41. விஷ்வ மித்ரன்

5
(1)

விஷ்வ மித்ரன்

 

💙 நட்பு 41

 

“டேய் டேய் என்னங்கடா நடக்குது? இங்கே இருந்த மித்து பயல் எங்கே போனான்?” தன் முன்னே இருந்த அண்ணனிடம் கேட்டாள் அக்ஷரா.

 

“நீ ரொம்ப டாச்சர் பண்ணுறன்னு கொஞ்ச நேரம் பீச் போய் அழகான பொண்ணுங்களை சைட் அடிச்சுட்டு வரேன்னு போயிட்டான்” ஹெல்மெட்டை மாட்டியவாறு கூறினான் விஷ்வா.

 

“அவன் பொண்ணுங்களை சைட் அடிச்சுட்டாலும். அப்படி அடிச்சாலும் நான் விட்றுவேனா? அடி பின்னி எடுத்துருவேன்” கையை முறுக்கிக் காட்டினாள்.

 

“ஆமாடி பாவம் அவன். போயும் போயும் உன்னை மாதிரி பஜாரி கிட்ட மாட்டிக்கிட்டானே. அந்த கவிதாவை லவ் பண்ணி இருந்தால் அவள் தாங்கு தாங்குனு தாங்கி இருப்பாள். நீ அவனைப் போட்டுத் தாக்குற. ஓ மை லாட்! இந்த அநியாயத்தைக் கேட்க யாரும் இல்லையா?” வானத்தைப் பார்த்துப் புலம்பினான் அண்ணன்காரன்.

 

“ரைட்டு! இன்னிக்கு என்னை ஒரு வழி பண்ணாமல் விடக் கூடாதுன்னு சபதம் எடுத்துட்டு வந்திருக்க. அவன் எங்கே போனான்?”

 

“இன்னிக்கு ஷாப்பிங் போக போறோம் தானே? நம்ம பயணத்தில் மூன்று கட்டங்கள் இருக்கு. இப்போ அண்ணன் தங்கச்சி ரைட்! நெக்ஸ்ட் ஃப்ரெண்ட்ஸ் ரைட்! லாஸ்ட் ஹஸ்பன்ட் என்ட் ஃவைப் ரைட். புரிஞ்சுதா?”

 

“அப்படியா? செம ப்ளேன் விஷு. அதனால் அருள் வைஷு கூட போக கிளம்பிட்டானா?”

 

“எஸ் முட்டைக்கோஸ்! எப்படி என் ஐடியா?”

 

“பெரிய டுவர் போக போற மாதிரி ப்ளானிங்கு ஐடியானு. ச்சீ பேஹ்”

 

“உனக்கு பிடிக்கலைனா நில்லு. நான் போறேன்” என பைக்கை ஸ்டார்ட் செய்ய,

 

“அடேய் நில்லு டா. என்னை விட்டுட்டுப் போயிடாத” என அவசரமாக ஏறிக் கொண்டாள்.

 

“அது! வாயைத் திறக்காமல் வரனும்” அவளை எச்சரிக்கை செய்திட தலையசைப்புடன் வந்தவள் இடையில் மெதுவாக சுரண்டினாள்.

 

“என்னடி எலிக்குஞ்சு மாதிரி சுரண்டுற?”

 

“அண்ணா பானிப்பூரி” என கையைக் காட்டினாள்.

 

“அண்ணாவா? அடிப்பாவி எப்போவும் டேய் டோய்னு மரியாதையை பறி கொடுத்துட்டு இப்போ பானிப்பூரிக்காக பாசத்தை வழிய விடுற?” என்று கிண்டலடித்தவன் பைக்கை நிறுத்தி விட்டு வாங்கிக் கொடுத்தாள்.

 

“உனக்கு வேண்டாமே?” என்று கேட்டவளிடம், “ஒரு பேச்சுக்கு கூட வேணுமானு கேட்காமல் வேணாமேனு சொல்லுற. நல்லா வருவ. நீ சாப்பிடு அரிசி மூட்டை” என சிரிப்புடன் சொன்னான்.

