🤍 *அபயமளிக்கும் அஞ்சன விழியே!* 🤍
👀 விழி 16
“சொல்லு நிதின். நான் கேட்டது உண்மையா?” கைகளைக் கட்டிக் கொண்டு அழுத்தப் பார்வை பார்த்தாள் ஆலியா.
“எஸ் ஆலியா. உங்கப்பா சொல்லி தான் எங்கம்மா கல்யாணத்து ஒத்துக்க மாட்டேன்னு சொல்லிட்டாங்க போதுமா?” அவளுக்கு சற்றும் சளைக்காத தோரணையில் நின்றான் நிதின்.
தன்னிடம் அழுது புலம்பிய மகளிடம் “நிதின் மேல தப்பு இல்லை. உங்கப்பா தான் அவங்கம்மா கிட்ட ஏதேதோ பேசிருக்காரு. சொல்ல வேண்டியத சொல்லிட்டேன். இனி நீ பார்த்துக்க” என்று உண்மையை வெளிச்சம் போட்டுக் காட்டி விட்டார் லீலா.
அவளால் நம்பவே முடியவில்லை. தன்னிடம் ஒரு மாதிரி பேசி விட்டு இங்கு வந்து நிதினின் தாயிடம் அதிகாரம் செய்த தத்தையின் செயல் அத்தனை வெறுப்பை உண்டு பண்ண நிதினைத் தேடி வந்தாள்.
“அப்பா பேசினதுக்கு நான் என்ன டா பண்ணுவேன்? எனக்கு ஏன் தண்டனை தர? உன்னை லவ் பண்ணுனது தப்பா? உன் கூட வாழ ஆசைப்பட்டது தப்பா?” அழுதழுது போயிருந்த விழிகளில் இப்போது கண்ணீர் இல்லை. விரக்தியோடு கூர்ப்பார்வை பார்த்தாள்.
“தப்பு சரியை பற்றி பேசி தீர்க்க முடியாது. விட்டது விட்டாச்சு அவ்ளோ தான்” வெட்டு ஒன்று துண்டு இரண்டாக சொல்லி விட்டான்.
“இதுக்கு தான் அன்னிக்கே உன் கிட்ட வந்து கேட்டேன் ஓடி போகலாமானு. நீ தான் அது இதுனு பேச்சு பேசின. இப்போ பார்த்தியா எத்தனை பிரச்சினைனு?” கடுப்புடன் கூறியவளை கனல் கக்க முறைத்தான் ஆடவன்.
“மறுபடி அந்த பேச்சு எடுக்காத. உங்கப்பா என் அம்மா கிட்ட ரொம்ப ஹார்ஷா பேசி இருக்காரு. அம்மா நொந்து போயிருக்கா. நாம சேர்ந்தா அவங்களால எந்த சங்கடமும் இல்லாம இருக்க முடியுமா? வேணாம் ஆலியா” மறுப்பதிலேயே குறியாக இருந்தவனின் பேச்சு அவளைக் காயப்படுத்தவும் தான் செய்தது.
“என்னடா வேணாம் வேணாம்னு சொல்லுற? வேணாம்னு சொல்லி தூரமா போன என்னை வேணும் வேணும்னு பின்னாடி வந்து லவ் வர வெச்சது நீ தான். இப்போ வேணாம்னு ஒரே வார்த்தையில் சொல்லுறியே. இது உனக்கே சரியா தோணுதா?” அவன் முகத்தை கடுமையாக பார்த்தாள்.
அவளை நேருக்கு நேர் சந்திக்க முடியாது தடுமாற்றம் எழுந்தது.
“அப்பா கிட்ட நான் பேசுறேன். அப்புறம் வந்து உன்னை பார்த்துக்கிறேன்” என்று கிளம்பியவள் நேரே தந்தையின் முன் சென்று நின்றாள்.
“நீங்க இப்படி பண்ணுவீங்கனு கொஞ்சம் கூட எதிர்பார்க்கலப்%