வாழா வாழ்க்கையை வாழ்ந்திட வா..!

வாழா வாழ்க்கையை வாழ்ந்திட வா : 14

வாழ்வு : 14 மதுரா தனது கடந்த காலத்தை மீண்டும் சொல்ல ஆரம்பித்தாள். “அண்ணனும் அப்பாவும் என்ன சிங்கப்பூரில் கொண்டு விட்டு வந்தாங்க.. அத்தை வீட்டுல நான் ரெண்டு வருஷம் இருந்தேன்.. அங்கிருந்துதான் காலேஜ் போனேன்.. காலேஜ் எல்லாம் நல்லாவே போச்சு கொஞ்சம் கொஞ்சமா நான் வாழ்க்கையை புரிஞ்சுக்கிட்டேன், நடந்தது எல்லாத்தையும் மறக்க பழகிட்டேன்.. அத்தையும் எனக்கு ரொம்ப ஆதரவா இருந்தாங்க.. மாமா அவர் பொண்ணு மாதிரியே என்னை பாத்துக்கிட்டு.. விக்ரம் ரொம்ப நல்ல நண்பன் எனக்கு.. […]

வாழா வாழ்க்கையை வாழ்ந்திட வா : 14 Read More »

வாழா வாழ்க்கையை வாழ்ந்திட வா : 13

வாழ்வு : 13 ஆகாஷ் கையில் இருந்த அசிட் பாட்டிலை குறி வைத்து அங்கிருந்த கட்டையொன்றை எடுத்து வீசி இருந்தான் புகழ். அவன் வீசிய கட்டை ஆகாஷின் கையில் பட அந்த அசிட் பாட்டில் கீழே விழுந்தது. பயத்தில் இருந்த மதுரா இன்னும் தன் கண்களை திறக்கவில்லை. தான் மிகவும் கஷ்டப்பட்டு எடுத்த அசிட் பாட்டில் இப்படி கீழே விழ காரணமானவனை திரும்பிப் பார்த்தான் ஆகாஷ். அங்கே அவன் பின்னால் கண்கள் சிவக்க, இரையைக் குறி வைக்கும்

வாழா வாழ்க்கையை வாழ்ந்திட வா : 13 Read More »

வாழா வாழ்க்கையை வாழ்ந்திட வா : 12

வாழ்வு : 12 மதுராவின் காதல் கதையை கேட்க மிகுந்த ஆவலாய் மதுராவின் கட்டிலில் வசதியாக உட்கார்ந்து கொண்டு அங்கிருந்த தலையணையை எடுத்து மடியில் வைத்து தனது இரண்டு கைகளையும் அதில் ஊன்றி முகத்தை அதில் வைத்தபடி கதை கேட்க தயாரானாள். அவளின் நிலையைப் பார்த்து சிரித்த மதுரா, “ஏன் அண்ணி என்னோட காதல் கதையை கேட்க இவ்வளவு ஆர்வமா?” எனக் கேட்க, அதற்கு சம்யுக்தா,“இருக்காதா பின்ன.. எனக்கு லவ் ஸ்டோரி படிக்கிறது ரொம்ப பிடிக்கும்.. காலேஜ்

வாழா வாழ்க்கையை வாழ்ந்திட வா : 12 Read More »

வாழா வாழ்க்கையை வாழ்ந்திட வா : 11

வாழ்வு : 11 தீக்ஷிதன் சம்யுக்தாவை அண்ணி என்று மதுரா அழைப்பதற்கு சம்மதம் சொல்லிவிட்டு உள்ளே சென்றுவிட்டான். அவன் என்ன சொல்லி விட்டுப் போனான் என்று யோசனையில் இருந்த சம்யுக்தாவிடம், “ஆரத்தி எடுமா.. மது உள்ளே போகட்டும்..” என்று பரந்தாமன் சொல்ல, அவளும் சரி என்று தலையை மேலும் கீழுமாக ஆட்டிவிட்டு மதுராவிற்கு மகிழ்வோடு ஆரத்தி எடுத்து திலகம் இட்டு வரவேற்றாள்.  “தேங்க்ஸ் அண்ணி..” என்று அவள் சம்யுக்தாவின் கன்னத்தைப் பிடித்து கிள்ளிவிட்டு உள்ளே குதித்துக் கொண்டு

வாழா வாழ்க்கையை வாழ்ந்திட வா : 11 Read More »

வாழா வாழ்க்கையை வாழ்ந்திட வா : 10

வாழ்வு : 10 லீலாவதியை முறைத்து விட்டு தனது அறைக்குள் வந்து கதவை அறைந்து சாற்றினாள். அதிலேயே வித்யாவின் கோபத்தின் அளவு தென்பட்டது. அதைப் பார்த்து சிறிதும் கவலைப்படாமல் ரமணியை அழைத்து வித்யாவிற்கு ஜீஸ் கொடுக்குமாறு சொல்லிவிட்டு வெளியே சென்று விட்டார். ரமணியும் வித்யாவிற்கு மிகவும் பிடித்த மாம்பழ ஜூஸை எடுத்துக் கொண்டு, அவள் அறைக்கு முன்னால் சென்று கதவைத் தட்டினாள். அறைக்குள் கோபத்தில் நெயில் பாலிஷ் போட்ட தனது அழகிய விரல் நகங்களை கடித்துத் துப்பியபடி

வாழா வாழ்க்கையை வாழ்ந்திட வா : 10 Read More »