 

“விஷு! வைஷு கிட்ட லவ் சொல்லிட்டியா?”

 

“சொல்லனும் டி. இத்தனை நாள் காத்திருந்தேன். ரிசப்ஷன் முடிய சொல்லிருவேன்” இவ்வாறு பேசியவாறு ஷாப்பிங் மாலை வந்தடைய மித்துவும் வைஷுவும் வந்து சேர்ந்தனர்.

 

“ஹாய் அக்ஷு” என அழைத்த வைஷுவின் கையை, “ஹல்லோ அண்ணி குட்டி” என்று பற்றிக் கொண்டாள் அக்ஷரா.

 

“என்னமோ பல வருஷம் கடந்து சந்திக்குற மாதிரி பில்ட் அப் கொடுக்கிறீங்களே. இதெல்லாம் ஓவரு” அங்கலாய்த்துக் கொண்டான் விஷு.

 

“உனக்கு வயித்தெரிச்சல் டா. உன் ப்ரெண்டும் பக்கத்தில் தானே இருக்கான். வேணும்னா போய் கட்டி பிடிச்சுக்க” அண்ணனை முறைத்தாள் தங்கை.

 

“நீ சொல்லவே தேவையில்லை அக்ஷு. இவங்க நாம சொல்லாமல் முத்தமே குடுப்பாங்க. ஹக் பண்ண மட்டும் சொல்லனுமா?” அவளுடன் ஹைஃபை கொடுத்தாள் வைஷ்ணவி.

 

“ஆங்! உன் கிட்ட ஒன்னு சொல்லனும் மாப்ள. உன் தங்கச்சி நான் ஒன்னு கேட்டு தர முடியாதுன்னு சொல்லிட்டாள்” நண்பனிடம் விஷ்வா கூற,

 

‘அய்யோ! கிஸ் பண்ணாததை சொல்லப் போறாரோ’ என அதிர்ந்து போய், “விஷு வேணாம்” என பாவமாகப் பார்த்தாள்.

 

“என்ன தரலை? சொல்லு நான் தர வைக்கிறேன்” வேறு ஏதாவதாக இருக்கும் என்று எண்ணினான் மித்து.

 

“அது… முத்” என ஆரம்பிக்கும் போது, எட்டி அவனது வாயைத் தன் கையால் பொத்தினாள் மனைவி.

 

“ப்ளீஸ் ப்ளீஸ் விஷு வேணாம்” கண்களை சுருக்கி இமைகளை சிமிட்டி தன்னை குழந்தையாய் ஏறிடுபவளின் அருகாமை ஆடவனை ரசிக்க வைத்தது.

 

“ரிசப்ஷன் அன்னிக்கு கண்டிப்பா தருவேன். இப்போ வேணாம்” என காதருகே ரகசியம் கொஞ்சும் குரலில் சொன்னவளிடம் ‘நிஜமாவா?’ என்பதாக விழியசைவில் கேட்டான்.

 

“ம்ம் ப்ராமிஸ்” என்று கெஞ்சியவள் கையை எடுக்க, “முத்து பதித்த ரிங்கைக் கேட்டேனா அதைத் தரலைனு சொல்ல வந்தேன் ஹி ஹி” என சமாளிப்புடன் நெற்றியை நீவி விட்டான் விஷ்வா.

 

“ஓஹ்ஹோ நம்பிட்டோம்” நக்கலாகச் சிரித்தான் மித்ரன்.

 

“உன் சமாளிபிகேஷன் வேற லெவல் அண்ணாத்த” களுக்கென நகைத்தாள் அக்ஷரா.

 

நால்வரும் ஷாப்பிங் மாலினுள் நுழைய “நீ தரேன்னு சொன்னதை நம்ப முடியலையே” என வைஷுவிடம் மெதுவாக வினவினான் கணவன்.

