
Tag:
ப்ரியா பாண்டு நாவல்ஸ்
அத்தியாயம்-5
girl you wanna play with a big playboy like me ah (playboy like me)
girl you wanna play with a big playboy like me ah (playboy like me)
ahh ahh ah ah, ahh ahh ah ah,ayy
big playboy playboy like me, playboy like me
ahh ah
playboy like me(playboy like me)
என்ற பாட்டு அந்த நைட் க்ளப்பையே அதிர வைத்துக்கொண்டிருக்க.. அதனை இன்னும் அலற வைத்துக்கொண்டிருந்தான் அவிரன். தனக்கு முன்னால் நின்றுக்கொண்டு அறைகுறை ஆடையுடன் உடலை பாதியாக காட்டியவாறே நிற்கும் அந்த அழகிய பெண்ணையே மயக்கம் விழிகளுடன் பார்த்துக் கொண்டிருக்க.. அவளோ அவனின் கம்பீரத்திலும் அவனின் உடற்கட்டிலும் மயங்கியவாறே அவனை தொட்டு தொட்டு உரசிக் கொண்டிருந்தாள்.
இதனை ஓரமாக நின்றவாறே பார்த்துக் கொண்டிருந்தான் கிஷன். அவனின் முகத்திலோ அப்படி ஒரு கடுப்பு.. “எத்தனை தடவை சொன்னாலும் இந்த அண்ணா கேட்கிறதே கிடையாது.. இந்த மாதிரி இடத்துக்கு நைட்டு வந்து ஆகலேன்னா தான் என்ன இருக்கு.. சும்மா தேவையில்லாம இங்க வந்து நின்னுகிட்டு இப்படி ஆடிக்கிட்டு.. பத்தாததுக்கு நைட்டு இவளுங்க கூடவே ஸ்டே பண்ணிக்கிட்டு.. இதெல்லாம் நல்லாவா இருக்கு.. ஒரு பெரிய பிஸ்னஸ் மேன் பண்ற வேலையா இது..” என்று கடுகடுவென பொறிந்து கொண்டே இருக்க
இதனை எதைப்பற்றியும் யோசிக்காமல் அந்த நேரத்தை இன்பமாக அனுபவித்துக் கொண்டிருந்தான் ஆவிரன்.
“ஹேய் பேபி டுடே நைட் ஃப்ரீயா..” என்று அவள் குழைவான குரலில் கேட்டவாறே அவனின் சோல்டரையும், அவனது உரமேறிய நெஞ்சையும் வருடியவாறே கேட்க
அவனோ அவளுக்கு மேல் மயக்கும் புன்னகை புரிந்தவனாக “ஐ ம் ஆல்வேஸ் ஃப்ரீ தான் பேப்…” என்றான் மயக்கும் குரலில்.. என்னதான் மயக்கும் குரலில் பேசினாலும் அவனின் கம்பீர குரல் வெளியே வரத்தான் செய்தது.
“ஓ சூப்பர் பேபி.. அப்ப இன்னைக்கு நைட் நாம என்ஜாய் பண்ணலாம்..” என்று மகிழ்ச்சியில் குதுக்கலித்தவாறே அவள் அவனுடன் நெருக்கமாக நிற்க.. அவனுக்கும் அது வசதியாக போனது..
அவளது இடுப்பில் கையை கோர்த்து தன்னை நோக்கி இறுக்கிக் கொண்டவன்.. “வித் ப்ளஷர் பேபி..” என்றான்.
“வாவ் அப்ப நம்ம உடனே ரூமுக்கு போலாமா..” என்று அவள் ஆர்வத்துடன் கேட்க
“ஹேய் அதுக்குள்ள என்ன அவசரம் அதான் நாம விடிய விடிய என்ஜாய் பண்ண போறோமில்ல.. தென் வொய்..”என்றவன் அவளின் வெற்று தோளை தன் கைக்கொண்டு வருடியவாறே.. “அதுக்கு முன்னாடி இப்டி ஜாலியா டான்ஸ் ஆடிட்டு போலாம்..” என்று அவன் அவள் உடலை இசைக்கேற்ப வளைத்தவாறே ஆட..
அவளோ “ம்கூம்…”என்று சிணுங்கியவாறே.. “இப்போ நாம எதுக்கு பேபி ஆடனும்.. அவி டார்லிங் நாம ரூம்க்கு போய்ட்டு ஆடலாமா.. ம்ச் உன்னோட காலையில வர தான் ஜாலியா இருக்க முடிது பேபி.. அதுக்கு அப்புறம் உன்ன பிடிக்கவே முடில.. ம்ச் அப்புறம் வீக் என்ட் தான் நாம திரும்ப மீட் பண்றோம்.. நான் உன்ன ரொம்ப மிஸ் பண்றேன்.. நம்ம போயி என்ஜாய் பண்ணலாமா.. ப்ளீஸ் அவி…” என்று கொஞ்சலாக, சிணுங்கலாக அவள் பேச..
அவள் பேசியதெல்லாம் அவளின் அவி என்ற கொஞ்சலிலையே மறைந்து போனது.. முக இறுக்கத்துடன் “ஹேய் இடியட் ஹவ் மெனி டைம்ஸ் ஐ டோல்ட் யு.. என்னோட முழு நேம சொல்லி கூட கூப்பிடு.. ஆனா இந்த அவி, நவினு பெட் நேம் மட்டும் வைச்சி கூப்பிடாத.. ஐ டோன்ட் லைக் இட்..” என்று கடுமையான குரலில் கூற
“ஹேய் பேப்..”என்றவளோ அவனை இன்னும ஒட்டி நின்றவள்.. “வொய் பேப் இப்டி சொல்ற.. பட் உன்னோட அவின்ற பேர் தான் எனக்கு போதை ஏத்துது.. ம்ச் சச் ய ப்ளசன்ட் நேம் இஸ் யுவர்ஸ்..”என்று கொஞ்சலாக பேச
அதில் அவளை விட்டு விலகியவனோ.. “ம்ச் எனக்கு பிடிக்கலனா புடிக்கல.. டோன்ட் கால் மீ அவி..இந்த அவிரன யாரும் பெட் நேம் வச்சு கூப்பிடக்கூடாது.. ஐ டோன்ட் லைக்.. அது யாரா இருந்தாலும் சரி..” என்று கூற
“நான் கூடவே,,” என்று அப்போதும் அடங்காதவளாக அவன் பக்கம் நெருங்கியவாறே கேட்க
அதில் கோபத்தில் தன்னுடைய சிகையை கோதி கொண்டவனோ “லுக் உன் கூட நான் ஒன்னா பழகுறதுனால என்கிட்ட அட்வான்டேஜ் எடுத்துக்காத..நான் எந்த அளவுக்கு உன்கூட நைட் ஸ்பென்ட் பண்றேனோ அதுக்கு ஏத்த மாதிரியான வேல்யுபிளான பொருளை உனக்கு கொடுத்துட்டு தான் நான் உன்னை நெருங்குறேன்.. அது அந்த பெட் சேரிங்கும், அந்த கிப்டுக்கும் முடிஞ்சு போயிடுச்சு.. என்ன பர்ஷனலா நெருங்கனும்னு நெனைக்காத..” என்று அவன் கடுப்புடன் கத்தியவனின் குரல் அந்த பார்ட்டி ஷாலையே அதிர வைத்தது.
அங்கிருக்கும் பலருக்கும் அவனின் இந்த கத்தல் பழக்கம் தான் என்பது போல திரும்பி தன் வேலையை பார்க்க ஆரம்பிக்க.. புதியவர்களோ என்ன ஏது என்பது போல அவன் இருந்த திசையையே பார்த்தனர்.
அவளுக்கோ அவன் கத்தியது அவமானமாக போய்விவிட.. ஆனால் அவனை வாழ்க்கை முழுவதும் தன் காலடியிலேயே விழ வைக்க வேண்டும் என்று ஆசை இன்னும் அதிகமாகியது.. சொல்ல போனால் வெறி என்றே சொல்லலாம்..
“அட பேபி நம்ம பேசாம கல்யாணம் பண்ணிக்கலாமா..” என்று அவள் தன்னை அவன் நிராகரிக்கவே மாட்டான் என்ற தைரியத்தில் கூற
அதில் ஏதோ ஜோக்கைக் கேட்டு அது போல “ஹா ஹா ஹா ஹா” என்று சத்தமாக சிரித்தவனோ.. “மேரேஜா.. யாரு உன்னையா.. நானா..”என்று நக்கலாக கேட்டவன்.. “ஹாஹா குட் சோக் நவ்யா..”என்றான் அவன்..
அதில் இன்னும் சினம் கொண்டவளோ.. “ஏன் எனக்கு என்ன குறை..”என்று கேட்க
அதில் ஒற்றை புருவத்தை தன் ஒற்றை விரல் கொண்டு வருடியவன்.. “ம்ச் குறைய விடு.. நீ என்ன நெனச்சிட்டு இருக்க என்னைப்பத்தி.. ம்ச் ஒரு நாள் நைட் டின்னர் வெளியில சாப்பிடலாம் டின்னருக்காக ஒரு சமயக்காரனையே வீட்டில் கொண்டு வந்து வைக்கிற அளவுக்கு நான் பைத்தியக்காரன் கிடையாது.. என்ன பொறுத்த வரைக்கும் நீ ஒன் டே டிபன் அவ்வளவுதான்.. நீ இல்லனா எனக்கு வேற ஒருத்தி..” என்று கூற
அவனின் பேச்சில் அதிர்ந்து போனவளாக அவனை புரியாமல் பார்த்தவாறே “அப்போ நீ என்னை அப்படித்தான் நினைக்கிறியா..” என்றாள் ஷாக்காக
“ம்ச் இனி அப்படி கூட நினைக்க கூடாதுன்னு நினைக்கிறேன்..”என்று அசால்ட்டாக கூறியவன் வேகமாக தன்னுடைய பாக்கெட்டில் இருந்து செக் புக் ஒன்றை எடுத்து அதில் ஏதோ ஃபில் செய்து அவளின் முகத்தில் விட்டெறிந்தவன்..
“இதுவரைக்கும் எனக்கு கம்பெனி கொடுத்ததுக்கான கிஃப்ட்.. அவ்வளவு தான் உனக்கும் எனக்குமான கனேக்ஷன்.. இதுவே நீ என்னை பாக்குறது கடைசியா இருக்கனும்.. இனி என்ன காண்டாக்ட் பண்ணனும்னு நினைக்காத.. மீறி பண்ணுன..”என்று அதட்டலாக கர்ஜித்தவனோ.. அவளின் காதிற்கு அருகில் நெருங்கி “தொலைச்சு கட்டிடுவேன்..” என்று உருமியவன் நேராக கிஷன் இருந்த இடத்தை நோக்கி சென்று விட்டான்.
அந்த யுவதியும் போகுமா அவனையே அதிர்வாகவும், மிரட்சியாகவும் பார்த்தவளுக்கு “ம்ச்.. வாயை மூடிட்டு கம்முனு இருந்திருக்கலாம்.. மேரேஜ் அது இதுனு பேசி அவன கோவப்படுத்திட்டோம்.. ம்ச் இனி இவன் பக்கத்துல கூட நெருங்க முடியாது..”என்று புலம்பியவள்… “ம்கூம்…”என்று பெருமூச்சை வெளியிட்டவாறே..
“இவன மாதிரியான ஹேண்ட்ஸமே இனி நமக்கு கிடைக்கப் போறது கிடையாது.. இவன் கிட்ட மட்டும் தான் என்னோட வாழ்க்கையோட மொத்த சாடிஸ்பெக்ஷனும் அடங்கி இருந்துச்சு.. ஆனா இவன் என்னடானா என்னை வேணாம்னு தூக்கி போட்டுட்டு போயிட்டான்..” என்று கை காலை உதைத்தவள் அங்கிருந்து சென்று விட்டாள்.. வேறு ஆளை பிடிப்பதற்கு..
அவிரனும் நேராக கோபத்துடன் வந்து கிஷனின் அருகில் இருந்த சேரில் உட்கார்ந்து உட்கார.. கிஷன் அவனை திரும்பியும் பார்க்கவில்லை..
“ம்ச் பேரர்.. ஒரு ஸ்காட்ச்..” என்று கம்பீரக் குரலில் அலுத்தவாறே கூற
“ஓகே சார்..” என்று பணிவாக தலையாட்டியவாறு அவனுக்கு மிகவும் விருப்பமான ஸ்காட்சை ஊற்றிக் கொடுத்தான். அதை வாங்கிக் கப் என்று ஒரே கல்ப்பில் அடித்தவனுக்கு ஏனோ கடுப்பாக இருந்தது நன்றாகத்தான் அனைத்தும் போய்க்கொண்டிருந்தது அவள் கூறிய ஒற்றை வார்த்தையை அவனே. கடுப்பேற்றியிருந்தது.. அவன் எந்த ரிலேஷன்ஷிப்பிற்குள் நுழைவதற்கும் தயாராக இல்லை..
அப்படி நினைப்பவனுக்கு நிறைய சொந்தங்கள் இருப்பதாக நாம் நினைத்துக்கொண்டால் அதுதான் தவறு.. ஒரு குறிப்பிட்ட வயது வரை அவிரன் அனாதை ஆசிரமத்தில் தான் வளர்ந்தான். அவன் பிறந்ததில் இருந்து ஒரு பத்து வயது வரை அவன் ஆசிரமத்தில் தான் வளர்ந்து வந்தான்..
அவிரன் இரு உண்மையான காதலர்களின் காதலுக்கு பிறந்தவன் அல்ல.. காதல் என்று நினைத்துக் கொண்டு மோகத்தில் பழகியவர்களுக்கு சாபமாக கிடைத்தவன் தான் அவன். அவன் பிறந்து சிறிது நேரத்திலேயே உடல் முழுவதும் ரத்தத்துடன் அனாதை ஆசிரமத்தின் வாசலில் விடப்பட்டவன் தான் அவன்.
அதற்குப் பிறகு ஒரு பத்து வயது வரை அந்த அனாதை ஆசிரமத்தில் தான் அவன் வளர்ந்து வந்தான். அதன் பிறகு ஒரு. கோடீஸ்வர குடும்பம் வந்து அவனை தத்து எடுத்துக் கொண்டது.. அவர்களுக்கோ இவன் வேண்டாத பிள்ளையாகி தான் போனான். அவர்களுக்கு வேறு குழந்தை இல்லை அது வேறு விடயம்.. அதனால் தான் இவனை தத்தெடுத்துக்கொண்டார்கள்.. அவன் மீது பாசம் என்பது அவர்களுக்கு எப்போதும் வந்ததில்லை.
ஆனால் அவர்களுக்கு ஏதோ தங்களுடைய சொத்திற்கு ஒரு வாரிசை தேடுகிறார்கள் தவிர தங்கள் அன்பையும், பாசத்தையும் கொட்டி வளர்க்க ஒரு மகனை தேடவில்லை. அவனை அழைத்து சென்றதிலிருந்து அவனுக்கு செல்வ நிலையிலும், உடையும் ,உணவிலும் எந்த குறையும் அவர்கள் வைத்ததில்லை.. ஆனால் அவன் மிகவும் எதிர்பார்த்த அந்த அன்பு அது மட்டும் அவனுக்கு கிடைக்கவே இல்லை..
அவன் இஷ்டத்திற்கு செலவு செய்ய கட்டு கட்டாக பணம் கொடுத்தார்கள். அவனும் அவர்களிடம் அன்பை தேடுவதற்கு பதிலாக பணத்தை தேட ஆரம்பித்துவிட்டான்.
அவனின் 15 வயதில் மோட்டார் சைக்கிளும், 18 வயதில் காரும், 20 வயதில் கம்பெனியை அவன் கையில் ஒப்படைத்தும் அவனுக்கு அனைத்துமே வயதுக்கு மீறிய பொருளைத் தான் அவர்கள் இருவரும் கொடுத்தார்கள். அவனுக்கும் ஒரு வகையில் அவர்கள் இருவரும் மீது எந்த பாசமும் இல்லை.. தான் கேட்பதெல்லாம் கிடைக்கின்றது அதுவே தனக்கு போதும் என்று நிலையில் தான் அவனும் இருந்தான்.
அவனுக்கு மிகவும் பிடித்த அட்வெர்டைஸிங்கில் டிகிரியை ஃபாரினில் சென்று படித்தவன்.. மேலும் அதற்கு தேவையான மேலும் மாஸ்டர் டிகிரியை முடித்துக் கொண்டே இந்தியாவிற்கு வந்தான். இதற்கிடையில் அவனை தத்தெடுத்த இரு பெற்றோர்களும் அவர்களுக்கு வயதான பிறகு அவனிடம் பாசத்தை எதிர்பார்க்க அதற்கு பின் அது அவனிடம் கிடைக்குமா என்ன..
அவனுக்கு வேண்டிய வயதில் கிடைக்காத அன்பு அவர்களுக்கு வேண்டிய வயதில் கிடைக்காமல் போனது.
“என்னப்பா இது எப்ப பார்த்தாலும் வெளியிலேயே போயிட்டு இருக்க.. கொஞ்சம் எங்களோடோ இருந்து நேரம் செலவளிக்கலாம்ல..” என்று அவனின் பெற்றோர்கள் அவனிடம் கேட்க ஆரம்பிக்க..
அவனோ அவர்களை விசித்திரமாக பார்த்தவன்.. “ம்ச் என்ன நீங்க ரொம்ப டிஃபரண்டா பேசுறீங்க.. இதுவரைக்கும் இப்டி எல்லாம் நீங்க பேசுனதே கிடையாதே.. எனக்கு தேவைப்படுற பணம் கிடைக்குது தான் ஜாலியா வெளியில சுத்துறேன் நீங்களும் எப்போதும் அப்படித்தான் இருப்பீங்க.. இவர் பாட்டுக்கு பிசினஸ் பிஸினஸ்னு சுத்துவாறு.. நீங்க க்ளப் க்ளப்பா போவீங்க. இப்போ நான் எனக்கு இஷ்டப்படி செஞ்சிட்டு இருக்கேன்.. புதுசா வந்து அன்பு காட்டிடா நான் எப்படி என்னை சேஞ்ச் பண்ணிக்க முடியும்…”என்று தோள்களை குலுக்கியவாறெ கேட்க
அவனின் பேச்சி அவர்கள் இருவரையும் தலைக்குனிய செய்தது.. அவன் கூறுவதும் சரிதானே.. அவர்கள் அவனுக்கு தேவைப்படும்போது அன்பை தரவில்லை.. ஆனால் இப்போது அவர்கள் கேட்டால் அவன் என்ன தான் செய்வான்..
அவர்கள் இருவரும் செய்த தவறு அப்போதுதான் பெரிய தவறாகவே தெரிந்தது. “அப்போ எங்களுக்கு ஒன்னும் தெரியலப்பா ஆனா இப்பதான் எங்க ரெண்டு பேருக்கும் ரொம்ப லோன்லியா இருக்கு.. கொஞ்சம் எங்களோட டைம் ஸ்பென்ட் பண்ணேன்..” என்று இருவரும் வந்து கேட்க
அவனோ முடியவே முடியாது என்று தலையாட்டியவன்.. “ம்ச் எனக்கு வேற வேலை இருக்கு..” என்று அவர்களை ஒதுக்கி வைத்துவிட்டு தன்னுடைய வேலையை பார்க்க ஆரம்பித்து விட்டான். அவர்களோ அவனிடம் பேசி பேசி சோர்ந்து போனவர்கள் ஒரு கட்டத்தில் ஒருவருக்குப் பின் ஒருவராக இயற்கை எய்து விட்டனர்..
இருவரும் இறப்பதற்கு முன்பு கூட தங்களுடைய அனைத்து சொத்தையும் அவன் மீது எழுதி வைக்க.. அவனோ அவர்கள் சொத்தை இன்று வரை தீண்டவே இல்லை. அவர்கள அவனுக்கு கொடுத்த வீட்டினை மட்டும் தான் இப்போது அவன் உபயோகிக்கிறான்..
(பாக்காத..)
அத்தியாயம்-4
“நலங்கு மாவு சோப்.. எந்த வித கெமிக்கல் இன்கிரிடியன்டும் இல்லாம உங்களோட நலன் கருதி தயாரிக்கப்பட்ட சோப்.. அப்டியே பேபிஸ் மாதிரியான சாஃப்ட் ஸ்கின்ன தரக்கூடியது இந்த சோப்.. நுரைகள் அதிகமாகவும் அதே நேரத்துல நில் கெமிக்கல் ரியாக்ஷனும் இல்லாம தயாரிக்கப்பட்டது.. உங்களோட அழகான ஸ்கின்ஸ மேலும் மெருக்கூட்ட கூடியது.. இத போட்டா உங்க மனைவியோ, கணவனோ உங்கள விட்டு அங்க இங்க நகரமாட்டாங்க.. எப்போதும் உங்க நெருக்கத்திலையே இருப்பாங்க..”என்று பின்னால் குரல் கேட்க.. முன்னால் நின்றவாறே ஒரு அழகிய பெண்ணொருத்தி தன் அருகில் நிற்பவன் மீது உரசிக்கொண்டிருக்க.. அந்த உரசலை ரசித்தவாறே நின்றவனோ இதுதான் சான்ஸ் என்றது போல அவளின் இடையை வருடிக்கொண்டிருந்தான்.
“சூப்பர்.. சூப்பர்..”என்ற டேரக்டரின் குரல் கேட்க.. அனைவரும் அதில் இழித்தவாறே நகர்ந்தனர்..
“சூப்பரா ஆக்ட் பண்றீங்க தேஜூ.. யூ ஆர் லுக்கிங் கார்ஜியஸ்…”என்ற அந்த ஆண் மாடலோ அவளை தன் வலையில் விழ வைக்க வழிந்துக்கொண்டிருக்க..
அவளுக்கோ மமதை தலைக்கேறியது.. முகம் வஞ்சப்புகழ்ச்சியில் மகிழ்ச்சி விரவிக்கிடக்க.. “தேங்க்யூ டியூட்..”என்றாள் அவள்..
