விஷ்வ மித்ரன்
💙 நட்பு 42
‘கோல்டன் ரிசப்ஷன் ஹோல்’ இளஞ்சூரியக் கதிர்களின் கைவண்ணத்தில் பெயருக்கு ஏற்றார் போல விகசித்துக் கொண்டிருந்தது.
பார்கிங் ஏரியாவில் ஏராளமான வாகனங்கள் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டிருக்க, மக்கள் கூட்டம் அவ்விடத்தை நிறைந்திருந்தது.
திருமணத்திற்கு விடுபட்ட உறவுகள், நட்பு வட்டாரங்கள் மற்றும் ஊர் மக்கள் அனைவரையும் சிவகுமார் மற்றும் ஹரிஷ் அழைத்திருக்க சலசலப்பும் கலகலப்புமாய் இருந்தது நம் நாயகர்களின் ரிசப்ஷன்.
“மாம் பண்ணுறது கொஞ்சம் கூட நல்லா இல்லை மாப்ள! அவங்க ரிசப்ஷனுக்கு வீட்டில் தான் மேக்கப் போட்டாங்களாம். இந்த அக்ஷு, வைஷுவை மட்டும் ஏன் எங்கோ சலூனுக்கு அனுப்பி இருக்காங்க?” என்று தன்பாட்டில் உளறிக் கொண்டிருந்தான் விஷ்வா.
“இத்தோட நீ நாலாவது தடவை இதைக் கேட்குற? வந்ததும் அம்மா கிட்டயே கேளு. இப்போ என் காதுக்கு கொஞ்சம் ரெஸ்ட் கொடு டா” கோர்ட் பட்டனை மூடியவாறு பாவமாகப் பார்த்தான் மித்ரன்.
“உனக்கு என்ன? நீ பவுடர் டப்பா கூட பேசிட்ட. நான் தான் வைஷுவோட பேசலை” முறுக்கிக் கொண்டு வாட்சைக் கட்டினான்.
“ஒன் மினிட் இரு” என்றவன் தனது பாக்கெட்டில் இருந்து சில்வர் அன்ட் ப்ளூ கலந்த கைக்கடிகாரத்தை எடுத்து நண்பனின் கையில் கட்டி விட்டான்.
“வாவ்! சூப்பர் மித்து. எப்போ வாங்கின?” என்று வியந்தான்.
“யூ.கேல இருக்கும் போது. எனக்கும் கட்டி விடு” என அதே போல் ஒன்றை நீட்ட, அதைக் கட்டி விட்டான் விஷு.
“நம்ம ஃப்ரெண்ட்ஸ் எல்லாரும் வந்துட்டாங்களாம். வா போகலாம்” என இருவரும் சென்றனர்.
பட்டர் கலர் பேன்டும், ஷர்ட்டும் அணிந்து நீலநிற கோர்ட் போட்டு முடியை பொக்ஸ் கட் வெட்டி, ஒரு கையில் வெள்ளிக் காப்பும் மறு கையில் ஒன்று போல் கைக்கடிகாரமும் அணிந்து ஒரே உயரத்திலும், நிறத்திலும் இருந்தவர்களைக் கண்டு வழக்கம் போல் நட்பு வட்டாரத்தை வியக்க வைத்தது.
விஷ்வாவின் விழிகளோ தன்னவள் வருகைக்காக காத்திருக்க, “டேய் டேய்! கொஞ்சம் வெயிட் பண்ணு வருவாங்க” என காதருகே ரகசியமாகச் சொன்னான் மித்து.
“என் பையன் என்ன சொல்லுறான்?” என்று ஹரிஷ் கேட்க, “நான் என்ன சொல்லுறேன்னு என் கிட்டேயே கேட்பீங்களா டாடி?” தந்தையிடம் கேட்டான் மகன்.
“நான் கேட்டது என் பையன் விஷ்வாவை. உன்னை இல்லை” என்று அவர் சொல்ல,
“போங்க டாடி! நீங்க ரொம்ப மோசம். பெத்த பையனை விட அவனைத் தூக்கித் தலையில் வெச்சு கொண்டாடுறீங்க. மருமகன் ஆனாலும் மகனாக முடியுமா?” செல்லக் கோபத்தில் புறுபுறுத்தான் ஆடவன்.
