அத்தியாயம்-17 “என் விஷ்ணு. என்னை விட்டு போன என் விஷ்ணுவ நா உன்னால தான் கண்டுப்பிடிச்சேன்…”என்றார் வருத்தமாகவும். வேதனையாகவும்.. அதில் ஆஸ்வதி முகத்திலும் வருத்தம் தெரிய….”ம்ம்ம். என் பசங்களிலே எனக்கு ரொம்ப பிடிச்சது என் விஷ்ணு தான்மா அவன் என்னிக்கும் எனக்கு ஸ்பெஷல். அவன் மட்டும் தான் என்னை பத்தி புரிஞ்சவனும் கூட……அவன் அம்மாக்கு கூட ரொம்ப பிடிச்சது அவன தான்…அதுக்கு காரணமும் இருந்துச்சி..நாங்க வழி வழியா பணக்கார பேமிலி இல்ல…. கொஞ்சம் கஷ்டப்படுற குடும்பம் தான்…இது தான் என் பூர்வீகம்.. அப்போ நா இதே பேக்டரிய சின்ன அளவுல ஆரம்பிச்சி இருந்தேன். அதுக்கு என் சோமிப்பு.. என் மனைவி நகை எல்லாமே போட்டேன்.. ஆரம்பத்துல ரொம்ப சொதப்பல்.. பயங்கர இழப்பு.. பசங்களுக்கு பண்ண வேண்டியதை எல்லாம் முழுசா பண்ண முடில… அதுவர கான்வென்ட்ல படிச்சவங்கள மாத்த வேண்டிய சூழல்..ஆனா.. என் பசங்க யாரும் அத ஏத்துக்கல ரகள பண்ணுனாங்க… “நாங்க என்ன ஏழை வீட்டு பசங்களா.. நாங்க அப்டி வளர ஆசப்படல….. நாங்க படிச்சா இங்க படிக்கிறோம் இல்லனா மாட்டோம்னு”ஒரே பிரச்சனை.எனக்கும் என் மனைவிக்கும் என்ன பண்றதுனு தெரில….. அவங்களுக்காக தானே இப்டி உழைக்கிறேன் அத இவங்க புரிஞ்சிக்க மாட்றாங்களேனு வருத்தம்..அந்த வருத்தத்துல இருக்கும் போது தான் விஷ்ணு என்னை பார்க்க ஒருநாள் பேக்டரி வந்தான். “அப்பா.. அண்ணனுங்க….. அக்கா. தங்கை எல்லாம் அந்த ஸ்கூலையே படிக்கட்டும். நா கவர்மென்ட் ஸ்கூல படிக்கிறேன்.அது மட்டும் இல்ல…. இனி காலையில…..ஸ்கூல் போறதுக்கு முன்னாடி.. ஸ்கூல் விட்டு வந்து சாய்ந்திரம் நானும் பேக்டரி வரேன்ப்பா…நானும் தொழில கத்துக்கிட்ட மாறியும் ஆச்சி. உங்களுக்கு உதவி பண்ணதுமாறியும் ஆச்சினு சொன்னான். அப்போ விஷ்ணுக்கு வயசு வேறும் 10 தான்.எல்லாருக்கும் ஒரு ஒரு வயசு ஜாஸ்தி அவ்ளோதான் இந்த வயசுல அவனுக்கு எப்டி இப்டி தோணுச்சினு எனக்கு ஆச்சரியம்.. “அவன அதலாம் வேண்டாம் விஷ்ணு அப்பா எப்டியாச்சும் பீஸ் கட்றேனு எவ்வளவோ சொல்லி பாத்தேன். அவன் கேட்கல……இப்டியே போச்சி.. தொழிலுல செட் ஆக எனக்கு 10 வருஷம் ஆச்சி.. அதுவர விஷ்ணு கவர்மென்ட் ஸ்கூல தான் படிச்சான்.. காலேஜும் அப்டிதான் ஆனா மத்த பசங்க எல்லாம் இந்த ஸ்கூல் தா படிப்பேன். இந்த யூனிவர்சிடில தா படிப்பேனு ஒரே ரகள…..”என்று பெருமூச்சினை விட்டவர் “விஷ்ணு உன் ஒருத்தன் கவர்மென்ட்ல படிக்கிறதால அப்பாக்கு ஒன்னும் காசு மிச்சம் ஆக போறது இல்லனு சொல்லி பார்த்தேன்.. அட்லீஸ்ட் எனக்கு செலவு செய்றதையாவது அண்ணணுங்களுக்கு செய்லாமேனு சொல்லிட்டான்.. அப்புறம் இந்த ஃபேக்டரி சம்பந்தப்பட்ட படிப்பு தான் எடுப்பேனும் சொல்லிட்டான் அதும் எனக்காக தானு எனக்கு தெரியும்.இப்டில இருந்தவன் மேலே பாசம் வரதுலையும்,.. அவன் எனக்கு ஸ்பெஷல்னு சொல்றதுலையும் தப்பு இல்லையே படிச்சி முடிச்சோனே மத்த பையனுங்களாம் பாரின் போய் படிக்கனும்னு ஒரு போராட்டம் அனுப்புனேன் அப்போ விஷ்ணு என்னோட தான் ஃபேக்டரிய பார்த்துக்கிட்டான். “ இப்டி நிறைய விஷயத்துல விஷ்ணு எனக்கு தனியா தெரிஞ்சான்…அவன் முதல் முதல பேக்டரிய தலை எடுத்தப்போ. முதல் ப்ராஜக்ட் சக்ஸசா ஆனதுல அவன் பங்கு பணத்த வச்சி இந்த காப்ப எனக்கு வாங்கிக்கொடுத்தான்…”என்று அந்த காப்பினை இப்போது அவர் வாங்கிக்கொடுத்தது போல முகம் பெருமையில் பொங்க வருடிக்கொண்டிருந்தார். அதனை ஆஸ்வதியால் ரசிக்காமல் இருக்க முடியவில்லை.. “அப்போ அவன் பையன் ஆதி எப்டி இருப்பான் அப்டியே என் விஷ்ணுவோட கார்பன் காப்பி மாறி தான் ஆதித்தும்.. அதனாலே மத்தவங்க விட ஆதி எனக்கு ஒரு படி மேலே தான் அதுகூட இன்னும் என் பசங்களுக்கு பிடிக்கல….. இப்போ பேரன் பேத்திங்களும் சேர்ந்துட்டாங்க… ஆதிய பார்த்தாலே அவங்க முகத்துல வெறுப்ப பார்த்தேன்.. “அதா ஆதித்த இங்க காலேஜ் முடிச்சி பாரின் அனுப்பிட்டேன்.. இது விஷ்ணுக்கு பிடிக்கல….. அவன் என் கூடவே இருக்கட்டும்னு கெஞ்சினான். ஆனா ஆதி மேல இவங்க வைச்சிருந்த வெறுப்ப பார்த்து நா பயந்துட்டேன்.. அந்த நேரத்துல் ஆதித்துக்கும் மேலே பாரின்ல படிக்க ஆசை.அவனும் என் பேச்ச கேட்டுட்டு பாரின் போய்ட்டான். அப்புறம் தான் பல துக்கமான சம்பவம் நடந்துச்சி. அதுல ஒன்னு.என் விஷ்ணு.”என்றார் கண்கள் கலங்கி. அவர் சொன்னதை அதுவரை கேட்டுக்கொண்டு இருந்த ஆஸ்வதிக்கு ஆதிக்கு ஆபத்து என்பது மட்டும் மனதில் பதிந்து போனது.. கண் கலங்கும் தாத்தாவை பார்த்து ஆஸ்வதியும் கலங்க….இதை எல்லாம் வெளியில் நின்றுக் கேட்டுக்கொண்டிருந்த ஒரு ஜோடி கண்களும் கண்கள் சிவக்க வெறியுடன் மனதில் உறுமிக்கொண்டிருந்தது.. “ம்ம்ம்ம்ம்.. என்று பெரும்மூச்சினை சிந்திய தாத்தா…உன்ன பார்த்ததும் உன் நேர்மை எனக்கு ரொம்ப பிடிச்சிது.. நீ என் ஆதிக்கு நல்ல பொருத்தம்னு தோணிச்சி. ஆதிய பழைய நிலைக்கு நீ கொண்டு வருவனு தோணிச்சி..இதுலா விட உனக்கு பணத்து மேல சொட்டு கூட ஆசை இல்லனு தெரிஞ்சிக்கிட்டேன் அது என் காப்ப எடுத்துக்கொடுத்தோணே புரிஞ்சிட்டு.. இது மட்டும் அன்னின்னி தொலைஞ்சி போய் இருந்தா விஷ்ணு என்னவிட்டு ஒரடியா போய்ட்டானு இடிஞ்சி போய் இருப்பேன்.. அவன் போனதும் இத வச்சிதான் அவன எனக்கு பக்கத்துல உணர்ந்துட்டு இருக்கேன்..இத மீட்டுக்கொடுத்த உன்ன என்னால விடமுடில அதான் உன்ன பத்தி விசாரிச்சென்.. “உன் சித்தி பத்தி தெரிஞ்சதும் தான் உன் கஷ்டமான வாழ்க்கை எனக்கு புரிஞ்சிது.. அப்புறம் உன் தாத்தா. எனக்கு பள்ளி கால தோழன்.. இதுவே உன் கல்யாணத்த கேள்விப்பட்டு உன் தாத்தா என்ட இந்த கல்யாணத்த நிறுத்துங்கனு கோவப்பட்டு பேச வரும்போது தான் எனக்கும் தெரிஞ்சிது அப்புறம் அவன்ட நா ஆதி பத்தி..விஷ்ணு பத்தி என் பிரச்சனை இப்டி எல்லாத்தையும் சொன்னதும் அவனும் ஒத்துக்கிட்டான்.”என்றார் சோர்ந்து போய் சேரில் சாய்ந்தவாறு. ஆஸ்வதிக்கு அவரை பார்க்க பாவமாக தான் இருந்தது அவரும் இந்த வயதில் எவ்வளவு போராட்டத்தை தாண்டி வருகிறார் என்று அவரை கண்களில் கனியுடன் காண… “ம்ம்ம்,. நீ நினைக்கலாமா இதலா ஏன் இப்போ நம்மகிட்ட சொல்றாருனு உன் தாத்தா மேலே எந்த தப்பும் இல்ல….. அவருகிட்ட நீ பேசாம மட்டும் இருந்துடாத டா…”என்க….. “அய்யோ தாத்தா அப்டிலா அவர் மேலே எனக்கு எந்த கோவமும் இல்ல தாத்தா..”என்றாள் அதிர்வுடன்.. “இன்னிக்கி காலையில உனக்கு அவன் போன் பண்ணுனானாம் ஆனா நீ எடுக்கலனு கவலையில எனக்கு பண்ணி புலம்புனான்.”என்றார் தாத்தா. அதை கேட்டு ஆஸ்வதி தன் தலையில் தட்டிக்கொண்டு…”ம்ச். சாரி தாத்தா இந்த கல்யாணம் அவசரமா நடந்துச்சா நானும் மறந்துட்டு போன வீட்லையே வச்சிட்டு வந்துட்டேன்…இங்க வந்ததுல இருந்து அதை மறந்துட்டேன்,. தாத்தாட்ட பேசுறதையும்…”என்றாள் வருத்தத்துடன் “அதுக்கு என்னடா இந்தா என் போன் உன் தாத்தாட்ட பேசு ஈவ்னிங் ஆதியோட வெளில போய் நல்ல போனா ஒன்னு வாங்கிக்கோ…”என்றார் தன் போனை நீட்டியவாறு. அதை வாங்கி தன் தாத்தாவிற்கு அழைக்க….அவர் எடுத்ததும் ”தாத்தா…”என்றாள் உருகிய குரலில் அதில் இவ்வளவு நேரம் இருந்த கலக்கம் மறைய ஆஸ்வதியின் தாத்தாவும் “மா. ஆஸி.எப்டிடா இருக்க…..”என்றார் அதில் கண்கலங்க……”நா நல்லா இருக்கேன் தாத்தா. நீங்க எப்டி இருக்கீங்க….. என்ன பத்தி கவலப்படாதீங்க….. எனக்கு இங்க தாத்தா ஆதினு எல்லாரும் இருக்காங்க….”என்க அதில் அவளுக்கு எதிரில் உட்கார்ந்திருந்த பெரியவரின் மனம் நெகிழ்ந்து போனது “சரிடாமா.. தாத்தா மேலே கோவம் இல்லையே.”என்றார் “ம்ச். தாத்தா நீங்க என்ன பண்ணுனாலும் என் நல்லதுக்கு தானே பண்ணுவீங்க….இதுல நா கோச்சிக்க என்ன இருக்கு..”என்றாள் அதில் பூரித்து போனவர். கொஞ்ச நேரம் இருவரும் பேச…. பின் போனை வைத்த ஆஸ்வதியின் முகம் தெளிவாக இருந்தது…அதை பார்த்த பெரியவர் முகம் சற்று நிம்மதியானது.. “அய்யோ தாத்தா மணி ஆச்சி வாங்க சாப்ட போலாம்..”என்றாள் ஆஸ்வதிக்கு “இருமா இன்னும் சில விஷயம் இருக்கு..”என்றார் “சாப்டு வந்து பேசலாம் தாத்தா. டேப்ளட் வேற போடனுமே..”என்றாள் கட்டளையுடன் அதில் புன்னகைத்தவர்..முகம் சற்றேன்று இறுகிப்போனது அதை கவனித்த ஆஸ்வதி முகம் கேள்வியாக அவரை காண…. “மா ஆஸ்வதி நா சொல்றத நல்லா கேளு. இந்த வீட்ல யாரையும் நம்பாத… என்னையும். விதுனையும். அனியையும் தவிர வேற யாரும் இங்க ஆதியையும் உன்னையும் நல்லா இருக்கனும்னு நினைக்க மாட்டாங்க….. ஆதிக்கும் உனக்கும் எதோ இங்க சரி இல்ல……அத என்னால உணரதான் முடிது ஆனா என்னால அது என்னனு தெரிஞ்சிக்க முடில… இங்க யாரும் சரி இல்ல….. அது யாரா இருந்தாலும் சரி நீதான் ஆதியையும். அனியையும் அதுல இருந்து காப்பாத்தனும்.”என்றார் கண்கலங்க அதில் தடுமாறிய ஆஸ்வதிக்கும் இங்கு எதோ நடப்பது போல தான் இருந்தது…எதோ மறைவாக….யாரோ தங்களை பார்த்துக்கொண்டிருப்பது போல இங்கு வந்ததில் இருந்து ஆஸ்வதிக்கு தோன்றும். ஆனால் இப்போது தாத்தா சொல்வதை கேட்கும் போது ஆஸ்வதிக்கு மனதில் பயமொன்று எழுந்தது.. தன்னவனுக்கு எதோ என்று தோன்ற….தாத்தா தன் முகத்தையே பார்ப்பது புரிந்து சரி என்று தலை ஆட்டினாள்.. அதில் தாத்தா முகம் கொஞ்சம் நிம்மதியுற… “சரிமா வா நம்ம போலாம். ஆதி எழுந்திருப்பான்..”என்று அவளை அழைத்துக்கொண்டு வெளியில் வர…. அப்போது தான் மதியம் சாப்பிட அனைவரும் டைனிங் ஹாலில் உட்கார்ந்திருந்தனர். பெரியவர் வருவதை பார்த்த அனைவரும் ஆஸ்வதியும் அவர் பின்னால் வருவதை பார்த்து பற்களை கடித்தனர் கோவமாக….. “மா. போய் ஆதிய கூப்டு வா…”என்றார் அவளை கனியுடன் பார்த்து அவளும் சரி என்று தலை ஆட்டிவிட்டு தன் அறைக்கு செல்ல….. இங்கு அனைவரும் தாத்தாவை முறைத்தனர். “என்னப்பா இது.. அவள எதுக்கு ஆபிஸ் ரூம்குள்ள கூப்டிங்க…. அங்க நம்ம பேக்டரியோட முக்கியமான அக்கவுன்ட் டீடைல்ஸ்லா இருக்குப்பா.”என்றான் பரத் “ஆமாப்பா.. நம்ம ப்ராப்பர்ட்டி சம்பந்தப்பட்ட டாக்குமென்ட் கூட அங்க தா இருக்கு.. இவள போய் உள்ள விட்ருக்கிங்க….. நாளைக்கே எதாவது இவ தூக்கிட்டு போய்ட்டானா என்ன பண்றது..”என்றான் அஜய் “அதானே…ப்பா. உங்களுக்கு யார உள்ள விடனும்னு கொஞ்சம் கூட யோச்சிக்க தோணலப்பா.. அவ யாரு அவ குடும்பம் என்னனு கூட தெரியாம அவள இந்த வீட்டு மருமகளாக்குனீங்க….. இப்போ அவள ஆபிஸ் ரூம் வர கொண்டு போய்டீங்க… அடுத்து எந்த சொத்த அவளுக்கு எழுத போறீங்க…..”என்று அபூர்வா கத்த….. அவர்கள் பேசுவதை எல்லாம் கேட்டுக்கொண்டிருந்த பெரியவர் அவர்களை கூர்மையாக பார்த்தாறே தவிர எதும் பேசவில்லை அதிலே அனைவரும் அவரை எரிச்சலுடன் பார்க்க…. அவர் அதை எல்லாம் தூசு தட்டுவது போல் ஒரு திமிர் பார்வை பார்த்தார் அங்கு ஆஸ்வதி தன் அறைக்கு சென்று கட்டிலை காண அங்கு ஆதி இல்லை..”ஆதி எங்க இருக்கீங்க….”என்று அவனை கூப்பிட… அவன் இருப்பதற்கான அடையாளமே இல்லை. ஆஸ்வதி குழப்பத்துடன் சுற்றி முற்றி பார்த்து பாத்ரூம் கதவை தட்டிப்பார்க்க அது திறந்துக்கொண்டது.. உடனே ஆஸ்வதி மனதில் பயம் வர……”ஆதி “என்றாள் சத்தமாக….
