Mr and Mrs விஷ்ணு 43

4.9
(61)

பாகம் 43

ப்ரதாப் இவ்வாறு கேட்டதும் விஷ்ணுவிற்கு தான் இதயமே நின்று துடிப்பது போல் இருந்தது அதிர்ச்சியில், 

உன் மேல் தான் தவறு என அவன் வாயை அடைக்க வேண்டும் என்பதற்காக இவள் பேச, அதை வைத்தே மடக்கி விட்டானே மாயக்காரன்,

“என்னம்மா நான் சொன்ன ஒரு வார்த்தைக்காக அதை மதிக்கனும்னு இத்தனை நாள் அம்மா வீட்டுல இருந்தவ, நான் என்ன சொன்னாலும் அதை அப்புடியே  செய்ற வாசுகி டைப் இப்ப என்னாச்சும்மா? இவ்வளவு தயங்குற கமான் விஷ்ணு சீக்கிரம் சீக்கிரம் நான் சொன்னதை செய் பார்க்கலாம்” என்று இதழ் கடித்து வந்த சிரிப்பை அடக்கிய படி அவளை சீண்டினான் ப்ரதாப்..  

அவளுக்கோ அச்சோடா ஏன் இப்புடி செய்கிறான் என்று ஆனது… உன் வாய் தான் உனக்கு எதிரி என்று தன்னையே திட்டியும் கொண்டாள்.. எப்புடி எப்புடி அவளால் முடியும்… புருஷன்காரன் கேட்டதை கொடுக்கவும் அவனிடமிருந்து அதை விட அதிகமாக வாங்கவும் கொள்ளை ஆசை மனதில் கொட்டி கிடந்தாலும் அவளாக எப்புடி முடியும்.. வெட்கமும் கூச்சமும் முண்டியடித்து கொண்டு முன் வந்ததே, முத்தம் அவர்களுக்குள் என்ன இயல்பான விஷயமா, அந்தளவு இருவரிடமும் நெருக்கம் இல்லையே, அவளாக எப்புடி முதற்படி எடுத்து வைக்க முடியும் இப்புடி சீண்டுகிறானே, இமைகள் படபடவென அடிக்க இதழ் துடிக்க என்ன செய்வதென தெரியாமல் பாவமாக நின்று கொண்டு இருக்க,

அவளை மேலும் தவிக்க விடாது துடிக்கும் இதழ்களின் துடிப்பை தன் இதழ் கொண்டு அடக்கி இருந்தான்.. அவன் கேட்டதை அவனே கொடுக்க ஆரம்பித்தான்.. அவளும் அவனும் வேறு வேறா என்ன? 

அலங்காரம் எதுவும் இல்லாது சாதரணமான டாப்ஸ் லெக்கின்ஸ் அணிந்து இருக்கும் போதே அவனை தன்புறம் ஈர்ப்பவள்.. இன்றோ தழைய தழைய புடவை, விரித்து விட்டு இருந்த கூந்தலில் குடியிருந்த மல்லிகை, காதில் குடை ஜிமிக்கி, மை தீட்டிய விழி என இது போதாதா அவனை ஈர்க்க, அதுவும் அந்த உதட்டு சாயம் அதிகம் பூசியிருந்த அந்த இதழ்கள் எட்ட இருக்கும் போதே அவனை வெகுவாக இம்சித்தது.. இவ்வளவு நேரம் கோவத்தை இழுத்து பிடித்து பொறுமை காத்தவனுக்கு நெருக்கமாக பார்த்ததும் அவனை கட்டுபடுத்த முடியவில்லை..

இதழ் முத்தம் ஆழ்ந்த அழுத்தமான முத்தம்.. ஒரே முத்தத்தில் அவளின் சந்தேகங்களை அனைத்தும் கலைந்து அவனை உணர வைக்க முயற்சிக்கிறானோ என்னவோ, அவ்வளவு வேகம்.. 

விஷ்ணுவோ முதலில் அதிர்ந்தவள், பின்பு கணவனின் இதழ் தந்த கிறக்கத்தில் கண்களை இறுக மூடி கொண்டாள்.. வயிற்றில் பட்டாம்பூச்சி பறக்கின்றது என்று படத்தில் வசனம் கேட்கும் போது அது எப்புடி டா என்று சிரித்தவளுக்கு, இப்போது வயிற்றில் பட்டாம்பூச்சி பறப்பது போன்ற உணர்வு தான்.. உடல் லேசாகி காற்றில் பறப்பது போல் இருந்தது.. 

