49. விஷ்வ மித்ரன்

5
(2)

விஷ்வ மித்ரன்

 

💙 நட்பு 49

 

இருள் கசிந்த வானை இமை விலத்தாது பார்த்துக் கொண்டிருந்தாள் அக்ஷரா.

 

“ஹேய்…!!” எனும் கத்தலில் திடுக்கிட்டு அவ்விடம் நோக்க சிரிப்புடன் வந்தமர்ந்தான் விஷ்வா.

 

“என்னடி அப்படி பார்க்குற? நைட் ஆச்சு தூங்கலையா?” தங்கையிடம் கேட்டான் அவன்.

 

“தூக்கம் வரலைண்ணா”

 

“அண்ணாவா? அட அதிசயமா கூப்பிடுற?” வியக்கும் போது அவன் தோளில் தலை சாய்த்தாள் அக்ஷு.

 

“வாயாடி! என்னடி புதுசு புதுசா பண்ணுற? என்னாச்சு?” என்று அவன் கேட்க, “உனக்கு பிடிக்கலைனா சொல்லு. நான் போறேன்” என தலை தூக்கியவளைப் பிடித்து தன்னில் சாய்த்துக் கொண்டான் அண்ணன்காரன்.

 

“நான் எதுவும் பேசலை. நீ இப்படியே இரு” அவள் தலையை மென்மையாகக் கோதி விட்டான் விஷு.

 

சில நிமிடங்கள் தம்முள் நிலவிய மௌனத் திரையைத் தானே கிழித்தெறிந்தாள் அக்ஷரா.

“விஷு”

 

“ஆர் யூ ஓகே குட்டிமா?” புருவம் தூக்கிக் கேட்டான் அவன்.

 

“யாஹ் ஓகேடா” முன்பு மித்ரனின் வார்த்தைகள் இன்னும் காதில் ஒலித்துக் கொண்டு விளைவித்த வலி அண்ணனின் அருகாமையில் வெருண்டோடி இருந்தது.

 

“அப்போ அண்ணா! இப்போ டாவா? நல்லா இருக்குடி உன் நியாயம்” அவள் காதை வலிக்காமல் திருகினான் ஆடவன்.

 

“உன்னால கையை வெச்சுட்டு இருக்க முடியாதா? எப்போ பாரு தலையில் தட்டுற, காதைத் திருகுற” அவன் கைக்கு அடித்தாள் தங்கை.

 

“உன்னைக் கண்டால் சும்மா இருக்க முடியலை டி. உன்னை அழ வெச்சு பார்க்கனும்னு ஒரு ஆசை. அது சின்ன வயசு ஆசை”

 

“என்ன ஒரு வில்லத்தனமான ஆசை உனக்கு? நீயெல்லாம் ஒரு அண்ணனா? எல்லாரும் தங்கச்சியை சிரிக்க வெச்சு பார்க்கனும்னு தானே ஆசைப்படுவாங்க?” முறைப்போடு பார்த்தாள் அக்ஷரா.

 

“உன்னை சிரிக்க வெச்சு பார்க்கனும்னு நான் நெனச்சது இல்லை. ஏன்னா வாழ்நாள் முழுக்க உன்னை சிரிக்க வைக்க தான் என் மித்துவை உனக்கு தந்திருக்கேன். அவன் என்னிக்கும் உன் கண்ணில் கண்ணீர் வர விட மாட்டான்” அவன் குரலில் அத்தனை உறுதி.

 

இதைக் கேட்டு ஸ்தம்பித்துப் போய் நின்றான், அங்கு வந்த மித்ரன். வைத்து விட்டேனே? அவள் கண்களில் கண்ணீர் வர வைத்து விட்டேனே? நண்பனின் நம்பிக்கையை உடைத்து விட்டோமே என்று குற்ற உணர்வு அவனைக் குத்திக் கொன்றது.

 

வேகமாக வந்து, “விஷு நான் உன் நம்பிக்கையை…” என சொல்லத் துவங்க, வேண்டாம் என்பதாக தலையாட்டினாள் அவனது அம்முலு.

 

அவனது வாய் மூடிக் கொள்ள, “ஏதோ சொல்ல வந்தியே! என்ன மாப்ள?” எனக் கேட்டான் நண்பன்.

 

“அ..அது உன் நம்பிக்கையை என்னிக்கும் உடைக்க மாட்டேன்னு சொல்ல வந்தான். அப்படி தானே அருள்?” இடை புகுந்து தன்னவனைப் பார்த்தாள் அவள்.