“மயூரன்னே கூப்டலாமே..”என்றான் அனைத்து பல்லையும் காட்டியவாறே
அதில் வேகமாக தலையாட்டியவளோ.. “ஓகே மயூரன்..”என்று கீச் கீச் குரலில் கூப்பிட
“ஓஓஓ வாவ்.. உங்க வாய்ஸ்ல என் பேரே எனக்கு அழகா தெரிதுங்க தேஜூ..”என்றான் அவன்
“ஓஓஓ ரியலி..”என்றவளோ “தேங்க்ஸ் ஃபார் யுவர் காம்ப்ளிமென்ட்..”என்றாள் இழித்தவாறே
அதில் புன்னகைத்தவனோ.. “எனக்கு காம்ப்ளிமென்டா எதும் இல்லையா..”என்றவாறே அவளை அனுவனுவாக ரசிக்க.. எத்தனை பேரை கடந்து வந்திருப்பாள் அவளுக்கு தெரியாதா அவன் பார்வையின் அர்த்தம்..
“ம்ம் என்ன வேணும்னு கேளுங்க மயூரன் நா என்னனாலும் தர ரெடி..”என்றாள் இரட்டை அர்த்தத்தில்..
பின்னே அப்படிதான் பேசுவாள் மயூரன் இப்போதைக்கு ஆட் ஷூட்டில் நடிக்க வந்திருப்பது பொழுது போக்காக தான்.. அவனின் செல்வ நிலையே வேறு.. உள்நாட்டு மந்திரியின் சின்ன வீட்டம்மாவின் மகன் ஆயிற்றே.. அதும் மயூரனின் மீது அவனின் மந்திரி தந்தைக்கு அவ்வளவு பாசமாம்.. அதனால் தான் அடுத்ததாக அவனை வைத்து நான்கு படம் ஷூட் பண்ண ஒத்துக்கொண்டார் அவனின் தந்தை..
அப்படிப்பட்டவனை தன் வலைக்குள் விழ வைத்தால் காலம் பூராவும் சினிமாவை விட்டு அவள் நகரவே வேண்டாம் என்ற எண்ணம் தான்.
அவள் சொன்னதை கேட்டவனோ.. “ஆகா பட்சி விழுந்துடுச்சி..”என்று நினைத்தவாறே.. “நான் கேட்டது எல்லாமே கிடைக்குமா..”என்று இரட்டை அர்த்தத்தில் கண் சிமிட்டி கேட்க..
“யா வித் ப்ளஷர்..”என்றாள் அவன் கை மீது கை வைத்தவாறே.. அதில் மயங்கி போனான் மயூரன்.. ஆளை கொள்ளும் அழகி தான் அவள் மெலுகு பொம்மை உருவம்.. நல்ல கொலுக் கொலுக்கென்று இருப்பவள்.. இளம் சிட்டு.. அவள் நிறமே சுண்டி இழுக்கும் அதில் பாதி மேக்கப் அது வேறு விசயம்.
“அப்போ நாம ஷூட் முடிஞ்சதும்..”என்று அவன் இழுக்க.. அவள் குலுக்கி சிரித்தாள்.. அவள் ஏதோ கூற வர..
அப்போது “வாட் தெ ஹெல் இஸ் கோயிங் ஆன்..”என்ற கம்பீர குரல் கேட்க.. அந்த ஆட் ஸ்டூடியோவில் இருந்த மொத்த நபர்களும் அந்த கர்ஜனையில் அதிர்ந்து போனார்கள்.
மயூரன் சத்தம் வந்த திசையில் மிரண்ட பார்வை பார்க்க.. அங்கோ வீறுக்கொண்ட சிங்கமாக நின்றிருந்தான் அவிரன் எழிலன்பன். அந்த எ.எ அட்வர்டைசிங் கம்பெனியின் உரிமையாளன்.
அவிரன் அங்கிருக்கும் அனைவரையும் தன் கூர்மையான கண்களால் கூறு போட.. அங்கிருந்த அனைவரது கண்களும் அவன் பார்வையை சந்திக்க முடியாமல் தலை குனிந்துக்கொண்டனர்.
அவிரன் எழிலன்பன் அவனை பற்றி பார்த்தால்.. அலை அலையான கேசத்தை உடையவன் அதனை கொஞ்சம் பங் போல வளர்த்து அதில் சிறிய குடுமி ஒன்றை போட்டிருந்தான். நல்ல அகண்ட நெற்றி அதில் இஷ்டத்திற்கு புரளும் அவனின் கேசம். நல்ல அடர்த்தியான புருவம்.. அதுவும் இரண்டு புருவமும் நடு நெற்றில் சேர்ந்தே இருக்கும்.. அதன் பின் நல்ல கூர்மையான க்ரே நிறக்கண்கள்.. அதுவும் அவன் கண்களை சுருக்கி பார்க்கும் விதமே அனைவரையும் பயத்திற்குள்ளாக்கும். நல்ல மலைமுகடு போன்ற நாசி, வரிவரியான சிவந்த, இறுகிய உதடுகள். அதன் மீது லேசான மீசையை ட்ரிம் செய்து வைத்திருந்தான். தாடையில் சிறிது தாடியை ட்ரிம் செய்திருந்தான். அழகிய இடது கன்னத்தில் ஒற்றை மச்சம். அதுவோ அவ்வளவு அழகாக இருந்தது அவனுக்கு.
அவனது உடல்கட்டை பார்த்தாலே நமக்கு தெரிந்து போனது நன்றாக உடலை வருத்தி அந்த உடற்கட்டை கொண்டு வந்திருப்பான் என்று.. இப்போது கருப்பு நிற சேர்ட்டையும், அதற்கு மேட்சாக கருப்பு நிற பேண்டையும் போட்டுக்கொண்டு ஒற்றை கையை பேன்ட் பாக்கெட்டில் விட்டுக்கொண்டு ஒற்றை கையால் தன் தாடையை வருடியவாறே நின்றிருந்தான் அவன்.
“ஐ வான்ட் ஆன்சர் இடியட்ஸ்.. வாட் தெ ஹெல் இஸ் கோயிங் ஆன்..”என்று மறுபடி தன் ஆக்ரோஷமான குரலில் கத்த
அதில் பதறிய அவனின் பிஏவோ.. “சா.. ம்கூம்.. சார் அந்த மம்சிஸ் சோப்க்கான ஆட் ஷூட் நடந்துட்டு இருக்கு சார்..”என்று அவன் திக்கி திணறியவாறே கூற
அவனை கண்கள் சுருக்கி பார்த்தவனோ ஒற்றை கையை அவனை நோக்கி நீட்ட.. அதனை பார்த்த அவனது மேனேஜர் கிஷனோ முதலில் புரியாமல் நின்றவன் அவிரன் முறைப்பதை பார்த்து புரிந்து போனது அவனுக்கு…
“சா சாரி சார்.. இதோ..”என்றவாறே டேரக்டரின் அருகில் ஓடியவன் அவர் கையில் இருந்த பேப்பரை கிட்டதட்ட பிடிங்கிக்கொண்டு ஓடியவன் அவிரனிடம் அதனை நீட்டியவாறே நிற்க..
அவிரனோ அங்கு நிற்கும் அனைவரையும் பார்த்தவாறே அந்த பேப்பரில் தன் கவனத்தை திருப்பினான்.. அதனை தன் லேசர் கண்களால் ஆராய்ந்தவாறே ஒருநிமிடத்திற்கும் குறைவாக நின்றவன் சட்டென்று கையில் இருந்த பேப்பரை பறக்கவிட்டிருந்தான்.
“ஹவ் ரப்பிஸ்..”என்று அவிரன் அந்த அறையே அதிர கத்த.. அதில் அங்கு நிற்கும் அனைவருக்கும் உடல் நடுக்கம் கொண்டது. இப்போது சென்னையில் இருக்கும் முக்கியமான மிகவும் பிரபலமான ஆட் கம்பெனியில் அவிரனின் கம்பெனியும் ஒன்று.. சுமார் மூன்று வருடங்களாக சிறந்த விளம்பர கம்பெனி என்ற விருதை வாங்கிக்கொண்டிருக்கிறது. அதற்காக அதிகமாக உழைத்தவன் அவிரன் தான். அப்படிப்பட்ட நிறுவனத்தில் இப்படி ஒரு மட்டமான ஆட்டிற்கான டயலாக்கை அவன் எப்படி அனுமதிப்பான்.
“வாட் இஸ் திஸ்..”என்று அவன் திரும்பவும் கத்த..
அதில் கிஷனின் உடல் நடுக்கம் கொண்டது. அவிரனை பொறுத்தவரை இந்த பிஸினஸை ரசித்து,ருசித்து நடத்துக்கின்றான்.. அதற்கு ஏதெனும் ஒரு பங்கம் வந்தால் அவன் எப்படி பொருப்பான். இது கிஷனுக்கும் நன்றாக தெரியும்.
“சா.. சார் நான் என்னன்னு பாக்குறேன் சார்..”என்று கிஷன் இழுக்க..
அதில் கையை கட்டிக்கொண்டு அவனை தெனாவட்டாக பார்த்தவன்.. “ஓஓஓ பாக்குறீங்களா.. எப்போ சார் பாப்பீங்க..”என்று நக்கலாக கேட்க
அதில் பயந்தவாறே நின்றிருந்தான் அவன்.. “இங்க பாத்தீங்களா டையலாக்ஸ் சும்மா அல்லுதுல்ல.. ம்ம்.. படிச்சி பாத்தீங்களா.. சரி ஓகே நானே உங்களுக்கு படிச்சி காட்றேன்.”என்றவன் கீழே விழுந்திருந்த அந்த பேப்பரை கை நீட்டி எடுக்க சைகை செய்தவன்.. அது தன் கைக்கு வந்ததும்.. “எந்த வித கெமிக்கலும் கலக்காத சோப்… ம்ம் எந்தவித கெமிக்கலும் கலக்காதது உங்களுக்கு எப்டி டேரக்டர் சார் தெரியும்..”என்று டேரக்டரை மிரட்டிய கூர்மையான பார்வையுடன் கேட்க..
அந்த பார்வையில் டேரக்டர் மயங்காமல் இருந்ததே ஆச்சரியம்.. “உங்கள தான் சார் கேக்குறேன்.. அந்த சோப்ல எந்தவித கெமிக்கலும் இல்லாம இருக்குனு நீங்க எத வச்சி ப்ரூஃப் பண்ணுவீங்க..”என்று நக்கலான குரலில் அவிரன் கேட்க
அதில் டேரக்டரின் கை நடுக்கம் கொண்டது.. “ம்ச் தெரியாதா.. வாட் எ ஃபன்னி.. அப்போ தெரியாமையா இந்த டையலாக்ஸ எல்லாம் எழுதிக்கொடுத்திருக்கீங்க.. ம்ச் வாட் இஸ் திஸ் மிஸ்டர் டேரக்டர் சார்..”அவிரன் கிண்டலாக கூறியவனின் இதழ்களோ கோணல் சிரிப்பை ஒன்று கொடுக்க.. அந்த சிரிப்பு அங்கிருப்பவர்கள் ஒவ்வொருவரையும் பயம் காட்டியது.
அது வரை கோணலாக சிரித்தவனோ சட்டென்று தன் முகத்தை வேட்டையாடும் சிங்கம் போல சுருக்கியவன்.. “இங்க எதும் காமெடி சோ ஏதும் நடக்குதா.. இல்ல இந்த மாதிரி கன்ரிப்ரூட் எழுத்த பாத்தா எனக்கு அப்டிதான் இருக்கு.. கிட்டதட்ட ஏழு வருஷமா இந்த பிஸினஸ ரன் பண்றேன்.. இந்த கம்பெனிக்காக நான் எவ்ளோ எஃபெக்ட் போட்டுருப்பேன்.. என்னோட திறமையால இந்த கம்பெனி கடந்த மூணு வருஷமா பெஸ்ட் ஆட் கம்பெனின்னு விருது வாங்கிட்டு இருக்கு.. இதை எல்லாம் இந்த ஒத்த காசு புரோஜனம் இல்லாத ஆட்ல மொத்தமா தூக்கி குடுத்துருப்பீங்க நீங்க எல்லாம்..”என்றான் இடியாக கர்ஜனையுடன்
கிஷன் கையை பிசைந்தவாறே தலைகுனிந்து நிற்க.. அவனை முறைத்து பார்த்த அவிரனோ.. “புல் ஷிட் மாறி வேலைய பாக்க வேண்டியது.. இடியட்..”என்று கத்த.. அதில் கிஷனுக்கு கொஞ்சம் அவமானமாகி போனது. கொஞ்சமே கொஞ்சம் தான் ஏனென்றால் எப்போதாவது வாங்கினால் பரவாயில்லை ரோசப்படுவதற்கு.. எப்போதுமே வாங்குபவனிடம் அவ்வளவு ரோசம் இருக்குமா என்ன..
கிஷன் ஆனாலும் பயந்துக்கொண்டே தான் நின்றான்.. இல்லை என்றால் புலி ஓங்கி அடித்துவிடுமே..
“எப்டி.. எப்டி.. இதோட லாஸ்ட் லைன கொஞ்சம் பாறேன்.. இந்த சோப்ப யூஸ் பண்ணுனா உங்க கணவனா இருக்கட்டும், மனைவியா இருக்கட்டும் உங்க பக்கத்துல இருந்து நகரவே மாட்டாங்களா.. புல் ஷிட்..”என்று அந்த பேப்பரை திரும்ப தூக்கி போட்டவனின் இதழ்களோ நக்கலாக சிரித்தவாறே.. “அப்போ இந்த சோப்ப யூஸ் பண்லனா வேற ஆள பாத்துட்டு போய்ட்டே இருப்பாங்களா.. அப்டி என்ன அதிசயமான சோப் இது..”என்று அவன் கத்த
டேரக்டரின் முகமோ விழுந்து போனது.. ஏனென்றால் அந்த சோப் கம்பெனியின் விளம்பரத்தை பிடித்து வந்து கொடுத்ததே அவர் தானே.. அதற்காக தனி கமிஷனை வாங்கிக்கொண்டான் அது வேறு கதை..
“ம்ம் சொல்லுங்க சார்.. இந்த டயலாக்க எழுதுனது நீங்க தானே..”என்றவாறே டேரக்டரின் முன்னால் வந்து நிற்க
அவரோ எச்சில் விழுங்கியவாறே அவனை பயத்துடன் பார்த்து.. “சா.. சார் அது வந்து..”என்று இழுக்க..
அதில் மிரட்டலான பார்வை பார்த்தவன்.. “கெட் அவுட்..”என்று சீற
“சார்..”என்றான் டேரக்டர் பயந்தவாறே
“ஐ சே கெட் அவுட்..”என்று உறுமியவன்.. “என் கம்பெனிக்கு யாராலையாவது இது மாதிரி கெட்ட பேரோ இல்ல லாஸ்ஸோ வர நான் விடமாட்டே.. இந்த ஆட்க்கு நீ எழுதுன டையலாக்னால என் பிஸ்னஸ்க்கு எவ்ளோ பெரிய பிரச்சனை வரும்னு யோசிக்கமாட்டியா.. இந்த சோப்ல எந்த கெமிக்கலும் இல்லனு நீ எப்டி சொல்ற.. அப்டி இருக்குனு யாராவது ப்ரூஃப் பண்ணிட்டா யாரு அதுக்கான கெட்ட பேர சம்பாறிக்கிறது.. எந்த சோப் கம்பெனி மேல கேஸ் போட்டாலும் அதுக்கு சப்போர்ட் பண்ணுன ஆட் கம்பெனி மேலையும் கேஸ் போடுவாங்கனு உனக்கு தெரியாதா.. நஷ்ட ஈடா பல கோடி கேட்பானுங்க.. கோடில கேட்டா பரவால்ல.. ஆனா என் பிஸ்னஸ்.. அதோட குட்வில்.. அதுக்கு ஏதாவது ஆனா என்ன செய்வ..”என்று கத்த.. அந்த டேரக்டரோ பயத்தில் கால் நடுங்க நின்றான்.
“எனக்கு இந்த கம்பெனிதான் முக்கியம்.. இதுக்கு டேஞ்சரா வர எவனா இருந்தாலும் ஐ வில் கில் தெம்..”என்று ஆக்ரோஷமாக கத்தியவனோ…
“கிஷன் இவன் இனி இந்த ஆபிஸ் பக்கம் கூட வரகூடாது.. தொறத்திவிடு..”என்று கத்தியவன் விறுவிறுவென தன் அறைக்கு சென்றுவிட்டான்.
கிஷனோ அவன் சொன்ன வேலையை முடித்துவிட்டே அவிரனின் அறைக்குள் சென்றான்.
(பார்க்காத..)
அத்தியாயம்-3
“இந்த பெருச நான் எங்க இருந்து பெத்தனோ தெரில சரியான ரெளடிபய, தடிப்பய மாறி சுத்தின்னு இருக்கா.. எவன் இவ கிட்ட வந்து மாட்ட போறானோ ஒன்னியும் தெர்ல..”என்று என்று குமுதா புலம்ப.
அவரின் புலம்பலுக்கு காரணமானவளே அந்த குப்பத்திற்கு வெளியில் இருக்கும் ஒரு பிரசித்தி பெற்ற ஜிம்மில் நின்று கொண்டு புஷ்ஷப்பை எடுத்துக் கொண்டிருந்தாள். அவளை ஆச்சரியமாகவும், வியப்பாகவும் பார்த்தவாறே நின்றிருந்தனர் ஆண்கள் சுற்றிலும்..
“அப்டித்தாக்கா அப்டித்தா அக்கா நல்லா தம் கட்டு..” என்று ஒருவன் கைதட்டி ஆரவாரம் செய்ய.
“பன்னாட நான் நல்லா தான் தம் கட்டுற.. நீ ஒழுங்கா எண்ணு..”என்று கத்தியவளோ தன்னுடைய ஒட்டு மொத்த பலத்தையும் காட்டியவாறே புஷ்ஷப் எடுக்க..
“இன்னாடா இந்த பையன் இப்டிக்கா புஷ்ஷப் எடுக்குறானே.. பாக்கவே ஜோரா இருக்கிதே..”என்று ஒருவன் சிலாகித்தவாறே கூற
“நல்லா பாருடா கூமுட்ட அது பையன் இல்ல பொண்ணு..”என்றான் ஒருவன்
அதில் ஆச்சரியப்பட்ட இன்னொருவனோ “அட இன்னா அண்ணாத்த சொல்லிக்கினு இருக்க..”என்றவனோ அப்போது தான் அவளை ஒழுங்காக பார்த்தான்.
கழுத்து வரையிலான முடியை தூக்கி பின்னால் சிண்டு போட்டுக்கொண்டு, புஷ்ஷப் எடுப்பதில் நெற்றி எல்லாம் வியர்க்க, அப்படியே பளப்பளப்பான நிறத்தில், உயரம் கொஞ்சம் குறைவில், பார்க்க சிறு வயது பெண் போல கருப்பு நிற ட்ராக் ட்ரவுசரும், தொல தொல வெள்ளை நிற டீசர்ட்டும் போட்டுக்கொண்டு மை வைக்காத கருவிழிகளை ஒரே இடத்தில் வெறித்தவாறே,கை நரம்புகள் புடைக்க புஷ்ஷப் எடுத்துக்கொண்டிருப்பவளை பார்க்க யாருக்கும் ஆண் என்று தான் தோன்றும்.. ஆனால் அவன் இல்லை அவள் அவள்.
அவளின் பெயர் மின்மினி.. குமுதா பெருசு என்று அழைக்கும் இல்லை இல்லை பெருசு மட்டும் அல்ல தடிமாடு, விளங்காதது, ரெளடி என அனைத்திற்கும் பெயர் போனவள்.
“என்னடா இவ பாக்க நாலு எலும்ப ஒட்டி வச்ச மாறி இருக்கா.. ஆனா பண்றது எல்லாம் புரூஸ்லி வேலையால இருக்கு..” என்று ஒருவன் பயத்திலேயே நின்று கொண்டிருக்க.
“நாதாரி இதெல்லாம் மட்டும் நல்லா வக்கைனையா பேசிக்கின்னு இரு.. போய் புஷ்ஷப் எடுக்க சொன்னா.. அப்பாலிக்கா நாலு புஷ்ஷப்ல மேல் மூச்சி கீழ் மூச்சி வாங்கிக்கினு நிக்க வேண்டியது..” என்று இன்னொருவன் திட்ட
அவனை முறைத்தவாறே நின்றவனோ”டேய் சோமாரி நேத்து நைட்டுக்கா நீ வாங்கிக்கினு வந்து தந்த குவாட்டர் தாண்டா என்ன புஷ்ஷப் எடுக்க முடியாம பண்ணிக்கின்னு இருக்கு..”என்று அவன் மீசையை திருகியவாறே கூற
“ஆமா ஆமா இல்லாக்காட்டினா மட்டும் அப்படியே புஷ்ஷப் எடுத்து கிழிச்சிக்கினுவாறு தொர.. எத்துக்குன்னு இருக்குறது பிச்ச இதுல ஸ்டைலு வேற..”என்றவன் அவன் தலையில் நங் என்று கொட்ட..
“ஆஆஆஅ…”என்று கத்தியவாறே அவனை முறைத்து பார்த்தான் அவன்..
“இந்த முறைச்சக்கு மட்டியும் ஒன்னியும் கொறச்சல் இல்ல..அங்க பாரு உடம்புல நாலு எலும்ப ஒட்ட வச்ச மாதிரி இருந்துக்கினு.. அந்த மினி எப்டிக்கா புஷ்ஷப் எத்திக்கினு இருக்கானு..” என்று கூற
அவனோ முறைத்தவாறே மினியை பார்த்தான்.. அவளோ பல்லை கடித்தவாறே தொடர்ந்து புஷ்ஷப் எடுத்துக்கொண்டிருந்தாள்..
“அப்டிதா அப்டிதா.. வந்துக்கினே இருக்கா நீ..”என்று கூச்சலிட்டவனோ.. “அக்கா 42,43,45,46 என்று புஷ்ஷப்பை எண்ணிக்கொண்டே இருக்க..
புஷ்ஷப் எடுத்துக் கொண்டிருப்பவளோ தன் ஒல்லி பெல்லி இடுப்பை வைத்துக்கொண்டு கைகளை தரையில் ஊற்றி சர்வ சாதாரணமாக தன் உடலை தூக்கிக்கொண்டிருந்தாள். அவளிடம் கொஞ்சமும் இறைப்போ, எதுவுமே இல்லாமல் புஷ்ஷப் எடுத்துக் கொண்டிருந்தாள்.. அதிலையே அவளுக்கு இதெல்லாம் பலநாள் பழக்கம் என்று நன்றாக தெரிந்து போனது.