“மருமகன் ஆகுறதுக்கு முன்னாடி நான் அப்பாவுக்கு மகன். போடா போ” என ஹரிஷின் தோளில் கை போட்டான் விஷ்வா.
“எனக்கு பொறாமை வருது” என மித்ரன் முறைக்க, “நீ என் கிட்ட வா கண்ணா” என அழைத்தார் சிவகுமார்.
“வவ்வவ்வா! உனக்கு அவர்னா எனக்கு என் சிவாப்பா இருக்கார்” விஷ்வாவுக்கு பழிப்புக் காட்டினான் நண்பன்.
“உங்களுக்கு இன்னும் சின்னப் பிள்ளைங்கனு நினைப்பா? கல்யாணம் முடிஞ்சு ரிசப்ஷன் வேற நடக்குது. என் அப்பா உன் அப்பானு பாசப்போராட்டம் நடத்திட்டு இருக்கீங்க.
என்னங்க ஆட்கள் வர நேரத்தில் இங்கே என்ன வேலை வாங்க. அண்ணா நீங்களும் வாங்க” என அழைத்தார் நீலவேணி.
“நாம ஒன்னா இருந்தால் உங்கம்மாவுக்கு மூக்கு வேர்த்துடும். அதான் இழுத்துட்டு போறா” என சொல்லிக் கொண்டு நடந்தார் சிவகுமார்.
“மூக்கு வேர்த்தா போய் காத்து அடிச்சு விடுங்க டாட்” என சிரிப்புடன் வழியனுப்பி வைத்தான் விஷ்வா.
சில நிமிடங்களில் எங்கும் சலசலப்பு. இளம் நீல நிற லெஹெங்கா அணிந்து முடியை சுருளாக்கி முன்னால் போட்டு, துப்பட்டாவைத் தலையில் போட்டு, தோளில் வழிய விட்டு முகத்தில் அளவான மேக்அப் இட்டு, கண்களில் மை பூசி வானலோக தேவதை போல் வந்தனர் விஷ்வ மித்ரர்களின் இணைகள்.
இருவரும் வைத்த கண் வாங்காமல் ரசிக்க, “ஹாய் அருள்” என தன்னவளிடம் வந்து அழைத்தாள் அக்ஷரா.
“ஹா..ஹாய் டி” அவனோ திக்கல் திணறலாக வார்த்தைகளை விழுங்க, “எப்போவும் படபடன்னு பேசுவ. இன்னிக்கு என்ன தயக்கம்?” என வினவினாள் காதலி.
“உன்னைப் பார்த்து வார்த்தைகள் வராமல் பித்தலாட்டம் பண்ணுது அம்முலு. இங்கே ஒரு ரூம் இருக்கு. அப்படியே உன்னைத் தள்ளிட்டு போகலாமானு தோணுது” கிறக்கத்துடன் ஒலித்தது அவன் குரல்.
“ரூம்கு எதுக்கு?” அவனது வார்த்தைகளில் வெட்கம் பிடுங்கித் தின்றது அவளுக்கு.
“வாயால் சொல்ல முடியலை. வந்தால் செஞ்சு காட்டுறேன்” என்றவனை லேசாக முறைத்து, “இப்போ மட்டுமாவது உன் சேட்டையை மூட்டை கட்டி வைத்து விட்டு இரு” என மெல்லிய குரலில் கடிந்து கொண்டாள் அக்ஷு.
இங்கு விஷ்வாவோ தன்னவளின் கையைப் பிடித்துக் கொள்ள, “வி..விடுங்க விஷு” என கையை விடுவிக்கப் போராடினாள்.
“எல்லாரும் பார்ப்பாங்கனு மட்டும் சொல்லிடாத நவி. இப்போ நான் யாருக்கும் தெரியாமல் தான் உன் கையைப் பிடிச்சு இருக்கேன். அப்படி சொன்னால் வேணும்னே எல்லாருக்கும் தெரியவே கையைப் பிடிப்பேன்” என கடினமாக கூறினான்.
“இதை மெதுவா சொன்னா குறைந்து போயிடுவீங்களா? எப்போ பாரு கோபம் தான். மூக்கு மேல் கோபத்தை சோபா போட்டு உட்கார வெச்சிருக்கீங்க” என முணுமுணுத்தாள் வைஷ்ணவி.