 

“ஆ..ஆமா டா” விரக்தியுடன் தலையசைத்தான் மித்து.

 

“அதை நீ சொல்ல வேண்டிய அவசியம் இல்லைடா. ஆனாலும் இவள் முந்திரிக் கொட்டை மாதிரி வந்து உன்னை விட்டுக் கொடுக்காமல் பேசுறாள்” குறு நகை பூத்தான் விஷ்வா.

 

“எஸ்டா அவள் இன்னிக்கு மட்டுமல்ல என்னிக்குமே என்னை விட்டுக் கொடுத்ததே இல்லை. ஆனால் என்னால் அந்த விட்டுக் கொடுப்பையும், உன் நம்பிக்கையையும் காப்பாற்ற முடியாமல் போயிருச்சோனு பயமா இருக்கு” விழிகளால் அவனவளிடம் மன்னிப்பை யாசித்தான் மித்ரன்.

 

பதிலுக்கு அவனை வெற்றுப் பார்வை பார்த்தாள் மனைவி.

 

“நீ ஏதோ டீப்பா திங்க் பண்ணுற மாதிரி தோணுது மித்து. ஆமா நவியைக் கண்டியா?” நவியைக் கண்களால் துழாவினான்.

 

“சொல்ல மறந்துட்டேன். உன்னை வரச் சொன்னா என் தங்கச்சி” என்றான் மித்து.

 

“உன் தங்கச்சியா? அவள் என் பொண்டாட்டி டா” இதழ் விரியலுடன் சென்றவனைக் கண்டு அழகாகச் சிரித்தான் தோழன்.

 

” அம்முலு!”

 

“என்ன?” பட்டெனக் கேட்டாள் அவள்.

 

“சாரிடி. இன்னும் எத்தனை நாளைக்கு தான் மூஞ்சைத் தூக்கி வெச்சுட்டு இருக்க போற? என்னை மன்னிச்சிருடி” அவள் கையைப் பிடித்தான் கணவன்.

 

“ஈசியா திட்டிட்டு ஈசியா சாரி கேட்டுட்ட அருள். ஆனால் என்னால் அதை ஈசியா மறக்க முடியலை. நீ பேசிய பேச்சு என் காதில் கேட்டுட்டே இருக்கு. குத்திக் காட்டவோ உன்னை கஷ்டப்படுத்தவோ இதை சொல்லல. ஆனாலும் என்னால முடியல டா” கண்கள் கலங்க எங்கோ பார்வையைச் செலுத்தினாள்.

 

“உன்னைக் கஷ்டப்படுத்திட்டேன் டி. விஷு நம்பிக்கையை பொய்யாக்கிட்டேன். எனக்கு கில்டியா இருக்கு. இதை விஷு கிட்ட சொல்லி சாரி கேட்கனும் போல் தோணுது” கண்களை மூடிக் கொண்டான் காளை.

 

“அவன் கிட்ட சொல்லுறதால் நடந்தது எல்லாம் மாறுமா இல்லையே? பதிலுக்கு அவன் ஃபீல் பண்ணுவான். அவனை ஃபீல் பண்ண வெச்சுட்டோமேனு உனக்கு இன்னும் கொஞ்சம் கஷ்டமா இருக்கும். என்னை கஷ்டப்படுத்திட்டோம்னு அவன் கோபப்பட மாட்டான்.

 

ஆனாலும் ஒரு வேளை அப்படி நடந்துருச்சுனா என்னால அதை தாங்கிக்க முடியாது. உன்னை அவன் ஒரு பார்வை கோபமா பார்ப்பதைக் கூட நான் விரும்பலை அருள். நீங்க ரெண்டு பேரும் எப்போவும் சந்தோஷமா இருக்கனும்” 

 

அவளுக்குத் தன் மீதும் விஷ்வா மீதும் இருக்கும் பாசத்தில் நெகிழ்ந்து போய் நின்றான் அருள் மித்ரன். சிறு வயதிலும் அப்படித் தான். முன்பு ஒரு முறை அக்ஷராவிடம் “உனக்கு விஷுவைப் பிடிக்குமா? மித்துவைப் பிடிக்குமா?” என்ற கேள்வி கேட்கப்பட்டது.

 

“விஷ்வாவையும் பிடிக்காது. மித்ரனையும் பிடிக்காது. விஷ்வ மித்ரனைப் பிடிக்கும். அவங்க நட்பு ரொம்ப பிடிக்கும். இரண்டு பேரில் ஒருத்தன் பெயரை சொல்ல முடியாது.