“ஆஆ எழுவது..அக்கா இன்னாக்கா நேத்த வுட இன்னிக்கி ஸ்பீடா போய்க்கின்னு இருக்கு..”என்று அவன் கத்த
“பல்லி.. நீ இன்னிக்கி என்னான்ட செமையா வாங்கிக்கினு போவ போற.. பேசாம எண்ணிக்கின்னு இருடா சோமாரி..” என்று அவள் திட்டினாள்.
“சரிக்கா சரிக்கா இப்ப என்னாத்துக்கு திட்டிக்கின்னு இருக்க… சும்மாக்காச்சும் கோவப்பட்டா அப்பாலிக்கா எப்டி புஷ்ஷப் எடுத்து ஆயிரம் ரூவா வாங்கிக்கின்னு போ முடியும்..” என்று அவன் அடக்க பார்க்க..
அதற்குள் அவள் நூறு புஷ்ஷப்பை எடுத்து முடித்தாள்.. தன் கையை தட்டியவாறே எழ..“ஹேய்ய்ய்ய் அக்காதான் வின்னு..”என்று வேகமாக குதித்து எழுந்த மினியின் கையை பிடித்து அவன் குதிக்க.. அவளோ கையை தட்டிக்கொண்டு தெனாவட்டாக நின்றாள்..
இதை பார்த்துக் கொண்டிருந்த ஜிம் ஓனர் திலீப்போ கைகளை கட்டிக்கொண்டு அவளையே இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தான்.. இல்லை இல்லை முறைத்துக் கொண்டிருந்தான். பின்னே ஜிம்மை துடைத்து சுத்தம் செய்பவளே 100புஷ்ஷப்பை எடுத்திருக்க.. மாதம் மாதம் 8000, 9000ரூபாய் கட்டி ஜிம்மில் சேர்ந்திருப்பவர்களோ வெறும் 20,25 புஷ்ஷப்பில் கழண்டு விட்டார்கள்..
“இவனுங்க எல்லா இன்னாத்துக்கு ஜிம்முக்கு வரானுங்கனே தெரியலையே.. சைட் அடிக்க தான் வரானுவோ போலக்கிது.. அப்டினு பாத்தா பொண்ணுங்களே நம்ம ஜிம்ல யாருமே இல்லையே.. பொண்ணு பாத்தா இவ ஒருத்திதான்.. ஆனா இவக்கிட்ட வச்சிக்கின்னா தலைய திருப்பிடுவாளே.. ம்ச் தெனோ வந்து தடிமாடு கணக்கா தின்னுகிட்டு சுத்துவானுவொலே தவிர ஒரு எழவுக்கும் இலாயக்கு இல்ல.. இவனுங்கள வெச்சி நான் என்னமோ வேர்ல்ட் ரெக்கார்டு பண்ற மாதிரி சுத்திகின்னு இருக்கே.. சரியான கேப்மாறிங்க..” என்று அந்த ஜிம் ஓனர் திலக் கத்தி கொண்டு இருக்க..
அதனைக் கேட்டவாறே நின்று இருந்தான் அந்த ஜிம்மில் வேலை பார்க்கும் இன்னொருவன். “ஹக்காண்ணே அதனால தான் நான் சொல்ற.. இந்த மாறியான அரக்காப்படி எல்லாம் உள்ள சேத்துக்கின்னு இருக்காதனு..” என்று அவன் ஏற்கனவே மினியின் மீது உள்ள பொறாமையில் கூற..
அதனைக் கேட்டு அவனை திரும்பி பார்த்த திலக்கோ.. “இன்னா அவ மேல துறக்கி பொறாமயோ.. உன்ன விட லேட்டா வந்தவ தான் அவ.. ஆனா இப்போ எவ்ளோ புஷ்ஷப் எடுத்துக்கின்னு இருக்கா பாத்துக்கினியா.. நீ இன்னும் ஜிம்ம தொடச்சிகின்னு சுத்திட்டு இருக்க.. ம்கூம் வெளங்கிடும் நீ வேலை பாக்குறதும் ஜிம்மில வந்து ப்ராக்டிஸ் பண்றதையும் பாத்துக்கின்னு தான் குந்தின்னு இருக்கே..” என்று அந்த திலக் கத்தி கொண்டிருக்க..
அதனைக் கேட்டவனோ.. “வேணாண்ணே பப்ளிக்..”என்று கூறிக் கொண்டு ஜிம்மை கிளீன் செய்ய ஆரம்பித்தான்.
“ம்ம் துறக்கி அசிங்கமா இருக்கிதோ.. இதுக்கு பேருதான் தேவை இல்லாம வாய குடுத்துக்குன்னு டேஷ புண்ணாக்கிக்கிறது.. அங்குட்டு ஓடிப் போயிடு மரியாதையா..” என்று திலக் கத்த..
“ம்ச் நல்லது சொன்னா எவன் கேட்டுக்கின்னு இருக்கான்..”என்று அவனும் புலம்ப..
“டேய் நாதாரி..”என்று திலக் கத்த.. அவனின் சத்தை கேட்டவன் அங்கிருந்து நழுவிக் கொண்டான்… போகிற போக்கில்..
“திலக்ண்ணே.. கூர மேல ஒரே ஒட்டடையா இருந்துக்கின்னு இருக்கு.. நா போய் அத என்னன்னு பாத்துக்கின்னு வரேன் சரியா…” என்றவாறே அவன் ஓடிப் போக
“ம்ச் தம்மு.. அடி அடி நல்லா அடி.. ச்சை இதெல்லாம் எங்க தேற போது..” என்று தலையில் அடித்துக் கொண்டவனோ.. பெட் கட்டியவர்கள் நீட்டிய ஆயிரம் ரூபாயை வாங்கி தன் டவுசர் பாக்கெட்டில் சொருகியவாறே அவர்களுக்கு தன் ஆர்ம்ஸை காட்டி அதனை பற்றி பெருமை பேச.. அதனை பார்க்க பார்க்க திலக்கிற்கு கடுப்பானது..
“என் ஜிம்முல வேல பாத்துக்கின்னு எனக்கே போட்டியா வந்துடும் போல இந்த மினி..”என்று பல்லை கடித்தவன்.
திலக் தன்னையே இமைக்காமல் பார்ப்பவனை பார்த்தவளோ தன்னிடம் ஆர்ம்ஸ் பற்றி டவுட் கேட்டவர்களிடம்.. “ஒருநிமிஷம் இருங்க மாஸ்டர் ரொம்ப நேரமா என்னியே நோட்டம் வுடுறாரு.. போய் இன்னான்னு கேட்டுக்கின்னு வந்துடுறேன்.”என்றவள் திலக்கை பார்த்தவாறே வர..
திலக்கின் முகம் இன்னும் கடுப்பை காட்டியது.. “இன்னா மாஸ்டரு நம்ம புஷ்ஷப்ப பாத்து மெர்சல் ஆயிக்கினியா…”என்று கேட்டுக்கொண்டே அவன் அருகில் வர.
அவனோ அவளை மேலிருந்து கீழாக ஸ்கேன் செய்தான்..ரொம்பவும் ஒல்லி பெல்லி என்று கூறிவிட முடியாது சரியான உயரத்திற்கு சரியாக எடையாகத்தான் இருப்பாள்.
“இப்படித்தான் வந்து என் பசங்கள எல்லாத்தையும் தோக்கடிச்சுக்கின்னே இருந்தா நான் எல்லாம் எப்டி ஜிம்மு நடத்துறது..” என்று திலக் கேட்க
அதனைக் கேட்டவளோ தோளை குலுக்கியவாறே கையை ட்ரவுசருக்குள் விட்டுக்கொண்டு.. “ம்ச் ஜம்முல வந்து சேந்துக்கவானு கேட்டதுக்கு நீ இன்னா சொன்ன.. ஒன்ன எல்லாம் ஜிம்ல சேத்துக்க முடியாது.. ஜிம்முல வந்து ப்ராக்டிஸ் பண்ணவும் விட முடியாதுன்னு சொன்ன இல்ல.. சரி அதுக்காகவாவது ஜிம்ம தொடச்சி சுத்தம் பண்ற வேலைக்காவது வந்துக்கின்னு இருக்கேனு சொன்னேன்.. நீயும் அதுக்கு ஒத்துக்கின்ன.. வெறும் ஜிம்ம மட்டும் சுத்தம் பண்ணா அப்பாலிக்கா உனக்கு என்ன மரியாத மாஸ்டரு.. அதான் உன் மரியாதய காப்பாத்தனும்ன்ற அப்படிங்கிறதுக்காக நானும் தம்மாதுண்டு கத்துக்கின்னேன் மாஸ்டரு..”என்றவள்
மறுபடி தன் பாக்கெட்டில் இருந்த ஆயிரத்தை எடுத்து நீட்டி.. “ம்ச் உனக்காக கத்துக்கின்னதுனால தான் பாரு இன்னிக்கி எனக்கு ஆயிரம் ரூபா லாபம்..” என்று காட்ட
அதனை பார்த்த பிறகு அவளை இன்னும் முறைத்தவன்.. “இப்படியே காலம் பூரா ஜிம்ம தொடச்சிக்கின்னே இருக்கலாம்னு இருக்கியோ..”என்று அவன் கேட்க
“ம்ச் அண்ணாத்த யாரு உன்னாண்ட அப்டி சொன்னா.. வெட்டியா சுத்தப் போறேன்னு.. நானு ஆபிஸு வேலைக்கு போக போறேன் மாஸ்டரு..” என்று மினி கூற..
“ஓ அப்பிடி..”என்று கிண்டலாக கேட்டவன்.. தன் தாடையில் கை வைத்தவாறே.. “இன்னா வேலைக்கு போக போற..” என்று அவன் தெனாவட்டாக கேட்க
அவனின் எகத்தாளம் அவளுக்கு கோவத்தை கொடுத்தது.. ஆனாலும் தன்னை நிதானித்தவாறே அமைதிக்காத்தவள் “என்ன மாஸ்டரு இப்படி கேட்டுகின்ன..நான் படிச்சதுக்கு தான் வேலக்கி போ போற..” என்று கூற.
அதில் அவளை நக்கலாக பார்த்தவன் “இப்போ இன்னா சொல்ல வர நீ.. நீ ஒரு உருப்புடாத டிகிரி முடிச்சிக்கின்னியே.. அது என்னமோ பேரு…”என்று அவன் யோசிக்க..
அவளோ கையை முறுக்கியவாறே “கம்யூனிகேஷன் அன்ட் அட்வர்டைசிங் டிகிரி கோர்ஸ்..”என்று முடிக்க
“ஹான் அதேதா அதேதா.. ம்ச் அதுக்கு தோதா வேலைக்கு போக போறேன்னு சொல்க்கின்னியா..”என்று கூற
அவளும் பல்லை கடித்தவாறே ஆம் என்று வேகமாக தலையாட்டினாள்.. இதை எல்லாம் கொஞ்சம் தள்ளி நின்று வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த பல்லவன் என்ற பல்லி.. “அய்யோ அக்கா இன்னாத்துக்கு இப்போ கைய முறுக்கிக்கின்னு இருக்கு.. இந்த மாஸ்டரு மொக வேற சரி இல்லயே..”என்றவன் யோசனையுடன் நிற்க.
“இன்னா இப்டி கேட்டுக்கின்னு இருக்கீங்க மாஸ்டரு.. ம்ச் வேலக்கி போக தான படிச்சேன் நானு.. நீங்க இன்னான்னா இப்டி கேட்டுக்குன்னு இருக்கீயே.. ம்ச் பின்ன நா இன்னா வேலக்கி போகாம டம்மி பீஸா சுத்திக்கின்னு இருப்பேன்னு நெனச்சிக்கின்னியா.. உனக்கே தெரியும் என்னோட ஆசை இன்னான்னு..ஒரு பெரிய கம்பெனில வேலக்கி சேந்து, கை நிறைய சம்பளத்தோட போயீ என் அம்மா முன்னாடி நின்னுக்கின்னு.. “ம்மோய்ய்ய் இந்த குடிச இனி நமக்கு வேணாம்மா.. நாம இந்த சேரில இருந்து ஓடிக்கின்னே இருப்போம்னு சொல்ல வேணாமா…”என்று கண்களில் கனவு மின்ன கூற
அதில் ஹாஹா என்று கேலியாக சிரித்தவனோ.. “இன்னாமா கனவு கண்டுக்கின்னு இருக்கன்னு பாரு.. நீ போய் நின்னதும் அப்டியே வேலய தூக்கிக்கின்னு குடுத்தடப்போறானுவோ.. உன்ன மாறியான ஆளுக்கு அம்மாம்பெரிய கம்பெனில வேல குடுக்க அவனுக்கு இன்னா லூசா..”என்றவன் சொல்ல..
அதில் பொலுக்கென ஒரு குத்துவிட்டாள் அவன் முகத்தில்.. அதனை கண்டு அனைவரும் அதிர.. அவளோ அவனை கண்களால் எரித்துக்கொண்டிருந்தாள்.
(பாக்காத..)
அத்தியாயம்-2
“என்னம்மோய்.. உன்னோட பிளாஷ்பேக்கு போயிட்டியோ..” என்று காமினி புன்னைகையுடன் கேட்க
அதில் வலியுடன் சிரித்தவர் “ஆமாண்டி பிளாஸ்பேக்கு தான் இங்க கொறச்ச பாரு.. நல்லா ஜோரா என் குடும்பத்தோட சந்தோஷமா இருந்தேன்றேன்.. வந்தான் கழிச்சட மாறி உன் அப்பன் எங்க இருந்து வந்தானோ நாதாரி.. காதலிக்கிற, கண்ணாலம் கட்றேன் அப்டின்னான்.. கட்டுனான் பாரு எனக்கு சமாதி.. தூத்தேறி கண்ணாலம் கட்டுனா தேவதை மாதிரி வச்சுப்பேன், உன்ன கையில வச்சி தாங்குவே, அப்படி இப்படின்னு கம்பி கட்ற கதை எல்லாம் கட்டுனான்.. பாவி பாவி நானும் இந்த கட்டையில போறவன நம்பி கைய புடிச்சிட்டு வந்தேன்.. ஆனா இப்ப என்னை எப்டி வச்சிருக்கான் பாரு..”அலுத்தவாறே சாம்பாரையும், அவனையும் தாளித்துக்கொட்டி கொண்டிருக்க..
உடனே காமினியோ.. “இப்போ இன்னானா சாம்பாருக்கு தாளிச்சு கொட்டிட்டு இருக்கேன்..” என்று குமுதா போல மாடுலேஷனில் பேச
அதில் பொய்யாக முறைத்த குமதாவோ “பேசுவடி பேசுவ இதுவும் பேசுவ இதுக்கு மேலையும் பேசுவ.. கசுமாலம் நல்லா ஊருக்கு நடுவுல இளவரசியா இருந்தவள.. இப்படி சேரில கொண்டு வந்து நிறுத்திட்டான்.. அப்படியே என் பின்னாக்க சுத்தும்போது இந்த சினிமாக்காரன் இருப்பானே.. ஹான் இந்தா மாதவன் அவன மாதிரியே டிரஸ் பண்ணிட்டு வந்து நிப்பா.. ஆனா இங்க வந்து பார்த்தா தான தெரியுது ஒரு கிழிஞ்ச வேஷ்டி, ஒரு கிழிஞ்ச ஜட்டிய வச்சிக்கிட்டு என்ன கவுத்துக்கின்னு இருந்துருக்கானு படுபாவி.. “என்று தன் வீணாபோன கணவரை கழுவி ஊற்ற.
அதில் குலுங்கி சிரித்த காமினியோ “ஆனாலும் அப்பா ரொம்பவே ஏமாத்தினு இருந்துருக்காம்மோய்..” என்று கூற.
“அட அந்த நாய உன் அப்பன்னு சொல்லாத.. அந்த நாய் பண்ணுற சோலிக்கு அதுக்கு அப்பன்ற பேரு வேற கேக்குது..”என்று குமுதா கத்த.
“சரி சரி சொல்லல சொல்லல.. ஆமா எங்க அந்த டாடிய ஒரு வாரமா இந்த பக்கமே மிஸ்ஸிங்கு..” என்று காமினி கேலியாக கேட்க
அதில் முறைத்த குமுதாவோ “நீ இப்ப என்னக்கிட்ட சரியா வெளுப்பு வாங்க போற பாத்துக்கினே இரு… அந்த வீணா போனவன, வெளங்காம போனவன பத்தி பேசிக்கினு இருக்காம ஒழுங்கா ஸ்கூலுக்கு கிளம்பி ஓடு..”என்று இட்லி பானையை திறக்க.. அதுவோ புஸ்ஸ்ஸ் என்ற புகையுடன் திறந்துக்கொண்டது.. அதனை எடுத்து வெளியில் வைத்த குமுதாவோ அதன் மீது தண்ணீரை தெளித்து வைத்தவர் தன் மகளுக்கு அதில் நான்கு இட்லியை எடுத்து வைத்துக்கொடுத்தார்.
“சரிம்மோய் சரிம்மோய் வொய் ஆங்கிரி..” என்றவளோ தன் அன்னை கொடுத்த நான்கு இட்லியையும் வேகமாக விழுங்க..
“அட மெதுவா திண்ணுதான் தொலையேன்.. விக்கிக்க போது..”என்றவர் கொஞ்சம் கொஞ்சமாக தன் கடைக்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு தட்டில் இட்லியையும், சாம்பாரையும் வைத்துக்கொடுத்தார். குமுதாவின் கை பக்குவத்திற்கென்றே அங்கு பல வாடிக்கையாளர்கள் இருக்கின்றனர். அதுவும் நான்கு இட்லி பதினைந்து ரூபாய்க்கு கிடைத்தால் சாப்பிடாமலா போவார்கள்.
“அக்கோய் கொஞ்சுண்டு சாம்பாரு ஊத்தேன்..”என்று ஒருவன் கேட்க
“ஆமாடோய் நீ சாப்டுறது மூணு இட்டிலி.. அதுக்கு ஒரு குண்டான் சாம்பாரு கேட்குது.. த்தூ தேறி அடுத்த இட்டிலி வாங்க கஞ்சத்தனம் பட்டுக்கினு சாம்பாரா மொக்குவானுவோ.. கேப்மாறி..”என்று அவர்களை குமுதா கழுவி ஊற்ற..
அவர்களும் குமுதாவின் வாய்க்கு பயந்துக்கொண்டு வாயை மூடி சாப்பிட்டுவிட்டு ஓடிவிடுவார்கள். இல்லை என்றால் இரண்டு வயதுக்கு வந்த பெண் பிள்ளைகளை வைத்துக்கொண்டு அந்த குப்பத்தில் அவரால் வாழ்க்கையை ஓட்டிவிட முடியுமா என்ன..
அழகு பதுமையாக இருந்த குமுதாவை அவள் வீட்டில் இருந்து ஓடிவர வைத்து கல்யாணம் கட்டி இந்த பேட்டைக்கு அழைத்து வந்தான் வெங்கடேஷன். முதலில் குமுதாவின் பெற்றோர்கள் அவளை தங்களுடன் வருமாறு கேட்க.. ஆனால் அவளோ காதல் கண்ணை மறைக்க.. “நான் இவரோட தான் இருப்பேன்.. என்ன யாரும் கூப்டாதீங்க.. நான் வரமாட்டே..”என்று அடித்து கூற.. அவளின் பெற்றோர்களோ கலங்கி போனார்கள்.
ஆனால் அவளின் அண்ணன்மார்களோ அவளை அடிக்கவே பாய்ந்தார்கள்.. அப்போது வெங்கடேஷன் பாயும் புலியாக அவதாரம் எடுத்தவன்.. “இன்னா இன்னா நெனைச்சிட்டு அவ மேலுக்கா கை வச்சிக்கின்னு இருக்கீங்க.. இப்போ அவ உங்க வூட்டு பொண்ணு இல்ல.. என் பொண்டாட்டி அவ.. அவ மேல கீல கை வச்சின்னு வந்தீங்க அவ்ளோ தான் நெஞ்சில இருக்குற எலும்ப என்னோட தோஸ்த்துங்க எண்ணிடுவானுங்க..”என்று நாலு உருப்புடாத நண்பர்களை அழைத்து வந்து நாடகம் போட..
அதில் சினம் கொண்ட குமுதாவின் அண்ணன்களோ.. “அட அவ தான் சொல்றால்லம்மா அவன் தான் வேணும்னு அப்புறம் எதுக்கு அவளுக்காக அழுதுட்டு, கெஞ்சிட்டு இருக்கனும்..அவ வாழ்க்க நாசமா தான் போவும்.. வாங்க நாம நடைய கட்டுவோம்.. இங்க இருந்தா அப்புறம் நமக்கு இருக்குற கொஞ்ச நஞ்ச மரியாதையும் பறந்துடும்..”என்று கூற
பெற்றவர்களால் தான் அதனை ஏற்க முடியவில்லை. “கண்ணு சுத்திமுத்தி பாருடா நீ எப்டி வளந்தவ இந்த குப்பத்துல உன்னால குடும்பம் நடத்த முடியுமா..”என்று அவள் தந்தை கதற
குமுதாவோ காதலில் மிதந்தவளுக்கு அந்த இடமெல்லாம் ஒரு பொருட்டாக தெரியவில்லை. “இவரோட நான் எங்க இருந்தாலும் நல்லா தான் இருப்பன்.. மொதல நீங்க இங்க இருந்து கெளம்புங்க..”என்றாள் தெனாவட்டாக குமுதா
“ம்ம் அப்புறம் அதான் அவளே சொல்லிட்டால்ல.. காதல் அவ கண்ண மறைக்கிது.. நல்லது தான் இங்கையே கெட்டு சீரழிஞ்சி போட்டும்..”என்று அவள் அண்ணங்கள் இருவரும் அவர்கள் தாய் தந்தையை இழுத்துக்கொண்டு போக.. குமுதாவிற்கோ அதன் பின் தான் பயம் வந்து ஒட்டிக்கொண்டது. அவள் முகம் கலங்க நிற்பதை பார்த்த வெங்கடேஷனோ..
“அட இன்னா குமு அவங்கதான் ஏன்னமோ பொலம்பிட்டு போறாங்கனா நீயும் மொறச்சிட்டு நிக்கிற.. ம்ச் இன்னிக்கிதான் நாம கண்ணாலம் பண்ணிருக்கோம்.. நமக்கு இன்னிக்கி மொத நைட்டு தான..”என குழைந்த குரலில் கேட்க
அதில் குமுதாவிற்கு பகீர் என்று இருந்தது.. சுட சுட இட்லி போல சுட சுட திருமணம் ஆகி வந்ததும் அடுத்தக்கட்டத்தை பற்றி பேசுகிறானே.. “ஆமா உங்க அம்மா, அப்பா எங்க.. தம்பி வேற இருக்கான்னு சொன்னீங்களே..”என்று அவள் கேட்க அதில் வெங்கடேஷன் தான் திருத்திருவென விழிக்க வேண்டியதாகியது.
