முள்ளெல்லாம் முல்லைத் தேனே 💜

17. முள்ளெல்லாம் முல்லைத் தேனே 💜

முள் – 17 ஒரே படுக்கையில் படுத்திருந்த இருவரின் மனநிலையும் வெவ்வேறாக இருந்தது. தன் வாழ்க்கையை முற்றிலும் வெறுத்தவனாக அவன் தன் விழிகளை மூடிக்கொண்டு உறங்க முயற்சிக்க, குழந்தைக்கு மறுபக்கம் படுத்து இருந்தவளுக்கோ விழிகளில் கண்ணீர் கசிந்தது. எங்கே தான் அழுவது தெரிந்து விடுமோ என அடக்கிக் கொண்டு மௌனமாக தேம்பியவளின் மனம் முழுவதும் ரணமாகி இருந்தது. அதே கணம் தியா எழுந்து அழத் தொடங்கி விட ஒரே நேரத்தில் இருவரும் பதறி எழுந்தனர். அவள் குழந்தையைத் […]

17. முள்ளெல்லாம் முல்லைத் தேனே 💜 Read More »

16. முள்ளெல்லாம் முல்லைத் தேனே 💜

முள் – 16 எவ்வளவு நேரம்தான் ஒருவரின் முகத்தை மற்றையவர் பார்க்காது ஆளுக்கு ஒரு திசையில் அமர்ந்திருப்பது..? இரு நாடுகளின் எல்லையில் வேறு வேறு நாட்டின் போர் வீரர்கள் அமர்ந்திருப்பதைப் போலத்தான் இருந்தது அவர்கள் அமர்ந்திருந்த நிலை. அவர்கள் அசையாமல் அப்படியே அமர்ந்திருந்தால் காலமும் அசையாமல் நின்று விடுமா என்ன..? நேரம் மணித்துளிகளாக கரைந்து கொண்டே இருக்க இரவும்தான் நெருங்கியது. இனி அமைதியாக இருந்தால் இன்று இரவு முழுவதும் இப்படியேதான் அமர்ந்திருக்க வேண்டும் என்பதை புரிந்து கொண்டவள்

16. முள்ளெல்லாம் முல்லைத் தேனே 💜 Read More »

15. முள்ளெல்லாம் முல்லைத் தேனே 💜

முள் – 15 எந்த விதமான ஆடம்பரமும் இல்லாமல் நடந்தேறிக் கொண்டிருந்தது யாஷ்வின் மற்றும் சாஹித்யாவின் பதிவுத் திருமணம். யாஷ்வினுக்கு உறவு என்று யாரும் இல்லையாதலால் அவனுடன் படித்த நண்பன் ஒருவன் மட்டுமே அவனுக்காக அங்கே வந்திருக்க அவனா இயந்திரம் போலத்தான் செயற்பட்டுக் கொண்டிருந்தான். கையெழுத்து வைக்கச் சொன்ன இடத்தில் தன்னுடைய கையொப்பத்தை வைத்து விட்டு நிமிர்ந்தவனின் ஒற்றைக் கரத்திலோ அவனுடைய மகள் அங்கே நடப்பது புரியாது சிரித்துக் கொண்டிருந்தாள். அவனுக்கு நெஞ்சம் பிசைந்தது. மனைவி இறந்து

15. முள்ளெல்லாம் முல்லைத் தேனே 💜 Read More »

14. முள்ளெல்லாம் முல்லைத் தேனே 💜

முள் – 14 சாஹித்யாவின் செயலும் வார்த்தையும் ஒரு நொடி அவனை உறையச் செய்தன. தன் கால்களைப் பிடித்துக் கொண்டு விட மறுப்பவளின் கரத்தைப் பற்றி எழுப்பியவன், “என்ன சாஹி இதெல்லாம்..? நீ என்ன பேசுறேன்னு புரிஞ்சுதான் பேசுறியா..? கல்யாணம் சின்ன விஷயமா தெரியுதா உனக்கு..?” எனக் கேட்டான். “இல்ல மாமா… இப்ப மட்டும் நான் அவங்க கூட போனேன்னா யாராவது ஒருத்தன பார்த்து எனக்கு கல்யாணம் பண்ணி வச்சிடுவாங்க மாமா.. அவர் நல்லவனா என்னனு கூட

14. முள்ளெல்லாம் முல்லைத் தேனே 💜 Read More »

13. முள்ளெல்லாம் முல்லைத் தேனே 💜

முள் – 13 இரண்டு மணி நேரத்தில் அனைத்தையும் இழந்தது போல சோர்ந்து போயிருந்த தன்னுடைய மருமகனின் முகத்தை ராஜியோ கவனிக்கத் தவறவில்லை. அவனைப் பார்க்கப் பார்க்க பாவமாக இருந்தது. மூத்த மகளை நம்பித் தாங்களும் அவனை வதைத்து விட்டோமே என்ற குற்ற உணர்ச்சி இன்னும் அவருக்கு இருக்கத்தான் செய்தது. வான்மதியை விட அதிக நேரம் சாஹித்தியாவே குழந்தையை தூக்கி வைத்திருப்பதால் சாஹித்யாவுடன் நன்றாகவே ஒட்டிக் கொண்டாள் தியா. “என்ன மாப்ள.. பாப்பா ரொம்பவே அழுதுட்டாளா..?” “ஆமா

13. முள்ளெல்லாம் முல்லைத் தேனே 💜 Read More »

