Mr and Mrs விஷ்ணு 21

4.7
(33)

மறுநாள் பவியை சமாதானம் செய்யலாம் என்று நினைத்து பார்த்தி காலை எழுந்து பார்க்க அறையில் இல்லை.. சரி வெளியே இருப்பாளோ என்று அறையை விட்டு வெளியே வந்தால், வீட்டில் யாரும் இல்லை.. அம்மாவும் அப்பாவும் எங்க என்று யோசிக்க, பார்த்தி நானும் அப்பாவும் கோயம்புத்தூர்க்கு ஒரு கல்யாணத்திற்கு போறோம்டா வரதுக்கு இரண்டு மூணு நாளாகும் வீட்டை பார்த்துக்கோ என்று கல்யாணி நேற்று காலை கூறியது நியாபகத்துக்கு வந்தது.. பவி ஆபிஸ் தான் போய் இருப்பா என்று போன் செய்தான் எடுக்கவில்லை.. மெசேஜ் பண்ணினான் பதில் தரவில்லை.. 

ரொம்ப கோவம் போல நைட் வந்து சமாதானம் பண்ணனும் என்று நினைத்திருக்க இரவு பவி வீட்டிற்கே வரவில்லை.. அவள் வீட்டிற்கு சென்றிருந்தால், அது கூட அவள் பார்த்தியிடம் சொல்லவில்லை.. விஷ்ணு தான் அண்ணனுக்கு போன் செய்து அண்ணி வந்து இருக்காங்க நீயும் கூட வந்து இருக்கலாம்ல, அங்க தான் அம்மா அப்பா இல்லையே என்று கேட்கும் போது தான் பவி அங்கு சென்று இருப்பது அவனுக்கு தெரிந்தது.. இப்ப என்ன பண்றது ஏன் இந்த தீடீர் கோவம், இந்த சின்ன விஷயத்துக்கு பவி இவ்ளோ கோவப்படும் ஆள் இல்லையே என்றும் தோன்றியது.. இதே போல் இரண்டு நாட்கள் அவனை பவித்ரா தவிர்த்து வர, பார்த்தி எவ்ளோ முயற்சித்தும் அவனால் பவியை சமாதானம் செய்ய முடியவில்லை.. பவித்ராவும் தன்னுடைய கோவத்திற்கான காரணத்தை அவனிடம் சொல்லவும் இல்லை..

அப்போது தான் பார்த்தி வேலை விஷயமாக மும்பை வரை செல்ல வேண்டி இருந்தது.. பவியிடம் சொல்ல முயற்சித்து முடியாததால் வாய்ஸ் நோட் ஒன்றில் விஷயத்தை சொல்லி விட்டு அவன் மும்பை கிளம்பி இருந்தான்..

இதற்கிடையில் ஷ்யாம் கூறியது போல் அவன் உதவியாளன் நவீன் பவியின் அன்னை தேவகிக்கு அன்று பவித்ராவுக்கு நடந்த விஷயம் தெரியும்படி செய்து இருந்தான்.. விஷயமறிந்த தேவகி இதுக்கு தான் அந்த பார்த்திபன் வேண்டாம்னு அத்தனை தடவை நான் சொன்னேன், யாராவது என் பேச்சை கேட்டிங்களா, என் பொண்ணு மேல்ல அன்பு அக்கறை என்று ஏதாவது ஒன்று இருந்திருந்தா  இப்புடி அவளை தனியா இந்த மாதிரி ஒரு சூழ்நிலையில் விட்டு இருப்பானா என்று வானுக்கும் பூமிக்கும் குதி குதியென குதித்து விட்டார்.. வீட்டிலுள்ள மற்றவர்களுக்கும் பார்த்தி மீது கோவம் தான் வந்தது.. விஷயமறிந்த 