அத்தியாயம்-16 தாத்தா தன்னை தனியாக அழைத்து பேச விரும்புவதை கேட்ட ஆஸ்வதி தன்னை சுற்றி பார்க்க… அங்கு யாரும் இருப்பதற்கான அடையாளமே இல்லாமல் இருந்தது. “இங்க தான் யாருமே இல்லையே அப்புறம் ஏன் தாத்தா நம்மள தனியா கூப்புடுறாங்க..”என்று மனதில் நினைத்தவள் இன்னொரு தரம் சுற்றிமுற்றி பார்க்க… அங்கு வினிஜா இவளை திருட்டு தனமாக சுவரின் பின்னால் மறைந்தவாறே பார்த்துக்கொண்டு இருந்தார்.. அதை கேட்டு அதிர்ந்த ஆஸ்வதி. “என்ன இவங்க இப்டி ஒட்டுக்கேட்குறாங்க…”என்று மனதில் நினைத்துக்கொண்டே..தாத்தாவை பார்த்து “போலாம் தாத்தா…”என்று தலை ஆட்ட… ஆஸ்வதி தாத்தாவின் அறைக்குள் செல்லும் வரை வினிஜாவையே திரும்பி திரும்பி பார்த்தவாறே செல்ல… வினிஜாவோ ஆஸ்வதி தன்னை கண்டுக்கொண்டாள் என்பதை தெரிந்துக்கொண்டு தன்னை சுவற்றில் பின்னால் மறைத்துக்கொண்டாள்.. இருவரும் ஆபிஸ் ரூமிற்கு சென்றனர்…தாத்தா தன் இருக்கையில் உட்கார்ந்து தனக்கு எதிரில் இருக்கும் இருக்கையை காட்ட…. அதில் உட்கார்ந்தவள் தாத்தாவையே புரியாமல் பார்த்தாள். “மா ஆஸ்வதி உனக்கு இங்க எதும் பிரச்சனை இல்லையே..”என்றார் ஆஸ்வதியை கவலையாக பார்த்தவாறு… அதில் அவள் புரியாமல் பார்க்க..”காலையில நடந்தத நினைச்சி வருத்தப்படுறீயா மா…”என்றார் அவளை ஆழ்ந்து பார்த்தவாறு… “ஐய்யொ அதலா இல்ல தாத்தா நா அத அப்பவே மறந்துட்டேன். நீங்க இன்னும் அத நினைச்சிட்டு இருக்கீங்களா.”என்றாள் அவரை வருத்தத்துடன் பார்த்தவாறு… அதில் அவர் சின்ன புன்னகையுடன்…”ம்ம். எனக்கு ஆதியோட எதிர்காலத்தை பத்தி நிறைய பயம் இருந்துச்சிமா ஆனா என்னிக்கி உன்ன பார்த்தனோ அன்னிக்கே அந்த பயம் போய்டுச்சி…”என்றார் ஆஸ்வதியை அழுத்தத்துடன் பார்த்தவாறு… அவர் சொன்னதில் குழம்பிய ஆஸ்வதி அவரை புரியாத பார்வை பார்க்க…. “என்னமா இவர் எப்போ நம்மள பார்த்தாருனு குழப்பமா இருக்க….”என்று கேட்க ஆஸ்வதி ஆம் என்று தலை ஆட்டினாள்… “ம்ம். உன்ன நா முத தடவ பார்த்தது துர்க்கை அம்மன் கோவில தான்….அதும் 1மாசத்துக்கு முன்னாடிதான்”என்றார் தாத்தா. அதில் ஆஸ்வதி தாத்தாவை அதிர்வுடன் பார்த்தாள். ஏனென்றால் ஆஸ்வதிக்கு ஒரு பழக்கம் உண்டு வாரத்தில் வெள்ளி அன்று மட்டும் காலையில் இருந்து சாப்பிடாமல் அவள் வீட்டின் அருகில் இருக்கும் மும்பையின் ப்ரசித்தி பெற்ற துர்க்கை அம்மன் கோவிலுக்கு சென்று அம்மனை கண் குளிர பார்த்ததும் தான் அவளுக்கு அன்று உணவே உள்ளே இறங்கும். அதும் அமம்னுக்கு என்று தயாரித்த பிரசாதத்தை நெய் வைதியம் செய்து கோவிலில் கொடுப்பது மட்டும் தான் அன்று அவளுக்கு உணவு.. தன் வாழ்க்கையில் நடப்பதை. நடந்து முடிந்த எதை பற்றியும் குறை சொல்லவோ. இல்லை எனக்கு ஏன் இந்த வாழ்க்கையை கொடுத்தாய் என்று திட்டவோ அவள் கோவில் செல்வது இல்லை. இந்த விரதம் இருப்பது இல்லை.. அவளுக்கு எந்த வேண்டுதலும் இல்லை.. ஆனால் அவளுக்கு 16வயதில் இருந்து இந்த பழக்கம் அவளுக்கு ஒட்டிக்கொண்டது.. காலையில் இருந்து நீர் கூட அருந்தாமல் அவள் துர்க்கை அம்மனை மனதில் நினைத்து இந்த விரதத்தை மேற்கொள்வாள்.. அவளுக்கு அது ரொம்ப பிடிக்கும்… இதை விஷாலி கூட கண்டித்திருக்கிறாள்.. அவள் எது சொன்னாலும் கேட்கும் ஆஸ்வதி இதில் மட்டும் விஷாலியை கண்டுக்கொள்ளாமல் போய்விடுவாள்..விஷாலி அத்ற்கு சண்டை போட்டாலும் சரி ஆனால் ஆஸ்வதி அவளை கொஞ்சி கெஞ்சி எப்படியோ சமாளிப்பாள்.. அப்படி ஒருநாள் ஆஸ்வதி காலையில் இருந்து விரதம் இருந்து மாலை அம்மன் கோவிலுக்கு சென்று வாசலில் பூவை வாங்கி உள்ளே சென்று அம்மனை இமைக்க மறந்து பார்த்துக்கொண்டிருந்தாள்.. அவளுக்கு அம்மனை ரசிக்க பிடிக்கும்.. அதும் சந்தன நிற அம்மனை நல்ல அரக்கு நிற புடவையில் அழகாக அலங்கரித்து தலையில் தங்க நிற வலை துணியில் முக்காடு போட்டிருந்த அம்மனை காண அவளுக்கு என்றும் போல அன்றும் இரண்டு கண் போதவில்லை… சாந்த சொரூபினியாக இருக்கும் அம்மனை பார்த்தே அவள் சொக்கி போனாள்.. அம்மனை பார்த்தவாறு இருந்தவள் கண்களை அம்மனிடம் இருந்து பிரிக்க முடியாமல் பிரித்தவள் அந்த கோவிலின் வளாகத்தை சுற்ற ஆரம்பித்தாள்.. அப்படி அவள் தரையை பார்த்துக்கொண்டே சுற்ற ஆரம்பிக்க…. அப்போது அவள் கண்களில் மாட்டியது ஒரு தங்க காப்பு.. மாலை வெயிலில் பட்டு மினுமினுக்க…. அதை பார்த்தவள் அதை கைகளால் எடுத்து சுற்றி முற்றி பார்த்தாள். அதிலே அவளுக்கு தெரிந்துவிட்டது கண்டிப்பாக அது வைரங்கள் பதித்த சொக்க தங்க காப்பு என்று.. அதை புரியாமல் பார்த்தவள். கோவிலை சுற்றி முற்றி பார்க்க.. அங்கு அதிக மக்கள் இல்லை.. அங்கு இங்கு இரண்டு மூன்று பேர் தான் நின்றார்கள்.. அப்போதும் கும்பலை தவிர்க்க ஆஸ்வதி மாலை கொஞ்சம் சீக்கிரமாக வந்துவிடுவாள் அம்மனை காண… அதனால் தான் இப்போது அந்த காப்பு யார் கையிலும் கிடைக்காமல் போய்விட்டது அதனை பார்த்தவள் “இது யாரோடையா இருக்கும்.. பார்க்க வைரம் மாறி இருக்கே..இத தொலைச்சவங்க இத தேடி அலைவாங்களே..பாவம்..”என்று அதனை எடுத்துக்கொண்டு கோவிலின் முன்னால் வந்தவள். யாரேனும் இதை தேடுகிறார்களா என்று பார்க்க அது போல யாரும் தேடவில்லை புரியாமல் இத இப்போ என்ன பண்றது. பேசாம போலீஸ் கிட்ட போய் குடுத்தடலாமா.. என்று யோசித்தவள்.. பின் தன் சித்தியை நினைத்தவள்..”நா போலீஸ் ஸ்டேஷன் போனேனு மட்டும் சித்திக்கு தெரிஞ்சிது. வீட்டுக்கே வர வேணாம்னு அப்டியே அடிச்சி தொறத்திடுவாங்க……இப்போ இத என்ன பண்றது..”என்று சுற்றி முற்றி பார்த்தவள் யாராவது இதை தேடி வருகிறார்களா என்று கோவில் வாசலிலே நின்றுருந்தாள்.. ஆஸ்வதி வெகு நேரம் நிற்க மணி இரவு 8 ஆகிவிட்டது.. அவள் இந்த காப்பை உரியவர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற தவிப்பிலே அவள் விரத்தின் போது சாப்பிடும் பிரசாதத்தையும் வாங்க மறந்துவிட்டாள். காலையில் இருந்து சாப்பிடாதவள் உடல் தளர்ந்து போய் இருந்தது.. தான் இன்னும் வீட்டிற்கு வரவில்லை என்பதை தெரிந்து தன்னை தேட யாரும் இல்லை என்ற எண்ணம் வேறு அவளை மனதால் துவள செய்தது.. விஷாலி வந்ததும் இவளை தேடுவாள் தான் ஆனால் இப்போது அவள் 12ம் வகுப்பு முடித்திருப்பதால் நீட் தேர்வுக்கு க்ளாஸ் போய்க்கொண்டு இருந்தாள். அவள் வர இரவு 10மணி ஆகிவிடும். அவளுக்கென்று ஆஸ்வதி சித்தி ஒரு ஆட்டோவை ஏற்பாடு செய்திருந்தார். அதனால் பயம் இல்லாமல் இருக்கும். அவளும் இல்லாமல் தன்னை தன் சித்தி தேடவா போகிறார் என்பதனை நினைத்து ஆஸ்வதிக்கு விரக்தி புன்னகைதான் வந்தது இப்படியே இன்னும் 20நிமிடம் நிற்க… அப்போது கோவிலின் வாசலுக்கு பிஎன்டப்ள்யூ கார் ஒன்று வந்து நின்றது.. கப்பல் போன்ற கார் அதும் இந்த இரவில் கோவில் வாசலில் வந்து நிற்கவும் அங்கு கோவில் சாமான் கடைகளில் இருப்பவர்கள் அந்த காரினை ஆச்சரியமாக பார்த்தனர்…ஆனால் அந்த கார் வந்ததையே ஆஸ்வதி முதலில் கவனிக்கவில்லை.. பின் அதில் இருந்து கருப்பு உடை அணிந்த இருவர் அவசரமாக இறங்கி கோவிலை பார்த்து அரக்க பரக்க ஓடுவதை பார்த்தவளுக்கு அப்போதுதான் அவர்களை கவனித்தாள் அவர்கள் இருவரும் கோவிலையே சல்லடையாக தேட… ஆஸ்வதி அதனை கூர்ந்து கவனித்தாள். பின் இருவரும் இல்லை என்பது போல் தலை அசைத்துவிட்டு கோவிலை விட்டு வெளியில் வருவதை பார்த்த ஆஸ்வதி அவர்களையே ஆழமாக பார்த்தாள் அதற்குள் பக்கத்தில் கடை வைத்திருந்தவரை பார்த்து. “ஏன்ப்பா. இங்க யாராவது ஒரு தங்க காப்பை விட்டுட்டு போய்ட்டாங்கனு எதாவது பேசிட்டு இருந்தாங்களா.”என்றார் கருப்பு உடை அணிந்த பாடிகார்ட் ஒருவர். அந்த கடை காரரும் இல்லை என்று கூற…. அவர்கள் சோர்ந்த முகத்துடன் காரை நோக்கி சென்றனர். அதை பார்த்த ஆஸ்வதி அவர்களை நோக்கி வேகமாக சென்று “சார் ஒரு நிமிஷம்..”என்றாள் அவர்கள் இருவரையும் பார்த்து.. அதில் இருவரும் அவளை நோக்கி திரும்பி.. “என்னமா…”என்றார் ஒருவர் ஆஸ்வதியை யார் என்று புரியாமல். “அது அந்த காப்பு எப்டி இருக்கும்..”என்று கேட்டாள் அவர்களிடம். ஏனென்றால் உடனே அவர்களிடம் அந்த காப்பினை கொடுக்க அவளுக்கு நம்பிக்கை இல்லை அதனால் தான் அடையாளம் கேட்டாள்.. அவர்கள் அவளை வினோதமாக பார்க்க…. அவள் அவர்களை அழுத்தமாக பார்த்தாள் அதிலே அவர்கள் ஒரு நிமிடம் ஒருவருக்கொருவர் பார்த்துவிட்டு தங்கள் போனை எடுத்து அவளிடம் அந்த காப்பின் போட்டோவை காட்ட…. அதிலே அவர்கள் தேடி வந்தது தன் கையில் இருக்கும் காப்பு தான் என்பதை உணர்ந்தவள்.. அவர்கள் நோக்கி.. “அது உங்களோடதா…”என்றாள் சந்தேக கண்களுடன்.. அவர்கள் இன்னும் இந்த பெண் தங்களை நம்பவில்லை என்பதை புரிந்துக்கொண்டவர்கள் ஒருவர் இன்னொருவரை காண அவர் தலை அசைத்துவிட்டு அந்த காரின் அருகில் சென்றார்.. அதனை ஆஸ்வதி பார்த்துக்கொண்டிருக்க… அந்த காரின் கதவினை திறந்துவிட்டார் அவர் அப்போது அதில் இருந்து ஒருவர் இறங்கி வர….. அந்த இடம் கொஞ்சம் இருட்டில் இருந்தது அதனால் இறங்கியவரின் முகம் அவ்வளவாக தெரியவில்லை ஆஸ்வதிக்கு. தெரிந்தாலும் அவள் அதனை பெரிதாக எடுத்துக்கொள்ள போதும் இல்லை. நியாபகம் வைத்திருக்க போவதும் இல்லை..அது வேறு காரில் இருந்து இறங்கியவர் கம்பீர நடை போட்டு ஆஸ்வதி அருகில் வர….. ஆஸ்வதி அவரது கம்பீர நடையிலே இவர் சாதாரண ஆள் இல்லை என்பதை உணர்ந்து அவரை காண….. அவர் முகம் லேசாகதான் தெரிந்தது. “அந்த காப்பு என்னோடது தான் மா..உனக்கு நம்பிக்கை இல்லனா.. நா அத போட்டு எடுத்த போட்டோவ காட்டவா..”என்றார் கம்பீர குரலில் அதில் ஆஸ்வதி கொஞ்சம் அசைந்து கொடுத்தாள்.”இல்ல சார் பரவால நா உங்கள நம்புறேன்.இந்தாங்க…. உங்க காப்பு.”என்று அவர் கையில் கொடுக்க…. அவர் புரியாத பாவனையில் அவளை பார்த்தார். ஆனால் ஆஸ்வதி தன் வேலை முடிந்தது என்பது போல் அந்த இடம் விட்டு நகர….. “எப்பிடி மா இது என்னோடனு நா சொன்னத நம்புற… இதைதான் என் ஆட்களும் சொன்னாங்க ஆனா..என் ஆளுங்க சொன்னத நீ நம்பலையே.”என்றார் சந்தேகமாக அதில் ஆஸ்வதி லேசாக தெரிந்த அவர் முகத்தை பார்த்து…”அவங்க கண்ணுல தொலைஞ்சி போன பொருளுகான வருத்தம் தெரில…. அத கண்டுப்பிடிக்க முடிலையேனு ஏக்கம் தெரில….. அத கண்டுப்பிடிக்கனும்ன்ற கடமை தான் தெரிஞ்சிது.. அதா அவங்கள நா சந்தேகப்பட்டேன்.ஆனா உங்க கண்களுல அதுக்கான வருத்தம்.. ஏக்கம். தேடல் தெரிஞ்சிது.. அதா இது உங்களோடனு கண்டுபிடிச்சேன்..”என்றவள் அவரை பார்த்து சின்ன புன்னகை சிந்திவிட்டு அங்கிருந்து நகர பார்க்க…. “ஏன்மா ஆஸ்வதி துர்காமாக்கு நெய்வைதியம் பண்ணுன பிரசாதத்தை வாங்கவே இல்லையே மா எப்போதும் வாங்கிட்டு உடனே வீட்டுக்கு போய்டுவ….. இன்னிக்கி என்ன இவ்வளவு நேரம் ஆச்சி..நானும் உள்ள இருந்து பாக்குறேன். சாயந்திரம் 4மணில இருந்து இங்கையே நிக்குற……இன்னிக்கி நீ முழு விரதம் வேற,. அம்மன் பிரசாதம் தானே சாப்டு இன்னிக்கி விரதத்தை முடிப்ப…. மணி என்ன ஆகுது பாரு..இந்தா சாப்டு,..”என்று ஒரு இலையில் பிரசாதம் வைத்துக்கொடுக்க அவளும் சின்ன புன்னகையுடன் அதனை வாங்கிக்கொண்டு அங்கிருந்து நகர்ந்தாள் “ம்ச். நல்ல பொண்ணு.. பாவம் அம்மா இந்த மாறி நல்ல பசங்களதான் சோதிப்பா..”என்று அவள் போன திசையை பார்த்துக்கொண்டே அங்கிருந்து நகர்ந்தார் அதனை எல்லாம் கேட்டுக்கொண்டு இருந்தவர் கண்கள் மின்னியது பின் தன் ஆட்களை வைத்து விசாரித்ததில் தான் ஆஸ்வதி பற்றி முழுதும் அவருக்கு தெரிந்தது.. “அன்னிக்கி காணாமல் போனது என்னோடதான் மா..”என்றார் தாத்தாக்கும் அதனை கேட்டு ஆஸ்வதி அவரை ஆழ்ந்து பார்க்க…. அவர்…”ம்ம்ம் அன்னிக்கு மட்டும் இல்ல ஒவ்வொரு வெள்ளியும் என் மனசு குமுறல நா துர்கா அம்மாட்ட தான் புலம்ப வருவேன்.. அன்னிக்கும் அப்டிதான்.. சாயந்திரம் 4மணிக்கு வந்து சாமிய கும்பிட்டு கார் ஏறி ஆபிஸ் போனதும் தான் என் கையையே பார்த்தேன்.. அதிர்ச்சி ஆகிட்டேன்.அதோட மதிப்பு பெருசுனு இல்ல….. வேற அத விட காஸ்ட்லியான நகை தொலைஞ்சி போய் இருந்தா கூட ம்ச் நா அத தேடிருப்பனே தவிர தவிச்சிருக்க மாட்டேன் ஆனா இந்த காப்பு.”என்று தன் கையில் போட்டிருந்த காப்பை வருடியவரது முகம் வேதனையில் கசங்கியது. அதை பார்த்த ஆஸ்வதி…”தாத்தா…”என்றாள் அவரது கைகளை அழுத்தியவாறு அதில் கொஞ்சம் மீண்டவர்..”இது எனக்கு அவ்வளவு ஸ்பெஷல் மா இத குடுத்தது…என் மகன் விஷ்ணு.”என்றார் கண்கள் கலங்கியவாறு.. ஆஸ்வதி அவரையே வைத்த கண் வாங்காமல் பார்க்க… “ம்ம்ம் ஆமாமா.. இது என் 4வது மகன் விஷ்ணு எனக்கு தந்தது…ஆதியோட அப்பா..”என்றார் அதனை வருடியவாரு.
அத்தியாயம்-15 ஆஸ்வதி இப்போது நடந்தது அனைத்தும் கனவா என்பது போல குழப்பத்தில் யோசிக்க… ஆதி அவளது குழப்ப முகத்தை பார்த்து தனக்குள் புன்னகைத்துக்கொண்டான் அவனும் ஒரு நிமிடம் தன்னவளின் அருகில் தன் வசத்தை இழந்து தான் போனான்.. ஆனால் அவனின் குறிக்கோள் அவனை மேலே செல்ல விடாமல் செய்துவிட்டது.. அவனுக்கும் தன்னவளுடன். அதும் தான் இத்தனை வருடம் மனதில் நினைத்து வாழ்ந்துகொண்டிருக்கும் காதல் கண்ணியவள் தன் அருகில் வந்தால் எப்படி எல்லாம் வாழ வேண்டும் என்று கற்பனை செய்துதான் வைத்திருந்தான்.. ஆனால் அப்படி நினைக்கும் போது தான் இப்படி பட்ட சூழலில் சிக்குவான் என்று அவன் அப்போது அறிந்திருக்கவில்லையே.. “ஏஞ்சல்.. எனக்கு தூக்கம் வருது..”என்றான் சிணுங்கியவாறு.. ஆஸ்வதியின் இடையை இறுக்கப்பற்றிக்கொண்டு அவள் மீதே படுத்துவிட்டான்.. அதனை சிறிதும் எதிர்ப்பார்க்காத ஆஸ்வதி அதிர்ச்சியுடன் ஆதியை பார்க்க….. அவனோ. தனக்கு மட்டும் சொந்தமான இடம் என்ற நினைப்பிலோ. இல்லை பல நாட்களுக்கு பிறகு கிடைத்த நிம்மதியிலோ அவள் இடையிலே தலை வைத்து ஆழ்ந்த நித்திரைக்கு சென்றுவிட்டான்.. ஆனால் ஆஸ்வதிக்கு தான் உறக்கமே வரவில்லை.. இன்று ஆதியின் நடவடிக்கைகளை பார்க்கும் போது ஆஸ்வதிக்கு ஆதியின் மனநிலை பற்றி சந்தேகம் வந்துவிட்டது கீழே டைனிங் டேபிளில் ஆதி தன் இடையை பிடித்துக்கொண்டு அவளை பார்த்த ஆழமான பார்வை.. அதும் கண்கள் முழுதும் காதல் ததும்பும் பார்வை அது அதில் ஆஸ்வதி வீழ்ந்து போனாள் என்று சொன்னால் மிகை ஆகாது. இங்கு அறைக்கு வந்ததில் இருந்து நடந்தது அனைத்துமே ஆஸ்வதிக்கு நியாபகம் இருந்தது. அதும் அவளை முழு காதலுடன் கிறக்கமாக அழைத்த ஸ்வா.. என்ற அழைப்பு.. அதை இப்போது நினைத்தாலும் ஆஸ்வதி உடல் சிலிர்த்து போனது.. இப்படி யாரும் அவளை அழைத்தது இல்லை இதுவே முதல் முறை.. அதும் தன்னவன் தன்னை இப்படி அழைத்தது அவள் மனதிற்கு குதுகலமாக இருந்தது.. ஆனால் அடுத்த நொடியே ஆதியின் மாற்றம் அவளை இம்சித்தது. ஆதி நொடியில் மாறியது ஆஸ்வதிக்கு கொஞ்சம் சந்தேகமாக தான் இருந்தது.. ஆனால் காலையில் நடந்ததை வைத்து பார்க்கும் போது அது அவனின் மனநிலை மாற்றமாக கூட இருக்கலாம் என்றே தோன்றியது. ஆதியின் மூச்சிக்காற்று ஆஸ்வதியின் வெற்றிடையில் படிய….. அதில் ஆஸ்வதி தடுமாறி போனாள். அவளால் ஒழுங்காக மூச்சை கூட இழுத்துவிட முடியவில்லை.. எங்கே தான் மூச்சை இழுத்துவிட்டாள் ஆதி கண் விழித்துவிடுவானோ.. என்று சிரமப்பட்டு மூச்சை வெளிவிட்டுக்கொண்டு இருந்தாள். ஆதி தன் முழு எடையும் அவள் மீது விழாமல் அவளின் இருபக்கமும் கால்களால் கட்டிலில் சப்போர்ட் கொடுத்து தான் அவள் இடையை அணைத்தபடி படித்திருந்தான்.. அதனால் அவளுக்கு கொஞ்சம் இலகுவாக இருந்தது.. இங்கு அனிஷா வெளியில் வந்து தனக்காக காரில் காத்துக்கொண்டு இருக்கும் விதுனை கண்களில் காதல் வழிய பார்த்தாள். ஆனால் விதுன் காரில் உட்கார்ந்தவாறு எதோ தீவிரமாக யோசனை செய்துக்கொண்டு இருந்தான்.. அனிஷா காரின் கதவை திறந்து விதுனின் அருகில் உட்கார….. அவள் வந்ததை அப்போது தான் உணர்ந்த விதுன் அவளை பார்க்காமல் காரை ஸ்டார்ட் செய்தான்.. இதில் அனியின் முகம் சுருங்க….. அதை விதுன் காண தான் செய்தான்,. அவனுக்கு அவளில் முகம் சுருக்கல் வலிக்கதான் செய்தது.. ஆனால் விதுன் அவளிடம் நெருங்க முடியாத சூழலில் இருக்கிறான். அனியோ. விதுனை தான் பார்த்துக்கொண்டு வந்தாள்.. அவளுக்கும் விதுனை சிறு வயதில் இருந்தே பிடிக்கும். அவனின் அமைதி.. அதும் அவன் ஆதியுடன் மட்டும் நெருக்கமாக இருப்பதை பார்த்து அனி அவனின் மீது விருப்பம் கொண்டாள்.. அதும் அவனின் மீது காதல் அது இப்போது வந்ததில்லை சிறு வயதில் இருந்து.. ஆதியை தவிர விதுனை அந்த வீட்டில் யாருக்கும் பிடிக்காது ஆதியின் அப்பாவிற்கு விதுன் இன்னொரு மகனாக நினைத்தார் ஆனால் அனிக்கு என்னவோ விதுனை பிடிக்கவில்லை. அதும் அவன் ஆதியிடம் எப்போதும் சேர்ந்தே இருப்பது அவளுக்கு எரிச்சலை தான் தரும். அப்போதெல்லாம் அவள் விதுனை முறைத்துக்கொண்டே சுற்றுவாள் விதுனும் அவள் பார்வையை கண்டுக்கொண்டாந்தான் ஆனால் அவளது சிறுபிள்ளை தனமான முறைப்பு அவனை புன்னகைக்க தான் வைத்தது ஆதி இல்லாத நேரம் எல்லாம் அனி விதுனை திட்டிக்கொண்டே தான் சுற்றுவாள்.. அதும் இஷானா விதுனை பற்றி தவறாக அனியின் மனதில் பதித்துவிட்டாள்.”அவங்க உன் அண்ணன ஏமாத்துறாங்க அனி.. படிக்க வைக்க காசு இல்ல அதுக்கு காசு இல்ல இதுக்கு காசு இல்லனு ஏமாத்தி பாரு ஒன்னும் இல்லாத அவனும் ஆதிக்கூட கான்வென்ட் ஸ்கூல ஜாய்ன் பண்ணிட்டான். இப்டியே அவன் உன் அண்ண… அப்பாவ ஏமாத்தி எல்லாத்தையும் பறிச்சிடுவாங்க பாரு.”