அத்தியாயம் – 2
கலங்கிப் போய் நின்றவள் தோற்றத்தை பார்த்து தன்னை நிதானித்தவன் “தியா நீ என்ன கேட்குறனு புரிஞ்சி தான் கேட்குறியா?” என்ற அவனது கேள்வியில் திணறியவள் “எஸ் மாமா, நீங்க நினைக்கிற போல எனக்கு எதுவும் இல்ல. ஜஸ்ட் ரிசர்ச்கு தேவை. நான் பிரசன்டேஷன் கொடுக்கணும்” என்று தன் வார்த்தைகளை நிறுத்தி நிதானமாக கூறி இருந்தாள்.
புருவங்கள் இடுங்க அவளை பார்த்தவன் “இப்படி எல்லாம் ரிசர்ச் பண்ணுவீங்களா என்ன? என்ன மாதிரி பிரசென்ட் பண்ண போற ? ஐ மீன் உன் ஐடியா என்ன? “ என்று கேட்டான் சந்தேகமாக…
அவன் தன்னை ஆராயும் பார்வை பார்க்கின்றான் என்று சுதாரித்தவள் தன் முக உணர்வுகளை வெளியில் காட்டாது “ இனிமேல் தான் ஐடியா திங்க் பண்ணனும் மாமா. அதுக்குள்ள ரிப்போர்ட் ரெடி பண்ணி வச்சுக்க பார்த்தேன். இட்ஸ் ஓகே நீங்க பிசியா இருப்பீங்க சோ நான் என் ப்ரண்டோட அண்ணா டாக்டர் தான். அவர்கிட்ட ஹெல்ப் கேட்டுக்கிறேன்” என்றவள் தன் இல்லாத நண்பியின் அண்ணனை உருவாக்கியவள் வாயில் வந்ததை அடித்து விட்டு அப்பாவி போல அவனை நோக்கினாள்.
“ஓஹ் கோட் ஆர் யூ மேட்? இப்படி தான் இன்னொருத்தன் கிட்ட போய் வெர்ஜினிட்டி டெஸ்ட் எடுக்க போறியா தியா? என்று அடக்கப்பட்ட சினத்துடன் கேட்டவன் அவளின் திகைத்த பார்வையில் இதழ் குவித்து ஊதிக் கொண்டே “ஆல்ரைட் நானே எடுத்து தரேன்” என்றதும் ‘இத இதத்தான் எதிர் பார்த்தேன்‘ என மனதில் குத்தாட்டம் போட்டவள் “சாரி மாமா, நீங்க பிசியா இருப்பிங்கனு தான் அப்படி சொல்லிட்டேன் என்று சற்று தயங்கிய படியே எப்போ ஹாஸ்பிடல் வர்றது?” என்று கேட்டாள்.
“வில் மீட் டுமோரோ” என்க.
“ஓகே மாமா தேங்க்ஸ்” என்று பற்கள் பளிச்சிட புன்னகைத்தவள் மேலும் இங்கு நின்றால் இல்லாத ரிசர்ச் பற்றி கேள்விகள் கேட்டே தன்னை ஒரு வழி பண்ணி விடுவான் என்று எண்ணிய பெண்ணவளோ, ‘அவனை சைட் அடி’ என்று கூறிய தன் மனதை கடிவாளம் இட்டு அடக்கியவள் “பை மாமா” என்று படிகளின் அருகே ஓடினாள்.
வேகமாக ஓடிய வேகத்தில் மீண்டும் மேலே காஃபி கப்புடன் வந்த விபீஷன் மீது இடித்து விழ இருந்தவள் சட்டென சுதாரித்து பக்கவாட்டாக இருந்த நிலை சுவரை பிடித்து நின்றே விட்டாள்.
