வகுப்பறையில் அமர்ந்திருந்த விஷ்ணுவுக்கு எதிரில் நின்று பேராசிரியர் நடத்திய பாடம் எதுவும் கருத்தில் பதியவே இல்லை.. நினைவு முழுவதும் போடி திரும்ப வந்திடாதே என்றதிலே இருந்தது.. போ என்று விட்டானே மனம் தாளவில்லை அவளுக்கு, நிவி இருந்திருந்தாலாவது அவளிடம் புலம்பி இருப்பாள் இன்று அவளும் விடுமுறை கல்லூரி வரவில்லை..
கொஞ்சம் கூட இரக்கம் இல்லாத கொடுமைக்கார ஹிட்லர், கல் நெஞ்சு, ஈகோ புடிச்ச எருமை என்று எல்லாம் நேரில் அவனை திட்ட முடியாதை எல்லாம் சொல்லி திட்டி கொண்டு இருந்தவளுக்கு சற்று நேரத்தில் எல்லாம் கை கால் லேசாக வலிக்க ஆரம்பித்து குளிர தொடங்கி உடல் காய்ச்சல் கண்டது.. சமாளித்து விடலாம் என்று நினைத்தவளுக்கு கொஞ்ச நேரத்திலே தலை கை கால் வலித்து உடலையும் சோர்வடைய செய்தது..
இதற்கு மேல் முடியாது என்று தோன்ற போனை எடுத்தவள் பார்த்திக்கு அழைக்க நினைக்க, அப்போது உனக்கு என்ன தேவையோ உன் சம்மந்தப்ட்ட எதுவா இருந்தாலும் முதலில் என்கிட்ட தான் சொல்லனும் என்று ப்ரதாப் அன்று சொல்லியது நியாபகம் வர அவருக்கு கால் பண்ணுவோமா என்ற எண்ணம் எழுந்தாலும், அவரே போன்னு சொன்னாரு அவர்கிட்ட போய் உடம்பு முடியலைன்னு சொன்னா உடனே குடிச்சு பதறியா வர போறார் ஒன்னு வேணாம் என்றவள் பார்த்திக்கே அழைத்தாள்.. .. அவனும் உடனே காலேஜ்க்கு ஓடி வந்து ப்ரியாம்மா என்னாச்சு என்று கேட்டு தொட்டு பார்க்க உடல் காய்ச்சலில் கொதித்து நடுங்கி கொண்டு இருந்தாள்..
உடனே டாக்டரிடம் அழைத்து சென்று ஊசி போட்டு அவர் எழுதி கொடுத்த மருந்துகளை வாங்கியவன் ஹாஸ்பிடலில் இருந்து தங்கள் வீடே பக்கம் என்பதால் அங்கே அழைத்து சென்றான்..
கல்யாணி கஞ்சி செய்து கொடுத்து மாத்திரை விழுங்க வைத்து படுக்க வைத்தார்.. ஊசி மருந்தின் உபயத்தால் படுத்த உடனே தூங்கிய விஷ்ணு மாலை ஆறு மணிக்கு மேல் தான் எழுந்தாள்.. காய்ச்சல் குறைந்து இருந்தது. வாடா மா உன்னை உங்க வீட்டில் விட்டுறேன் என்று பார்த்தி கூப்பிட,
நான் இரண்டு நாள் இங்கேயே இருக்கட்டுமா கல்யாணி இரண்டு நாள் கழிச்சு போறேன்ம்மா ப்ளீஸ் என்று மகள் கேட்க, காய்ச்சல் குறைந்து இருந்தாலும் முகத்தில் இன்னும் சோர்வு அப்புடியே தான் இருந்தது.. இந்நிலையில் மகள் வாய்விட்டு இங்கேயே இருக்கேன் என வாய்விட்டு கேட்க கல்யாணிகிற்கும் அனுப்ப மனமில்லை..
பார்த்தி அவ இருக்கட்டும் இரண்டு நாள் கழிச்சு போகட்டும்டா நீ ஆபிஸ் கிளம்பு என்றார்..
கல்யாணி என்ன பேசுற பார்த்தி ப்ரியா போன் பண்ணவும் காலேஜ்லிருந்து அவ வீட்டுல யாருக்கும் சொல்லாமல் அப்புடியே கூட்டிட்டு வந்துட்டேன்.. நீ என்னடான்னா இருக்கட்டும் சொல்ற, அவங்க ஏதாவது நினைச்சுக்க போறாங்க என்றார் உதயகுமார்..
