
Tag:
ப்ரியா பாண்டு நாவல்ஸ்
அத்தியாயம்-36
“இல்லப்பா.. அது அவரா இருக்காதுப்பா.. குணாலா இருக்காதுப்பா நா சொல்றத கேளுங்கப்பா.. அவர் இன்னும் பூனேல தான்ப்பா இருப்பாரு.”என்று ரூபாவதி கத்த….. அதில் அந்த வீடே அதிர்ந்துவிட்டது.
போலீஸ் ஸ்டேஷனில் இருந்து அழைப்பு வரவும்.. பெரியவரும், விஷ்ணுவும் தான் நேராக அடையாளம் காட்ட சென்றனர் அவர்கள் கேட்டது உண்மை என்பது போல அங்கு பிணமாக இருந்தது குணால் தான்.. அதனை பார்த்த இருவரும் கலங்கி போய் விட்டனர்
பெரும்பாலும் குணால் ட்ரைனில் தான் தன் பயணத்தை வைத்துக்கொள்வான்.. அதனால் இது ட்ரைனில் வரும் போது தான் விபத்து ஏற்பட்டுவிட்டது என்று போலீஸ் கேஸை முடித்தது..
அதை தன் தந்தை சொல்லி கேட்ட ரூபாவதி அதிர்ந்து போய்விட்டார்.
“அய்யோ குணால்.. குழந்தை வேணும் வேணும்னு நினைக்கும் போதுலாம் குழந்தை இல்லையே. இப்போ குழந்தை வரும் போது நீங்க இல்லையே.”என்று அவர் கதறிய கதறல் அந்த வீடே அதிர்ந்தது.. பார்ப்போரின் மனதை கலங்க வைத்தது
இப்படியாக நாட்கள் போக… அந்த வீடே எப்போதும் சோகத்தில் தத்தளித்தது. அதும் ஒரு சிலருக்கு தான்.. பாதிப்பேருக்கு ஆனந்தமாக நாட்கள் ஓடியது..
ஆதியும் தாய் இல்லாமல் கொஞ்ச நாள் தேட ஆரம்பித்தவன்.. பின் தன் தந்தை காட்டிய அன்பில் தாயை மறந்தே போனான்..அனிஷா சிறு குழந்தை என்பதால் அவளை பார்த்துக்கொள்ள ஒரு நானியை வைத்து பார்த்துக்கொண்டார் விஷ்ணு தன் தந்தையை தவிற வேற யாருடனும் ஆதியை அவர் நெருங்கவிடவில்லை.. பின் ரூபாவதிக்கு அஞ்சலி பிறந்தாள்
இப்படியாக நாட்கள் ஓட… ஆதியும் நன்றாக ஸ்கூல் முடித்தான் அப்போது தான் அவனுடன் விதுனும் சேர்ந்துக்கொண்டான்.. பின் இருவரும் காலேஜ் படிக்க பிரிய அப்போது தான் ஆதி ஆஸ்வதியை பார்த்தது காதலித்தது அனைத்தும்..
பின் ஆதி பாரின் போக… விஷ்ணு தான் தன் மகனை பிரிய அவதிப்பட்டார்.. ஆனால் சர்மா தான் விடாபிடியாக ஆதியை பாரின் அனுப்பி வைத்தார்.. ஏனென்றால் கொஞ்ச நாளாக வீட்டில் உள்ளவர்களின் மேல் தாத்தாவிற்கு நம்பிக்கை இல்லை
ஏனென்றால் அவர் தன்னிடம் வேலைப்பார்த்த கார் ட்ரைவர் ஒருவரை ஒரு சமயம் வெளியில் பார்த்தார் அதும் தன்னுடைய பிஸ்னஸ் பார்ட்டியில் அதும் பணக்காரனாக… அதில் தாத்தா அதிர்ந்து போய் அவனை நிறுத்தி பேச்சிக்கொடுக்க…
“சார் உங்களால தான் நா இந்த அளவுக்கு உயர்ந்துருக்கேன்.. ஹான் உங்களால இல்ல… உங்க வீட்ல உள்ளவங்களால… ஹான் ஆமா ஆமா அப்டிதான் சொல்லனும். தெய்வம் சார் அவங்க…..”என்று உள்ளே போன போதையில் அவன் ஏதோ உளற…. அவனை அடுத்த நாள் ஆட்கள் கொண்டு தேட அவனோ ஆள் தலை மறைவாகிவிட்டான்.
தாத்தாவிற்கு தன் வீட்டின் ஆட்கள் மீதே சந்தேகம் வந்தது அதும் தன் பிள்ளைகள் மேல் தான்.
அதனால் உடனே தாத்தா ஆதியை வெளிநாட்டிற்கு அனுப்பி வைத்துவிட்டார் அனிஷாவிற்கு எப்போதும் கூடவே ஒரு ஆள் பாதுகாப்பிற்கு ஆள் நியமித்தார்.. அது தான் வினிஜா
இங்கு நடப்பது எல்லாம் வினிஜா.. தாத்தா இல்லாத நேரத்தில் அவருக்கு அழைத்து உடனே கூறிவிடுவார். முதலில் ஆஸ்வதி அந்த வீட்டிற்கு வந்ததும் வினிஜா அவளையும் சந்தேகமாக தான் பார்த்தார் ஆனால் போக போக அவளின் குணம் அறிந்து அவளை பிடிக்க ஆரம்பித்துவிட்டது..
இப்போது ஆதி அனைத்தையும் நினைத்து பார்த்தவன்..
“ஏன் இப்டி பண்ணிங்க….”என்றான் அபூர்வாவையும், ரியாவையும் பார்த்தவாறே. இல்லை முறைத்தவாறே..
“என்ன ஆதி என்ன சொல்ற….. எத சொல்ற…. எங்களுக்கு எதும் புரில……”என்றார் ரியா முழித்தவாறே..
“ஹாஹாஹ்ஹா..”என்று அந்த வீடே அதிர சிரித்த ஆதியின் கண்கள் கலங்கி போய் இருக்க…. அவன் உடல் நடுங்கிக்கொண்டு இருப்பதை பார்த்த ஆஸ்வதி அவன் அருகில் ஓடி வந்து
“ஆதி.”என்று அவன் கையை இறுக்க பற்றிக்கொண்டாள் ஆதி ஆஸ்வதியின் கையை அழுத்திப்பிடித்தவாறே. தன் கண்களை ஆஸ்வதியின் புடவையில் துடைத்துக்கொண்டு..
“எ…. என் அம்மா என் அப்.பா..ஏன் ஏன் கொன்னீங்க….”என்று அந்த வீடே அதிர ஆதி கத்த….
அதில் அங்கிருக்கும் அனைவரும் அதிர்ந்து போனார்கள். ரியாவும், அபூர்வாவும் நடுங்கி போனார்கள்.. இவ்வளவு வருடம் காத்துவந்த ரகசியம்.. அந்த ரகசியம் வாங்கிய உயிர் பலி.. அதையும் தாண்டி வெளிவந்துவிட்டதே எப்படி.. என்று தான் இருவரின் மனதிலும் ஓடியது
“என்ன இவ்வளவு வருஷம் காத்துட்டு வந்த ரகசியம் எப்டி வெளில வந்துதுனு யோசிக்கிறீங்களா..”என்று ஒரு குரல் வர
அனைவரும் குரல் வந்த திசையில் பார்க்க அங்கு கம்பீரமாக நடந்து வந்தார் பெரியவர் அதனை கண்ட அபூர்வா மிரண்டே போனார்..
பெரியவர் நடந்து வந்தவர் நேராக போய் தன் மகள் அபூர்வா எதிரில் நின்று அவள் கன்னத்தில் ஓங்கி ஒரு அறை விட்டார்.. அதில் அதிர்ந்தவள்
“ப்பா…”என்று ஏதோ சொல்லவர….
“கூப்டாத என்னை அப்டி கூப்டாத…..உன்ன என் பொண்ணுனு நினைக்கவே எனக்கு வெக்கமா இருக்கு. நீ என் பொண்ணும் இல்ல அவனுங்க என் பையனும் இல்ல…. ஏன் நீங்க மனுஷங்களே இல்லை.”என்று கத்தினார் தாத்தா.
“தாத்தா.”என்றாள் ஆஸ்வதி அவர் உடல் நடுங்குவதை பார்த்து.
அதில் தன்னை சமாளித்தவர். இருவரையும் முறைத்துக்கொண்டே
“சொல்லுங்க… ஏன் என் மருமகளையும், என் மருமகனையும், என் பையன் விஷ்ணுவையும் கொன்னீங்க…..”என்றார் கோவமாக….
ஆம் மூவரையும் கொன்றது பரத், அஜய்,ரியா,பூனம், அபூர்வா,மித்ரன் தான். ஆதியின் தந்தை விஷ்ணுவின் கொலையில் மட்டும் ப்ரேமின் பேரும் சேர்ந்திருந்தது
அன்று.. மதுராவிற்கு அனிஷா பிறந்து 6நாட்கள் ஆகிருந்தது.. அன்று தான் மூவரின் வாழ்க்கையும் முடிந்த நாள் ஆம்.. மதுரா, குணால், அதன் பின் பரத்தின் பிஏவாக இருந்த அப்பாவி மாதவி.
மாதவி பரத்திடம் பிஏவாக இருந்தாள்.. பாவம் ஏழை பெண்..அமைதியான குணம் அதே போல அனைவரிடமும் ஏமாறும் குணம் கொண்டவள்.. அவளிடம் யாராவது ஆசையாக பேசினால், வருத்தமாக பேசினால் பாவம் அவளால் அதை தாங்க முடியாத இளகிய மனம் கொண்டவள்
அப்படிதான் அவள் பரத்தின் வலையிலும் சிக்கிக்கொண்டாள்.. ஆம் பரத் அவளின் அமைதியான உடல் அழகு அவனை ஈர்த்தது அவளின் அழகு தனக்கு வேண்டும் என்று அவன் மனம் பேயாட்டம் போட்டது.. அதன் படி அவளை தன் வலையில் சிக்க வைக்க பரத் முயன்றான்..
முதலில் பரத்தை கண்டுக்கொள்ளாதவள் அதன் பின் பரத் கைகளில் இருந்த காயத்தை பார்த்து என்ன ஏது என்று கேட்க ஆரம்பித்தாள். தன் மனைவி தன்னை கொடுமைப்படுத்துவதாகவும்.. தன் திருமண வாழ்க்கை தனக்கு நரகமாகிட்டது என்றும் அவளிடம் கூறி அதன் மூலம் அவளின் ஆதரவை தேடுவது போல் அவளை பயன்படுத்திக்க ஆரம்பித்தான்..
ஆரம்பத்தில் பரத்தின் இந்த முயற்சி பலன் அளிக்காமல் போக… பின் கரைப்பவர் கரைத்தால் கல்லும் கரையும் என்பது போல அவளுக்கும் இவனை பார்க்கும் போது பாவமாக இருக்க…. அவனை ஆதரிக்க ஆரம்பித்தாள்..
எப்போதெல்லாம் அவன் டென்ஷனாகவும், வீட்டை பற்றி புலம்பலாகவும் இருக்கிறானோ அப்போதெல்லாம் அவனுக்கு மாலதி அனைத்துமாக இருந்தாள்.. அப்படி என்றால் தன்னையே அவனுக்கு கொடுத்தாள்.. இதற்கு இடையில் எப்போது என்னை திருமணம் செய்துக்கொள்வீர்கள் என்று வேறு கேட்பாள்.. அவன் தான் இடை இடையில் என் மனைவியை டைவர்ஸ் பண்ணிவிட்டு உன்னை கல்யாணம் செய்தால் என் வாழ்க்கை இன்பமாக இருக்கும் என்று அவளுக்கு ஐஸை தூக்கி வைப்பான்..
அதில் பாவம் அந்த அப்பாவி பெண் உருகிவிடுவாள்.. இப்படியாக இவர்கள் வாழ்க்கை போக….. அப்போது தான் ஒரு மாதம் ஓடிக்கொண்டு இருக்க….. மாதவி கருவுற்றாள் அதில் வந்தது வினை.
மாதவி இதனை அன்று இரவு தான் தெரிந்துக்கொண்டாள்.. அவளுக்கு சந்தோஷம் தாங்கமுடியவில்லை.. இப்போதே இதை பரத்திடம் சொல்ல வேண்டும் என்று தோன்ற… உடனே பரத்திற்கு அழைத்துவிட்டாள்
பரத்தும் போனை எடுத்து என்னவென்று கேட்க….. அவள் சொன்ன செய்தியை கேட்டு அதிர்ந்துவிட்டான் அவன் பேசிக்கொண்டே இருக்க அவன் கையில் இருந்து போனை பிடிங்கிய பூனம் அவள் கூறிய அனைத்தையும் கேட்டு விட்டாள்..
ஆனால் அதனை கேட்டு அவள் அதிரவெல்லாம் இல்லை.. அவளுக்கு தான் காதலிக்கும் போதே பரத்தை பற்றி நன்றாக தெரியுமே அவன் லீலைகளும் தெரியும்.. அவள் பரத்தை முறைக்க…..
அவன்”இப்டி ஆகும்னு நினைக்கல…..”என்றான் தயங்கியவாறே..
அதில் இன்னும் முறைத்தவள்…”உடனே அவள கிளம்பி இங்க வர சொல்லு.”என்றாள்
பரத் அவள் முகத்தை ஏன் என்பது போல் பார்க்க….. அவள் முறைத்த முறையில் பரத் போன் செய்து உடனே வீட்டிற்கு வருமாறு கூறினான்..
அவளும் சரி என்று சந்தோஷமாக தன்னவனை காண வர… பாவம் அவளுக்கு தெரியவில்லை இது தான் அவளின் கடைசி நாள் என்று
அதற்குள் பரத் தன் தம்பி அஜயிடமும், அவன் மனைவி ரியாவிடமும்.. தன் தங்கை அபூர்வாவிடமும், அவள் கணவனிடமும் கூறிவிட்டான்..
அவர்களும் இவனை காண இவன் அறைக்கு வர…. பூனம் தான் யாரையும் கவனிக்காமல் ஏதோ யோசனையிலே சுற்றினார் அப்போது இரவு மூன்று மணி ஆகி இருந்தது
பூனம் அனைவரையும் அழைத்து வீட்டின் பின் பக்கம் இருந்த ஒரு க்வார்ட்டஸின் சாவியை கொடுத்து இங்கு அவளை அழைத்து போகும்படி தன் கணவனிடம் சொன்னவள் மற்றவர்களை தன்னுடன் வைத்துக்கொண்டு அவர்களின் இல்லீகல் வேலைக்கு எல்லாம் உதவும் ட்ரைவர் விக்னேஷை வர வைத்தாள்..
அவன் வந்ததும் சில வேலைகளை சொன்னவள்.. ஜன்னல் வழியாக மாதவி உள்ளே வருவதை பார்த்த பரத் அவளை அப்படியே குவார்ட்டஸ் நோக்கி அழைத்து சென்றான்..
அவளும் தன்னவனின் கரு தன் வயிற்றில் வளர்வதை பெரிதாக நினைத்து அவனுடன் செல்ல… கதவை திறந்த வேகத்திற்கு பரத்தை அணைத்துக்கொண்டாள்..
“பரத் நா இப்போ எவ்வளவு சந்தோஷமா இருக்கேன் தெரியுமா.. நம்ம பாப்பா.. என் வயித்துல……”என்று எதோ பேசிக்கொண்டே போக… அப்போது தான் ஒன்றை அவள் கவனித்தாள். அவள் மட்டும் தான் அவனை அணைத்திருக்கிறாள். அவன் இல்லை என்பதை உணர்ந்தவள் நிமிர்ந்து அவனை பார்க்க…. அவனோ அவளை பார்த்து நக்கலாக ஒரு புன்னகை உதிர்த்தவன்
“இது மாறி குழந்தைகளுக்கு நா அப்பானா. இந்நேரம் நிறைய குழந்தைகளுக்கு நா அப்பனா ஆகிருக்கனும்..”என்றான் நக்கலாக பரத்
அதில் அதிர்ந்த மாதவி.. அவனிடம் இருந்து பிரிந்து..”என்ன சொல்றீங்க பரத் எனக்கு புரில……”என்றாள்.
“நாங்க புரிய வைக்கிறோம்…’என்றவாறெ அங்கு வந்தாள் பூனம். அவளுடன் சேர்ந்து அஜய்,ரியா,அபூர்வா,மித்ரன் அந்த கார் ட்ரைவர் அனைவரும்..
அவர்களை கண்டு மிரண்ட மாதவி. பரத்தின் பின்னால் போய் ஒழிந்துக்கொள்ள… அதை கண்ட பூனம் ஹாஹா என்று பெரிதாக புன்னகைத்தாள்.. அதனை பயத்துடன் பார்த்த மாதவி..
“பரத்.”என்று அவனை கூப்பிட
அவனோ. அவள் கையை தன் தோளில் இருந்து எடுத்து உதறிவிட்டு தன் மனைவி பின்னால் போய் நின்றுக்கொண்டான் அதிலே மாதவி அடிப்பட்ட பார்வை ஒன்றை பரத்தை நோக்கி வீச….