வாழா வாழ்க்கையை வாழ்ந்திட வா : 09

வாழ்வு : 09 காரில் சென்று கொண்டிருக்கும் போது தீஷிதன் தனது லேப்டாப்பில் வேலையாக இருந்தான். அவன் சம்யுக்தாவை கண்டுகொள்ளவில்லை. சம்யுத்தாவும் வெளியிலே இயற்கை எழிலை இரசித்தபடி தனது விழிகளை பதித்திருந்தாள். இங்கே பரந்தாமனின் நெற்றியில் விழுந்த சுருக்கங்கள் அவர் தீவிரமான யோசனையில் இருப்பதை வெளிப்படுத்தின. ஒரு சில நேரங்கள் திரும்பி தந்தையை பார்த்த தீக்ஷிதன் எதுவும் பேசாமல் தோளைக் குலுக்கிக் கொண்டான். இப்படியாக அவர்களின் ஆபிசுக்கு அருகில் வந்ததும் பரந்தாமன் ட்ரைவரிடம் காரை நிறுத்தச் சொல்லிவிட்டு,

வாழா வாழ்க்கையை வாழ்ந்திட வா : 09 Read More »

வாழா வாழ்க்கையை வாழ்ந்திட வா : 08

வாழ்வு : 08 அவளுக்கென்று ஒதுக்கப்பட்ட அறைக்கு வந்தாள் சம்யுக்தா. அவள் இங்கே வந்திருந்தாலும், நடந்ததையே அவள் மனம் எண்ணிக் கொண்டிருந்தது. அதன் வெளிப்பாடாக அவளது முகம் கவலையை தத்தெடுத்துக் கொண்டது. கணவன் எவ்வளவு பெரிய நம்பிக்கை துரோகத்தை பண்ணியிருக்கிறான். தாயோ கஷ்டத்தில் இருக்கும் போது தான் அனாதை என்று கூறி வீட்டை விட்டு வெளியே அனுப்பிவிட்டாரே என்பதை நினைக்க நினைக்க அவளுக்கு வேதனை மிகுந்தது. கண்களில் கண்ணீர் திரள அதை தனது இரு கையாலும் துடைத்தாள்.

வாழா வாழ்க்கையை வாழ்ந்திட வா : 08 Read More »

வாழா வாழ்க்கையை வாழ்ந்திட வா : 07

வாழ்வு : 07 நன்றாக உறங்கிக் கொண்டிருந்த சம்யுக்தாவிற்கு உடலில் ஒரு மாற்றம். கார் ஜன்னலில் ஊடாக இதுவரை வந்து கொண்டிருந்த காற்று சற்று அதிகமாக குளிரையும் சேர்த்து வந்தது இப்போது. அதனால் அவளுக்கு மிகவும் குளிராக இருக்க தான் உடுத்திருந்த புடவை முந்தானையால் தன் கைகளை நன்றாக மூடிக்கொண்டாள். தூக்கத்திலேயே இருந்தாலும் அந்த குளிரின் அளவு அதிகமாக அதிகமாக அவளால் உறங்க முடியவில்லை. தூக்கத்திலிருந்து எழுந்தவள், தான் காரில் இருப்பதை உணர்ந்து பதற்றமடைந்தாள். ஒரு சில

வாழா வாழ்க்கையை வாழ்ந்திட வா : 07 Read More »

வாழா வாழ்க்கையை வாழ்ந்திட வா : 06

வாழ்வு : 06 அந்த இரவு நேரத்தில் பாலத்தின் மீது ஏறி நின்றாள் சம்யுக்தா. தொட்டுத் தாலி கட்டிய கணவன் ஏமாற்றி விட்டான். தாய் வீட்டுக்குச் செல்லலாம் என்றால் தாயோ இவள் ஒரு அநாதை என்ற பட்டத்தைக் கொடுத்து வெளியே அனுப்பி விட்டார். சொந்த பந்தம் எதுவும் இல்லாமல், தனக்கென்று ஒரு உறவு இல்லாமல் யாருக்காக இந்த வாழ்க்கை…? எதற்காக இந்த வாழ்க்கை..? என்று எண்ணம் தான் சம்யுக்தாவிற்கு தோன்றியது.  இதற்கு மேல் இந்த உலகத்தில் இருந்து

வாழா வாழ்க்கையை வாழ்ந்திட வா : 06 Read More »

வாழா வாழ்க்கையை வாழ்ந்திட வா : 05

வாழ்வு : 05 கீதா, சம்யுக்தா ஹாஸ்பிடலுக்கு வரும் முன்னரே சம்யுக்தாவிற்கு ட்ரீட்மென்ட் பண்ணிய டாக்டருக்கு கால் பண்ணி விஷயத்தை அறிந்து கொண்டார். அதன் பின்னர் அவர் என்ன செய்ய வேண்டும் என்று திட்டம் போட்டுக் கொண்டு, சம்யுக்தாவை மாத்திரம் ஹாஸ்பிடலுக்கு அனுப்பி வைத்தார். பின்னர் வீட்டில் இருந்து வக்கீலின் ஆபீசுக்கு சென்றவர், பிரகாஷையும் அங்கே அழைத்தார். அவர்கள் இருவரும் அவரிடம் சம்யுக்தாவைப் பற்றி கூறினார்கள். டைவர்ஸ் வாங்க வேண்டும் என்றான் பிரகாஷ். வக்கீலிடம் தன் மீது

வாழா வாழ்க்கையை வாழ்ந்திட வா : 05 Read More »

error: Content is protected !!