இதுல தப்பா நினைக்க என்னங்க இருக்கு.. நீங்க அண்ணாவுக்கு போன் பண்ணி ப்ரியாவுக்கு உடம்புக்கு முடியலை.. இரண்டு நாளைக்கு எங்க வீட்டில் வச்சு பார்த்துட்டு அனுப்பி வைக்கிறோம் சொல்லுங்க..
ப்ரியா நீயும் மாப்பிளைக்கு போன் பண்ணி இரண்டு நாள் இருந்துட்டு வரட்டுமான்னு கேட்டுக்கோ என்றார் கல்யாணி.. போன்னு சொன்னவர் கிட்ட போய் என்ன கேட்கிறது நான் இல்லைன்னாலும் அவருக்கு சந்தோஷம் தான் என்று நினைத்தவள் ப்ரதாப்பிற்கு கால் செய்யவில்லை.. உதயகுமார் தான் வெங்கடேஷிடம் விஷயத்தை சொல்ல அவரும் அதற்கு என்னடா ப்ரியா இருந்திட்டே வரட்டும் என்றும் கூறி விட்டார்..
இரவு வீடு வந்த ப்ரதாப்பை வெற்று அறையே வரவேற்க, அவனுக்கு கோவமான கோவம் வந்தது.. சொன்னபடியே வீட்டுக்கு போய் இருக்கிறாள் என்று,
அவள் மீதுள்ள கோவத்தை அறையில் இருந்த பொருட்கள் மீது காட்டினான்.. அப்போது கதவு தட்டி விட்டு உள்ளே வந்தார் வெங்கடேஷ்..
ப்ரதாப் என்று ஏதோ பேச வந்தவர் அறையில் சிதறி இருந்த பொருட்களை பார்த்தவர் ப்ரதாப் முகத்தை கேள்வியாக பார்த்தார்.. ஏனெனில் ப்ரதாப் அறையை எப்போதும் சுத்தமாக வைத்து கொள்பவன் ஆயிற்றே, இன்று இவ்வாறு கிடக்க, ஏமி ப்ரதாப் எனி ப்ராப்ளம் என்று கேட்டார்..
ஒத்து நானா மீரு செப்பன்டி என்றதும் வெங்கடேஷ் மேலும் துருவவில்லை.. அவரின் மகனை பற்றி அவருக்கு கான் நன்கு தெரியுமே அவனால் சொன்னால் துன் உண்டு மற்றபடி எவ்வளவு அழுத்தி கேட்டாலும் அவனிடமிருந்து எதுவும் வராது என்று,
சரி என்றவர் ப்ரியாவுக்கு எப்புடி இருக்கு என்று கேட்கவும், ப்ரதாப்பிற்கு தான் ஒன்றும் புரியவில்லை அமைதியாக நின்று இருந்தான்..
என்ன ப்ரதாப் நீ போய் ப்ரியாவை பார்த்து இருப்பேன்னு நான் நினைச்சனே என்றவரை கேள்வியாக பார்க்க,
அந்த பார்வையில் மகனுக்கு எதுவும் தெரியாதோ என்று குழம்பியவர் தன்னிடம் விஷ்ணு அப்பா உதயகுமார் சொன்னதை அப்படியே சொல்லியவர், ஏன் ப்ரதாப் உன்கிட்ட ப்ரியா சொல்லலையா என்று கேட்கவும்,
இவ்வளவு நேரம் அவர் சொல்லியதை கேட்டு மனைவி மீது கோவத்தில் நின்று இருந்தவன் ஆஹான் சொன்னா சொன்னா நான் தான் வேற டென்ஷன்ல மறந்துட்டேன் நானா.. அதோட நைட்டு லேட்டாருச்சே இந்த டைம்ல அவங்க வீட்டுல எல்லாரும் தூங்கிட்டு இருப்பாங்க அங்க போனா நல்லாருக்காது இல்ல அதான் போகலை என்று சமாளித்தவன், வெங்கடேஷ் வெளியேறவும்
உனக்கு உடம்பு முடியாத டைம் கூட என்னை தேட மாட்டியாடி, உன் அண்ணாவுக்கு கால் பண்ண தெரிஞ்ச உனக்கு, எனக்கு பண்ண தோணவே இல்லையாடி, நீ அங்க இருக்கிறதை கூட என் அப்பா வந்து சொல்லி தான் நான் தெரிஞ்சுக்கனுமா, அதை கூட மேடம் போன் பண்ணி சொல்ல மாட்டிங்களா என்று ஆதங்கத்தில் ஆரம்பித்து கோவத்தில் முடித்தவன், இரண்டு நாள் கழிச்சு இங்க தானே வருவே வா எனக்கு கால் பண்ணாத உனக்கு போன் எதுக்கு, போனையும் மண்டையையும் சேர்த்தே உடைக்கிறேன் என்றவன் மனைவி மேல் உள்ள கோவத்தில் இரண்டு நாளும் அவளுக்கு போன் செய்யவும் இல்லை அவளை பற்றி விசாரிக்கவும் இல்லை..