உனக்கு கொஞ்சம் கூட அறிவில்லையா, வெளியே அன்டைம் போகும் போது கார் எடுத்துட்டு போகனும், போன்ல ஜார்ஜ் வச்சு இருக்கனும்ங்கிற பேசிக் சென்ஸ் கூட இல்லையா, சின்ன குழந்தை மாதிரி பிகேவ் பண்ணி இருக்க என்று பவியை திட்டிய ப்ரதாப்புக்கு  அவளிடம் தவறாக நடக்க முயற்சித்த நால்வரையும் கொல்லும் வெறி வந்தது..  கண்டுபிடித்து அவர்களின் உயிரை மட்டும் விட்டுட்டு அடித்து துவைத்து இருந்தான்.. ஷ்யாம் கூறியது போல் அவர்கள் கை காட்டியது வேறு ஒருவனை தான்.. 

பார்த்தி மும்பையிலிருந்து வந்த பிறகு அவனிடம் ப்ரதாப் தவிர அனைவரும் கோவப்பட்டனர்.. அவன் யாரிடமும் மாறி ஒரு வார்த்தை பேசவில்லை.. தனக்கு அன்று விபத்தை பற்றி யாரிடமும் சொல்லவில்லை.. எனக்கு இப்புடி விபத்து நடந்தது அதனால் தான் நான் போகவில்லை என்று காரணம் சொல்வது அவனுக்கு அவமானமாக கருதினான்.. என்னை நம்பி வந்தவளை நான் சரியாக பார்த்து கொள்ளவில்லையோ என்று கவலை ஏற்பட்டது.. அதை மீறி அவனுக்கோ அதிர்ச்சி இப்புடி ஒரு விஷயம் நடந்ததா அதனால் தான் பவித்ரா அவ்வளவு கோவப்பட்டாளா, ஏன் தன்னிடம் இதை பற்றி ஒன்னுமே சொல்லவில்லை என்று யோசித்தவன், அந்த நால்வரையும் தன் கையால் அடித்து கொல்லும் அளவு கோவம் வந்தது.. 

என்ன தான் பார்த்தி மீது பவிக்கு கோவம் இருந்தாலும் இப்புடி நிற்க வைத்து அவனை கேள்வி மேல் கேள்வி கேட்பதும் கோவப்படுவதும் அவளுக்கு தாளவில்லை.. என் விஷயம் நான் பார்த்துக்கிறேன் யாரும் இனி இதை பத்தி பார்த்தியை பேசாதீங்க என்று தன் வீட்டினரிடம் கூறி விட்டாள்..

ஏன் பவி என்கிட்ட இதை மறைச்ச என்று வீட்டிற்கு வந்த பின் ஆதங்கத்தில் பார்த்தி கேட்கவும்,

உன் மேல்ல எனக்கு அப்ப பயங்கர கோவம் அதான் சொல்லலை என்றாள் பவி..

உன் கோவம் எனக்கு புரியுதுடி, உன் பக்கம் இருந்து பார்த்தா அது நியாயமும் கூட தான்.. ஆனா நீ நினைக்கிற மாதிரி நான் அன்னைக்கு ஆபிஸில் இருந்திட்டே வரேன் வரேன் சொல்லலை.. உண்மையாவே ரிசார்ட் பக்கத்தில் நான் வந்துட்டு இருக்கும் போது என்று பார்த்தி சொல்ல தொடங்கும் போதே,

பார்த்தி ப்ளீஸ் அதை பத்தி பேச வேண்டாம்.. அந்த நாளையே நாமா கடந்து வந்துருவோம்.. திரும்ப திரும்ப அதை பத்தியே பேசிட்டு இருக்க வேண்டாம் அதை எல்லாம் மறந்திடலாம் ப்ளீஸ் என்று பவி கூறியதும், பார்த்திக்கும் அதுவே சரியென பட எதையும் சொல்லாமல் அமைதியாக சென்று விட அவனுக்கு அன்று நடந்த ஆக்சிடென்ட் பற்றி அவளுக்கு தெரியாமலே போனது..

