இதை எடுக்கலாமா? இல்ல இல்ல இதை எடுக்கலாம், இந்த கலர் இருக்கு,இல்ல இது நமக்கு செட் ஆகாது.. வேற எதை எந்த சர்ட்டை எடுப்பது பார்த்திபனுக்கு பயங்கர குழப்பமாக இருந்தது.. எதிரே அவன் ஏதாவது எடுத்து விட மாட்டானா என்ற எதிர்பார்ப்பில் சேல்ஸ் மேன் அவனையே பார்த்து கொண்டு நின்று இருந்தார்..
அவனுக்கு தேர்ந்தெடுப்பது அவ்வளவு குழப்பமாக இருந்தது.. பவித்ராவை காதலிக்க ஆரம்பித்த காலத்தில் இருந்தே அவனின் உடைகளை தேர்ந்தெடுப்பது அவள் தான்.. உடை என்ன வாட்ச் பெல்ட் பர்ஸ் ஷு ஷாக்ஸ் என் அவனுக்கு தேவையான அனைத்தும் அவள் தான் தேர்ந்தெடுப்பாள்..
பார்த்திபனுக்கு ஷாப்பிங் போவது உட்கார்ந்து ஆன்லைனில் தேடுவது என அந்தளவு பொறுமை கிடையாது.. ஏனோதனோ என்று பொருட்களை வாங்குவான்.. ஏன் பார்த்தி அப்புடி இருக்க என பவி தான் அவனுக்கு எது நேர்த்தியாக அழகா இருக்கும் என பார்த்து பார்த்து வாங்கி கொடுப்பாள்..
பழையதை நினைத்து பார்த்தவன்.. ‘ச்சே இப்புடி சின்ன விஷயத்திற்கு கூட அவளை டிபென்ட் பண்ணி வாழ்ந்து இருக்கியே பார்த்திபா.. அதான் இப்புடி அசிங்க படுத்தி விட்டுட்டு போய்ட்டா’ என தன்னையே கடிந்து கொண்டவன்,
“இதை பில் போடுங்க” என்று ஒரு சர்ட்டை ஹேங்கரில் இருந்து எடுக்க,
“இந்த கலர் உங்களுக்கு செட் ஆகாது பார்த்திபன், அந்த ஷர்ட்டுக்கு பின்னாடி இருக்க லைட் பர்ப்பிள் கலர் செமையா இருக்கும்” என்ற பெண் குரல் பின்னாடி கேட்க,
யார் என திரும்பி பார்த்தான் பார்த்திபன்..
“ஹாய் பார்த்தி எப்புடி இருக்கீங்க” பெண்ணவள் சிரித்தபடி கேட்க, பார்த்திபனுக்கு தான் யார் என தெரியவில்லை..
“என்ன பார்த்தி என்னை நியாபகம் இல்லையா நான் பிருந்தா” என்றாள்..
பிருந்தா இந்த பேரை மறக்க முடியுமா.. இவள் அளித்த மேரேஜ் பார்டிக்கு சென்று திரும்பி வரும் போது தானே பவித்ரா அவ்வளவு பெரிய பிரச்சினையில் சிக்கி.. அவளை காப்பாற்ற ஷ்யாம் வந்து, அதன் பின்பு தானே பார்த்திபன் வாழ்க்கையே தடம் புரண்டது.. பார்த்திபன் நினைக்க,
அதை தான் பிருந்தாவும் நினைத்து இருப்பாள் போல,
“சாரி பார்த்திபன் என்னால் தானே இவ்வளவு பிரச்சினையும், அன்னைக்கு நான் பவியை பத்திரமா வீட்டிற்கு அனுப்பி வச்சு இருக்கனும்.. நீங்க வருவீங்கன்னு அவ சொன்னதால் தான் அங்கிருந்து நான் கிளம்பினேன்.. என் தப்பு தான் அப்புடி அவளை தனியா அங்க விட்டுட்டு போய் இருக்க கூடாது.. நீங்க வரவரைக்கும் துணையா கூட இருந்து இருக்கனும்.. அப்புடி நான் செஞ்சு இருந்தா நிறைய பிரச்சினைகளை தவிர்த்து இருக்கலாம்… சாரி பார்த்திபன் இப்புடி எல்லாம் நடக்கும்னு நான் நினைச்சு பார்க்கலை” உண்மையான வருத்தத்தோடு அவள் மன்னிப்பு கேட்க,..