என்றாள் விதுன் ஆதியின் நட்பில் உள்ளம் வஞ்சமாக அதனை உணராத அனியும் தன் அண்ணனை ஏமாற்றும் விதுனை வெறுக்க ஆரம்பித்தாள் அன்று அப்படிதான். ஆதிக்கு அன்று 16ஆம் வயது பிறந்தநாள் வீட்டில் பெரிதாக பர்த்டே பார்ட்டி ஏற்பாடு செய்யப்பட்டது. அது அந்த குடும்பத்தின் வழக்கம்.. யாருக்கு பிறந்தநாள் என்றாலும் வீட்டில் சிறப்பாக கொண்டாடுவார்கள்.. அது போல தான் அன்றும் வீட்டின் வெளியில் தோட்டத்தில் அழகாக குடில் அமைத்து.. வண்ண பூக்களால் அலங்கரித்து.. சிறிதாக மேடை அமைத்து பலூன்கள் கட்டப்பட்டு வீடே ஜொலித்தது. ஆதிக்கும் அழகான இளம் பிங்க் நிற சர்வானியை அவன் தந்தை அவனுக்கு கொடுத்து அணிந்து வர சொன்னார் அவனும் அதனை அழகாக அணிந்துக்கொண்டு மிடுக்காக படிகளில் இறங்கி வந்தான் பின் தன் உயிர் நண்பன் விதுனை பார்க்க…. அவனோ அவன் அப்பாவிற்கு உதவியாக வேலை செய்துக்கொண்டு இருந்தான்.. அதனை பார்த்த ஆதி புன்னகைத்தான். இது வருடம் வருடம் நடப்பது தான்.. ஆதி “இந்த வேலையிலா நீ செய்யனும்னு என்ன இருக்கு. அதா வேல செய்ய அவ்வளவு ஆள் இருக்காங்களே…”என்று கோவமாக கேட்க….. அதற்கு விதுன் புன்னகையுடன்…”இல்ல ஆதித் எனக்கு எவ்வளவோ உதவிகள் செஞ்சிருக்க நீ ஏன் இதுவர ஒரு வேல கூட என்ன செய்ய விட்டது இல்லை..ஆனா என் நண்பனோட பிறந்தநாளுக்கான ஏற்பாட நான் தான் செய்வேன் அது இன்னிக்கினு இல்ல நா பெரிய டாக்டர் ஆனாலும் இப்டிதான் பண்ணுவேன். நீ அதுல தலையிட கூடாது…”என்று கட்டளையாக கூற…. அதற்கு மேல் ஆதியால் அவனை கட்டாயப்படுத்த முடியவில்லை அதில் இருந்து ஆதி விதுனின் இந்த விசுவாசத்தை கண்டு பூரித்துள்ளான். இன்றும் அப்படிதான் ஆதி விதுனை கவனித்துக்கொண்டிருக்க….. அப்போது அந்த பக்கமாக சென்ற அனி விதுனை முறைத்துக்கொண்டே அவன் பக்கம் வந்தாள்.. அதை பார்த்த விதுன் அவளை என்ன என்பது போல பார்க்க….. “உனக்கு கொஞ்சமாச்சும் எதாவது இருக்கா.. நா தான் எங்க அண்ண கூட இருந்து விலகுனு சொல்றேன். நீ என்னனா கேட்காம உன் இஷ்டம் போல அவன் பின்னாடியே சுத்துற… என்ன அவன எங்கிட்ட இருந்து பிரிக்க பார்க்கிறீயா.”என்றாள் 10 வயதே ஆன அனி. அவள் பேசுவதை கேட்ட விதுன் அவளை பார்த்து புன்னகைக்க……அதில் கடுப்பானவள். “உன்ன பத்தி தெரியும்,. நீ எங்க கிட்ட இருக்க பணத்தலா புடிகிட்டு எங்கள ஏமாத்ததானே பாக்குற…. அதுக்கு உன்ன நா விடமாட்டேன்..”என்று அனி கோவத்தில் பக்கத்தில் அலங்காரத்திற்கு என்று வைக்கப்பட்ட பூஜாடியை தள்ளிவிட அது சரியாக விதுனின் காலில் விழுந்தது.. அதில்…”ஆஆஆ….என்று வலியில் துடித்துப்போனான் விதுன் அதை பார்த்து அனி கூட பயந்து போனாள். அவள் எதோ கோவத்தில் செய்ய போக அது இவ்வளவு பெரிதாக முடியும் என்று அவள் எதிர்ப்பார்க்கவில்லை.. அனி விதுனின் முகத்தை அதிர்ந்து பார்க்க….. அவன் முகம் வலியில் சுருங்கி இருந்தது.. அவள் எதோ சொல்ல வர….. அதற்குள் ஆதி ஓடிவந்துவிட்டான்…தூரத்தில் இருந்து அனி பேசுவதை கேட்டவன் அனியின் மீது கோவத்தில் அவளை நெருங்குவதற்குள் அனி இப்படி செய்துவிட்டாள் ஆதியை பார்த்த அனி பயத்தில் நடுங்க.. அதை கண்ட விதுனின் மனம் அசைந்து கொடுத்தது “ஆதி அது. நா தான் அத தனியா தூக்குறேனு கால போட்டு உடச்சிட்டேன்டா..”என்றான் தலையை குனிந்தவாறு…ஏனென்றால் விதுன் இதுவரை ஆதியிடம் பொய் சொன்னதே இல்லை.இதுதான் முதல் தரம். அவன் சொன்னதை கேட்ட ஆதி விதுனை அதிர்ச்சியாக பார்த்தான்.. அவனுக்கு தான் விதுனை பற்றி தெரியுமே.. அவன் தன்னிடம் பொய் சொல்லிவிட்டான் என்பதே ஆதியை அதிர்ச்சிக்குள்ளாக்கியது இவர்களை விட அனி தான் அதிகம் அதிர்ந்துவிட்டாள்.. ஏன் தன்னை இவன் மாட்டிவிடவில்லை என்பதே அவளுக்கு அதிர்ச்சியாகவும் குற்றவுணர்ச்சியாகவும் இருந்தது அப்போது தான் அவள் விதுனை பற்றி அறிந்துக்கொண்டாள். ஆதி அவனது அதிர்ச்சியை ஒரம் கட்டிவிட்டு.. “விதுன் காலுல ரத்தம் வருதுடா.”என்றான் விதுன் காலை பார்த்தவாறு அவன் அருகில் ஓட… அதில் அனியும் அதிர்ந்து விதுனின் காலை பார்க்க… விதுனால் வலி தாங்க முடியவில்லை.. நிற்கவே தடுமாற…. உடனே ஆதி அவனை தாங்கிக்கொண்டான்.. “வாடா நாம ஹாஸ்பிட்டல் போலாம்..”என்றான் விதுனின் அப்பாவை சத்தமாக கூப்பிட்டவாறே “டேய் ஆதி இன்னிக்கி உனக்கு பிறந்த நாள் டா இந்த காயம்லா சின்னதுதான். வலிகூட எனக்கு அவ்வளவா இல்லை.. நா பாத்துக்குறேன். நீ போய் பார்ட்டிய எஞ்சாய் பண்றா.”என்றான் வலியில் முகம் சுருக்கியவாறு அதிலே அவன் வலியை பற்றி தெரிந்தவன்.”டேய் உன்ன விட எனக்கு ஒன்னும் இந்த பார்ட்டி முக்கியம் இல்லடா வா போலாம்..”என்க…. “இல்லடா ஆதி இது முக்கியம் தான்.. தாத்தா உனக்காக எவ்ளோ ஏற்பாடு பண்ணிருக்காங்க….. போடா நீ..”என்றவன் தன் அப்பா ஓடி வரவும் அவரிடமும் ஆதியிடம் சொன்னது போல காலில் போட்டுக்கொண்டேன் என்று சொன்னவன் தன் தந்தையை பிடித்தவாறே மருத்துவமனை சென்றான்.. ஆதி எவ்வளவோ எடுத்து சொல்லியும் அவன் வர விதுன் அனுமதிக்கவில்லை.. விதுனின் அப்பாவும் விதுன் சொன்னதையே சொல்லி ஆதியை உள்ளே செல்லுமாறு சொல்லிவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டார் ஆதி அவர்களையே பார்த்துக்கொண்டிருந்தவன் தன் அருகில் அதிர்ச்சியாக இன்னும் நிற்கும் அனியை திரும்பி பார்த்தான். அதை பார்த்த அனி பயந்து போனாள்.. ஆனால் ஆதி அவளை அழுத்தமாக பார்த்துவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டான்.. அனிக்கு தான் வருத்தமாக போய்விட்டது. தன் அண்ணன் தன்னை திட்டிருந்தால் கூட அனி மறந்திருப்பாள். ஆனால் பேசாமல் போனது அனிக்கு கவலையாக இருந்தது. பின் பார்ட்டி முடிந்து அனைத்து விருந்தினர்களும் அங்கிருந்து சென்றுவிட ஆதி மட்டும் எதிலும் ஈடுபாடு இல்லாமல் இருந்தான்.. அவன் அப்பா அவனின் முகம் வாட்டமாக இருப்பதை கண்டு என்னவென்று கேட்க ஆதி சொல்ல மறுத்துவிட்டான்…அவரும் அவனே சரி ஆகிவிடுவான் என்று விட்டுவிட்டனர் ஆதி எப்போதும் ப்ரேம்.இஷானாவிடம் இருந்து விலகி தான் இருப்பான்.. அவர்களிடம் மட்டும் இல்ல அனைவரிடமும் சின்ன ஒதுக்கம் இருக்கும். அவன் நன்றாக பேசக்கூடிய நபர்கள் தாத்தா.. அவன் அப்பா அனி. விதுனிடம் மட்டும் தான் அதனால் அவன் மாற்றத்தை பெரிதாக கண்டுக்கொள்ள அங்கு யாரும் இல்லை அனிதான் அவன் பின்னாலே சுற்றினாள். ஆனால் ஆதி அவளை கண்டுக்கொள்லவில்லை. பின் அன்று இரவே ஆதி அனுவை அழைத்து ஏன் இப்படி செய்தாய் என்று கேட்க அதில் அனி அதிர்ந்துவிட்டாள்.. “ம்ம்ம் நீ தோட்டத்துல நீ விதுன்ட்ட பேசுனதையும் கேட்டேன்.. அவன் காலுல தட்டிவிட்டு அடிப்பட வைச்சதையும் பாத்தேன்.. ஏன் இப்டி பண்ணுன அனி…”என்றான் கோவமாக அதில் நடுங்கியவாறே. தன் மனதில் இருப்பதையும் இஷானா சொன்னதையும் சொல்ல….. அதில் ஆதி அனுவின் அருகில் வந்து உட்கார்ந்து அவள் தலையை வருடியவாறு.. “அதலாம் இல்லடா விதுன் என் உயிர் நண்பன்.. நீ என் தங்கை.. அவன் மட்டும் எனக்கும் முக்கியம் இல்ல….. அவனும் தான் அப்டினா அதுல என் செல்ல தங்கச்சியும் தான் இருக்கா. எனக்கு இருக்கறது ஒரே தங்கை தான். யார் சொல்றதையும் கேட்காத….”என்றான் அவளை அணைத்தவாறு. அதில் அவ்வளவு நேரம் பயத்தில் இருந்தவள் கொஞ்சம் தெளிந்தாள்.. சரி என்று அவனிடம் தலை ஆட்ட…. “அண்ணா விதுன பாக்க கூட்டிட்டு போறீயா.. நா சாரி சொல்லனும்…”என்றாள்.. அதில் புன்னகைத்தவன்…”அவனுக்கு அடிப்பட்டதுல கொஞ்சம் பீவர் வந்துட்டாம்.. இன்னிக்கி ஒரு நாள் ஹாஸ்பிட்டல்ல இருக்க சொல்லிருக்காங்களாம்.. நாளைக்கு வந்ததும் பாக்கலாம்.. நீ போய் படு சரியா போ…”என்றான் ஆதி அதில் அனியும் சரி என்று தலை ஆட்டிவிட்டு தன் அறைக்கு செல்ல….. அவளுக்கு கொஞ்சம் கூட உறக்கமே வரவில்லை.அவள் கண் மூடினால் விதுனின் வலி நிறைந்த முகம் தான் அவளுக்கு நினைவில் வந்தது. அதும் அவன் காலில் வந்த ரத்தம் வேறு அவளை இம்சித்தது.எப்போதடா அவனை பார்ப்போம் மன்னிப்பு கேட்போம் என்றே இருந்தது.. காலையிலும் விடிந்தது விதுன் காலில் கட்டுடன் வர அனி இரவு முழுவதும் முழித்திருந்து விதுன் வருகிறானா என்று வாசலையே பார்த்துக்கொண்டிருக்க…. அப்போது விதுன் உள்ளே வருவது தெரிந்து அவனிடம் ஓடினாள்.. அவன் காலின் வலி அவன் முகத்தில் தெரிந்தது.. அதை பார்த்து இன்னும் வருந்தியவள். அவன் முகம் பார்க்க……விதுன் அப்போது தான் அவளை பார்த்தான்.. அவன் முகம் எந்த உணர்வும் காட்டாமல் இருக்க…. “அது விதுன் சாரி..”என்று அனி தலை குனிந்தவாறு சொல்ல….. “பரவால…..”என்று பட்டேன்று சொன்னவன் தன் வீட்டினை நோக்கி மெல்ல நடந்தான் அதில் அனி தான் என்னவென்று புரியாமல் போகும் அவனையே பார்த்துக்கொண்டு இருந்தாள். அதன் பின் விதுன் அனியே அவனிடம் பேச வந்தாலும் அவன் விலகி போக ஆரம்பித்தான் இதில் அனிதான் தவித்து போனாள்.. இப்படியே நாட்கள் போக இரண்டு வருடத்தில் விதுன் மருத்துவம் படிக்க பூனே போய்விட்டான்.. கடைசியாக இவளிடம் சொல்லாமலே சென்றுவிட்டான் இவளுக்கு தான் விதுனின் நியாபகமாகவே இருந்தது.. இரவு தூங்கும்போது கூட அவன் வலி நிறைந்த முகம் நியாபகத்தில் வந்து அனியை வாட்டும். பின் அந்த முகம் மாறி அப்படியே புன்னகை முகமாக அவள் மனதில் பதிந்துவிட்டது. இப்படியாக விதுன் மருத்துவம் மூன்றாம் வருடம் படிக்கும் போது அவன் அப்பா தவறிவிட அதற்கு வந்தவனை பார்த்து அனி மயங்கிதான் போனாள்.. 18வயதில் போய் 21வயதில் வர அவனின் கம்பீர அழகில் அந்த 16வயது பெண் மயங்கி போனாள்…அவனின் கம்பீரம் அவளை அசைத்தது. அதும் அவன் இவளை கண்டுக்கொள்ளாமல் போனது இவளை இம்சித்தது அவன் அனியின் மனதில் பதிந்து போனான்.பின் ஆதிக்கு இவ்வாறு ஆனதும் தான் அவனை திரும்ப பார்த்தாள். அவன் இன்னும் அப்படிதான் இவளை கண்டுக்கொள்ளவில்லை இவள் தான் அவனை உருகி காதலிக்கிறாள். ஆம் அனி அவனை காதலிக்கிறாள். இதனை அவன் அப்பா இறந்த போது வந்ததும் தான் உணர்ந்தாள்.. இப்போது விதுன் காரை அமைதியாக ஓட்ட…. அனியால் தான் அவனை பார்க்காமல் இருக்க முடியவில்லை. அவனை பார்த்தவாறே இருக்க விதுன் பல்லை கடித்துக்கொண்டான் “இப்போ ஏன் என்ன பார்த்துட்டே இருக்கீங்க அனிஷா மேடம்..”என்க அதில் அனி மனம் வலித்தது.”விது..”என்று எதோ பேச வர….. “என்ன விதுனு சொல்ல ஆதித்க்கு மட்டும் தான் உரிமை இருக்கு கண்டவங்களும் என்னை அப்டி கூப்ட நா அலோ பண்ணமாட்டேன்.”என்றான் கோவத்தில் இறுகிய குரலில். அதில் அனி அவனை அதிர்ந்து பார்த்தாள்.நா கண்டவளா என்று அவள் மனம் துடிக்க… கண்கள் தானாக கலங்கியது. “நா கண்டவளா விது…”என்றாள். “பின்ன இல்லையா. என்னை படிக்க வச்ச முதலாளியோட பொண்ணுன்ற ஒரே உரிமை மட்டும் தான் இருக்கு…அதும் அப்போ.இப்போ கண்டவங்கதான்..”என்றான் முகத்தை நக்கலாக வைத்துக்கொண்டு. அதில் அனி மனம் துடிக்க…. அவனை பார்க்காமல் முகத்தை ஜன்னல் பக்கம் திருப்பிக்கொண்டு.. கண்ணீரை அடக்க முயன்றாள். அதனை ஓரக்கண்ணால் பார்த்த விதுன் முகம் வேதனையில் சுருங்கியது. அவன் அனியின் காலேஜ் வாசலில் காரை நிறுத்த அனி அவனை திரும்பிக்கூட பார்க்காமல் உள்ளே சென்றுவிட்டாள் அதனை பார்த்த விதுன் முகம் கசங்கி,,,, அவன் கைகள் ஸ்டேரிங்கை அழுத்தமாக பற்றி இருந்தது.. இங்கு ஆதியின் அறையில் இப்படியாக ஆஸ்வதி அரைமணி நேரம் இருக்க….. ஆதி தூக்கத்தில் அவளது இடையின் பிடியை தளர்த்த….. அதில் மூச்சை இழுத்துவிட்டு ஆஸ்வதி.. இன்னும் இங்கையே இருந்தால் சரி வராது.. மதியம் சமைக்க வேண்டும் என்று நியாபகம் வர….. மெதுவாக ஆதியை தன் அருகில் படுக்க வைத்தாள்.. அதில் ஆதி கொஞ்சம் அசைய….. அவனது நெஞ்சில் கை வைத்து குழந்தைகளுக்கு தட்டிக்கொடுப்பது போல அழகாக மென்மையாக தட்டிக்கொடுத்தாள்…அதில் ஆதி மீண்டும் தன் தூக்கத்தை தொடர….. ஆஸ்வதி மெதுவாக எழுந்து அறையை விட்டு வெளியில் வந்தாள். ஆஸ்வதி நேராக கிட்சன் செல்ல….. அங்கு வினிஜா மதியத்திற்கு காய்கறி அரிந்துக்கொண்டு இருந்தார்.. அவரை பார்த்ததும் ஆஸ்வதி மனதில் காலை வினிஜா ரகசியமாக எதோ பேசிக்கொண்டு இருந்தது நினைவில் வர….. அவள் முகம் யோசனையில் சுருங்கியது.. வினிஜா ஆஸ்வதியை அப்போதுதான் பார்த்தார் அவர் முகத்தில் அப்படி ஒரு கடுப்பு. அதை ஆஸ்வதியும் பார்த்துக்கொண்டே தான் இருந்தாள். ஆஸ்வதியின் மனதில் இவருக்கு நம்ம மேல ஏன் இவ்வளவு கோவம்.. என்று தான் நினைக்க தோன்றியது..பின் அதனை சட்டை செய்யாமல் வினிஜாவிடம் மதியம் என்ன செய்ய வேண்டும் என்று கேட்டு செய்ய ஆரம்பித்தாள். அவள் செய்வதை அனைத்தையும் பார்த்த வினிஜாவே ஆச்சரியமாக ஆஸ்வதியை பார்த்தார்.. அவளது சமையல் அவ்வளவு பக்குவமாக இருந்தது.. இவ்வளவு வருடம் இந்த வேலையை தான் வினிஜாவும் பார்த்தார் ஆனால் அவரிடம் இல்லாத பக்குவம் கூட ஆஸ்வதியிடம் இருந்தது இதை எல்லாம் பார்த்து தான் வினிஜாவின் ஆஸ்வதியின் மேலான பார்வை கொஞ்சம் மாறியது.. மதிய உணவு அனைத்தையும் முடித்துவிட்டு ஆஸ்வதியும் வினிஜாவும் அனைத்தையும் டேபிளில் வைக்க….. அப்போது பெரியவர் வந்துவிட்டார். ஆனால் அவரது முகம் சரி இல்லாமல் இருந்தது. எதோ குழப்பத்தில் இருப்பது போல இருக்க…. ஆஸ்வதி அவரது முகத்தையே பார்த்துக்கொண்டு இருந்தாள். பின் டேபிளில் இருந்த க்ளாஸில் தண்ணீர் ஊற்றி தாத்தாவிடும் கொண்டு போய் கொடுத்தாள் இதனை பார்த்த வினிஜா “ம்ம் பெரியவர் தேர்வு தப்பா போல…..”என்று மனதில் நினைத்துகொண்டார்.. தனக்கு எதிரில் நீட்டப்பட்ட க்ளாஸை பார்த்தவர் நிமிர்ந்து ஆஸ்வதியை பார்க்க…. அவள் அழகிய புன்னகையுடன் “குடிங்க தாத்தா.”என்றாள்.. அதில் தாத்தாவும் கொஞ்சம் தன்னை சமாளித்துக்கொண்டு புன்னகையுடன் வாங்கி குடித்தார்.. பின் ஆஸ்வதி அவரை பார்த்துக்கொண்டே நிற்க…. “ப்ச். ஃபேக்டரில கொஞ்சம் பிரச்சனைமா அதா கொஞ்சம் டென்ஷன் ஆகிட்டேன்…”என்றார். “மாத்திரை எதும் போடுறீங்களா தாத்தா.”என்றாள் “இல்லமா. இப்பொ கொஞ்சம் பரவால…..என்று நிறுத்தியவர்…”மா ஆஸ்வதி கொஞ்சம் ஆபிஸ் ரூம் வர வரியாமா.. உன்ட கொஞ்சம் பேசனும்…”என்றார் ஆஸ்வதியும் யோசனையுடன் தன்னை சுற்றி பார்க்க…. அங்கு யாரும் இல்லை “அப்புறம் ஏன் தாத்தா நம்மள தனியா கூப்டுறாங்க..”என்று திரும்ப சுற்றி பார்க்க.. கிடசன் மறைவில் இருந்து வினிஜா தலையை மட்டும் நீட்டி எட்டி பார்த்தார்.. அதை பார்த்த ஆஸ்வதி திடுக்கிட்டு போனாள்…
அத்தியாயம்-14 ஆதி ஆஸ்வதியை பார்த்து “எப்போதும் இருப்பியா ஏஞ்சல் மத்தவங்க மாறி என்னை விட்டுட்டு போகமாட்டியே..”என்றான் குரல் கலக்கத்துடன் அதே நேரம் அழுகையில் உதடு பிதுங்கியவாறே… அதில் ஆஸ்வதி ஆதியை யோசனையாக பார்க்க…. திடிர் என்று அவன் குரலில் அவளுக்கு எதோ வித்தியாசம் தெரிய ஆதியை கலக்கமாக பார்த்தாள்.. அவளின் பார்வை உணர்ந்து சட்டேன்று தன் முகத்தை மாற்றிக்கொண்டு அவன் ஒரு பிள்ளை சிரிப்பை உதிர்த்தான். ”சரி வாங்க நாம கீழ போலாம்.. போய் சாப்டு வந்து நாம விளையாடலாம்..”என்றாள் அவனும் சரி என்று சிரித்துக்கொண்டே அவள் பின்னால் வந்தான்.. கீழே வந்துவள் சுற்றி முற்றி பார்க்க…. ஹாலில் ப்ரேமும்.. பரத்தும் உட்கார்ந்து எதோ பேசிக்கொண்டு இருக்க… ஆதியை தாத்தாவின் பக்கத்தில் உட்கார வைத்துவிட்டு அவளும் கிட்சனுக்குள் புகுந்துக்கொண்டாள். ஆதி தன் தாத்தாவின் பக்கத்தில் விளையாடிக்கொண்டு இருப்பதை கிட்சனில் இருந்து ஆஸ்வதி பார்த்துக்கொண்டே இருந்தாள்….. அவள் மனதில் இனி ஆதியை தனியாக எங்கும் விடக்கூடாது என்பது மட்டும் தான் ஓடிக்கொண்டிருந்தது இந்த வீட்டில் ஆதிக்கு எதோ ஆபத்து இருப்பது மட்டும் அவளுக்கு நன்றாக புரிந்தது. அது மட்டும் இல்லாமல் இரவில் தான் கண்ட அந்த உருவத்தையும் அவன் சொன்ன வார்த்தையும் தான் அவள் மனதில் ஓடிக்கொண்டு இருந்தது.. அது போல ஆதிக்கு எப்படி இப்படி ஆனது.. அவன் ஏன் இப்படி இருக்கிறான் என்ற எண்ணமும் அவன் அம்மா எங்கே என்ற எண்ணமும் தான் ஆக்கிரமித்து இருந்தது. அவள் இந்த வீட்டிற்கு ஆஸ்வதி முதலில் வந்த போது கூட ஆதியின் அப்பாவின் புகைப்படத்திற்கு தான் மாலை அணிந்து பார்த்தாள். அவனது அம்மா புகைப்படமும் அங்கு இருந்து பார்த்தாள்.. ஆனால் அவரை பற்றி எந்த தகவலும் தாத்தா அவளிடம் கூறவில்லை.. அவள் அப்போது இருந்த நிலையில் அவளால் அதை தெரிந்துக்கொள்ள மனம் வரவில்லை. ஆனால் இப்போது யோசிக்கும் போது அவளுக்கு இதில் ஏதோ இருப்பது போல தோன்றியது தன்னவனிடம் கூட இதை பற்றி கேட்க முடியாது கொஞ்ச நேரத்திற்கு முன் அவன் நடந்துக்கொண்டதை நினைக்கும் போது இப்போதும் ஆஸ்வதிக்கு உடல் நடுங்கியது.. இந்த நிலையில் அவன் தாயை பற்றி அவனிடம் கேட்பது அவன் உயிருக்கே கூட ஆபத்தாக ஆகக்கூடும் என்று ஆஸ்வதிக்கு நன்றாக புரிந்தது… இதை பற்றி தாத்தாவிடம் கேட்போமா என்று கூட ஆஸ்வதி யோசித்தாள் அவள் யோசித்துக்கொண்டு இருந்த போதே அனைவரும் உணவுண்ண டைனிங் ஹாலுக்கு வர….தற்காலிகமாக தன் யோசனையை விட்டுவிட்டு டிபன் செய்து அனைத்தையும் அவளும், வினுஜாவும் டைனிங் டெபிளில் வைத்துவிட்டு சென்றார்கள் மணி 9தை காட்ட அனைவரும் உட்கார்ந்து உணவு உண்ண ஆதி வந்து அப்போது தான் தாத்தா பக்கத்தில் உட்கார்ந்தான் ஆஸ்வதி அவனுக்கு தட்டில் பூரியை வைத்து தர அவன் பார்வை முழுதும் ஹாலின் ஆசியின் மகிமையால் ஆஸ்வதியின் புடவை ஒதுங்கி அவனுக்கு அவளது வெற்றிடையை அப்பட்டமாக காட்ட….. அதில் விழுந்து போனான்.. அது தெரியாமல் ஆஸ்வதி தன் வேலையில் கண்ணாக இருக்க ஆதி அவள் வெற்றிடையில் கண்ணாக இருந்தான் தன்னவளின் இடையை தொட தன் கை பரபரக்க…. ஆனால் தான் இருக்கும் இடமும்.. தான் இருக்கும் நிலைமையும் உணர்ந்து தன்னை கட்டுப்படுத்திக்கொண்டான்..