“என்ன இப்டி பாவமா பார்த்தா என்ன அர்த்தம்..”என்றார் ரியா
“ஏன் பரத் என்னை ஏமாத்துனீங்க……”என்றாள் கலங்கிய குரலில்
அதில் புன்னகைத்தவன்..”நா உன்ன ஏமாத்துல….. நீதான் என் பர்ஃபாமன்ஸ்ல ஏமாத்துட்ட……”என்றான் கெத்தாக…
அதை கேட்ட மாதவிக்கு அப்படி ஒரு கோவம் வந்தது.. தன்னை ஏமாத்திவிட்டு எப்படி எல்லாம் பேசுகிறான்.. என்று எண்ணிக்கொண்டவள்.. அவனின் சட்டை காலரை பிடித்திக்கொண்டு
“உன்ன நா சும்மா விடமாட்டேன்.. என்னை ஏமாத்துன உன்ன…..”என்று அதற்கு மேல் பேசமுடியாமல் அவள் வாய் அடைக்கப்பட… அவள் தலையில் ஓங்கி ஒரு போடு போட்டார் பூனம் ஒரு கட்டையால்
அதில் அதிர்ந்த மாதவி வலியில் கத்த முடியாமல் அந்த ட்ரைவர் அவள் வாயை மூடிக்கொள்ள….. அவள் வலியில் அனத்தினாள்.
“என்ன என்னை சும்மா விடமாட்டீயா.. முதல இங்க இருந்து உன்னால உயிரோட போக முடியுமானு பாரு.. அப்புறம் என்னை என்ன பண்லாம்னு பார்க்கலாம்.”என்ற பரத் அவள் வயிற்றிலே காலால் எத்த….. அவள் வலியில் பெரிதாக அனத்தினாள்
“ஏய் விக்னேஷ் அவள அமுக்கி பிடிடா”என்ற அபூர்வா.. அவளின் வயிற்றில் கத்தியை இறக்கினார்…”என் அண்ணனுக்கு மனைவி ஆகனுமோ. இந்த வீட்ல் எப்போதும் எங்க ராஜியம் தான் இருக்கனும்…உன்ன விட்டுடுவோமா..”என்று அபூர்வா திரும்ப குத்த….. அங்கையே மாலதி உயிர் பிரிந்தது.
“அடப்பாவீங்களா…”என்றது ஒரு குரல் ஜன்னல் பக்கம் நின்றாவாறே அது குணால் அவன் அருகில் பயந்த மிரண்ட பார்வையுடன் மதுரா.
(வருவாள்)
அத்தியாயம்-35
சர்மாவிற்கு முதல் மகள் தான் ரூபாவதி அமைதியானவர். யாரையும் எதிர்த்து பேசமாட்டார்.. அவரது குணமே அதுதான்.. அவரை அதனால் யாரும் கூடவே சேர்த்துக்கொள்ள மாட்டார்கள். விஷ்ணு மட்டும் தான் தன் அக்கா என்று அவரை எப்போதும் வெளியில் கூட்டிப்போவது. எதாவது வாங்கி தருவது என்று அவர் மீது பாசமாக இருப்பார்..
விஷ்ணு வாங்கிதருவதை கூட அபூர்வா எப்போதாவது பிடிங்கிக்கொள்வார்.. அதனை கண்டு ரூபாவதி பெரிதாக எடுத்துக்கொள்ள மாட்டார்
ரூபாவதிக்கு மாப்பிள்ளை பார்க்க வேண்டும் என்ற போது தான்.. தன் அண்ணன் மகனை அவளுக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று அவரின் தாயார் கூறி இருப்பார்
ரூபாவதிக்கும் தன் அத்தை மகன் குணாலை மிகவும் பிடிக்கும். அவரது அமைதியான குணம் குணாலுக்கும் மிகவும் பிடிக்கும். எனவே இருவரும் விரும்பியே திருமணம் செய்துக்கொண்டனர்.
ஆனால் குணாலை பரத், அஜய்,அபூர்வாவிற்கு கொஞ்சமும் பிடிக்காது.. குணால் கொஞ்சம் வசதியில் குறைவானவன் தான் ஆனால் குணத்தில் உயர்ந்தவன்
அதனாலே அவனிடம் இருந்து ஒதுங்கி தான் இருப்பார்கள் இந்த மூவரும். ஆனால் விஷ்ணுவிற்கு குணாலை மிகவும் பிடிக்கும்.. எப்போதும் அத்தான் அத்தான் என்று அவன் பின்னாலே தான் விஷ்ணு சுற்றுவான் அவரே தன் அக்காவுக்கு கணவனாய் வந்ததும் விஷ்ணுவிற்கு அவ்வளவு பிடித்தம்..
இப்படியே இவர்கள் வாழ்க்கை சென்றுக்கொண்டு இருக்க….. எந்த இடைஞ்சலும் இல்லாமல் பெரியவர் அடுத்து அடுத்து பிள்ளைகளுக்கு திருமணம் செய்து வைத்தார்..
பரத் தன்னுடன் காலேஜில் படித்த பூனத்தை திருமணம் செய்துக்கொள்வதாக கூற அதனை பெரியவர் ஒத்துக்கொண்டார். அடுத்து அஜய்க்கு பெரியவர் பெண் பார்க்க…. அந்த பெண் ஏழையாக இருக்கிறார் என்று அஜய் திருமணம் செய்ய மறுத்துவிட்டார்.. உடனே பெரியவர் தன் செல்ல மகன் விஷ்ணுவின் முகம் காண…
அவரோ..”நா கல்யாணம் செய்துக்கிறேன்ப்பா. ஆனா அஜய் அண்ணாக்கு மேரேஜ் செஞ்சதும் பண்ணிக்கிறேன்…”என்றார்
அதில் பெரியவரின் மனம் சந்தோஷப்பட்டது.. அதன் பின் அஜய்க்கு பெரியவரின் பாட்னர் மகள் ரியாவை திருமணம் செய்து வைக்க…
அதற்குள் பரத்திற்கு ப்ரேம் பிறந்துவிட்டான் ரூபாவதிக்கோ திருமணம் ஆகி 6ஆன்டுகள் ஆகியும் அவருக்கு குழந்தையே இல்லை.. அதனை பற்றி அவர் எப்போதும் கவலைக்கொள்ள…. குணால் தான் ரூபாவதியை தேற்றுவார்
அடுத்து அஜய்க்கு பார்த்த பெண்…மதுரா.. இவர் மும்பையிலே ஒரு ஏழை குடும்பத்தில் பிறந்தவர். நல்ல அழகானவர்.. ஆனால் அதற்கு மாறாக நல்ல பண்புகளை கொண்டவர்.. இவருக்கு அப்பா மட்டுமே.. அவரும் மிகவும் வயதானவர்.. சர்மா கம்பெனியில் வேலை பார்த்துக்கொண்டு இருந்த இவரது அப்பா திடீர் என்று இறந்துவிட….. அப்போது தான் பெரியவரிடம் வேலை கேட்டு சென்ற மதுராவை மிகவும் பிடித்து போன பெரியவர் தன் மகனுக்கு திருமணம் செய்து வைக்க மதுராவிடம் கேட்க…..
அவர் பணக்காரர்கள் பற்றி அவ்வளவாக நல்ல எண்ணம் இல்லை என்றாலும் தன் அப்பா பெரியவர் பற்றி அடிக்கடி சொல்லிருப்பதை கேட்டவளுக்கு பெரியவரை தட்ட மனம் வரவில்லை..
சரி என்று மதுரா சொன்னதும் அஜய் க்கு அவளை திருமணம் செய்விக்க நினைத்தவர். அவன் முடியாது என்றதும் தன் மகன் விஷ்ணுவிற்கு திருமணம் செய்து வைத்துவிட்டார்.
விஷ்ணுவிற்கு மதுராவை மிகவும் பிடித்துவிட்டது அவளிற்கும் தான் விஷ்ணுவின் அமைதியான குணம் அவளை ஈர்த்தது.. இருவரும் ஒருவரைக்கொருவர் அமைதியான முறையில் காதல் செய்தனர்..இருவரின் காதலின் சின்னமாக பிறந்தான் ஆதித் ஆதித் பிறந்த பின் தான் பரத்திற்கு இஷானா பிறந்தாள்
அஜய் ரியாவிற்கு முதலில் லிசா பிறந்தாள் அதன் பின் தான் விஷால் பிறந்தான்…
அவர்களின் வாழ்க்கை எப்போதும் போல அழகாக அதும் ஆதித்துடன் இன்னும் அழகாக போய்க்கொண்டு இருந்தது அதன் பின் தான் நிலைமையெ மாறிவிட்டது..
அபூர்வாவிற்கும் பெரிய தொழில் அதிபர் மகன் மித்ரனை பெரியவர் திருமணம் செய்து வைக்க…. அபூர்வாவோ தன் மாமியார் வீட்டிற்கு செல்லாமல் ஏழை அண்ணியான மதுராவை வாட்ட ஆரம்பித்தாள்.. அவளுக்கு பிடித்தது தான் அவ்வீட்டில் நடக்க வேண்டும்.. அதும் அதை மதுரா தான் இழுத்து போட்டு செய்ய வேண்டும். அதனை கண்ட பெரியவர் அவர்களிடம் சண்டை போட செல்ல….. ஆனால் விஷ்ணு தான் அதனை பற்றி கேட்கவே கூடாது என்று அவரை கண்டிப்பாக சொல்லிவிட்டான்
“ப்பா. இத பத்தி கேட்டா வீணா வீட்ல பிரச்சனை தான் வரும். அதும் இல்லாம இப்போ அபூர்வா கன்சீவா வேற இருக்கா இத அப்டியே விடுங்க……”என்று விட்டான்
அதனால் அவரும் அமைதியாக இருக்க… பெரியவர் வேறு மற்ற மருமகளை விட மதுராவையே தொட்டதற்கும் கூப்பிட அதில் கடுப்பானவர்கள். மதுராவை இன்னும் வேலை வாங்கினர்.
இப்படியே ஓடிக்கொண்டு இருக்கும் நேரத்தில் தான் மதுரா மறுமுறை கருவுற்றிருக்க… விஷ்ணு இன்னும் மக்ழ்ந்தார்.. ஆதியோ பிறந்ததில் இருந்து தாத்தா இல்லை என்றால் விஷ்ணுவிடம் தான் இருந்தான். அதனால் அவனை வேறு யாராலும் தொட முடியவில்லை..
“ப்பா.. அவன் என் பையன்ப்பா உங்க கிட்டையே இருக்குறத பார்த்து நா அவன மறந்தாலும் மறந்துடுவேன்..”என்று அடிக்கடி மதுரா தன் மாமனாரிடம் சொல்லி சிரிப்பார்.. அவர் தன் மாமனாரை தன் தந்தை போல தான் பார்த்தார்.அதனால் அப்பா என்று தான் அழைப்பார் மதுரா.
“ஹாஹா.. அதுனால என்னமா என் விஷ்ணுவோட பையன் எனக்கு பையன் மாறி தானே.. என் உயிரே இவன் தான்…”என்றிடுவார்
அப்போது தான் ரூபாவதி கிட்ட தட்ட பத்து வருடம் கழித்து கருவுற்றாள் அதனால் மதுரா தான் கர்ப்பமாக இருக்கும் நேரத்திலும் ரூபாவதியை கண்ணில் வைத்து தாங்கினாள்.
ஆதிக்கு 5வயது இருக்கும் போது தான் அனிஷா பிறந்தாள்.. அவள் பிறந்ததும் தான் அனைத்து பிரச்சனையும் பிறந்தது.. அனிஷா பிறந்த 6நாட்களில் மதுரா எங்கோ தொலைந்து போனார்.. அவரை ஊரெல்லாம் தேடி அலைந்தனர் விஷ்ணுவிற்கு. சரமாவிற்கு ஒன்றும் புரியவில்லை
“என்னப்பா விஷ்ணு. மதுரா எங்கதான் போனா.. உங்கிட்ட எங்கையும் சொல்லிட்டு போலையா…”என்றார் பெரியவர்
“இல்லப்பா நா நைட் படுக்குறப்போ அவ ரூம்ல தான் இருந்தா.. நா அவள பார்த்துட்டு பாப்பாவ கொஞ்சிட்டு தான் படுத்தேன்.. இப்போ காலையில நா எழுந்து பார்த்தா பக்கத்துல அவ இல்லை சரி கீழ வேலையா இருப்பா. நாம ஆபிஸ் போறதுக்கு கிளம்பலாம்னு உள்ள போனேன். ஆனா திரும்பி வரும் போது அவ இங்க இல்ல….. குழந்தை மட்டும் தூங்கிட்டு இருந்தா.. ஆதியும் தூங்கிட்டு இருந்தான்.. அவன எழுப்பி கேட்டா இங்க தானே இருந்தாங்க அப்டினு சொல்றான்.”என்றார் விஷ்ணு பதறியவாறே.
“என்னப்பா இது ஆச்சரியமா இருக்கே.”என்று அவர்கள் பேசிக்கொண்டு இருக்க…..
“ஒரு ஆச்சரியமும் இல்ல….. இங்க பாருங்க இத பார்த்தா உங்களுக்கு தெரியும்…”என்று ஒரு கடிதத்தை அபூர்வா அவரிடம் காட்ட…..
அதை சந்தேகமாக வாங்கிய பெரியவர் படித்தார்.”எனக்கு இந்த வாழ்க்கையில் கொஞ்சமும் விருப்பம் இல்லை.. எனக்கு வேறு ஒருவரை பிடித்திருப்பதால் அவருடன் செல்கிறேன் அவரின் ஆசைக்கு பிறந்த குழந்தைகள் அவரிடமே வளரட்டும்” இப்படிக்கு மதுரா என்று எழுதி இருந்தது
அதை கேட்ட விஷ்ணு அதிர்ந்து போய் விட்டார் என்றால் பெரியவர் தலையில் இடி விழுந்தது போல் சமைந்து நின்றுவிட்டார்
“என்னடா விஷ்ணு இது…”என்று பரத் கத்த….
“அப்போவே சொன்னென் இவ குடும்பத்துக்கு ஏத்தவளா தெரிலனு. உங்க அப்பா தான் ஏழை வீட்டு பொண்ணு. புரிஞ்சி நடந்துப்பா. குடும்பத்த பாத்து நடத்துவானு சொன்னாரு.. இப்போ ஓரடியா அசிங்கப்படுத்திட்டு போய்ட்டா.”என்றார் பூனம்.
அதை கேட்ட பெரியவர்..”பூனம் பாத்து பேசு என் மருமக அப்டி பட்டவ இல்ல…. இதுல வேற எதோ இருக்கு..”என்றார் அவர்களை சந்தேகமாக பார்த்தவாறே..
“அதானே உன் அப்பா நம்மள நம்பிட்டாலும்…அவருக்கு அவரோட 3பையனும் அவரு மனைவியும் குழந்தைகளும் தான் முக்கியம்…”என்றான் மித்ரன் அபூர்வாவை முறைத்தவாறே
“ஆமாப்பா உங்களுக்கு நாங்க தானே பிள்ளைங்க….. நாங்களே சொல்றோம் அவ கொஞ்ச நாளாவே சரி இல்ல….. விஷ்ணு அண்ணா அறையில் உள்ள பால்கனியில நின்னுட்டு யாரையோ ரொம்ப நேரமா பார்த்துட்டே இருக்கா இத நா முன்னாடியே சொல்ல வந்தேன். ஆனா நீங்க தான் எங்கள நம்பவே மாட்டீங்களே.”என்றார் அபூர்வா தன் தந்தையை முறைத்தவாறே
“இல்ல இது எதுமே உண்மை இல்ல….. மதுராவும் நானும் விரும்பி தான் எங்க வாழ்க்கைய வாழ்ந்தோம். அவ அப்டி பட்டவ இல்ல….”என்றார் விஷ்ணு அமைதியாக அதே நேரம் அழுத்தமாக…
“ம்ச். அப்போ இத நம்புறியா விஷ்ணு நீ..”என்றவாறே அங்கு வந்தான் அஜய்
அனைவரும் அவனையே பார்க்க… தன் கையில் இருக்கும் லேப்டாப்பை ஆன் செய்து அதில் ஒரு வீடியோவை ஓட விட்டார். அது அந்த வீட்டின் சிசிடிவி கேமிராவின் காட்சிகள் அதில் மதுரா அவசரமாக தன் புடவையின் தலைப்பை கொண்டு தலை முகத்தை மூடிக்கொண்டு. விறுவிறுவென வீட்டின் வாயிலை தாண்டி.. கொஞ்ச தூரத்தில் நின்ற பைக்கில் ஏறி சென்றுவிட்டார்.
இதனை கண்ட அனைவரும் ஒரு நிமிடம் ஸ்தம்பித்து போனார்கள்.. ஏன் தாத்தாவே தான் தவறு செய்துவிட்டோமோ.. என்று தான் அவருக்கு தோன்றியது.. ஆனால் இதில் பாதிக்கப்பட்ட விஷ்ணுவோ.. அப்படியே அமைதியாக நின்றவன் தன்னை சமாளித்தவாறே.
“இனி யாரும் இந்த வீட்ல மதுராவ பத்தி பேசக்கூடாது. என் பிள்ளைங்கள இனி நானே வளர்த்துப்பேன்.. முக்கியமானது என்னனா என் பிள்ளைங்க கிட்ட அவங்க அம்மா பத்தி யாரும் பேசவே கூடாது..”என்றவன் விறுவிறுவென உள்ளே சென்றுவிட்டான்..
இதை கேட்ட தாத்தா மனம் உடைந்து போனார்.. தன் மகனின் வாழ்க்கையை நானே கெடுத்து விட்டேனோ. என்று கூட நினைத்தார்.. விஷ்ணுவிடம் இதைப்பற்றி பேச பயந்தார்..