“நீங்க எதுக்கு பிருந்தா சாரி கேட்கிறீங்க.. நீங்க என்ன பண்ணுனீங்க.. இதான் நடக்கனும்னு இருந்திருக்கு அது நடந்துருச்சு விடுங்க பழசை பேச வேண்டாம்” என்றான்..
“இல்ல பார்த்திபன் பவித்ரா உங்க மேல்ல”,
“ம்பச் அதை பத்தி பேசாதீங்கன்னு சொன்னேன்.. உங்க மேரேஜ் லைஃப் எப்புடி போகுது” பேச்சை மாற்ற பார்த்திபன் கேட்க..
“மேரேஜ் லைஃப்பா அதற்கு பர்ஸ்ட் மேரேஜ் நடக்கனுமேப்பா.. என கல்யாணம் தான் நின்னு போயிருச்சே” அதையும் சிரித்தபடி பிருந்தா சொல்ல, பார்த்திபன் தான் அதிர்ச்சியானான்..
அப்போது தான் கவனித்தான் கழுத்தில் நெற்றியில் திருமணம் முடிந்தற்கான அறிகுறி எதுவும் இல்லை..
“என்னாச்சு”? என கேட்க..
“உங்களுக்கு டிவோர்ஸ் ஆகிடுச்சுல அதான்” என்றாள்..
“என்ன”? புரியாமல் கேட்டான் பார்ததிபன்..
“எனக்கு ஏற்கெனவே உங்க மேல்ல ஒரு கண்ணு.. பவி சொல்லி இருப்பாளே உங்ககிட்ட, உங்களுக்கு வேற பவி கூட சண்டையாகி டிவோர்ஸ் ஆகிடுச்சு.. அதான் உங்களை கரெக்ட் பண்ணலாம்னு மேரேஜை ஸ்டாப் பண்ணிட்டேன்” கண்ணடித்தபடி பிருந்தா சொல்ல,
அவளை முறைத்தவன் எதுவும் பேசாமல் விறுவிறுவென அங்கிருந்து நடக்க,
“பார்த்தி நில்லுங்க” என்று அவன் முன்பு வந்து நின்றவள், “சும்மா விளையாட்டுக்கு சொன்னேன் ப்பா, உடனே பொசுக்குன்னு கோவம் வந்துடுதே, உங்க மேல்ல எனக்கு ஒரு இது இருந்தது அதை வச்சு பவி கூட போட்டி பொறாமை சண்டை போட்டது எல்லாம் உண்மை.. ஆனா அது எல்லாம் அவரை பார்க்க முன்னாடி வரை தான்.. அவரை பார்த்த அப்புறம் எல்லாத்தையும் நான் மறந்துட்டேன்.. என்னோட உண்மையான காதல் அவர் தான் புரிஞ்சுக்கிட்டேன்.. இப்ப உங்க மேல்ல எந்த பீலிங்ஸும் இல்லப்பா”..
“அப்ப ஏன் மேரேஜ் நடக்கலை” சந்தேகமாக அவன் கேட்க..
அவருக்கு வெளிநாட்டில் xxx அந்த குரூப்பில் ப்ராஜெக்ட் பண்ணனும்னு ரொம்ப ஆசை டீரிம்னு கூட சொல்லலாம்.. அதுக்காக நிறைய ட்ரை பண்ணினார்.. அப்ப கிடைக்கல.. ஆனா எங்க மேரேஜ் நெருங்கி வர டைம்ல அவர்க்கு அந்த சான்ஸ் கிடைச்சது.. அதான் நீங்க உங்க கனவை நோக்கி போய்ட்டு வாங்க.. வந்த அப்புறம் கல்யாணம் பண்ணிக்கலாம் சொல்லிட்டேன்”..
“ஏன் இப்புடி”?
“ஏன்னா அவரை எனக்கு ரொம்ப பிடிக்கும்.. நான் வேண்டாம் நீங்க இங்கேயே இருக்குன்னு சொல்லிருந்தா அவர் கேட்டு இருப்பார்.. ஆனா அவர் ஆசைப்பட்டது நடக்கலைன்னே வருத்தம் இருந்துட்டே இருக்கும்.. அப்புடி அவர் வருத்தப்பட்டா என்னால் தாங்க முடியாது.. அவரோட ஆசை கனவு எல்லாத்தையும் நிறைவேத்த வேண்டியது என் கடமை இல்லையா”? என்றவளை ஆச்சர்யமாக பார்த்து கொண்டு இருந்தான்..