என்ன தான் பவி அதை கடந்து விடலாம் மறந்து விடலாம் என்று பார்த்தியிடம் கூறி இருந்தாலும், அன்று அவன் வரவில்லையே என்னை விட வேலை முக்கியமா என்ற ஒரு எண்ணம் ஆழ் மனதை அரித்து கொண்டே இருந்தது..

எனக்கு ஒரு காபி போட்டு தா என்ற அதிகாரமான குரலில் கிச்சனில் ஏற்கெனவே பாத்திரம் தேய்த்து கொண்டு இருந்த விஷ்ணு நிமிர்ந்து பார்த்தாள்.. 

விசாலாட்சி தான் அதிகாரமாக கூறி விட்டு சென்றார்.. அவர் சென்றபின் அந்த பாத்திரத்தை தூக்கி அவரை அடிப்பது போன்ற பாவனை செய்து விஷ்ணு எல்லாம் என் நேரம் என்று நொந்த விஷ்ணு டேய் பார்த்தி உனக்கு தங்கச்சியா பொறந்த பாவத்துக்கு எங்க கொண்டு வந்து நிறுத்தி இருக்க பார்த்தியா என்று அண்ணன்காரனை முடிந்த மட்டும் திட்டியபடியே காபி போட ஆரம்பித்தாள்..

சும்மாவே ஆடும் விசாலாட்சி கையில் பார்த்தி பவித்ரா பிரச்சினை எனும் வேப்பிலை கிடைக்க அமைதியாகவா இருப்பார்.. மீண்டும் விஷ்ணுவுக்கு தொல்லை கொடுக்க ஆரம்பித்தார்.. கல்யாணமாகி புருஷன் வீட்டுக்கு வந்த பொண்ணு மாதிரியா இருக்க.. ஏதோ டூர்க்கு வந்த மாதிரி ஒரு வேலையும் பண்ணாமல்  ஜாலியா சுத்திட்டு இருக்க.. எங்க பவித்ராவை பாரு ஆபிஸ் வேலை வீட்டு வேலை எல்லாம் பார்க்கிறா, ஆனா நீ வந்த நாள்லிருந்து ஒரு துரும்பை கூட நகர்த்தமா இருக்க, உங்க வீட்டில் என்ன தான் சொல்லி கொடுத்து வளர்த்தாங்க சமைக்க தெரியாது ஒன்னும் தெரியாது என்ன பிள்ளையோ என்றவர் அன்றிலிருந்து ப்ரதாப் இல்லாத நேரங்களில் வேலையை காட்ட ஆரம்பித்து விடுவார்.. விஷ்ணு கல்லூரி முடித்து வந்தால் போதும் அதை செய் இதை செய் என்று எப்போதும் நசநசத்து கொண்டே இருப்பார்.. தேவகியும் பாட்டி ரங்கநாயகியும் எப்போதும் போல் அமைதியாக வேடிக்கை பார்த்தனர்.. அதிலும் தேவகிக்கு பார்த்திபன் மீதும் இப்போது கோவம் என்பதால் விஷ்ணுவை விசாலாட்சி படுத்துவதை பார்க்கும் போது குளு குளு வென்று தான் இருந்தது..

விஷ்ணுவுக்கும் அது எல்லாம் எரிச்சல் ஆகவும் கடுப்பாகவும் தான் இருந்தது.. அவளுடைய வீட்டில் ஒரே வேலையும் செய்தது இல்லை.. கல்யாணி ஒரு வேலையும் சொல்ல மாட்டார்.. அப்புடிபட்டவளுக்கு இந்த வேலைகள் எல்லாம் செய்வது கூட சிரமமாக தெரியவில்லை.. விசாலாட்சி கூறும் முறை அந்த அதிகார தோரணனை.. அது தான் அவளுக்கு அவ்வளவு எரிச்சலை கொடுக்கும்.. இருந்தும் அவர்களிடம் முடியாது செய்ய மாட்டேன் என்று சரிக்கு சரி நின்று சண்டை போட அவளுக்கு விருப்பமில்லை.. ஏற்கெனவே பார்த்தி பவித்ரா சண்டை இப்போது தான் ஓய்ந்து இருக்கிறது.. இதில் இவர்கள் செய்யும் சின்ன பிள்ளை தனமான செயலுக்கு சண்டை போட்டு குழப்பம் பண்ண அவளுக்கு பிடிக்கவில்லை.. 

