரின் முகம் மேலும் எரிச்சல் ஊட்டியது..

“ஐயோ.. இவனை..” பல்லை கடித்தவளை அவனோ புன்னகைத்தபடியே பார்த்துக் கொண்டிருந்தான்..

அவன் அப்படி சிரிப்பதை பார்க்கும்போது அவனுடைய வெள்ளந்தியான முகம் கோபிகைகளை சீண்டும் கண்ணனை போல தான் இருந்தது.. அவனை ரொம்பவும் கோபிக்க கூட முடியவில்லை அவளால்.. ஏனோ அவனைப் பார்க்கும்போது அடம்பிடிக்கும் சிறு குழந்தை போல தான் தோன்றினான் அவளுக்கு..

அந்த வகுப்பிற்கான நேரம் முடிந்துவிட “ஓகே ஸ்டுடென்ட்ஸ்.. நாளைக்கு வந்து உங்க அன்சர்ஸ் எல்லாம் செக் பண்றேன்.. சீ யூ” என்று சொல்லிவிட்டு வகுப்பை விட்டு வெளியே சென்றாள்..

அந்த வகுப்பை விட்டு வெளியே வந்து எதிர் பக்கத்தில் இருக்கும் ஸ்டாஃப் ரூமுக்கு போக வெட்டவெளி மைதானத்தில் நடந்து கொண்டிருந்தாள் மதி.. தனக்கு பின்னால் யாரோ தன்னை தொடரும் காலடி ஓசை கேட்கவும் சட்டென திரும்பி பார்த்தவள் அங்கேயும் இந்தர் அவளை பின்தொடர்ந்து நடந்து வருவதை பார்த்து இன்னும் எரிச்சல் கொண்டாள்..

“இப்ப எதுக்கு இந்தர் என் பின்னாடியே வந்துகிட்டு இருக்க.. போ.. உனக்கு அடுத்த கிளாஸ் ஆரம்பிச்சிருக்கும்..”

அவள் சொன்னது எதுவுமே தன் காதில் விழாதது போல அவன் நின்றிருக்க “இப்ப போறியா இல்லையா இந்தர்?” குரலை உயர்த்தி கேட்டாள் அவள்..

“நான் எதுக்கு கிளாஸ்க்கு போகணும்? நீங்க தானே சொன்னீங்க.. அழகை கிளாஸ்க்கு வெளியில ரசிக்கலாம்ன்னு.. அதான் ரசிக்க வந்து இருக்கேன்..”

அவள் முகத்தையே கூர்ந்து பார்த்தபடி சொன்னவனை முறைத்தவள் “இங்க பாரு.. உனக்கு இதெல்லாம் விளையாட்டு போல இருக்கலாம்.. நீ ஒரு ஸ்டுடன்ட்.. உனக்கு இதெல்லாம் பெரிய விஷயமா இல்லாம இருக்கலாம்.. ஆனா எனக்கு இதெல்லாம் விளையாட்டில்ல.. நான் செய்யற வேலை எனக்கு என் உயிருக்கு சமம்.. இந்த புனிதமான டீச்சிங் ப்ரொஃபஷன்ல ஏதாவது தப்பு நடந்து என் மேல ஒரு சின்ன பிளாக் மார்க் வந்ததுன்னா கூட அதை என்னால தாங்கிக்க முடியாது.. நீ இப்ப விளையாட்டா பண்றது எல்லாம் அப்படி ஒரு நிலைமையில தான் என்னை கொண்டு போய் நிறுத்தும்.. அப்படியே ஏதாவது நடந்ததுன்னா அது என் உயிரே போகிறத்துக்கு சமம்.. நீ என்னை அழகா இருக்கேன்னு சொல்றதுக்காகவோ இல்ல என் அழகை ரசிக்கிறேன்னு சொல்றதுக்குக்காகவோ அப்படியே சந்தோஷப்பட்டு துள்ளி குதிக்கறதுக்கு நான் ஒன்னும் டீன் ஏஜ் பொண்ணு கிடையாது.. எனக்கு நிறைய பொறுப்பு இருக்கு.. தயவு செஞ்சு புரிஞ்சுக்கோ இந்தர்.. ப்ளீஸ்.. பிஹேவ் யுவர் செல்ஃப்..”

அவள் அவனுக்கு புரியுமாறு மெதுவாக எடுத்துச் சொன்னாள்.. அவனோ அடம் பிடிக்கும் சிறு பிள்ளையாய் “நான் என்ன தப்பா பிஹேவ் பண்ணிட்டேன்..? நீங்க அழகா இருக்கீங்க.. எனக்கு உங்களை பிடிச்சிருக்கு.. அதைதான் நான் சொன்னேன்.. இதுல என்ன தப்பு இருக்கு? இன் ஃபேக்ட் ஐ லவ் யூ.. எங்க அம்மாக்கு அப்புறம் நான் ரொம்ப நேசிக்கிற பொண்ணு.. என் மனசு முழுக்க நிறைஞ்சிருக்கற பொண்ணு.. நீங்க தான்.. சோ.. எனக்கு டவுட்டே இல்லை.. ஐ லவ் யூ மதி..”