ஆனால் இதனை இன்னும் இரு கண்கள் கல்மிஷமாக ரசித்துக்கொண்டு இருந்தது…அந்த கண்கள் ஆஸ்வதியை இச்சை பார்வையுடன் பார்க்க… ஆதி அதனை கண்டுக்கொண்டு அந்த நபரை முறைத்துக்கொண்டே இருந்தான். ஆனால் இப்போதைக்கு ஆதியால் அதை தானே செய்ய முடியும் ஆனால் தன்னவளை இன்னொருவன் இப்படி பார்ப்பதா என்பது அவன் மனதில் வெறி ஏற்ற….. ஆதி தன் அருகில் இருந்த ஸ்பூனை பார்க்க அவனுக்கு ஒரு ஐடியா வந்தது அந்த ஸ்பூனை ஆதி கீழே தள்ளிவிட….. ஆஸ்வதி அதனை பார்த்து எடுக்க குனிய….. ஆதியும் “ஐயோ…என் ஸ்பூன்..”என்று முகம் சுருங்க அவனும் அதனை எடுப்பது போல கீழே குனிந்தான் ஆஸ்வதி ஸ்பூனை எடுப்பதற்குள் ஆதி அதனை எடுத்து தடுமாறுவது போல் ஆஸ்வதியின் இடுப்பில் கை வைத்து அவளது புடவையை நன்றாக இழுத்துவிட்டான்.. அப்போது அவள் இடையின் மென்மை அவனை பித்துக்கொள்ள செய்ய…. அதில் இருந்து அவனால் கையை எடுக்கவே முடியவில்லை.. அப்படியே டேபிளின் அடியில் உட்கார்ந்து அவன் ஆஸ்வதியின் இடையில் அழுத்தம் கொடுக்க….. அதுவரை அவனது தொடுகையில் அதிர்ச்சியுடன் சிலிர்த்து போய் இருந்த ஆஸ்வதி அவன் இடையில் தந்த அழுத்தத்தால் அவனை கண்கள் விரிய காண….. அவனோ அவளது பார்வையை ஆழ்ந்து நோக்கியவன்.. “ஏஞ்சல் ஸ்பூன் கிடச்சிட்டு.”என்றான் கொஞ்சல் குரலில். அதில் நினைவிற்கு வர ஆதி அதற்குள் மேலே ஏறி உட்கார்ந்துவிட்டான்,.. ஆஸ்வதி தான் தன் கணவனின் தொடுகையில் சிவந்திருந்த தன் முகத்தை மாற்ற மிகவும் சிரமப்பட்டாள் அவள் வெகு நேரம் கழித்து எழ…. அதனை யாரும் கவனிக்காமல் தங்கள் உணவில் கவனமாக இருந்தனர்.. ஒருவனை தவிர… அவன் ப்ரேம்.. அவன் தான் ஆஸ்வதியை கண்களில் அவ்வளவு வக்கிரத்துடன் அவளை இவ்வளவு நேரம் பார்த்துக்கொண்டிருந்தது இப்போது ஆஸ்வதியின் முகம் வெட்கத்தில் சிவந்து போய் இருப்பதை பார்த்தவன் உள்ளுக்குள் ஆதி ஆஸ்வதியை நினைத்து எரிந்தது. ஆஸ்வதி தட்டில் உணவு வைத்து நீட்டியதை பார்த்த ஆதி.அதனை பார்த்து அவளை ஏறேடுத்து பார்த்து உதட்டை பிதுக்கினான்.. அந்த பாவனையில் ஆஸ்வதி இதழ் விரித்து புன்னகைக்க….. ஆதியின் விழிகள் அவளது இதழிலே சிறிது நேரம் நின்று பின் தட்டில் மாறியது…ஆதி தன் தட்டையே பாவமாக பார்க்க…… அதை பார்த்த ஆஸ்வதி அவன் பக்கத்தில் நெருங்கி “ஆதி நீங்க பெரிய பையன் தான… அது மட்டும் இல்லாம நீங்க குட் பாய் வேற அதான் நா அவங்க எல்லார்ட்டையும் என்ன சொன்னெனா ஆதி குட் பாய் அவருக்கு யார் ஹெல்பும் வேணா அவரே சாப்டுவாருனு சொன்னேன்.. யாரும் நம்பவே இல்ல… அதா நா அவங்க கிட்டலா பெட் கட்டி நீங்களாவே சாப்ட்டீங்கனா.. நா உங்கள வெளில கூட்டிட்டு போய் நெறைய டாய்ஸ் வாங்கித்தரதா சொன்னேன்.. என்ன ஒகேவா..”என்றாள் அவன் காதிற்கு மட்டும் கேட்கும் மாறு.. அதில் ஆதி தன்னவளின் பேச்சில் சிரிப்பு வந்தாலும் தன்னை குழந்தை போல் பார்த்துக்கொள்வதை நினைத்து கண்கள் கலங்கியது இதுவரை அவனை இது போல யாரும் கொஞ்சியது இல்லை.. அவன் அப்பா அவனை கொஞ்சியது உண்டு தான். ஆனால் அவனுக்கு விவரம் தெரிந்து அவன் தாயின் அன்பை அனுபவித்தது இல்லை. அனுஷாவும் தான் ஆனால் அவள் பிறந்ததில் இருந்தே அவளுக்கு அது மறுக்கப்பட்டுது தான், ஆனால் ஆதிக்கு அப்படி இல்லையே. அவன் அன்னையின் அன்பில் விவரம் தெரியும் வரை வளர்ந்தவன் தான்.. ஆதி சந்தோஷமாக தலை ஆட்டிக்கொண்டே பூரியை எடுத்து கீழும் மேலும் சிந்திக்கொண்டே சாப்பிட்டான் அதை பார்த்த அவள் அவன் மேலே ஒரு கர்ச்சிப்பை போட்டு இப்போது சாப்பிடுமாறு கூறினாள். அவர்கள் இருவரையும் பார்த்த அங்கு உள்ள அனைவரும் முறைத்துக்கொண்டே “இவங்கள இப்படியே விட்டா. இவ அவன சரி பண்ணி இந்த வீட்டையே ராஜ்ஜியம் பண்ண வச்சிடுவா. இத இப்டியே விடக்கூடாது” என்று மனதில் கருவிக்கொண்டே அனைவரும் சீக்கரம் சாப்பிட்டு அங்கிருந்து எழுந்து சென்றார்கள் ஆதி சாப்பிட்டுக்கொண்டே தன்னவளை ரசிக்க…. அவனது இன்னொரு கண் அங்கிருந்து வன்மமாக எழுந்து சென்றவர்கள் முகத்தில் தான் இருந்தது அதை கண்ட ஆதியின் முகம் வெறியில் சிவக்க…. “ஆதி இன்னொரு பூரி.”என்ற ஆஸ்வதியின் மென்மையான குரலில் அவனது இறுகிய முகம் சட்டென்று இளகி போனது. அதையே ஆதி அடியோடு வெறுத்தான் ஆஸ்வதியின் பாசம்.. அவனை பலவீனமாக ஆக்குவது போல் அவன் உணர்ந்தான் அதனாலே இனி ஆஸ்வதி பக்கம் அவன் நெருங்க கூடாது என்பதை மனதில் பதிய வைக்க நினைத்தான். ஏனென்றால் இனி தான் அவனுக்கு நிறைய வேலை இருக்கிறது.. இவ்வளவு நாள் அவன் யாரேன்றே அவனுக்கு தெரியாத நிலையில் இருந்தான்.. ஆனால் இன்று அப்படி இல்லையே. ஆனால் அவனால் ஒரடியாக அவளை விட்டு தள்ளி இருக்கவும் முடியாது அவன் விலகி இருந்தாலும் நெருங்கி வந்தாலும் அது ஆஸ்வதியின் உயிருக்கே கூட வினையாக முடியும்.இப்படியே அவன் யோசித்துக்கொண்டிருக்க….. ஆஸ்வதி முகம் மட்டும் ஆதியை காதலாக பார்த்துக்கொண்டிருந்தது.. அவன் தொடுகை இன்னும் அவள் இடுப்பில் குறுகுறுத்தது.. ஆனால் அவள் மனதில் இந்த தொடுகை வேறு ஒருவரையும் அவளுக்கு நியாபகப்படுத்தியது.. இந்த தொடுகை என்று அவள் நினைத்துக்கொண்டு இருக்க… அவளின் முகம் யோசனையில் சுருங்குவதை பார்த்த ஆதி. “ஏஞ்சல் தண்ணி.”என்ற ஆதியின் குரலில் நடப்புக்கு வந்தவள் ஆதியின் மீது கவனமாக…. இதை எல்லாம் கண்ட தாத்தா அவனாக சாப்பிடுவதை பார்த்து சந்தோஷமடைந்தார்.. கூடிய சீக்கரம் தன் பேரன் சரி ஆகிவிடுவான் என்று அவர் மனதில் உறுதியானது.. ஆனாலும் அவர் மனதில் சற்று பயம் இருந்துக்கொண்டே தான் இருக்கிறது.. கடந்த சில வருடங்களாக இவ்வீட்டில் நடப்பது ஒன்றும் அவருக்கு சரியாக படவில்லை.. அதன் தொடக்கம் தான் தன் ஆசை மகன் விஷ்ணு திடீர் என்று இறந்து போனது.. அதை இப்போது நினைத்தால் கூட அவருக்கு கண்கள் கரித்துக்கொட்டியது தாத்தா ஆதியை பார்த்தவாறே எழுந்து தன் அறைக்கு சென்றுவிட்டார்… அவர்களை தவற இன்னும் அங்கு ப்ரேம் மட்டும் உட்கார்ந்து ஆஸ்வதியையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக்கொண்டு உட்கார்ந்திருந்தான் அதை கண்டும் கானாதது போல் உட்கார்ந்து ஆஸ்வதியும், விதுனும், அனுவும் சாப்பிட ஆரம்பித்தனர்…அனு. விதுன் அங்கு வந்ததில் இருந்து அவனை மட்டும் தான் பார்த்துக்கொண்டிருந்தாள். அதை யார் காணாவிட்டாலும் இரு ஜோடி கண்கள் அதனை மனதில் குறித்துக்கொண்டது. பின் அனு விதுனை பார்த்து “விது என்ன காலேஜ்ல ட்ராப் பண்ணிடுறீங்களா”என்றாள் அவனை ஆசையாக பார்த்தவாறு.. அதற்கு விதுன் அனுவை வெற்று பார்வை ஒன்றை பார்த்துவிட்டு எதும் பேசாமல் தலையை மட்டும் ஆட்டி அங்கிருந்து வெளியில் சென்றுவிட்டான்.. அதனை பார்த்த அனு முகம் வாடிவிட்டது.. ஆஸ்வதி..”அனு இட்லி வைக்கவா…”என்று கேட்க…. அதில் நடப்பிற்கு வந்தவள்…சிரிப்புடனே..”ஹான் வேணா அண்ணி.. காலேஜ்க்கு டைம் ஆச்சி.”என்று எழுந்து கைகழுவிக்கொண்டு தன் அறைக்கு சென்றுவிட்டாள் தன் உடைமைகளை எடுத்துக்கொண்டு. அனைவரிடமும் சொல்லிவிட்டு அனு காலேஜ் செல்ல…. “அனு.. இது உனக்கு மதியம் லஞ்ச் கொஞ்சமா தான் வச்சிருக்கேன்.. ஒழுங்கா முழுதும் சாப்டுடு.. இங்க சாப்டுற மாறி கோழி கொறிக்கிற மாறி கொறிக்க கூடாது ஈவினிங் பாக்ஸ் காலியா இருக்கனும்.”என்று உரிமையுடன் அதட்டி ஒரு டிபன் டப்பாவை ஆஸ்வதி நீட்ட….. அதை அதிர்ச்சியுடன் பார்த்த அனு கண்கள் தானாக கலங்கியது ஏனென்றால் அவளுக்கு இதுவரை யாரும் இப்படி கையில் டிபன் பாக்ஸை கொடுத்து இப்படி அறிவுரை சொன்னதில்லை. அவள் பள்ளி படிப்பை ஆரம்பித்ததில் இருந்து டைனிங் டேபிளில் டிபன் பாக்ஸ் ரெடியாக இருக்கும் அதனை எப்போதும் ஒரு வெறுமையான மனதுடன் எடுத்துக்கொண்டு போவாள். சரி காலையில் கொஞ்சம் சாப்பிடு என்று கூட சொல்ல இந்த வீட்டில் அவளை யாரும் கணக்கில் கொள்ளமாட்டார்கள் ஆதி இருந்தவரை அவளை பாசமாக பார்த்துக்கொள்வான்,. அவனும் காலேஜை முடித்துவிட்டு பாரினுக்கு சென்றுவிட அவளுக்கு தாத்தாதான் எல்லாம்.. அவரும் முழுநேரம் அவளுடன் இருக்க முடியவில்லை. அவருக்கும் ஃபேக்டரியில் பிரச்சனை. ஆபிஸில் பிரச்சனை என்று அடிக்கடி எதாவது வந்துக்கொண்டிருக்கும் அவள் பெரியப்பாக்கள் கூட இவளையும் சரி ஆதித்தையும் சரி கண்டுக்கொள்ள மாட்டார்கள்..ஆதித் கொஞ்சம் பெரியவன் என்பதால் இதனை எளிதாக தாண்டி வந்துவிட்டான். ஆனால் அனிஷா விவரம் தெரியாத சின்ன பிள்ளை அதனாலே அவள் அதிகமாக தனிமையில் இருப்பது போல் தான் அமைந்தது இப்போது ஆஸ்வதியையே அமைதியாக பார்த்துக்கொண்டிருந்த அனிஷா.. திடிர் என்று அவளை அணைத்துக்கொண்டு…”தாங்க்ஸ் அண்ணி.”என்க….. ஆஸ்வதி ஒரு நிமிடம் அதிர்ந்து போனாள். அவளுக்கு இது பெரிய விஷயமாக தெரியவில்லை.. தன் சித்தியின் வீட்டில் தான் செய்வதை தான் அவள் இங்கும் செய்கிறாள். என்ன தான் ஆஸ்வதி சித்தி நிறைய வீட்டு வேலைகளை ஆஸ்வதி தலையில் கட்டினாலும் சிறிது கூட துவளமாட்டாள்.. அதும் அவளது தங்கை விஷாலியை ஸ்கூலுக்கு தயார் செய்வதில் இருந்து அவளுக்கு உணவு தயாரிப்பது வரை அனைத்தும் ஆஸ்வதிதான் செய்வாள் அதில் ஆஸ்வதிக்கு ஒரு நிம்மதி விஷாலியும் தன் அக்கா தனக்காக சமைக்கும் உணவுகளை ஆஸ்வதியை பாராட்டிக்கொண்டே உண்பாள்..”அக்கா என் பிரண்டுக்கு அது பிடிக்கும் செஞ்சி குடுக்கா…”என்று உரிமையாக ஆஸ்வதியிடம் கேட்டு வாங்கி செல்வாள்.. அதில் ஆஸ்வதி தனக்காக தன்னையும் உரிமையாக பாசம் காட்ட ஒருத்தி இருக்கிறாள் என்பதில் அவளுக்கு அவ்வளவு தெம்பாக இருந்தது. அது போல தான் இப்போது அனிவிற்கும் ஆஸ்வதி செய்தாள்.. ஆனால் அனி இவ்வளவு உணர்ச்சி வசப்படுவாள் என்று ஆஸ்வதி நினைக்கவில்லை தன்னை இறுக்கிக் கட்டிக்கொண்டு நிற்கும் அனியை பார்த்தவள் ஒரு பெரும்மூச்சை விட்டுவிட்டு அவள் முதுகில் தட்டிக்கொடுத்துக்கொண்டு இருந்தாள்.. இந்த காட்சியினை டைனிங் டேபிளில் உட்கார்ந்து கண் கலங்க ஆதி பார்த்துக்கொண்டு இருந்தான் அவனுக்கும் தன் தங்கையை பற்றி தெரியுமே.. தானாவது அவளை இங்கு விட்டுவிட்டு போய் இருக்க கூடாது என்று பல முறை தன் மனதில் தன்னையே திட்டிக்கொண்டு இருந்திருக்கிறான். ஆஸ்வதி தன் தங்கையை பார்த்துகொள்வது ஆதிக்கு இதமாக இருந்தது. அவன் கண்கள் ஆஸ்வதியை தான் காதலாக வருடியது.. “போதும் அனி காலேஜ்க்கு டைம் ஆகலையா.. விதுன் அண்ணா வைட் பண்ண போறாங்க…. உன் அண்ணி எங்கையும் போகமாட்டேன்.. இனி இங்கதான் வந்து உன் பாசமழைய பொழிடா ஐ ம் ஆல்வேஸ் வெய்டிங்…”என்றாள் ஆஸ்வதி கண்களில் குறும்பு மின்ன….அதை கேட்டு அனி சிரிக்க….. அதில் ஆதியின் மனம் குளிர்ந்தது. அவனும் “ஏஞ்சல் ஏன் அனி அழுறா.. அவளுக்கு ஸ்கூல் போக பிடிக்கலையா.”என்றான் ஆதி அனியை பாவமாக பார்த்தவாறு. அதில் சிரித்தனர் இருவரும்…”ஆதி கண்ணா அனி படிக்கலைனா அப்புறம் எப்டி ஆதித் மாறி அறிவாளி ஆகுறது.”என்றவாறே அங்கு வந்தார் தாத்தா.. அவர் இவ்வளவு நேரம் இங்கு நடந்ததை தன் அறையில் இருந்து கவனித்துக்கொண்டு தான் இருந்தார். இப்போது தான் அவர் மனதில் தான் ஆஸ்வதியை தேர்ந்தெடுத்தது சரியே என்று ஆழமாக பதிந்தது.பாசத்திற்காக ஏங்கும் அனிக்கும் ஆதிக்கும் அவள் ஒரு நல்ல துணையாக இருப்பாள் என்று தான் ஆஸ்வதியை அவர் தேர்ந்தெடுத்தது அது இன்று உண்மையானதில் அவர் மனம் மகிழ்ந்தது. “ஆமா ஆமா அனி இன்னிக்கி நீ ஸ்கூல் போகலைனா அந்த பப்ளு மாறி குண்டா ஆகிடுவ……”என்றான் ஆதி. அதில் அங்கு அனைவரும் புன்னகைக்க ஆதியும் புரியாமல் புன்னகைத்தான். “ஹாஹா ஆதித் கண்ணா வரவர உன் பேச்சி நல்லா இருக்கு யாரு சொல்லி குடுத்தா…”என்றார் தாத்தா கிண்டலாக அதில் அழகாக வெட்கப்பட்ட ஆதி.”போ. தாத்தூ…”என்றான் ஆஸ்வதி தோளில் முகம் புதைத்தவாறு.. அதில் இன்னும் அவர்கள் புன்னகைக்க….. அனி அனைவரிடமும் பாய் சொல்லிவிட்டு சென்றுவிட்டாள் “மா. ஆஸ்வதி எனக்கும் ஃபேக்டரில வேலை இருக்கு மா ஆடிட்டர இன்னிக்கி வர சொல்லிருக்கேன்.. அதுனால நா மதியமா வரேன். பாத்துக்கோ டா..”என்றார் தாத்தா பரிவாக “ம்ம்ம் சரி தாத்தா. மதியம் கரக்ட்டா வந்துடுங்க…. லஞ்ச்க்கு..லேட்டா சாப்ட கூடாது டேப்ளட் வேற போடனும்ல……”என்றாள் ஆஸ்வதி அக்கறையாக….. அதில் தாத்தா முகம் கனிந்து புன்னகைத்தார் “சரிடாமா வந்துடுறேன்…”என்று அங்கிருந்து கிளம்பினார். அப்போது வீட்டில் ஆதி.. ஆஸ்வதி கிட்சனில் வினிஜா. மட்டும் தான் இருந்தனர். வெளியில் தோட்ட வேலை செய்பவர்களும் மட்டும் தான் இருந்தனர் ஆஸ்வதி டைனிங் டேபிளை சுத்தம் செய்துக்கொண்டிருக்க….. ஆதி அவளை தான் ரசிக்கும் பார்வை பார்த்துக்கொண்டு இருந்தான் அங்கிருந்த சோபாவில் உட்கார்ந்து கையில் ஒரு காரை வைத்துக்கொண்டு அவளையே இமைக்காமல் பார்க்க…. ஆனால் ஆஸ்வதியோ அந்த இடத்தை க்ளீன் செய்வதிலே குறியாக இருந்தாள். இப்போது அவனை அவள் கண்டிருந்தாள் கூட அவன் பார்வையின் மாற்றத்தை கண்டுப்பிடித்திருப்பாள். ஆனால் விதி யாரை விட்டது.. இன்னும் அவளின் காதல் கண்ணாமூச்சி ஆடியது “ஏஞ்சல்…”என்றான் ஆதி சோர்வாக… அப்போது தான் ஆஸ்வதி அனைத்தையும் கிட்சனில் வைத்துவிட்டு வர….. ஆதியின் சோர்வான குரல் அவளை அசைத்தது.. ஆஸ்வதி அவன் அருகில் சென்று உட்கார்ந்து.. “என்னாச்சி என் ஆதிக்கு டயர்டா இருக்கீங்க….. உடம்பு முடிலையா…எதும் பண்ணுதா..”என்றாள் அதிர்ச்சியாக அவனது உடலை தொட்டுப்பார்த்தவாறே.. அவளது இந்த அதிர்வும், அவளது மென்மையான் தொடுகையும் ஆதியின் புண் பட்ட மனதிற்கு இனிமையாக இருக்க……”இல்ல ஏஞ்சல் தூக்கம் வருது..”என்றான் “ஓஓ….. வாங்க ஆதி நாம நம்ம ரூம்க்கு போலாம்,..”என்று அவனை கைப்பிடித்து தூக்கினாள்.. அவனும் அவளுடன் எழ… கொஞ்சம் அவனுக்கும் சோர்வாக தான் இருந்தது.. அவனுக்கு கொஞ்ச நாளாகவே இப்படிதான் இருக்கிறது. இவ்வளவு நாள் அவன் அதை உணராத நிலையில் இருந்தான். ஆனால் இப்போது அவனுக்கு தெரிய ஆரம்பித்தது. அவன் உடல்நிலை.. ஆதியை கொஞ்சமாக தாங்கிக்கொண்டு தங்கள் அறைக்கு சென்று அவனை கட்டிலில் படுக்க வைக்க… அவனும் உடல் சோர்வில் படுத்துக்கொண்டே ஆஸ்வதியை தான் பார்த்துக்கொண்டு இருந்தான்.. ஆஸ்வதி அவனுக்கு ஏசியை ஆன் செய்துவிட்டு அவன் அருகில் உட்கார….. ஆதி அவளை ஒரு மாதிரி பார்த்தவன். தன்னை மறந்தவனாக“ஏஞ்சல்..”என்று உருகிய குரலில் அழைத்து தன் இரு கைகளையும் ஆஸ்வதியை நோக்கி நீட்டினான்.. அவனின் இந்த அழைப்பில் ஆஸ்வதி அதிர்ந்து அவனை பார்க்க… அவன் குரலில் என்ன கண்டாளோ. அவன் இரு கைகளையும் அழுத்தமாக பற்றிக்கொண்டு அவனிடம் நெருங்கி உட்கார்ந்தாள். அவன் அவளது இரு கைகளையும் பிடித்து இழுத்து அவளை தன் மீது கொண்டு வந்தான். அதில் ஆஸ்வதி உடல் சிலிர்த்தது. ஆதியோ. இப்போது அவனுக்கு வேறு ஒன்றும் நியாபகம் இல்லை. தன்னவள் மட்டும் தான்.. தன்னுடைய 5வருட காதல் மட்டுமே அவன் மனதில் இருந்தது.. அவளுக்காக உருகியது. அவளை தூரத்தில் இருந்து ரசித்தது அவளுக்காக காத்திருந்தது…அவளிடம் காதலை சொல்ல துடித்தது. அவளுடன் கனவில் வாழ்ந்த வாழ்க்கை இது மட்டும் தான் அவன் மனதில் ஓடிக்கொண்டு இருந்தது ஆஸ்வதி மனதிலும். தன்னவனை முதலில் கண்டதில் இருந்து அவனையே எண்ணி தவிர்த்தது தான் ஓடிக்கொண்டு இருந்தது. இருவரும் தங்களின் நிகழ்காலத்தை சுத்தமாக மறந்தனர். அவர்களின் கடந்த காலத்தில் அதும் இருவரும் ஒருவருக்கொருவர் தெரியாமலும். சொல்லிக்கொள்ளாமலும் செய்த காதல் அந்த காதலையே காற்றாக ஸ்வாசித்து வாழ்ந்தது மட்டுமே தான் இப்போதைக்கு அவர்களின் நினைவு.. ஆதி.. ஆஸ்வதியை தன் மேல் இருந்து கீழே கொண்டு வந்து அவளது முகத்தை தான் பார்த்துக்கொண்டே இருந்தான்.. ஆஸ்வதி அவன் கீழே தன்னை கொண்டு வந்ததும் அவனது கடுமையான….. ஆளுமையான உடற்கட்டு அவளை பித்தம் கொள்ள செய்தது.. அவனின் தொடுகையையே அவளால் தாங்க முடியவில்லை.. அவளது முகம் அவனின் மூச்சிக்காற்று தீண்டி சிவந்து போனது அவளின் சிவந்த முகத்தில் அவனும் வீழ்ந்துவிட்டான் அவன் இப்போது அனைவரது முன்னும் நடித்துக்கொண்டிருப்பதை முழுதாக மறந்தான்.. அவளும் அவனது நிலையை மறந்து போனாள் அவளது வெட்கம் அவனை இம்சிக்க அவளது சிவந்த இதழையே ஆழ்ந்து பார்த்தான் அதில் ஆஸ்வதி வெட்கத்தில் அவன் முகம் பார்க்காமல் தன் கண்களை அழுத்தி மூடிக்கொண்டாள் அதில் இன்னும் கிறங்கிதான் போனான் “வது “என்றான் உருகிய குரலில் அதில் ஆஸ்வதி ஒரு நிமிடம் அதிர்ந்து ஆதியை பார்க்க…. அவன் பார்வை இன்னும் அவளது இதழில் தான் இருந்தது.. அதனை நெருங்க அவனுக்கு அவ்வளவு பிடித்தம். ஆனால் அவனை எதோ ஒன்று தடுத்தது. ஆஸ்வதி அவனின் வது. என்ற அழைப்பிலே மயங்கி போனாள்.ஆதி அவளை நெருங்க….. “ஏஞ்சல்.. என்ன எப்டி உனக்கு மேல தூக்குன….”என்றது ஆதியின் பிள்ளைகுரல் அதில் ஆஸ்வதி அதிர்ந்து கண் திறந்து பார்க்க….. அங்கு அவளின் முகத்திற்கு மிக அருகில் அவன் முகம் இருந்தது. ஆனால் அதில் ஆதியின் காதல் பார்வை இல்லை.. தன்னை யாரேன்றே தெரியாமல் சிறு குழந்தையாக இருக்கும் ஆதியின் மிரட்சி.. ஆச்சரிய பார்வைதான் இருந்தது.