ப்ரதாப்பிடமும் இதை பற்றி கூறவில்லை.. அவன் ஏற்கெனவே நீ ஏதாவது வேலை செய்றதா இருந்தா உனக்கா தோன்றி அதை நீயா செய்யனும், மத்தவங்க அதிகாரம் பண்ணி ஆர்டர் போடறதை எல்லாம் நீ செய்யனும்ங்கிற அவசியம் இல்லை.. அந்த மாதிரி நீ செய்யவும் கூடாது  என்று பல தடவை கடுமையாகவே கூறி இருக்கின்றான்.. எப்போது தான் விஷ்ணு அவன் கூறியதை கேட்டு இருக்கின்றாள்..

காபி போட்டவள் ஹாலில் அமர்ந்து இருந்த விசாலாட்சிக்கு கொண்டு சென்றாள்..

காபி என்று விசாலாட்சி முன்பு நீட்ட,

குடிக்கிற மாதிரி போட்டு இருக்கியா, இல்ல என் மேல்ல இருக்க கோவத்தில் வாய்ல வைக்க முடியாத மாதிரி போட்டு இருக்கியா,

எப்புடி போட்டாலும் ஒரு காபியில் ஓராயிரம் குறை கண்டுபிடிக்கிற திறமை உங்ககிட்ட மட்டும் த் இருக்கு தனக்குள் சொல்லி கொண்ட விஷ்ணு அமைதியாகவே இருக்க, விசாலாட்சி கை நீட்டி காபி கோப்பை வாங்க விஷ்ணுவும் கையை எடுக்க, விசாலாட்சி வேண்டுமென்றே சரியாக பிடிக்காமல் விட காபி கொட்டியது… சரியாக விசாலாட்சி உட்கார்ந்திருந்த இடத்தில் அவர் காலுக்கு அருகில் கொட்டி இருந்தது..

என்ன பண்ற நீ ஒரு கப்பை கூட ஒழுங்கா கொடுக்க முடியாத உனக்கு, இப்புடி காபி எல்லாம் கீழே கொட்டி வச்சு இருக்க 

நான் ஒழுங்கா தான் கொடுத்தேன் நீங்க தான் சரியா பிடிக்கலை..

பதிலுக்கு பதில் மட்டுமே நல்லா பேசு, மத்த வேலையில் எல்லாம் ஜீரோ, போ இப்புடியே நிற்காமா இதை க்ளீன் பண்ணு என்று விசாலாட்சி சொல்லவும்,

ஜமுனா அக்காகிட்ட சொல்றேன் என்ற விஷ்ணுவை 

ஏன் நீ துடைக்க மாட்டியா, நீ தானே கொட்டுனே, நீ கொட்டுவ அவ வந்து துடைக்கனுமா, அதோட ஜமுனாவை வேற வேலையா அனுப்பி இருக்கேன்.. நீயே செய் என்றார் விசாலாட்சி..