 

ஏன்னா அவங்க ரெண்டு பேரும் வேறு வேறு இல்லை. ஒன்னுக்குள்ள ஒன்னு. அதுவே விஷ்வ மித்ரன்” என்று கூறி இருவரையும் அணைத்துக் கொண்டாள் குட்டி அக்ஷரா.

 

அதை நினைத்து இன்றும் மனம் மகிழ்ந்தான் மித்து.

“உன் அன்பில் ஒவ்வொரு நொடியும் நான் தோற்றுப் போறேன் அம்முலு. தன்னைக் கஷ்டப்படுத்தியதை அண்ணன் கிட்ட போட்டுக் கொடுக்காமல் எங்க சந்தோஷத்தைப் பற்றி நெனச்ச பார்த்தியா உன் மனசு யாருக்குமே வராது”

 

“இனிமேல் விஷு கிட்ட ஓட்டை வாய் மாதிரி உளறி வெச்சுடாத”

 

“சரி. நீ என்னை எப்போ வேணா மன்னிச்சிக்க. ஆனால் என் கிட்ட இருந்து விலகிப் போக உன்னை விட மாட்டேன் அம்முலு பேபி”

 

“விடாமல் என்ன பண்ணுறதா ஐடியாவாம்?” கேள்வியாய் அவன் முகம் நோக்கினாள்.

 

“சொல்லிட்டு பண்ண முடியாதே! சோ பண்ணிட்டு சொல்லுறேன்” அவளைத் தன் கைகளில் ஏந்திக் கொண்டான் மித்ரன்.

 

“யாராவது…” என அவள் ஆரம்பிக்கும் போது இடையிட்டு, “ஆமா. எல்லாரும் பாரப்பாங்க. நீ என் பொண்டாட்டி, நான் உன் புருஷன். சோ யாரும் எதுவும் நினைக்க மாட்டாங்க. அப்படியே நினைச்சாலும் ஐ டோன்ட் கேர்” என்றபடி தோட்டத்திற்குச் சென்று அவளை ஊஞ்சலில் அமர வைத்தான்.

 

“இங்கே எதற்கு?”

 

“தூங்கலாம்னு வந்தேன். தூங்கலாமா?”

 

“என்னடா உளறுறே?” புரியாமல் பார்த்தாள் பாவை.

 

“தெரியுதுல்ல அப்புறம் என்னடி கேள்வி? சும்மா பேசிட்டு இருக்கலாம்னு வந்தேன்” அவளைப் பார்த்து சிரித்தான்.

 

“நான் உன் கூட கோபமா இருக்கேனே. என்னால பேச முடியாது” இதழ் சுளித்தாள் அக்ஷு.

 

“உனக்கு யார் பேச சொன்னது? நீ பேச வேண்டாம். உனக்கும் சேர்த்து நானே பேசுறேன். நீ கேட்டுட்டு இருந்தால் மட்டும் போதும்” அவள் கையை இறுகப் பற்றிக் கொண்டான் காதலன்.

 

“ஓஓ! அப்படி வரியா? நல்லதாப் போச்சு”

 

“உனக்கு ஒரு கதை சொல்லட்டுமா?”

 

“வேணாம்னா விடவா போற? சொல்லு”

 

“ஒரு காலத்தில் சாதாரண பையன் இருந்தானாம். அவனுக்குனு உறவுகள் இருந்தாலும் நெருக்கம்னு சொல்லிக்க அப்பா மட்டும் தான். அப்படி இருந்தவனோட வாழ்க்கையை திசை திருப்பி விட வந்தான் ஒருத்தன்.

 

நண்பனா அவனோடு அறிமுகமாகினான். அவனோட அன்பான இராச்சியத்தில் தன்னோடு சேர்த்து அவனைம் இளவரசனாக மாற்றினான். அழகான அரசி, அன்பான அரசனோடு அவனை மயக்க அங்கு அதிரடியான இளவரசியும் இருந்தாள்.

 

அந்த இளவரசிக்கு தன் அண்ணனோட நண்பன் மேல் எக்கச்சக்க அன்பு, அவனுக்கும் அவள் மீது கொள்ளைப் பாசம். அந்த அளவுகடந்த அன்பு இருவர் மனதிலும் காலப்போக்கில் காதலாக மலர்ந்தது.