 

“நீங்க நம்பலைனா நான் என்ன பண்ணுறது?”

 

“வேணும்னா குட்டியா ஒரு ரிகர்ஸல் காட்டுறியா. அப்போ நம்புறேன்” என நெருங்கி வந்தான்.

 

“ஹேய் எல்லாரும் பார்க்குறாங்க” என விலகி நடந்தாள் அவள்.

 

“பொண்ணுங்க சொல்லி அலுத்துப் போன டயலாக் இது. நான் அடுத்தவன் வீட்டுப் பொண்ணு கூடவா க்ளோஸா இருக்கேன். என் பொண்டாட்டி கூட. உன்னை அணைப்பேன், ஏன் பூக்குவியல் போல் அள்ளித் தூக்கிட்டு கூட போவேன்” என்று கண்ணடித்தான் ஜித்து.

 

முதலில் கோர்ட் எடுக்கும் பகுதிக்குச் சென்று நண்பர்கள் இருவரும் ஆராய்ந்தனர். மித்து நீல நிற கோர்ட் எடுக்க, “இது வேணாம் டா. ப்ளேக் கலர் பார்” என்றான் விஷ்வா.

 

“நோ ப்ளூ நல்லா இருக்கும்? சோ அதையே எடுக்கலாம்”

 

“நோ! எனக்கு கறுப்பு தான் வேணும்” உடும்புப் பிடியாக நின்றான் விஷு.

 

“இல்லை எனக்கு ப்ளூ தான் வேணும். அதை எடுக்கலனா என் கூட பேசாத” அவனை விட முறுக்கிக் கொண்டான் மித்து.

 

“என்னடி சின்னப் பிள்ளைங்க மாதிரி சண்டை போட்டுக்குறாங்க?” என்று வைஷு கேட்க, “வைட் அன்ட் ஸீ” இது தினமும் நடக்கும் கூத்து என்பதால் வேடிக்கை பார்த்தாள் அம்முலு.

 

“அக்ஷு! ப்ளேக் நல்லா இருக்கும் தானே?” என்று விஷ்வாவும், “அம்முலு எப்போவும் கறுப்பு தானே. கொஞ்சம் சேன்ஜா ப்ளூ ட்ரை பண்ணா நல்லா இருக்கும் தானே?” என மித்துவும் ஒரே சமயத்தில் கேட்டனர்.

 

“அய்யோ கடவுளே! யாராவது ஒருத்தர் விட்டுக் கொடுங்க” என்று அக்ஷு தலையில் கை வைக்க, இருவரும் முறுக்கிக் கொண்டு எதிரெதிரே முறைத்துப் பார்க்க ஒருவரும் விட்டுக் கொடுத்த பாடில்லை.

 

“சார்! ப்ளேக்ல இதே சைஸ்ல ஒன்னு தான் இருக்கு” என்று கடைப் பையன் சொல்ல, “ரெண்டு ரெண்டா கொண்டு வந்து வெச்சா குறைந்தா போயிடுவீங்க? ஒவ்வொன்னா வெச்சு உயிரை எடுக்காதீங்க” அவனிடம் எகிறினான் விஷ்வா.

 

“ஜோடி ஜோடியா ட்ரெஸ் போட்டா நீங்களாடா எல்லாம் வாங்குவீங்க? எங்க பிசினஸ்ல மண்ணை அள்ளிப் போடப் பார்க்கிறாயா” என்று மனதினுள் கருவிக் கொண்டான் அந்த பாவப்பட்ட ஜீவன்.

 

“அதான் இல்லைனு சொல்லுறாங்கள்ல. ப்ளூ ரெண்டையும் எடுக்கலாம். உனக்கு வேற சான்சே இல்லை” என்று பெருமிதத்துடன் பார்த்தான் மித்து.