அத்தியாயம்-13 “ம்ம்ம்.. நானும் ஆதியோட காலேஜ்ல தான் படிச்சேன் அவருக்கு ஜூனியரா.”என்றாள் ஆஸ்வதி. அதை கேட்ட விதுன் ஒரு புன்னகையை உதிர்த்துவிட்டு.“ஓஓ……அப்போ நீ அங்க படிக்க வரும்போது ஆதி லாஸ்ட் இயர் படிச்சிட்டு இருந்தான்…”என்றான். ஆஸ்வதி ஆம்.. என்று தலை ஆட்ட……”ஆனா நா ஒருத்தி இருக்கனே அவருக்கு தெரியாது.”என்றாள் விரக்தியாக “ம்ம்ம். ஒகே இதப்பத்தி நாம பேசுறத விட ஆதி சரி ஆகட்டும் அப்புறம் நாம பேசிக்கலாம்..”என்றான் ஆஸ்வதிக்கும் தன்னவனிடம் தான் தன் காதலை முதலில் சொல்ல ஆசை. அதற்கு விதுனே வாய்ப்பு தரவும் ஆஸ்வதிக்கு நிம்மதியாக இருந்தது…சரி.. என்று ஆஸ்வதி தலை ஆட்ட….. “ஹான் ஆதி அம்மா பத்தி…சாரி நா அத கேட்டுருக்க கூடாது.. அதும் ஆதி இந்த நிலையில இருக்கும் போது.”என்று ஆஸ்வதி குற்றவுணர்ச்சியில் தலைக்குனிந்தவாறு இழுக்க “ம்ம்ம்.விடுமா அவன் அம்மா பத்தி அது ஆதியே சொன்னாதான் சரியா இருக்கும் “என்றான் விதுன் அதை சொல்லும் போது விதுனின் உடல் இறுகி இருந்தது போல இருந்தது ஆஸ்வதிக்கு.. சரி என்க… “ம்ம் ஆதிக்கு இது இப்டி அடிக்கடி ஆகும்னு தாத்தாவுக்கு தெரியுமா.”என்றாள் ஆஸ்வதி “ம்ம்ம்.. ஆமா. இதுவரை ஆதிக்கு இதுமாறி எப்போவாது நடக்கும்… இது பத்தி இந்த வீட்ல யாருக்கும் தெரியாது.எனக்கும் தாத்தாக்கும் மட்டும் தான் தெரியும்.. ஆதி இப்டி வைலன்ட்டா எப்போ பிகே பண்ணுவானு தெரியாததுனால நா அவன் கையில அவன் ஹார்ட்பீட் மானிட்டரோட சேர்த்து ஒரு சவுன்ட் சிப் ஒன்னு வச்சிருக்கேன் அது அவனோட பல்ஸ் ஹைய் ஆகுறப்போ எனக்கு மெசேஜ் அனுப்பிடும்.அத பார்த்து தான் இப்போ நான் இங்கே வந்தேன். ஆமா இது பத்தி தாத்தா உன்ட சொல்லலையா…”என்றான் விதுன் அவள் இல்லை என்று தலை ஆட்ட….”ஓஓ…. மறந்துருப்பாங்கனு நினைக்கிறேன். “என்றவன் ஆதியை ஒரு பெருமூச்சை விட்டு பார்த்துக்கொண்டே”ஆதிக்கு ஏன் இப்படி நடக்குது.ஒன்னும் பயப்படுறமாறி இல்லையே…”என்றாள் ஆதியை கவலையாக பார்த்தவாறு. “ம்ம்ம்ம்.. சொல்ல முடியாது. இது நல்லதுக்கா கூட இருக்கலாம் அவன் ரெக்கவர் ஆக கூட இப்டி நடக்கலாம்…ஆதிக்கு இப்டி ஆனதுல இருந்து ஒரு சில விசயங்கள பேசுனா.. உடனே அவன் மூர்க்கமா நடந்துப்பான். அந்த நேரத்துல அவன கட்டுப்படுத்துறது ரொம்ப கஷ்டம்…அது மாறி தான் இப்பவும் அவன் நடந்துருக்கான்..ஆனா அவன் இப்படி நடந்துக்குறது எனக்கு தாத்தாவ தவிர வேற யாருக்கும் தெரியாது..”என்றான் விது வருத்தமாக… ஆஸ்வதி முகம் வேதனையில் சுருங்குவதை பார்த்த விதுன்…”ஆஸ்வதி நா உன் அண்ணனு முறையில சொல்றேன்.. சீக்கரமா ஆதித்க்கு குணம் ஆகிடும்.. கண்டிப்பா அவன் உன் காதல புரிஞ்சிப்பான்…”என்றான் ஆஸ்வதியை பாசமாக வருடியவாறு.. அவனின் இந்த வார்த்தைகள் ஆஸ்வதியை கொஞ்சம் தெளிய வைக்க….. ஆஸ்வதி “தாங்க்ஸ் அண்ணா…”என்றாள் புன்னகையுடன்.. அதில் விதுன் புன்னகையுடன் தலை ஆட்டிவிட்டு.. ஆதியின் அருகில் சென்று அவன் தலை முடிகளை வருடிவிட்டவன்…”நிம்மதியா கொஞ்ச நேரம் தூங்கட்டும்.. எழுந்தானா அவனுக்கு எதும் நியாபகம் இருக்காது.. நீயும் கொஞ்சம் ரிலாக்ஸா இரு.. எல்லாம் சரி ஆகிடும்…”என்று ஒரு தலை அசைப்புடன் அங்கிருந்து சென்றான். அவன் சென்றதும் ஆஸ்வதி ஆதியின் அருகில் உட்கார்ந்து அவன் முகத்தையே ஆர்வமாக பார்க்க… அவள் கை எழுந்து அவன் தலை முடியை வருடிவிட்டாள்.. “ஏன் ஆதி இப்டி.. இப்டி இருக்கீங்க….. உங்கள நா முத தடவ பார்த்தபோ எப்டி இருந்தீங்க….. உங்களுக்கு யார் இப்டி பண்ணுனா உங்களுக்கு இப்டி ஆக காரணமானவங்கள நா மன்னிக்கவே மாட்டேன் ஆதி அவங்களுக்கு கண்டிப்பா தண்டனை கிடைக்கும்…”என்று ஆஸ்வதி கண்கலங்க ஆதியை பார்க்க….. அவன் முகம் வெளிரி போய் குழந்தை போல் உறங்கிக்கொண்டிருந்தான்.. ஆஸ்வதி அவனை ஆழ்ந்து பார்த்தவள்.ஒரு பெரும்மூச்சை வெளிவிட்டு தன் அறையில் இருந்து கீழே இறங்கி வந்தாள்.. அங்கு அனைவரும் ஒரு ஒரு வேலை பார்த்துகொண்டிருக்க….. தாத்தா டைனிங் டேபிளில் உட்கார்ந்து சாப்பிட்டுக்க்கொண்டு இருந்தார்.. ஆஸ்வதி அவரின் அருகில் செல்ல பெரியவர் அவளை அழுத்தமாக பார்த்து தலை அசைக்க…. அதிலே அவருக்கு விதுன் அனைத்தையும் சொல்லிவிட்டான் என்று தெரிந்து போனது.. ஆஸ்வதியும் அவரை பார்த்து தலை அசைக்க அவர் அருகில் சென்று அவருக்கு உணவு பரிமாற ஆரம்பித்தாள் “என்னமா ஆதி இப்போ பரவாலையா…”என்றார் யாருக்கும் கேட்காத மெல்லிய குரலில். ஆஸ்வதியும் “நல்லா தூங்கிட்டு இருக்காரு தாத்தா..”என்றாள் அமைதியான குரலில் “ம்ம்ம்..”என்று தலை அசைத்துவிட்டு..”நீயும் உட்காருமா சாப்டலாம்…”என்றார் “இல்ல தாத்தா நா ஆதியோட சாப்டுறேன்…”என்று தலை அசைத்தாள்.. அதில் தாத்தா ஒரு சின்ன சிரிப்பை உதிர்த்துவிட்டு சாப்பிட ஆரம்பித்தார். பின் ஆஸ்வதி தோட்டத்திற்கு சென்று சிறிது நேரம் நடக்க….. அவளது யோசனை எல்லாம் தன் கணவன் மீது தான் இருந்தது..அவள் எதோ யோசித்தவாறே நடக்க… அப்படியே யோசித்தவாறு வீட்டின் பின் பக்கம் வந்துவிட்டாள்.. அப்போது எதோ பேச்சி சத்தம் கேட்க ஆஸ்வதி “யார் இந்த பக்கம்…பேசுறது..”என்று யோசித்தவாறே நடந்தாள். சத்தம் வந்த திசையை பார்த்தவாறே அங்கு வினிஜா தான் தன் கையில் ஒரு அலைபேசியை வைத்துக்கொண்டு யாரிடமோ கோவமாக பேசிக்கொண்டு இருந்தாள்.. அதனை பார்த்த ஆஸ்வதி முகம் யோசனையில் சுருங்க…. தாத்தா சொன்னது அவளுக்கு நியாபகம் வந்தது…”வினிஜாக்குனு யாரும் இல்லமா அது மட்டும் இல்லாம அவ நமக்கு தூரத்து சொந்தம்…அவளுக்கு நாம மட்டும் தான்.. அதுனால அவள இங்க யாரும் எதும் சொல்லமாட்டாங்க….”என்று சொன்னார்.. அது இப்போது ஆஸ்வதிக்கு நியாபகம் வர….. வினிஜாவையே கூர்ந்து பார்த்தாள் ஆஸ்வதி வினிஜா பேசுவதை பார்க்க ஆஸ்வதிக்கு பயம் தான் வந்தது..ஏனென்றால் அவள் கோவமாக பேசும்போது அவள் முகம் பயங்கரமாக இருந்தது. ஆஸ்வதிக்கு அவள் யாரையோ மிரட்டுகிறாள் என்பது மட்டும் தெளிவாக தெரிந்தது. பின் வினிஜா தன் போனை சேலைக்குள் மறைத்து வைத்துக்கொண்டு சுற்றிமுற்றி யாராவது இருக்கிறார்களா என்று காண….. அதை பார்த்த ஆஸ்வதி தனக்கு அருகில் இருந்த மரத்திற்கு பின்னால் ஒளிந்துக்கொண்டாள். பின் ஆஸ்வதி எட்டிப்பார்க்க…. வினிஜா அங்கு இல்லை.. இதை எல்லாம் பார்க்க ஆஸ்வதிக்கு பயமாக இருந்தது.. இங்கு எதோ சரி இல்லை என்பது மட்டும் இவளுக்கு புரிந்து போனது.. இதில் இருந்து எப்படி தன்னவனை காப்பாற்றுவது என்பது மட்டும் தான் அவள் மனதில் ஓடியது.. ஏனென்றால் ஆதிக்கு தான் எதோ ஆபத்து என்பது மட்டும் அவள் மனம் அடித்து சொன்னது பின் சிறிது நேரம் இதை பற்றி யோசித்தவள் தன்னவன் அறையில் தனியாக இருப்பது புரிந்து தன் அறைக்கு சென்றாள். என்னமோ. ஆஸ்வதிக்கு ஆதியை தனியாக விட பயம். தன் அறைக்கு சென்று பார்க்க….. அப்போது தான் ஆதி கண் விழிக்க முயன்றுக்கொண்டிருந்தான்.. அதை பார்த்து கொஞ்சம் ஆஸ்வாசம் அடைந்தவள் அவன் அருகில் போய் உட்கார….. ஆதி அப்போது தான் தன் தலையை பிடித்துக்கொண்டு எழுந்தான். ஆஸ்வதி இந்த அறையை விட்டு கீழே இறங்கும்போதே ஆதி உடைத்த அனைத்து பொருட்களையும் சுத்தம் செய்துவிட்டு தான் சென்றாள். அதனால் கொஞ்சம் நிம்மதியாக இருந்தது. ஆதி கண் விழித்து முதலில் ஆஸ்வதி முகத்தை தான் பார்த்தான். அவள் ஆதியை பார்த்து புன்னகைக்க….. ஆதி அவளை விளங்கா பார்வை ஒன்றை பார்த்துவிட்டு பின் தன் பார்வையை மாற்றிவிட்டு.. “ஏஞ்சல். எனக்கு என்னாச்சி…”என்றான் தலையை பிடித்துக்கொண்டு. ஆஸ்வதி அவனை பார்த்து சிரித்துக்கொண்டே..”என்னாச்சி.. எவ்ளோ நேரம் தூங்குவீங்க… உங்களுக்காக தான் நானும் சாப்டாம இருக்கேன். வாங்க போய் சாப்டலாம்.”என்றாள் அதில் ஆதி அவளை புரியாமல் பார்த்தவாறே…”இல்ல ஏஞ்சல் எனக்கு தலை பயங்கரமா வலிக்கிது.”என்றான் தலையை பிடித்துக்கொண்டு.. அதை கேட்டு அவளும் அவன் தலையை பிடித்துவிட்டு..”ஒன்னும் இல்ல ஆதி. உங்க ஏஞ்சல் உங்க கூட தான் இருக்கேன்.. எப்போவும் இருப்பேன் ஓகே வா…”என்றாள் புன்னகையுடன். அதில் இவ்வளவு நேரம் இருந்த சுணங்கள் கொஞ்சம் மட்டுப்பட….. “ம்ம்ம். என்றுவிட்டு. அவளை ஆழ்ந்த பார்வை ஒன்றை பார்த்து…”எப்போவும் இருப்பியா. ஏஞ்சல்…”என்றான் அழுத்தமாக….. அதே நேரம் அவளை காதலுடன் பார்த்தவாறே.அதில் ஆஸ்வதி அவனை அதிர்ந்து பார்க்க…..