மற்ற மாணவர்களை போல் மதி மேம் என்று கூட சொல்லாமல் நேரடியாக ஏதோ அவனோடு பழகும் விடலை பெண்களிடம் சொல்வது போல் ஐ லவ் யூ மதி என்று கூலாக சொன்னவனை ஓங்கி அறைந்திருந்தாள் மதி..

“இந்தர் தட்ஸ் தி லிமிட்.. உன்னை விட நான் எட்டு வயசு பெரியவ.. உன்னால எப்படி என்னை பத்தி இப்படி எல்லாம் யோசிக்க முடியுது? உனக்கு கடவுள் அறிவுன்னு ஒன்னை வைக்கவே இல்லையா? இங்க பாரு.. நீ விளையாடுறதுக்கு நான் ஆள் இல்ல.. இந்த பிராங்க் பண்றது எல்லாம் வேற யார்கிட்டயாவது போய் வச்சுக்கோ.. எனக்கு நிறைய வேலை இருக்கு..”

அவளால் இன்னும் கூட அவன் உண்மையைத் தான் சொல்கிறான் என்று நம்ப முடியவில்லை.. அவளை பொறுத்தவரை படிக்க விருப்பம் இல்லாததால் ஏதோ வயது கோளாறினால் தன்னோடு வம்பு இழுத்துக் கொண்டு இருக்கிறான் என்று நினைத்தாள் அவள்..

விடு விடு என அவனுக்கு எதிர்ப்புறம் திரும்பி நடந்தவள் பின்னாலேயே “மதி.. மதி,.. நில்லு.. ப்ளீஸ்..” என்றவனை நம்ப முடியாமல் திரும்பி பார்த்தாள் அவள்..

“இந்தர் கால் மீ மேம்… என்னை பேர் சொல்லி கூப்பிடாதே..”

இறுகிய குரலில் அவள் மிரட்டலாய் சொல்ல அவனோ அதற்கு சிறிதும் அசைந்து கொடுக்காமல் முற்றிலுமாய் அவள் சொன்னதை அலட்சியப்படுத்திவிட்டு “மதி.. நான் உன்னை லவ் பண்றேன்.. இதுல என்ன தப்பு இருக்கு? என்னால உன்னை மேம்னு எல்லாம் கூப்பிட முடியாது.. ஒரு 20 வயசு பொண்ணு 28 வயசு பையனை கல்யாணம் பண்ணிக்கலாம்னா ஏன் ஒரு 20 வயசு பையன் ஒரு 28 வயசு பொண்ணு கிட்ட பிரபோஸ் பண்ண கூடாது..? அதுல என்ன தப்பு இருக்கு? நான் ஃபிக்ஸ் ஆயிட்டேன்.. எனக்கு பொண்டாட்டின்னு ஒருத்தி வந்தா அது நீதான்.. உன்னால மட்டும் தான் எங்க அம்மா கொடுத்த மாதிரி ஒரு அன்பை எனக்கு கொடுக்க முடியும்.. உன்னை எப்படியும் நான் கல்யாணம் பண்ணியே தீருவேன்”

“உன்னை பெத்த அந்த அம்மாவையும் உங்க அப்பாவையும் கட்டாயம் நான் பார்க்கணும்.. இந்த மாதிரி ஒரு வரைமுறையே இல்லாம ஒரு க்ளாஸ் ரூம்ல எப்படி நடக்கணும்.. ஒரு குருவை எப்படி பார்க்கணும்னு கூட தெரியாத ஒரு பிள்ளையை பெத்த அந்த அதிசயமானவங்களை… நான் பார்த்து தான் ஆகணும்..”

“எங்க அம்மா அப்பா எல்லாம் நல்லவங்க தான்.. ஆனா அவங்க இப்போ உயிரோட இல்ல..”

“நெனச்சேன்.. அவங்க உயிரோட இருந்திருந்தா நீ இப்படி இருந்திருக்க மாட்ட.. கேக்க ஆளே இல்லாம இருக்கறதனால தான் நீ இப்படி உன் இஷ்டத்துக்கு எது தப்பு எது சரின்னு தெரியாம நடந்துக்குற.. நீ தப்பு பண்ணும்போது உன் மண்டைல ஓங்கி ஒரு அடி போட்டு உன்னை வழி நடத்துற ஆளு ஒருத்தர் வீட்ல இருந்திருந்தா நீ இந்த மாதிரி இருக்க மாட்டே.. சரி.. அப்பலருந்து நான் லவ் பண்றேன்.. நான் லவ் பண்றேன்னு சொல்றியே.. நீ லவ் பண்ணா போதுமா? எனக்கு புருஷனா வர்றவனுக்கு என்னை விட ஒரு வயசாவது அதிகமாக இருக்கணும்கிறது என்னோட விருப்பம்.. என்னை கல்யாணம் பண்ணியே தீருவேன்கிற..  எனக்கு அதுல விருப்பம் இருக்கா இல்லையான்னு கூட தெரிஞ்சுக்காம அதை எப்படி நீயே முடிவு பண்ணுவ? ஒரு பொண்ணை கல்யாணம் பண்ணிக்கறதுக்கு நீ மட்டும் விரும்பினா போதுமா? அவன் விருப்பம் அவசியம் இல்லையா? “