“கையை விடாத பாப்பா அப்படினு பாசமா சொன்னால் தலைக்கு மேல் ஏறி அமர்ந்து மிளகாய் அரைக்க ஆரம்பிச்சிருவ. கொஞ்சம் கண்டிப்பா சொன்னா தான் சமத்தா இருக்க. அதான் அப்படி சொல்லுறேன்” என்று கூறியவன்,
‘காலம் முழுக்க இந்தக் கையை விடாமல் உன்னை என் கண்ணுக்குள் வெச்சு பார்த்துப்பேன் ஹனி. இன்னும் டூ டேய்ஸ்ல உன் கிட்ட லவ்வை சொல்லுவேன். அப்போ உன் கண்களில் அப்படி ஒரு சந்தோஷம் வரும் தானே?’ மனதினுள் குதூகலித்தான் காதலில் விழுந்த காளையவன்.
“உங்க கூட நான் எப்போதும் இதே மாதிரி வாழ ஆசைப்படுறேன் ஜித்து. என் ஆசை நிறைவேறுமா? உங்களுக்கு நான் சந்தேகப்பட்டது தெரிய வந்தால் என்ன நடக்கும்?” நினைக்கும் போதே உள்ளூர எழுந்த நடுக்கத்தை அவள் விரல்களும் பிரதிபலித்தன.
“பேச்சுல சரவெடி மாதிரி இருந்ததற்கு கை எல்லாம் பூ மாதிரி சாஃப்டா இருக்கு. விரல்கள் கூட நடுங்குது பாரேன்” விரல்களின் நடுக்கத்தை அவற்றோடு தன் விரல்களை இறுகப் பிணைத்துக் குறைத்தான் விஷ்வஜித்.
அனைவரும் வந்து கிஃப்ட் கொடுத்து கதைத்து விட்டு சாப்பிடச் செல்ல, நண்பர்கள் வந்து ஃபோட்டோ எடுக்க ஆரம்பித்தனர்.
ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என்று நேரங்கள் கழிய, சாப்பிடச் சென்றனர். அங்கும் வழக்கம் போல் சேட்டைகளுடன் உண்டு முடிக்க, நால்வரையும் நண்பர்கள் சூழ்ந்து கொண்டனர்.
“மித்து! நீ உன் ஆளுக்கு ப்ரபோஸ் பண்ணு” என்று ஒருவன் சொல்ல, “ஆங்ங்” என முழி பிதுங்கிப் போனான் அவன்.
“அச்சோ வேணாம்” அக்ஷரா முகத்தை மறைத்துக் கொள்ள, “வேண்டாமே” என மறுத்தான் அவனும்.
“இல்லை பண்ணியே ஆகனும். எத்தனையோ வாட்டி ப்ரபோஸ் பண்ணிருப்ப. இப்போ எங்க முன்னாடி பண்ணிக் காட்டு” என இன்னொருவன் கத்த, அதை அனைவரும் ஆமோதித்தனர்.
வேறு வழியின்றி எழுந்தவன் அவளையே விழிகளால் ஆழ்ந்து பார்த்தான்.
“எல்லோர் வாழ்க்கையிலும் வரமாக ஒருத்தி வருவானு சொல்லுவாங்க. ஆனால் எனக்கு வரமாக வந்தவன் விஷு. அந்த நட்பு வரத்தின் மூலம் எனக்குக் கிடைத்த வரம் நீ!
வரம், வசந்தம், பொக்கிஷம் இப்படி ஆயிரம் வார்த்தைகள் தேடினாலும் எதற்கும் உன்னை உருவகிக்க முடியாது. எதற்குமே ஈடாக்க முடியாத எனக்கே எனக்காக படைக்கப்பட்ட உயிர் நீ!
என்னுயிரில் கலந்தவள் நீ!
எனதுயிரை உனக்குள் சுமப்பவள் நீ!
என் உயிரை விட உயர்ந்தவள் நீ!
உயிரை விட மேலாக உன்னை நேசிக்கும் இந்த அற்பனின் ஆருயிர் நீ!” ஒவ்வொரு வார்த்தைகளையும் அழுத்தமாக உச்சரித்தவன்,
முட்டி போட்டு அமர்ந்து, “ஐ லவ் யூ அம்முலு! லவ் யூ சோ மச் டி” என்று அவளது கையைப் பிடித்து முத்தமிட்டான்.