12. முள்ளெல்லாம் முல்லைத் தேனே 💜

முள் – 12 தன்னுடைய செவிகளில் விழுந்த வார்த்தைகளை நம்ப முடியாது திகைத்து திணறி நின்று விட்டான் யாஷ்வின். சில நொடிகள் அவனுக்கு எதுவுமே புரியவில்லை. தன் மாமனார் உதிர்த்த வார்த்தைகளைத் தவறாக கிரகித்து விட்டோமோ என்பது போல அவரைப் புரியாத பார்வை பார்த்தான் அவன். அவனுடைய நிலையை விமலனால் நன்கு உணர முடிந்தது. “சாரி மாமா.. நீங்க கேட்டது எனக்கு புரியல.. என்ன கேட்டீங்க..?” என மீண்டும் அவர் கூறிய வார்த்தைகளைக் கூறும்படி கேட்டான் யாஷ்வின்.

12. முள்ளெல்லாம் முல்லைத் தேனே 💜 Read More »

11. முள்ளெல்லாம் முல்லைத் தேனே 💜

முள் – 11 பெற்றோர்களிடம் கூறியதோடு நில்லாமல் அப்படியே அவர்களை மருத்துவமனைக்கு அழைத்து வந்திருந்தாள் சாஹித்யா. மனம் முழுவதும் வேதனை புழுவாய் அரித்தது. பரிசோதனைக்குத் தயாராக இருந்தவளின் சிந்தனை முழுவதும் ஏன் தன்னுடைய சகோதரி தனக்கு இப்படி ஒரு இழிவான செயலை செய்துவிட்டுச் சென்றுவிட்டாள் என்பதிலேயே சுழன்று கொண்டிருந்தது. அவளைத் தவறாக எண்ணிவிடக் கூடாது என்பதற்காக தவறே செய்யாதவர்களை பிரச்சனையில் மாட்டி விடுவது தர்மம் இல்லை அல்லவா..? என் வாழ்க்கையைப் பற்றி அவளுக்கு சிறிதும் கவலை இல்லையா..?

11. முள்ளெல்லாம் முல்லைத் தேனே 💜 Read More »

10. முள்ளெல்லாம் முல்லைத் தேனே 💜

முள் – 10 குழந்தையின் சிரிப்பு மானிடர்களை சிதைக்குமா என்ன..? ஆம் அங்கே அந்தப் பிஞ்சுக் குழந்தையின் சிரிப்பைக் கண்டு அங்கே நின்றிருந்த அனைவரின் நெஞ்சமும் பிசையத் தொடங்கியது. அன்னை இறந்து விட்டதைக் கூட அறியாது, நடக்கும் பிரச்சனைகள் எது பற்றியும் புரியாது வஞ்சகம் இல்லாத அழகிய சிரிப்பை உதிர்க்கும் அந்தக் குழந்தையைக் கண்டு ஒரு நொடி அனைவரும் மனதால் சிதைந்துதான் போயினர். தன் குழந்தையின் மீது உயிரே வைத்திருக்கும் யாஷ்வினுக்கு உயிர் துடித்தது. “அஞ்சு நிமிஷம்

10. முள்ளெல்லாம் முல்லைத் தேனே 💜 Read More »

09. முள்ளெல்லாம் முல்லைத் தேனே 💜

முள் – 09 வான்மதியின் பெற்றோர்கள் சிந்திய வார்த்தைகளை யாஷ்வினால் ஜீரணிக்க முடியவில்லை. எப்படிப்பட்ட வார்த்தைகள் இவை..? உயிரோடு உருவி எடுப்பதைப் போல அல்லவா வலிக்கின்றது. அவர்கள் திட்டிக் கொண்டே போக ஒரு கட்டத்திற்கு மேல் அதை சகிக்க முடியாதவன், “போதும் நிறுத்துங்க.. என்ன பேசுறீங்கன்னு யோசிச்சுதான் பேசுறீங்களா..?” என சத்தமாக கத்திக் கேட்க, வான்மதியின் தந்தைக்கு கோபம் இன்னும் பெருகியது. அவரோ யாஷ்வினின் சட்டைக் காலரை இறுகப் பற்றிக் கொண்டவர், “நானும் பேசக்கூடாது பேசக்கூடாதுன்னு பார்த்தா

09. முள்ளெல்லாம் முல்லைத் தேனே 💜 Read More »

08. முள்ளெல்லாம் முல்லைத் தேனே 💜

முள் – 08 ஒரு மனிதன் எத்தனை துயரத்தைத்தான் தாங்கிக் கொள்ள முடியும்..? அப்படியே தரையில் விழுந்தவனுக்கு நெஞ்சு துடித்தது. எப்படி வினையாற்றுவது எனத் தெரியாது அசைவற்ற மரக்கட்டை போல சில நொடிகள் அப்படியே தரையில் விழுந்து கிடந்தான் அவன். சாஹித்யாவோ பயந்து அலறத் தொடங்கி விட்டாள். அவளுடைய அலறலில் சுயமடைந்தவன் வேகமாக எழுந்து அந்தக் கதவை உடைப்பது போல இடிக்கத் தொடங்க அவளுக்கோ மேலும் பயம் அதிகரித்தது. அப்படியே அந்த சுவற்றில் ஒன்றிக் கொண்டவள் நெஞ்சில்

08. முள்ளெல்லாம் முல்லைத் தேனே 💜 Read More »

error: Content is protected !!