அங்கே அவனின் தர்மபத்தினியோ இரவு தன்னுடைய போனையே கையில் வைத்து பார்த்து கொண்டே இருந்தாள்.. அப்புடியே கண் அசர தீடிரென போன் அடிக்கும் சத்தம் கேட்கவும் அவசரமாக எழுந்து முக மலர்ச்சியுடன் போனை பார்க்க, வந்திருந்த போனோ கஸ்டமர் கேர் என்றதும் ச்சே என்று ஏமாந்து போனாள்.. உடம்பு முடியலைன்னு தெரிஞ்சு கூட போன் பண்ணி ஒரு வார்த்தை எப்புடி இருக்குன்னு கேட்டு இருக்காரா, அவ்வளவு தான் என் மேல்ல அன்பு அவ்வளவு தான் என்று நொந்து கொண்டவளுக்கு தெரியவில்லை அவள் அவனிடம் இருந்து என்ன எதிர்பார்க்கிறாளோ அதை தான் அவள் கணவனும் எதிர்பார்ப்பான் என்பது,
அதனால் கோவம் வர இரண்டு நாள் இருப்பதாக சொல்லியவள் ஒரு வாரம் கடந்தும் அவள் வீடு செல்லவில்லை.. கல்யாணியும் உதயகுமாரும் வீட்டுக்கு போகலையா போ என்று சொல்லும் போது எல்லாம் ஏதாவது சாக்கு சொல்லி நாட்களை தள்ளி போட்டு கொண்டு இருந்தாள்..
இரண்டு நாள் என்பது ஒரு வாரம் ஆகியும் வராமல் போக்கு காட்டுபவள் மீது கொலை வெறி கோவத்தில் இருந்தான் ப்ரதாப்.. அதுவும் வெங்கடேஷ் வேறு ஏன் ப்ரியா இன்னும் வரலைபா என்று காரணம் கேட்டவர் நீ போய் கூட்டிட்டு வாப்பா என்று வேறு கூற, நான் ஏன் போய் கூப்டனும், தேவைன்னா அந்த மகாராணியே வருவாங்க.. நானா போக சொன்னேன்.. வரட்டும் அன்னைக்கு இருக்கு அவளுக்கு என்று நினைத்தவன் அவர்க்கு பதில் சொல்லாமல் நான் பிசினஸ் விஷயமா துபாய் போறேன் வர டென் டேஸ் ஆகும் நானா என்று மட்டும் கூறி விட்டு சென்றான்..
இன்னைக்கு நீ உன் வீட்டுக்கு கண்டிப்பா போகனும் என்ன நினைச்சிட்டு இருக்க உன் மனசில், பார்த்தி இவளை கூட்டிட்டு போய் வீட்டில் விட்டு வாடா என்று கல்யாணி சத்தம் போட்டு கொண்டு இருக்க, முகத்தை தூக்கி வைத்து கிளம்பி கொண்டு இருந்தாள் விஷ்ணு.. அவளுக்கோ போன்னு சொன்னவர் வந்து ஒரு வாரமாகியும் ஏன் அங்க இருக்க வான்னு கோவமா கூட புருஷன் கூப்பிடலை அப்புடி இருக்கும் போது எப்புடி போக என்று தன்மானம் தடுத்தது.. இருந்தும் இதற்கு மேல் இங்க இருக்க முடியாது யாரும் விட மாட்டாங்க என்பதால் மெதுவாக கிளம்பி கொண்டு இருக்க, அப்போது உதயகுமாருக்கு வெங்கடேஷிடம் இருந்து போன் வர பேசி முடித்து வைத்தவர் ப்ரதாப் வெளிநாடு போய்ட்டு வர பத்து நாளாகும் என்ற விஷயத்தையும் சொல்ல, அதை பிடித்து கொண்டு விஷ்ணு அவர் தான் பத்து நாள் இருக்க மாட்டாரே இப்ப நானே அங்க போய் என்ன பண்ண, அவர் வந்த அப்புறம் போய்க்கிறேன் என்றும் சொல்லி போகாமல் இருந்து விட்டாள்.. ஆனால் அந்த பத்து நாட்களுக்குள் அவள் அண்ணனும் அண்ணியும் அங்கு விஷ்ணு போக முடியாதபடி பிரச்சினை பண்ண போகிறார்கள் என்பதை அறியாமல்,