 

இருவரும் கல்யாண பந்தத்தில் இணைந்தார்கள். தனக்கு நண்பன் ஒப்படைத்த பொக்கிஷத்தை கண்கலங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டுமென சபதம் எடுத்தான் அவன். ஆனால் ஒரு சமயம் அவனது முற்கோபத்தால் அவளைக் காயப்படுத்திட்டான்.

 

அதற்காக அவள் கிட்ட மன்னிப்பு கேட்டான். அவ்வளவு சீக்கிரம் அந்த வார்த்தைகளை அவளால் மறக்க முடியாது. ஆனாலும் அவளது மன்னிப்பிற்காக காதலோடு, குற்ற உணர்ச்சியோடு காத்துக் கொண்டிருக்கிறான்….” என கதை சொல்லி முடித்தான் அவன்.

 

“கதை எப்படி இருந்துச்சு அம்முலு?”

 

“லாஸ்ட் மொக்கையா இருந்தது. அவன் பேசுன பேச்சுக்கு வாயில் அடி போட்டிருக்கனும். அந்தப் பொண்ணு தப்பு பண்ணிட்டா” கடுகடுத்தாள் அக்ஷரா.

 

“வாயில் அடி கொடுக்காமல் வாயால் அடி கொடுத்தா நல்லா இருக்கும்லே?” அவள் காதோரம் முடியைச் சொருகி விட்டான்.

 

“அது எப்படி வாயால் அடி கொடுப்பது?”

 

“அடியே என் மக்கு பொண்டாட்டி. இப்படித் தான்” என்றவன் அவள் கன்னத்தில் எச்சில் தெறிக்க இச் ஒன்று வைத்தான்.

 

“ஓஓ! உனக்கு இப்படி அடி வேணுமா? அடிக்க மாட்டேன் கடிச்சு வெச்சுருவேன் டா” அவன் கன்னத்தைக் கடித்து விட்டு ஓடினாள் அவள்.

 

“அடியே அணில்குட்டி” கன்னத்தை வருடியவாறு அவளைப் பின்தொடர்ந்து சென்றான் மித்ரன்.

 

…………………..

“ஏய் எதுக்கு டி முறைப் பொண்ணு மாதிரி முறைச்சிட்டு இருக்கே?” புரியாமல் பார்த்தான் விஷ்வா.

 

“பொண்டாட்டி ஒருத்தி இருக்கேங்குறதையே மறந்துட்டு என்ன பண்ணிட்டு இருக்கீங்க? நான் கூப்பிட்டா தான் வருவீங்களோ?” இடுப்பில் கை வைத்து முறைத்தாள் வைஷ்ணவி.

 

“என்னடி திடீர்னு இப்படிலாம் பேசுற? ஆமா நீ இப்போ அடிக்கடி நட்டு கழன்ற மாதிரி வித்தியாசமா நடந்துக்குற” அவளை மேலிருந்து கீழ் வரை பார்த்தான்.

 

“ச்சீ! அப்படி பார்க்காதீங்க எனக்கு வெட்கமா வருதுங்க” கைகளால் முகத்தை மூடி வெட்கம் எனும் பெயரில் எதையோ செய்தாள்.

 

“சுத்தம்! கன்பார்ம் இவளுக்கு முத்திருச்சு” தலையிலடித்துக் கொண்டான் விஷு.

 

“விஷு பையா….!!”

 

“இப்போ எதுக்குடி ஒரு மார்க்கமா கூப்பிடுறே? உன் கிட்ட வரவே பயம்மா இருக்கு” பயந்தது போல் நடித்தான்.

 

“உனக்கு என் மேல இருந்த கோபம் போயிருச்சா?” அவனை ஆர்வத்துடன் ஏறிட்டாள் நவி.

 

“அதே கேள்வியை நான் சொல்லும் போது கேளு. இப்போ சீக்கிரம் ரெடியாகிட்டு வா” அவளை அவசரப்படுத்தினான்.

 

“எதுக்கு? எங்கே போகப் போறோம்?” என வினவினாள் அவள்.

 

“அட கேள்விக்குப் பிறந்தவளே! சொன்னதை மட்டும் செய். இந்த ட்ரெஸ்ஸை போடு” என சொல்லி விட்டுச் சென்றான்.

 

அவள் ஆசிரமத்தில் இருக்கும் போது அணிந்த சுடிதார் கட்டிலில் இருந்தது.

“எதுக்காக இதைப் போடச் சொன்னாரு? எனக்குச் சொல்லிட்டு இவரோட போக்கு தான் ஒரு மார்க்கமா இருக்கு” யோசனையூடே அந்த உடையை அணிந்து கொண்டு சென்றாள்.