ஆனால் அதன் பின் விஷ்ணுவோ மதுராவை பற்றி பேச யாரையும் விடவே இல்லை
அதன் பின் தான் ரூபாவதி தன் கணவன் குணாலை காணவில்லை என்று தன் தந்தையிடம் கூறினாள்.. அவள் ஒரு வாரமாக குணால் வீட்டிற்கு வரவில்லை.. என்றே தன் தந்தையிடம் கூறினார்
ஏனென்றால் குணால் ஒரு மார்க்கெட்டிங் ஆபிஸில் வேலைப்பார்க்கிறான்.. அவனுக்கு ஒரு வாரம் இல்ல பத்து நாள் பூனேயில் வேலை இருக்கும். அப்போது எல்லாம் ரூபாவதியை அவள் தந்தை வீட்டில் விட்டுவிட்டு போவான்.. இது போல தான் அன்றும் பத்து நாட்களுக்கு முன் விட்டுவிட்டு சென்றான். ஆனால் இன்று வரை அவன் வீட்டிற்கு வரவில்லை
ரூபாவதி அவன் ஆபிஸிற்கு அழைத்து கேட்க……”5நாளுக்கு முன்னாடியே அவர் வந்துட்டாறே மேடம்.. எங்களுக்கு மெயில் அனுப்பிட்டாறே பூனே ல இருந்து வந்துட்டேனு.”என்றனர்..
அதை கேட்டு அதிர்ந்த ரூபாவதி குணாலின் போனுக்கு அழைக்க….. அதுவோ அணைத்து வைக்கப்பட்டுள்ளது என்று வந்தது அப்போது தான் ரூபாவதிக்கு பயம் ஒட்டிக்கொண்டது
உடனே தன் தந்தையிடம் சென்று கூற….
சர்மாவோ.. அதிர்ந்துவிட்டார் உடனே அனைவரும் கிளம்பி போலீஸில் புகார் குடுக்க….
அப்போது தான் ரயில்வே ட்ராக்கில் ஒரு பிணம் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது என்றும் அது குணாலின் அடையாளத்துடன் ஒத்து போவதாக சொல்ல… குடும்பமே அதிர்ந்துவிட்டது.
(வருவாள்.)
அத்தியாயம்-34
அனைவரும் குரல் வந்த திசையில் அதிர்ந்து நோக்க… அங்கு ஆதி தான் கண்கள் சிவக்க….. உடல் இறுகிப்போய் நின்றிருந்தான்..
அவனின் உடல் இறுக்கத்தை கண்டுக்கொண்ட ஆஸ்வதி ஆதியை எந்த அதிர்வும் இல்லாமல் பார்த்தவள் கண்கள் கலங்கி முகத்தை கீழே நோக்கி குனிந்துக்கொண்டாள்..
ஆதியின் கண்களோ அபூர்வாவையும். ரியாவையும் தான் முறைத்துக்கொண்டு நின்றிருந்தான்.
“என்னடா உனக்கு. குரல் ரொம்ப உயருது..”என்று கத்தினார். ரியா
“அதானே என்ன….. உனக்கு பைத்தியம் ரொம்ப முத்தி போச்சா.”என்றார் அபூர்வா.
“முத்திபோல அத்த இப்போதா சரி ஆகிருக்கு…”என்றான் கம்பீர குரலில்.
அதில் அதிர்ந்த இருவரும் ஒருவரைக்கொருவர் முகத்தை பார்த்துக்கொள்ள…
“என்ன அதிர்ச்சியா இருக்கா. பெரியம்மா. அன்ட் அத்தை…”என்றான் அவர்களை ஒரு கேலியான பார்வை பார்த்தவாறெ.
அவர்களையும் அறியாமல் அவர்கள் தலை தன்னாளே ஆட….
“ம்ம்.. இதுக்கே அதிர்ந்தா எப்படி இன்னும் எவ்வளவோ அதிர்ச்சி காத்துட்டு இருக்கே. ஆனா அதுக்கு முன்னாடி எனக்கு பயங்கரமா பசிக்கிது.. ம்ம் என்றவாறே ஆஸ்வதி பக்கம் திரும்பி…”வது எனக்கு ரொம்ப பசிக்கிது.. சாப்டலாமா.”என்றான் தெளிவாக
ஆதி பேசுவதையே எந்த உணர்வும் காட்டாமல் பார்த்துக்கொண்டு இருந்தவள். சரி என்று தலை ஆட்டிவிட்டு டைனிங் ஹாலை நோக்கி சென்றாள் அவள் பின்னால் ஆதியும் சென்றான். ரியா அபூர்வாவை முறைத்தவாறே
அதனை பார்த்த அவர்கள் இருவரும் அதிர்ந்து போய்..”என்ன அண்ணி இவன் திடீர்னு இப்டி தெளிவா பேசுறான்…”என்றாள் அபூர்வா
“அதா அபூர்வா எனக்கும் புரில….. காலையில வரைக்கும் பைத்தியமா சுத்திட்டு இருந்தான் இப்போ என்னனா.. இப்டி தெளிவா பேசிட்டு போறான் ஒன்னுமே புரிலையே. ம்ம். சரி நீ சீக்கரம் உங்க அண்ணங்களுக்கு போன் பண்ணி சொல்லு. அப்போதான் நாம அடுத்து என்ன பண்றதுனு புரியும்..”என்றாள் ரியா..
“ஹான் சரி அண்ணி..”என்றவர் தன் அண்ணன் பரத்திற்கு அழைத்தாள்.. ஆனால் அந்த பக்கம் அழைப்பு செல்லவில்லை என்ற பதில் தான் கிடைத்தது.
“அண்ணி பரத் அண்ணாக்கு போல….”என்றாள் அபூர்வா
“ஓஓஓ…. அப்போ. நா அஜய் க்கு கால் பண்றேன்…”என்றவர் அஜய்க்கு அழைக்க… ஆனால் அதற்கும் அதே பதில் தான் கிடைத்தது..
“என்ன அபூர்வா இது அஜய்க்கு போன் பண்ணாலும் அதே பதில் தான் வருது…”என்றார் புருவம் சுருக்கியவாறே..
“ம்ச் என்ற அபூர்வா திரும்பி ஆதியை பார்க்க… அவனோ. ஆஸ்வதி பரிமாறிய சாப்பாட்டை கையால் பிசைந்தவாறே. இவர்கள் இருவரையும் தான் இமைக்காமல் பார்த்துக்கொண்டு இருந்தான்.. அதில் இருவரின் முகமும் வெளிறி போய் இருந்தது
“என்ன அண்ணி இவன் நம்மள இப்டி பாக்குறான்.”என்றாள் அபூர்வா பயந்தவாறே.
“அதான் எனக்கும் புரில…. அவன் முகம் எதோ வெறி பிடிச்சவன் மாறியே என் கண்ணுக்கு தெரிது அபூர்வா..”என்றார் ரியா
“அண்ணி நீங்க வேற பயமுறுத்தாதீங்க….”என்றவள் மறுபடி தன் போனில் இருந்து தன் கணவருக்கு அழைக்க…. அதும் அதே பதிலை தான் சொல்லியது
“அண்ணி என் வீட்டுக்காரருக்கும் போன் போல அண்ணி,,…”என்றார் அபூர்வா
“என்னது. அது எப்டி அபூர்வா ஒரே நேரத்துல எல்லாருக்கும் போன் போகாம இருக்கும்…”என்றார் ரியா
“அதானே எனக்கும் புரில….”என்றவர் முகம் வெளிறி போய் தன் போனை பார்ப்பதும் வாசலை பார்ப்பதுமாக நிற்க….
அப்போது வீட்டின் ஹாலில் வைக்கப்பட்டு இருந்த போன் ஒலித்தது.. அதனை அங்கு இருந்த அனைவரும் காண… ஆதியின் முகமோ கோவத்தில். பழிவெறியில் சிவந்து போய் இருந்தது..
ஆஸ்வதி போனை எடுக்க அங்கிருந்து நகர பார்க்க…. ஆனால் அவளால் அந்த இடத்தை விட்டு நகர முடியவில்லை.. என்னவென்று ஆஸ்வதி குனிந்து பார்க்க…. அவளது கை ஆதியின் பிடியில் இருந்தது.. ஆஸ்வதி புரியாமல் அவனை பார்க்க….. அவனோ அவர்களையே வெறித்துக்கொண்டு.
“இது அவங்களுக்குனு வந்த போன். அத அவங்களே எடுக்கட்டும் வது…”என்றான் கோவத்தை அடக்கிய குரலில்.
அதை கேட்ட ஆஸ்வதியும் சரி என்ற தலை ஆட்டலுடன் அமைதியாக நின்றுக்கொள்ள…
“ம்ம்ம்.. அத்த…..”என்றான் ஆதி..
அவன் குரலில் இருவரும் அதிர்ந்தவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்தவாறே
“என்னப்ப்பா. ஆதி”என்றார் அபூர்வா பயத்தை அடக்கியவாறே
“உங்களுக்கு தான் போன். உங்க ரெண்டு பேருக்கும்.. ஏதோ சோகமான செய்தினு நினைக்கிறேன்.. எடுத்து பேசுங்க….”என்றான் ஆதி
அதை கேட்ட இருவரும் மிரட்சியுடன் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டு.. பின் தங்களை சமாளித்துக்கொண்டு அபூர்வா போனை எடுத்து காதில் வைத்தார்.. அதில் என்ன சொல்லப்பட்டதோ..
“அய்யோ. அண்ணா.”என்று அபூர்வா வீடே அதிரும் வண்ணம் கத்தினார்
அவர் அருகில் நின்றிருந்த ரியா அபூர்வாவின் தோளை பிடித்துக்கொண்டு.
“ஏய் அபூர்வா என்னாச்சி ஏன் இப்டி கத்துற….”என்றார்
அதை கேட்ட அந்த வீட்டில் மிச்சம் இருந்த அதிதி. விஷால்.. அனி என்று அனைவரும் தங்கள் அறையில் இருந்து கீழே ஓடிவர…. ஆஸ்வதி அபூர்வா கத்திய கத்தலில் அதிர்ந்து போனவள் ஆதிக்கு சாப்பாடி போட்டுக்கொண்டிருந்த கரண்டியை கீழே போட்டுவிட்டு அபூர்வா இருக்கும் இடம் நோக்கி ஓடி வந்தாள்
ஆதி மட்டும் அதிராமல் அப்படியே உட்கார்ந்திருக்க…. அதனை ஆஸ்வதியும் அப்போது தான் வீட்டின் உள் வந்த விதுனும் கவனித்துக்கொண்டு தான் இருந்தனர்.
“என்னாச்சிமா ஏன் இப்டி கத்துற…..”என்றாள் அதிதி கோவமாக
“அய்யோ.. அதிதி…”என்று அபூர்வா கலங்கிய குரலில் கத்த…
“என்னாச்சிமா ஏன் அழறீங்க…..”என்று அவள் அருகில் வந்து கேட்டாள் ராக்ஷி
“ராக்ஷி. அண்ணங்களுக்கு…”என்று அவர் திணற….
“என்னாச்சி அபூர்வா. சீக்கரம் சொல்லு…”என்று பதறினார் ரியா
“அண்ணங்க போன கார் ஆக்ஸிடன்ட் ஆகிட்டாம் அண்ணி.”என்றார் கதறியவாறே
அதை கேட்ட அனைவரும் அதிர்ந்து போய் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ள… அபூர்வாவும் ரியாவும் ஒரு சேர ஒரே நேரத்தில் ஆதியை தான் பார்த்தனர்.
அவர்களின் பார்வை தன்னை நோக்க காத்திருந்தவன் போல் அவன் முகத்தில் அப்படி ஒரு தேஜஸ் தெரிந்தது..அதை பார்த்தவர்கள் அதிர்ச்சியில் இருந்து வெளிவந்தவர் கதறியவாறே..
“என்ன அபூர்வா சொல்ற….. அவருக்கு அவருக்கு என்னாச்சி.”என்றாள் ரியா
“தெரில அண்ணி. ரெண்டு பேரையும் நம்ம ப்ரேம அட்மிட் பண்ணிருக்க ஹாஸ்பிட்டல தான் அட்மிட் பண்ணிருக்காங்களாம்”என்றார் அபூர்வா
“அய்யோ. நா உடனே அவர பாக்கனும்.”என்று ரியா கார் இருக்கும் இடத்தை நோக்கி ஓட…..
அவர் வீட்டின் படியை மிதிப்பதற்குள் வீட்டின் வெளியே காவலர்கள் வந்து குவிந்துவிட்டனர்
அதை பார்த்த ரியா மிரட்சியுடன். பின் பக்கம் கால் வைத்தவாறே உள்ளே வர…..
“எங்க போறீங்க….. பெரியம்மா.. அதுக்குள்ள….”என்ற ஆதி தான் உட்கார்ந்திருக்கும் இடத்தில் இருந்து வேகமாக எழுந்து கம்பீரமாக ஆஸ்வதியின் பக்கம் வந்து நின்றுக்கொண்டான்
காவலர்களை பார்த்த அபூர்வாவும் மிரண்ட பார்வை ஒன்றை தன் அண்ணிக்கு கொடுத்துவிட்டு ஆதியை காண…
“ஆதி என்ன இது இப்போதானே போன் வந்துது. உன் பெரியப்பா ரெண்டு பேருக்கும் ஆக்ஸிடன்ட் ஆகிட்டுனு.. நாங்க போக வேணாமா எதுக்கு இவ்வளவு போலீஸ் வந்துருக்கு “என்றார் ரியா எச்சை விழுங்கியவாறே
“ம்ம் ஆமா நாங்க போகனும்ல ஆதி.”என்றார் அபூர்வாவும்
“ம்ம்ம் ஆமா ஆமா போய் தானே ஆகனும்.”என்று நக்கலாக சொன்ன ஆதி போய் தானே என்பதை அழுத்தி கூறினான்.. அதிலே அவர்கள் உடல் நடுங்கியது..
“அப்புறம் என்ன போலீஸ் எதுக்கு தானே கேட்டீங்க…..”என்றான் ஆதி ஆஸ்வதியின் புடவையில் தன் கைகளை துடைத்தவாறே.
அவனின் இந்த செயலில் ஆஸ்வதி முகம் அந்த நேரத்திலும் கனிந்து போனது
“ம்ம்ம்ம்.. எதுக்கு சார் வந்துருக்கீங்க….. எங்க பெரியம்மா கேட்குறாங்களே பதில் சொல்லுங்க….”என்றான் ஆதி காவலர்கள் மத்தியில் நிற்கும் உயர் அதிகாரி ஒருவரை பார்த்து
அவரும் ஆதியை பார்த்து தலை அசைத்தவாறே.
“நாங்க உங்க ரெண்டு பேரையும் அரஸ்ட் பண்றேம். மேடம்..”என்றார் அவர்
அவர் சொன்னதை கேட்ட ஆஸ்வதி அதிர்ந்து போய் விதுனை பார்க்க….. அவனோ எந்த அதிர்வும் இல்லாமல் இதெல்லாம் நடக்கும் என்று எனக்கு தெரியும் என்பது போல் போலீஸை தானே பார்த்துக்கொண்டு இருந்தான். அதிலே அவனுக்கு ஆதியை பற்றி அனைத்தும் தெரியும் என்று அவளுக்கு புரிந்து போனது
அப்போது தான் அனியும் விதுன் கூட வந்து இறங்கினாள். அதனால் அவளும் இதனை அதிர்ச்சியுடன் பார்த்தவாறே தன் அண்ணியின் பக்கம் போய் நின்றுக்கொண்டாள்..
அதனை கேட்ட இருவருக்கும் அல்லு அள்ளிவிட்டது.
“எ… எதுக்கு சார் எங்கள அரஸ்ட் பண்றீங்க….. நாங்க என்ன தப்பு செஞ்சோம்…”என்றார் அபூர்வா துள்ளியவாறே
“ம்ம்ம்ம் எதும் தப்பு பண்ணாதவங்கள இங்க யாரும் அரெஸ்ட் பண்ண மாட்டாங்க அத்த….”என்றான் கேலியாக ஆதி
“ம்ச். ஆதி நீ எதோ மனசுல வச்சிக்கிட்டு எங்கள மாட்டி விட்றுக்கனு நினைக்கிறேன்…”என்றார் ரியா..
“ம்ச். என்ன பெரியம்மா இது,. அவங்க இன்னும் எதுக்கு உங்கள அரெஸ்ட் பண்றோம்னே சொல்லல அதுக்குள்ள…. நா தான் எதோ பண்றேனு முடிவு பண்ணிட்டீங்க…..”என்றான் ஆதி நக்கலாக
அதை கேட்ட இருவரும் வந்திருக்கும் போலீஸை பார்க்க…
“மிஸ்டர் சர்மா ட்ரெஸ்ட்ல நிறைய மோசடி நடந்துருக்கு. அதுக்கு காரணம் மித்ரன், பரத்,அஜய்,ப்ரேம்,அப்புறம் நீங்க ரெண்டு பேரும் தானு தெரிய வந்துருக்கு..”என்று அவர்கள் முடிப்பதற்குள்..
