வேந்தன்… 29 அதெப்படி பார்த்த செக்கன்ல லவ் வரும்? அதும் லிப் டூ லிப் கிஸ் பண்ணுற அளவுக்கு? அதுமட்டுமா? இன்னும் டச்சிங் டச்சிங் வேற பண்ணிட்டு, எவ்ளோ தைரியம் இவனுக்கு. அந்தப் பொண்ணு திருப்பி அடிச்சிருந்தா கூட சிங்கிள் பசங்க மனசுக்கு ஆறுதலா இருந்திருக்கும். அன்னைக்கு கூட அதே பொண்ணு நம்ம துருவ் கன்னத்துல, ஹீல்ஸ் செருப்பால அடிக்கலையா. எதுக்கும் முக ராசி வேணும். அது நமக்கில்ல ஒரு பெருமூச்சோடு நண்பர்கள் இருவரும் தங்களுக்குள் யோசித்தார்கள். […]
வேந்தனின் அளத்தியிவள்..
வேந்தன்… 28
வேந்தன்… 28 வரும் வழியில் என்ன சொன்னால் பொருத்தமாக இருக்குமென காரணங்களை யோசித்து வைத்தவளுக்கு வாசலில் காலை வைத்ததும்தான் காலையில் நடந்த கூத்து நினைவுக்கு வந்தது. “ஆண்டவா பொய் சொன்ன வாய்க்கு போஜனம் கிடையாதுன்னு சொல்வாங்க. நான் வேற பொய் மேல பொய்ன்னு கணக்கில்லாம சொல்லிக்கிட்டு இருக்கேன். எங்க போய் முடிய போவுதோ தெரியலையே, என்னை மன்னிச்சிக்கப்பா” கடவுளுக்கு ஒரு விண்ணப்பம் வைத்தவள் வீட்டுக்குள் வந்தாள். வரும் போதே வீட்டில் யார் யார் இருக்காங்கன்னு அவசரமாக பார்த்தும்
வேந்தன்… 26
வேந்தன்… 26 பின் இருக்கையில் அமர்ந்திருந்தவளுக்கு அந்தக் காரின் சொகுசும் ஆடம்பரமும் வியப்பைக் கொடுத்தாலும், அதை வெளிப்படையாகக் காட்டிக் கொள்ளவே இல்லை. அவனது கம்பீரமான தோற்றமும், திமிர் பார்வையும், சிரிப்பை தராத இறுகிய உதடுகளும், தனக்கு மதிப்பை தருமென மற்றவர் நம்பும், எந்த அணிகலனும் அணிய விரும்பாத அலட்சியதிமிர் அவன் நிமிர்வான தோற்றத்திலேயே தெரிந்தது. அவனையே ஒரு செக்கன் ஊன்றி கவனித்தவளுக்கு, தன்னிடம் அத்துமீறுபவன் நிச்சயம் தங்களைப் போல சாமான்யன் இல்லையெனப் புரிய,
வேந்தன்…27
வேந்தன்…27 “இறக்கி விடு. தொடாத என்ன” வளையல் கரங்களால் அவனது மார்பில் குத்தியவள், நகங்களால் கிள்ளியும் வைத்தாள். பீச் ரோட்டில் மக்கள் நடமாட்டமிருக்கும் அதனால் தைரியமாக காரில் ஏறி வந்தாள். ஆனால் இங்கே யாருமில்லாத வீட்டிற்கு அழைத்து வந்ததும் இல்லலாமல், வில்லன் போல கைகளில் தூக்கிக்கொள்ள, அவளுக்கு திகில் பிடித்தது. மனசுக்குள் ஏதேதோ கற்பனைகள் தப்பு தப்பாக குதிரை வேகத்தில் ஓடியது. “ம்ஹூம் நான் வரமாட்டேன். விடுடா என்னை” அவன் முகத்தில் கீறி வைத்தாள் நகத்தால். லேசாய்
வேந்தன்… 25
வேந்தன்… 25 இவள் ஜன்னல் வழியாகப் பார்ப்பதைக் கண்டுவிட்ட எதிர் வீட்டு மாமிக்கு இப்போது பார்த்து பக்கத்து வீட்டில் யாருமே இல்லையேன்னு கவலையாக இருந்தது. “பொண்ணுங்களை வளர்த்தணும்னா மலர்விழியப் பார்த்துதான் கத்துக்கணும்பா. நான்கூட கவலைப்பட்டேன். ராஜன் மூணு பொண்ணுங்களை பெத்து வச்சிருக்கானே. ஒரு சம்பளத்துல குடும்பத்தை எப்படிக் கொண்டு போவான். படிப்பு கல்யாணம்னு செலவு தாட்டணுமேன்னு அவனை நினைச்சு வருத்தமா பட்டேன். ஆனா பாரேன் ஒன்னொன்னும் வைரமாட்டம் மின்னுதுங்க” “அட ஆமாப்பா. அதும்
வேந்தன்… 24