அவனது வார்த்தைகளில் தெரிந்த காதலில் சிலிர்த்துப் போய் நின்றவளை, முட்டி போட்ட நிலையிலே கைகளை விரித்து அழைக்க, அவனை நெருங்கி அணைத்துக் கொண்டாள் அக்ஷரா.
நண்பர்கள் கை தட்டி ஆரவாரம் செய்ய, “கலக்கிட்ட டா மாப்ள” என அவன் தோளில் தட்டிக் கொடுத்தான் விஷ்வா.
“அடுத்தது உன் ரவுண்டு தான். நீயும் அவனுங்க கிட்ட மாட்டிக்க ரெடியாகு” என அவனது காதில் மெல்லிய குரலில் சொன்னான் மித்து.
“நான் அவ கிட்ட தனியா ஸ்பெஷலா ப்ரபோஸ் பண்ண இருக்கேன் மித்து. இப்படிலாம் பண்ணுனா அந்த கிக்கே போயிரும்” உதடு பிதுக்கினான் விஷு.
“அட ஆமால்ல! இப்போ என்ன செய்யுறது?” என அவன் கேட்க, அதற்கு அவசியமே இல்லை என்பது போல் விஷ்வாவை வைஷுவுடன் நடனமாடுமாறு கூறினர்.
“ஓகே டன்” என அவன் கட்டை விரலை உயர்த்திக் காட்டினான்.
“எனக்கு வெட்கமா வருது. முடியாதுன்னு சொல்லுங்க ப்ளீஸ்” என கண்களைச் சுருக்கிக் கெஞ்சினாள்.
“இந்த மாதிரி தருணம் லைஃப்ல ஒரு வாட்டி தான் வரும். அதைப் பயன்படுத்திக்கனும் நவிமா. நாம வயசுக்கு போன அப்புறம் சுருங்கிப் போன கைகளையும் ஒன்னா கோர்த்துட்டு இதை நினைச்சு பார்க்கும் போது அப்படி ஒரு ஃபீல் வரும்” புன்னகையுடன் சொன்னவனின் ஆசைப்படி அவனோடு ஆட சம்மதித்தாள் மனைவி.
இருவரும் மாறி மாறிப் பாடியவாறு ஆடத் துவங்கினார்கள்.
🎶அடி பெண்ணே ஒரு முறை நீ சிரித்தால் …என்
நெஞ்சுக்குள்ளே மழை அடிக்கும்
அடி பெண்ணே ஒரு முறை நீ சிரித்தால் …என்
நெஞ்சுக்குள்ளே மழை அடிக்கும்🎶
வைஷுவின் முகத்தருகே கையைக் கொண்டு சென்று வருடுவது போல் செய்து தன் கையை நெஞ்சில் வைத்தான் விஷ்வா.
🎶ஏன் எனது இதயம்
துடிக்கும் இசையில்
கவிதை ஒன்றை எழுதினாய்
அதை விழியில் கோர்த்து உயிரின் உள்ளே
பார்வையாலே சொல்கிறாய்🎶 தன் இதயத்தைத் தொட்டுக் காட்டி அவன் விழிகளோடு தன் விண்மீன் விழிகளை உறவாட விட்டாள் பெண்.
🎶உன்னோடு நானும் வாழ
உன்னோடு நானும் சாக
உன் மடி சாயவா
உன் மடி சாயவா🎶 அவனோ அவள் கையைப் பிடித்து தன்னை நோக்கி இழுக்க,
🎶உன் பார்வை என்னைக் கொல்ல
சாய்ந்தேனே நானும் மெல்ல
நீதான் என் மன்னவா
நீதான் என் மன்னவா🎶 தன்னவன் மார்பில் மோதி நின்றவளோ அவனது இடையில் கை வைத்து அடுத்த கையைத் தோளில் வைத்தாள்.
🎶ஓஓ உனது சிரிப்பினில்
சிதறும் அழகினை
பூக்கள் ரசித்தே வாசம் பிறந்ததோ🎶 அவளிதழில் விரல் வைத்து சிரிப்பது போல் செய்கை செய்தான் வேங்கை.