அவனை தீர்க்கமாய் பார்த்து அவள் கேட்க அவனோ விடா கொண்டனாய் “தேவை இல்லை.. கல்யாணம் பண்ணி ஒரு ரெண்டு மாசம் என்னோட இருந்தனாலே உனக்கு என்னை ரொம்ப பிடிச்சு போயிரும்.. அப்புறம் நீயும் என்னை உன் புருஷனா பார்க்க ஆரம்பிச்சுடுவே.. அதெல்லாம் பெரிய மேட்டரே இல்லை.. அப்புறம் நீ சொல்ற மாதிரி கேக்கறதுக்கு ஆள் யாருமே இல்லாம இங்க யாரும் திரிஞ்சுகிட்டு இல்ல.. எங்க வீட்ல எங்க அண்ணன் இருக்காரு.. அவரு என்னை பாசமா பார்த்துக்கிறாரு.. நமக்கு கல்யாணம் நடந்த அப்புறம் நீ அந்த வீட்டுக்கு வருவ இல்லை..? அப்ப நீயே அவரை பத்தி தெரிஞ்சுப்ப.. ஆமா.. நான் இப்ப என்ன தப்பு பண்ணிட்டேன்னு இவ்ளோ கோவப்படுற..? லவ் பண்றது தப்பா?”

“இல்ல.. லவ் பண்றது தப்பே இல்ல.. ஆனா நீ இப்ப பண்ணிட்டு இருக்கியே.. அது லவ் இல்ல.. அது வெறும் ஒரு அட்ராக்சன்.. ஒரு இன்ஃபேக்ஷூவேஷன்.. உன்னோட ஒரு பிடிவாதம்.. அவ்வளவுதான்.. என்னால அதை எந்த காலத்திலயும் என்டர்டைன் பண்ண முடியாது.. உங்க அண்ணன் உன்னை இப்படி அலைய விட்டுட்டு என்னதான் பண்ணிக்கிட்டு இருக்காரு..? இதுதான் அவர் உன்னை பாசமா பாத்துக்குற லட்சணமா? மே பி என்னோட பாடி லாங்குவேஜ்.. நான் எல்லாரோடயும் பழகுற விதம்.. பேசுற விதம்.. இதெல்லாமே உங்க அம்மா மாதிரியே இருக்கலாம்.. அதனால உனக்கு என்னை புடிச்சு போய் இருக்கலாம்.. ஆனா நீ நினைக்கிற மாதிரி எல்லாம் நடக்க வாய்ப்பே இல்லை.. மொதல்ல நீ இந்த காலேஜ்ல என்ன பண்ற? ஏது பண்ற? எதையாவது கவனிக்கிறாரா உங்க நொண்ணன்.. அண்ணனாம் அண்ணன்.. உனக்கு ஒரு கிளாஸ் தான் நான் எடுக்கிறேன்.. ஆனா இங்க இருக்கிற அத்தனை ஸ்டாஃப்பும் உன்னை பத்தி கம்ப்ளெயின்ட் மேல கம்ப்ளெயின்ட் பண்ணிக்கிட்டு இருக்காங்க.. நீ எந்த கிளாஸும் அட்டென்ட் பண்றது இல்ல.. என் கிளாஸ் மட்டும் தான் அட்டென்ட் பண்ற.. மத்த கிளாஸ்ல எல்லாம் அட்டெண்டன்ஸ் ரொம்ப புவரா இருக்கு.. இதை எல்லாம் கவனிக்காம தான் உண்டு தன் வேலை உண்டுன்னு இருக்குறாரு உங்க அண்ணன்.. அவரை வேற பாசமான அண்ணன்னு நீ புகழாரம் வேற பாடிகிட்டு இருக்கே.. இந்த மாதிரி ஒரு அண்ணன் இருக்கிறதுக்கு பேசாம இல்லாமயே இருந்திருக்கலாம்.. நீ கொஞ்சம் உருப்புட்டிருப்பியோ என்னமோ?”

அவ்வளவுதான் எங்கிருந்து தான் அவனுக்கு அவ்வளவு கோவம் வந்ததோ தெரியவில்லை.. மதியின் முன்னால் ஒற்றை விரலை நீட்டி “ஏய்..” என்று கர்ஜித்தவன் “எங்க அண்ணனை பத்தி இன்னொரு வார்த்தை தப்பா பேசினே.. நடக்கிறதே வேற.. அவரு எனக்கு தெய்வம்.. அவரை பத்தி தப்பா பேசாத.. அதுக்கப்புறம் நீ என்னோட லவ்வர்ன்னு கூட பார்க்க மாட்டேன்..” கோவமாய் சீறினான் அவன்..

தொடரும்..

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 5 / 5. Vote count: 4

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!