வேந்தன்… 24 sorry honeys, konjam work athigamaakittu🤗. நடக்கும் தூரம்தான் என்பதால் குறுக்கு வழியில் புகுந்து வீட்டிற்கு சென்றுவிட்டாள் நளிரா. தன் பின்னேயே வந்திருந்தாலும் சுபியின் வீடு வரைக்கும்தான் பின்தொடர்ந்து வந்திருக்கிறான். அதனால் தன் வீடு அவனுக்குத் தெரியாததால் எப்படியும் அவன் இங்கே வீட்டுக்கு வரமாட்டான் என்பதில் நிச்சயம் அவளுக்கு. இன்னைக்கு சம்பந்தி வீட்டிலிருந்து வருவதாகத் தகவல் வந்திருப்பதால், விரைவில் அப்பா அம்மா வீட்டிற்கு வருவார்கள் என்று கேட்டைப் பூட்டாமல் விட்டுவிட்டாள், ஆனாலும் அவள் வந்த
வேந்தன்… 23
வேந்தன்… 23 கைக்குட்டையை எடுத்து முகத்தை அழுந்த துடைத்தவளுக்கு கைகால்கள் உதறியது பயத்தில். கட்டியிருந்த புடவை வேறு இருக்கும் புழுக்கத்தை இன்னும் அதிகரித்தது. உள்ளாடை அதற்கு மேல் ரவிக்கை அதை தாண்டி மாறாப்பு என மூச்சுக் கூட விடமுடியாமல் போனது அவளுக்கு. ‘யாரு கண்டுபிடிச்சா இந்தப் புடவை கட்டும் கலாச்சாரத்தை?’ ஆயிரம் எண்ணிக்கையை தாண்டிப் போயிருக்கும் இந்தக் கேள்விகள். “கல்யாணம் முடியும் வரைக்கும் ஒழுங்கா லட்சணமா புடவையைக் கட்டுடி” என வீட்டில் சொல்லியிருக்க, வேறு வழியில்லாமல் புடவையைத்தான்
வேந்தன்…22
வேந்தன்…22 “வீட்டுக்கு வந்தா சிரமப்படக் கூடாதுன்னு சொல்லித் தந்தா அதை ஒழுங்கா கத்துக்கணும். அத விட்டுட்டு இந்தப் பிள்ளைங்க ரெண்டும் நறுக்குன்னு பேசுதுங்க” ஓரக்கண்ணால் இரண்டு மகன்களையும் பார்த்தார். ஆரவ் லேப்டாப்பில் பார்வையை பதித்திருக்க, நிஷாந்த் தன்னுடைய பேக் செக் பண்ணிட்டு இருந்தான். நிஷாந்த் கூட அம்மாவின் புலம்பல் தாங்காமல் காது கொடுத்துக் கேட்பான். ஆனால் ஆரவ் பெரிதாக எதையும் கண்டுகொள்ள மாட்டான். என்கிட்டே எப்படியிருப்பியோ அப்படியிருப்பேன் நான். இதுதான் அவன் கொள்கை. மற்றபடி சண்டை
வேந்தன்…21
வேந்தன்…21 குடும்பத்தின் பாச மழையில் நனைந்து கொஞ்சம் தெளிந்துவிட்டாள் நளிரா. அதுபோக ராஜியின் அறிவுரை மழையில் சொட்ட சொட்ட நனைந்து “சுபி நாளைக்கு கடைக்கு வாடி செயின் தேடுவோம்” என்றுவிட்டு வீட்டுக்கு ஓடியே வந்துவிட்டாள். இரவு உணவை ராஜி வீட்டிலேயே உண்டுவிட்டதால், ஹாலில் பாயை விரித்துப் போட்டு படுக்கையை தயார் செய்தார்கள். சைத்ரா ராஜன் படுப்பதற்கு கட்டிலை போட்டு, பெட்சீட் விரித்துக் கொடுத்தாள். ஆர்த்தி குடிப்பதற்கு தண்ணீர் பாட்டில்களை எடுத்து வந்தாள்.
வேந்தன்… 20
வேந்தன்… 20 ரொம்ப நேரம் தோழிகள் அப்படியே அமர்ந்திருக்க, கதவை தட்டும் ஓசையிலேதான் சுயநினைவுக்கு வந்தனர். நளிரா பதறி எழுந்திருக்க, “அம்மாதான் நளி. நீ படு. நான் ஏதாவது சொல்லிக்கறேன்” என்றவள் அவசரமாக யோசித்தாள். நளிராவின் முகமே அவளது கவலையைக் காட்டித் தரும். அதனால் எதையாவது சொல்லி சமாளிக்கணுமே. சட்டென யோசனை உதயமாக, “அம்மா கதவு திறந்திருக்கும்மா” என்று சொன்ன சுபியின் கரங்கள் நளிராவின் கழுத்துச் செயினை கழட்டியது. “செயினை காணம்னு சொல்லிக்கலாம்