அத்தியாயம்-12 விதுன் சொன்னதை கேட்டவள் அதிர்ந்தாள்.. ஆஸ்வதியின் அதிர்வை பார்த்தவன் மெலிதான ஒரு புன்னகையை சிந்திவிட்டு.. “எஸ் பூனேல எம்ஜிஎம் ஹாஸ்பிட்டல ஸ்பேஷலிஸ்ட்டா இருக்கேன்…” அதை கேட்ட ஆஸ்வதி அவனை இன்னும் அதிர்வுடன் பார்க்க…..ஏனென்றால் பூனேயில் இருக்கும் மிகப்பெரிய மருத்துவமனையில் அதுவும் ஒன்று. ஆஸ்வதியின் தங்கை விஷாலி அந்த ஹாஸ்பிட்டலை பற்றி பெருமையாக சொல்வாள்..”அக்கா நா மட்டும் படிச்சிட்டு அந்த ஹாஸ்பிட்டல போய் டாக்டரா ஜாய்ன் பண்ணுனேனு வச்சிக்கோ…நா பெரிய டாக்டர் ஆகிடுவேன்.. அப்புறம்…என் அக்காவுக்கு தேவையான எல்லாமே என்னால வாங்கித்தர முடியும்.” என்பாள் ஆஸ்வதியை கட்டிக்கொண்டு.. அவளின் அதிர்வை பார்த்தவன்.”ம்ம்ம். எஸ்.”என்றான் அழுத்தமாக….. “அப்றம் ஏன் நீங்க…..”என்று ஆஸ்வதி ஆரம்பிக்க… “அப்றம் ஏன் இங்க இருக்கீங்கனு தானே கேட்குற…..”என்றான் அவளை இடைமறுத்து. அவளும் ஆம் என்று தலை அசைக்க…..”நானும் ஆதித்தும் சின்ன வயசுல இருந்து ஒன்னா தான் படிச்சோம்.. நா படிக்கவே கஷ்டப்பட்டேன் ஏனா என் அப்பா இங்க தான் ஆதித்தோட அப்பாகிட்ட ட்ரைவரா இருந்தாரு.. எங்க அப்பாவால என்ன ஆதித் படிக்கிற ஸ்கூல சேர்க்க முடில….. ஆனா ஆதித்தும் நானும் ரொம்ப க்ளோஸ்.. எங்க பேமிலி இங்க தான் பின்னாடி சர்வன்ட் காலனில தான் இருந்தோம்.. அப்போ நானும் ஆதித்தும் தான் ஒன்னா விளையாடுவோம்.. “அப்போல இருந்து நானும் ஆதித்தும் க்ளோஸ்.. என்னை அவன் படிக்கிற ஸ்கூலுலையே சேர்க்க சொல்லி அவன் அவங்க அப்பாகிட்ட ஒரே அழுக….. ஆதித்தோட அப்பா விஷ்ணு அங்கிள்க்கும் அவங்க பையன் மேல தனி பாசம்.. ஆதித் என்ன கேட்டாலும் செய்ய தயாரா இருப்பாரு.அப்டி இருக்குற பையன் அழுகுறத தாங்க முடியாம அவங்களும் என்னை ஆதித்தோட ஸ்கூலையே சேர்த்துட்டாங்க… அதுக்கு முழுதும் ஆதித்தோட அப்பா தான் பணம் கட்டுனாரு.எங்க அப்பா வேணாம்னு எவ்வளவோ சொல்லி பார்த்தாரு.. ஆனா விஷ்ணு அங்கிள் அத கேட்டுக்கவே இல்லை.”இத நா என் பையனுக்காக மட்டும் செய்ல….. விதுனும் என் பையன் மாறிதான்.. இனி நானே அவன படிக்க வைக்கிறேன்.. நீ உன் குடும்பத்த பார்த்தா போதும்னு அங்கிள் ஸ்ட்ரிக்ட்டா சொல்லிட்டாரு.. “அப்புறம் என்ன ஒரே ஸ்கூல்.. ஒரே க்ளாஸ் நாங்க ரெண்டு பேரும் சேர்ந்தே இருப்போம்.. அது இங்க நிறைய பேர்க்கு பிடிக்காது” என்றவன் முகம் இறுகிப்போக….. அவனின் மனத்திரையில் ஒருத்தியின் முகம் மிளிர்ந்தது… “அப்புறம் நாங்க ரெண்டு பேரும் ஸ்கூல் முடிச்சிட்டு காலேஜ் சேர நாளும் வந்துச்சி.. எனக்கு சின்ன பிள்ளையில இருந்து டாக்டர் ஆகனும்.. அதும் சைக்யட்ரீஸ்ட் ஆகனும்னு ஆசை.. ஆனா நா ஆதித்த விட்டு பிரிய விரும்பல… அவன் கூடவே இருக்கனும்னு அவன் எடுக்க ஆசைப்பட்ட இஞ்சினியரிங்கே சேர நினைச்சேன்.. ” என்றவனது பார்வை அங்கு அமைதியாக உறங்கும் ஆதித்தை தான் பார்த்தது. “ஆனா அப்போதான் எனக்கு ஒரு லேட்டர் வந்துச்சி. எனக்கு மெடிக்கல் காலேஜ்ல மெரிட்ல சீட் கிடைச்சிருக்குனு.. நா இத அப்ளே பண்லையேனு நினைச்சிட்டு இருக்கும் போது தான் என் ஆதித் நா தான் உனக்கு பதிலா இத அனுப்புனேனு சொன்னான்…”என்று திரும்பி ஆதித்தை பார்க்க விதுன் கண்கள் கலங்கி போனது.. “ஏன்டா இப்டி பண்ணுன….. நா உன்னவிட்டு போமாட்டேனு சொன்னேன்.. ஆனா அவன்.. உனக்கு அறிவே இல்லடா.. நம்ம நட்பு வேற….. நம்ம கனவு வேற… எனக்கு இஞ்சினியரிங் பிடிக்கும்.. அத விட்டுடு எனக்காக டாக்டர் ஜாய்ன் பண்ணுடானு நீ சொன்னா சத்தியமா நா பண்ணமாட்டேன் அது மாதிரி தான்டா நீயும் இருக்கனும். அதவிட்டுட்டு இப்டி லூசுதனம் பண்ணாத… அப்டினு சொல்லிட்டு…எப்போ என்னை விட உனக்கு படிப்பு முக்கியம் இல்லனு நினைச்சிட்டியோ இனி நீ இங்க இருக்க கூடாது உனக்கு பூனேல தான் அட்மிஷன்.. கிளம்பி ஓடு.. இனி படிப்ப முடிக்காம என்னை பார்க்க வரக்கூடாதுனு சொல்லிட்டான்..”என்றவனது கண்களில் அப்பட்டமாக பாசம் வழிந்தது… “நா அவன எவ்வளவோ கன்வின்ஸ் பண்ண பார்த்தேன்.. ஆனா அவன் என்னை பேசவே விடல…..அதுக்கு அப்புறமும் அவன் பேச்ச என்னால மீற முடில….. நா இங்க இருந்து கிளம்பற ஒவ்வொரு நேரமும் எனக்கு அவன பிரிய தயங்கினேன்…நா தயங்கின நேரம் எல்லாம் நானும் நாலு வருஷம் முடிச்சிட்டு பாரின் போய்டுவேன்.நீயும் மேலே உனக்கு பிடிச்ச ஃபீல்ட்ல பெரிய ஆளா வரனும் அதான் என் ஆசைனு சொன்னான் “சரினு நானும் மனசே இல்லாம போனேன்.. நானும் படிச்சி.. அங்கையே என்னோட மெடிக்கல படிச்சிட்டு அதுக்கு மேல மனோதத்துவ டாக்டருக்கு படிச்சி முடிச்சிதான் ஆதித்தை பாக்க வரனும்னு நினைச்சிட்டு இருந்தேன். ஆதித்தும் எங்கிட்ட அப்டி தான் சொன்னான் நா இங்க இருக்க மாட்டேன்.. நீயும் நா இல்லாதப்போ இங்க வராத… இங்க இருக்கவங்க யாராவது உன்ன எதாவது பேசி மனச கஷ்டப்படுத்துவாங்க….. அத என்னால தாங்க முடியாது.. அப்டினு சொன்னான். அதுக்கு அப்புறம் நா படிச்சி முடிச்சி கையில வேலையோட வந்தப்போ அப்போ நா ஆதித்த பார்த்தது இந்த நிலையில தான்…”என்றான் கண்ணீர் வழிய… அவனின் வேதனை ஆஸ்வதிக்கும் தெரிய தான் செய்தது.. “அவன் பாரீன் போனது வர என்கிட்ட பேசினான்….. அங்க போனதும் கூட எங்கூட கான்டேக்ட்ல தான் இருந்தான்..அவனுக்கு ஸ்டடிஸ் முடிஞ்சதும் கூட இங்க வரப்போறதாவும் சொன்னான் அப்புறம் இங்க வந்ததும் இவனுக்கு எப்டி இப்டி…”என்று குரல் நடுங்க பேசியவன்.. ”நா படிச்ச படிப்பு இவனுக்கு யூஸ் ஆகும்னு நா நினைக்கவே இல்லை…”என்றான் கலங்கிய குரலில். அதில் ஆஸ்வதியும் சேர்ந்து கலங்க… “ஆதிக்கு எப்டி இப்டி..”என்று ஆஸ்வதி தயங்க… “ஆதித் பாரீன் போய்ட்டு இந்தியா வந்த அன்னிக்கி தான் என்னமோ ஆயிருக்கு ஹான் அன்னிக்கு தான் ஆதித்தோட மொத்த சந்தொஷமும். அதாவது விஷ்ணு அங்கிள் ஆக்ஸிடன்ட்ல இறந்துட்டாங்க….. அதும் இவன் வந்த கார்ல தான்.. அது மட்டும் தான் எனக்கு தெரியும்..நானும் இவன இப்டி விட்டுட்டு போக முடில….. அதான் இவன சரிப்பண்ணிட்டு தான் இங்க இருந்து போகனும்னு இங்கவே இருந்து ஆதித்க்கு என்னால முடிஞ்ச ட்ரீட்மென்ட் குடுத்துட்டு இருக்கேன். அது இந்த வீட்ல தாத்தாவ தவிர வேற யாருக்கும் தெரியாது ஏனா எனக்கு இங்க இருக்குற யார் மேலையும் நம்பிக்கை இல்ல….”என்றான் விதுன்..முகத்தை இறுக்கமாக வைத்துக்கொண்டு.. அதை கேட்ட ஆஸ்வதிக்கு தன்னவனை பார்க்க பார்க்க ஆதரவற்ற குழந்தை ஒன்று தூங்குவது போல் இருந்தது…அவளுக்கும் இங்கு வந்ததில் இருந்து எதோ சரி இல்லாததை போல தான் இருந்தது. “உன்ன பார்த்ததுல இருந்து ஆதித்தோட ஆக்டிவிடிஸ்ல சில சேஞ்சஸ் தெரிது.. அதான் உன்ட கேட்டேன். அவன முன்னாடியே உனக்கு தெரியுமானு” என்றான். அவளும் சிறிது நேரம் யோசித்துவிட்டு.”தெரியும்…”என்றாள் ஆஸ்வதி. அதை கேட்ட விதுன் சிறிதாக புன்னகைத்துக்கொண்டே.”ம்ம்ம்.. நினைச்சேன்..”என்றான் ஆஸ்வதி தலையை குனிந்தவாறே.”நானும் ஆதி படிச்ச காலேஜ்ல தான் படிச்சேன்.. ஆனா அவருக்கு மூணு வருஷம் ஜூனியர்…”என்றாள் ஆஸ்வதி.. ‘அதும் அவர முதல் பார்வையிலையே விரும்ப ஆரம்பிச்சிட்டேன்..அவர என் மனசுல 5வருஷமா சுமந்துகிட்டு.. இருக்கேன்.. கனவுனு நினைச்ச வாழ்க்கைய கடவுள் எனக்கு குடுத்து இருக்காரு.. இனி நா யாரையும் ஆதி பக்கம் நெருங்கவே விடமாட்டேன்.”என்று மனதில் நினைத்தவாறே ஆதியை பார்த்துக்கொண்டு இருந்தாள் ஆஸ்வதி
அத்தியாயம்-12
விதுன் சொன்னதை கேட்டவள் அதிர்ந்தாள்..
ஆஸ்வதியின் அதிர்வை பார்த்தவன் மெலிதான ஒரு புன்னகையை சிந்திவிட்டு.. “எஸ் பூனேல எம்ஜிஎம் ஹாஸ்பிட்டல ஸ்பேஷலிஸ்ட்டா இருக்கேன்…”
அதை கேட்ட ஆஸ்வதி அவனை இன்னும் அதிர்வுடன் பார்க்க…..ஏனென்றால் பூனேயில் இருக்கும் மிகப்பெரிய மருத்துவமனையில் அதுவும் ஒன்று. ஆஸ்வதியின் தங்கை விஷாலி அந்த ஹாஸ்பிட்டலை பற்றி பெருமையாக சொல்வாள்..”அக்கா நா மட்டும் படிச்சிட்டு அந்த ஹாஸ்பிட்டல போய் டாக்டரா ஜாய்ன் பண்ணுனேனு வச்சிக்கோ…நா பெரிய டாக்டர் ஆகிடுவேன்.. அப்புறம்…என் அக்காவுக்கு தேவையான எல்லாமே என்னால வாங்கித்தர முடியும்.” என்பாள் ஆஸ்வதியை கட்டிக்கொண்டு..
அவளின் அதிர்வை பார்த்தவன்.”ம்ம்ம். எஸ்.”என்றான் அழுத்தமாக…..
“அப்றம் ஏன் நீங்க…..”என்று ஆஸ்வதி ஆரம்பிக்க…
“அப்றம் ஏன் இங்க இருக்கீங்கனு தானே கேட்குற…..”என்றான் அவளை இடைமறுத்து.
அவளும் ஆம் என்று தலை அசைக்க…..”நானும் ஆதித்தும் சின்ன வயசுல இருந்து ஒன்னா தான் படிச்சோம்.. நா படிக்கவே கஷ்டப்பட்டேன் ஏனா என் அப்பா இங்க தான் ஆதித்தோட அப்பாகிட்ட ட்ரைவரா இருந்தாரு.. எங்க அப்பாவால என்ன ஆதித் படிக்கிற ஸ்கூல சேர்க்க முடில….. ஆனா ஆதித்தும் நானும் ரொம்ப க்ளோஸ்.. எங்க பேமிலி இங்க தான் பின்னாடி சர்வன்ட் காலனில தான் இருந்தோம்.. அப்போ நானும் ஆதித்தும் தான் ஒன்னா விளையாடுவோம்..
“அப்போல இருந்து நானும் ஆதித்தும் க்ளோஸ்.. என்னை அவன் படிக்கிற ஸ்கூலுலையே சேர்க்க சொல்லி அவன் அவங்க அப்பாகிட்ட ஒரே அழுக….. ஆதித்தோட அப்பா விஷ்ணு அங்கிள்க்கும் அவங்க பையன் மேல தனி பாசம்.. ஆதித் என்ன கேட்டாலும் செய்ய தயாரா இருப்பாரு.அப்டி இருக்குற பையன் அழுகுறத தாங்க முடியாம அவங்களும் என்னை ஆதித்தோட ஸ்கூலையே சேர்த்துட்டாங்க… அதுக்கு முழுதும் ஆதித்தோட அப்பா தான் பணம் கட்டுனாரு.எங்க அப்பா வேணாம்னு எவ்வளவோ சொல்லி பார்த்தாரு.. ஆனா விஷ்ணு அங்கிள் அத கேட்டுக்கவே இல்லை.”இத நா என் பையனுக்காக மட்டும் செய்ல….. விதுனும் என் பையன் மாறிதான்.. இனி நானே அவன படிக்க வைக்கிறேன்.. நீ உன் குடும்பத்த பார்த்தா போதும்னு அங்கிள் ஸ்ட்ரிக்ட்டா சொல்லிட்டாரு..
“அப்புறம் என்ன ஒரே ஸ்கூல்.. ஒரே க்ளாஸ் நாங்க ரெண்டு பேரும் சேர்ந்தே இருப்போம்.. அது இங்க நிறைய பேர்க்கு பிடிக்காது” என்றவன் முகம் இறுகிப்போக….. அவனின் மனத்திரையில் ஒருத்தியின் முகம் மிளிர்ந்தது…
“அப்புறம் நாங்க ரெண்டு பேரும் ஸ்கூல் முடிச்சிட்டு காலேஜ் சேர நாளும் வந்துச்சி.. எனக்கு சின்ன பிள்ளையில இருந்து டாக்டர் ஆகனும்.. அதும் சைக்யட்ரீஸ்ட் ஆகனும்னு ஆசை.. ஆனா நா ஆதித்த விட்டு பிரிய விரும்பல… அவன் கூடவே இருக்கனும்னு அவன் எடுக்க ஆசைப்பட்ட இஞ்சினியரிங்கே சேர நினைச்சேன்.. ” என்றவனது பார்வை அங்கு அமைதியாக உறங்கும் ஆதித்தை தான் பார்த்தது.
“ஆனா அப்போதான் எனக்கு ஒரு லேட்டர் வந்துச்சி. எனக்கு மெடிக்கல் காலேஜ்ல மெரிட்ல சீட் கிடைச்சிருக்குனு.. நா இத அப்ளே பண்லையேனு நினைச்சிட்டு இருக்கும் போது தான் என் ஆதித் நா தான் உனக்கு பதிலா இத அனுப்புனேனு சொன்னான்…”என்று திரும்பி ஆதித்தை பார்க்க விதுன் கண்கள் கலங்கி போனது..
“ஏன்டா இப்டி பண்ணுன….. நா உன்னவிட்டு போமாட்டேனு சொன்னேன்.. ஆனா அவன்.. உனக்கு அறிவே இல்லடா.. நம்ம நட்பு வேற….. நம்ம கனவு வேற… எனக்கு இஞ்சினியரிங் பிடிக்கும்.. அத விட்டுடு எனக்காக டாக்டர் ஜாய்ன் பண்ணுடானு நீ சொன்னா சத்தியமா நா பண்ணமாட்டேன் அது மாதிரி தான்டா நீயும் இருக்கனும். அதவிட்டுட்டு இப்டி லூசுதனம் பண்ணாத… அப்டினு சொல்லிட்டு…எப்போ என்னை விட உனக்கு படிப்பு முக்கியம் இல்லனு நினைச்சிட்டியோ இனி நீ இங்க இருக்க கூடாது உனக்கு பூனேல தான் அட்மிஷன்.. கிளம்பி ஓடு.. இனி படிப்ப முடிக்காம என்னை பார்க்க வரக்கூடாதுனு சொல்லிட்டான்..”என்றவனது கண்களில் அப்பட்டமாக பாசம் வழிந்தது…
“நா அவன எவ்வளவோ கன்வின்ஸ் பண்ண பார்த்தேன்.. ஆனா அவன் என்னை பேசவே விடல…..அதுக்கு அப்புறமும் அவன் பேச்ச என்னால மீற முடில….. நா இங்க இருந்து கிளம்பற ஒவ்வொரு நேரமும் எனக்கு அவன பிரிய தயங்கினேன்…நா தயங்கின நேரம் எல்லாம் நானும் நாலு வருஷம் முடிச்சிட்டு பாரின் போய்டுவேன்.நீயும் மேலே உனக்கு பிடிச்ச ஃபீல்ட்ல பெரிய ஆளா வரனும் அதான் என் ஆசைனு சொன்னான்
“சரினு நானும் மனசே இல்லாம போனேன்.. நானும் படிச்சி.. அங்கையே என்னோட மெடிக்கல படிச்சிட்டு அதுக்கு மேல மனோதத்துவ டாக்டருக்கு படிச்சி முடிச்சிதான் ஆதித்தை பாக்க வரனும்னு நினைச்சிட்டு இருந்தேன். ஆதித்தும் எங்கிட்ட அப்டி தான் சொன்னான் நா இங்க இருக்க மாட்டேன்.. நீயும் நா இல்லாதப்போ இங்க வராத… இங்க இருக்கவங்க யாராவது உன்ன எதாவது பேசி மனச கஷ்டப்படுத்துவாங்க….. அத என்னால தாங்க முடியாது.. அப்டினு சொன்னான். அதுக்கு அப்புறம் நா படிச்சி முடிச்சி கையில வேலையோட வந்தப்போ அப்போ நா ஆதித்த பார்த்தது இந்த நிலையில தான்…”என்றான் கண்ணீர் வழிய… அவனின் வேதனை ஆஸ்வதிக்கும் தெரிய தான் செய்தது..
“அவன் பாரீன் போனது வர என்கிட்ட பேசினான்….. அங்க போனதும் கூட எங்கூட கான்டேக்ட்ல தான் இருந்தான்..அவனுக்கு ஸ்டடிஸ் முடிஞ்சதும் கூட இங்க வரப்போறதாவும் சொன்னான் அப்புறம் இங்க வந்ததும் இவனுக்கு எப்டி இப்டி…”என்று குரல் நடுங்க பேசியவன்..
”நா படிச்ச படிப்பு இவனுக்கு யூஸ் ஆகும்னு நா நினைக்கவே இல்லை…”என்றான் கலங்கிய குரலில். அதில் ஆஸ்வதியும் சேர்ந்து கலங்க…
“ஆதிக்கு எப்டி இப்டி..”என்று ஆஸ்வதி தயங்க…
“ஆதித் பாரீன் போய்ட்டு இந்தியா வந்த அன்னிக்கி தான் என்னமோ ஆயிருக்கு ஹான் அன்னிக்கு தான் ஆதித்தோட மொத்த சந்தொஷமும். அதாவது விஷ்ணு அங்கிள் ஆக்ஸிடன்ட்ல இறந்துட்டாங்க….. அதும் இவன் வந்த கார்ல தான்.. அது மட்டும் தான் எனக்கு தெரியும்..நானும் இவன இப்டி விட்டுட்டு போக முடில….. அதான் இவன சரிப்பண்ணிட்டு தான் இங்க இருந்து போகனும்னு இங்கவே இருந்து ஆதித்க்கு என்னால முடிஞ்ச ட்ரீட்மென்ட் குடுத்துட்டு இருக்கேன். அது இந்த வீட்ல தாத்தாவ தவிர வேற யாருக்கும் தெரியாது ஏனா எனக்கு இங்க இருக்குற யார் மேலையும் நம்பிக்கை இல்ல….”என்றான் விதுன்..முகத்தை இறுக்கமாக வைத்துக்கொண்டு..
அதை கேட்ட ஆஸ்வதிக்கு தன்னவனை பார்க்க பார்க்க ஆதரவற்ற குழந்தை ஒன்று தூங்குவது போல் இருந்தது…அவளுக்கும் இங்கு வந்ததில் இருந்து எதோ சரி இல்லாததை போல தான் இருந்தது.
“உன்ன பார்த்ததுல இருந்து ஆதித்தோட ஆக்டிவிடிஸ்ல சில சேஞ்சஸ் தெரிது.. அதான் உன்ட கேட்டேன். அவன முன்னாடியே உனக்கு தெரியுமானு” என்றான்.
அவளும் சிறிது நேரம் யோசித்துவிட்டு.”தெரியும்…”என்றாள் ஆஸ்வதி.
அதை கேட்ட விதுன் சிறிதாக புன்னகைத்துக்கொண்டே.”ம்ம்ம்.. நினைச்சேன்..”என்றான்
ஆஸ்வதி தலையை குனிந்தவாறே.”நானும் ஆதி படிச்ச காலேஜ்ல தான் படிச்சேன்.. ஆனா அவருக்கு மூணு வருஷம் ஜூனியர்…”என்றாள் ஆஸ்வதி..