🎶வேர்வை துளிகளும் தீர்த்தம் போல
என் மேலே படுகையில் பாவம் அழியுதோ🎶 அவனைப் பார்த்து மயக்கும் புன்னகையைச் சிந்தினாள் செவ்வந்தியவள்.
🎶இருவர் வாழும் உலகிலே
உன்னை அணைத்துக் கொள்வேன் உயிரிலே
இரவில் தேயும் நிலவிலே
நாம் சேர்த்து வாழ்வோம் அருகிலே🎶 அவளது கையைப் பிடித்துச் சுற்றி இடையில் கையிட்டு அணைத்தான் அவன்.
🎶அடி உன்னோடு வாழும்
ஒவ்வொரு நாளும்
இறகைப் போல பறக்கிறேன்🎶 கைகளை விரித்து பறப்பது போல் செய்கை செய்து கண்ணடித்தான் விஷு.
🎶நான் உன்னோடு வாழும்
நொடியில் ஏனோ
மீண்டும் முதல் முறை பிறக்கிறேன்🎶
🎶உன் பார்வை என்னைக் கொல்ல
சாய்ந்தேனே நானும் மெல்ல
நீதான் என் மன்னவா
நீதான் என் மன்னவா🎶 அவனது சுண்டியிழுக்கும் பார்வையில் மயங்கி அவன் மீது சாய்ந்தாள் வைஷு.
🎶உன்னோடு நானும் வாழ
உன்னோடு நானும் சாக
உன் மடி சாயவா
உன் மடி சாயவா🎶 பூங்கொடியாய் தன்னில் சரிந்தவளைத் தாங்கிப் பிடித்தான்.
🎶என் அன்பே ஒரு முறை நீ ரசித்தால்
என்னுள்ளே ஏதோ புது மயக்கம்
என் அன்பே ஒரு முறை நீ ரசித்தால்
என்னுள்ளே ஏதோ புது மயக்கம்🎶 பாடல் வரிகளுக்கேற்ப அவளை ரசித்தவனுக்கு உண்மையில் இருதயத்தில் புது வித மயக்கம் சூழலாயிற்று.
🎶எனது பிறவியின் அர்த்தம் உணரவே
உன்னை எனது வாழ்வில் தந்ததோ
தேகம் தீண்டும் தூரம் இருந்துமே
உனது விழியிலே ஜீவன் தொலையுதோ🎶 இரு சோடி விழிகளும் ஒன்றோடு ஒன்று உரசிச் செல்ல காதல்த்தீ பற்றியெரியலானது.
🎶மழையில் காதல் உன் மடியிலே
நித்தம் அணைத்துக் கொள்ளடா உயிரிலே
விழிகள் பேசும் மொழியிலே
இனி மௌனம் கூட பிழை இல்லை🎶 சந்தித்துக் கொண்ட பார்வைகள் ஆயிரமாயிரம் செய்திகளைப் பரிமாறிக் கொண்டன.
🎶அன்பே உன்னோடு வாழும்
ஒவ்வொரு நாளும்
இறகைப் போல பறக்கிறேன்🎶
🎶நான் உன்னோடு வாழும்
நொடியில் ஏனோ
மீண்டும் முதல் முறை பிறக்கிறேன்🎶
🎶அடி பெண்ணே ஒரு முறை நீ சிரித்தால் …என்
நெஞ்சுக்குள்ளே மழை அடிக்கும்
என் அன்பே ஒரு முறை நீ ரசித்தால்
என்னுள்ளே ஏதோ புது மயக்கம்🎶 அவள் விரல்களோடு தன் விரல்களைக் கோர்த்தான் விஷ்வா.
🎶நீ இரவல் உயிரா
இரவின் வெயிலா
மழையின் வாசம் நீயடி
நீ கவிதை மொழியா
கவிஞன் வழியா
உயிரின் சுவாசம் நீயடி🎶 உயிராய் தன்னுள் நிலைத்தவளை உயிர் கொய்யும் பார்வையால் உயிர்ப்பித்தான் ஊர்வசியவள் உள்ளத்தில் உறைந்தவன்.
🎶உன்னோடு நானும் வாழ
உன்னோடு நானும் சாக
உன் மடி சாயவா
உன் மடி சாயவா🎶
🎶உன் பார்வை என்னைக் கொல்ல
சாய்ந்தேனே நானும் மெல்ல
நீதான் என் மன்னவா
நீதான் என் மன்னவா🎶 இறுதியாகப் பாடி முடித்து அவனையே பார்த்தாள் மனைவி. அவனும் அவளது காந்த விழிப் பார்வையில் இருந்து மீள முடியாமல் நிற்க, விசில் சத்தங்கள் காதைக் கிழித்தன.