அவனுக்கு தான் சொல்லிக்கொள்ள என்று யாருமே இல்லையே.. சிறுவயதில் குப்பை தொட்டியில் கிடந்தவன் ஆயிற்றே அவன். அவனாக நடந்தான், அவனாக சாப்பிட்டான் அவனாக வேலைக்கு சென்று வயிற்றை கழுவிக்கொண்டான். அப்படி இருக்க எங்கே இருந்து அம்மா,அப்பா,தங்கை வருவார்கள். ஏதோ அவளை காதலில் வீழ்த்துவதற்காக அம்மா இருக்காங்க.. அப்பா இருக்காங்க பத்தாததுக்கு தம்பி இருக்கான் என்று இழு இழுவென இழுத்து வைக்க.. இப்போது அதுவோ அவனை விழிக்க வைத்தது.
“இன்னாது இந்த கசுமாளத்துக்கு அம்மா, அப்பா, தம்பியா.. அட பேம்மா நீ வேற.. குப்பத்தொட்டில கிடந்தவனுக்கு இந்த ஒறவுலா வானத்துல இருந்தா குதிப்பாங்க.. அவனே ஒன்னும் இல்லாத சோம்பேறி.. இப்போ நீயும் அவன நம்பி வந்துட்ட..”என்று பக்கத்து வீட்டு பெண்மணி அவனின் லட்சணத்தை எடுத்து கூற.. குமுதாவோ அப்படியே அதிர்ந்து சிலையாக நின்றுவிட்டாள்.
குமுதா அதிர்வுடன் வெங்கடேஷை பார்க்க.. அவனோ திருட்டு முழி முழித்தவாறே நின்றான்.. “அவங்க என்ன சொல்றாங்கங்க..”என்று அவள் அழுகையுடன் கேட்க
“அட ஆமா எனக்கினு இந்த ஒலகத்துல உன்ன விட்ட யாரு இருக்கா குமு.. நீ என்னாண்ட வந்தன்னாலே என் அம்மோய், அப்போய் அல்லாரும் வந்துதுக்கு சமம் தான.. அத தான் அப்டி சொன்னே..”என்று திருத்திருத்த விழிகளுடன் கூற
குமுதாவிற்கு பயம் அல்லுவிட்டது. அவன் திருட்டு விழிகளையே அவன் திருட்டுத்தனம் தெரிந்து போனதே.. “அப்போ என்ன ஏமாத்திருக்கீங்க..”என்று அவள் கத்த
“ந்தா.. சும்மாக்காட்டியும் கத்தாத.. ம்ச் உன்ன பாத்த டைமே உன் மேல காதல் வந்துனுச்சி எனக்கு.. ம்ச் அதுக்காண்டி தான் இம்மாந்துண்டு பொய் சொன்னே.. அத போயி தப்புன்னுட்டு கத்திக்கினு கிடக்க.. ம்ச் சரி உன்னாண்ட பேசி பேசி எனக்கு டயர்டா போச்சி.. நான் போயி ஒரு டீய குடிச்சிப்புட்டு அப்டியே மீனு கொண்டாறேன்.. இதான் நம்ம குடுச.. உள்ள எல்லா ஐட்டமும் அடிக்கி வச்சிருக்கேன் நானு.. போய் என்ன என்ன இருக்குனு பாரு..”என்று அவன் நழுவ பார்க்க..
“ஆமா ஆமா அப்டியே மெட்ராஸுல இருக்குற ஜவுளி கட, அப்புறம் பாத்துர கடை எல்லாம் உள்ள தான் கொட்டி வச்சிருக்கான் இந்த பீட போய் அத பாரு..”என்று அண்டை வீட்டுக்காரி பத்தி வைக்க.. அதில் கடுப்பானவனோ… “எக்கோவ்வ்வ் இப்போ உன் ஊத்த வாய மூட போறீயா இல்லையா.. சும்மாக்காட்டியும் இல்லாம அவள இன்னாத்துக்கு பயமுறுத்துற..”என்று அவன் எகுற
குமுதாவோ பயத்துடனே வீட்டினுள் நுழைய அதிர்ந்துவிட்டாள். பேருக்காக நாலு சுவர் மத்தப்படி வீட்டில் ஒன்றும் இல்லை. மேல் கூரை கூட கிழிந்து போய் தொங்கியது.. அதனையே குமுதா பயத்துடன் பார்க்க.. அவள் பார்வை சென்ற திசையில் பார்த்த வெங்கடேஷனோ.. “அட அத இன்னாத்துக்கு பாக்குற.. ம்ச் அடுத்த மாசம் கூலி தருவாங்க மொதலாளி. அத வச்சி இதலாம் மாத்திக்கலாம்.. நீ ஒன்னும் வொரி பண்ணாத..”என்று குமுதாவின் தோளில் கை வைக்க.. குமுதாவிற்கோ அவனின் தொடுகை பற்றிக்கொண்டு வந்தது.
எவ்வளவு பெரிய பொய் கூறி இங்கு அழைத்து வந்திருக்கின்றான் என்று நினைக்க நினைக்க வயிரு எரிந்தது. ஆனால் தான் தேர்ந்தெடுத்த வாழ்க்கை தானே அதனால் வாயை மூடிக்கொண்டவளுக்கு எதிர்க்காலத்தை நினைத்தால் அழுகை பீறிட்டது. ஆனால் உயிர் இல்லாத ஜடமாய் மாறினால் தான் அங்கு வாழ முடியும் என்பதை குமுதா அன்றே உணர்ந்துக்கொண்டாள்.
வெங்கடேஷனுக்கு புது மனைவி சம்மதித்தாலும் சரி, சம்மதிக்காவிட்டாலும் சரி வாழ்க்கை ஜகஜோராக சென்றது. ஆனால் குமுதா கல்லூரியை கூட ஒழுங்காக தாண்டாதவள் வீட்டின் வாசலில் இட்லி கடை போட்டு தான் வாழ்க்கையை ஆரம்பித்தாள்.
அவளுக்கு பிடிக்காத கணவன் எல்லாம் இல்லை அவன்.. ஆனால் அவனின் செயல்களே பிடிக்காது அதும் ஆரம்பக்கட்டத்தில் அதன் பின் அவன் செயல்களை கண்டவள் வெறுப்பின் உச்சத்திற்கே சென்றுவிட்டார். இப்போது அவர் வாழ்வதற்கு காரணம் அவரின் இரு மகள்களே ஆகும்.
“யக்கா கொஞ்சம் வியாபாரத்த பாக்குறது.. அத உட்டுப்புட்டு அடிக்கடி கனாக்கு போய்டுற.. என்ன சங்கதி..”என்றவாறே வந்தான் ராகவன்.
அவனை பார்த்ததும் அவ்வளவு நேரம் இருந்த கடுப்பு மறைய.. மெல்ல புன்னகைத்தவறோ.. “வா தம்பி இன்னா காலையிலையே இந்த பக்கம்..”என கேட்க
“அட நான் கேட்டுக்கின்ன கேள்விக்கு ஒன்னியும் பதில் வரலையே…”என்று அவன் புன்னகைத்தவாறே கேட்க..
“அட என்னத்தப்பா பெருசா கனா கண்டுக்க போறேன் நானு.. எல்லாம் அந்த நசாமா போனவன பத்திதான் யோசிக்கின்னு இருக்க.. ம்ச் இந்த பெரிய கழுத வேற நான் சொல்ற ஒன்னிக்கும் அடங்க மாட்டுது.. என்னாத்த சொல்லி என்னாத்த ஆவ போது.. அதான் சும்மா புலம்பினு இருக்கேன்..”என்றவாறே ராகவனுக்கு நான்கு இட்லியை வைத்துக்கொடுத்தார் தட்டில்.
அதனை சிரிப்புடன் வாங்கிய ராகவனின் முகமோ பெருசு என்ற அவரது வார்த்தையில் பளீச் என்று ஆனது. அதனை குமுதாவும் தான் கண்டுக்கொண்டார். ராகவன் மிகவும் நல்லவன், அமைதியானவன், இதுவரை அவனிடமிருந்து எந்த கெட்ட பழக்கத்தையும் குமுதா பார்த்ததில்லை. குமுதா வீட்டின் தெருவிற்கு பக்கத்து தெரு தான் அவன்.
அம்மா அப்பா என்று யாரும் இல்லை. ஒற்றை தங்கை மட்டுமே. ஜனனி அவள் பேர் குமுதா பெருசு பெருசு என்று அழைப்பவளின் பெரிய மகளின் தோழிதான் ஜனனி. சினிமாவில் ஸ்டென்ட் மாஸ்டராக இருக்கின்றான். ஆனால் பார்க்க அப்படி இருக்கமாட்டான் ஹீரோவுக்கே டஃப் கொடுக்கும் அளவிற்கு நல்ல தோற்றம் கொண்டவன். குமுதாவே பல தடவை கேட்டிருக்கிறார்..
“ஏன்ப்பா இப்டி ஸ்டென்ட் மாஸ்டரா ஆனதுக்கு பதிலு ஹீரோவாகிட வேண்டியது தான.. பாக்கவும் ஹீரோ கணக்கா தான் இருக்க..”என்று சிரிப்புடன் கேட்பார்.
“அட அதுலாம் நமக்கு செட் ஆவும்னா நினைக்கிற.. ம்ச் எனக்கு இதாங்க்கா பிடிச்சினு இருக்கு.. அதுனால அத அப்டிகா விடு..”என்பான். அவனின் அமைதியை பார்த்தே குமுதாவிற்கு மனதில் ஒரு திட்டம் உதயமாகியது.
இப்போது ராகவன் அவரின் பெரிய பெண்ணை நினைத்து பார்த்தவாறே இட்லியை சாப்பிட்டுக்கொண்டிருக்க.. “ஏன்ப்பா ராகவா என்னமோ சொன்னியே வீட்ட மாத்த போறேனுட்டு எதோ சென்னைக்கு நடுவால ஜனனிய கூட்டிக்கினி போ போறேன்ன..”என்று அவரின் விடயத்திற்கு சரியாக வந்தார்.
ராகவனும் அவரை கண்டு சிரித்தவாறே.. “ஆமா குமுதாக்கா இங்கனயே இருந்தா ஜனனிக்கு செட் ஆவும்னி எனக்கு தோணல.. அதான் வீட்ட மாத்திக்கினு போய்டலாம்னு இருக்கேன்..”என்றவன் இட்லியை விழுங்க ஆரம்பித்தான்.
“அதுதான் சரின்றேன்.. இந்த சேரில குந்திக்கினு என்னத்த பண்ண முடிது.. நானும் வேகமா இந்த பெரியகுட்டிய எவனையாவது நல்லவனா பாத்து தள்ளிவுட்டுன்னு இங்க இருந்து போலம்னு தான் நெனைக்கிறது..”என்றவர் ராகவனின் முகத்தையே பார்க்க..
அவனின் முகமோ மேலும் பளீச் என்று ஆனது. ஆனால் அவன் தங்கை ஜனனியின் வாழ்க்கைக்கு ஒரு வழி செய்துவிட்டுப் தான் தன்னுடைய வாழ்க்கையை அமைத்துக்கொள்ள வேண்டும் என்று யோசித்தவன்.. “அதெல்லாம் நல்லபடியா அல்லாம் நடக்கும்க்கா.. நீ ஒன்னிக்கும் ஃபீல் பண்னிக்கின்னு இருக்காத..”என்றவனின் கண்கள் குமுதாவின் வீட்டினுள்ளே ஆர்வமாக படிய.. அதனை கண்ட குமுதாவோ மெல்ல சிரித்துக்கொண்டார்.
“பெருசு தான் இன்னியும் அந்த நாசமா போனவங்களோட ஜிம்முல இருந்து வரல ராகவா..”என்று எடுத்துக்கொடுக்க.. அதில் நாக்கை கடித்து சிரித்தவனோ..
“ஆஆன் சரிக்கா அப்பாலிக்கா பாக்கலாம்.. எனக்கு இன்னிக்கி ஷூட் போனும்..”என்றவன் கையை கழுவிக்கொண்டு கிளம்பிவிட்டான்.
குமுதாவோ போகிறவனையே பார்த்தவர்.. “நல்ல பய பெருசுக்கு ஏத்தவனா இருப்பான்..”என்றவர்..
“யக்கா..”என்ற வாடிக்கையாளர்களின் குரலுக்கு வேலை பார்க்க ஆரம்பித்தார்.
(பாக்காத..)
அத்தியாயம்-41
எபிலாக்
“ராக்ஷி அதிதி போன் பண்ணுனாலா. எப்போ வராலாம்…”என்றான் விஷால்
“இன்னிக்கி ஈவ்னிங் அவளுக்கு ப்ளைட் விஷு. நீ வரல அவள அழைக்க……”என்றாள் ராக்ஷி
“என்னடா இது கேள்வி நா அழைக்க வராம என் மச்சினிச்ச வேற யாரு அழைக்க வருவா..”என்றான் விஷால்..
அதில் ராக்ஷி வெட்கப்பட்டு சிரிக்க… எப்போதும் போல அதில் விழுந்துவிட்டான் விஷால்.
ஆம் அடுத்த மாதம் விஷாலுக்கும், ராக்ஷிக்கும் திருமணம்.. அதற்காக தான் பாரினில் படிக்க போய் இருக்க அதிதியை அழைக்க இருவரும் ஏர்ப்போர்ட் செல்கின்றனர்..
அதிதி விஷாலின் கவனம் முழுதும் தன் தங்கையின் மீது இருப்பதை பார்த்தவள்.. விஷாலிடம் தன் வாழ்த்தை சொல்லிவிட்டு வெளிநாட்டில் படிக்க சென்றுவிட்டாள்
அங்கு பெரிய தொழிலதிபனாக இருக்கும் வினய் கண்ணில் அதிதி சிக்க…. உடனே அதிதியிடம் ப்ரோபோஸ் செய்ய.,. தன் தாத்தா சம்மதம் தான் முக்கியம் என்று கூறிவிட்டாள். உடனே வினய் தன் தாய் தகப்பனுடன் இங்கு வந்தவன் தாத்தாவிடம் பேசி அதிதி படிப்பு முடிந்ததும் கல்யாணம் என்று பேசி முடித்துவிட்டே சென்றான்
விஷாலி தன் அம்மா செய்த செயலை தெரிந்துக்கொண்டவள் இனி காலம் முழுதும் என்னுடன் பேசாதே. இனி எனக்கு தன் அக்கா போதும்.. என்று வீட்டை விட்டு கிளம்ப இருந்தவளை. ஆஸ்வதி தான் சமாளித்து.. ஆதியின் மீதான தன் காதலை அவளுக்கு சொன்னவள்..
“சித்தி மட்டும் அப்டி பன்லனா.. இப்போ ஆதி எனக்கு கிடைச்சே இருந்துருக்க மாட்டாரு. விசா.. சோ அவங்க எனக்கு நல்லதுதான் செஞ்சிருக்காங்க…..”என்று அவரை ஒரு மாதிரி பார்த்தவாறே சொன்னவள் தன் தங்கையை தன் வீட்டிற்கு அழைத்து வந்தாள்..
விஷாலி அனைவருடனும் நன்றாக பழக…. ஆதியை மாம்ஸ் என்றே அழைத்து தன் பாச மழையை பொழிந்தாள்.. ஆதிக்கும் விஷாலியின் குறும்பு தனம் பிடித்துவிட அவளை ஓட்டி தள்ளினான்…
ஆஸ்வதி காலையிலே எழுந்து தன் அருகில் தன்னை அணைத்தவாறே படுத்திருந்த ஆதிக்கு ஒரு நெற்றி முத்தத்தை கொடுத்தவள் குனிந்து தன் வயிற்றை பார்க்க….. வயிறு அழகாக மேடிட்டு இருந்தது. ஆம் ஆதியின் காதலுக்கு பரிசாக அவலின் வயிற்றில் அழகாக வளர்ந்தனர் அவர்களின் குட்டி வாரிசுகள். ஆம் அவர்களுக்கு ட்வின்ஸ்..இப்போது 7ஆம் மாதம்
ஆம் ஆதியும் ஆஸ்வதியும் ஹனிமூன் போய் வந்து ஒன்று தான் 1மாதம் ஆகி இருந்தது.. ஆதி தன் ஆபிஸ் வேலையை உட்கார்ந்து ஹாலில் பார்த்துக்கொண்டு இருக்க….. ஆஸ்வதி அனியுடன் சேர்ந்து சமையலுக்கு தேவையான உதவியை வினிஜாவிற்கு செய்துக்கொண்டு இருந்தார்கள்.
அப்போது. “அனி ப்ரிஜ்ல ஆப்பிள் இருக்கு நா எடுத்துட்டு வரேன்…”என்றவள் அமையல் அறைக்கு சென்றவள் பிரிஜில் இருந்து ஆப்பிளை எடுத்து நிமிர்ந்தவள் சடார் என்று மயங்கி சரிய…. அதனை பார்த்த வினிஜா…”அய்யோ.. ஆஸ்வதிமா.”என்று கத்த…. ஆதி, அனி, விதுன் அனைவரும் ஓடினர்.
அவள் மயங்கி கிடப்பதை பார்த்த விதுன் அவளை செக் செய்து பார்க்க….. அவன் முகம் புன்னகையில் விரிந்தது..
“டேய் மச்சான் என்னை இவ்ளோ சீக்கரம் மாமா ஆக்குவனு நா நினக்கவே இல்லடா.”என்று ஆதியை கட்டிக்க்கொள்ள…. அதுவரை ஆஸ்வதி மயங்கியது ஆதியை கதிகலங்க வைக்க…. இதனை கேட்டதும் ஆதிக்கு அவ்வளவு சந்தோஷம் தாங்க முடியவில்லை..
தன் தாய் தந்தையே தன்னிடம் திரும்பி வர போகிறார்கள் என்று அவனுக்கு சந்தோசம் தாங்க முடியவில்லை அதில் இருந்து ஆஸ்வதியை கையில் தாங்கினான். ஆதி. ரூபாவதி முன்பை விட இன்னும் தன்னுள்ளே ஒடுங்கி போக…. அதை கண்ட ஆஸ்வதி..”எனக்கு அம்மா இல்ல… இந்த மாறி நேரத்துல என் அம்மா எப்டி என்னை பார்த்துப்பாங்களோ அப்டி என்ன பாத்துப்பீங்களாமா..”என்று அவரிடம் கேட்க….அவரின் மனம் ஆஸ்வதியை நினைத்து தன்னை சரி செய்துக்கொன்டு அவளை பார்த்துக்கொள்வது அவரது கையில் சென்றது..
ஆஸ்வதி தன்னவனையும் தன் வயிற்றையும் ஆசையாக பார்த்தவள். மெதுவாக குளிக்க சென்றுவிட்டாள்.
பின் குளித்து முடித்தவள் கீழே செல்ல….. வீடே பயங்கர அமைதியில் இருந்தது இதனை பார்த்த ஆஸ்வதி வீட்டின் முழுதும் தேடியவள் சமையல் அறையில் வினிஜா இருக்கிறாறா என்று காண….. அவரும் அங்கு இல்லை
தாத்தா அறை, அனிஷா அறை,விஷால், அதிதி என்று யாருமே வீட்டில் இருப்பதற்கான அறிகுறியே இல்லாமல் இருக்க பயந்தவள். அனிக்கு போன் செய்ய….. போனை எடுத்த விதுன்
“சொல்லுமா ஆஸ்வதி..”என்றான் ஆம். விதுன் அனிஷா காதலை விதுனே தாத்தாவிடம் கூற….. அவர் அதில் பெரும் சந்தோஷப்பட்டார் ஆனால் ஆதி தான் அனி படித்ததும் தான் திருமணம் என்று கட்டாயமாக கூறிவிட அதில் கொஞ்ச நாள் அவனை முறைத்துக்கொண்டே சுற்றிய விதுன் பின் அவள் படிக்கட்டும் என்று கூறிவிட்டான்.
ஆனால் அதனால் அவளை பார்க்காமல் எல்லாம் என்னால் இருக்க முடியாது என்றவன் அனி ப்ராக்டிஸ் செய்யும் ஹாஸ்பிட்டலிலே வந்து ஜாய்ன் செய்துவிட்டான்.அதனால் எந்நேரமும் இருவரும் ஒன்றாக தான் இருப்பார்கள்
இப்படியாக மாட்கள் ஓட…
“அண்ணா எங்கண்ணா யாருமே காணும். வீட்ல….”என்றாள் ஆஸ்வதி
“அத ஏன்மா எங்கிட்ட கேட்குற…. உன் வீட்டுக்காரன் இருக்கானே அவன் கிட்ட கேளு.”என்றான்
அதில் ஆஸ்வதி குழம்பியவாறே…”அவர்கிட்டையா..”என்றாள்
“ஆமா அவந்தான் எங்க எல்லாரையும் வீட்ட விட்டு துரத்தி இன்னிக்கி யாரும் வீட்டுகு வரக்கூடாதுனு சொல்லிட்டான்..”என்றான் கடுப்பாக…
அதில் ஆஸ்வதி அதிர்ந்து நிற்க… அவள் இடையில் எதோ சில்லென்ற உணர்வு வர… கீழே குனிந்து தன் இடையை பார்த்தவள் முகம் வெட்கத்தில் சிவந்து போய்விட்டது.
ஆம் அது ஆதி தான் அவள் வயிற்றை ஆசையாக வருடியவன். அவள் தோளில் தன் தாடையை அழுத்தியவாறே நின்றிருந்தான் ஆதி
“ஏய் உன்னதான் இன்னிக்கி முழுதும் எங்கள டிஸ்டர்ப் பண்ண கூடாதுனு சொன்னேன்ல டா.”என்று கத்தினான் ஆதி
“ஏய் நா ஒன்னும் டிஸ்டர்ப் பண்லடா உன் பொண்டாட்டி தான் அண்ணன் காணும்னு தேடுனா பாவம்..”என்றான் விதுன் கேலியாக
அதில் ஆதி தன்னவளை ஆசையாக பார்க்க…..”இன்னும் உனக்கு 1மணி நேரம் தான் டைம் நாம ஒரு இடத்துக்கு போனும் வா..”என்றவன் அவளை அழைத்து சென்று அவனே அழகான ஒரு பட்டுபுடவையை கட்டிவிட்டவன். அவளை மெதுவாக காரில் அழைத்து சென்றான்..