 

சிப்பந்தி நீல நிற கோர்ட் இரண்டையும் கொண்டு வந்து வைக்க, மித்து பார்க்காத சமயம் அதில் ஒன்றை மறைத்து வைத்து, “இங்கே பார் இதுவும் ஒன்னு தான்” என்றவன் கடைப் பையனின் பேயறைந்த முகத்தைக் கண்டு இளித்து வைத்தான்.

 

“டேய் குருவிக் கூடு மண்டையா! ப்ளூ ரெண்டு செட் இருக்குனு சொல்லிட்டு ஒன்னை மட்டும் தந்திருக்க. உனக்கு கணக்கு தெரியாதா?” இம்முறை அவனைத் திட்டினான் மித்ரன்.

 

அவனோ மெல்லவும் முடியாமல் துப்பவும் முடியாமல் திகைக்க, என்ன நடந்திருக்கும் என யூகித்தவனோ, “டேய் ராஸ்கல்! மறைச்சு வெச்சியா?” என்று கேட்டான்.

 

முறைப்புடன் அதை எடுத்துக் கொடுத்தவன், “நீ கேட்டதை மட்டும் வாங்கப் போறல்ல?” என்றான்.

 

“ஆமா நான் கேட்டது. ஆனால் உனக்கு பிடிச்சது இல்லையா? உனக்குப் பிடிச்ச கலர் ப்ளூ. சோ நான் அதை ஆசையா கேட்டேன். நான் ஆசையாகக் கேட்டதை நீ ட்ரெஸ் பண்ண விரும்ப மாட்டியா டா?”

 

“ம்ம் சரி அதையே எடுத்துக்க” புன்முறுவல் பூத்தான் விஷு.

 

“எதே? விஷுக்கு பிடிச்ச கலர் ப்ளூவா? அப்போ அதை ஏன் அண்ணா கேட்டார்?” அக்ஷராவின் காதில் குசுகுசுத்தாள் வைஷு.

 

“விஷுக்கு பிடிச்ச கலர் ப்ளூ. அதை அவனுக்காக மித்து கேட்டான். மித்துக்கு பிடிச்ச ப்ளேக் கலர் வேணும்னு விஷு கேட்டான். அவ்ளோ தான்” தோளைக் குலுக்கிக் கொண்டாள் அக்ஷு.

 

“இவனுங்களை புரிஞ்சுக்கவே முடியலை” என்று முணுமுணுத்தாலும் இப்போதும் ஏதோ ஒரு வகையில் சிலிர்க்க வைத்தது விஷ்வ மித்ரர்களின் நட்பு.

 

அதே நீல நிறத்தில் பெண்களுக்கு லெஹெங்கா எடுத்து இன்னும் அதற்கு ஏற்ற ஜ்வெல்ஸ் தெரிவு செய்து முடிக்க மதியமும் ஆகி விட்டது.

பசி வயிற்றைக் கிள்ள, இப்போது மித்து பைக் ஓட்ட அவனோடு விஷுவும், அக்ஷுவுடன் வைஷுவும் அமர்ந்து ஹோட்டலை நோக்கி சென்றனர்.

 

“ரொம்ப நாளைக்கு அப்புறம் உன் கூட பைக் ரைட் போற மாதிரி இருக்கு மாப்ள. காலேஜ் டேய்ஸ்ல எப்போவும் போவோமே” என்று இதழ் குவித்து காற்றை ஊதித் தள்ளினான் விஷ்வா.

 

“எஸ் டா. அந்த நாட்களை ரொம்ப மிஸ் பண்ணுறேன். எனக்கு இன்னும் நமக்கு கல்யாணம் ஆகினதை நம்பவே முடியலை. இன்னும் உன்னைப் பார்க்கும் போது ‘என் கூட ப்ரெண்ட் ஆகு’ என்று கேட்ட அடாவடி குட்டி விஷ்வாவைத் தான் நினைவு வருகிறது” புன்னகையுடன் உரைத்தான் தோழன்.