“தியா ஆர் யூ ஆல்ரைட்?” “ஆஹித்யா ஆர் யூ ஆல்ரைட்?” என்ற ஒரே கேள்வி இருவரிடம் இருந்து வந்திருக்க, முதலில் மலங்க மலங்க விழித்தவள் தன் முன் சாந்தமாக நின்று கொண்டிருந்த விபீஷனை முறைத்து விட்டு ஜெய் ஆனந்த் புறம் திரும்பியவள் “அம் ஓகே மாமா” என்றவள் தன்னைக் கடந்து ஜெய் ஆனந்த்தின் கையில் விபீஷன் கொடுத்த காஃபியை பார்த்தவள் சடுதியில் என்ன தோன்றியதோ “ஜெய் மாமா குடிச்சிடாதீங்க” என்று சொல்லிக் கொண்டே வேகமாக அவனை நெருங்கியவள் அவன் நிதானிக்கும் முன்னரே அவனின் கையில் இருந்த காஃபி கப்பை பறித்து மிடறு விழுங்கி விட்டு கப்பை ஜெய் ஆனந்த் கையில் திணித்து விட்டு “ ஜஸ்ட் ஃபைவ் மினிட்ஸ் வெயிட் பண்ணுங்க மாமா. எனக்கு எஃபெக்ட் பண்ணுதானு பார்ப்போம். அதுக்கு பிறகு நீங்க குடிக்கலாம்” என்றவள் அவன் அருகில் தன்னையே விழிகள் விரிய பார்த்துக் கொண்டு நின்றிருந்த விபீஷனை தன் அனல் கக்கும் பார்வையால் முறைத்து வைத்தாள்.
“தியா வாட் ஹெப்பென்ட்?” என்ற ஜெய் ஆனந்த்தின் கேள்வியில் திருதிருவென முழித்தவள் இதற்கு என்ன விளக்கத்தை கூறி விட முடியும்?
இவன் கேடு கேட்டவன் உன்னை கொல்ல கூட தயங்க மாட்டான் என்று எப்படி சொல்வது? அதுவும் தன் கனவில் வந்ததை போல அவன் இல்லையே! முற்றிலும் மாறுபட்ட மனிதனாக அல்லவா சாந்தமாக இருக்கின்றான்.
முதலில் தான் என்ன சொன்னாலும் இங்கே இருக்க யாரும் நம்ப மாட்டார்கள் இதில் என்ன விளக்கத்தை உரைப்பது?
‘ஹையோ அவசரத்துக்கு பிட்டு கூட தோணுதில்லையே’ என தன்னை தானே திட்டிக் கொண்டவள் “இதோ வரேன் மா” என்று சத்தமாக கீழ்நோக்கி குரல் கொடுத்தவள் “சாரி அம்மா கூப்பிடுறாங்க” என்று சொன்னவளிடம் “கூப்பிட்ட போல தெரியலையே” என்று நக்கலாக சொன்னது வேறு யாருமில்லை சாட்சாத் விபீஷனே தான்.
விபீஷன் அப்படி கேட்டதும் எங்கு இருந்து தான் அவ்வளவு கோபம் வந்ததோ “ உங்க வேலையை மட்டும் பாருங்க விபீஷன். ஐ திங்க், உங்க காதை கொஞ்சம் செக் பண்ணி பாருங்க. எதாச்சும் ப்ராப்ளம் இருக்க போகுது” என்று முகத்தை உர்றென்று வைத்துக் கொண்டு சொன்னவள் கடை கண்ணில் ஜெய் ஆனந்த் அவளை உறுத்து விழித்துக் கொண்டு நிற்பதை உணர்ந்த பெண்ணவளோ விட்டால் போதுமென தலை தெறிக்க கீழே ஓடி வந்தவள் சட்டென ஸ்விட்ச் போட்டதை போல நின்றாள்.
இதயம் வேகமாக அதிர்ந்து துடிக்க, சத்தம் எழுப்பாது மீண்டும் படிகளில் மேலேறி சென்று பக்கவாட்டு சுவற்றுடன் ஒன்றி நின்ற படி மெதுவாக மேலே எட்டி பார்த்தாள்.
ஆம், இதழ்களில் மென் புன்னகையுடன் அவள் அருந்தி விட்டு கொடுத்த காஃபி கப்பில் வாய் வைத்து சிப் சிப்பாக காஃபியை அருந்திக் கொண்டு நின்றிருந்தான் ஜெய் ஆனந்த்.
அதை பார்த்த அக் கணம், அவள் என்ன மாதிரி உணர்கிறாள் என்று அவளுக்கே புரியவில்லை.
அவளின் மேனி முழுதும் சிலிர்த்தது.
மனதுக்கு பிடித்தவன் தீண்டினால் மட்டும் தான் உடல் சிலிர்க்குமா என்ன?