அவன் கார் சென்று நின்றது ஒரு மண்டபத்தின் வாயிலில். உள்ளே சுத்தி அலங்கரிக்கப்பட்ட சேரில் ஆஸ்வதியை ஆதி உட்கார வைக்க… அவளை சுற்றி அனி,விதுன்,அதிதி,ராக்ஷி,விஷாலி,விஷால் அனைவரும் குவிந்துக்கொண்டு அவளுக்கு வளையல் அணிவித்தனர்.. அடுத்து அபினவ்வும் வர…. அவன் ஆதியின் பக்கம் நின்று ஆஸ்வதியை வாழ்த்திவிட்டு சென்றான்.
போகும் அவனையே ஒரு ஜோடி கண்கள் ஆசையுடன், காதலுடன் பார்த்துக்கொண்டு இருந்தது.(இந்த ஜோடிய வச்சி ஒரு கதை.)
கடைசியாக ஆதி தன்னவளுக்கு வைரத்தால் ஆன வளையலை அணிவித்தவன் அதை விட அதிகமான கண்ணாடி வளையலை அணிவித்தான்..
“நம்ம குழந்தைங்க…. கலகலனு கேட்குற இந்த கண்ணாடி வளையல் சவுன்ட எப்போதும் கேட்கனும்..”என்றவாறே ஆஸ்வதியின் கன்னத்தில் முத்தமிட்டவாறே போட்டோவிற்கு போஸ் கொடுத்தான்
மூன்று மாதம் கழித்து.
தாத்தா தலையில் கை வைத்து உட்கார்ந்திருக்க….. அதிதி ஒரு பக்கம் முகம் மறைத்தவாறே உட்கார்ந்திருக்க……ராக்ஷியும், விஷாலியும் யாரையோ கோவமாக பார்த்துக்கொண்டு நிற்க…. அனி கையை முறிக்குக்கொண்டு கோவமாக நிற்க….. விதுனோ.. ஒருவனின் கையால் நசுக்கப்பட்ட நிலையில் இருந்தான்.. அது வேறு யாரும் இல்லை ஆதி தான்..
மருத்துவமனை உள்ளே ஆஸ்வதி அனுமதிக்கப்பட்டு இருக்க….. வெளியில் அவள் கத்துவதற்கு எசப்பாட்டு பாடியபடி ஆதி விதுனின் கையை நசுக்கிக்கொண்டு இருந்தான்.
அதில் தான் தாத்தா இங்கு நடக்கும் கூத்தில் தலை வலி வந்து தலையை பிடித்துக்கொண்டு உட்கார்ந்திருக்க… அதிதியோ சிரிப்பை அடக்க முடியாமல் முகத்தை மூடிக்கொண்டு உட்கார்ந்திருக்க….. ராக்ஷியும்,விஷாலியும்,அனியும் அவர்களின் கூத்தை கோவமாக பார்த்தவாறே நிற்க…..
அனைவரின் ரியாக்ஷனை அதிகமாக்கியவாறே வந்து பிறந்தனர் ஆதி. ஆஸ்வதியின் பிள்ளைகள். ஒரு ஆண், ஒரு பெண்
ஆஸ்வதி நார்மல் அறைக்கு மாற்றப்பட்டு இருக்க…. குழந்தையை வெளியில் கொண்டு வந்து காட்டிய நர்ஸ். ஆதியின் கையில் ஒன்றும் விதுனின் கையில் ஒன்றும் கொடுத்துவிட்டு செல்ல…. ஆதி தன் கையில் இருக்கும் ஆண் குழந்தையை தாத்தாவிடம் காட்டி கலங்கிய குரலில்
“தாத்தூ அப்பா.”என்றான் அதில் வலியுடன் புன்னகைத்த தாத்தா குழந்தையை தன் கையில் வாங்கிக்கொண்டார். அடுத்து விதுனின் கையில் இருந்த குழந்தையை வாங்கிக்கொண்ட ஆதி.”என் அம்மா.”என்றான் அதே கலங்கிய குரலில்
பின் உள்ளே சென்று ஆஸ்வதியை பார்த்த ஆதி அவளை அணைத்து இதழில் அழுத்த முத்தமிட்டவன்…”என்னை உயிர் போல காப்பவளே..”என்று தன் குழந்தைகளுக்கும் இருவரும் சேர்ந்து முத்தம் கொடுத்தனர்..
(முற்றும்…)
அத்தியாயம்-40
ஆஸ்வதி தன் அறையில் அமைதியாக உட்கார்ந்திருந்தாள்.. ஆதியும் அவளை தான் கடந்த 1வாரமாக பார்த்துக்கொண்டு இருந்தான். இவனை பார்ப்பதும் பின் முகத்தை திருப்புவதுமாக இருந்தாள் அவள். அதிலே அவளுக்கு தன் மீது கோவம் என்று புரிந்துக்கொண்ட ஆதி அது எதனால் என்றும் தெரிந்துக்கொண்டான்..
பின் ஆஸ்வதி ஆதியை கடந்து செல்ல…. ஆதி அவளது கையை இறுக்க பிடித்துக்கொண்டான். அதில் ஆஸ்வதி அசையாமல் அப்படியே நிற்க….. ஆதி தலை குனிந்துக்கொண்டே..
“வது.”என்று அழைக்க…
அதில் ஆஸ்வதியின் உடல் இறுகியது. அதை ஆதியும் உணர….. அவள் புறம் திரும்பினான்.
“வது.. அது…”என்று ஆதி இழுக்க…
“வேணாம் ஆதி.. நீங்க எதும் சொல்ல வேணாம் எனக்கு எதுக்கும் காரணம் தெரிய வேணாம்..”என்றாள் மெல்லிய குரலில்
அதில் ஆதி அதிர்ந்து அவளை பார்க்க….. ஆஸ்வதி இன்னும் அவன் பக்கம் திரும்பாமல்
“இப்போ இருந்து இல்ல ஆதி.. இந்த வீட்டுக்கு வந்த அடுத்த நாளே எனக்கு தெரிஞ்சிட்டு.. நீங்க நடிக்கிறீங்கனு.”என்று ஆஸ்வதி மேலும் அவனை அதிர்ச்சியாக்க…
இவள் வீட்டிற்கு வந்ததும் தெரியுமா.. என்று அதிர்ச்சியாக அவளை காண… அவளோ அவனை இன்னும் கூட பார்க்காமல் நிற்க… எப்படி என்று ஆதி யோசிக்க….
“நாலு வருஷக்காதல் ஆதி.”என்றாள் ஆஸ்வதி..
அதில் ஆதி இன்பமாக அதிர்ந்தான்…”என்ன சொன்ன வது..”என்றான் அவள் இருபக்க தோள்களையும் இறுக்கப்பிடித்துக்கொண்டு
“ம்ம்ம்.. எஸ். இந்த நாலு வருஷமா நா உங்கள தான் நினைச்சிட்டு இருந்தேன் அதும் நா உங்கள பார்த்து உருகி லவ் பண்ணுன அந்த ஒரு வருஷத்த சேர்க்காம……”என்றாள் ஆஸ்வதி அவனை உறுதியாக பார்த்தவாறு
அதில் ஆதி குழப்பமாக அவளை பார்க்க….”அப்புறம் ஏன் இந்த கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டேனு கேட்குறீங்களா.”என்றாள் அவனை உறுத்து விழித்தவாறு.
அவன் ஆம். என்று தலை ஆட்ட….
“இந்த கல்யாணத்துக்கு யாரும் எங்கிட்ட சம்மதம் கேட்கல ஆதி…”என்றாள் வருத்தமான குரலில்.
அதில் ஆதி அவளை வருத்தமாக காண…
“நீங்க இல்லனா வேற வாழ்க்கையினு நா என்னிக்கும் நினைச்சதே இல்ல… ஆனா என் சித்தி என் தங்கையோட படிப்ப பனையமா வச்சிதான் இந்த கல்யாணத்த எங்கிட்ட கொண்டு வந்தாங்க……அப்போ கூட நா உங்கள தான் நினைச்சிட்டு இருந்தேன். ஆனா எனக்கு தான் என் தகுதி தெரியுமே உங்க அந்தஸ்துக்கு நான்லா உங்க பக்கத்துல கூட நிற்க முடியாதே அதான் என் லவ்வ கூட நா உங்ககிட்ட சொல்லல… ஆனா அதுக்கு அப்புறம் நீங்க காலேஜ் விட்டு போனதும் எனக்கு நரக வேதனையா இருந்துச்சி.. கடவுளே இந்த உலகத்துல எதுமே எனக்கு நிலைக்கவே விடமாட்டியானு கதறனும் போல இருந்துச்சி முதல அம்மா அப்புறம் பாட்டி அடுத்து அப்பா அதுக்கு அப்புறம் நீங்க….”என்று கண்கலங்க ஆஸ்வதி பேச…
ஆதி அவள் அருகில் இன்னும் நெருங்கி நின்று அவள் கன்னத்தை கைகளில் தாங்கி.”வது..”என்று அவளுக்கு வலிக்குமோ என்ற எண்ணத்தில் அழைக்க….. அதில் அவள் உடல் சிலிர்த்தது
“நா பேசனும் ஆதி…”என்றவள் காலேஜில் அவனை பார்த்தது முதல் தான் காதலித்ததை அவனிடம் கூற… அவனும் அவள் அட்மிஷன் போட வந்ததில் இருந்து என் மனதில் நீ அட்மின் ஆகிவிட்டாய் என்று அவளிடம் கூற…. ஆஸ்வதி அவனின் காதலில் மெய்மறந்து போனாள்…பின் அவனை பார்க்காமல்..”இன்னும் பேசனும்..”என்றாள்
அவனும் சரி என்று தலை ஆட்டிவிட்டு அவளை தன் பக்கத்தில் அமரவைக்க…
“நா உங்க அப்பாவ பார்த்தேன்..”என்றாள் ஆஸ்வதி
ஆதி என்ன சொல்கிறாள் என்பது போல அவளை பார்க்க…
ஆம் என்று தலை ஆட்டியவள்…”நா காலேஜ் படிக்கும் போது உங்களுக்கு அது லாஸ்ட் இயர் அப்போ. உங்க அப்பா நம்ம காலேஜ்க்கு ஒருநாள் வந்தாங்க….. வந்தவங்க என்னை பார்த்து நா உங்கிட்ட பேசனும் நாம காபி ஷாப்ல மீட் பண்லாம்னு சொன்னாரு. ஆனா நா தான் அவரு யாருனே தெரியாம முழிச்சிட்டு இருந்தேன் அப்போதான் அவரு உங்க அப்பானு சொன்னாரு..உடனே சரினு சொல்லிட்டேன்…”என்றவள் ஆதியை காண… அவன் மேலே சொல் என்பது போல் அவளை பார்த்துக்கொண்டு இருந்தான்.
ஆம் என்று அவளிடம் பேச வந்தவர் ஆதியின் தந்தை தான். அவர் தான் ஆதியை பார்க்க அடிக்கடி அவன் காலேஜிற்கு வருவாறே… அப்போதெல்லாம் ஆதியின் பார்வை ஆஸ்வதி மேலே இருப்பதை பார்த்தவர் அவனிடம் என்ன என்று கேட்க… ஆதி தன் தந்தையிடம் எதையும் மறைத்து பழக்கம் இல்லாதவன். ஆஸ்வதி பற்றி அனைத்தையும் கூறி அவளை விரும்புவதாக கூற….
உடனே விஷ்ணு அவள் வீட்டில் போய் பேசவா என்று கிளம்பியவரை அவள் படிக்க வேண்டும்.. நானும் பாரின் போய் படிக்க வேண்டும் என்று கூறியவன் அதனை அப்படியே விட சொன்னான்.
ஆனால் விஷ்ணுவிற்கு ஆஸ்வதியை பார்க்க ஆசை வர உடனே கிளம்பி விட்டார் அவளை பார்க்க….
அப்படிதான் அவளை பார்த்து காபி ஷாப்பிற்கு கூப்பிட…. வந்தவளிடம் தன் மகனை பற்றி கூறியவர் தன் மகன் அவளை காதலிப்பதையும் கூறினார். முதல் முதலில் மகனின் காதலை தந்தை போய் சொன்னது இதுதான் முதலாக இருக்கும் என்று மனதில் கூறி சிரித்துக்கொண்டாள் ஆஸ்வதி.
“உன் விருப்பம் இப்போ நீ சொல்ல வேண்டாம்மா ஆதி உங்கிட்ட இதப்பத்தி பேச கூடாதுனு சொல்லிருந்தான் நீ படி அவனும் அதுக்குள்ள படிப்ப முடிச்சிட்டு வந்துடுவான் அதுக்கப்புறம் உங்க கல்யாணம் வச்சிக்கலாம்..”என்று கூறியவர் அவளை அடிக்கடி வந்து பார்ப்பதாக கூறிக்கொண்டு சென்றார்.
வீட்டிற்கு சென்றதும் தன் தந்தையிடம் அனைத்தையும் கூறிய விஷ்ணு. அவ தான்ப்பா இந்த வீட்டு மருமக…..என்றார் உறுதியாக… அதனை பெரியவரும் சந்தோஷமாக ஏற்றுக்கொண்டார்..
இதை எல்லாம் கூறிய ஆஸ்வதி ஆதியை காண…. அவன் கண்கள் கலங்கி போய் உட்கார்ந்திருந்தான்
“வது என் அப்பா..”என்று அவன் கலங்க…. அவனை இழுத்து தன் வயிற்றில் புதைத்துக்கொண்டாள் அவனுக்கும் அது இதமாக இருக்க….. கொஞ்ச நேரம் அப்படியே இருந்தான்..
அதன் பின் இப்படியாக இவர்கள் வாழ்க்கை எந்த முன்னேற்றமும் இல்லாமல் அப்போ அப்போ முத்தம், அணைப்பு என்று போக… அதற்கு மேல் இருவரும் முன்னேற வில்லை.
அதன் பின் மாதங்கள் அப்படியே ஓட….. இருவருக்கும் இன்னும் இரண்டு நாட்களில் முதல் வருட திருமண நாள்.
ஆதி இப்போதெல்லாம் தன் தாத்தாவுடன் ஆபிஸிற்கு சென்று வருகிறான்.. இன்னும் சிறிது நாளில் அவருக்கு முழு ஓய்வையும் கொடுத்துவிட்டு தன் குடும்பத்தின் பொறுப்பை ஆதி ஏற்க உள்ளான். அவனுக்கு துணையாக விஷாலும் இணைந்துக்கொள்ள தயாராக இருக்கிறான்
ஆதி தன் தங்கை அனிஷாவை அழைத்து…”சாரிடா.. அம்மா இல்லனு ஆனதுக்கு அப்புறம் நானாவது உன்ன நல்லா பார்த்து இருந்துருக்கனும்.. ஆனா”என்று அவன் வருந்த
“அதலா இல்லணா.. நீ என்னை நல்லாதா பார்த்துக்கிட்ட….. நா தான் சின்ன பிள்ளையில இஷானாவோட பேச்ச கேட்டுட்டு விதுவ ஏதோ பேசிட்டேன்.. அதுல இருந்து தானே நமக்குள்ள அவ்வளவா பேச்சி இல்லாம போச்சி.ஆனா அது தப்புனு நா அப்போவே புரிஞ்சிக்கிட்டேன்…ஆனா எனக்கு உன்ன ரொம்ப பிடிக்கும்ணா. “என்று அவனை கட்டிக்கொள்ள…. அதனை பார்த்த ஆஸ்வதியும், விதுவும் ஒருவரை ஒருவர் பார்த்து புன்னகைத்து கொண்டனர்.
“டேய் விட்றா.. அவ என் அனி பேபிடா.”என்று விதுன் ஆதியிடம் இருந்து அனியை பிரித்தவாறே சண்டை போட…..
அதை முறைத்து பார்த்த ஆதி.”எவ்வளவு தைரியம் இருந்தா எனக்கு முன்னாடியே என் தங்கைய பேபினு கூப்டுவ……”என்று விதுன் மேல் ஆதி பாய… அதில் பயந்த அனிஷா கட்டி உருளும் தன் அண்ணனையும், தன் விதுவையும் பார்த்தவள். அவர்களை பிரிக்க முயல…. ஆனால் அவளால் முடியவில்லை இதனை பக்கத்தின் நின்று வேடிக்கை பார்ப்பது போல் பார்த்துக்கொண்டிருந்த ஆஸ்வதியை பார்த்து.
“அண்ணி.. என்ன அண்ணி வேடிக்கை பாக்குறீங்க…. வந்து இவங்கள பிடிங்க….”என்றாள் அனி
அதில் புன்னகைத்த ஆஸ்வதி இருவரின் பக்கமும் வந்தவள்..”கட்டிப்பிடிச்சி உருண்டது போதும் வாங்க சாப்பிட….”என்று கூறிவிட்டு புன்னகையுடன் அங்கிருந்து சென்றுவிட்டாள். அதனை கேட்ட அனி முழிக்க… ஆதியும், விதுனும் ஆஸ்வதியை திடிக்கிட்டு பார்த்தவாறே.
“ஏன்டா நம்ம சண்டதானே போட்டோம். இவ என்னடா கட்டிப்பிடிச்சி உருண்டது போதும்னு அசிங்கப்படித்திட்டு போறா..”என்றான் ஆதி
“அதாடா ஆதித் மச்சான் எனக்கும் புரில…..”என்றவன் ஆஸ்வதியை பார்க்க அவளோ அவர்கள் யாரையும் காணாமல் தன் வேலையை பார்த்துக்கொண்டு இருந்தாள்..
ஆஸ்வதி இதே போல் தான் ஆதியையும் அவன் நடிக்கிறான் என்று கண்டுப்பிடித்தாள் விதுனையும் அப்படி தான்.”உங்களுக்கு முன்னமே ஆதி நடிக்கிறாருனு தெரியும்னு எனக்கு தெரியும்..”என்று பொசுக்கென்று ரகசியத்தை உடைத்துவிட்டு போய்விட்டாள்
ஆம் விதுன் படித்த படிப்பிற்கு அவனுக்கு தெரியாதா ஆதி உண்மையிலும் பைத்தியமா, இல்லை நடிக்கிறானா என்று.. தன் நண்பன் எது செய்தாலும் அதில் ஒரு நியாயம் இருக்கும் என்பது விதுனின் கூற்று அது போல ஆதி நடிப்பதற்கு பின்னால் உள்ள நியாயம் அவனுக்கு போலீஸ் வந்த அன்று தான் தெரிந்தது..
“இவள ஏமாத்தவே முடிலடா.”என்றான் ஆதி
“இன்னும் சாப்ட வராம என்ன அங்க பேச்சி…”என்று ஆஸ்வதி அதட்ட…
“தோ வந்துட்டோம் வது.. தோ வந்துட்டோம் மா.. தோ வந்துட்டோம் அண்ணி,…”என்று கூறிக்கொண்டே அனைவரும் ஓடினர் அவளை நோக்கி.
அதே போல் தாத்தா ஆதியையும், ஆஸ்வதியையும் ஒருநாள் கூப்பிட்டு வைத்து.”உங்க கல்யாணத்த நல்லா க்ராண்டா செய்யனும்னு நானும் உன் அப்பா விஷ்ணுவும் ஆசைப்பட்டோம்.. ஆனா சூழ்நிலை அப்போ சரி இல்லை ஆனா இப்போ உங்க ரெண்டு பேரோட முதல் வருஷ கல்யாண நாள் வருதே அத நா உங்களுக்கு மறுபடி கிராண்டா கல்யாணம் பண்ண ஆசைப்படுறேன் கண்ணா. மா ஆஸ்வதி நீ என்னடா சொல்ற…..”என்றார் தாத்தா..
ஆம்.. ஆதிக்கும், ஆஸ்வதிக்கும் கூட தங்களுக்கு நடந்த கல்யாணத்தை ரசிக்க முடியாத சூழலில் நடந்தது.. அதனால் அதற்கு இருவரும் உடனே சரி என்றுவிட்டனர்..
அது போல இருவருக்கும் திருமண நாள் அன்று பெரிய திருமண மண்டபத்தில் இருவருக்கும் கோலாகலமாக திருமணம் நடை பெற்றது ஆதி இந்த நேரம் சிவப்பு நிற கற்கள் வைத்த சர்வானி அணிந்து அதற்கு மேட்காக தலையில் தலை பாகை அணிந்து கம்பீரமாக நிற்க…
அவனை விதுன் ஆகாய நிறத்தில் சர்வானி அணிந்துக்கொண்டு, விஷால் இளம் பிங்க் நிறத்தில் சர்வானி அணிந்துக்கொண்டு .. ஆதியை மணமேடைக்கு அழைத்துவந்தனர். அவர் அவர் ஜோடிகளுக்கு ஏற்ற நிறத்தில் பெண்களும்
அவன் அருகில் அவனின் கம்பீரத்திற்கு இணையான அழகுடன் அவன் நிறத்திலே லெஹங்கா ஒன்று அணிந்துக்கொண்டு, அழகு மயில் போல காட்சி அளித்தாள் ஆஸ்வதி..
ஆஸ்வதியை அவள் தங்கை விஷாலி அழகாக மஞ்சள் நிற லெஹங்கா அணிந்துக்கொண்டும், அனிஷாவும் அழகாக ஆகாய நிறத்தில் லெஹங்கா அனிந்துக்கொண்டும்,ராக்ஷி இளம் பிங் நிறத்தில் லெஹங்கா அணிந்துக்கொண்டு, அதிதி வெளிர் பச்சை நிறத்தில் லெஹங்கா அணிந்துக்கொண்டு ஆஸ்வதியை மணமேடைக்கு அழைத்து வந்தனர்..
மேடையில் இருவரையும் உட்கார வைத்து தாத்தாவின் முழு மனதுடனும்.. இருவரின் காதலுடனும்,. மறுபடி ஆஸ்வதி கழுத்தில் தாலி கட்டினான் ஆதி..
அப்போது தான் அபினவ் க்ருஷ் மஞ்சள் நிற சர்வானி அணிந்துக்கொண்டு கையில் பரிசு பொருளுடன் மேடைக்கு வந்தான்.. அவனை இரு கண்கள் ரசனையுடன் பார்த்துக்கொண்டு இருந்தது.