 

“நீ மட்டும் எப்படி? என்னை ஃப்ரெண்டா ஏத்துக்க டெஸ்ட் எல்லாம் வெச்சல்ல. ஆடிட்யூட் ஃபெலோ” செல்லமாக அவன் முதுகில் அடித்தான் விஷ்வஜித்.

 

“ஹா ஹா. உனக்கு அந்த ஆடிட்யூட் மித்துவைத் தானே பிடிச்சது. என் கூட ஃப்ரெண்ட் ஆகவும் ஒரு தகுதி தராதரம் வேணும்” கெத்தாக சொன்னான்.

 

“போடா போடா! வாயில் நல்ல வார்த்தை கொஞ்சம் வரப் போகுது. தகுதியும் கத்திரிக்காயும். உன் கூட நண்பனா இருக்கும் தகுதி எனக்கு மட்டும் தான் இருக்கு” மித்ரனின் நண்பனாய் இருப்பதில் அவனது மித்திரனின் அதரங்களில் கர்வப் புன்னகை தவழ்ந்தது.

 

விஷவாவின் இறுதி வார்த்தைகளில் உள்ளம் நிறைய அவனைத் தனக்கு நட்பாக்கியதற்கு கடவுளுக்கு நன்றி செலுத்தினான் மித்ரன்.

 

இவர்கள் இப்படி இருக்க, “பசி வெறியில் வயித்துக்குள் இருக்கும் புழு குய்யோ முய்யோனு பரத நாட்டியம் ஆடுது. இந்த தடி மாடுங்க டூயட் பாடிட்டு ஆடிப்பாடி வருதுங்க போல” ஓட்டலின் முன் நின்று பட்டாசாக வெடித்துக் கொண்டிருந்தாள் அக்ஷரா.

 

“அதோ வராங்க” என்று வைஷு கை காட்ட இருவரும் வந்து இறங்க, “அம்முலு! வண்டி ஓட்டத் தெரியாமல் கெத்து காட்டி எங்காவது போய் முட்டி மோதிட்டியா?” கிண்டலுடன் வந்தான் மித்து.

 

“ஆமாடா! இருக்கும் கொலை வெறிக்கு உங்க ரெண்டு பேரையும் முட்டி மோதனும்னு தோணுது. சீக்கிரம் வாங்கடா பசிக்குது” என்று கத்தினாள் அக்ஷு.

 

“சரி டி சரி! பச்சைக் கிளி மாதிரி கீச்சிடாத. போய் ஆர்டர் பண்ணுறேன்” என ஆர்டர் பண்ணி அதை செல்பீ எடுத்தான் விஷ்வா.

 

“இந்த செல்பீயை குல்பி சாப்பிட்டுட்டு எடு. இப்போ நான் சாப்பிட போறேன்” என சாப்பிடத் துவங்கினாள் அக்ஷரா.

 

அப்படியே புரையேற, தலையில் தட்டி தண்ணி எடுத்துக் கொடுத்தான் கணவன்.

 

“இவளால் பசி பொறுக்க முடியாதுல்ல மித்து. எனக்கும் மறந்தே போயிருச்சு. தெரிஞ்சா ரோட்டுக் கடையில் சாப்பிட்டு இருக்கலாம்” என விஷ்வா நொந்து கொள்ள ஆமோதிப்பாக தலையாட்டினான் நண்பனும்.

 

“டேய் பாச மலரு. ஓவரா சீன் போடாமல் சாப்பிடு” அண்ணனின் தலையில் தட்டினாள் அக்ஷரா.

 

வைஷு விஷ்வாவை இமைக்க மறத்து ரசிக்க, “பாப்பா! மாப்ளயை அப்பறமா ரசிக்கலாம். இப்போ சாப்பிடு” என்று மித்து அவளின் காலை வார,

 

“போங்கண்ணா” என சிணுங்கிக் கொண்டு சாப்பாட்டில் கவனம் செலுத்தினாள் அவள்.