“இது அப்பட்டமான பொய் இத நாங்க ஏத்துக்க மாட்டோம்…”என்று அபூர்வா கத்த
“இருங்க அத்த இன்னும் அவர் சொல்லி முடிக்கல…. நீங்க சொல்லுங்க சார்…”என்றான் ஆதி
“அப்புறம் உங்க அண்ணன் மிஸ்டர் விஷ்ணுவ கொன்னதுக்கும். உங்க அக்கா ஹஸ்பன்ட் மிஸஸ் ரூபாவதி அவங்களோட வீட்டுக்காரர் மிஸ்டர் குணால் அவர ஆள் செட் பண்ணி கொன்னது இது எல்லாமே நீங்க தான் செஞ்சிங்கனு நாங்க நினைக்கிறோம். அதுனால உங்கள அரஸ்ட் பண்றேன்…”என்றார் அவர்
அதை கேட்டதும் ஆஸ்வதி முகம் அதிர்ச்சியில் உணர்வற்று நின்றாள் என்றால் ரூபாவதியோ.. அப்படியே மடிந்து உட்கார்ந்துவிட்டார் அவருக்கு இதுவரை இந்த சந்தேகம் கூட வந்தது இல்லை.. தன் கணவன் ஆக்ஸிடன்ட்டில் இறந்து விட்டதாக தான் இதுவரை அவள் நினைத்திருந்தார் ஆனால் இப்போது தன் தம்பி தங்கையே இப்படி பட்ட துரோகத்தை தனக்கு செய்திருப்பதை பார்த்து ரூபாவதி உடலில் உணர்வற்று கிடந்தார்
ஆஸ்வதி ரூபாவதி இதை கேட்டதும் தடுமாறி கீழே உட்காருவதை பார்த்தவள்…”மா.”என்ற அழைப்புடன் அவர் அருகே ஓடினாள் அஞ்சலியும் மா என்று கத்திக்கொண்டே அவர்கள் அருகே ஓடினாள்
அதை பார்த்த ஆதி முகம் கோவத்தில் சிவந்து போனது எவ்வளவு கொடுமை இது சொந்த அக்காவின் கணவரையே கொன்றுவிட்டார்கள்.. ஏன் தன் விச்சுப்பா.. சொந்த அண்ணன். தம்பி அல்லவா அவரையே இவர்கள் நினைக்கும் போதே ஆதிக்கு கண்கள் சிவந்து போனது கோவத்தில்
“ஏன் என் அப்பாவ கொன்னீங்க….”என்றான் ஆதி இருவரின் பக்கமும் கோவமாக நெருங்கியவாறே அதில் அவர்கள் இருவரும் அதிர்ந்து நின்றனர்..
(வருவாள்..)
அத்தியாயம்-33
அப்போது தான் ஆஸ்வதி ஆதியை தங்கள் அறைக்கு அழைத்து சென்று அவனை சுத்தம் செய்ய வைத்து திரும்ப சாப்பிட கீழே வர….. அப்போது தான் போன் அடித்தது
அதனை அபூர்வா ஓடி போய் எடுத்து ஹலோ. என்றவர் தான். அதில் என்ன சொல்லப்பட்டதோ. உடனே அபூர்வா.
“ம்ச்.. ஏய் வினிஜா அந்த மகாராணிக்கு தான் போன் வந்துருக்கு வந்து பேச சொல்லு.”என்று கடுப்படித்துவிட்டு அபூர்வா செல்ல…
ஆஸ்வதி அதனை காதில் வாங்காமல் எடுத்து காதில் வைக்க…. அந்த பக்கம் ஒரே திட்டாக விழுந்தது. ஆனால் அத்ற்கு மாறாக ஆஸ்வதியின் முகம் புன்னகையில் விரிந்தது…அப்படியே ஆஸ்வதி காதில் போனை வைத்துக்கொண்டு சிரித்துக்கொண்டிருக்க….. ஆதியோ அவளது முத்து பற்கள் அழகாக வெளியில் தெரிவதை ரசித்துக்கொன்டு இருந்தான்..
“இப்டி காதுல போன் வச்சிட்டு யார்கிட்ட தான் உன் பொண்டாட்டி வழிஞ்சிட்டு இருக்காளோ.. பாத்துக்கோ ஆதி. இல்லனா உன் ஏஞ்சல் அப்டியே ரெக்கையை வச்சி பறந்துட போறா…”என்று அபூர்வா ஆதியின் மனதை கலைக்க அடித்த திட்டத்தை செயல்படித்தினாள்.
அதை கேட்ட ஆதியின் கைகள் கோவத்தில் முறுக்கிக்கொண்டது.ஆதி மெதுவாக திரும்பி அபூர்வாவை பார்த்து முறைக்க….. அபூர்வாவோ கண்களில் வெறியுடன் ஆஸ்வதியை தான் முறைத்துக்கொண்டு இருந்தார்
“அவ என் ஏஞ்சல் அவ எங்கையும் பறந்து போமாட்டா.. இனி எங்கூட தான் இருப்பா…”என்றான் ஆதி அழுத்தமான குரலில்.
அதை கேட்ட அபூர்வா அதிர்ந்து போய் ஆஸ்வதியிடம் இருந்து பார்வையை ஆதி பக்கம் திருப்ப…. ஆதியோ முறைத்தபடி அவரை தான் பார்த்துக்கொண்டு இருந்தான்..
அவனின் பார்வையில் மிரண்ட அபூர்வா.. ஆதியை பார்த்து எச்சில் விழுங்கியவாறே
“இல்ல ஆதி அவ உன் கிட்ட பொய் சொல்லிருக்கா.. அவ கொஞ்ச நாள் தான் இங்க இருப்பா.. உன்னை ஏமாத்திட்டு அவ நகை பணம்லா எடுத்துட்டு ஓடிப்போய்டுவா…”என்றார் மனதில் வஞ்சத்தை வளர்த்தபடி
அதை கேட்ட ஆதி. தன் கையில் தண்ணீர் குடிக்கும் க்ளாஸை கையில் எடுத்து அருகில் உட்கார்ந்திருக்கும் அபூர்வாவின் காலிலே வேகமாக போட்டு உடைத்துவிட்டான்
அதை சற்றும் எதிப்பார்க்காத அபூர்வா அதிர்ந்து போய் ஆதியை பார்க்க… அப்போது அங்கு இவர்களை தவிர யாரும் இல்லை. ஆஸ்வதியும் போனில் ஆழ்ந்துவிட…..
“ஆஆ… ஏய் பைத்தியம் ஏன்டா என் கால இப்டி உடைச்ச….”என்று கத்தினார் அபூர்வா..
“அப்டிதான் பண்ணுவேன் இனி என் ஏஞ்சல பத்தி எதாவது சொன்ன…. இன்னும் கார்டன்ல இருக்க கல்ல தூக்கிட்டு வந்து உன் வாயிலையே போட்டுடுவேன்..”என்றான் ஆதி
அதை கேட்டு அதிர்ந்த அபூர்வா “என்னது வாயிலையா.”என்றார்
“ஆமா. அது இருக்கதுனால தானே என் ஏஞ்சல இப்டி பேசுற அதான்.. வாயில போட்டா இனி பேச முடியாதுல……”என்றான் விளக்கமாக
அதை நினைத்துப்பார்த்த அபூர்வா…மிரட்சியுடன் ஆதியை முறைத்தவாறே…”என்னடா பயம் விட்டு போச்சா..”என்றார்
“ஆமா. என் ஏஞ்சல் சொல்லிருக்கா.. நா யாருக்கும் பயப்பட கூடாதுனு.. அதுனால தான் உன் வாயில கல் போட்டுடுவேன்..”என்றான் தைரியமாக நிமிர்ந்து உட்கார்ந்தவாறே
அதில் எச்சிலை விழுங்கியவாறே”எல்லாம் அவ குடுக்குற தைரியத்துல தானே ஆடுறீங்க ஆடுங்க….”என்றார் அபூர்வா
“சாரி. இப்போ நா ஆடுற மூட்ல இல்ல…. அது மட்டும் இல்லாம சாப்டும்போது ஆடக்கூடாதுனு ஏஞ்சல் சொல்லிருக்கா. அதுனால நா உன் பேச்சி கேட்கமாட்டேன் போ..”என்றான் அபூர்வாவை முறைத்தவாறே தன் கழுத்தை வெடுக்கென்று திருப்பிக்கொண்டான்..
“ஆஆஆ……”என்று ஆதியை பார்த்துக்கொண்டு இருந்த அபூர்வாவை பார்த்து
“பாத்து உன் வாயில ஈஈஈ…. போய்ட போது..”என்றான் ஆதி..
அதில் அவனை பயங்கரமாக முறைத்த அபூர்வா அப்போது தான் போன் பேசிவிட்டு ஆதியின் பக்கம் வந்து உட்கார்ந்த ஆஸ்வதியை பார்த்து
“யாரு அது போன்ல கொஞ்சி கொஞ்சி பேசுற……”என்றார் அபூர்வா
அதில் ஆதி கடுப்பானவன்..”ஏஞ்சல் இந்த அத்த கொஞ்சமும் குட் கேர்ள் இல்ல போல….. எப்போ பாரு முன்னாடி அடிச்சிட்டே இருக்கும் இல்லனா அந்த இருட்டு ரூம்ல அடைச்சி போடும். இப்போ என்னனா உன்ன பாத்து என்னவோ எங்கிட்ட சொல்லுது..நீ யார் கிட்டையோ கொஞ்சி பேசுறீயாம்..”என்று போட்டுக்கொடுத்து விட்டான் ஆதி..
அதை கேட்ட அபூர்வா.”அய்யோ அப்டியே போட்டு கொடுத்துட்டானே.. இவ வேற…. நம்மள முறைக்கிறா.. ப்ரேம அறைஞ்ச மாறி நம்மள அடிப்பாளோ..”என்று நினைத்தார் மனதில்
“ஆமா. அடிப்பேன் தான். இன்னொரு வாட்டி எனக்கு எதாவது பேர் வைக்க பார்த்தா கண்டிப்பா பெரியவங்கனுலா பார்க்க மாட்டேன்..”என்றாள் ஆஸ்வதி கோவமாக
அதை கேட்ட அபூர்வா அவளை முறைத்தவாறே எழுந்து சென்றுவிட்டார்.
ஆதி சாப்பிட ஆஸ்வதி அவனையே பார்த்துக்கொண்டு சாப்பிட்டுக்கொண்டு இருந்தாள்
“ஏஞ்சல்..”என்றான் ஆதி
“ம்ம். சொல்லுங்க ஆதி…”என்றாள்
“ம்ம். யார்கிட்ட இவ்ளோ நேரம் பேசுன…. நீ அங்க பேச போய்ட்டதுனால தான் இங்க அந்த அத்த உட்கார்ந்து என்னை கோவமாக்கிட்டு.”என்றான் ஆஸ்வதியை செல்லமாக முறைத்தவாறே
“ஓஓ…. அதுவா. அது ஒரு சரவெடி.. நல்ல செமயா வச்சி என்னை திட்டுட்டு வச்சிட்டு.”என்றாள் சாப்பிட்டவாறே
“என்ன ஏஞ்சல் சொல்ற…”என்றான் புரியாதவாறே தலையை சொரிந்தவாறு
அவனின் இந்த பாவனையில் புன்னகைத்தவள்
“என் தங்கை விஷாலி தான் பேசுனா இவ்ளொ நாள் நா அவகிட்ட பேசலை அதா செமையா திட்டுனா..”என்றாள் ஆஸ்வதி
“என்ன என் ஏஞ்சல திட்டுனாளா.. அவங்க யாரு.. நா அவங்கள உடனே பாக்கனும்.. எப்டி என் ஏஞ்சல அவங்க திட்டுலாம்.”என்றான் ஆதி மூக்கை சுழித்துகொண்டு…
அதில் புன்னகைத்த ஆஸ்வதி.“நாளைக்கு வரும் பாருங்க அந்த சரவெடி.நீங்களே அவகிட்ட ஏன் என்னை திட்டுறானு கேளுங்க…. ”என்றாள் சாப்பிட்டு முடித்து கிட்சனுக்குள் சென்றவாறே..
அவளின் கூற்றில் ஆதி தான் ஆஸ்வதியை புரியாமல் பார்த்துக்கொண்டு இருந்தான்..
அன்று மதியம் ஆஸ்வதிக்கு தாத்தாவிடம் இருந்து அழைப்பு வர…..
“என்னமா ஆஸ்வதி என்ன பண்ற…..”என்றார் தாத்தா
“தாத்தா சொல்லுங்க….. இப்போதான் ஆதிய தூங்க வச்சிட்டு இருந்தேன். பூனே போய் சேர்ந்துட்டீங்களா.”என்றாள் ஆஸ்வதி
“ஹான் மா வந்துட்டேன். அப்புறம் மா ஆஸ்வதி நாளை மறுநாள் ஹோலி பண்டிகை இருக்கு மா”என்றார் தாத்தா
“ஹான் தாத்தா நானும் இப்போதான் அதபத்தி யோசிச்சேன்.. நீங்க எப்போ தாத்தா வருவீங்க…..”என்றாள்
“நான் நாளைக்கு மதியம் வந்துடுவேன்மா.. ஆனா அதுக்குள்ள வீட்டுக்கு குடில் போட ஆளுங்க வருவாங்க……அவங்கள கண்காணிக்க கூட என் பிஏவும் வருவாரு.. பாத்துக்கொ மா. ஹோலி பண்டிகைக்கு தேவையானது எல்லாமே அவங்க பாத்துப்பாங்க நா உனக்கு ஜஸ்ட் இன்பார்ம் தான் பண்றேன் என்றார்
“ஓஓஓ….. சரி தாத்தா நா பாத்துக்குறேன். நீங்க பத்திரமா வாங்க….”என்றாள் ஆஸ்வதி
“சரிமா.”என்று போனை வைத்தவர் முகம் யோசனையில் சுருங்கியது. அவர் மனதிற்கு ஏதோ தன் குடும்பத்திற்கு ஆபத்து இருப்பது போல தான் தோன்றியது
இங்கு ஆஸ்வதியும் போனை வைத்துவிட்டு வினிஜாவிடம் தாத்தா கூறியதை கூற….. அவரும் அவளை பார்த்து தலை ஆட்டினார்.. வினிஜா வந்த புதிதில் எப்போதும் ஆஸ்வதியை பார்த்து முறைத்துக்கொண்டே சுற்றியவர் இப்போது தான் கொஞ்ச நாளாக ஆஸ்வதியை பார்த்து புன்னகைக்க ஆரம்பித்தார்.. அதனை ஆஸ்வதியும் பார்த்து “என்ன இவங்க வந்த புதுசுல நம்மள எதோ எதிரிய பார்க்குற மாறி பார்ப்பாங்க இப்போ என்னனா பார்த்து சிரிக்கலா செய்றாங்க…..”என்று யோசிப்பாள். பின் அவளும் அதனை மறந்தே போனாள்.
“வினிஜா மா.. வீட்டுக்கு ஆள் வந்த கொஞ்சம் என்னனு பாருங்க…..”என்றாள் ஆஸ்வதி
“சரிமா. நா பார்த்துக்கிறேன்.”என்று வினிஜா கூறிக்கொண்டே சமையல் அறைக்கு திரும்ப….. அப்போது இவர்கள் பேசுவதை பார்த்தவாறே அங்கு வந்த ரியா..
“ஏய் வினிஜா என்னடி சரி…”என்றார்
வினிஜா அவர் வந்ததை பார்த்தவாறே…”அது இல்லமா நாளை மறுநாள் ஹோலி இல்லையா அதுக்கு தான் சாப்.. குடில் போட ஆள் அனுப்புறேனு சொன்னாங்களாம். அத பார்க்க சொல்லி ஆஸ்வதிமா சொன்னாங்க……”என்றாள் பயந்தவாறே
“ஓஓஓ….. இவளே இந்த வீட்ல ஒரு வேலைக்காரி தான் இவ உன்ன வேலை வாங்குறாளா..”என்றவாறே அங்கு வந்தாள் அபூர்வா..
ஆஸ்வதியோ தனக்கும் அவர்கள் பேசுவதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பது போல் ஆதிக்கு பால் கலக்கிக்கொண்டு இருக்க அதில் கடுப்பான அபூர்வா
“ஏய் உன்ன தான் யார கேட்டு இந்த சீன் போடுற நீ. சொல்லுடி..” என்றார் கோவமாக ஆஸ்வதி அருகில் சென்று
“தாத்தா போன் செஞ்சி இத சொல்ல சொன்னாங்க நா சொன்னேன்.”என்றாள் ஆஸ்வதி
“ஓஓஓ….. அவரு என்ன சொன்னாலும் செஞ்சிடுவீயா.. ஏன் இந்த வீட்டு ஆளுங்க நாங்களும் தானே எங்ககிட்ட இத சொல்ல மாட்டியா.”என்றார் ரியா
“தாத்தா உங்க கிட்ட சொல்லிருப்பாருனு நினைச்சென்…”என்றாள் ஆஸ்வதி
“அவர் எப்டிமா எங்ககிட்ட பேசுவாறு அவர்தான் முழுதும் உன் கன்ட்ரோல இருக்காறே..”என்றார் அபூர்வா
அதை கேட்ட ஆஸ்வதி நிமிர்ந்து அபூர்வாவை முறைக்க….
“என்ன முறைக்கிற….. நா உண்மைய தானே சொன்னேன்.. உன்ன எங்க அப்பாவுக்கு எவ்வளவு நாளா தெரியும். ஆனா அவரு என்னனா உன்ன தலையில் தூக்கி வச்சி சுத்துறாறு.. நீயும் அவர் சொந்த பேத்தி மாறி தாத்தா தாத்தானு உருகுற….”என்றார் அபூர்வா கோவமாக
“இத நீங்க தாத்தாட்ட தான் கேட்கனும்..”என்றாள் ஆஸ்வதி நிமிர்வாக நின்றவாறே
அதில் அதிக கோவமான அபூர்வா.. ஆஸ்வதியை பார்த்து நெருப்பை கக்கினார்.