அன்று இரவே ஆதி தன்னவளை அழைத்துக்கொண்டு மொரிஸியஸ் சென்றுவிட்டான்.
அங்கு கடலின் நடுவில் இருந்த ஒரு ஹோட்டலில் ஆஸ்வதி நின்றுக்கொண்டு கடலை ரசித்துக்கொண்டு இருக்க…. அங்கு ஒருவனோ அவளை கண்களால் பருகிக்கொண்டு இருந்தான்
“ஆதி இந்த ப்ளேஸ் எல்லாம் சூப்பரா இருக்கு நாம எப்போ வெளில சுத்த போறோம்…”என்று ஆஸ்வதி கேட்க… ஆனால் அவனிடம் இருந்து தான் பதில் வரவில்லை என்னவென்று திரும்பி பார்க்க ஆதியோ ஆஸ்வதியின் மிக அருகில் நின்றவாறே அவளின் நெற்றியில் விழுந்த முடியை காதில் ஒதுக்கியவாறே
“உன்ன வெளில கூட்டுட்டு போகவா இங்க வந்தேன்.”என்றவன் அவளின் முகத்தை தன் இரு கைகளிலும் தாங்கியவன்.. அவளின் முகத்தையே ஆழ்ந்து பார்க்க… அதில் ஆஸ்வதி சிவந்து போனாள்.
“ஆ….ஆதி.”என்று அவள் அவனின் தோள்ப்பட்டையை அழுத்தி பிடித்தவாறே திணற…..
“வது..”என்றவன். தன்னை சமாளித்துக்கொண்டு தன் கையில் உள்ள ஒரு பார்சலை அவள் கையில் திணித்தவன்..
“உனக்கும் இன்னும் 1மணி நேரம் டைம் அதுக்குள்ள ரெடி ஆகி கீழே இருக்க பீச்சுக்கு வந்துடு நாம அங்க மீட் பண்லாம்…”என்று அங்கிருந்து ஓடிவிட்டான் ஆதி..
அவன் போவதையே புரியாமல் பார்த்துக்கொண்டிருந்த ஆஸ்வதி பார்சலை பிரித்து பார்க்க….. அதில் அன்று ஒரு நாள் இருவரும் ஷாப்பிங் போகும் போது ஒரு கடையில் டிஸ்ப்ளேயில் அழகாக இளம் ஆரஞ்ச் நிறத்தில் புடவையும் அதற்கு மேட்ஷாக கோல்டன் கலர் ஸ்லீவ் லேஸ் ப்ளவுஸும் இருக்க…. அதில் ஆஸ்வதி ஒருநிமிடம் அசந்து போனாள். அப்போது ஆதி மனநிலை சரி இல்லாதவன் போல இருந்ததால் அவனை கையில் பிடித்தவாறெ இந்த புடவையை அவள் சரிக்க இதை ஆதி மனதில் குறித்துக்கொண்டான்
அதை தான் இப்போது அந்த பார்சலில் பார்த்தவள் இன்பமாக அதிர்ந்தவள் அதனை தன்னவன் காதலுடன் வாங்கி தந்திருப்பதை உணர்ந்துக்கொண்டாள்.பின் மகிழ்ச்சியுடன் அதனை அணிந்துக்கொண்டவள்..மிதமான மேக்கப் போட்டு பீச்சிற்கு சென்றவள் அப்படியே அதிர்ந்து நின்றாள்..
ஏனெனில் அங்கு பீச்சில் ஒரு பக்கத்தில் அழகாக ரெமோ லைட்டினால் டெக்கரேட் செய்து அதன் நடுவில் இருவர் மட்டும் அமரும் படி டைனிங் டேபிள் போடப்பட்டு அதன் முன்னால் கையில் சிவப்பு ரோஜாவுடன் நின்றிருந்தான் ஆதி.
அதனை பார்த்தவள் கண்கள் கலங்க….. அவனை நோக்கி மெல்ல நடந்தவள் அவன் அருகே போனதும்.
“ஐ லவ் யூ ஆதி..”என்றாள் அவன் சொல்வதற்கு முன் அவனின் நெற்றியில் அழுத்த முத்தமிட்டு
அதனை கண்கள் மூடி அனுபவித்தவன் அவளை தன் உயரத்திற்கு தூக்கி..”போங்கு நா தானே உனக்கு முதல ப்ரோபோஸ் பண்ண நினைச்சென் ஆனா நீ இப்டி என்னை கவுத்திட்டியே.”என்றான் அவள் காது மடலை உரசியவாறே..
அதில் ஆஸ்வதி உடல் சிலிர்த்தது.பின் இருவரும் அங்கேயே இரவு சாப்பாட்டினை முடித்துவிட்டு தங்கள் அறைக்கு செல்ல… அறைக்கு உள்ளே ஆஸ்வதி சென்றது அதிர்ந்து அப்படியே நின்றுவிட்டாள். ஏனென்றால் அவர்கள்ம் அறையில் அழகாக பூக்களால் அலங்கரிக்கப்பட்டு. ஆஸ்வதியின் போட்டோ ஒன்றை பெரிது படுத்தி. கட்டிலின் மேல் மாட்டப்பட்டு இருந்தது..
அதை பார்த்ததும் ஆஸ்வதி அசந்து போனவள் திரும்பி தன்னவனை பார்த்து எதோ சொல்ல போக… அதற்குள் அவள் இதழ்கள் அவனிடம் புதைந்து போய் இருந்தது.. ஆஸ்வதி அதனை கொஞ்சம் கூட எதிர்ப்பார்க்கவில்லை என்பது அவள் உடல் நடுக்கத்திலே தெரிய… ஆதி இன்னும் அவளை தன்னுடன் நெருக்கிக்கொண்டான்
பின் சிறிது அவள் இதழை விட்டவன்.”ஐ லவ் யூ.இப்போ நா தான் ஜெயிச்சென்..”என்றவன் திரும்ப அவள் இதழில் ஆழ்ந்து போனான் எவ்வளவு நேரம் இதழ்கள் சண்டை போட்டனவோ.. இருவருக்கும் கால்கள் வலிக்க ஆதி அவளை குழந்தை போல தூக்கிக்கொண்டு போய் கட்டிலில் படுக்க வைத்தவன் தன் தாக்குதலை ஆரம்பித்தான்..
தன்னவள்..தன் வது 6வருடமாக காதலித்த தன் வது.. அதும் முதல் பார்வையிலே தன்னை அடியோடு சாய்த்தவள். அவனுக்காக இல்லாத பேச்சை எல்லாம் தாங்கிக்கொண்டு அந்த வீட்டில் இருந்தவள்.அவளிடம் காலம் முழுவதும் விழுந்து கிடக்க அவனுக்கு கோடி ஆசை.
அவனின் காதலில் ஆஸ்வதி இரவு முழுதும் திண்டாடி போனாள். அவனோ.. அவள் புதையல் போல கட்டிக்கொண்டே நாட்களை ஓட்டினான் 15நாள் ஹனிமூனை முடித்தவன் தன்னவளை ஒரு வழி ஆக்கிவிட்டு தான் மும்பைக்கே வந்தான்..
அத்தியாயம்-39
இதனை கேட்டு அனைவரும் அதிர்ச்சியுடன் நிற்க….. ஆனால் தாத்தாவோ இது தனக்கு முன்னவே தெரியும் என்பது போல் நின்றுக்கொண்டு இருந்தார்.. இதனை ஆஸ்வதியும் மனதில் குறித்துக்கொண்டாள்.
“ஆதிக்கு ஆக்ஸிடன்ட் ஆனப்போ.. நா தான் அவர இப்டி பைத்தியம் மாறி நடிக்க சொன்னேன்.. ஏனா உங்க சதி வேலை எல்லாம் வெளில வரனும்னு தான்,.”என்றவன் கொஞ்சம் நிறுத்தி பின்…அபூர்வாவை பார்த்து “உங்க வீட்டுகாரர் மேல ஏற்கனவே நிறைய மோசடி புகார் வந்துச்சி.. சோ அதுக்காக அவர நாங்க காலையிலையே அரஸ்ட் பண்ணிட்டோம்.. இத ஏன் நா சொல்றனா.. இப்போ உங்க புருஷன் எங்கனு நீங்க தேடக்கூடாதுல அதான்…”என்றான் அபினவ் கேலி குரலில்
“அப்புறம் உங்க வீட்டுக்காரர் ரெண்டு பேரும் இப்போ ஹாஸ்பிட்டல ஆபத்தான நிலையில தான் இருக்காங்க… இதுல வருத்தப்படுற விசியம் என்னனா.. அவங்க ரெண்டு பேரும் பக்கத்துல துணைக்கு கூட ஆள் இல்லாம….. கவர்மென்ட் ஹாஸ்பிட்டல ஏதோ ஒரு மூலையில கிடக்காங்க…..”என்றான் ஆதி..
“இவங்களா பண்ணுன தப்புக்கு அதான் கரெக்ட்டான தண்டனை. கடைசி நேரத்துல கூட பக்கத்துல துணைக்கு ஆள் இல்லாம சாவுற வரம் வேற யாருக்கும் கிடைக்கவே கூடாது.”என்றார் தாத்தா உடல் குலுங்கியவாறே.. அதை கண்ட ஆதி முகமும் கலங்கி போனது.. இவர்களால் எவ்வளவு இழப்பு தனக்கும் தன் தங்கைக்கும்.. அப்போது தான் தன் தங்கை அனிஷா நியாபகம் வந்தவனாக அவள் நின்ற இடத்தை பார்க்க….. ஆதியின் மனம் கொஞ்சம் இதமானது அவன் கண்ட காட்சியில்.
ஏனென்றால்.. அனிஷா தன் தாய். தந்தை இறந்த விதத்தை கேட்டு அதிர்ந்தவள்.. அதும் தன் தாய் தான் பிறந்த உடன் இறந்ததாக தான் இதுவரை தன்னிடம் தன் தந்தை சொல்லிருக்கிறார்.. ஆனால் அவள் பிறந்த அந்த ஆறு நாட்களில். அதும் கொடூரமான முறையில் அதும் தன் சொந்த பெரியப்பா.. அத்தை கைகளால் இறந்ததை கேட்டவள்.. அப்படியே அதிர்ந்து போய் கலங்கியவாறே நிற்க…
அப்போது தான் இரு இரும்பு கை அவளை தன் பக்கம் இழுத்து தன்னுடன் இறுக்கி அணைத்துக்கொண்டது அது விதுன்
அவன் தான் அங்கு நடக்கும் பேச்சிக்கள் அனைத்தும் தனக்கு முன்னவே தாத்தா கூறியுள்ளார் என்றாலும் அவனாலும் அதனை தாங்க முடியவில்லை அப்புறம் எப்படி தன்னவளால் தாங்க முடியும் என்று தான் அனிஷாவையே பார்த்துக்கொண்டு இருக்க….. அப்போது தான் அனிஷா தள்ளாடுவதையும். அவள் உடல் நடுக்கத்தையும் கவனித்தவன். யாரை பற்றியும் கவலை கொள்ளாமல் அனிஷாவை இழுத்து தன்னுடன் அணைத்துக்கொண்டான்..
அனிஷாவோ,.. விதுனை இன்னும் இறுக்கிக்கொண்டு..”விது. அம்மா அப்பா..”என்று முனக…
“ச்சு…அனி பேபி எல்லாம் சரி ஆகிடுமா..”என்றான் அவளை இன்னும் தன்னுடன் இறுக்கியவாறே..
அதில் இன்னும் அவள் உடல் குலுங்க….. விதுனின் சட்டை அவள் கண்ணீரால் நனைந்தது.. அவள் முதுகை ஆதரவாக தடவி விட….. அப்போது தான் ஆஸ்வதி அனியின் நிலையை நினைத்தவாறே அவள் அருகில் நெருங்க பார்க்க….. ஆனால் அவளால் முடியவில்லை. அவளின் கை ஆதியிடம் இறுக்கிக்கொண்டு கிடந்தது
அதனை பார்த்தவள் ஆதியை நிமிர்ந்து புரியாமல் பார்க்க….. ஆதி போகாதே என்பது போல் தலை ஆட்டினான்
“இவங்கள கூட்டிட்டு போய் ஜீப்ல ஏத்துங்க…..”என்ற அபினவ் அன்று ஹாஸ்பிட்டலில் கூறியதாவது
“என் அக்கா மாதவி.”என்றான் ஆதியிடம்..
அதை கேட்ட ஆதி அவனை புரியாமல் பார்க்க…
“அவங்க கொன்னது என் அக்கா மாதவி.”என்றான் இறுகிய குரலில்
அதை கேட்ட ஆதி அவனை அதிர்ச்சியுடன் பார்க்க….”எனக்கும் என் அக்காக்கும் வயசு ரொம்ப டிப்ரன்ட் நா அப்போதா 10 படிச்சிட்டு இருந்தேன் அப்போதான் என் அக்காக்கு புது வேலை கிடச்சிருக்குறதா சொல்லி ரொம்ப சந்தோஷப்பட்டா.. அவளுக்கு நானா ரொம்ப இஷ்டம்.. என்னை படிக்க வச்சி பெரிய ஆள் ஆக்கனும்னு சொல்லிட்டே இருப்பா.. அப்போதான் திடிர்னு ஒருநாள் நைட் அவ காணாமல் போய்ட்டா.. அவள எங்கெல்லாமோ தேடுனாங்க என் அம்மா.. ஆனா அவ கிடைக்கவே இல்லை அப்போதான் நா உங்க பெரியப்பா ஆபிஸ்ல தான் அவ வேலைப்பார்க்குறத கண்டுப்பிடிச்சி அவங்க மேல என் அம்மாவ கம்ப்ளைன்ட் கொடுக்க வச்சென் ஆனா அது அவங்க பணத்துக்கு முன்னால ஒருநாள் கூட நிக்கல…. என் அக்காவ அசிங்கமா பேசுனாங்க…. அப்புறம் நாங்க அவள தேடுறத கூட விட்டுட்டோம்.. எங்கோ ஒரு இடத்துல அவளுக்கு பிடிச்ச வாழ்க்கைய வாழ்றானு நினைச்சோம்.. ஆனா. இப்டி.”என்றவன் குரல் தடுமாற,. அதை ஆதி வேதனையுடன் கேட்டுக்கொண்டு இருந்தான்..
“ம்கும் அப்புறம் நா வளர்ந்ததும் என் அக்கா ஆசைப்பட்ட படி பெரிய போலீஸா ஆகனும்னு தீவிரமா படிச்சென் என் அக்காவ கொன்னுட்டாங்கனே உங்க அப்பா அனுப்புன இந்த வீடியோ மூலமா தான் தெரிஞ்சது.. “என்றான் கமறிய குரலில்
“அவங்க யாரையும் சும்மா விடக்கூடாது…”என்று ஆதி கர்ஜீக்க….
“ம்ம்ம் பொருமை ஆதி இப்போ போனா நமக்கு அவங்க பண்ண தப்புக்கு எந்த எவிடன்ஸும் இல்லாம போய்டும் பொருமையா தான் அவங்கள நாம தூக்கனும்…”என்றான் “ஆனா அதுக்கு நீ ஒன்னு பண்ணனும்…”என்றான் அபினவ்
ஆதி அவனை புரியாமல் பார்க்க….”நா அவங்களோட கூட்டத்த பிடிக்கற வர நீ அந்த வீட்ல பைத்தியம் மாறி நடிக்கனும்…”என்றான்
“அவன் செய்வான் தம்பி…”என்றவாறே உள்ளே வந்தார் தாத்தா.
இருவரும் அதிர்ந்து போய் அவரை பார்க்க…. அவரோ கண்கள் சிவந்து முகம் வாடி போய் வந்திருந்தார். தன் செல்ல மகனை பறிக்கொடுத்த துக்கம் அவருக்கு..
“தாத்தா..”என்றான் ஆதி
“என்னை மன்னிச்சிடு கண்ணா. துரோகிங்கள… கொலைக்காரங்கள இவ்வளவு நாள் நா வீட்டுலையே வச்சிருக்கேன்.”என்றார் ஆதி கையை பிடித்து கதறியவாறே.
“தாத்தா உங்களுக்கு.”என்றான் ஆதி எப்படி தெரியும் என்று
“என் பையன் விஷ்ணு கடைசி வர இந்த கிழத்த நம்பிருக்கான் அதுக்கு சாட்சி அந்த வீடியோவ எனக்கும் அனுப்பிட்டான்.”என்றார் பின் தன்னை சமாளித்துக்கொண்டவர்..”அவனுங்க யாரையும் விட கூடாது.. அவங்க எல்லாரும் கண்டிப்பா தண்டனை அனுபவிக்கனும்…”என்றார் தாத்தா
அதன் பின் தான் ஆதி பைத்தியம் போல நடித்தது இரவில் வீட்டை ஏதேனும் எவிடன்ஸ் கிடைக்கிறதா என்று அலையும் போது தான் ஆஸ்வதி கண்ணில் மாட்டியது. அப்போது அவளை தன்னை வைத்தே மிரட்டி ஓடியது அனைத்தும்
ப்ரேமை அடித்து போட்டதும் இவன் தான்.
இப்போது”கான்ஸ்டபிள் ஹாஸ்பிட்டல இருக்க அந்த மூணு பேரையும் அங்கையே வச்சி லாக் பண்ணுங்க….. இந்த மூணு பேரையும் லாக்கப்ல போடுங்க….. அப்புறம் அந்த மித்ரன் அவனையும் இந்த விக்னேஷையும் தனி செல்லுல போடுங்க….. இனி இவங்களா எப்டி வெளில வராங்கனு பாக்குறேன்…”என்று கர்ஜீத்தான் அபினவ்
அதன் படி அனைவரையும் ஜீப்பில் ஏற்ற அபூர்வா மட்டும் தன் தந்தையை பார்த்து காப்பாற்றுமாறு கெஞ்ச அவர் அவள் பக்கம் கூட திரும்பவில்லை..
அனைத்தும் முடிந்ததும் அங்கிருந்து அனைவரையும் அனுப்பிய அபினவ் உடனே இரு உடல்களையும் தோட்டத்தில் இருந்து தோண்டி எடுத்தனர். அப்போது அனி கதறிய கதறல் அனைவரது கண்ணீலும் கண்ணீர் வர வைத்தது ஆதி மொளனமாக அழ….. ஆஸ்வதியும் அதில் கலங்கி போனாள். அவளுக்கும் அனி, தன்னவன் படும் பாடு மேலும் வேதனை ஆக்கியது..
அனைத்தும் முடிந்து இன்றுடன் 1வாரம் ஆனது.. மதுரா, மாதவி இருவரது உடலும் உடனே ப்ரேத பரிசோதனை செய்து 2நாளில் ரிப்போர்ட் தர கோர்ட் உத்தரவிட்டது.. அது போல் குணாலின் மரணத்தையும் தோண்டி எடுத்து கொலை வழக்காக மாற்றியது
உடனே 1வாரத்தி கோர்ட் இந்த கேஸிற்கு ஜட்ஜ்மன்ட் வழங்குவதாக சொன்னது இது அனைத்து டிவி சேனலிலும் லைவ்வில் ஓடியது அதுப்படி அனைத்து ஆவணங்களையும் அபினவ் பார்த்து பார்த்து தாக்கல் செய்ய….
“இந்த தொடர் கொலைகளின் வழக்கு நம்மை மிகவும் பாதித்திருக்கிறது இது போல் சொந்த பந்தங்களையே கொல்லும் அளவிற்கு அனைவரது சொத்தின் மீதான ஆசைகளை நினைத்து மிகவும் வருத்தமாக இருக்கிறது.. இனி இது போல் யாருக்கும் நடக்காமல் இருக்க வேண்டும் என்பதற்காக உடனே இந்த நீதிமன்றம் இந்த தீர்ப்பை வழங்குகிறது. குணால், மிஸ் மதுரா,மாதவி,கடைசியாக விஷ்ணு சர்மா இவர்கள் நால்வரின் கொலைக்கு காரணமாக இருந்த பரத், அஜய்,ரியா,பூனம், அபூர்வா,மித்ரன் இவர்களுக்கு இந்த கோர்ட் சாகும் வரை சிறையில் இருக்குமாறும், அதில் பரத்,அஜய் இரண்டு பேரும் சரியாகும் வரை மருத்துவமனையில் இருக்கவும்.. பின் சரியானதும் சிறைக்கு அழைத்து வருமாறு காவல்துறைக்கு நீதிமன்றம் கூறுகிறது. பின் ப்ரேம் விஷ்ணு சர்மா கொலையில் சம்பந்தம் இருப்பதாக கோர்ட்டில் நிருபிக்கப்பட்டாலும் அவம் கோமாவில் இருப்பதால் அவன் சரி ஆகும் வரை அவனை மருத்துவமனை காவலில் வைக்க இந்த கோர்ட் முடிவு செய்கிறது…”என்று கூறிய நீதிபதி அனைவரையும் பார்த்துவிட்டு ஜட்ஜ்மென்ட்டில் தன் கையெப்பத்தை போட்டுவிட்டு எழுந்து சென்றார்..
இந்த காட்சி அனைத்து டிவிகளிலும் ஓட… இதனை ஆதியும், ஆஸ்வதியும் தங்கள் அறையில் உட்கார்ந்து பார்க்க….கீழே தாத்தா, அனிஷா,விதுன் ,விஷால்,அதிதி,ராக்ஷி,லிஷா அனைவரும் பார்த்தனர்..
பூனம் கைது செய்யப்பட்ட உடனே ராம் வீட்டிற்கு வந்து இஷானாவை தன் வீட்டிற்கு அழைக்க…. அவளோ தன் தாயை காப்பாற்ற போகிறேன் என்று வீரமாக பேச… உடனே ராம் விட்ட அறையில் அனைத்தும் மறந்து போய் அவன் பின்னாலே கிளம்பிவிட்டாள்.அவளும் காதலித்தாள் அல்லவா..
தன் தாய் தந்தைகளை பற்றி தெரிந்துக்கொண்ட விஷால், அதிதி, ராக்ஷி ,லிஷா அனைவரும் தங்கள் பெற்றோரை அடியோடு வெறுத்தனர்.. அதிதி பணம் இருக்கும் தைரியத்தில் ஆடுவாளே தவிர கொலை செய்யும் அளவிற்கு கெட்டவள் இல்லை. அதனால் அவளுக்கும் தன் தாய் தந்தை செயல் அவர்களை அடியோடு வெறுக்க வைத்தது..