மெய் தீண்டா, உணர்வுகளை தூண்டா, பேரின்பம் இது தானே!
சற்று நேரம் சுவரில் சாய்ந்து மென் புன்னகையுடன் நின்றிருந்தவள் மனம் நிறைய கீழே சென்றிருந்தாள் பெண்ணவள்.
இங்கோ, சிலவற்றை பேசிக் கொண்டே பேச்சின் சுவாரஸ்யத்தில் “வேற காஃபி எடுத்து வரட்டுமா?” என்று விபீஷன் கேட்ட கேள்வியில் சட்டென அவன் புறம் பார்வையை திருப்பிய ஜெய் ஆனந்த் “ ஏன் நான் குடிக்கிறது காஃபி போல தெரியலையா?” என்று கேட்க…
“இல்ல ஆஹித்யா?” என்றான் இழுவையாக…
அதற்கு மென் புன்னகையை பதிலாக தந்தானே தவிர, வேறு ஒன்றும் பதில் கூற முனையவும் இல்லை ஜெய் ஆனந்த்.
அவனின் புன்னகையில் விழி விரித்தவன் “சிரிக்கிறதை பார்த்தா என்னவோ சீக்ரெட் இருக்கு போலவே ” என்று நக்கலாக விபீஷன் பாதியோடு கேட்டு விட்டு காஃபியை அருந்திக் கொண்டே கீழே பார்க்க, அதே நேரம் ஜெய் ஆனந்த்தின் பார்வையும் கீழே நின்றவர்களின் மேல் படிந்தது.
பவ்யாவை இறுக அணைத்த படி, அவள் கத்த கத்த கேட்காமல் அவளை வம்பிலுத்த படி செல்லும் ஆஹித்யாவின் மேல் அவன் பார்வை அழுத்தமாக படிந்தது.
“வியர்ட்டா பிஹேவ் பண்ணிட்டு இருக்கா என்று சொல்லிக் கொண்டே விபீஷனைப் பார்த்து எதுக்கு உன்னை எதிரிய பார்க்குற போல பார்க்குறா? உங்க ரெண்டு பேர்குள்ள எதுவும் சண்டையா என்ன?” என்ற ஜெய் ஆனந்த்தின் கேள்வியில், “சண்டை போடுற அளவுக்கு நான் என்ன பண்ண போறேன்? உனக்கு தான் தெரியுமே நான் ரொம்ப சைலண்ட்ன்னு உன்கிட்ட பேசுற அளவுக்கு யார்கிட்டயும் பேச மாட்டேனே” என்று சொல்ல…
“ஹும் ஓகே, என்றவன் ஹாஸ்பிடல் அஹ் பார்த்திட்டு வந்துடலாமா?”
“ஹும் கிளம்பலாம்” என்றவன் அவனது காஃபி கப்பை வாங்க முயல,
“இன்னுமே நீ மாறவே இல்ல விபீஷன். பட் இட்ஸ் ஓகே யூ எஸ் ல நானே தான் என் வொர்க்கை பார்த்துப்பேன்” என மென் புன்னகையுடன் கூற…
“சில் டா, என் ப்ரோகு நான் பண்றேன் இதுல என்ன இருக்கு” என்று அவன் கையில் இருந்த காப்பி கப்பை வாங்கிக் கொண்டு படிகளில் இறங்கி சென்று விட்டான்.
இதழ் குவித்து ஊதிக் கொண்டே போகும் அவளின் முதுகை வெறித்த படி நின்றிருந்தான் ஜெய் ஆனந்த்.
சின்ன எபி ன்னு எனக்கே புரியுது 😁
அடுத்த epi பெருசா கொண்டு வரேன். இந்த கதையை சீக்கிரமா எழுதி முடிச்சிருவேன்❤️
இது வரையும் இந்த கதையை ரீட் பண்ணி support பண்ண எல்லாருக்கும் கோடி நன்றிகள் டியர்ஸ் ❤️🫂
எப்பா முடியல. விபீய இப்படி காமெடி பீஸா ஆக்கிட்டீங்களே. எவ்ளோ கெத்தான ஆள் தெரியுமா?👌👌👌👌👌👌👏👏👏👏👏🤩🤩🤩🥰🥰🥰😍😍