‘அதும் அவர முதல் பார்வையிலையே விரும்ப ஆரம்பிச்சிட்டேன்..அவர என் மனசுல 5வருஷமா சுமந்துகிட்டு.. இருக்கேன்.. கனவுனு நினைச்ச வாழ்க்கைய கடவுள் எனக்கு குடுத்து இருக்காரு.. இனி நா யாரையும் ஆதி பக்கம் நெருங்கவே விடமாட்டேன்.”என்று மனதில் நினைத்தவாறே ஆதியை பார்த்துக்கொண்டு இருந்தாள் ஆஸ்வதி
அத்தியாயம்-11 ஆஸ்வதியின் எரிக்கும் பார்வையை பார்த்த ப்ரேம் அவளை மிரட்சியுடன் காண… ஆஸ்வதி எதோ கூற வர அதற்குள். அங்கு வந்த பெரியவர்.. இவர்கள் இப்படி பேசிக்கொண்டு இருக்க….. இதை எல்லாம் முகத்தில் எந்த வித உணர்வும் இல்லாமல் பார்த்துக்கொண்டு இருந்த பெரியவர்..“இங்க என்ன நடக்குது…அவ சாமி தானே கும்பிட்டா..இத ஏன் இவ்வளவு பெருசா ஆக்குறீங்க……”என்றார் தாத்தா. அனைவரையும் ஒரு பார்வை பார்த்தவாறு. அவரை பார்த்த அனைவரும் அமைதியாக நின்றிருந்தனர். “நீங்க தான் யாருமே இங்க சாமி கும்பிடறது இல்ல… கும்பிடுற அவளயும் சும்மா விடாம இப்டி பண்ணுறீங்க……நல்லா கேட்டுக்கங்க ஆஸ்வதி என் பேத்தி அவளுக்கு இந்த வீட்டுல எல்லா உரிமையும் இருக்கு”என்றார் அதை கேட்ட அனைவரும் அவளையும், ஆதியையும் முறைத்துக்கொண்டு அங்கிருந்து சென்றனர்.. ப்ரேம்”இப்போ நீ தப்பிச்சிட்ட இனி உனக்கு இருக்கு.”என்று மனதில் சொல்லிக்கொண்டு ஆஸ்வதியை முறைத்துக்கொண்டே அவளை மேல் இருந்து கீழ் வரை ஒரு பார்வை பார்த்துவிட்டு அங்கிருந்து சென்றான்.. ஆஸ்வதி அதனை கண்டு கொஞ்சமும் மிரளாமல் அவனை நிமிர்ந்து பார்த்தவாறே தன் கையை பிடித்துக்கொண்டு நிற்கும் தன் கணவனை பார்த்து அவன் கையை அழுத்திப்பிடித்தாள்.. அவனை அழைத்துக்கொண்டு தன் அறைக்கு சென்று அவனை கட்டிலில் உட்கார வைத்து.. அவன் முகத்தை கைகளால் தாங்கி “என்னாச்சி ஆதி”என்றாள் அவன் அவளை நிமிர்ந்து பார்த்து “ஏஞ்சல் எனக்கு பயமா இருக்கு ப்ரேம் என்ன அடிப்பான்”என்றான் ஆதி ஆஸ்வதி அவனை பார்த்து. “உன்ன அடிப்பானா.”என்றாள் “ஆமா இங்க பாரு அவன் அடிச்சி எனக்கு உடம்பு புல்லா புன்னாச்சி”என்று தன் சட்டையை கழட்டி காட்டினான். அவன் உடல் முழுதும். வரிவரியாக அடித்த தடம் இருந்தது. அதை பார்த்து கண்கள் கலங்க அதனை கையாள் வருடிவிட்டாள்.ஆதி அதனை கூர்மையாக பார்த்தான் பின் சடுதியில் தன் பார்வையை மாற்றிக்கொண்டு… அவள் கண்கள் கலங்குவதை பார்த்த ஆதி “ஏஞ்சல் எனக்கு வலிக்கல நீ ஏன் அழுகுற”என்றான் ஆதி..அவள் கண்ணை துடைத்தவாறு. அதில் சுயநினைவிற்கு வந்தவள்.. “ஆமா அவன் உன்ன அடிக்கும் போது யாரும் வந்து தடுக்க மாட்டங்களா…அப்போ எல்லாரும் எங்க இருப்பாங்க,..”என்றாள். “ஹுஹும் யாரும் குறுக்க வர மாட்டாங்க….அவங்களுக்கும் என்னை பிடிக்காது. அதுனால ஓரமா நின்னு நா அடிவாங்குறாத வேடிக்க பாப்பாங்க… அதும் அபூர்வா அத்த இல்ல அவங்களும் என்னை அடிப்பாங்க.. யாருமே எனக்கு சப்போர்ட்டுகே இல்ல……”என்றான் உதட்டை பிதுக்கிக்கொண்டு பாவமாக…. அதை கேட்ட ஆஸ்வதி அவனை பார்த்து கண் கலங்கியவாறு..“ஆமா தாத்தா கூடவா வரமாட்டாங்க”என்றாள் “இல்ல தாத்தா ஊருக்கு போய்டுவாறு. அப்போதா அடிப்பான்.. அதும் அந்த பப்ளு.. இல்ல அவனும் ப்ரேம் என்னை அடிக்கிறத பார்த்து என்னை அடிப்பான்..அப்புறம் எனக்கு பரத் பெரியப்பா. அப்புறம் அஜய் பெரியப்பாவும் சாப்பாடு போட கூடாதுனு சொல்லிடுவாங்க….. எனக்கு ரொம்ப பசிக்குமா. அப்போ நா யாருக்கும் தெரியாம கிட்சன் போய் எதாவது சாப்ட இருக்கானு பாப்பேன்.. அப்டி ஒருதடவ போகும்போது தான் நா பரத் பெரியப்பாட்ட மாட்டிக்கிட்டேன்,..அவங்க உடனே என்னை ப்ரேம் கிட்ட சொல்லி அந்த இருட்டு ஸ்டோர் ரூம்ல அடச்சிடுவான். நா அந்த ரூமோட கதவ தட்டி தட்டி அழுவேன் ஆனா யாருமே அத திறக்கமாட்டாங்க……அங்க கோஸ்ட் இருக்குனு பப்ளு அடிக்கடி சொல்லுவான்.. அவன் அங்க பார்த்தானாம்.. ஏன் ஏஞ்சல் அது ட்ரூவா.”என்றான் ஆதி அழுவது போல் உதட்டை பிதுக்கிக்கொண்டு.. “இல்ல ஆதி கோஸ்ட்லா எதும் இல்ல… பயப்பட கூடாது.. இனி நா இருக்கேன் உனக்கு.. இனி அவன் உன்ன அடிக்காம பாத்துக்குறேன்.. சரியா..”என்றாள் அவனை பார்வையால் வருடியவாறு அதை கேட்ட ஆதி அவளை இமைக்க மறந்து பார்த்துக்கொண்டிருந்தான்.. அவனின் பார்வையில் ஆஸ்வதி விழுந்துதான் போனாள்.. பின் ஆதி நினைவிற்கு வந்தவன் வேகமாக புன்னகைத்தவாறே தலை ஆட்ட….அதில் அவளும் புன்னகைத்துக்கொண்ட… அவன் அருகில் இருந்து எழுந்து அவன் கஃப்போர்டில் அவனது துணிகளை எடுத்து அழகாக மடித்துக்கொண்டிருந்தாள் ஆதியும் அவளை ஓரக்கண்ணால் பார்த்தவாறே தன் கையில் வைத்திருந்த கார் பொம்மையுடன் விளையாடிக்கொண்டிருக்க…. ஆஸ்வதி அப்போது தான் நியாபகம் வந்தவளாக “ஹான் உங்ககிட்ட கேட்கலாம்னு நினைச்சேன்…ஆதி.. உங்க அம்மா எங்க……”என்றாள் ஆஸ்வதி அவனின் உடைகளை மடித்தவாறு.ஆனால் அவனிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை அதை உணர்ந்த ஆஸ்வதி..”ஆதி உங்கள தான் கேட்குறேன். உங்க அம்மா எங்க…. நா இங்க வந்ததுல இருந்து அவங்கள பாக்கவே இல்ல….. கீழ அவங்க போட்டோ தான் பார்த்தேன்..தாத்தா கூட அவங்கள பத்தி எதும் சொல்லலையே..”என்று அவள் பாட்டிற்கு பேசிக்கொண்டிருக்க….. அவள் கேட்டதற்கு எந்த பதிலும் வராமல் இருக்க ஆஸ்வதி. “என்னாச்சி ஆதி. நா கேட்டுட்டே இருக்கேன்…நீங்க அமைதியாவே இருக்கீங்க……”என்றவாறு அவனை பார்த்து திரும்ப…. அதிர்ந்து போனாள்.. ஏனென்றால் ஆதி கட்டிலில் உட்கார்ந்தவாறு. கண்கள் சிவக்க…. கை நரம்புகள் அனைத்தும் முறுக்கிக்கொண்டு.. உடல் இறுக உட்கார்ந்திருந்தான்.. அந்த ஏசி அறையிலும் அவனது முகத்தில் சொட்டு சொட்டாக வியர்வை வடிந்துக்கொண்டு இருந்தது. அவனது வீட்டில் அணியும் வெள்ளை நிற ஜிப்பா வேர்வையில் நனைந்து போய் இருந்தது. அதை பார்த்ததும் அவன் அருகில் ஓடிய ஆஸ்வதி அவன் கன்னத்தை இருக்கைகளாலும் பிடித்து..முகத்தை பார்த்தாள். அவன் பற்களால் கீழ் உதட்டை கடித்துக்கொண்டு வெறிப்பிடித்தவன் போல உட்கார்ந்திருந்தான். அதை கண்ட ஆஸ்வதி பயந்து போனாள் “ஆதி ஆதி. என்னாச்சி என்னாச்சி உங்களுக்கு…”என்றாள் அவன் கன்னத்தை பிடித்து பல தடவை தட்டியவாறு ஆனால் அதற்கு பயன் தான் இல்லை.. அவன் கண்கள் சுவற்றையே வெறித்தவாறு பற்களை இன்னும் அதிகமாக உதட்டை கடித்தவாறு இருந்தான். அதில் அவன் உதட்டில் லேசாக ரத்தம் வேறு வந்தது. அதனை பார்த்த ஆஸ்வதி பயந்து போனாள்.”அய்யோ. ஆதி ஆதி.. கடிக்காதீங்க….. ரத்தம் வருது பாருங்க….”என்றாள் அவன் பற்களில் இருந்து உதட்டை பிரிக்க முயன்றவாறு.. ஆனால் அவளால் அது முடியவில்லை.. அவன் கைகளை பிடிக்க முயல…. ஆனால் அது கல் போல இறுகி இருந்தது. “ஆதி. ஆதி,. இங்க பாருங்க ஆதி.. எனக்கு பயமா இருக்கு ஆதி.. ப்ளீஸ் என்னை பாருங்க… நா உங்க ஏஞ்சல்.. ப்ளீஸ் ஆதி..”என்று அழுதவாறு அவன் கன்னத்தை பலம் கொண்டு தட்ட…. ஆனால் அவனோ.ஆஆஆஆஆஅ….. என்று கத்தியவாறே. ஆஸ்வதியை தூரமாக தள்ளிவிட்டு.தன் அருகில் உள்ள நாற்காலியை தூக்கி தரையில் இரண்டு முறை மோதி உடைத்தான்…அவனிடம் இதை எதிர்ப்பார்க்காத ஆஸ்வதி தன்னை சமாளித்துக்கொண்டு அதிர்ந்து அவனை பார்த்துக்கொண்டு நிற்க….. அவனோ அடுத்து பூஜாடியை கையில் எடுத்தான். அதனை பார்த்த ஆஸ்வதி திரும்ப அவன் அருகில் ஓட… அவனோ அவளை தன் அருகிலே நெருங்க விடாமல் அவளை பொருட்களை தூக்கி போட்டு உடைக்க……அவன் உடைத்த சத்தத்தில் அதிர்ந்து அவனை பார்த்தாள் அவன் கண்கள் இரத்த நிறமாக மாறி இருந்தது.. அதில் ஆஸ்வதியே அதிர்ந்தும்.. பயத்திலும் பார்க்க…. அதை எதும் பொருட்படுத்தாதவன்.. மீண்டும் வெறிக்கொண்டு அந்த பூச்சாடியை உடைக்க மேலே தூக்க…. ஆஸ்வதி போய் அவன் கையை பிடித்துக்கொண்டாள். ஆனாலும் அவன் உயரத்திற்கு அவளால் அவன் கையை பிடிப்பது மிகவும் சிரமமாக இருந்தது,. ஆனால் அதையும் பொருட்படுத்தாமல் தன் நுனி காலில் நின்றவாறு அவன் கையை இறுக்கமாக பிடித்துக்கொண்டு. “நோ ஆதி…”என்றாள் பயத்தில் மெலிதாக…. ஆனால் அது அவன் செவிகளில் நுழையவே இல்லை. அவனோ.. அவளை ஒரே தள்ளாக தள்ளியவாறு.. பக்கத்தில் இருந்த பூஜாடியை தூக்கி போட்டு உடைத்தான்.அவன் தள்ளியதில் ஆஸ்வதி பக்கத்தில் இருந்த சோபாவில் போய் விழ…. ஆஸ்வதியின் கால் சோபாவின் மரக்கால்களில் பட்டு ரத்தம் வந்தது…அதன் வலியில் ஆஸ்வதி ஆஆஆ….. என்று முனக…. அந்த சிறு முனகல் மூர்க்கமாக நின்றவனின் காதில் விழுந்தது போல… அப்போது தான் சுயநினைவிற்கு அவன் கண்கள் ஆஸ்வதியை கலக்கமாக பார்க்க… ஆஸ்வதியும் அப்போது அவனை தான் பார்த்தாள் அவன் அப்படியே ஆஸ்வதியின் அருகில் வந்து அவளின் உயரத்திற்கு குனிந்து அவள் காலடியில் உட்கார்ந்தான் அதில் மிரண்ட ஆஸ்வதி அவனை பயத்துடன் பார்க்க….. அவளின் அந்த மிரட்சியான பார்வையில் ஆதியின் உள்ளம் பலமாக அடிவாங்கியது அவன் கண் கலங்கியவாறு அவளது காலை தொட போக…. ஆஸ்வதி தன் கால்களை அவன் தொடாத அளவிற்கு இழுத்துக்க்கொண்டாள்.. அவன் அவளை அடிப்பட்ட பார்வை பார்த்து. “நீயும் என்னை விட்டு போய்டுவியா ஏஞ்சல் “என்றான் அவளை பாவமாக பார்த்தவாறு. அதில் ஆஸ்வதியின் கண்கள் கலங்கியது.. “நீயும் போய்ட்டா இந்த ஆதிக்கு யாரு இருக்கா ஏஞ்சல்.”என்றான் கண் கலங்கியவாறு… அதில் ஆஸ்வதி அவனை அதிர்ந்து பார்க்க….. ஆதி கண்ணில் இருந்து கண்ணீர் வழிந்தது தன்னவனின் கண்ணில் கண்ணீரை பார்த்தவள். கண்களிலும் கண்ணீர் வழிந்தது… அவளின் கண்ணீர் துளிகள் குனிந்திருந்த அவனின் நெற்றியில் பட்டதும் தான் அவனிற்கு சுயநினைவே வந்தது அப்போது தான் ஆதி ஆஸ்வதியை பார்க்க…. அவள் கண்களில் இருந்து கன்னத்தில் வழியும் கண்ணீரை பார்த்து தான் ஆதி தான் இருக்கும் நிலை உணர்ந்து..”ஏஞ்சல்…”என்றவாறு கண்கள் சொருகி மயங்கி அவள் மடியிலே விழுந்தான். அதில் அதிர்ந்த ஆஸ்வதி.”அய்யோ ஆதி ஆதி. உங்களுக்கு என்னாச்சி.. என்னை பாருங்க ஆதி ஆதி நா உங்க ஏஞ்சல்.”என்று கதற…. ஆனால் அவனிடம் எந்த அசைவும் தெரியவில்லை.. அதை கண்டவள் ஒரு நிமிடம் உலகம் சுற்றுவதே நின்றது போல் ஸ்தம்பித்து போனாள்.. பின் தன்னவனின் நிலையை பார்த்தவள்.. ஆதி ஆதி. என்று அவன் நாமத்தை தான் பிதற்றிக்கொண்டே அவனை எழுப்ப முயன்றாள். அப்போது திடீர் என்று கதவு தட்டும் சத்தம் கேட்க….. அப்போது தான் ஆஸ்வதிக்கு யாரையாவது கூப்பிட வேண்டும் என்றே தோன்றியது.ஆதியின் தலையை தன் மடியில் இருந்து மெதுவாக தூக்கி சோபாவில் வைத்துவிட்டு கதவை திறக்க ஓடினாள் ஆஸ்வதி கதவை திறக்க….. அங்கு விதுன் நின்றுக்கொண்டு இருந்தான்.. அவனை பார்த்ததும் அவள் எதோ சொல்ல வர….. அதற்கு இடம் அளிக்காமல் விதுன் தன் கையில் இருந்த இஞ்சக்ஷனை எடுத்துக்கொண்டு ஆதி படித்திருக்கும் இடத்திற்கு வந்தான். “அண்ணா அண்ணா.. ஆதி. ஆதி..”என்று பேச்சி வராதவள் போல திக்க… அதில் விதுன் அவளை புரியாமல் பார்த்தான்.”ஆதிக்கு ஒன்னும் இல்ல ஆஸ்வதி கொஞ்சம் பொருமையா இரு.. நா அவன பார்த்துக்கிறேன்.”என்றான் அவளை அறையினுள் அழைத்து வந்து கதவை நன்றாக சாத்திவிட்டு.. ஆனால் ஆஸ்வதி இருந்த நிலையில் அதை எல்லாம் அவள் கவனிக்கவில்லை.. “அண்ணா.. அவரு மயங்கி.. மயங்கிட்டாருணா எனக்கு எனக்கு. ரொம்ப பயமா இருக்கு.”என்றாள் திக்கியவாறு.. அவள் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்த வண்ணம் இருந்தது… அதில் சொன்னதை கேட்டு விதுனின் முகத்தில் எந்த சலனமும் இல்லை.. அதை பார்த்து ஆஸ்வதி தான் குழம்பி போனாள். “ஓஓஓ….. மயங்கிட்டானா.இதுக்கு ஏன்மா பயப்படுற……”என்று சர்வ சாதாரணமாக சொன்னவன்..தான் கொண்டு வந்த இஞ்சக்ஷனை ஆதியின் கையில் போட்டுவிட்டு அவனை சரியாக சோபாவில் படுக்க வைத்தான்.. பின் ஆஸ்வதியை பார்க்க….. அவள் அவனை குழப்பத்துடன் பார்த்துக்கொண்டிருப்பதை பார்த்துவிட்டு..மெலிதாக புன்னகைத்துவிட்டு அவளின் அறை பால்கனிக்கு போய் நின்றுக்கொண்டான்.ஆஸ்வதியும் குழப்பத்துடன் அவன் பின்னால் வந்தாள் “அண்ணா அவருக்கு என்னாச்சிணா ஏன் இப்டி..”என்றாள் சோபாவில் சோர்ந்து போய் படுத்திருந்த ஆதியை கலங்கியவாறு கண்டு. விதுன் அப்போது தான் ஆஸ்வதியின் முகத்தை கூர்ந்து பார்க்க…. அவள் கண்கள் கலங்கி இருப்பதை பார்த்து மெலிதாக புன்னகைத்துக்கொண்டான். தன் உயிர் தோழன் மீது அவன் மனைவி கொண்டிருக்கும் காதலை நினைத்து அவனுக்கு மனத்திற்கு அவ்வளவு இதமாக இருந்தது தாத்தா விதுனிடம் ஆஸ்வதியுடனான திருமணத்தை பற்றி சொல்லும்போது விதுன் ஆதிக்கு வரும் மனவியை நினைத்து கலக்கம் கொண்டான் வருகிறவள் தன் நண்பனின் நிலையை புரிந்துக்கொள்வாளா என்று.. ஆனால் ஆஸ்வதியை இங்கு வந்ததில் இருந்து அவனும் கவனித்துக்கொண்டு தானே இருக்கிறான். அவளது ஆதியுடனான ஈட்பாட்டை.. அவன் மேல் அவள் காட்டும் பரிவை எல்லாம் பார்க்கும் போது விதுனிற்கு ஆஸ்வதி மேல் முழு நம்பிக்கை வந்தது.. “உன் ஆதிக்கு ஒன்னும் ஆகல மா.. அவன் நல்லா தான் இருக்கான்…”என்றான் விதுன் அதை கேட்டு சிவந்த கலங்கிய முகத்துடன்…”அண்ணா அவரு எப்டி ரியாக்ட் பண்ணாரு தெரியுமா அவர அவராலையே கன்ட்ரோல் பண்ண முடில….. நீங்க என்னனா அவர் நல்லா இருக்காருனு சொல்றீங்க…. ப்ளீஸ் அண்ணா அவருக்கு என்ன ஆச்சினு சொல்லுங்க….நா பார்த்த என்னோட ஆதி இப்டி இருக்கமாட்டாரு. எப்பிடி இப்டி..”என்றாள் தன்னவனின் நிலையை நினைத்து கலங்கியவாறு. அவள் கடைசியாக சொன்ன என்னோட ஆதி என்பதை மட்டும் மனதில் குறித்துக்கொண்டவன் “நீ ஆதிட்ட அவங்க அம்மா பத்தி பேசினியாமா.”என்றான் விதுன் அவன் கேட்டதில் அதிர்ந்த ஆஸ்வதி தயங்கியவாறு.. தலைகுனிந்துக்கொண்டே…”ஆமாம்..”என்று தலை ஆட்டிக்கொண்டே தப்புதான் அண்ணா.. நா கேட்டதுனால தான் அவருக்கு இப்டி ஆச்சா…”என்றாள் குற்றயுணர்வுடன்.. “ம்ம்ம்.. அதுனாலையும்.”என்றான் விதுன். அதில் குழப்பமாக ஆஸ்வதி விதுனை பார்க்க… “ஆஸ்வதி எங்கிட்ட ஒரு உண்மைய சொல்றீயா..”என்றான் விதுன் அவளை கூர்மையாக பார்த்தவாறு.. அவனின் பார்வையில் என்ன கண்டாளோ அவள் தலை தானாக ஆட….. “ம்ம்ம்ம். உனக்கு ஆதித்தை முன்னாடியே தெரியும் இல்லையா.”என்றான்.. அதை கேட்ட ஆஸ்வதி அதிர்ந்து போனாள் இவனுக்கு எப்படி தெரியும் ஆனாகப்பட்ட ஆதிக்கிற்கே தம்மை தெரியாதே ஆனால் விதுனை பார்த்து இரண்டு நாள் கூட முழுதாக ஆகவில்லை அதற்குள் எப்படி. என்று ஆஸ்வதி மனதில் நினைக்க… அதுவரை அவளை கூர்மையாக பார்த்துக்கொண்டிருந்த விதுன் சின்ன புன்னகையுடன்.. “உன் மனசுல உள்ளது மட்டும் இல்ல…. ஆதியோட மனசுல….. ஏன் இந்த வீட்ல உள்ளவங்க மனசுல என்ன ஓடுதுனு கூட என்னால சொல்ல முடியும்..”என்றவன் கண்களில் சில நாளாக தன்னை ஆர்வமாக பார்க்கும் அனுஷாவின் முகம் மின்னலாக ஒளிர்ந்தது. அதனை தற்காலிகமாக ஒதுக்கிவிட்டு.. ஆஸ்வதியை பார்த்தவன். “ஏனா.. ஐ ம் ஏ சைக்யட்ரீஸ்ட்.”என்றான்..