அனைவரது முகமும் எந்த உணர்ச்சியும் காட்டாமல் இருக்க… அனிஷா எழுந்து தோட்டத்திற்கு சென்றுவிட்டாள் அவளையே பார்த்துக்கொண்டு இருந்த விதுன் அவளின் பின்னால் போய்விட்டான்
அனி தோட்டத்தில் போட்டு இருந்த ஒரு கல் மேடையில் உட்கார்ந்தவள் எஙோ ஓரிடத்தை வெறித்துக்கொண்டு இருக்க… அவள் அருகில் வந்து உட்கார்ந்தான் விதுன் அதனை உணர்ந்தாலும் அவள் அதனை கண்டுக்கொள்ளாமல் இருக்க….விதுன் எதோ பேச ஆரம்பிக்க…..
உடனே அனி”இந்த கொலைக்கார குடும்பத்துல பிறந்த நா உங்களுக்கு வேணா விது…”என்றாள்.
அவள் சொன்னதை கேட்ட விதுன் அவளை ஆழமாக பார்த்தவாறே. “ம்ம்ம்.. சரி அப்போ எனக்கு நீயே வேற பொண்ணு பாரேன்”என்றான் நக்கல் குரலில்
அதை கேட்ட அனி அவனை பார்த்து முறைக்க… அதில் விதுனின் முகம் புன்னகையை பூசிக்கொண்டது. ஆனால் அனியோ கோவமாக எழுந்து செல்ல பார்க்க அவள் கையை பிடித்து இழுத்த விதுன் அவளை ஒரு ஓரமாக கூட்டி சென்று அவளை சுவற்றில் சாய்த்து…நெருங்கி நின்றவாறே
“அனி பேபி வேற பொண்ணு பாக்குறீயா..”என்றான் குழைவான குரலில்..
அதில் கோவப்பட்ட அனி அவனை தள்ளிவிட பார்க்க… ஆனால் அவனோ இன்னும் அவளுடன் ஒட்டிக்கொண்டே…”ஏற்கனவே 15வருஷம் உன்ன விட்டு பிரிஞ்சி இருந்தாச்சி. இனி என்னால இருக்க முடியாதுப்பா. நீ என்னை கட்டிக்கிட்டு உன் டாக்டர் படிப்ப கட்டிக்க…..என்ன….”என்றவாறே அவள் பேசமுடியாத அளவிற்கு அவளை ஒரு வழி ஆக்கிவிட்டு தான் அவளை விட்டான்
அதும் அவன் சொன்ன 15வருட காதல் அவளை இன்னும் அவன் மீது பித்தாக்கியது…”ஹேய் 15வருசக்காதல்னா அப்போ எனக்கு 8தானே…”என்றாள் அனிஷா
அவன் அதற்கு குறும்பு புன்னகை சிந்தியவன். ஆம் என்று தலை ஆட்ட… அதில் சந்தோஷப்பட்ட அனி அவனை இறுக்கி அணைத்துக்கொண்டாள்..
இங்கு இவர்கள் இப்படி என்றால் அங்கு ஒரு ஜோடி அப்படி
(வருவாள்.)
அத்தியாயம்-38
அவர்கள் சொல்லுவதை எல்லாம் கேட்டுக்கொண்டு நின்றிருந்த அனைவரின் மனமும் பதறியது.
ஆஸ்வதியோ.. அவர்கள் செய்தது அனைத்தையும் கேட்டு உடல் நடுங்க நின்றிருந்தாள். அவள் உடல் நடுங்குவது ஆதிக்கு நன்றாக தெரிந்தது. அவளின் கையை அழுத்தமாக பற்றியவன் அவளை தன்னோடு லேசாக அனைத்துக்கொண்டான். அதில் ஆஸ்வதி கொஞ்சம் தன்னை சமாளித்துக்கொண்டாள்…
அந்த வீட்டின் வெளியில் போலீஸ், ப்ரேஸ், பொதுமக்கள் அனைவரும் குவிந்திருந்தனர்
அனைவரின் மனமும் இந்த கொலைக்கார கூட்டத்தின் வெறி செயல்களை கேட்டு அவர்களை கொல்லும் அளவிற்கு வெறியோடு நின்றிருந்தனர்.. கொஞ்சம் விட்டால் அனைவரும் ஒன்று சேர்ந்து அவர்கள் இருவரையும் கொன்றே இருப்பார்கள்.
இவர்கள் மட்டும் தான் இருக்கிறார்கள் என்று யோசிக்கும் போதே ஹாஸ்பிட்டலில் இருந்து பூனத்தை போலீஸ் அரெஸ்ட் செய்து இங்கு அப்போது தான் அழைத்து வந்திருந்தனர். அவரின் முகம் கொஞ்சம் கூட போலீஸை பார்த்தோ.. தன் மாமனாரின் கோவத்தை பார்த்தோ பயப்படவில்லை.. அப்படியே கல் போல வந்து ரியா பக்கம் அவர் நிற்க…
அப்போது தான் ரியா தலையில் இவ்வளவு நேரம் துப்பாக்கியை வைத்து மிரட்டி அனைத்தையும் கூற வைத்தவன்.. அவர் தலையில் இருந்து கன்னை எடுத்தவாறே..பூனம் பக்கம் வந்து நின்றவாறே.
“உங்களுக்கு கொஞ்சம் கூட கொலை னெஞ்சிட்டோங்குற பயம் இல்லையில…. மனசுல… பரவால அத நா வர வைக்கிறேன்…”என்று கண்களில் கனலுடன் அவன் கூற….
அவனை நிமிர்ந்து பார்த்த அந்த மூவருக்கும் பயம் அப்படி வந்தது.. இருந்தாலும் தன்னை சமாளித்துக்கொண்ட பூனம்..
“போலீஸ் தானே நீ அரெஸ்ட் பண்ண வந்தா அத மட்டும் செய். தேவை இல்லாம பேசாத…..”என்றார் திமிராக
அதை கேட்ட அவன் கண்கள் ரத்தத்தை விட அதிக நிறத்தில் சிவக்க… அதற்கு மாறாக அவன் அழுத்தமான இதழ்கள் புன்னகையில் விரிந்தது.
“ஹாஹா.. நா போலீஸா மட்டும் இருந்தா அத தான் செய்திருப்பேன் ஆனா.. நா போலீஸ் மட்டும் இல்லையே…”என்றான் புதிராக
அதில் அவர்கள் மூவரும் மிரட்சியுடன் அவனை காண….
“இவர் ஏசிபி அபினவ் க்ரிஷ். நீங்க கொன்னீங்களே மாதவி அவங்களோட தம்பி..”என்றான் ஆதி குரலில் அவ்வளவு வன்மம்
அதை கேட்டு அவர்கள் ஸ்தம்பித்து போக……மனதில் இல்ல இல்ல அவளுக்கு கூட பிறந்தவன் யாரும் இல்லனு சொன்னாங்களே என்று மனதில் நினைத்துக்கொண்டு இருக்க…..
“ம்ம்ம். மாதவி அக்காக்கு இப்டி ஒரு தம்பி இருக்குறதா அவங்கள தெரிஞ்ச யாருக்குமே தெரியாது.. அதுனால உங்களுக்கும் தெரிய வாய்ப்பு இல்லை. 20 வருஷத்துக்கு முன்னாடி நீங்க செஞ்ச வினை என் மூலமா உங்களுக்கு வினையா அருவடை தர போது.”என்றான் அபினவ் க்ருஷ் அவர்களை கண்கள் சிவக்க முறைத்தவாறே
“நாங்கதான் இத செஞ்சோம்னு என்ன சாட்சி இருக்கு உங்க கிட்ட……”என்றாள் பூனம் திமிராக
“ம்ம்ம்ம்.. அதும் சரி தானே அபினவ். அவங்க கிட்ட உங்க எவிடன்ஸ காட்டுங்களேன். அவங்க முகத்துல அத பார்த்ததும் வர அதிர்ச்சிய பாக்க நா ஈகரா இருக்கேன்…”என்றான் ஆதி நக்கலாக
அபினவ் க்ருஷ் அவனை பார்த்து தலை அசைத்தவன்.. கான்ஸ்டமிளை கன் காட்ட அவர் தன் பின்னால் நின்றிருந்த ஒருவனை அவர்கள் முன்னால் வந்து நிப்பாட்டினர். அவன் வேறு யாரும் இல்லை. அவர்களின் அனைத்து கொலைகளுக்கும் உதவியாக இருந்த விக்னேஷ் தான்
அவனை பார்த்ததும் அவர்கள் அதிர்ச்சியில் கண்கள் தெறித்து வெளியில் வரும் அளவிற்கு திறக்க…..
“என்ன இவன எப்டி கண்டுப்பிடிச்சோம்னு பாக்குறியா அபூர்வா..”என்றார் பெரியவர்..
அதிலே அவருக்கு அனைத்தும் முன்னவே தெரியும் என்று உணர்ந்தவர்கள். அவரையே பார்க்க…
அவர் ஒரு நாள் அவனை பணக்காரனாக தன் பிஸ்னஸ் பார்ட்டியில் சந்தித்ததில் தொடர்ந்து.. அவனை ஆள் வைத்து கண்காணிக்க வைத்ததில் இருந்து அவனை பூனேயில் ஒரு வீட்டில் அடைத்து வைத்து அனைத்து விஷ்யங்களையும் வாங்கியது வரை அனைத்தையும் சொன்ன பெரியவர்.
“இவன விசாரிச்சதுல உங்க மேல நிறைய விஷ்யம் இருக்கும்னு தோணிச்சி. அதுனால தான் நா அடிக்கடி பூனே போய் இவன கட்டி வச்சி விசாரிச்சி. அதுக்கு அபினவ உதவியா கூப்பிட்டு. அவர வச்சே நீங்க செஞ்ச எல்லா தில்லுமுல்லு வேலைக்கும் எவிடன்ஸ் திரட்டினேன். அதுனால தான் உங்கள அரெஸ்ட் பண்ண கொஞ்சம் டிலே ஆகிட்டு…”என்றார் பெரியவர்…
“ம்ம்ம். அப்புறம் இன்னொரு விஷ்யம் இந்த கொலை கேஸ் மட்டும் இல்ல…. இன்னும் உங்க மேல நிறைய கேஸ் மாட்டிருக்கு. அது மட்டும் இல்லாம…. “என்று தயங்கிய அபினவ்.. ஆதியை தயக்கமாக பார்க்க….. ஆதியின் கண்கள் கலங்கி சிவந்து போனது..”ஆதியோட அப்பா மிஸ்டர் விஷ்ணு சர்மாவையும் நீங்க கொன்னதும்”என்றான் அபினவ்
அதை கேட்ட ஆஸ்வதி அதிர்ந்து தன்னவனை காண… அவன் முகம் கலங்கி போய் இவளை பார்த்து ஆம் என்று தலை ஆட்டினான்
ஆம் விஷ்ணுவும் இவர்களால் தான் கொல்லப்பட்டார். அதும் தன் மகன் கண் முன்னாலே.
விஷ்ணு ஆதி படிக்க பாரின் சென்றதும்.. அவருக்கு எல்லாமுமாக இருந்தது அனிஷா தான் அப்போது தான் அனிஷா பள்ளி இறுதி வருடம் படித்துக்கொண்டு இருந்தாள். அவளை அழைத்து போய் ஸ்கூலில் விடுவது திரும்ப அழைத்து வருவது எல்லாமே விஷ்ணு தான் செய்வார்.
ஆதி பாரின் போனாலும் ஒரு நாளைக்கு மூன்று முறை தன் தந்தைக்கு அழைத்து பேசாமல் இருக்க மாட்டான். இரண்டு வருடம் கழித்து அன்று ஆதி தன் படிப்பு முடிந்துவிட்டதாகவும். இன்னும் இரண்டு நாட்களில் நான் ஊருக்கு வருவதாகவும் கூற விஷ்ணு ஆனந்தமடைந்தார். தன் தந்தையிடம் இதனை கூறி சந்தோஷமாக சுற்றி வந்தார்…
அதே போல தான் ஒரு நாள் அனிஷாவை அழைத்து போய் பள்ளியில் விட்டுவிட்டு ஆபிஸ் செல்ல இருந்தவர் முக்கியமான ஃபைல் ஒன்று வீட்டிலே மறந்து வைத்துவிட்டு வந்ததை நினைத்து தன்னையே நொந்துக்கொண்டவர்.. திரும்ப தன் காரில் வீட்டிற்கு வந்தார்.
அப்போது தான் பூனமும்,பரத்தும் விக்னேஷிடம் பேசவதை எதர்ச்சையாக கேட்டார். கேட்டவர் அதிர்ந்து போனார்.
இவர்கள் அனைவரும் இதுவரை கம்பெனியில் செய்த கையாடலில் இருந்து குணால், மதுராவை கொன்றது வரை விக்னேஷிடம் பேசி. இனி இது போல் பணம் கேட்க வராதே. நீ செய்ததுக்கும் மேல் நான் கொடுத்துவிட்டேன். என்று பூனம் ஒரு பெரிய தொகையை அவனுக்கு செக்கில் போட்டு நீட்ட…. அதனை பல் இழித்தவாறே வாங்கிக்கொண்டு அவன் கிளம்பும்போது எதார்த்தமாக திரும்ப அங்கு விஷ்ணு நிற்பதை பார்த்துவிட்டு அவன் ஓடிவிட்டான்.
அவன் ஏன் திடீர் என்று ஓடுகிறான் என்று பார்த்த பூனம் அப்போது தான் அங்கு விஷ்ணு நிற்பதை பார்த்து அதிர்ந்தவர் பரத்திற்கு கண் காட்டினார் அவனும் பார்த்து அதிர்ந்தவன்.
விஷ்ணு காலிலே விழுந்து இதனை யாரிடமும் சொல்லாதே ஏதோ அவசரத்தில் இதை செய்துவிட்டோம் என்று கதற…. விஷ்ணு அவர்களையே இமைக்காமல் பார்த்தவர் அங்கிருந்து சென்றுவிட்டார்..
“உன் தம்பி யார்கிட்டையும் சொல்லாம இருப்பானு எனக்கு நம்பிக்கை இல்ல……”என்று கத்தினாள் பூனம்
“அதுக்கு இப்போ என்ன பண்ண சொல்ற…..”என்றான் பரத்
“ம்ம். அவனையும் முடிச்சிடுறது தான் நமக்கு நல்லது..”என்றாள் பூனம்
அதை கேட்டு அதிர்ந்த பரத் தடுக்க வாய் திறப்பதற்குள் அவனின் ஆபிஸ் கையாடல் அனைத்தையும் விஷ்ணு ஒரு தரம் கண்டுப்பிடித்து பரத்தை கண்டித்தது அவனுக்கு நியாபகம் வந்தது.
அவன் இல்லாமல் போனால் தான் யாருக்கும் பதில் சொல்ல வேண்டியது இல்லை என்று பரத் மனதில் தோன்ற….. உடனே பூனத்திடம் தலை ஆட்டினான். அப்படிதான் ஆதியும், விஷ்ணுவும் வரும் போது ஆக்ஸிடன்ட்டில் இருவரையும் கொல்ல ப்ளான் போட்டார்கள்.
அதன் படி விக்னேஷை அதற்கு ஏற்பாடு செய்தவர்கள் விஷ்ணு ஏர்ப்போர்ட் செல்லும் போது அவனுடன் யாரும் செல்லாதவாறு பார்த்துக்கொன்டனர்
அன்று ஆதி வரும் நாள் விஷ்ணு எப்போதும் ஆதியை காண சந்தோஷத்துடன் கிளம்புபவர் இன்று இல்லை கடந்த இரண்டு நாட்களாகவே பரத். பூனம் பேசியதை மனதில் ஓடிக்கொண்டு இருந்ததால் கலக்கத்துடனே கிளம்பினார் அனிஷாவும் கூட வருவேன் என்று கூற….. ஆனால் விஷ்ணு மனதிற்கு எதோ கெட்டது நடப்பது போல் தோன்ற….. அவளை வர வேண்டாம் என்று கூறிவிட்டார்..
அவர் மட்டும் கிளம்பி ஏர்ப்போர்ட் போக….. அங்கு ஆதி தன் தந்தையை கட்டிக்கொண்டு தன் பாசமழையை பொழிந்துக்கொண்டு இருக்க….. ஆனால் விஷ்ணுவோ.. ஆதியையே கலக்கத்துடன் பார்த்துக்கொண்டு இருந்தார். அவரின் முக மாறுதலை கண்ட ஆதி..
“என்ன விச்சுப்பா.. அங்க இருந்தா எப்போ வருவ எப்போ வருவனு கேட்டுட்டே இருப்பீங்க…. இப்போ என்னனா அமைதியா என் முகத்தையே பார்த்துட்டு இருக்கீங்க….”என்றான் அவரை கட்டிக்கொண்டு
அவனின் கேள்வியில் தான் தன்னை ஆதி கவனிக்கிறான் என்பதை உணர்ந்துக்கொண்டவர். மெல்ல தன்னை சமாளித்துக்கொண்டு புன்னகையுடன்
“இவ்ளோ நாள் கழிச்சி என் பையன பாத்துருக்கேன்ல அதான் அவன் முகத்தை உத்து பார்த்துட்டே இருந்தேன்..”என்றார் விஷ்ணு
அதை கேட்டு புன்னகைத்த ஆதி..”இப்டியே ஏர்ப்போர்ட் வாசலையே பாக்குறதா இருக்கீங்களா. வாங்க வீட்ல போய் பாக்கலாம்.”என்றான் ஆதி கிண்டலாக
அதில் புன்னகைத்தவர்..”வா.என்று இருவரும் காரில் ஏறி கிளம்பியவர்கள்.. விஷ்ணு தான் காரை தான் தான் ஓட்டுவேன் என்றவர் ஆதியை தன் அருகில் உட்கார வைத்தவாறே.. காரை மெதுவாக ஓட்டிவந்தார்
“அப்புறம்ப்பா. அனி எப்டி இருக்கா.. தாத்தா.. விதுன் போன் பண்ணுனானா..”என்று அடுக்கடுக்காக அவரிடம் பேசிக்கொண்டே வர….. விஷ்ணுவும் கொஞ்ச நேரம் மனம் விட்டு ஆதியிடம் பேசிக்கொண்டே வந்தார்..
அவனை பார்த்து பார்த்து மகிழ்ந்து போனார்.. அல்லது இது தான் தன் இறுதி நாள் என்று தெரிந்து போனதோ என்னவோ.. பேசினார்.. அவனை பேச வைத்தார்.. ஒருமணி நேரம் போகும் தன் வீட்டிற்கு 3மணி நேரமாவது ஆக்க வேண்டும் என்பது போல் மெதுவாக ஓட்டியபடி வந்தார்.
அப்போது தான் ஆதி பின்னால் வந்த லாரியை பார்த்தவன்…”என்ன இந்த லாரியை நா ஏர்ப்போர்ட்ல இருந்து கிளம்புனதுல இருந்து பாக்குறேனே. இன்னும் நம்ம பின்னாடிதான் வருது ஒன்னு முன்னாடியாவது போகனும்ல…..”என்றான் ஆதி
அப்போதுதான் விஷ்ணுவும் முன் கண்ணாடி வழியாக லாரியை பார்க்க….. அவருக்கு அது எதார்த்தமாக வந்தது போல தெரியவில்லை அதனை கூர்மையாக பார்த்தவர் அதில் ஏதோ தவறிருப்பது போல தெரிய… அப்போது தான் திடீர் என்று மெதுவாக வந்த லாரி அதிவேகமாக இவர்களை நோக்கி வர….. அதில் என்னவென்று புரிந்துக்கொண்ட விஷ்ணு.. ஆதியையே இமைக்காமல் பார்த்தவர்
“ஆதிக்கண்ணா.”என்றார்
“சொல்லுங்க விச்சுப்பா.”என்றான் தலையை கண்ணாடி வழியாக பார்த்து கோதிக்கொண்டு
“கண்ணா..”என்று தழுதழுக்கும் குரலில் விஷ்ணு கூப்பிட… அப்போது தான் தன் தந்தையின் குரல் மாற்றத்தை உணர்ந்தவன் அவரை திரும்பி பார்க்க….
“யாரையும் நம்பாத கண்ணா.. அதும் நம்ம வீட்ல இருக்க யாரையும்.”என்றவர் திடீர் என்று காரை அதிவேகமாக ஓட்டியவாறே ஆதியின் பக்க கதவை திறந்துவிட்டவர்.. நொடியில் ஆதியை பிடித்து கீழே தள்ளினார்
தன் விச்சுப்பாவின் கலங்கிய குரலில் அவரையே பார்க்க அவர் சொன்னதை கேட்டவன் என்னவென்று உணரும் முன் அவரின் திடீர் செயலில் அவரையே பார்த்தவாறே ஓடும் காரில் இருந்து தூர போய் விழுந்தான்
ஆதியின் நலனை கண்ணாடி வழியாக பார்த்துக்கொண்டே இருந்த விஷ்ணு.. தன் மகனை காப்பாத்திவிட்டேன் என்ற திருப்தியில் புன்னகைக்க…. அதனை முடித்து வைக்கவே. வந்து மோதியது அந்த லாரி.
ஆதி ரோட்டில் விழுந்தவன் தலையில் பலமாக அடிப்பட….. அந்த வலியையும் மீறி தன் தந்தை போன காரை பார்த்தவன் கண்ணிற்கு தெரிந்தது என்னவோ.. லாரி மோதிய வேகத்தில் காரின் பெட்ரோல் டேங்கில் இருந்து வடிந்த பெட்ரோலையும்.. திரும்பி வந்து மோதிய லாரியையும். அது மோதியதால் வெடித்த காரையும் தான்..
அதனை மங்கும் கண்களில் பார்த்தவன்.”விச்சுப்பா..”என்றவாறே அப்படியே மயங்கி போனான்
பின் கண் விழித்து பார்க்கும் போது ஆதி மருத்துவமனையில் இருக்க… அவன் பக்கம் ஒருவன் உட்கார்ந்திருந்தான்.. அவன் தான் அபினவ் க்ருஷ் ஆதிக்கு ஒன்றும் பெரிய அடி இல்லை. தலையில் மட்டுமே அடி கொஞ்சம் பலம். மத்தப்படி உடலில் கொஞ்சம் அங்கு அங்கு சீராய்ப்பு…அவ்வளவே ஆதி ஹாஸ்பிட்டலில் அட்மிட் செய்த அடுத்த 3மணி நேரத்திலே கண் விழித்துவிட்டான்.