“ரியா அண்ணி பாத்தீங்களா. நாம கொஞ்சம் அசால்ட்டா இருந்துட்டோம்.. இப்போ என்னனா. யாருனே தெரியாத ஒருத்தி கையில எல்லா அதிகாரமும் போய்ட்டு…”என்றாள் ஆஸ்வதியை மிரட்டலாக பார்த்தவாறே..
“ம்ம். ஆமா
“ம்கூம் இதுக்கு தான் அபூர்வா அவள மாறி நல்ல வசியம் பண்ண தெரியனும்னு சொல்றது இப்போ பாரு. நம்ம மாமாவ என்ன வசியம் பண்ணுனாளோ தெரில அவர் இவ சொல்ற பேச்ச தான் கேட்குறாரு.”என்று ரியா இரட்டை அர்த்தத்தில் பேச….
அதில் ஆஸ்வதி கூனி குறுகி போய் நின்றாள்
“ஆமா. ஆமா.. முதல அப்பாவ….. இப்போ அவர் பேரன… அடுத்து ரியா அண்ணி உங்க பையன் விஷால… அடுத்து யாரையோ..”என்று இன்னும் அசிங்கமாக அபூர்வா பேச…
அதில் ஆஸ்வதி கோவமாக எதோ பேச வர…
“ஷட் அப்..”என்று அந்த வீடே அதிரும் அளவிற்கு ஒரு கர்ஜனையான குரல் கேட்டது.
அதில் அனைவரும் அதிர்ந்து போய் குரல் வந்த திசை நோக்கி அனைவரும் காண…..
அங்கு..
(வருவாள்.)
அத்தியாயம்-32
“ஆஸ்வதி கண்ணா. இது என்னோட நம்பர் டா.. இந்த நம்பர் இங்க உள்ள யாருக்கும் தெரியாது, இது உனக்கும் என் ஆபிஸ் பி.ஏக்கு மட்டும் தான் தெரியும்… எதாவது இக்கட்டான சூழ்நிலையில தான் என் பி.ஏ என்னை அழைப்பான். நீயும் இங்க யாராவது எதாவது உன்ட பிரச்சனை பண்ணுனா உடனே என்னை கூப்டுமா. சரியா”என்றார் தாத்தா ஆதிக்கை தன் அருகில் உட்கார வைத்து அவன் தலையை ஆதரவாக தடவியவாறு..
“சரி தாத்தா நீங்க ஒன்னும் கவலைப்படாம கிளம்புங்க…. நான் இங்க எல்லாத்தையும் பாத்துக்குறேன்..”என்றாள் அவரை பார்த்து மெலிதாக புன்னகைத்துக்கொண்டு..
“சரிமா.உங்கூட விதுன் துணைக்கு இருப்பான்.. அப்புறம் மா…உன்ட ஒன்னு சொல்லனும் இங்க இருக்குறவங்க எல்லாம் உன்ன எவ்வளவு வேணும்னாலும் பேசுவாங்க…..அது நீ அவங்களுக்கு பேச இடம் கொடுக்கிற வர….. நீ திரும்ப அவங்களுக்கு கொடுக்க ஆரம்பித்தா அவங்க எல்லாம் அடங்கிடுவாங்க…. நா சொல்றது உனக்கு புரிதா.”என்றார் அவளை பார்த்து
அவர் சொல்வதை கேட்டுக்கொண்டு இருந்த ஆஸ்வதி”புரிது தாத்தா. நா பாத்துக்குறேன் நீங்க பத்தரமா போய்ட்டு வாங்க….மறக்காம உங்க டாப்லேட்லாம் போடுங்க….”என்றாள் அவரை பார்த்து.
“சரிடா நான் பாத்துக்குறேன்..அப்புறம் ஆதிக்க நல்லா பாத்துக்கடா. அவனுக்கு இங்க எதோ ஆபத்து இருக்குற மாறி எனக்கு தோணுது.”என்றார் அவளை அர்த்தமாக பார்த்துக்கொண்டு,
“சரி தாத்தா..”என்று கிளம்பும் அவரை நல்ல படியாக அனுப்பி வைத்தாள் ஆஸ்வதி.
“ம்ம்ம்.. பாத்தியா..அண்ணா இந்த கொடுமைய…. நம்ம கிட்ட ஒரு தடவ சொன்னதோட சரி திரும்ப அவரு நம்மட்ட மூஞ்ச கூட காட்டல பாரு.எல்லாம் இவளால வந்தது..”என்றாள் அபூர்வா தன் அண்ணன் அஜயிடமும் பரத்திடமும்.
“விடு அபூர்வா பாத்துக்கலாம்..எங்க போய்ட போறா”என்றான் அஜய் அவளை முறைத்துக்கொண்டே
இங்கு ஆஸ்வதி தாத்தாவை வழி அனுப்பிவிட்டு தங்கள் அறைக்கு வர…..ஆதிக் தங்கள் கட்டிலில் உட்கார்ந்து தன் முகத்தை சோகமாக வைத்துக்கொண்டு உட்கார்ந்திருந்தான் ஆஸ்வதி அவன் அருகில் சென்று..
“என்னாச்சி என் ஆதிக்கி ஏன் சோகமா உட்கார்ந்துருக்கீங்க…. ”என்றாள் ஆஸ்வதி
ஆதி அவள் பேசுவதை கேட்டு அவளை நிமிர்ந்து…அவளது முகத்தையே ஆழ்ந்து பார்த்தான்.ஆஸ்வதி அவனது இந்த பார்வையின் தாக்கத்தை தாங்க முடியாமல் தன் தலையை குனிந்துக்கொண்டாள்.
“ஏன் ஆதி இப்டி பாக்குறீங்க…..”என்றாள் ஆஸ்வதி மெதுவாக
“தாத்தூ என்னை விட்டுட்டு ஊருக்கு போறாரு ஏஞ்சல் அதான் எனக்கு பயமா இருக்கு”என்றான் ஆதிக்
அவன் அப்படி சொன்னதும் அவன் இருபக்க கன்னத்திலும் கை வைத்து தாங்கி
“ஏஞ்சல் தான் இருக்கேன்ல இன்னும் ஏன் பயம்.”என்றாள்
“இல்ல அந்த ப்ரேம் என்னை அடிக்க வருவான். ஆனா இப்போ அவன் இல்ல….. ஆனா அந்த அபூர்வா அத்த இல்ல அவங்க அடிக்கடி என்னை முறைச்சிட்டே இருக்காங்க…..தாத்தா இல்லைனா அவங்களுக்கு என்னை தான் அடிக்க தோணும்..”என்றான் சிறு பிள்ளை போல உதட்டை சுருக்கி..
“அதுலா நான் பாத்துக்குறேன். இனி அவர் உங்க பக்கம் வரமாட்டார்…சரியா..”என்றாள்
அதனை கேட்டு சிரித்த ஆதிக்”உண்மையாவா..”என்றான் ஆதி கண்கள் மின்ன…
அந்த பாவனையில் ஆஸ்வதி மயங்கி தான் போனாள். அவள் அவனையே ரசித்துப்பார்க்க….
“உண்மையா”என்றான் ஆதி அவளை உலுக்கியவாறு..தன் கை விரலை அவளை நோக்கி நீட்டி..
“உண்மையா..”என்றாள் அவன் விரலை தன் விரலால் பிடித்துக்கொண்டு
அதனை பார்த்ததும் அவன் அவளை பார்த்து குழந்தையாக சிரித்தான்
பின் இருவரும் ஒருவரைக்கொருவர்.. பிடித்து தோட்டத்தில் விளையாடிக்கொண்டு இருந்தனர். அதனை பார்த்த அபூர்வா. ஆஸ்வதியை மனதில் திட்டியபடி…
“இவள இதோட விடக்கூடாது கொஞ்சம் விட்டா இவன எப்டியாச்சும் சரி பண்ணிடுவா போல இருக்கு…. இன்னிக்கி இருக்கு உனக்கு” என்று அபூர்வா இருவரும் இருக்கும் திசை பக்கம் கோவமாக அவன் அருகில் வந்தார். அதனை பார்க்காமல் இருவரும் சிரித்து விளையாடிக்கொண்டு இருந்தனர்…
“ஏய். லூசு இங்க என்ன பண்ற….”என்றார் அபூர்வா அவனை பார்த்து. அபூர்வாவை பார்த்ததும் ஆதிக் பயந்து போய் ஆஸ்வதி பின்னால் ஒழிந்துக்கொண்டான்
ஆஸ்வதி அபூர்வா பேசுவதை பார்த்து.”அவர் ஒன்னும் லூசு இல்ல… கொஞ்சம் பாத்து பேசுங்க….”என்றாள் ஆஸ்வதி அவரை கோவமாக முறைத்துக்கொண்டு..
அபூர்வா அவள் பேசுவதை கேட்டு. ஹாஹா.. என்று சத்தமாக சிரித்தவாறே அவளை கேலியாக பார்த்து
“உனக்கு இவன பத்தி என்ன தெரியும். இவன் நல்லா இருந்த போது.. எப்டி இருந்தானு தெரியுமா.”என்றாள் அபூர்வா நக்கலாக
“அது பத்தி எனக்கு தெரிய வேணாம்…இவர் என் கணவர் அவ்வளவு தான் “என்றாள் அபூர்வாவை பார்க்காமல் முகத்தை திருப்பிக்கொண்டு.
“உனக்கு தெரிய வேணாம்னாலும்.. நா இவன பத்தி உனக்கு சொல்றேன்…இவன் போகாத பப் இல்ல….. அடிக்காத ட்ரக்ஸ் இல்ல… இவன் கூட தினம் தினம் ஒரு பொண்ணு நான் பாத்துருக்கேன்.”என்றாள் அபூர்வா ஆதியை முறைத்தவாறே. அவளின் முகத்தில் அதிர்ச்சியை எதிர்ப்பார்த்து..
ஆனால் அவள் முகம் அவன் நினைத்ததற்கு எதிராக எந்த மாற்றமும் இல்லாமல் தெளிவாக இருந்தது,.. அதில் இன்னும் அபூர்வாவிற்கு கோவம் ஏறியது…
“அவர் எப்டி இருந்தாலும்…என் புருஷன் தான் அதுல எந்த மாற்றமும் இல்லை..”என்றாள் அபூர்வாவை முறைத்தவாறு.
அதனை கேட்ட அபூர்வா…அவளை பார்த்து முறைத்தவாறு
“நான் சொன்னா நம்ப மாட்ட… அவனோட லேப்டாப் உன் ரூம்ல தான் இருக்கு. அத போய் பாரு. அவனப்பத்தி உனக்கு தெரியும். தேவை இல்லாம அவன நம்பி உன் வாழ்க்கைய வீண் ஆக்காத….”என்றாள் அபூர்வா..இது அவர்களின் இன்னொரு திட்டம்.. ஆதியை கெட்டவனாக சித்தரித்து அவளை இங்கிருந்து ஓட வைப்பது.
“ம்ச்,. எனக்கு அவர பத்தி தெரிய எதும் இல்ல…. அவர் முன்னாடி எப்டி இருந்தாலும் சரி ஆனா. அவர் இப்போ எனக்கு குழந்தை மாறி “என்றாள் அபூர்வாவை அசால்ட்டாக பார்த்தவாறே.அதில் அபூர்வா . ஆஸ்வதியை பார்த்து முறைத்தவாறே
“இவ்வளவு சொல்றேன் அப்பயும் அவன் என் கணவன்.. என் உயிர்னு டையலாக் பேசுற… என்ன பயம் விட்டு போச்சா..”என்று ஆஸ்வதிக்கு மிக அருகில் நெருங்கி நின்ற அபூர்வா.
“உனக்கு எவ்வளவு பணம் வேணும்னு சொல்லு நா தரேன்.. அத வாங்கிட்டு இங்க இருந்து ஓடி போய்டு. இல்ல உன்ன கொன்னு இங்கையே புதைச்சிடுவோம்.”என்றார் அபூர்வா அவளுக்கு மட்டும் கேட்கும் குரலில்…. அதில் ஆஸ்வதி அவனை பார்த்து மிரளாமல் அவரின் கண்களை நோக்கி..
“முடியாது…”என்றாள் அழுத்தமாக…. எவ்வளவு கீழ் தரமாக இறங்குகிறார்கள். என்று மனதில் நினைத்தவாறே.
“இவ்வளவு சொல்றேன் இன்னும் உனக்கு எங்கள பாத்தா பயம் வரலையா..”என்றார் அபூர்வா..
“எனக்கு நீங்க ரெண்டு கால்.. ரெண்டு கை.. ஒரு தலை இருக்குற மனுசனா தான் தெரியுறீங்க….. என்னிக்கி உங்களுக்கு எக்ஸ்ரா. ஒரு கால்.. ஒரு வால் முளைக்குதோ அன்னிக்கி உங்கள பார்த்து நா பயப்படுறேன்…”என்றாள் ஆஸ்வதி அபூர்வாவை பார்த்து முறைத்துக்கொண்டு ஆதிக் பயத்தில் ஆஸ்வதியின் புடவையை பிடித்தவாறு நிற்க.,.
“ஓஓஓ….. ஹாஹா. இங்க பாருடா. மேடம் வந்ததுக்கு இப்போ ரொம்ப தைரியமாயிட்டீங்க போல… “என்றவாறே அங்கு வந்தாள் அதிதி கிண்டலாக….
அதில் ஆஸ்வதியும் புன்னகையுடன்.. அதிதியை பார்த்தவாறே
“ம்ம்ம். அன்னிக்கி கிட்சன்ல எங்கிட்ட அடி வாங்கிட்டு போனப்போ உன்ன லாஸ்ட்டா பார்த்தது.. இப்போதா உன்ன திரும்ப பாக்குறேன்மா..”என்றாள் அதிதியை பார்த்து கிண்டலாக
அதில் கடுப்பான அதிதி..”இப்போ என்ன சொல்ல வர உனக்கு பயந்து தான் நா இங்க வராம இருந்தேனா.”என்றாள்..
ஆஸ்வதி இரு கையையும் விரித்தவாறே..”இருக்கலாம்..”என்றாள்.
அதனை கேட்ட அதிதி கோவமாக ஆஸ்வதி அருகில் நெருங்க… அபூர்வா உடனே அதிதியை தன் பக்கம் இழுத்துக்கொண்டார்.. ஆஸ்வதி ப்ரேமையே அடித்தவாளாகிற்றே.. அதும் இல்லாமல் அதிதியும் தான் ஒரு தரம் அவளிடம் ந்னறாக வாங்கிக்கட்டிக்கொண்டாள்..
“ம்ச்,. மா என்ன விடு…”என்று அபூர்வா கையில் இருந்து விடுபட போராட…..
அபூர்வாவோ.”கொஞ்சம் அமைதியா இரு அதிதி.. அவ உன்ன வேணுக்குனு சண்டைக்கு இழுக்குறா. நீயும் அவகிட்ட வாய குடுக்குற….. ஏற்கனவே அவ கிட்ட வாய குடுத்துதானே வாங்கிக்கட்டிக்கிட்ட….”என்றார் அபூர்வா
“மா.. உன்ன அத கேட்டேனா.. விடு என்னை..”என்று அவர் கையை உதறிவிட்டு ஆஸ்வதியை முறைத்தவாறே தன் அறைக்கு சென்றுவிட்டாள்.
இங்கு அபூர்வாவோ ஆஸ்வதியை முறைத்தவாறே.”என் அப்பா இருக்குற தைரியத்துல ஆடாத,. இப்போ அவர் இல்ல அத நியாபகம் வச்சிக்கோ.”என்றார் அபூர்வா
“ம்ம்ம். அத தான் நானும் சொல்றேன் தாத்தா இங்க இல்ல…. அவர் இல்லாத நேரத்துல வீண எங்கிட்ட வம்பு பண்ணாதீங்க… தாத்தா இருந்தாவாச்சும் அவர் முகத்துக்காக உங்கள மன்னிச்சி விட்டுட்டு இருக்கேன்.. இல்ல……”என்று ஆஸ்வதி தைரியமாக அவரை பார்த்து முறைக்க….
“உனக்கு ரொம்ப தைரியம்.”என்றார் அபூர்வா கோவத்தில் பல்லை கடித்துக்கொண்டு.
“எனக்கு தைரியம் இல்லனு நா சொல்லவே இல்லையே.”என்றாள் ஆஸ்வதி நக்கலாக….
அவள் இவ்வாறு பேசியதும் அபூர்வா அவளை ஆராய்ச்சியாக பார்த்தார்.. இவ்வளவு நாளாக அடங்கி இருந்தவள் இன்று எப்படி இப்படி திமிராக பேசுகிறாள். என்று அவளை பார்க்க….. அவளோ. அவரையே தான் உன்னிப்பாக பார்த்தாள்..
“ஏய் இங்க என்ன பண்ற…. போய் எங்களுக்கு சாப்பாடு அரேஜ் பண்ணு. வெட்டியா சீன் போடுறது..”என்றவாறு அங்கு வந்தார் ரியா..
அவரை பார்த்ததும் ஆஸ்வதி அவரை அசராமல் பார்த்தவள்..
“நா இந்த வீட்டு மருமகளா வந்துருக்கேன். வேலைக்காரியா இல்ல…..”என்று அவர் முகத்தை பார்த்து திமிர்வாக பேச…..