 

இவ்வாறு சேட்டையும், கிண்டலும், சிரிப்புமாய் சாப்பிட்டு முடிந்து தம் இணையுடன் பைக்கில் பயணமாகினர் ஆடவர்கள்.

 

“ஓய் நவிமா! என்ன தனியா சிரிக்கிற?” கண்ணாடி வழியாக தன்னவள் முகத்தில் இருந்த புன்னகையைக் கண்டு கேட்டான் விஷ்வா.

 

“ஏன் சிரிக்கிற? ப்பாஹ் இந்த வார்த்தையைக் கேட்கும் போதே அப்படி ஒரு சந்தோஷம் எனக்குள்ள. காரணத்தைத் தெரிஞ்சுக்கிட்டும் ஏன் அழுகுற வைஷ்ணவி அப்படினு தான் இருபது வருஷமா என் கிட்ட ஆசிரமத்தில் உள்ளவர்கள் கேட்பாங்க.

 

அழாதம்மானு ஆறுதல் சொல்லக் கூட யாரும் இல்லாமல் சிரிப்பின் முகவரியைக் கூட அறியாமல் இருந்தேன். ஆனால் இன்னிக்கு சிரிப்புப் புத்தகத்தின் மொத்தப் பக்கத்தையும் படித்து அறிந்தவளா இருக்கேன்.

 

வாழ்க்கையில் கஷ்டம் நிரந்தரம் இல்லை. சந்தோஷமும் நிரந்தரமில்லை. ஒன்னு போக ஒன்னா மாறி மாறி வந்துக்கிட்டே இருக்கும் இல்லையா? அதே மாதிரி இத்தனை வருஷமாக கவலையில் மட்டுமே புரண்ட நான் இப்போ மகிழ்ச்சியில் மூழ்கித் தத்தளிச்சிட்டு இருக்கேன்.

 

என் மனசுல அலைபாயும் சந்தோஷத்தை வார்த்தையால் சொல்லிட முடியலை. அன்பான அண்ணா, பாசமான தோழி, இன்னும் சில அழகான உறவுகள், அதிரடியான கணவன் இதைத் தவிர வேறென்ன வேணும் எனக்கு?” உணர்வுக் குவியலாய்த் தான் மிதந்தாள் காரிகை.

 

அவளது உள்ளத்து உணர்வை துல்லியமாகப் படித்தவனோ ஒன்றும் கூறாது அவளையே ஆழமாகப் பார்க்க, தன்னவளை இதே போன்று என்றும் அளவற்ற மகிழ்வுடன் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று நினைத்துக் கொண்டான் நவியின் ஜித்து.

 

விஷ்வாவின் மனநிலை இப்படி இருக்க, அவனது நண்பனோ மனையாளின் காதல் கணைகளின் வீச்சில் தட்டுத் தடுமாறி சரியும் மனதை கட்டுக்குள் கொண்டு வர முயன்று கொண்டிருந்தான்.

 

“செல்லக் குட்டி தள்ளி நில்லு டா” என்று கிறக்கத்துடன் கிறு கிறுக்கக் கூறினான் மித்ரன்.

 

“முடியாது டா இப்படித் தான் வருவேன். நீ வாயை வெச்சுட்டு வண்டியை ஓட்டு” அவன் இடையூடு கையிட்டு முதுகில் கன்னம் பதித்தாள் காதலி.

 

“வாயை வெச்சுட்டு இருக்க முடியும். ஆனால் கையை வெச்சுட்டு இருக்க முடியல டி. என் முதுகில் பச்சக்குனு ஒட்டிக்கிட்டு இருக்கும் முயல் குட்டியை முன்னாடி இழுத்தெடுத்து கட்டிப் பிடிச்சுக்க சொல்லி கை பரபரக்குது”

 

“தாராளமா கட்டிப் பிடிச்சுக்க” அவனை முதுகோடு இன்னும் ஒட்டிக் கொண்டாள் அவனை அவஸ்தையில் ஆழ்த்தும் பொருட்டு.