நொடிகள் கரைந்து நிமிடங்களாகி அதுவும் 15நிமிடத்தை கடந்தும் நிறுத்தவில்லை.. நிறுத்தும் எண்ணமும் அவனிடம் இல்லை.. நேரம் ஆக ஆக அவனின் வேகத்தில் அவளால் நிலை கொள்ள முடியவில்லை.. கால்கள் துவள பிடிமானத்திற்கு அவன் சட்டையையே இறுக பற்றி கொண்டாள்..

முற்று பெறாமல் தொடர்ந்த இதழ் முத்தம் கதவை யாரோ தட்டும் சத்தத்தில் முற்று பெற்றது.. விலகியவள் முகம் பார்த்தான் ப்ரதாப்.. அவள் இன்னும் நிதான துக்கு வரவில்லை‌‌.. நிச்சயம் அவளால் சென்று கதவை திறக்க முடியாது என்பது புரிந்தது.. ஒரு “முத்ததிற்கே இப்புடியாடி” என்றவன் அவளை மெத்தையில் அமர வைத்து விட்டு தானே சென்று கதவை திறந்தான்..

அவர்களுக்கு இரவு உணவு எடுத்து வந்து இருந்தார் வேலைக்கார பெண்மணி.. அந்த ட்ரேயை வாங்கியவன் கதவை சாத்தி விட்டு வந்தான்.. 

“சாப்பிடுறியா விஷ்ணு” என ப்ரதாப் கேட்க இல்லை என தலையாட்டினாள்.. அவனை நிமிர்ந்து பார்க்கவில்லை.. தலை குனிந்து அமர்ந்து இருந்தாள்..

“பசிக்கலையா”? என கேட்க, 

அதுக்கும் இல்லை என்ற தலை அசைப்பு தான்.. 

“சரி ஏதாவது குடிக்கிறியா” என கேட்டான்..

“ம்.. என்றாள்”.. அந்த ட்ரேயில் இரண்டு குட்டி ஃப்ளாக்ஸ் இருந்தது.. ஒன்று அவளுக்கானது.. அவள் இரவு எப்பொழுதும் உறங்குவதற்கு முன்பு குடிப்பதற்கான பால்.. அவள் பழக்கங்களில் அது ஒன்று.. அது ப்ரதாந்பிற்கு தெரியும் என்பதால் கொண்டு வர சொல்லிருப்பான் என நினைத்து கொண்டாள்.. 

இன்னோன்று அவனுக்கானது பால் இல்லாத ப்ளாக் காபி.. அவனுக்கு தான் பால் சம்பந்தப்பட்டதே எந்த பொருளும் பிடிக்காதே.. 

இரண்டு கப்பில் ஊற்றும் சத்தம் அவளுக்கு கேட்டது.. அருகே அமர்ந்தவன் “இந்தா” என்று ஒரு கோப்பையை நீட்ட, வாங்கி கொண்டவள் முகம் சுருங்கியது..

“அய்யோ பால் இல்லை” என்றாள் ப்ரதாப்பை பார்த்து,

“ம்.. பால் கலந்த காபி குடி” என்றான்..

“எனக்கு வேண்டாம்” என்றாள்..

“ஏன்”? ப்ரதாப் கேட்க

“நைட்டு டைம் காபி குடிச்சா எனக்கு தூக்கம் வராதே” என பதில் அளித்தாள்

“அதுக்கு தான் கொண்டு வர சொன்னேன் குடி” என்றான்..

தத்தி விஷ்ணுவுக்கும் அவன் எதற்காக சொல்கிறான் என்று புரியவில்லை.. அப்படியே கையில் வைத்துக்கொண்டு முழித்துக் கொண்டிருக்க, 

“இத்தனை மாசம் கழிச்சும் கூட தூங்குற ஐடியா வோடத்தான் வந்திருக்க போல” என ப்ரதாப் கேட்டதும் தான், எதற்கு இந்த காபி என புரிந்தது அவளுக்கு,

“மத்த விஷயத்தில் தத்தியா இருந்தா கூட பரவாயில்லை இதிலையுமே” அடக்கப்பட்ட சிரிப்புடன் ப்ரதாப் கேலி செய்யவும், ‘மானமே போச்சு டி’ என நெற்றியில் அடித்து கொண்டவள் காபியை பருக ஆரம்பித்தாள்..

என்கிட்ட ஏதாவது கேள்வி கேட்கனுமா? விஷ்ணு காபியை பருகியபடி ப்ரதாப் கேட்டான்.. ஏனெனில் அவள் மனதில் தான் நிறைய குழப்பங்களுய் கேள்வியும் இருக்கின்றது ஆனால் என்ன விஷயம் அவனுக்கு தெரியாதே , அதை சரி செய்ய வேண்டும் என்பதற்காக கேட்கின்றான்.‌. 