அதில் அதிர்ந்த ரியா…”இங்க பார்த்தியா அபூர்வா.. மாமா இருந்த வர இவ எப்டி இருந்தா இப்போ இவ எப்டி இருக்கானு.. அவர் இருக்குறப்போ நல்ல அமைதியான பொண்ணு மாறி நடிச்சிருக்கா…”என்றார் கோவமாக….. அவருக்கு பின்னாலே அனைவரும் வந்துவிட்டனர்.
அதில் முகம் சிவக்க நின்ற ஆஸ்வதி…”யாருக்கு முன்னாடியும் நடிக்கனும்னு எனக்கு எந்த அவசியமும் இல்ல… இப்போவும் எப்போவும் நா நானா தான் இருக்கேன்”என்றாள்
அவளின் இந்த நேரிடையான தாக்குதலில் அங்கிருக்கும் அனைவரும் ஒரு நிமிடம் அதிர்ந்து போனார்கள் பரத்தோ… ஆஸ்வதியை முறைத்து பார்க்க…. அவள் அங்கு நிற்கும் யாரையும் ஒரு பொருட்டாக கூட நினைக்காமல் தூரத்தில் விளையாடும் ஆதித்தை பார்த்து.
“ஆதி வாங்க…. ப்ளே பண்ணது போதும். சாப்ட போலாம்.”என்றாள் ஆஸ்வதி
இவள் குரல் கேட்டதும் உடனே ஆதி இவள் அருகில் ஓடி வந்து
“ஹான் ஹான் ஏஞ்சல் போலாம்.. எனக்கும் ரொம்ப பசிக்கிது…”என்றான் முகத்தை பாவமாக வைத்துக்கொண்டு. அவன் பாவனையில் உதட்டில் புன்னகை ஒன்று பூக்க…
“ம்ம் ம்ம் போலாம். இங்க என்ன வெட்டி பேச்சி…”என்ற ஆஸ்வதி அங்கு நிற்பவர்களை கேலியாக பார்த்துக்கொண்டே அங்கிருந்து செல்ல….
அதில் அனைவருக்கும் முகம் மிளகாய் தின்றது போல சிவந்து போனது
“ஏன்டா இஷா இவ என்ன இன்னிக்கி இவ்ளோ வித்தியாசமா நடந்துக்குறா…”என்றார் அபூர்வா
“ம்ம் ஆமா அத்த இவ பேச்சே வரவர சரி இல்ல….. வந்தப்போ. குனிஞ்ச தல நிமிராம இருந்தா இப்போ என்னனா. நம்மளையே எதிர்த்து பேசுறா..”என்றாள் அப்போது தான் அந்த பக்கம் வந்த இஷானா.
“ஆமா இஷு. இப்போ கூட நா போய் சூடா பக்கோடா போட்டு தானு சொன்னேன். அதுக்கு என்னமோ. கொலை பண்ண சொன்னது மாறி ஒரு லுக் விடுறா..”என்றான் இஷானா கணவன். ராம் இஷானாவை கேலியாக ஒரு பார்வை பார்த்தவாறு.
அவன் சொன்னதை கேட்ட இஷானா…”ஏன் ராம் உங்களுக்கு இந்த சாப்பாட்ட தவிர வேற ஒன்னும் யோக்கவே தோணாதா…”என்றாள் அவனை முறைத்துக்கொண்டு..
“நா என்ன பண்றது இஷா இந்த வீட்ல எனக்கு இருக்குற ஒரே வேலை அது மட்டும் தானே…”என்ற ராம் இஷானாவை முறைத்தபடி அங்கிருந்து சென்றுவிட்டான்..
இங்கே இப்படி இருக்க அப்போது தான் வெளியில் கிளம்பிய பரத்.. அஜய் கார் ஒரு விபத்தில் சிக்கிக்கொண்டது என்று கால் வந்ததும் அந்த வீடே அதிர்ந்து போய் விட்டது
(வருவாள்..)
அத்தியாயம்-31
ஆஸ்வதியும் ஆதியும் கை கோர்த்துக்கொண்டு தங்களுக்குள் புன்னகைத்தபடி அந்த நிமிடத்தை சந்தோஷமாக நினைத்தபடி நடந்து வந்துக்கொண்டிருக்க……
அப்போது ஒரு நான்கு பேர் அவள் அருகில் வந்து அவளை இடித்துக்கொண்டு சென்றனர்.. அதனை கண்ட ஆஸ்வதி அவர்களை திரும்பி பார்க்க…. அவர்களோ அதனை பொருட்படுத்தாமல் மெதுவாக நடந்து இவளை பார்த்து இழித்துக்கொண்டே போக…. ஆஸ்வதிக்கு கோவம் வந்தது..
அது மட்டும் இல்லாமல் அசிங்கமாக அவளை வருணித்தும் சென்றனர். அதை கேட்ட ஆதியின் கைகள் இறுக்கிக்கொண்டு அவர்களை முறைத்துக்கொண்டும் நடந்தவாறே ஆஸ்வதியின் அருகில் நடக்க… ஆஸ்வதி வாயில் எதோ முனுமுனுத்துக்கொண்டே நடந்து வந்தாள்.
“ஏஞ்சல் என்னாச்சி”என்றான் ஆதி அவளது முனங்களை கேட்டவாறே…
“அதலா ஒன்னும் இல்ல ஆதி நாம போலாம்.”என்றாள்
“ம்ம்ம். என்று தலை ஆட்டிவிட்டு அவர்கள் செல்லும் போது அதே நான்கு பேர் வந்து மறுபடி அவளிடம் வம்பு செய்தனர்
“என்னமா.. இவன் கூடவா வந்த”என்றான் ஒருவன்
ஆஸ்வதி அதை கேட்டவனை பார்த்து முறைக்க…..
“பாத்த தெரில ஆளு ஒரு மாறி இருக்கனே மா உனக்கு கஷ்டமா இல்ல” என்றான் ஒருவன்
“அத விடு டா..ஆளு சும்மா சூப்பரா இல்ல”என்றான் ஆஸ்வதியை கீழ் இருந்து மேல் வரை பார்த்து. அதில் ஆஸ்வதி சற்றே கோவத்துடன்
“கொஞ்சம் தள்ளுங்க நாங்க போகனும்”என்றாள்.
“எங்க போனுமா சொல்லு நாங்க கூட்டிட்டு போறோம்..”என்றான்
“இங்க பாருங்க அவ என் ஏஞ்சல் அவள எதாவது சொன்னா அப்புறம் தாத்தூட்ட உங்கள சொல்லிவிட்றுவேன்”என்றான் ஆதி விரலை நீட்டி அவர்களை எச்சரித்தவாறே…
“இங்க பாருடா மிரட்டுறத….”என்று ஆதி கையை பிடித்து முறுக்கினான்
அதில் அவன் கை வலிக்கா”ஆஆ… வலிக்கிது ஏஞ்சல்”என்று கத்தினான்
“அவர விடுங்க ப்ளீஸ் என்று அவனது கையை விடுவிக்க போராடிக்கொண்டு இருந்தாள்
“என்னமா கண்ணு உன் புருசன விடனுமா. என்று அவன் அவளை ஒரு மாதிரி பார்த்துக்கொண்டே இப்பொது அவள் கையை பிடித்துக்கொள்ள… அதில் அவள் தன் கையை விடுவிக்க போராடிக்கொண்டு இருந்தாள்.. அதனை பார்த்த ஆதிக்கு அவர்களை இங்கயே கொல்லும் அளவிற்கு வெறி வந்தது ஆதியின் கண்கள் இரண்டும் கோவத்தில் சிவந்து போக…
பின் அங்கு ஒரு காவலர் வருவதை பார்த்த அந்த நான்வரும் தங்களுக்குள் எதோ பேசிக்கொண்டு அவர்களை விட்டு விலகினர்..
அதில் ஒரு பெருமூச்சை விட்டுவிட்டு ஆஸ்வதி அவனை அழைத்துக்கொண்டு காரில் ஏறி அமர்ந்தாள்
அவள் கண்களில் மட்டும் கண்ணீர் வழிந்த வண்ணம் இருந்தது.
அதை கண்ட ஆதி அவள் கண்ணீரை துடைத்துவிட்டு “அழாத ஏஞ்சல் நாம தாத்தூட்ட இவங்கள பத்தி சொல்லலாம் அவரு இவங்கள அடியடினு அடிச்சிடுவாறு”என்றான்.
அதில் அவன் புறம் திரும்பி உட்கார்ந்த ஆஸ்வதி அவன் கையை எடுத்து சுற்றி முற்றி பார்த்து “எங்கயாச்சும் வலிக்கிதா”என்றாள்
அவன் அப்போதுதான் வலியை உணர்ந்தவன் போல “ஆஆஆ… ஆமா ஏஞ்சல் வலிக்கிது.”என்றான்
உடனே அவள் அவன் கையை தேய்த்துவிட்டு “வீட்டுக்கு போய் மருந்து போட்டுவிடுறேன்.. ஆதி இது தாத்தூக்கு தெரிய வேணா”ஏன்றாள்
“ஏன் ஏஞ்சல்”என்றான்..
“இல்ல ஆதி இது தாத்தூக்கு தெரிஞ்சா அப்புறம் தாத்தா நாமள வெளிய விடமாட்டாரு அப்பறம் எப்டி நாம உங்களுக்கு டாஸ்லா வாங்குறது”என்றாள் முகத்தை பாவமாக வைத்துக்கொண்டு
அவள் சொன்னதை எல்லாம் கேட்டுக்கொண்டு “ஆமல இது தாத்தூ கேட்டிச்சி டாய்ஸ் வாங்க விடாது.”என்றான் ஆதி
அவன் சொன்ன பாவனையில் இவ்வளவு நேரம் இருந்த சஞ்சலம் நீங்கி அழகாக புன்னகைத்தாள் ஆனால் ஆதியின் முகமோ கோவத்தில் கொடூரமாக மாறியது.
“என் வதுவையாடா தொடுறீங்க….. இன்னிக்கி ஒரு நாள் தான்டா உங்க கை உங்க உடம்புல இருக்கும்…”என்று மனதில் கர்ஜீத்துக்கொண்டான்..
பின் வீட்டிற்கு சென்று இருவரும் உடை மாற்றி இரவு சாப்பிட கீழே வந்தனர். இருவரும் சிரித்து பேசி விளையாடிக்கொண்டே கீழே வந்ததை பார்த்து அங்கு இருந்த அனைவருக்கும் எரிச்சலாக வந்தது.. அதும் பூனம் அன்று தன் கணவனை ப்ரேமை பார்க்க சொல்லிவிட்டு தான் இன்று வீட்டில் உட்கார்ந்திருந்தார்..
தன் மகன் மட்டும் அங்கு கண் விழிக்காமல் செத்தவன் போல் கிடக்க….. இங்கு இவர்கள் ஊர் சுற்றி கொண்டாடுகிறார்களா.. என்று எண்ணியவள். எதோ பேச வர…. அப்போது தான் தன் கணவன் “எதும் இனி நீ அங்க பேச கூடாது.. நம்ம அவன தீத்துக்கட்டிட்டு அவள பார்த்துக்கலாம்…”என்று சொன்னது நியாபகம் வர… இருக்கு டி உனக்கு என் புள்ள மட்டும் சரி ஆகி வரட்டும் அப்புறம் இருக்கு உனக்கு.. என்று மனதில் வசைப்பாடிக்கொண்டாள்..
அபூர்வாவோ… ஒரு படி மேலே சென்று ஆதியை பார்த்து முறைத்துக்கொண்டே இருந்தாள். ஆனால் ஆதியோ ஆஸ்வதியோ அங்கு யாரையும் கவனிக்கவே இல்லை.. அவர்கள் உலகம் அனி விதுன். எப்போதாவது விஷால்…அவ்வளவே..
பின் அனைவரும் சாப்பிட்டு தங்கள் அறைக்கு சென்றுவிட்டனர். விதுனும் வந்து அவர்களுடன் சாப்பிட்டு பின் சிறிது நேரம் பேசிவிட்டு தன்னுடைய அறைக்கு சென்றுவிட்டான்
ஆதி அன்று ப்ரேம் தங்கள் அறையில் நுழைந்ததில் இருந்து ஆஸ்வதி உடன் தங்கள் அறையில் தான் தூங்குகிறான்.. தன்னவளின் சந்தேகப்பார்வை இன்னும் அவன் மீது அதிகமாகியதே தவிர குறையவில்லை.. ஆனால் தன் சந்தேகத்தை ஆஸ்வதி வாய் திறந்து அவனிடம் கேட்பது இல்லை. அதுதான் ஆதிக்கு ஆஸ்வதியை நினைத்து ஆச்சரியமாக இருந்தது
அன்றும் ஆதி தன்னவளை இமைக்காமல் பார்த்துக்கொண்டே இருக்க…. ஆஸ்வதி எப்போதும் போல அவனுக்கு தட்டிக்கொடுத்துக் கொண்டே தூங்க வைத்துக்கொண்டு இருந்தாள்.
சிறிது நேரம் சென்றதும் ஆஸ்வதி ஆதியின் பக்கம் படுத்து உறங்கிவிட….. ஆதி மூடிய கண்களை திற்ந்தவன்.. இமைக்காமல் ஆஸ்வதியை தான் பார்த்துக்கொண்டு இருந்தான். அதன் பின் ஆதி எங்கோ எழுந்து மெதுவாக சென்றுவிட்டான்…
அங்கு ஒரு நெடுஞ்சாலையில் உள்ள ஒரு பாரில் நான்கு பேர் உட்கார்ந்து மது அருந்திக்கொண்டு தங்களுக்குள் பேசிக்கொண்டும், கத்திக்கொண்டும் இருந்தனர்.
“ச்ச நல்ல பீஸ்டா அது தப்பிச்சிட்டா.”என்றான் ஒருவன்
“ஆமா டா அந்த போலீஸ் மட்டும் வரல அவள…”என்று ஒருவன் ரசித்து சொல்ல….
“டேய் விடுறா திரும்ப கைல மாட்டாமளா போவா.. அப்போ இருக்கு”என்றான் ஒருவன்
நான்கு பேரும் எதோ எதோ பேசிக்கொண்டு பாரை விட்டு வெளியில் வந்து பேசிக்கொண்டே நடந்து சென்றுக்கொண்டு இருந்தனர்..
அப்போது ஒரு மரத்தின் பின்னால் இருந்து ஒரு உருவம் அந்த நான்கு பேரையும் கண்ணில் வெறியோடு பார்த்துக்கொண்டு நின்றிருந்தது..
அடுத்த நாள் காலையில்.. ஆஸ்வதி எப்போதும் போல பேட்டில் படுத்து உறங்கிக்கொண்டு இருந்தாள் அவள் அருகில் ஆதியும் அவள் கையை பிடித்தவாறு உறங்கிக்கொண்டு இருந்தான்..
பின் ஆஸ்வதி முழிப்பு வந்து புரண்டு படுத்து கண்ணை கசக்கிக்கொண்டு எழுந்தாள். அங்கு அவளவன் காற்றில் அலை அலையாக கேசம் ஆட… அதை கை கொண்டு அடக்க அவளுக்கு ஆசையாக இருந்தது. பின் தூக்கத்தில் கூட மெலிதாக சிரித்த வண்ணம் தூங்கிக்கொண்டு இருந்தான்,.. அதை ரசித்துக்கொண்டே எவ்வளவு நேரம் உட்கார்ந்தாள். என்று அவளுக்கே தெரியவில்லை.. பின் பால்கனியில் ஒளித்த பறவைகளின் சத்தத்தில் தான் நினைவிற்கு வந்து.. தலையில் தட்டிக்கொண்டு குளியல் அறைக்குள்ளே சென்றுவிட்டாள்
குளித்து முடித்து வெளியில் வந்து பார்க்கும் போதும் ஆதி நன்றாக உறங்கிகொண்டு இருந்தான். அவளும் அவனை பிறகு வந்து எழுப்பிக்கொள்ளலாம் என்று கீழே சென்றாள். அங்கு தாத்தா உட்கார்ந்து காபி குடித்துக்கொண்டு இருந்தார் ஆஸ்வதி சிரித்துக்கொண்டே அவர் அருகில் சென்று அவர் காலில் விழுந்தாள்.. இது எப்போதும் நடப்பது தான் தாத்தா மெலிதாக சிரித்துக்கொண்டே அவள் தலையில் கை வைத்து வாஞ்சயாக தடவினார்..
“சாரி தாத்தா.. நேத்து பீச் போய்ட்டு வர லேட் ஆயிட்டு.. உங்கள பாக்க முடில… “என்றாள் முகத்தை பாவமாக வைத்துக்கொண்டே
“அதுக்கு என்னடா எப்பவோ தான நீங்க வெளில போறீங்க..ஆமா நேத்து.. வெளில எதும் பிரச்சனை இல்லல…..”என்றார் தாத்தா.
தாத்தா அப்படி கேட்டதும் ஆஸ்வதிக்கு நேற்று பீச்சில் நடந்தது நியாபகம் வந்தது இருந்தும் அதை தனக்குள் மறைத்துக்கொண்டு..
“அதலாம் எதும் இல்ல தாத்தா நாங்க ஹேப்பியா இருந்தோம் ஆதி கூட நல்ல ஹேப்பியா இருந்தாரு.”என்றாள் ஆஸ்வதி..
“சரிடாமா நீ போய் சாப்டு”என்றார்
“ம்.”என்று தலை ஆட்டிவிட்டு கிட்சன் உள்ளே சென்றாள்..அப்போது டிவியில்..