“என்ன பார்த்திபன் என்னை சைட் அடிக்கிறீங்களா”? பிருந்தா கேட்க,
“ச்சே ச்சே ஏங்க நீங்க வேற” என பதறியவன் “இப்புடியும் ஒரு பொண்ணான்னு ஆச்சர்யமா இருக்கு அதான் பார்த்தேன்.. மத்தபடி ஒன்னும் இல்ல.. உங்களோட அவர் ரொம்பவும் கொடுத்து வச்சவர் எல்லாருக்கும் இதே போல பொண்ணு அமையாது” என்றான்..
“மிஸ் பண்ணிட்டோமோன்னு வருத்தப்படுறீங்களா பார்த்தி.. ம்..ன்னு மட்டும் சொல்லுங்க அவனை விட்டுட்டு சிட்டா பறந்து வந்துடுறேன்” என்ற பிருந்தாவை முறைக்க முயன்ற பார்த்திபன் சிரித்து விட்டான்.. ஏனெனில் பிருந்தா கூறியது விளையாட்டுக்கு என்பது தெரிந்ததால், உடன் பிருந்தாவும் சேர்ந்து சிரித்தாள்..
இதை எல்லாம் சற்று தள்ளி நின்று பார்த்து கொண்டு இருந்த பவித்ராவுக்கு தான் பத்தி கொண்டு வந்தது.. அவளுக்கும் பிருந்தா திருமணம் நடக்கவில்லை என்று விஷயம் தெரியும்.. ஆனால் எதனால் திருமணம் நின்றது என்ற விஷயம் அவளுக்கு தெரியாது.. ஆனால் பார்த்திபன் மீது அவளுக்கு இருக்கும் ஈர்ப்பும் பவித்ரா அறிந்ததே,
இப்ப ஏன் இவ கூட இவன் பேசிட்டு இருக்கான் கோவம் கோவமாக வந்தது.. ஆனால் இப்போது கோவப்படவோ இல்லை போய் சண்டை போடவோ அவளுக்கு உரிமையில்லையே, கொஞ்சம் நேரம் நின்று பார்க்க அவர்கள் பேச்சு நின்றபாடில்லை.. பார்த்திபனும் பிருந்தாவும் பேசி கொண்டும் சிரித்து கொண்டும் நின்றார்கள்.. அதற்கு மேல் பொறுக்க முடியாதவள் மனதிற்குள் இருவரையும் பொருமியபடி அங்கிருந்து விறுவிறுவென சென்றாள்..
ப்ரதாப் தனது சிஸ்டத்தில் எதையோ ரொம்ப மும்முரமாக பார்த்து கொண்டு இருந்தான்..
அப்போது வம்சி அங்கு வந்தான்..
அவனை பார்த்து புருவம் சுருங்கிய ப்ரதாப் “ஆபிஸ் போகமா இங்க என்ன பண்ற வம்சி” என கோவமாக,
வம்சி முழித்தான்.. “நேத்து நீங்க தானே அண்ணா ஆடிட்டிங் பத்தி பேச வர சொல்லி இருந்தீங்களே” வம்சி சொல்லவும்
ஆடிட்டிங் வொர்க் பவி தான் பார்த்து கொள்கிறாள்.. ஆனால் அவளிடம் தான் ப்ரதாப் பேசுவதில்லையே, அதான் வம்சியிடம் அதன் நிலவரத்தை கேட்கவும் சில ஆலோசனை கூறவும் வம்சியை வர சொல்லி இருந்தான் ப்ரதாப்..
ஓ.. என நெற்றியை நீவிய ப்ரதாப் “உட்கார் சொல்லு” என்றான்..
ஏதோ முக்கியமான வேலை போல அதான் மறந்துட்டார் போல என்ற வம்சியும் லேப்டாப்பை ஓபன் செய்து சொல்ல ஆரம்பித்து முழுதாக முடித்து விட்டான்.. ப்ரதாப் எதுவுமே சொல்லவில்லை..
என்ன என வம்சி நிமிர்ந்து பார்க்க, ப்ரதாப் வம்சியை பார்த்தவாறு தான் அமர்ந்து இருந்தான்.. ஆனால் அவனின் பார்வையும் கவனமும் தான் வம்சியிடம் இல்லை.. அது அவனது சிஸ்டமில் தான் இருந்தது..
