அரிமா – 3
அன்று… கர்நாடகா மாநிலம் , ஹூப்ளி (hubli ) நகரத்தில் கன்னியாஸ்திரி மேரி வசிக்கும் மடத்தில் 1993 ஆம் ஆண்டில், வேதாச்சலம் என்னும் தொழிலதிபர் தன் மகனின் பிறந்தநாளை முன்னிட்டு குழந்தைகளுக்கு உணவு மற்றும் பரிசு பொருட்கள் வழங்குவதற்காக மதர் மேரியின் தலைமையில் இயங்கும் ஆசிரமத்திற்கு வருகை தந்திருந்தார். இது போல் கருணை உள்ளம் கொண்ட செல்வந்தர்கள் யாரவது தங்களின் வீடு விசேஷங்களை முன்னிட்டு உணவு வழங்கினால் தான் இங்கு வசிக்கும் குழந்தைகளுக்கு, வயிறும் மனமும் நிறைய […]