 

“எங்கே போறோம்?” பைக்கில் அமர்ந்திருந்தவனிடம் கேட்டாள் மாது.

 

“ரொம்ப பசிக்குது. வெளியில் போய் சாப்பிடலாம்னு நினைச்சேன். உன்னை விட்டுட்டு போனா அதற்கும் பல கேள்விகள். சோ உன்னைக் கூட்டிட்டு போகப் போறேன்”

 

“அப்படினா என்னை ஆசையோட கூட்டிட்டு போகல. அடுத்தவங்களுக்கு பயந்து கூட்டிட்டு போறீங்கள்ள?” கவலை ததும்பியது அவளில்.

 

“எஸ் அஃப்கோர்ஸ். சீக்கிரம் ஏறு” என்று அவசரப்படுத்த அவன் பின்னே ஏறி அமர்த்திட வண்டியைச் செலுத்தினான் விஷு.

 

ஒரு கடையில் நிறுத்தி அவன் சாப்பாடு வாங்கிக் கொடுக்க அவளுக்கு தொண்டைக் குழி அடைத்தது. ஏன் இவன் மாற்றமாக நடந்து கொள்கிறான்? என்னை வெறுக்கிறானா? என்னைப் பிடிக்கவில்லையா? பல வினாக்கள் அவளுள் சுற்றிச் சுழன்றன.

 

“செமயா இருக்குல்ல” விரல்களை நக்கிக் கொண்டு சப்புக் கொட்டினான் அவன்.

 

“ம்ம்” சாவி கொடுத்த பொம்மையாகத் தலையை நாலாபுறமும் உருட்டி வைத்தாள்.

 

பைக்கை நிறுத்தி விட்டு, “கொஞ்சம் தூரம் நடந்துட்டே பேசலாம்” என அழைத்தான்.

 

அவளும் அவனோடு இணைந்து நடந்தாள். அவனிடம் ஏதோ விலகல் தன்மையை அவளால் உணர முடிந்தது.

 

“வீட்டில் என் கிட்ட ஏதோ கேட்டியே அதை இப்போ கேளு” என்றான் விஷ்வா.

 

“ஆரா விஷயத்தில் என் மேல் இன்னும் கோபம் இருக்கா?” இமைகள் நடனம் பயிலக் கேட்டாள்.

 

“இல்லைனு சொல்ல எனக்கும் ஆசையாத் தான் இருக்கு. ஆனால் என்னால பொய் சொல்லிட்டு இருக்க முடியாது. என்னால அந்த விஷயத்தை அவ்ளோ ஈசியா எடுத்துட்டு உன்னோட வாழ முடியலை.

 

உன்னைப் பார்க்கும் போதெல்லாம் அதே நினைவு தான் வருது. அதிலும் அந்த வார்த்தை.. ஹூம் டிவோஸ்! அதைக் கொடுத்து உன்னை நடு ரோட்டில் விடுவேன்னு சட்டுனு நினைச்சுட்ட. அவ்ளோ தப்பானவனா உன் மனசுல ஒரு பிம்பம் வந்திருக்கு. என்னால் அதை மறக்க முடியலை நவி” அவனது வார்த்தைகளில் கோபமும் இயலாமையும் கலந்திருந்தன.

 

“வி…விஷு” தயக்கத்துடன் அழைத்தாள்.

 

“ப்ளீஸ் லீவ் மீ அலோன் வைஷ்ணவி” திரும்பி நடந்தான் காளை.

 

அவனை இமை விலத்தாது பார்த்திருந்தவள் தன்னந்தனியாக அப்பாதையில் நடைப்பிணமாய் நடக்க ஆரம்பித்தாள்.

 

கால் போன போக்கில் அனைத்தும் மறந்தவளாய் சென்றவளின் கண்களில் இரத்தக் கண்ணீர் வடித்தது.

 

வாழ்வில் மீண்டுமொரு முறை அநாதையாக உணர்ந்தவளோ காரிருளில் அப்பாதை வெளிச்சத்தில் தள்ளாடியவாறு ஓர் ஆடவன் நடந்து வரும் நிழலைக் கண்டு சிலையென சமைந்தாள்.

 

இதயமோ பந்தயக் குதிரையாக தடதடக்க அச்சமும் சூழ்ந்திட நின்றாள் நவி.

 

நட்பு தொடரும்…….!!

 

✒️ ஷம்லா பஸ்லி

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 5 / 5. Vote count: 2

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!