 

“கட்டிப் பிடிச்சுக்குறது ப்ராப்ளம் இல்லை. நான் பைக் ஓட்டிட்டு இருக்கேன். அதைக் கைவிட்டால் எங்கேயோ போய் மோதிருவேன். நாளைய பேப்பர்ல சாலை விபத்தில் புதிதாக கல்யாணமான ஜோடி பலி’ அப்படினு கொட்டை எழுத்தில் வரும்” என்ற பேச்சில்,

 

“அரூஊஊள்” என்று கத்தினாள் அக்ஷரா.

 

நடுங்கும் குரலில், “ப்ளீஸ் டா இப்படிலாம் அபசகுணமாக பேசாத. எனக்கு கஷ்டமா இருக்கு” என்க,

 

சட்டென பைக்கை ஓரமாக நிறுத்தியவன், தண்ணீர் போத்தலை எடுத்து அவளுக்கு நீர் புகட்டினான்.

 

“ஹே சாரிடாம்மா! நான் ஏதோ சட்டுனு சொல்லிட்டேன். ஜோக்கா தான் சொன்னேன். உன்னை இப்படி கஷ்டப்படுத்தும்னு எதிர்ப்பார்க்கலை” அவளது தலையை ஆதரவாக வருடிக் கொடுத்தான் காளை.

 

“இனிமேல் இப்படி பேசாத. என்னால தாங்கிக்க முடியாது அருள்”

 

“ஓகே ஓகே! நான் பேசலை போதுமா? கொஞ்சம் சிரிக்கலாமே”

 

“பண்ணுறது எல்லாம் பண்ணிட்டு சிரிக்க சொன்னா ஈசியா சிரிக்க முடியாது” முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டாள் அம்முலு.

 

“நீ சரியான அழுகாச்சி டி. ஒரு செக்கன்ல அழுதுருவ. ஆனால் சிரிக்க வைக்கிறது ரொம்ப கஷ்டம்” புருவத்தைத் தூக்கி அலுத்துக் கொண்டான்.

 

“என்னைப் பார்த்தால் அழுகாச்சி மாதிரி தெரியுதா? உனக்கு வாய்க் கொழுப்பு கூடிப் போச்சு டா. இரு அதை அடக்குறேன்”

 

“எஸ் எஸ்! என் வாய்க்கொழுப்பை அடக்க உன்னால மட்டும் தான் முடியும்” இதழ்களை நாவால் ஈரமாக்கினான் அவன்.

 

“ச்சீ! ரொம்ப மோசம் டா நீ. எப்போவும் அதே நினைப்பு தான்” அவனது தோளில் அடித்தாள் அக்ஷு.

 

“அடடே! சீக்கிரம் சிரிக்க வைக்கலாம்னு பார்த்தா வெட்கப்படுற. உன்னை சிரிக்க வைக்கிறதை விட ஈசியா வெட்கப்பட வைத்து விடலாம் போலவே. சிரிப்பை விட வெட்கச் சிவப்பு தான் என் அம்முலுக்கு அழகு” அவளது நாடி பிடித்துக் கொஞ்சினான் அருள்.

 

“நான் எங்கே வெட்கப்பட்டேன்? நீயா ஒன்னைக் கற்பனை பண்ணிக்காத” லேசான முறைப்பைத் தொடர்ந்து அவள் வதனத்தில் நாணம் அலைபாய, இதழ்களில் தானும் குறுநகை பூத்தது.

 

“சிரிப்பை விட வெட்கம் அழகு என்றால் சிரிப்போடு சேர்ந்த வெட்கம் அழகோ அழகு! பேரழகு” என்று தன் தேவதையை இமை சிமிட்டவும் மறந்து போய் ரசித்தான் அவளது இதயத்தில் அச்சாரம் பதித்த அக்ஷர மித்ரன்.

 

நட்பு தொடரும்….!!

 

 

✒️ ஷம்லா பஸ்லி

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 5 / 5. Vote count: 1

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!