“வணக்கம்.இன்றைய முக்கிய செய்திகள்..நேற்று இரவு கடற்கரையின் பக்கம் நான்கு பேர் உடம்பில் பயங்கர காயங்களுடன் மயங்கி கிடந்தனர்…அவர்கள் யார் என்று விசாரித்ததில் அவர்கள் நான்கு பேரும் அந்த பகுதியை சேர்ந்த மிகப்பெரிய ரவுடிகள் என்று தெரிய வருகிறது. அது மட்டும் இல்லாமல் அவர்கள் நான்கு பேருக்கும் யார் தாங்களை அடித்தது என்று தெரியவில்லை.”என்று நியூஸ் வாசித்துக்கொண்டே அவர்களின் புகைப்படத்தை வெளியிட்டனர்
அப்போது தான் ஆஸ்வதி தனக்கு காபி போட்டுக்கொண்டு வந்து தாத்தாவிடம் உட்கார்ந்தாள்.. அவள் டிவியில் ஓடிய நான்கு பேரின் புகைப்படத்தையும் பார்த்து அதிர்ந்து போனாள்.
“இது நம்மக்கிட்ட நேத்து சண்டை போட்டவங்களாச்சே. அவங்களுக்கு எப்டி இப்டி ஆச்சி”என்று நினைத்துக்கொண்டே..”ஆமா அவங்களே ரவுடிங்க அவங்களுக்கு இப்டி ஆகலானாதான அதிசயம்”என்று அதனை பற்றி யோசிக்காமல் விட்டுவிட்டாள்.
“அப்புறம் மா ஆஸ்வதி நான் நாளைக்கி ஒரு வேலையா பூனே வரைக்கும் போனும் டா..வர எப்டியும் ஒரு வாரம் ஆகிடும்..அதுவரை நீதான் ஆதிக்கையும் , இந்த வீட்டையும் பாத்துக்கனும்”என்றார் தாத்தா..
அவர் சொன்னதை கேட்டு ஆஸ்வதி அதிர்ந்தாலும் அதை அவரிடம் காட்டாமல்.”ஏன் தாத்தா பெரிய வார்த்தையல்லாம் சொல்றீங்க நான் பாத்துக்குறேன்”என்றாள் ஆஸ்வதி
“ம்ம்…அப்டியே உங்க பாங்க் அக்கவுண்ட் டீட்லை அப்புறம் இந்த வீட்டோட பத்திரம் அப்புறம் உங்க சொத்து எல்லாத்தையும் அவ கையில கொடுத்துட்டு போய்டுங்கப்பா நாங்களும் இனி அவ கீழ அவ கைய எதிர்ப்பார்த்துட்டு உட்கார்ந்துருக்கோம்..”என்றவாற அங்கு வந்தார் அஜய்
அவரை கண்டதும் ஆஸ்வதி அந்த சோபாவில் இருந்து எழுந்துவிட்டாள்…அதை கண்ட அஜயும் பரத்தும் ஒருத்தரைக்கொருத்தர் பார்த்துக்கொண்டு.
“போதும் போதும் எங்க முன்னாடி நடிச்சது.. என்று தன் தந்தையின் பக்கம் திரும்பி.
“அப்பா உங்களுக்கு என்ன ஆச்சி.. உங்களுக்கு இவள எப்டிப்பா புடிச்சிது இவளும் இவ பார்வையும் கொஞ்சம் கூட சரி இல்ல…. இவள இங்க கூட்டிட்டு வந்து எவ்வளவு பெரிய வீட்ட நிர்வாகம் பண்ண சொல்றீங்கனு உங்களுக்கு புரிதா. அதும் இல்லாம நாங்க இந்த வீட்டுல இருக்கோம்.. போயும் போயும் இவள போய் இந்த வீட்ட பாத்துக்க சொல்றீங்க…..”என்றான் அஜய் கோவத்துடன்
அதை கேட்ட தாத்தா அவரை பார்த்து முறைத்துக்கொண்டே இருந்தார்..
“என்னப்பா அவள கேட்காம என்னை முறைச்சி பாக்குறீங்க…..”என்றார் அஜய்
“இந்த வீட்டோட உரிமையானவங்கள தான் நான் இந்த வீட்டோட பொருப்ப கொடுத்துருக்கேன்…அதுக்கு உங்க யாரோட சம்மதமும் எனக்கு வேணாம்…இந்த வீடு அனிஷா ஆதித்தோட வீடு..இதுல உரிமை கொண்டாட…. ஆதித்தோட மனைவியா ஆஸ்வதிக்கு எல்லா உரிமையும் இருக்கு…இத நான் உங்க எல்லார்கிட்டையும் முன்னாடியே சொல்லிருக்கேன் திரும்ப திரும்ப கேட்டா அதுக்கு என்னால எந்த பதிலையும் சொல்ல முடியாது”என்றார் தாத்தா கோவமாக….சொல்லிவிட்டு அவர் அங்கிருந்து கோவமாக சென்றுவிட்டார்
“ச்ச….. இவள என்ன பண்றது..அண்ணா”என்றான் அஜய் தன் அண்ணன் பரத்தை பார்த்து
“ம்ம் விடுடா அதான் அவரு ஊருக்கு போறார் இல்ல….. அது வர இவ எப்டி இந்த வீட்டுல இருக்கானு பாக்கலாம்..”என்றார் பரத் கோவமாக முகத்தை வைத்துக்கொண்டு
ஆனால் அவர்களுக்கு தெரியவில்லை. பெரியவர் ஊரில் இருந்து வரும் போது இருவரும் எந்த நிலையில் இருக்க போகிறார்கள் என்று.
(காப்பாளா.)
அத்தியாயம்-30
ஆஸ்வதி அந்த அறையை பார்த்து அதிரவெல்லாம் இல்லை சொல்ல போனால் அவள் அதனை எதிர்ப்பார்த்து தான் வந்தாள் அப்படியே அறையினை வாங்கிக்கொண்டு சிலை போல நிற்க…. அதனை கொடுத்தவனுக்கு தான் அது அதிகமாக வலித்தது.
ஆதி கீழே இருந்து மேலே தன் அறைக்கு வந்தவனால் கோபத்தினை அடக்க முடியவில்லை.. தன்னவளிற்கு என்ன பேர் கட்ட பார்த்தார்கள் இவர்கள்.. அதானே இவர்கள் தான் கொலை கூட செய்ய தயங்குபவர்கள் இல்லையே அப்படி இருப்பவர்களிடம் எப்படி நாம் நல்லதை எதிர்ப்பார்க்க முடியும் என்று யோசித்தவனால்.ஒருவேளை அவர்கள் சொன்னது போல ஆஸ்வதிக்கு நடந்திருந்தால்.. அவள் எப்படி அனைவரின் முன்னாலும் அவமானப்பட்டு நின்றிருப்பாள். என்று நினைக்க நினைக்க அவனுக்கு வெறி ஏறியது..
அது மட்டும் இல்லாமல் இப்போது ஆஸ்வதியின் பேச்சி.. அதனை ஆதி மாடியில் இருந்து கேட்டுவிட்டு தான் தன் அறைக்கு வந்தான் தன்னவளை பற்றி அவனுக்கு தெரியும் தான் ஆனால் அதற்காக அவர்களை மன்னித்து இதே வீட்டில் இருக்க வைப்பது எல்லாம் கொஞ்சமும் அவனுக்கு பிடிக்கவில்லை.. இது ஆஸ்வதியின் மீது கோவத்தை அதிகரித்தது…
இப்போது “அய்யோ ஏஞ்சல் நீயா..”என்றவாறே ஆதி அவள் அருகில் நெருங்க….. ஆஸ்வதி ஆதியை தான் இமைக்காமல் பார்த்துக்கொண்டு இருந்தாள்
அவளின் பார்வை ஆதியை சுங்கலாக நொருக்கினாலும்.. அவனால் கோவத்தை கட்டுப்படுத்த முடியவில்லை.. அதனால் தான் ஆஸ்வதியை கோவத்தில் அடித்துவிட்டான்.
அவள் அருகில் சென்றவன் ஆஸ்வதியின் முகத்தை இருக்கைகளாலும் பிடித்து அவளது முகத்தை தன்னை நோக்கி இழுத்தவாறே
“சாரி ஏஞ்சல் எனக்கு வேற வழி தெரில….. கோவம் கோவம் கோவம் அத எப்டி காட்டுறதுனு தெரியாம உன்னை அடிச்சிட்டேன். சாரி…”என்று அவன் அறைந்த பக்கத்தினை விரல் கொண்டு வருடியவன்.. அறை வாங்கி இருந்ததில் சிவந்து போய் இருந்த கன்னத்தில் அழுத்தி முத்தம் ஒன்றை வைத்தான்
அவனின் இந்த செயலை கொஞ்சமும் எதிர்ப்பார்க்காத ஆஸ்வதி கண்கள் ஆதியையே இமைக்காமல் பார்க்க….. அவனோ. அவளின் அறை வாங்கிய கன்னத்தை இன்னும் தன் இதழ்களால் மருத்து இட்டுக்கொண்டு இருந்தான்.
ஆஸ்வதி உடலோ அவனின் இந்த செயலில் ஏற்பட்ட கூச்சத்தில் நெளிந்துக்கொண்டே இருந்தது. ஆதி அதனை உணர்ந்தாலும் அவளை அடித்ததற்கான குற்ற உணர்வில் ஏது பேசுகிறோம் என்று கூட அறியாமல் பேசிக்கொண்டே இருந்தான்..
“அவங்க உன்ன என்னலாம் வது பேசுனாங்க….. எப்டிலா உன்ன அசிங்கப்படுத்த திட்டம் போட்டுருக்காங்க….. அதலா பார்த்து எனக்கு அவங்கள கொல்ற அளவு வெறி வருதுமா.”என்றவன் அந்த கோவத்தில் ஆஸ்வதி உடலை இறுக்கிக்கொண்டான்
“இங்க உள்ளவங்க யாரும் மனுசங்களே இல்ல…. எல்லாரும் பணத்தாசை பிடிச்ச மிருகங்கள். அவங்கள அவங்க எல்லாம் என் அப்பாவ….”என்று அவன் ஆரம்பிக்க….. அதற்குள் அவன் உடல் நடுங்குவதை கண்ட ஆஸ்வதி அவனின் நடுக்கத்தை குறைக்க அவனின் நடுங்கும் இதழை கவ்விக்கொண்டாள்..
அவளின் இந்த செயலை அதிர்ந்து நோக்கிக்கொண்டு இருந்த ஆதி.. அவளின் இதழ் தீண்டலை தன் வசம் எடுத்துக்கொண்டான். அவனின் மனதில் ஓடிய அனைத்து துன்பத்தினையும் ஒரே இதழ் முத்தத்தில் முடிப்பது போல ஆரம்பித்தவன். அதனை முடிக்க தான் அவனால் முடியவில்லை
ஆஸ்வதியோ அவனை மாற்ற எடுத்த ஆயுதம் அவளை அவனிடமே மாட்டிவிட்டுவிட்டது. அவனின் இதழ் ஒற்றல் ஒவ்வொன்ன்றும் ஆஸ்வதியை கொன்றது மிகவும் நிதானமான முத்தம் இல்லை அது.. அவசர அவசரமாக…. ஏதோ தன்னவளுக்கு ஆபத்து போலவும் அதில் இருந்து அவளை காப்பவன் போலவும் அவன் அவள் இதழிலே குடி இருக்க ஆசைப்பட்டான்
அவளுக்கோ மூச்சி விடவே முடியவில்லை அவன் கைகள் இரண்டும் அவல் இடையை இறுக்க கட்டிக்கொண்டு நிற்க…. பின் எங்கிருந்து மூச்சி விட….. கொஞ்சம் காற்றிற்கு கஷ்டப்பட்டவள்.. திடீர் என்று கிடைத்த விடுதலையில் அதிர்ந்து கண் விழித்து பார்க்க….. அவள் மட்டும் தான் அந்த பால்கனியில் நின்றிருந்தாள்
ஆஸ்வதி கண்களை சுழற்றி பார்க்க…. ம்கூம் ஆதி இருந்ததற்கான தடையமே இல்லாமல் போனது
ஆஸ்வதி புரியாமல் அறைக்குள் வந்து பார்க்க….. அவள் வந்த போது உடைந்திருந்த பூஜாடி அப்படியே உடையாமல் அழகாக நின்றிருந்தது அதனை பார்த்தவளுக்கு ஒரு நிமிடம் ஒன்றுமே புரியவில்லை அப்படியே அவள் அசையாமல் நிற்க….. கதவு தட்டும் சத்தம் கேட்டது..
ஆஸ்வதி போய் கதவை திறக்க….. அங்கு ஆதிதான் கண்களை கசக்கியாறு நின்றான் அவனை பார்த்ததும் ஆஸ்வதி புரியாமல் அவனை பார்க்க…..
“சாரி ஏஞ்சல் நா தூக்கம் வந்தோனே தாத்தா ரூம்ல போய் படுத்து தூங்கிட்டேன்.. இப்போதா தாத்தா எழுப்பி உன் ரூம்க்கு போனு அனுப்பி விட்டுச்சி..”என்று கண்களை கசக்கியவாறே உள்ளே வந்தவன் அப்படியே கட்டிலில் படுத்து உறங்கிவிட்டான்;
ஆனால் ஆஸ்வதியோ ஒன்றும் புரியாமல் ஆதியையே இமைக்காமல் பார்த்தவாறே கட்டிலில் உட்கார்ந்திருந்தாள்.
பின் அவளது ஒரு வாரமும் எந்த மாற்றமும் இல்லாமல் இவ்வாறே சென்றது..அன்று போல் என்றும் ஆதி அவன் அறையிலே படுத்துக்கொண்டான் அந்த வீட்டில் யாரும் இப்போது ஆஸ்வதி அருகில் கூட நெருங்குவது இல்லை ஆனால் அடிக்கடி அவளை முறைத்துக்கொண்டு மட்டும் சுற்றுவார்கள்
ப்ரேம் இன்னும் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் தான் இருந்தான்.. அவனின் உடலில் எந்த மாற்றமும் இல்லை பூனம் தான் அவனை கூட இருந்து பார்த்துக்கொள்வது. இஷானா இரண்டு நாள் சென்றவள் அதன் பின் மருத்துவமனை தனக்கு ஒத்துக்கொள்ளவில்லை என்று வரவில்லை..
பின் ஒரு நாள் தாத்தா ஆஸ்வதியையும், ஆதியையும் வெளியில் சென்று வர சொன்னார்.
“மா ஆஸ்வதி எவ்வளவு நாளு தான் நீங்க ரெண்டு பேரும் வீட்லையே இருப்பீங்க கொஞ்சம் வெளிலையும் போய்ட்டு வாங்கமா.. அப்போதானே ஆதிக்கும் கொஞ்சம் ரிலேக்ஸா இருக்கும்..”என்றார் தாத்தா.
ஆஸ்வதி தயங்க….”அய் தாத்தூ எங்கள வெளில போக சொல்றீயா. ம்ம் பீச் க்கு கூட்டிட்டு போ ஏஞ்சல். அங்க போய் ரொம்ப நாள் ஆச்சி இந்த தாத்தூ என்னை அங்க அடிக்கடி முன்னலா கூட்டிட்டு போகும் இப்போ தான் கூட்டிட்டே போகல……”என்று இரு கைகளையும் விரித்து அழகாக கூற…..
அதை கேட்ட ஆஸ்வதியால் அவனை மறுக்க முடியவில்லை.. ஆஸ்வதியும்
“சரி தாத்தா. நாங்க முதல மால் க்கு போய் படம் பார்த்துட்டு அப்புறம் பீச் க்கு போறோம்.”என்றாள்..
“சரிமா.. பத்திரமா போய்ட்டு வாங்க…. எனக்கு ஆபிஸ்ல கொஞ்சம் வேலை இல்லனா நா விதுனா உன் கூட அனுப்புவேன்…”என்றார் வருத்தமாக
“அய்யோ தாத்தா அதலாம் ஒன்னும் இல்ல…. நாங்க பத்திரமா போய்ட்டு வரோம்…”என்று அவரிடம் கூறிவிட்டு ஒரு காரில் டிரைவரை அழைத்துக்கொண்டு கிளம்பினர்
ஆதி போகும் வழி எல்லாம் “ஏஞ்சல் மாலுல எனக்கு அது வாங்கி தா.. இது வாங்கிதா.”என்று கேட்டு அவளை கொஞ்சிக்கொண்டே வந்தான்..
அவளும் சிரித்துக்கொண்டே . சரி என்று அவனுடன் பேசிக்கொண்டே வந்தாள்.. அவளுக்கும் மனதில் தன்னவனுடன் நிறைய இடங்கள் சுற்ற ஆசையாக இருந்தது அதனாலே இதனை பயன்ப்படுத்திக்கொண்டாள் எங்கே வீட்டில் பிரச்சனையாக இருக்கும் நேரத்தில் இருவரும் சந்தோஷமாக சுற்றுவது வீட்டில் உள்ள அனைவருக்கும் கோவத்தை இன்னும அதிகப்படுத்துமோ என்று தான் முதலில் தயங்கினாள். ஆனால் ஆதியின் முகம் வெளியில் செல்.. என்று தாத்தா சொன்னதும் பளீர் என்று ஆனதை பார்த்ததும் ஆஸ்வதி எதும் மறுக்காமல் அவனுடன் கிளம்பிவிட்டாள்.