ஆதி தன் எதிரில் நிற்கும் அவனையே பார்த்தவன் பின்.. தன் தலையை தொட்டு பார்த்தவன்..
“என் விச்சுப்பா.”என்று ஆதி கத்த….. அபினவ் ஒன்றும் சொல்லாமல் தலை தொங்கியவாறே நின்றான் பின் சாரி ஆதி என்றான்.அதிலே ஆதி வெறித்த பார்வை பார்த்தவாறே இருக்க…..
“என் விச்சுப்பாவ யாரோ யாரோ.”என்று ஆதி புலம்ப…..
“அது உன் பெரியப்பா அன்ட் உன் அத்த பேமிலி தான்.”என்றான் அபினவ்..
அதில் அதிர்ந்தவன் அவனை நிமிர்ந்து பார்க்க….. தன் கையில் இருந்த ஒரு போனை ஆதியிடம் அவன் நீட்ட….. அதனை வாங்கியவன் அதில் இருந்த ஒரு வீடியோவை பார்த்தான்..
அது விஷ்ணு இன்று காலை ஆதியை அழைக்க வீட்டில் இருந்து கிளம்பும் போது எடுத்த வீடியோ. அதை விஷ்ணு தான் எடுத்திருக்கிறார். அதில் விஷ்ணு.. தன் அண்ணன், அவர்கள் மனைவி, தங்கை அவள் கணவன் அனைவரும் தனக்கு செய்த துரோகம்.. உன் அம்மாவின் பேரை கெட்டதாக மாற்றி அவளை கொன்றுவிட்டார்கள் என்பது முதல் அனைத்தையும் அதில் கூறியிருந்தார்..
“இத ஏன் இப்போ நா ரெக்கார்ட் பண்றேனா.. என் பையங்கிட்ட இத சொல்ற அளவு டைம் தரமாட்டாங்க அவங்கனு எனக்கு தோணுது. அதான்.. ஆதி ஐ லவ் யூ டா.. கண்ணா.. அனிஷாவ பார்த்துக்கோ அவங்க யாரையும் நம்பாதப்பா…”என்று அந்த வீடியோ முடிந்திருந்தது..
அதனை பார்த்த ஆதி கண்கள் நெருப்பாக கொதித்தது. தன் தந்தை தன் விச்சுப்பாவை கொன்றவர்களை இப்போதே சாகடிக்க வெறி வந்தது எதிரில் நின்றவனை பார்த்தவன்
“இந்த வீடியோ உங்க கிட்ட…..”என்று ஆதி தொண்டை அடைக்க கேட்க…
“ம்ம்ம். நேத்து உங்க அப்பா என்னை பார்க்க எஸ்பி ஆபிஸ் வந்துருக்காரு ஆனா அப்போ நா அங்க இல்ல… ஒரு கேஸ் விஸ்யமா வெளில போய்ட்டேன்.அப்போ தான் உன் அப்பா என் நம்பர வாங்கிட்டு போய் இருக்காரு. இன்னிக்கி காலையில எனக்கு இந்த வீடியோவ உங்க அப்பா எனக்கு அனுப்பி வச்சாரு. இத பார்த்த உடனே நா உங்க அப்பாக்கு போன் பண்ணேன் பட் கால் போல… அப்புறம் தான் எனக்கு நியூஸ் தெரிஞ்சிது ஐ ம் சாரி ஆதித்”என்றான் அபினவ்
அதனை கேட்ட ஆதி கண்கள் கலங்க அவனையே பார்க்க….
“அப்புறம் இன்னொரு விஷ்யம்.”என்ற அபினவ் சொன்ன செய்தியை கேட்டு ஆதியின் உடல் இறுகி போனது..
“இத மட்டும் நீங்க பண்ணுனா நாம அவங்கள கூண்டோட பிடிக்கலாம்.”என்றான் அபினவ்
அதை பற்றி யோசித்த ஆதி.. சரி என்று ஒத்துக்கொண்டான்.
அதான் இந்த இரண்டு வருடம் பைத்தியம் எங்கிற வேஷம்..
(வருவாள்)
அத்தியாயம்-37
அனைவரும் குரல் வந்த பக்கம் அதிர்ச்சியுடன் திரும்ப…. அங்கு அதிர்ச்சியான முகத்துடன் குணாலும், மிரண்ட பார்வையுடன் மதுராவும் நின்றிருந்தனர்..
ஆம்.. குணால் தன் மார்க்கெட்டிங் வேலையை முடித்துக்கொண்டு பூனேவில் இருந்து வந்தவன் அப்போது தான் தன் மனைவியை தன் மாமன் வீட்டில் விட்டு வந்தது நினைவில் வந்து உடனே கிளம்பிவிட்டான் ஆனால் அவன் வீட்டிற்கு வர மணி 3 தொட்டதும் தயங்கியவாறே தான் தன் மாமா வீட்டிற்கு வந்தான்
அப்போது தான் மதுரா.. தன் அழும் குழந்தைக்கு பால் கொடுத்துவிட்டு. வீட்டின் அனைத்து கதவுகளும் மூடி இருக்கிறதா என்று பார்க்க வெளியில் வந்தவர். பால்கனி வழியாக வெளியில் குணால் நிற்பதை பார்த்தவள்.. கீழே ஓடினாள்..
வீட்டின் வாசல் வரை வந்த குணால் அதன் பின் யாரையும் எழுப்ப மனம் இல்லாமல் அப்படியே கேட்டின் வாயிலில் நிற்க……அப்போது தான் மதுரா அவரை பார்த்தது.
“என்ன அண்ணா.. இங்க நிற்கிறீங்க… பெல் அடிச்சிருக்க வேண்டியது தானே..”என்றாள் மதுரா
அதில் அதிர்ந்தவர்.”என்னமா நீ இன்னும் தூங்கலையா..”என்றார்
“இல்லணா தூங்கிட்டு தான் இருந்தேன்…பாப்பா முழிச்சா சரி தூங்க வச்சிட்டு பால்கனி பக்கம் போனேன் அப்போதா நீங்க நிற்கிறத பார்த்தேன்…”என்றாள் மதுரா
அதில் புன்னகைத்தவர்..”அது வேலை முடிஞ்சிட்டு மா அதான் உடனே கிளம்பி வந்துட்டேன்.. அங்க வீட்டுக்கு தான் போனேன். ஆனா ரூபாவ பாக்கனும் போல இருந்துது. அதான் உடனே யோசிக்காம இங்க கிளம்பி வந்துட்டேன்.. வந்ததுக்கு அப்புறம் தான் இந்நேரம் வந்ததே எனக்கு நியாபகம் வந்தது. ரூபாவே பாவம் இப்போதான் தூங்கிருப்பா. அவளுக்கு வேற மசக்கை வாந்தி முடிலனு போன்ல சொல்லிட்டு இருந்தா. உன்னையும் எழுப்ப முடியாதே பாவம் நீயே 6நாள் குழந்தைய வச்சிட்டு கஷ்டப்படுற….. விஷ்ணு பாவம் ஆபிஸ்ல ஒரே வேலையில இருந்துட்டு டையர்ட்ல தூங்கிட்டு இருப்பான்.. வேற யாரையும் இங்க எனக்கு எழுப்ப பிடிக்கல அதான் இன்னும் கொஞ்ச நேரம் தானே யாராவது எழுந்து வெளில வர போறாங்க…. அதுவர வைட் பண்ணுவோனு இங்க நின்னிட்டு இருந்தேன்..”என்றார் குணால் நீண்ட விளக்கத்தை கொடுத்தவாறே.
குணால் அவர் வீட்டிற்கு ஒரே பிள்ளை.. கூட பிறந்தவர்கள் யாரும் இல்லாத காரணத்தால் மதுரா அவனை முதன் முதலில் அண்ணா என்று அழைத்தது அவனுக்கு மிகவும் பிடித்து போனது. அது மட்டும் இல்லாமல் மதுராவின் மென்மையான குணம் அவனுக்கு பிடிக்கும்.. அதனால் மதுராவிடம் நல்ல அன்புடன் பேசுவான்
“அதுக்கு என்னண்ணா. காலிங் பெல் அடிச்சா நா வந்து திறக்க போறேன்.. சரி வாங்கண்ணா…’என்றவள் அந்த வீட்டின் பெரிய வாசல் கேட்டினை திறந்துவிட்டாள் இருவரும் மறுபடி கதவை பூட்டிவிட்டு உள்ளே செல்ல தோட்டத்தை கடந்து செல்ல….. அப்போது தான் யாரோ அனத்தும் சத்தம் கேட்டது. அதை கேட்ட மதுரா ஒரு நிமிடம் அப்படியே நின்றுவிட….. அதை கண்ட குணால்..
“என்னாச்சிமா…”என்றார்
“ஒன்னும் இல்லணா.. போலாம்…”என்று மதுரா குழம்பிய மனதுடன் செல்ல….. அவள் பின்னால் குணாலும் சென்றான்.. பின் திரும்ப அந்த சத்தம் இப்போது குணாலுக்கு கேட்க…
“எதோ சத்தம் கேட்குதுல மா.”என்றார் சுற்றி முற்றி பார்த்தவாறே,..
“ஆமாணா எனக்கும் கேட்குது,..”என்ற மதுரா அவளும் சுற்றி முற்றி பார்க்க….. அப்போது தான் அந்த வீட்டில் வேலை செய்பவர்களுக்கு என்று தனியாக கட்டிக்கொடுக்கப்பட்ட குவார்ட்டஸில் இருந்து சத்தம் வருவது பார்த்து
“அந்த வீட்ல இருந்து தான் சத்தம் வருது மதுரா.”என்றார் குணால் கை நீட்டி
“ஆமாணா.. ஆனா அந்த வீட்டில யாரும் இல்லையே அதோட சாவி உள்ளதானே இருக்கு.”என்றாள் மதுரா குழம்பிய முகத்துடன்..
“என்னமா சொல்ற….. பூட்ன வீட்ல இருந்து எப்டி சத்தம் வரும்..:”என்றவன்..”ஒருவேளை திருடனா இருக்க வாய்ப்பு இருக்குமா.. நா போய் பாக்குறேன். நீ போய் யாராவது எழுந்துட்டாங்களானு பாரு.”என்றார் குணால்
அதை கேட்ட மதுரா.”இல்லனா நீங்க தனியா போக வேணாம் நானும் வரேன்.”என்றவர் குணால் மறுத்து பேசுவத்ற்குள் அந்த குவார்ட்டஸை நெருங்கி இருந்தாள்.. குணாலும் அவளுடன் சென்று கதவை பார்க்க….. அது வெளியில் பூட்டாமல் இருந்தது. அதனை திறக்க மதுரா முயல…. ஆனால் அது உள்ளே பூட்டப்பட்டு இருந்தது.
குணாலும் ஒரு முறை முயன்றுவிட்டு.. பின் வேறு ஏதேனும் வழி இருக்கிறதா என்று சுத்திமுற்றி பார்த்தவர் கண்களில் விழுந்தது அந்த ஜன்னல் குணால் அதன் அருகில் போக…. அவன் பின்னால் மதுராவும் சென்று ஜன்னல் வழியாக இருவரும் பார்க்க…. அங்கு நடப்பதை பார்த்த இருவரும் அதிர்ந்து போய்விட்டனர்.
அப்போது தான் பூனம். மாதவியை பலமாக தாக்கிக்கொண்டு இருக்கும் காட்சி இருவருக்கும் தெரிந்தது. அதை தொடர்ந்து அஜய்,அபூர்வா,ரியா,மித்ரன்,பரத் அனைவரும் ஒன்று சேர்ந்து அங்கு பேசியது. பின் அனைவரும் மாதவியை ஒரே நேரத்தில் கட்டையால் அடித்து சாகடிக்கும் காட்சியை பார்த்து தான் குணால்
“அடப்பாவிங்களா..”என்றான் சத்தமாக….. அவன் அருகில் மதுரா கண்களில் மிரட்சியுடன் நின்றுக்கொண்டு இருந்தாள். இதுவரை அவள் இது போல ஒன்றை கற்பனை கூட செய்து பார்த்தது இல்லை.. தன் வீட்டில் இருப்பவர்கள் தன்னை வேலை வாங்கி பழகியவர்கள் தான் என்று மட்டும் தான் இதுவரை அவள் நினைத்திருக்கிறாள். ஆனால் அவர்கள் இன்று ஒரு கொலையையே அசால்ட்டாக செய்கின்றனர் என்பது அவளுக்கு பெரும் அதிர்ச்சியை தந்தது..
இவர்கள் இருவரும் பார்த்ததை அனைவரும் பார்த்துவிட்டு அதிர்ந்தே போனார்கள்.. அவர்களின் அதிர்ச்சியே இதனை அவர்கல் எதிர்ப்பார்க்கவில்லை என்பது குணாலுக்கு தெரிந்தது.
குணால் அவசரமாக உள்ளே வந்தவன் கீழே ரெத்த வெள்ளத்தில் கிடக்கும் மாதவியின் மூக்கில் கை வைத்து பார்க்க….. மாதவி ஏற்கனவே இறந்தது தெரிந்த குணால் அங்கு நிற்பவர்களை பார்த்து கொலைவெறியில் எழுந்தான்.
“பாவிங்களா.. நீங்களா மனுசங்க தானே. இப்டி அநியாயமா ஒரு அப்பாவி பொண்ண கொன்னுட்டீங்களே டா…”என்றான் பரத்
அதில் அதிர்ந்த மதுரா..”என்னணா சொல்றீங்க…..”என்றார் அந்த பெண்ணையே பார்த்து அழுதவாறே
“ஆமா மா கொன்னுட்டானுங்க இந்த மிருகங்கள்..”என்றார் அவர்
அதில் கோவமான மதுரா.”ஒரு அப்பாவி பொண்ண கொல்ல உங்களுக்கு எப்டி மனசு வந்துது இத இப்போவே எல்லார்ட்டையும் சொல்லி உங்கள எல்லாம் என்ன செய்றேன் பாருங்க….”என்றாள் மதுரா ஏனெனில் அவளுக்கு மாதவியை பார்க்க….. தான் ஏழ்மையாக இருக்கும் போது பார்த்தது போலவே இருந்தது. அதும் அந்த பெண் மதுராவை விட சிறியவளாக தான் தோன்றினாள்
அதனாலே மதுராவிற்கு அவர்கள் மீது கோவம் கொந்தளித்தது..
அதை கேட்ட பரத் மதுராவை முறைத்தவாறே..”அபூர்வா கதவ சாத்து இங்க இருந்து இவங்க ரெண்டு பேரும் உயிரோடையே போக கூடாது..”என்று கத்தினான்
அதை கேட்ட குணால் அதிர்ந்து போனவன்…”மா மதுரா இங்க இருந்து ஓடிடு.”என்று கத்த…..
அதில் அதிர்ந்த மதுரா கதவை நோக்கி ஓட….. அவளை மித்ரன் பிடிக்க போனான். ஆனால் அதற்குள் குணால் அவனை பிடிக்க ஓட…. பரத் இருந்த கோவத்திற்கு பக்கத்தில் இருந்த இறும்பு ராடை கொண்டு குணாலின் தலையில் பலமாக தாக்கினான்
அதில் வலி தாங்க முடியாத குணால்..”ஆஆஆ….”என்று கத்தியவாறே கீழே விழ…..
அவனின் சத்தத்தை கேட்ட மதுரா திரும்பியவாறே”அண்ணா..”என்று கத்தியவாறே குணால் அருகில் மதுரா ஓட….. குணால் அருகில் போக விடாமல் அவளைபிடித்த மித்ரன் அவளை சுவற்றை நோக்கி அடிக்க….. அதில் சுவற்றில் பலமாக மோதியவள் அப்படியே கீழே விழுந்தாள்.. மதுராவிற்கு தலை ஒரே வலி தாங்க முடியவில்லை.. மெதுவாக தன் கைகளால் தலையை தொட்டு பார்த்தவள் அதிர்ந்தாள்.அவள் தலை முழுதும் ரத்தம் வழிந்தது
குணாலை இரும்பு ராடால் அடித்ததால் அவனால் வலி பொருக்க முடியவில்லை. அந்த வலியிலும் மதுராவின் அனத்தும் சத்தம் கேட்டு கொஞ்சமாக கண் திறந்து இதனை பார்த்த குணால்.. “மதுரா.. அவள விடுங்கடா..”என்று குரல் வராத குரலில் கத்தினான்.. அவன் தலையில் இருந்தும் ரத்தம் ஆறாக ஓடியது..
“என்னணா இது மாமாவ ஏன் அடிச்ச……”என்றாள் அபூர்வா
“ஏய் அபூர்வா உனக்கு என்ன லூசா இங்க நடந்தது எல்லாத்தையும் இவங்க ரெண்டு பேரும் பார்த்துட்டாங்க… அதுனால இவங்க இனி உயிரோட இருந்தா நமக்கு தான் ஆபத்து..”என்றாள் பூனம்
“ஆமா ஆமா.. பின்ன நம்ம ஜெயில கம்பி எண்ண வேண்டியது தான்..”என்றாள் ரியா
“ஆமா.. அபூ. அவங்க செஞ்சது சரிதான். இல்லனா நாம கூண்டோடோ கைலாசம் போக வேண்டியது தான்.”என்றார் மித்ரன்
அதை கேட்ட அபூர்வா குணாலையும், மதுராவையும் பார்க்க இருவரும் அதிக ரத்தம் போனதில் மயங்கும் நிலையில் கிடந்தனர்..
“விக்னேஷ் இவங்க ரெண்டு பேரையும் நீயே முடிச்சிடு “என்றாள் அபூர்வா
அதை கேட்டவன் தலை ஆட்டியபடி முதலில் குணால் அருகில் சென்றான்.. இதனை மயக்கத்திலே உணர்ந்த மதுரா..”அண்ணாவ விடுங்க….”என்று கத்த முயற்சி செய்தாள். ஆனால் பாவம் அவள் வாயில் இருந்து வார்த்தை வரவில்லை
விக்னேஷோ.. கையில் இருக்கும் இறும்பு ராடால் அவன் தலையில் இன்னும் ஓங்கி அடிக்க….. அதில் குணால்.ஹக். என்ற சத்தத்துடன் தன் உயிரை பறிக்கொடுத்தார்
அதை பார்த்த அனைவரின் முகத்திலும் ஒரு திருப்தி. மதுரா அதை பார்த்து அந்த மயக்கத்திலும் அழுகை வந்தது.
“அவள நா முடிக்கிறேன்.. எப்போதும் இவ தான் நல்ல மருமகனு பேர் வாங்குவாளே இவ வந்ததுல இருந்து தான் என் அப்பா இவ பேச்ச கேட்டு ஆட ஆரம்பிச்சிட்டாரு இன்னும் கொஞ்சம் விட்டுருந்தோம் இந்த வீடு சொத்து எல்லாத்தையும் அவ பேருல வாங்கிருப்பா…அதுனால இவள நா தான் கொல்லனும்…”என்றவாறே அவள் அருகில் நெருங்கிய ரியா. அவளை பார்த்து இகழ்ச்சியாக ஒரு புன்னகையை சிந்திய ரியா…மதுராவை விக்னேஷை தூக்க சொல்லியவள்… தன் கையில் இருந்த கத்தியால் மதுராவின் வயிற்றில் ஓங்கி ஒரு குத்து குத்தினார்..
அதில் மதுரா துடிதுடித்து இறந்து போனார் பாவம் அவரை 6நாட்களே ஆன பச்சிளம் குழந்தைக்கு தாய் என்று கூட யாரும் நினைத்து கூட பார்க்கவில்லை.
“பூனம் இப்போ இவங்க பாடிய என்ன பண்றது..”என்றான் பரத்
“ம்ம். குணால் பாடிய விக்னேஷ் போய் ரயிவே ட்ராக்ல போட்டு வந்துடு ஆக்ஸிடன்ட்ல செத்தவன் மாதிரி ஆகிடும்…”என்றாள் பூனம்
விக்னேஷ் அதுக்கு சரி என்று தலை ஆட்ட…..
“அப்போ இவளுங்க ரெண்டு பேரையும்.”என்றாள் ரியா
மதுராவை குரோதமாக பார்த்த அபூர்வா.”இவ எப்டி இந்த வீட்ல நல்ல பேர் வாங்குனாளோ அதுக்கு எதிரா எல்லாரும் இவ பேர கேட்டா காறிதுப்பனும்..”என்றார் அபூர்வா
அதை கேட்ட பூனத்தின் மனதில் ஒரு திட்டம் உதிர்த்தது அதனை அனைவரிடமும் கூறியவள்.. விக்னேஷை ஆள் அடையாளம் தெரியாத அளவிற்கு மாறுவேடத்தில் வர வைத்து அவனுடன் தாங்கள் காசு கொடுத்து ஒருத்தியை கூப்பிட்டு வந்து யாருக்கும் தெரியாமல் தலையில் முக்காடு போட்டுக்கொண்டு. வீட்டின் வாசலிற்கு ஓடுவது போல் நடந்து.. உடனே மாறுவேடத்தில் வந்திருந்த விக்னேஷின் பைக்கில் ஏறி போவது போல் செட் செய்தவர்கள்.. அதனை அனைவரிடமும் காட்டி மதுரா வீட்டை விட்டு யாருடனோ ஓடிவிட்டாள் என்று கூறிவிட்டனர்
பின் மதுராவின் உடலை அனைவரும் சேர்ந்து அவர்களின் அதே வீட்டின் தோட்டத்தில் புதைத்தனர்…அவளுடன் சேர்த்து மாதவியின் உடலையும் தான்.
அதனால் தான் இவ்வளவு வருடாம அந்த பக்கம் யாரையும் விடாமல் இருந்தவர்கள். இன்று ஆஸ்வதியிடம் தாத்தா குடில் அமைக்க ஆள் வருகிறார்கள் என்பதை சொன்னதும் கோவத்தில் பயத்தில் மதுராவின் உடலும் மாதவியின் உடலும்.. எதும் மாட்டிவிடுமோ என்று தான் அபூர்வாவும் ரியாவும் ஆஸ்வதியை கத்தியது..
அதை தான் இப்போது ரியா அனைவரின் முன்னாலும் சொல்லிக்கொண்டு இருந்தார்.
ஏனென்றால் அவர் தலையில் கன்னை வைத்து அவரை பேச வைத்துக்கொண்டு இருந்தது ஒரு கை.. கம்பீரமான கை..
(வருவாள்..)
Newer Posts