“சூப்பர் டூப்பர். நீ காலேஜ் டேய்ஸ்ல மித்து கூட டான்ஸ் ஆடி மெர்சல் ஆக்கிருவ. இன்னிக்கு உன் ஏஞ்சல் கூட ஆடி பட்டைய கிளப்பிட்ட மச்சா” விஷ்வாவை வாழ்த்தினர் நண்பர்கள்.
ஒவ்வொருவராக கலைந்து செல்ல, “ஹாய் மித்து” என்று அவனை அணைத்தாள் கவிதா.
அக்ஷராவோ கொதித்துப் போய் அவளவனை முறைக்க, அவளிடமிருந்து நாசூக்காக விலகிக் கொண்டவனோ, “என்னை எதுக்கு டி முறைக்கிற? அவள் கட்டிப் பிடிச்சதுக்கு நான் என்ன செய்ய முடியும்?” என்று கேட்டான்.
“நீயும் ரொம்ப ஆசையில் தான் நின்ன மாதிரி இருந்துச்சு. எவ்வளவு தைரியம் இருந்தா என் முன்னாடியே உன்னை ஹக் பண்ணுவாள்” எகிறிக் குதித்தாள் அக்ஷு.
“யம்மா தாயே! கூல் கூல். அவள் ஏதோ பழைய காதலை நினைச்சு ஹக் பண்ணிட்டாள். மேக்கப் அப்பி அழகா இருக்கே. சண்டைக் கோழி மாதிரி சிலிர்த்துக்காத” தங்கையை வாரி விட்டான் விஷு.
“நீ போடா காதல் மன்னா! என்னா ஒரு டான்ஸ் ஆடுன. செம டா. அண்ணி கலக்கிட்ட” என வைஷுவை அணைக்க,
“தாங்க் யூ டி” என்றவளோ விஷ்வாவைப் பார்க்க அவன் உதடு குவித்ததைக் கண்டு குப்பென்று சிவந்தது அவள் முகம்.
“வைஷு! வெட்கப்படும் போது அழகா இருக்கே” அவள் கன்னத்தைக் கிள்ளி விட்டாள் அக்ஷரா.
“நீ அவளைப் பார்க்காத” என இடையிட்டான் விஷு.
“ஓஓ! நீ மட்டும் தான் பார்க்கனுமோ? சரி பார்த்துக்க. ஓவரா பொறாமைப்படற விஷு நீ”
“நான் மித்து கூட பேசுனா நீயும் தானே பொறாமையில் பொங்குற”
“எஸ் எஸ்! உங்க நட்பைப் பார்த்து எனக்கு பொறாமை தான். ஆனால் அந்த பொறாமைக்குப் பின்னால் கோபம் இருக்காது. என் அண்ணனும், புருஷனும் எவ்ளோ ஒற்றுமையா இருக்காங்களேனு அளவுக்கு மீறுன சந்தோஷம் இருக்கும். எனக்கும் இப்படிப்பட்ட ஒரு நட்பு கிடைக்காதாங்குற ஏக்கம் மறைந்திருக்கும்.
உங்க நட்பு என்னிக்கும் இதே மாதிரி இருக்கனுங்கிற அவா நெஞ்சுல நிறைந்திருக்கும். இது வேற மாதிரி பொறாமை டா” என்றவளை விஷ்வாவும் மித்ரனும் ஒரு சேர தோளோடு சேர்த்து அணைத்துக் கொண்டனர்.
கண்காட்சியில் உள்ளமெல்லாம் பூரிக்க அந்த அன்பானவர்களின் கூட்டத்தில் தானும் இணைந்திட ஆவல் கிளர்ந்தெழ விஷ்வாவின் தோளில் சாய்ந்தாள் வைஷ்ணவி.
நால்வரும் ஒன்றாய் பிணைந்திருந்த காட்சி ரோஹனின் அலைபேசியில் படமாகச் சேமிக்கப்பட்டது.
நட்பு தொடரும்…..!!
✒️ ஷம்லா பஸ்லி