‘அப்போ நான் தனியா தான் இவ்வளோ நேரம் பேசிட்டு இருந்தேன்னா ச்சே’ என்ற வம்சிக்கு, ப்ரதாப் இவ்வளவு தீவிரமாக அவனுடைய கணினியில் எதை பார்த்து கொண்டு இருக்கிறான் என தெரிந்து கொள்ள ஆர்வம் எழுந்தது..
ப்ரதாப் கண்ணில் தீவிரம் மட்டுமில்லையே ஒரு வித ரசனையும் இருந்தது.. அதான் அதை தெரிந்து கொள்ள வம்சி நினைக்க, இருக்கையிலிருந்து எழ, அப்போது கதவை தட்டிவிட்டு “சார்” என்றபடி ராம் உள்ளே வந்தான்..
அப்போதும் ப்ரதாப் அதே நிலையில் இருக்க, “என்னாச்சு டா”?என ராம் பர்தாப்பை காட்டி வம்சியிடம் கேட்க..
“தெரியலையே ரொம்ப நேரமா அப்புடியே தான் இருக்கார்.. அந்த சிஸ்டமில் தான் ஏதோ இருக்கு, வா என்னன்னு பார்க்கலாம்” என ராமையும் கூட்டு சேர்க்க,
“ச்சே ச்சே அது தப்பு” என ராம் மறுக்க,
“அது எல்லாம் தப்பு இல்லை வாடா” என வம்சி ராம் கையை பிடித்து இழுத்தான்… “மாட்டேன்டா” என்று ராம் தன் கையை பறிக்க, இந்த சத்ததில் உணர்வு பெற்ற ப்ரதாப் “என்ன விளையாட்டு” என சத்தம் போட்டு இருவரையும் முறைத்தான்..
“வம்சி உன்னை வந்த விஷயத்தை சொல்ல சொல்லி எவ்ளோ நேரமாச்சு அதை சொல்லாமா இப்புடி விளையாடி என் டைம் வேஸ்ட் பண்ணிட்டு இருக்க” என திட்டினான்..
“நான் டைம் வேஸ்ட் பண்ணிட்டு இருக்கேன் அது சரி” என நொந்து கொண்டான் வம்சி..
“ராம்” என அவனுக்கு ஆரம்பிக்க,
“சார் கே கே புரோமோட்டர்ஸ் கால் பண்ணி இருந்தாங்க அவங்க கம்பெனியோட நியூ பீல்டிங் டிசைன்” அதை பத்தி சொல்ல வந்தேன் சார்”..
“அந்த வொர்க் தான் முடிஞ்சுருச்சே ராம்.. அதை தான் கொஞ்ச நேரத்திற்கு முன்னாடி மெயில் அனுப்பிட்டனே,ஏதும் சேன்ஞ்சஸ் சொன்னாங்களா” ப்ரதாப் கேட்க,
“அது வந்து சார் அந்த டிசைன் தான் நீங்க அனுப்புன மெயில்” என ராம் அதை எப்புடி சொல்வது என தெரியாமல் முழிக்க,
“வாட் ஹேபண்ட் ராம், என்ன சொல்ல வர” என்ற ப்ரதாப் அவன் அனுப்பிய மெயிலை ஓபன் செய்து பார்த்தவன் ‘ச்சே மானமே போச்சு’ என ஒற்றை கண்ணை மூடி நாக்கை கடித்து கொண்டான்..
அந்த ரியாக்சனை பார்த்த பிறகும் வம்சி அமைதியாக நிற்பானா என்ன? எட்டி ப்ரதாப் சிஸ்டமை பார்க்க,
அதில் கட்டிட வரைபடம் இல்லை.. கொழுக் மொழுகென ஒரு ஐந்து வயது மதிக்க தக்க ஒரு பாப்பா வரைபடம் தான் இருந்தது..
“என்ன பாப்பா படம் இருக்கு” என வம்சி கேட்க, ப்ரதாப் நெற்றியை நீவினான் என்ன சொல்வான் அவன்,
இன்று அலுவலகத்திற்கு வந்த ப்ரதாப்பிற்கு வேலையில் கவனம் செலுத்த முடியவில்லை.. விஷ்ணு நினைவாகவே இருந்தது.. பற்றாததுக்கு நேற்றைய இரவின் நினைவு வேற வந்து உணர்வுகளை தூண்டி விட அவன் தான் திண்டாடி போனான்.. என்னடா இது என்று மனதை ஒருநிலை படுத்த முயற்சி செய்தாலும்.. ம்ஹும் ஒரு பயனும் இல்லை..