ச்சே என்னை இப்புடி வேலை வாங்குறதில் என்ன தான் அல்ப சந்தோஷமோ என்று புலம்பிய விஷ்ணு துணி ஒன்றை எடுத்துக்கொண்டு வந்து கீழே அமர்ந்து துடைத்து கொண்டு இருக்க,

அப்போது வீட்டுக்கு வந்த ப்ரதாப் கண்ணில் அது பட்டது.. விறுவிறுவென கோவமாக வந்தவன் விஷ்ணுவின் கை பிடித்து மேலெப்பியவன் அவளின் கையில் இருந்த துணியை பிடுங்கி வீசிவிட்டு கன்னத்தில் ஓங்கி ஒரு  அறை விட்டான்  விசாலாட்சியை பார்வையால் எரித்தபடியே,

ஸ்… ஆ… கன்னத்தில் கை வைத்து கொண்டே எழுந்தாள் விஷ்ணு..  இன்னமும் எரிச்சலும் வலியும் கன்னத்தில் இருக்க கண்ணாடியில் முகத்தை பார்த்தாள்.. ப்ரதாப் அடித்த கை தடம் அப்புடியே இருந்தது.. ஹிட்லர் ஆறடி ஹல்க் எப்ப பாரு அடிச்சிட்டே இருக்கிறது என்று அவனை திட்டியவள் ம்பச் இதோட எப்புடி காலேஜ் போவேன் என்று சலித்து கொண்டே மீண்டும் மெத்தையிலே சென்று அமர்ந்து விட்டாள்… அடித்தது வலித்தை விட நேற்று மாலை அடித்தது இப்போது வரை ஏதோ கோவத்தில் அடிச்சிட்டேன் சாரி என்று ஆறுதல் கணவன் சொல்லுவான் என்று எதிர்பார்க்க அது நடக்கவே இல்லை.. அந்த வருத்தம் தான் அதிகமாக இருந்தது விஷ்ணுவுக்கு.. ஈகோ ஈகோ ஈகோ ஏன் தான் இவ்ளோ ஈகோவோ என்று தான் அவளுக்கு தோன்றியது..

குளித்து முடித்து இடையில் டவலோடு பாத்ரூமில் இருந்து வந்தான் ப்ரதாப்.. அப்போது தான் எழுந்த விஷ்ணு அவனை பார்த்து விழிகளை தாழ்த்தி கொண்டவள் இப்புடியுமா அறையும் குறையுமா வருவாங்க என்று வாய்க்குள் முனகினாள்..

அவள் முகத்தை திருப்பியதை பார்த்தவன் இவளை எல்லாம் வச்சுக்கிட்டு எனும் ரிதியில் தலையை இருபுறமும் ஆட்டி பெருமூச்சு விட்டு கொண்டவன் ஆபிஸ் கிளம்ப ரெடியாக ஆரம்பித்தான்..

கண்ணாடி முன் நின்று ஈரதலையை விரல் கொண்டு கலைக்க அதிலிருந்து ஓர் நீர் துளி விஷ்ணு கன்னத்தில் பட்டு தெறிக்க நிமிர்ந்தாள்.. தலையிலிருந்து சொட்டு கொண்டு நீர்திவலைகள் மேல் சட்டை அணியாத வெற்றுடலில்  பயணித்து கொண்டு இருக்க இவளும் பார்வையால் தொடர்ந்தாள்.. பரந்த நெற்றி, குத்தீட்டி போன்று கூர்மையான கண்கள், கூர் நாசி, பிரிக்கவே தெரியாத அழுத்தமான உதடுகள், இறுகிய தாடை, டீரிம் செய்யப்பட்ட தாடி, உடற்பயிற்சியின் உபயத்தால் தசைப் பற்று கொஞ்சமும் இல்லாத கட்டுக்கோப்பான உடல் என்று தன்னை மறந்து ப்ரதாப்பை பார்த்து கொண்டு இருந்தவளுக்கு,

ஏய் ப்ரியா உன் ஹஸ்பன்ட் சூப்பர்டி செம் அழகு அப்புடியே ஹீரோ மாதிரியே இருக்கார்டி என்று கல்லூரியில் மற்ற பெண்கள் கூறியது நியாபகம் வந்தது.. உண்மையாவே ஹீரோ மாதிரி தான் இருக்கார் என்று தனக்குள் சொல்லி கொண்டு சைட் அடித்து கொண்டு இருக்க, ப்ரதாப் தீடிரென அவளை திரும்பி பார்த்தான்.. உடனே பார்வையை மாற்றியவள்,