அவனை ஏறிட்டு பார்த்தாள் விஷ்ணு.. ஏதாவதா ஏகப்பட்டது இருக்கின்றதே கேட்க, அதிலும் முக்கியமாக லில்லியை பற்றியும் அவள் சொன்ன விஷயத்தை பற்றியும் கேட்க வேண்டும்..

ஆனால் லில்லியை பற்றி பேசி மறுபடியும் சண்டை வந்து விடுமோ என்றும்,  ஆமா அவள் சொன்னது உண்மை தான் என்று சொல்லி விடுவோனோ என்றும் கேட்க பயமாக இருந்தது… அதோடு நிவேதா வேறு பழசு எதையும் பேசாதாடி, பேசினாலே பிரச்சினை தான் அதை அப்புடியே விட்டுரு என்று தவறான அறிவுரை கூறி இருக்க, இல்லை என்று தலையாட்டினாள்..

ஆனால் கேட்டு இருக்கலாம்.. மனம் விட்டு பேசி இருக்கலாம்.. அப்புடி பேசி இருந்தால் இன்று மனதில் விழுந்திருக்கும் சந்தேகம் என்னும் விதை மரமாக வளர்ந்து பெரிய பிரச்சினையை தர போவதை தடுத்து இருக்கலாம் என அப்போது வருத்தப்பட போகிறாள்..

“உண்மையாவே எதுவும் இல்லையாடி” அழுத்தமாகவே ப்ரதாப் கேட்டான்..

இல்லை என்று இம்முறையும் மறுக்க, குழப்பமும் சந்தேகமும் அவளுக்கு தானே அவளே இல்லை எனும் போது என்ன செய்ய முடியும் “சரி ஓகே” என்றே தோள் குலுக்கியவன், 

அவள் கையிலிருந்த கோப்பையும் வாங்கி டேபிளில் வைத்து விட்டு,

“அப்ப ஆரம்பிக்கலாமா”? என கழுத்தை நீவியபடி கேட்க, எதை என்பது புரிந்தவள்  தலையை தாழ்த்தி கொண்டாள் வெட்கத்தில்,

கழுத்தில் கரம் கொடுத்து தன்புறம் இழுத்தவன் பாதியில் நிறுத்திய முத்தத்தை தொடர்ந்தபடியே மனைவியோடு கட்டிலில் சரிந்தான்.. இதழில் மீண்டும் ஆழ்ந்த முத்தம் பதித்தவன் உதடுகள் அங்கிருந்து நகர்ந்து நெற்றி, கண், மூக்கு, கன்னம் என நகர்ந்து கழுத்தில் வளைவில் புதைந்தது.. முதலில் மென்மையாக குட்டி குட்டி முத்தம் வைத்தவன் உணர்வு மிகுதியில் பற்தடம் பதிக்க,

வலியும் சுகமும் ஒரு சேர ஸ்..ஆ.. என்று விஷ்ணு முனகினாள்.. அந்த முனகல் ஆடவனின் தாபத்தை கூட்ட கழுத்திலே இன்னும் ஆழப்புதைந்தவன் கரங்களும் கட்டுபாடுன்றி மேனியில் பயணிக்க, நாணம் கொண்ட பெண்மை அனிச்சையாக தன் கரம் கொண்டு தடுத்தது.. 

முறைத்தவன் தடுத்தவளின் கரத்தை தன் கரம் கொண்டு அடக்கியவன் கரம் பயணிக்க கூடாது என்று அவள் தடுத்த இடத்தில் எல்லாம் இதழ் ஊர்வலம் நடத்தினான்.. தடுக்க இயலாத பெண்மையோ உணர்வுகளின் பிடியில் சிக்கி தவித்தது…

இதற்கு மேல் தாளாது என்றவன் “சேரி ரிமூவ் பண்ணுடி” என்று சொல்ல அவளோ ஒவ்வொரு பின்னாக மெதுவாக கழட்ட,

இவளை விட்டா இந்த நாளையும் வேஸ்ட் பண்ணிடுவா என்று நினைத்தவன் அவனே ஆடைகளை கலைந்து விட்டு இறுக அணைத்து கழுத்தில் முகம் புதைக்க காதில் முத்தமிட ஜிமிக்கி தொந்தரவாக இருக்கிறதென அதையும் கழட்டி வைக்க, நெஞ்சில் ஏதோ குத்துவது போன்று இருந்தது.. என்ன என்று பார்த்தால் அவன் கட்டிய தாலி தான்.. 