ஒருநிலையில் வீட்டுக்கு போவோமோ என்ற எண்ணம் வர, ச்சே ச்சே என்ன இது, உனக்கு ஒரு செல்ஃப் கண்ட்ரோல் இல்லையா ப்ரதாப்.. கழுத்து வரை வேலை இருக்கு அதை விட்டுட்டு எப்புடி போவ, அதோட வீட்டில் எல்லாரும் இருப்பாங்க.. என்ன நினைப்பாங்க என்று கடிந்து கொண்டான்..
இதுக்கு தான் யார் தொந்தரவும் இருக்க கூடாதுன்னு தான் மேரேஜ் முடிஞ்சதும் ஹனிமூன் போறாங்க போல என்று நினைத்தவன்,
ஃப்ரியா இருக்க நேரம் எல்லாம் அம்மா வீட்டில் இருந்துட்டு கழுத்து வரை வேலை இருக்கும் போது வந்து இருக்கா பார் முட்டாள் என விஷ்ணுவுக்கும் திட்டு விழுந்தது..
அப்போது ப்ரதாப்பிற்கு ஒரு போன் வந்தது.. அவனின் தொழில் வட்டார நண்பன் அழைத்து இருக்க, அழைப்பை ஏற்று ப்ரதாப் பேச,
அவரோ தனக்கு குழந்தை பிறந்துள்ளது என்று சந்தோஷமாக கூறினார்.. வாழ்த்து தெரிவித்து விட்டு வைத்தவனுக்குள் ஒரு எண்ணம்..
விஷ்ணுவுக்கும் தனக்கும் குழந்தை பிறந்தால் எப்புடி இருக்கும் ஆசை எழுந்தது.. அதுவும் பெண் குழந்தை, அதுவும் அவளை போல் இருந்தால் எப்புடி இருக்கும் என்ற ஆசை எழுந்தது..
அவள் சின்ன வயதில் எப்புடி இருப்பாள் யோசித்து பார்த்தான்.. என்ன தான் எதிர் வீடாக இருந்தாலும் அவளை அவ்வளவாக கவனித்தது இல்லை.. எப்போதாவது போகிற போக்கில் ஒரு நொடிக்கும் குறைவான நேரத்திலே பார்த்து இருக்கான்.. அப்புடி பார்த்த குட்டி விஷ்ணுவை நியாபக அடுக்கை மீட்டி அவன் வரைந்து கொண்டு இருந்தான்.. இப்போது ஒல்லியாக இருக்கும் விஷ்ணு சிறு வயதில் கொழுக் மொழுக் குண்டு பாப்பா தான்..
அப்போது வந்த ராம் சார் “கே. கே ப்ரோமோட்டர்ஸ் பில்டிங் டிசைன் பினிஷ்ட் நீங்க ஒரு தடவை செக் பண்ணிட்டா மெயில் பண்ணிடலாம் சார்” என சொல்ல,
“நான் செக் பண்ணிட்டு நானே மெயில் பண்ணிக்கிறேன் ராம் என்னை கொஞ்ச நேரத்திற்கு டிஸ்டர்ப் பண்ணாத” என்று கூறி விட்டு இந்த குண்டு பாப்பாவை வரையும் வேலையில் மும்முரமாக, கே.கே ப்ரோமோட்டர்ஸ் வேலை சொதப்பி விட்டது..
அவன் தான் அந்த வரைபடத்தை பார்த்து விட்டானா.. வாட்ஸ் திஸ் ராம் என கே.கே கம்பெனி அவனுக்கு தானே மெயிலை பார்வேர்டு பண்ணி கேட்டு இருந்தார்கள்.. அவனும் அப்போதே இதை பார்த்து விட்டானே, முதலில் அவனுக்குமே ஒன்றும் புரியவில்லை.. நன்றாக பார்க்க அப்போது தான் அது விஷ்ணு என்று தெரிந்தது..
ப்ரதாப் ராமை முறைக்கவும் “சாரி சார்” என்றான்.. இப்போது நன்றாக உற்று பார்த்த வம்சிக்கும் அந்த குண்டு பாப்பா யார் என தெரிந்தது..
“சாரி ப்ரோ பேபி ப்ராடெக்ட் இல்ல பேபி லான்ஜ் பண்ற ப்ளான்னு தெரியாமா பேசிட்டேன்” என கேலி செய்ய