உனக்கு கொஞ்சம் கூட வெக்கமே இல்லையா நேத்து தான் அடிச்சு இருக்கிறார், அந்த ரோஷம் கொஞ்சம் கூட இல்லாமா இப்புடி வெறிக்க வெறிக்க பார்த்துட்டு இருக்க என்று தன்னை தானே திட்டி கொண்டவள் இப்போது கோவமாக முகத்தை வைத்து கொண்டு நிமிர்ந்து பார்த்தாள்..

ப்ரதாப் அவளை கண்டு கொள்ளவே இல்லை ஆபிஸ் செல்ல தயாராகி கொண்டு இருந்தான்.. சட்டை பேண்ட் அணிந்து டை கட்டி ஷு கூட அணிந்து ரெடியாகி விட்டான்..

இப்பாவது ஏன் இப்புடி கோவமாக உட்கார்ந்து  இருக்க, என்னாச்சு என்று கேட்டு தன்னை கணவன்  சமாதானம் செய்வானா என்று விஷ்ணு எதிர்பார்க்க இப்போதும் அது நடக்கவில்லை.. ப்ரதாப் அறையை விட்டு வெளியேற போக,

எனக்கு கன்னம் ரொம்ப வலிக்குது எரிச்சலாவும் இருக்கு என்று விஷ்ணுவே பேச்சு கொடுத்தாள், அப்போதாவது ப்ரதாப் ஏதாவது கூறுவான் என்று,

அறைக்கதவு வரை சென்றவன் திரும்பி ட்ரா அருகே வந்து அதில் ஒரு க்ரீமை எடுத்தவன் விஷ்ணு அருகே வைத்து விட்டு மீண்டும் வெளியேற போக,

வலிக்குது எரிச்சலாக இருக்கு என்று சொன்னதற்கு தான் இந்த க்ரீம் என்பது விஷ்ணுவுக்கு புரிந்தது.. அப்புடியே பெரிய டாக்டர்னு மனசுக்குள்ள நினைப்பு இந்த ஊறுகாய் கம்பெனி ஓனருக்கு என்று முனுமுனுத்தவள்

நான் உங்க மேல்ல கோவமா இருக்கேன் என்றாள் கொஞ்சம் சத்தமாக,

நின்று அவளை திரும்பி பார்த்த ப்ரதாப் அதை விட பல மடங்கு உன் மேல்ல நான் கோவத்தில் இருக்கேன் என்றான்..

ஏன் ஏன் கோவப்படற அளவுக்கு நான் என்ன பண்ணுனேன்.. உங்க கோவத்தில் நியாயமே இல்லை என்றாள் கட்டிலிருந்து எழுந்து ப்ரதாப் அருகே வந்து,

என் கோவம் அநியாயமானதாவே இருந்துட்டு போகட்டும்.. ஆனா உன் கோவத்திற்கு அர்த்தமே இல்லை என்றான்..

அது எப்புடி என் கோவம் அர்த்தம் இல்லாமல் போகும்.. நீங்க தான் என்னை அடிச்சாங்க அதுவும் எல்லார் முன்னாடியும் அப்ப என் கோவம் சரி தானே

ஓ.. எல்லார் முன்னாடியும் நான் உன்னை அடிச்சது மட்டும் தான் உனக்கு தப்பா தெரியுது.. நீ பண்ணுனது தெரியலையா என்றான் கோவத்தை அடக்கியபடி

வீட்டுல வேலை பார்க்கிறது தப்பா

தப்பில்லை நீயா உனக்கா செய்யம்னு தோன்றி செய்ற எதுவும் தப்பில்லை.. ஆனா உன்னை ஒருத்தவங்க அதிகாரம் பண்ணி டீஸ் பண்ணனும் ஃபுல்லி பண்ணனுங்கிற நோக்கத்தோட சொல்றதை கேட்டு செய்தா அது ரொம்ப தப்பு.