முதலில் இருவரும் மாலிற்கு செல்ல… அங்கு நிறைய கடைகளுக்கு ஆதி அவளை இழுத்துக்கொண்டு போனான்.. அவளுக்கு முதலில் ட்ரேஸ் வாங்க வேண்டும் என்று ஆதி சொல்ல அவள் மறுக்க….. ஆதி அவளை பார்த்த பார்வையில் அவனுடன் பேசாமல் நடந்தாள்
“ஆதி இதலா வாங்க நம்ம கிட்ட பணம் இல்ல….”என்று ஆஸ்வதி கூற….
“ஓஓ…. ஆனா தாத்தூ என் கிட்ட கார்ட் குடுத்து இத யூஸ் பண்ணுங்கனு சொன்னாறே. அதுல இருக்கும்ல…..”என்றவன் அவளை இழுத்துக்கொண்டு அனைத்து கடைகளுக்கும் ஓடினான்.
அவளுக்கு தெரிந்து தான் இருந்தது தாத்தா தன்னிடம் பணம் கொடுத்திருந்தால் அதை தாம் வாங்கி இருக்க மாட்டோம் என்று தான் ஆதியின் கையில் அதனை கொடுத்து அனுப்பி இருக்கிறார் என்று ஆஸ்வதி நினைத்தாள்.
ஆதி அவளை ஒவ்வொரு கடைக்கும் அழைத்து சென்று…”ஏஞ்சல் இது உனக்கு நல்லா இருக்கும் ஏஞ்சல் பிங்க்.எனக்கு பிங்க் பிடிக்கும் ஏஞ்சல் இந்த ட்ரேஸ் பாரேன்…”என்று அவளுக்கு வாங்கி குவித்துவிட்டான்.. அவள் எவ்வள்வோ மறுக்க ஆனால் ஆதி அவளை பிடிவாதமாக வாங்க வைத்தான்
பின் இருவரும் ப்ளே ஏரியாவுக்கு போக….. ஆதி அனைத்தும் நான் விளையாட வேண்டும் என்று அடம் பிடிக்க… ஆஸ்வதி அதற்காக அவனுக்கு டிக்கெட் வாங்கி வந்து அவனை விளையாட வைத்தாள்.
“ஏஞ்சல் என்ன அடிக்கிறான். ஏஞ்சல் என்னை காப்பாத்து ஏய் சோம்பி போ அங்க…. ஏஞ்சல் சேவ் மீ.”என்று ஆதி விளையாட்டில் ஒரு கலக்கு கலன்ங்கிவிட்டான்
அதற்கு ஈடாக அவனுக்கு ஒரு பார்பி டால் கிடைக்க….. “அய் ஏஞ்சல் உன்ன மாறி ஒரு பொம்மை.”என்று அதனை குதுகலமாக வாங்கிக்கொண்டான்..
பின் அங்கிருந்து வெளியில் வந்தவர்கள். ஆதி…”ஏஞ்சல் பசிக்கிது..”என்று கூற…
உடனே இருவரும் ஃபுட் கோர்ட் போய் தங்கள் மதிய உணவை அங்கு முடித்துவிட்டு அடுத்து படம் பார்க்க ரெடி ஆனார்கள்
“ஆதி சோ க்கு டைம் ஆகுது வாங்க போலாம்..”என்று ஆஸ்வதி கத்த
“இரு ஏஞ்சல் எனக்கு சுச்சு வருது..”என்று ரெஸ்ட் ரூம் உள்ளே ஓடிவிட்டான். அதை கேட்ட ஆஸ்வதி முகம் புன்னகையில் விரிந்தது.
பின் இருவரும் படம் பார்க்க உள்ளே செல்ல……”அய் ஏஞ்சல் அங்க பாரு டைனோசர்…அய். அந்த பொம்மை எனக்கு வேணும் ஏஞ்சல்..”என்று அவளிடம் பேசிக்கொண்டே படம் பார்த்துக்கொண்டு இருக்க….. ஆஸ்வதியின் நிலை தான் பாவமாகியது
ஏனென்றால் அவளின் கை ஆதியின் பிடியில் இருந்தது..அவன் அவளது கையை வருடிக்கொண்டே படம் பார்க்க இவளுக்கு தான் அது சோதனையாக இருந்தது..அந்த படம் அவனுக்கு பிடித்த கார்ட்டூன் படம் எனவே அதை இமைக்காமல் அவன் பார்க்க….. ஆஸ்வதியோ தன்னவனின் நெருக்கத்தை வெகுவாக ரசித்தாள்
பின் படம் முடிந்து இருவரும் பீச்சிற்கு செல்ல…. ஆதி குஷியாகி போனான் அவன் அலைகளில் நனைய ஆஸ்வதி ஒரு இடத்தில் நின்று அவனின் சந்தோசத்தை பார்த்துக்கொண்டு இருந்தாள்..
அதை கண்ட ஆதி ஆஸ்வதி அருகில் வந்து அவளின் கையை பிடித்து இழுக்க… ஆஸ்வதி அவனை என்னவென்று கேட்க….
“ஏஞ்சல் வா நாம அலையில விளையாடலாம்..”என்றான்
“நோ ஆதி நா வரல நீங்க போய் விளையாடுங்க…..”என்றாள்
“நோ நாம சேர்ந்து விளையாட தானே வந்தோம் வா விளையாடலாம்…”என்று அவளை அலைக்குள் இழுத்து விட இருவரும் தொப்பளாக நனைந்து போனார்கள் பின் இருவரும் அலையுடன் விளையாடிவிட்டு ஆஸ்வதி கரைக்கு வர…. ஆதியும் அவள் பின்னாலே வந்தான்…
அங்கு அவள் ஒரு இடத்தில் உட்கார்ந்துவிட அவன் மணலில் வீடு கட்டி விளையாடிக்கொண்டு இருந்தான்.. அவனை பார்த்து ஆஸ்வதி ரசித்துக்கொண்டே இருந்தாள். அவளின் காதல் நாயகன் விளையாடுவதையே ஆஸ்வதி ரசித்துக்கொண்டிருக்க…. ஆதியோ அவளை பார்க்காமல் பார்த்து ரசித்துக்கொண்டிருந்தான்..
இளம் ரோஜா நிறத்தில் வெள்ளை நிற எம்ப்ராய்டரி போட்ட சுடிதார் அணிந்துக்கொண்டு.. வெள்ளை நிற பேலஷோ பேண்ட் அணிந்துக்கொண்டு. தலையில் ஒரு சிறிய க்ளிப் மட்டும் போட்டுக்கொண்டு விரித்து விட்டபடி. முகத்தில் எந்தவித மேக்கப்பும் இல்லாமல். வகுட்டில் மட்டும் இவன் என் கணவன் என்று சொல்லும் விதமாக பொட்டை வைத்துக்கொண்டு மூக்கில் ஒரு பக்கம் மட்டும் வளையம் மாட்டிக்கொண்டு அழகு சிலை போல உட்கார்ந்திருக்கும் ஆஸ்வதியை பார்க்க பார்க்க ஆதிக்கு திவட்டவில்லை
அவளையே இமைக்காமல் பார்த்திருந்தவனுக்கு அவளை முதல் முதலில் பார்த்த நியாபகம் வந்தது.. அது ஆஸ்வதி ஆதி படித்த காலேஜில் அட்மிஷனுக்காக அவள் தந்தை கூட வந்திருந்த போது தான் அவளை முதலில் பார்த்தான்..
அன்று சரியான மழை ஆஸ்வதியின் அப்பா. தன் இரு சக்கர வாகனத்தில் அவளை கல்லூரிக்கு அழைத்து வர… உள்ளே செல்வதற்கு முன் பலமான இடியுடன் கூடிய மழை பெய்ய துவங்கியது.. அப்போது ஆதியும் அவன் நண்பர்களும் அடுத்த மாதம் நடக்கும் கால்பந்து போட்டியில் கலந்துக்கொள்ள இருப்பதால். அன்று ஒரு மாதமாக தீவிரமாக பயிற்சி எடுத்துக்கொண்டு இருந்தனர்..
அன்றும் அப்படி தான் அனைவரும் க்ரவுண்டில் விளையாடிக்கொண்டு இருக்கும் போது திடீர் என்று மழை பெய்ய ஆரம்பிக்கவும்..
“டேய் மச்சி. மழை டா. வாங்கடா.”என்றான் ஆதியின் நண்பன்
“ஆமாடா மழையில நனைஞ்சி கொஞ்ச நஞ்சம் இருக்குற மூளையும் கரைஞ்சிட போகுது வாங்க போய்டலாம்..”என்று ஆதியின் நண்பன் குணால் சொல்ல…..
அதை கேட்ட மற்றவர்கள் அனைவரும் அவனை முறைக்க… அதில் ஆதி மட்டும் புன்னகையுடன்
“டேய் அடுத்த வாரம் நமக்கு காலேஜ் வைஸ்ல மேட்ச் இருக்கு.. இப்போ மழையில நனைஞ்சா யாருக்காவது எதாவது ஆகி மேட்ச் வராம பங்க் அடிக்கலாம்னு பாக்காதீங்க….. ஒழுங்க உள்ள போங்கடா…”என்று ஆதி மிரட்ட…
அனைவரும் ஆதியை இப்போது பாசமாக பார்த்தவாறே பில்டீங்கை நோக்கி ஓடினர்.. ஆதியும் பாலை கையில் எடுத்துக்கொண்டு தூரல் மேலே படாதவாறே அவசரமாக ஓட….. அப்போது பின்னால் இருந்த ஒரு பூச்செடி மழையில் நனைவதை ரசித்தவாறே. பின்னால் பார்த்துக்கொண்டே ஆதி ஓட…
அப்போது தான் அந்த சம்பவம் நடந்தது.. இங்கே ஆஸ்வதியோ தன் தந்தையுடன் வந்தவள். காலேஜில் அட்மிஷ்ன் போட்டுவிட்டு உள்ளே தந்தை பீஸ் கட்டும் நேரம் தான் வெளியில் நிற்பதாக அவரிடம் சொல்லிவிட்டு மழையை ரசிக்க வெளியில் வர…
அப்போது தான் அவளும் மழையில் நனையும் பூந்தொட்டியை பார்த்தவாறே வந்தவள் கீழே கொட்டி இருந்த தண்ணீரை பார்க்காமல் அதில் காலை வைத்துவிட்டாள்
ஆதியும் எதிரில் யார் வருகிறார்கள் என்பதை பார்க்காமல் வந்தவன் ஓடிவந்த வேகத்திற்கு ஆஸ்வதியின் மீது விழ போனவன். நிமிடத்தில் தன்னை சமாளித்துக்கொண்டான். ஆனால் ஆஸ்வதியால் தன்னை சமாளிக்க முடியவில்லை.. எனவே ஆஸ்வதி ஆதியின் மீது அவன் காலரை பிடித்தவாறே சாய…. ஆதியோ தன் மீது பூப்போலே வந்து மோதிய பெண்ணவளை இமைக்காமல் பார்த்திருந்தான்..
அவனாலும் அந்த திடீர் மோதலை சமாளிக்க முடியாமல் ஆஸ்வதி மீது சாய இருவரும் ஒருவர் மீது ஒருவர் மோதி கீழே விழுந்தனர்
ஆதி யார்டா அது என்பது போல் அவளை பார்க்க…. ஆஸ்வதியோ பயத்தில் கண்களை மூடிக்கொண்டு இருந்தாள். அவளின் இந்த செயல் அவனை இம்சிக்க வைத்தது. மூடிய இமைக்குள் அவள் விழிகள் அசைவதை எதொ அதிசயம் போல் பார்த்துக்கொண்டு இருந்தான் ஆதி
அவனுக்கு இது புதிதாக தோன்றியது அவனும் நிறைய பெண்களை தாண்டி வந்திருக்கிறான். ஆனால் இவள் போல்.. என்று அவளை ஒருதரம் கண்டவனின் முகம் சிவந்து போனது இது அவனுக்கு புதிய அனுபவமாக இருந்தது..
“எத்தனை பெண்களை க்ராஸ் பண்ணி வந்துருக்கேன். ஆனா இவ…. இந்த பொண்ணு.. என்னடா இது நமக்கு எதோ உலகம் அழகா தெரிது. அதும் இந்த நிமிஷம் எல்லாமே அழகா தெரிதே.. ஒரு வேல நமக்கு வியாதி எதும் வந்துட்டோ..”என்று ஆதி மனதிலே பேசிக்கொள்ள…
அப்போது தான் விழிகளை மெதுவாக மிக மெதுவாக திறந்த ஆஸ்வதி. தன் முன்னால் இருந்தவனை கொஞ்சமும் நிமிர்ந்து பார்க்கவில்லை எங்கோ பார்த்தவாறே.
“சாரி சார் தெரியாம….”என்று அவள் ஆரம்பிக்க….
ஆக ஆள் தான் மென்மையானவள்னு நினைச்சா குரல் இன்னும் மென்மையா இருக்கே என்று நினைத்தவன் அவளிடம் எதோ பேச வர…
அதற்குள்.”ஆஸ்வதி.”என்ற குரல் கேட்டதும் அப்போது தான் தாங்கள் இருக்கும் நிலையே இருவருக்கும் புரிந்தது.. உடனே ஆஸ்வதி எழுந்துக்கொண்டவள் அவனை நிமிர்ந்து கூட பார்க்காமல்.. மறுபடி ஒரு சாரியை சொல்லிவிட்டு அங்கிருந்து ஓடிவிட்டாள்
அப்போதே ஆதிக்கு புரிந்து போனது.. அவளுக்கு கண்டிப்பாக தன்னை நினைவில் இருக்காது என்று அதெ போல் தான் ஆஸ்வதி காலேஜிற்கு முதல் முதலில் வரும் போது. ஆதி அவளை தான் இமைக்காமல் பார்த்து ரசித்துக்கொண்டு இருந்தான் ஆனால் ஆஸ்வதியோ ஆதியின் மேனரிஷத்தில் கவர்ந்து தான் அவனை பார்த்தாள். மற்றபடி அவளுக்கு அவனை நியாபகம் இல்லை..
அதே போல் ஸ்வீட்டி பிரச்சனை வரும் போது ஆதிக்கு ஆஸ்வதி மீது அவ்வளவு கோவம்.”அது எப்டி அவ தான் சொல்றானா இவ எப்டி எங்கிட்ட வந்து அவளுக்காக ப்ரோபோஸ் பண்ண முடியும்…”என்று அன்று முழுதும் புலபி தீர்த்துவிட்டான்
ஆஸ்வதி அன்று மட்டும் இல்லை தொடர்ந்து ஆதியை எங்கு பார்த்தாலும் அவனை கண்களால் பருக ஆரம்பித்தாள்.. அதும் அவனுக்கு தெரியாமல்.. ஆனால் ஆதி அவளை எந்த இடையூறும் செய்யாமல் இருந்தான். காரணம் ஆஸ்வதியை பற்றி அவன் விசாரித்தது அப்படி.. ஆம் ஆஸ்வதியின் வாழ்க்கை பற்றி தெரிந்துக்கொண்டவன் அவளது படிப்பிற்கு எந்த இடையூறும் நாம் தரக்கூடாது.. அவள் நன்றாக படிக்கட்டும்
அதற்கு பின் அவளை நாம் அப்பாவிடம் பேசி திருமணம் செய்துக்கொள்ளலாம் என்று தான் ஆதியின் மனதில் ஓடியது.. அதும் தாம் இங்கே இருக்க போவது 1வருடம் தான் அதன் பின் பாரின் போய் படிக்க போகிறோம். அதற்குள் ஆஸ்வதியிடம் தன் மனதை கூறி அவளின் சிந்தனையை மாற்ற வேண்டாம். என்று தன் மனதிற்குள்ளே அவளை காதலித்து வந்தான்..
ஆனால் ஆஸ்வதி எப்படி என்றால். ஆதியை பற்றி தெரிந்துக்கொண்டவள் அவனது செல்வ நிலையை அறிந்து மனதிற்குள் துணுக்குற்றாள். கண்டிப்பாக தனக்கும் ஆதிக்கும் ஏணி வைத்தால் கூட எட்டாது என்பதை மனதில் பதியவைக்க நினைத்தாள்..
ஆனால் அவளது மனம் அவளை ஆதியை காணாமலும். அவனை பற்றி நினைக்காமலும் இருக்க ஒப்பவில்லை. எனவே ஆதியை ஒருநாளில் பத்து தடவையாவது பார்க்காமல் இருக்கமாட்டாள்..
அவளுக்கு ஃபுட்பால் பற்றி ஒன்றும் தெரியாது ஆனால் ஆதியின் காரணமாக அவனின் ஆட்டம் எப்போதெல்லாம் வருகிறதோ. க்ளாஸை கட் அடித்துவிட்டு வந்து உட்கார்ந்து விடுவாள். அதும் அவனுக்கு தெரியாத இடத்தில் உட்கார்ந்து
அவன் எங்கு போனாலும் அவனுக்கு தெரியாமல் சுற்றுவாள்.. கேன்டின் சென்றால். ஸ்டேடியம் சென்றால். கார் பார்க்கிங் சென்றால் எங்குமே அவனை தனியாக இருக்க விடாமல் சென்றுவிடுவாள்
உன் விழிகளில்
விழுந்து நான் எழுகிறேன்
எழுந்தும் ஏன் மறுபடி
விழுகிறேன் உன் பாா்வையில்
தோன்றிட அலைகிறேன் அலைந்தும்
ஏன் மறுபடி தொலைகிறேன் ஓா்
நொடியும் உன்னை நான் பிாிந்தால்
போா்களத்தை உணா்வேன் உயிாில்
என் ஆசை எல்லாம் சோ்த்து ஓா்
கடிதம் வரைகிறேன் அன்பே