தாலி கொடி மீது கை வைக்க விஷ்ணு கழட்ட கூடாது என தலை அசைக்க,

“ஓ.. நீங்க பதிவிரதைல்ல.. கொஞ்ச நேரத்திற்கு உங்க பதிவிரதைக்கு லீவ் விடுங்க வாசுகி மேடம்” என்றவன் அதையும் கழட்டி வைத்து விட்டு அவளில் முழ்கும் வேலையில் மும்முரமானான்..

அனைத்தையும் கலைந்தவன் ஏனோ கையில் மாட்டி இருந்த கண்ணாடி வளையலை கழட்டவில்லை.. அந்த வளையல் தரும் ஓசை அவனுக்கு பிடித்து இருந்தது.. வளையல் ஓசையும் அவளின் முனகலும் அவனின் ஆசையை மேலும் மேலும் கூட்டியது.. 

அவளை முழுவதுமாக ஆட்கொண்டு விட்டு விலகி அருகே விட்டத்தை பார்த்தபடி படுத்தவன் அவளையும் மார்பில் தாங்கி இருந்தான்.. 

இருவரின் மூச்சும் சீரற்ற இருந்தது.. இரண்டு நொடி கழித்து விஷ்ணு எழும்ப, 

“என்னடி” என கேட்டான் ப்ரதாப்..

“டிரஸ்”என இழுக்க,

“வேண்டாம் படுடி” என்றான்..

“அதான் எல்லாம் முடிஞ்சுதே” அவன் முகம் பார்க்காமல் அவள் சொல்ல,

“அப்புடின்னு நான் சொல்லவே இல்லையே” என்றவனை பார்த்தவள் “மறுபடியுமா” ஷாக்காகி கேட்க..

“மறுபடியும் இல்ல மறுபடியும் மறுபடியும்” என்று ப்ரதாப் கூறியதில் அதிர்ச்சியில் கண்ணை விரிக்க,

கணவனோ மீண்டும் அவள் மீது படர்ந்தான்.. வெளியில் அவன் முன்பு மட்டும் தான் இந்த அதிர்ச்சி எல்லாம்.. ஆனால் உள்ளுக்குள் மீண்டும் வேண்டும் என்ற எதிர்பார்ப்பு தான் அவளுக்கு, கணவனின் கையில் உலகம் மறந்து கிடந்தாள்.. அதனாலோ என்னவோ அவனின் உளறல்கள் முனகல்கள் எதையும் கவனிக்கவில்லை.. கவனித்து இருந்தால் அவன் மனதில் இருப்பதை அறிந்து இருக்கலாம்.. 

ப்ரதாப்பிற்கோ மனைவியை விலக மனமே இல்லை.. அதனாலே மீண்டும் மீண்டும் மனைவியை நாடினான்.. தாம்பத்தியம் இவ்வளவு இன்பத்தை தருமா.. உடலும் மனமும் இதுவரை அனுபவிக்காத ஒரு இதத்தை உணர்ந்தது.. ச்சே ஒரு வருடத்தை வீணாக்கி விட்டோமே என தன்னையே கடிந்து கொண்டான்..  

இன்னும் இன்னும் அவள் வேண்டுமென்று மனம் ஆர்பரித்தாலும்  மனைவியின் நிலையை கருத்தில் கொண்டு இப்போதைக்கு முடித்து கொண்டு அவளை நெஞ்சில் தாங்கி கொண்டான்.. இன்னும் அவள் உறங்கவில்லை.. முகத்தை நிமிர்த்தி நெற்றியில் முத்தமிட்டவன்

“நான் என்ன சொன்னாலும் செய்வேன்னு சொன்னீங்க.. ஆனா  இன்னைக்கு நான் செய்ய சொன்ன எதையும்  செய்யவே இல்லையே வாசுகி மேடம், ஏன் இன்னைக்கு உங்க பதிவிரதை போஸ்டிங்க்கு லீவ் விட்டு இருக்கீங்களா வாசுகி மேடம்” என அடக்கப்பட்ட சிரிப்புடன் கேட்க,

‘சொன்னது எல்லாம் செய்றதா, செய்ய கூடிய விஷயத்தை யா கேட்டார், சொன்னது அத்தனையுமே சென்சார் கட் சமாச்சாரம்… அச்சோ தன் வாய் தான் தனக்கு எதிரி என நினைத்தவள்’, இதை வைத்து மேலும் சீண்டுவான் என்பதால் நான் தூங்கிட்டேன் என முகத்தை அவன் மார்பில் ஒளித்து கொள்ள, பிரதாப்போ வாய் விட்டு சத்தமாக சிரிக்க ஆரம்பித்தான்..

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.9 / 5. Vote count: 61

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!