அதுக்கு அடிப்பாங்களா ஆதங்கத்துடன் கேட்டாள் விஷ்ணு..

ஆமா உனக்கு நான் நிறைய தடவை வாயால் சொல்லிட்டேன் உரைக்க மாட்டேங்குது.. அதான் ப்ராக்டிக்லா உரைக்க மாதிரி சொல்லி இருக்கேன்.. பார்க்கலாம் இனியாவது புரிஞ்சு நடக்கறையான்னு, நான் சொல்றது எல்லாம் உன் நல்லதுக்கு தான்ங்கிறதை,

ஆமா பெரிய நல்லது உங்களுக்கு என்னை பிடிக்காது அதான் நான் என்ன செஞ்சாலும் அதில் தப்பு கண்டுபிடிச்சு திட்டிட்டே இருக்கீங்க என்றதும் ப்ரதாப் இப்போதும் புரிஞ்சிக்காமா பேசிட்டு இருக்காளே என்று முறைக்க,

இதோ இப்பவும் அதை தான் பண்ணிட்டு இருக்கீங்க என்று முகத்தை சுட்டி காட்டியவள் இதை தான் சொல்லுவாங்க 

ஆகாத பொண்டாட்டி கை பட்டாலும் குத்தும் கால் பட்டாலும் குத்தம்ங்கிற மாதிரி என்று முனுமுனுக்க,

ப்ரதாப் காதிலும் அது விழுந்தது.. அந்த வார்த்தையில் அதுவரை இருந்த இறுக்கம் தளர்ந்து சட்டென்று அவனுக்கு சிரிப்பு தான் வந்தது.. அதை உதட்டுக்குள் மறைத்தவன், ஆகாத பொண்டாட்டி ம்… அது ஒரு ஓரமா இருக்கட்டும் நான் எப்ப சொன்னேன் கை பட்டாலும் குத்தம் கால் பட்டாலும் குத்தம்னு, படவே இல்லைங்கிறதை தான் குத்தம்னு சொல்றேன் என்றான்,

அவன் சொல்லியதில் ஒரு நொடி ஹாங் என்று விழித்தவள், பேச்சை மாத்தாதீங்க என்னை அடிச்சதுக்கு சின்னதா சாரி சொல்லுவீங்களா மாட்டிங்களா என்று கேட்டாள்

பாரேன் இவ தப்பு பண்ணிட்டு நான் சாரி கேட்கனுமாமே என்று மறுபடியும் கோவம் தலை தூக்க, கதவை திறந்து வெளியேற போக, 

அப்ப நான் என் வீட்டிற்கு போய்டுவேன் என்றாள், அப்புடி சொன்னாலாவது சமாதானமாக இறங்கி வருவான் என்ற எண்ணத்தில்,

போ என்றான் ப்ரதாப் ஒற்றை வார்த்தையில்,

இப்புடி சொன்னா என்ன அர்த்தம் 

போன்னு தான் அர்த்தம்..

நான் நிஜமாவே போய்டுவேன்..

போடி முட்டாள் போ போ ஆனா திரும்ப வந்துராத என்றவன் வேகமாக வெளியேறினான்..

ப்ரதாப் சென்றதும் போ என்று சொல்லி விட்டானே என்று அழுகை தான் வந்தது.. 

இரவு வீட்டுக்கு வந்த ப்ரதாப்பை வெறும் அறையே வரவேற்றது.. விஷ்ணு இல்லை.. அவள் வீட்டிற்கு சென்று இருந்தால், ப்ரதாப் கோவத்தை அதிகரிக்க செய்து,

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.7 / 5. Vote count: 33

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!