அத்தியாயம்-10 ஆஸ்வதி ஆதியை தேடிக்கொண்டு வர……அப்போது அவள் அறையை விட்டு வெளியில் வர அங்கு எந்த லைட்டும் எறிய வில்லை.. பக்கத்தில் ஆள் இருப்பது கூட அவளுக்கு தெரியாத அளவிற்கு இருட்டாக இருந்தது.. இந்த நேரத்தில் எங்க லைட் ஸ்விட்ச் இருக்கிறது என்று கையாலயே தேடினாள். ஸ்விட்ச் கிடைத்ததும் அதை போட கையை வைக்க போக ஒரு வலிய கரம் அதை போடாதது போல தடுத்து அவளை தன்னை நோக்கி இழுத்தது. ஆஸ்வதி அந்த வலிய கை இழுத்த வேகத்தில் எதோ கல்லின் மீது மோதியது போல் கடினமாக இருந்தது.. ஆஸ்வதி தன் கைக்கொண்டு வருட…. அங்கு அந்த இரவின் அமைதியிலும் நிசப்தத்திலும் அந்த சத்தம் அவளுக்கு வேகமாக கேட்டது அது…டப்டப்..எங்கிற இதயத்தின் ஓசை.அப்போது தான் அவள் யார் மீதோ மோதிவுள்ளோம் என்பதே அவளுக்கு தெரிந்தது.அதில் ஆஸ்வதி பயந்து கத்த பார்க்க அவள் வாயை ஒரு கை மூடிக்கொண்டு அவளை இறுக்கமாக கட்டிக்கொண்டது.. அதில் அவள் தன் எதிரில் நிற்கும் அந்த உருவத்தை பார்க்க அவள் முயற்சி செய்ய ஆனால் அந்த உருவம் முகத்தை நன்றாக மூடி இருந்தது. அவள் திமிற அவன் விடாமல் அவளை இன்னும் இறுக்கிக்கொண்டு “ஸ்ஸ்ஸ் கத்துன உன்ன கொன்றுவென்..”என்று ஆளை அதிர வைக்கும் ஒரு கம்பீர குரலில் மிரட்டிக்கொண்டே.ஒரு கத்தியை அவள் கழுத்தில் வைத்தான் அவன் குரலே அவளை மிரட்ட… அதிலும் அந்த இருட்டிலும் அவன் கையில் இருந்த கத்தி பளபளவென தெரிந்தது.. அதில் மூச்சிவிட கூட மறந்து அதிர்ச்சியாக பார்த்தாள்.. அவளின் இந்த மிரட்சி பார்வையில் “யார் நீங்க… இங்க என்ன பண்றீங்க…..”என்றாள் மெல்லிய நடுங்கிய குரலில்.அவன் அப்போதும் அவள் மீது தன் மூச்சிக்காற்று உரச இன்னும் நெருங்கி நின்றுக்கொண்டு…”இங்க பாரு நா இங்க வந்ததையோ.. இல்ல உன்ன மிரட்டுனதையோ. இங்க யாருகிட்டயாச்சும் சொன்ன……”என்று கூறியவன் மேலும் அவன் அவளிடம்.. “நா இங்க இருந்து போகிற வர உன் வாயில இருந்து சத்தம் வரக்கூடாது.. வந்துது உன் புருசன் கீழ தா அவன் அந்த பெருசு ரூம்ல தான் இருக்கான். அவன தா கொல்லுவேன்.”என்றான் அதில் அவள் ஒரு நிமிடம் மிரண்டு போனாள்.. அதனை அவள் கண்கள் அப்பட்டமாக காட்ட… அந்த மிரட்சியான பார்வையை அந்த உருவமும் குறித்துக்கொண்டது மேலும் அந்த உருவத்தின் கண்கள் அவளை பார்வையால் வருடியது. அந்த இருட்டிலும் அவளது மிரட்சியிலும் அவள் அதனை கவனிக்கவில்லை.. அவள் கத்தமாட்டேன் என்று தலையை ஆட்ட…. “ம்ம் குட் என்ன இங்க பார்த்ததா யார்ட்டயாச்சும் மூச்சிவிட்ட உன்ன ஒன்னும் பன்னமாட்டேன். நா சொல்றது புரிஞ்சிதுல”என்றான் அவளும் அவனை அப்போது தான் பார்க்க முயன்றுக்கொண்டு இருந்தாள் அவன் சொன்னது கேட்டதும்.வேகமாக தலை ஆட்ட…..ம்ம்.. என்று அவனும் அப்போது தான் பார்த்தான் அவன் கை அவளது வெற்றிடையில் அழுத்தமாக பதிந்து இருந்தது.. அதனை உணர்ந்த அவன் கைகள் இன்னும் அழுத்தமாக அவள் இடையில் பதிய….. அதனை உணர்ந்த அவள் அவனிடம் இருந்து விலக நெளிந்துக்கொண்டே இருந்தாள்.அது மட்டும் இல்லாமல் அவளது முகம் வெகு அருகில் இருந்தது.. அதை பார்த்த அவன் அவளை இன்னும் நெருங்கினான். அவனின் பார்வை மாற்றத்தை அறிந்த அவள் அவனை விட்டு விலக முயல… ஆம்.. அவளால் முயலமட்டும் தான் முடிந்தது பின் அவன் தன்னை நெருங்கி வருவதை பார்த்து பயத்தில் அவளின் விரித்த விழிகள் ஒருதரம் அழுத்தி மூடி திறந்தாள் கண்ணை திறந்து பார்த்தாள் அங்கு அவள் மட்டும்தான் அங்கு நின்றுக்கொண்டு இருந்தாள் எதிரில் யாருமே இல்லை எப்படி இது இங்கு தானே அவனை பார்த்தேன். இப்போது எங்கே.. என்று நினைத்துக்கொண்டே நின்றிருந்தாள்.. அவளது நெற்றியில் மட்டும் எதோ ஈரமாக குறுகுறுத்துக்கொண்டே இருந்தது.. அவள் கை விரல்களால் அதனை தொட்டுப்பார்க்க அவல் உடல் ஒரு நிமிடம் சிலிர்த்தது ஆனால் அது எதனால் என்பது அவளுக்கு புரியவே இல்லை பின் வீடு முழுதும் அவனை தேடி ஆஸ்வதி அலைந்துக்கொண்டு இருந்தாள்.. படியில் இறங்கி ஹாலுக்கு வந்து பார்க்க அவளுக்கு ஒன்றும் வித்தியாசம் தெரியவில்லை.பின் கிட்சன் சென்று பார்க்க…. அங்கும் எதும் தெரியவில்லை. பின் வெளிக்கதவை சோதிக்க அது மூடிதான் இருந்தது… இறுதியில் அவன் வந்ததற்கான தடயமே அவளுக்கு இல்லாமல் போனதில் அவள் தான் குழம்பி போனாள் அதற்கு பின் தான் ஆதியை காணுமே என்று தேடிக்கொண்டு வந்தது அவளுக்கு நியாபகம் வந்தது…. அங்கு தாத்தாவின் அறை வாசலில் நின்று தயங்க….. எதற்கும் திறந்து பார்ப்போம் என்று கதவினை மெதுவாக திறந்து பார்த்தாள் அறை முழுதும் இரவு ஒளியில் இருக்க….. அந்த இரவு வெலிச்சத்திலும் அங்கு ஆதி சிறு பிள்ளை போல தன் தாத்தாவின் கையை பிடித்துக்கொண்டு தூங்கிக்கொண்டு இருப்பது ஆஸ்வதிக்கு நன்றாக தெரிந்தது. அதன் பின் தான் அவளுக்கு மூச்சே வந்தது.. பின் அவள் அவனை ஒரு அழுத்தமான பார்வை பார்த்துவிட்டு தொந்தரவு செய்யாமல் கதவை மூடிவிட்டு படியில் ஏறி மேலே வந்தாள்.. தன் அறைக்கு வந்த பின்பு தான் கொஞ்ச நேரத்திற்கு முன் நடந்தது நியாபகம் வந்தது. “அது உண்மையா இல்ல கனவா,. அப்புறம் ஏன் நா அங்கயே நின்னுட்டு இருந்தேன்..”என்று பல வாறு யோசித்துக்கொன்டே இருந்தவள் குனிந்து தன் இடையை பார்க்க… அங்கு அழுத்தி யாரோ பிடித்ததற்கான அடையாளம் இருந்தது அதனை கைகளால் வருடிவிட்டவள் கண்ணாடி அருகில் சென்று தன் முகத்தை ஆராய… அவல் நெற்றியை ஒரு பார்வை பார்க்க முகம் குங்குமமாக சிவந்து போனது.. அதை பார்த்து அதிர்ந்தவள். “சம்திங் ராங். இங்க என்னவோ நடக்குது.. அது என்னனு தெரில….. கூடிய சீக்கரம் கண்டுப்பிடிக்கனும்…”என்று தன் நெற்றியை வருடிக்கொண்டே… கட்டிலில் உட்கார்ந்து ஒன்று ஒன்றாக யோசிக்க ஆரம்பித்தாள். இந்த வீட்டிற்கு வந்ததில் இருந்து நடக்கும் அனைத்தையும் யோசித்தவாறே நகத்தை கடித்துக்கொண்டே அப்படியே உட்கார்ந்தவள்… பின் விடியல் காலையில் தான் உறங்கினாள். காலையில் தூங்கிக்கொண்டு இருந்த ஆஸ்வதியை இரு கண்கள் ரசனையாக பார்த்துக்கொண்டு இருந்தது அந்த கண்கள் தன் கைகளை ஒரு முறை பார்த்துவிட்டு பின் திரும்பி ஆஸ்வதியை பார்க்க… அங்கு அந்த அறையின் ஏசியின் மகிமையால் அவளது இடை அப்பட்டமாக அந்த கண்களுக்கு காட்சி அளித்தது.. பின் அவளது நெற்றியை வருடியவாறு அதனை ரசித்துக்கொண்டு இருந்த அந்த கண்கள் ஜன்னலில் இருந்து பட்ட வெளிச்சத்தில் மெதுவாக கண்ணை திறந்த ஆஸ்வதியை பார்த்துவிட்டு அங்கிருந்து வேகமாக சென்றது. ஆஸ்வதி எழுந்து பின் திரும்பி கடிகாரத்தை திரும்பி பார்க்க அது 7 என்று காட்டியது உடனே அவசரமாக எழுந்து குளிக்க சென்றுவிட்டாள். குளித்து முடித்து வந்து கண்ணாடி முன் நின்றாள் தலை சீவி பின்னிவிட்டு.நெற்றியில் குங்குமத்தை வைத்துவிட்டு கீழே சென்றாள் இன்னும் யாரும் எழுந்ததற்கான அடையாளம் தெரியவில்லை. பின் சமையல் அறைக்கு சென்று பாலை காய்த்து அதில் தனக்கு காபி கலந்து எடுத்துக்கொண்டு வெளியில் சென்றாள்.. தோட்டத்தில் போடப்பட்டு இருந்த நாற்காலியில் உட்கார்ந்து தோட்டத்தை ரசித்தவாறே காபிக் குடித்தாள் பின் அங்கு உள்ள செடிகளை, பூக்களை எல்லாம் தொட்டு,நுகர்ந்து பார்த்து ரசித்துக்கொண்டு இருந்தாள். பின் தன்னை யாரோ நெடுநேரம் பார்ப்பதாக தோன்றியது. திரும்பி சுற்றும் முற்றும் பார்த்தாள் யாரும் இருந்ததற்கான அறிகுறி இல்லாமல் இருந்தது பின் திரும்பி பார்த்துக்கொண்டே நகர்ந்தவள். எதிரில் நின்றிருந்தவன் மேலே மோதிவிட்டு ஆஆஆஆஆ, என்று கத்தி அதிர்ச்சியாக திரும்பி பார்த்தாள்..அங்கு. அங்கு. அவளுக்கு முன்.. பே.என்ற சத்தத்துடன் வந்து நின்றான் ஆதி.. அவன் செய்த சத்தத்தில் ஆஸ்வதி தான் பயந்து போய் அவனை கீழே தள்ளிவிட்டுவிட்டாள் அதில் கீழ விழுந்த ஆதி “ஆஆ…. ஏஞ்சல்.. ஏன் என்ன கீழ தள்ளிவிட்ட”என்று அவன் அவன் கையை தேய்த்துக்கொண்டு உதட்டை பிதிக்கிக்கொண்டு நின்றிருந்தான்.. “அய்யோ.. ஆதி அடிப்பட்டுட்டா..”என்று பதறியவாறு அவன் பக்கத்தில் உட்கார்ந்து கையை திருப்பி திருப்பி பார்த்துக்கொண்டு இருந்தாள். அதில் ஆதி ஒரு நிமிடம் அவலை ரசனையாக பார்க்க…. பின்.. “என்ன ஏஞ்சல் தள்ளிவிட்டுட்ட…. போ. உங்கூட பேசமாட்டென்..”என்று எழுந்து போய் அங்கிருந்த நாற்காலியில் உட்கார்ந்து முகத்தை திருப்பிக்கொண்டான். அவனின் இந்த செய்கையை பார்த்து சிரிப்பு வந்தாலும் அவன் அருகில் சென்று தன் காதை பிடித்துக்கொண்டு”சாரி ஆதி தெரியாம பண்ணிட்டென்”என்று சொல்லியவாரு தோப்புக்காரனம் போட்டாள் அதை பார்த்த ஆதி அவளை பார்த்து “அய் உனக்கு இது தெரியுமா.. நானும் நிறைய போட்டுருக்கேன் அந்த ப்ரேம் தா என்ன இப்டி 1000 டைம் போட சொல்லுவான்…நானும் ஸ்டார்ட்டிங்ல ரொம்ப நல்லா இருக்கே இந்த கேம்னு விளையாடுவேனா.. அப்புறம் கால் ரொம்ப வலிக்கும். நானும் ப்ரேம்ட போய் காலு வலிக்கிது ப்ரேம். நா கொஞ்சம் உட்காரவானு கேட்பேனா.. அவன் அதுக்கு நோ. சொல்லிடுவான்,…அப்புறம் அவன்ட திரும்ப திரும்ப கேட்டா அடிப்பான்.. தெரியுமா”என்றான் ஆதி உதட்டை பிதுக்கியவாறு… அவன் சொன்னதை கேட்டுவள் புருவத்தை சுருக்கி யோசித்தவாறே.“ஏன் போட சொல்லுவாங்க….”என்றாள் ஆஸ்வதி முகம் இறுகி. அவள் முகம் இறுகுவதை பார்த்தவாறே..“அது. நா தாத்தூ கூடவே இருக்கேனு என்ன அப்டிதா பண்ணுவான் அவனுக்கு என்னை பிடிக்கவே பிடிக்காது.. எதாவது சொல்லி என்னை அபூர்வா அத்தைகிட்ட அடி வாங்கி குடுத்துட்டே இருப்பான். பரத் பெரியப்பா.. அப்புறம் அஜய் பெரியப்பாவுக்கும் என்னை பிடிக்காது.. திட்டிடே இருப்பாங்க….. பெரியம்மா கூட அப்டிதான். ஆனா ரூபா அத்த மட்டும் ரொம்ப நல்லவங்க…. எனக்கு டைலி அவங்க தான் பால் கலக்கி தருவாங்க….. அஞ்சலி கூட என்ன நல்லா பாத்துப்பா.. அப்புறம் இஷானா இல்ல அவ என்னை எப்போதும் முறைச்சிட்டே இருப்பா ப்ப்ளு போய் இஷானாட்ட என்னமோ சொல்லிட்டே இருப்பான். அதுக்கும் இஷானா என்னை அடிப்பா.. ராம் இல்ல அவரு என் கையில என்ன சாப்ட வச்சிருந்தாலும் புடிங்கி சாப்டுருவாங்க…… ”என்றான் ஆதி கையில் வைத்திருந்த காரை ஓட்டுவதை போல செய்கை செய்து. அதை கேட்டு ஆஸ்வதி முகம் கோவத்தில் சிவந்தது… இருந்தாலும் தன்னை சமாளித்துக்கொண்டு ஆதியை அழைத்துக்கொண்டு உள்ளே சென்றாள். அங்கு தாத்தா எழுந்து வந்து அப்போதுதான் சோபாவில் உட்கார்ந்தார் அவரை பார்த்துவிட்டு கிட்சனுக்குள் சென்று அனைவருக்கும் காபி போட ஆரம்பித்தாள். அதை பார்த்து அங்கு வந்த வினுஜா…ஆஸ்வதியை ஒரு மாதிரி பார்த்துக்கொண்டே”அய்யோ என்னமா நீங்க இதலா செஞ்சிட்டு நா செய்றேன் குடுங்க…”என்றார். அவள் கையில் இருந்ததை பிடுங்கியவாறு… அதில் அதிர்ந்த ஆஸ்வதி தன்னை சாளித்துக்கொண்டு“அம்மா அதலா ஒன்னும் இல்ல… இன்னுமே நானே எல்லாருக்கும் ஃபுட் ப்ரிப்பர் பண்ணுறேன்.. நீங்க போய் வேற வேலை இருந்தா பாருங்க… அப்புறம் என்ன அம்மானு கூப்டாதிங்க….. ஆஸ்வதினு கூப்டுங்க”என்றாள் அதற்கு முகத்தை கடுகடுவென வைத்துக்கொண்டு வினுஜா “அய்யோ என்னமா உங்கள போய்..”என்று இழுத்தார் “அய்யோ அம்மா எனக்கு சின்ன வயசுதா.. அப்டியே கூப்டுங்க….. யாராவது கேட்டா நா பதில் சொல்லிக்கிறேன்”என்றாள் அவர் முகத்தை கூர்மையாக பார்த்தவாறு அங்கிருந்து சென்றாள்.. ஆஸ்வதிக்கு இங்கு வந்ததில் இருந்து வினிஜாவின் முகம் எதோ.. சூனியக்காரி முகம் போல தெரிந்தது. அதில் இன்னும் கடுப்பான வினிஜா “எப்படியும் இங்க இருக்குறவங்க முகத்துல அடிச்சி அனுப்பதான் போறாங்க…. போ. போ. போய் அசிங்கப்பட்டு வா.வந்துட்டா முதல் நாளே நா செய்றேனு.. ம்ம்ம்.. வருதுங்க பாரு சாகவே.”என்று மனதில் நினைத்துக்கொண்டு கோணலாக ஒரு சிரிப்பை சிரித்தார். பின் காபி கொண்டு வெளியில் சென்றாள். அங்கு தாத்தாவிற்கு சென்று “குட்மார்னிங் தாத்தா காபி”என்றாள்.. தாத்தா அந்த காலையிலே குளித்து மங்களகரமாக இருந்த ஆஸ்வதியை பார்த்து “குட்மார்னிங் மா” என்றார். அவளும் புன்னகையுடன் அவருக்கு அருகில் நிற்க…. “இங்க உட்காருடா…”என்றார் தனக்கு அருகில் உள்ள சோபாவை காட்டி.. ஆஸ்வதியும் புன்னகையுடன் அவர் காட்டிய சோபாவில் உட்கார… தாத்தாவும் அவளை பார்த்து புன்னகைத்தவாறு.. “என்னமா உன் வீட்டுகாரன் நைட் எங்கூட வந்து படுத்துட்டானு கோவம்லா இல்லையே.”என்றார் அவள் முகத்தை ஆராய்ந்தவாறு… அதில் அவரை செல்லமாக முறைத்துவிட்டு “இதுல என்ன தாத்தா இருக்கு.. அவருக்கு எங்க நல்லா இருக்கோ அங்க தூங்கட்டும். கொஞ்ச நாள் ஆகும் என்ட பழக….அதுக்குள்ள அவர எதுக்கும் நாம வற்புறுத்த வேண்டாமே”என்று தாத்தாவிற்கும், தனக்கிற்கும் சேர்த்து சொல்லிக்கொண்டாள்.. “சரிமா.. ஆமா. நீயென் இந்த வேலையலா பார்த்துட்டு இருக்க….”என்றார் “தாத்தா எனக்கு இதுலா செய்து பழகிட்டு..”என்றாள் சிரித்தவாறு. அந்த சிரிப்பிலே எதோ வலி இருந்தது போல தாத்தாவிற்கு தோன்றியது. “மா. ஆஸ்வதி இதுவர நீ உங்க வீட்ல அனுபவிச்சதுலா போதும் டா. இங்க நீ ராணி மாறி இருக்கனும்டா.. “என்றார் அவள் தலையை பாசமாக வருடிவிட்டவாரு… அதில் புன்னகைத்தவள்… “சரி தாத்தா காலைல என்ன டிபன் செய்யலாம்..”என்றாள் “இங்க உள்ளவங்களா ஒன்னு ஒன்னு தனி தனியா கேட்பாங்க மா அதுலா வினுஜாவுக்கு தெரியும்.. அவள்ட்ட கேட்டுக்கோமா”என்றார்.. “சரி தாத்தா..”என்று அங்கிருந்து நேராக கிட்சன் சென்று.. அடுத்து ஆதிக்கு பூஸ்ட் கலந்து அவன் கையில் கொடுத்து குடிக்க வைத்துவிட்டு அங்கிருந்து சாமி அறை சென்று சுத்தப்படுத்தி. தலையில் முக்காடிட்டு சாமியை கும்பிட்டாள் ஜெய் கணேசா.. ஜெய் ஜெய் கணேசா என்று உருகி பாடிக்கொண்டு இருந்தாள். அவள் குரலில் அந்த பாடல் அவ்வளவு இனிமையாய் இருந்தது தாத்தா அவள் குரலில் மயங்கி கண்களை மூடி உட்கார்ந்திருந்தார்.. ஆதி அவள் உடன் சாமி அறைக்கு சென்று அவளுடன் உட்கார்ந்து அவனும் பூக்களை அவளை போல சாமி படத்திற்கு சூட்டிக்கொண்டு இருந்தான். அவள் குரல் வீடு முழுதும் ஒலித்து அதில் நிம்மதியாக தூங்கிக்கொண்டு இருந்தவர்கள் அனைவரும் எழுந்துவிட்டனர்.. அனைவரும் ரூமில் இருந்து வெளியில் இருந்து வந்தனர்.. அவள் சாமி அறையில் உட்கார்ந்து பாடுவதை பார்த்த அங்கு இருந்த அனைவருக்கும் கடுப்பாக இருந்தது. அவள் வெளியில் வந்து தாத்தாவிற்கு ஆரத்தியை காட்ட அவர் அதை எழுந்து பயபக்தியுடன் கண்ணில் ஒற்றிக்கொண்டார். பின் சாமி அறைக்கு சென்று தன் கணவன் கண்ணில் ஆரத்தியை ஒற்றி எடுத்தாள் அதை பார்த்த ஆதி அவனும் அதை போல அவளுக்கு எடுத்து கண்ணில் ஒற்றினான்,.. அதில் சிரித்த ஆஸ்வதி அவனை அழைத்து வெளியில் வந்தாள் ஆஸ்வதி ஆரத்தியை எடுத்துக்கொண்டு ரூபாவதி அருகில் வந்தாள். அவரிடம் ஆரத்தியை காட்ட… அவர் அவளை பார்த்து சிரித்துக்கொண்டே ஆரத்தியை கண்ணில் ஒற்றிக்கொண்டார். அவருக்கு அருகில் நின்றிருந்த அஞ்சலிக்கு தட்டை நீட்ட அவளும் அதை கண்ணில் ஒற்றிக்கொண்டாள்.. பின் அங்கு இருந்த விஷாலுக்கு நீட்ட “சாரி அண்ணி நான் இன்னும் குளிக்கல….”என்றான் அசடு வழிந்துக்கொண்டு அதை கேட்டு ஆஸ்வதியும் சிரிக்க…..பின் திரும்ப போக… “ஹெய் நில்லு உன் மனசுல என்ன நினைச்சிட்டு இருக்க காலங்காத்தால வந்து இப்டி பாடி தூக்கத்த கெடுத்துட்டு இருக்க…”என்றார் அபூர்வா. “இல்ல அம்மா.. அது..”என்று எதோ சொல்ல வந்தவளை “என்னது அம்மாவா.. கால் மீ மேம் ஒகே.. என்ன அம்மானு கூப்ட கூட ஒரு தகுதி வேணும்… இதுக்கு தான் தகுதி தராதரம் தெரியாதவங்களலா இங்க உள்ள விட்டா இதா நடக்கும்”என்றாள் அமிர்தா “அதானே இது எங்க வீடு.. நீ பாட்டுக்கு வர… நேரா சாமி அறைக்குள்ள போற.. உன் வீடு மாறி நடந்துக்குற… ம்ம்… என்ன நினைச்சிட்டு இருக்க உன் மனசுல….”என்றார் ரியா சர்மா. “ஆமா. அண்ணி நல்லா கேளுங்க… கேட்க ஆளு இல்லாம தான் இங்க எல்லாம் அவங்க அவங்க இஷ்டப்படி நடக்குது.”என்றாள் அபூர்வா “ஆமா மா. நா கூட இந்த வீட்ல உரிமை இல்லாத மாறி தான் ஒதுங்கி போறேன். இவ என்னனா.. வீட்டு நடு ஹாலுல தாத்தா பக்கத்துல உட்காந்து சிரிச்சி சிரிச்சி பேசுறா…”என்றாள் இஷானா. ராம். இஷானா பேசுவதை கூட கவனிக்காதவன் போல் ஆஸ்வதி கையில் இருந்த ஆரத்தி தட்டில் இருந்த லட்டுவை எடுத்து வாயின் உள்ளே அனுப்பி வைத்தான்… அதை கண்ட இஷானா. அவன் தோளில் ஒரு இடியை இடித்தாள். அதில் ராம் வாயில் வைத்திருந்த லட்டுவுடன் அனைவரையும் பாவமாக பார்த்தான்… அவர்கள் பேசுவதை கேட்ட ஆஸ்வதி அனைவரையும் கண்கலங்க பார்த்தாள்…திரும்பி தன் கணவனை பார்க்க… அவன் கண்கள் ஆஸ்வதியை தான் பார்த்துக்கொண்டு இருந்தது…தன் விதியை நொந்த ஆஸ்வதி தலையை குனிந்துக்கொண்டு நின்றிருந்தாள் ஆதி அவள் தலை குனிந்த நிற்பதை பார்த்து அவள் பக்கம் வந்து.”அத்த அவ….. அவ…. என்ன பன்னுனா ஏஞ்சல ஏன் திட்டுறீங்க…”என்றான் சுற்றி முற்றி பார்த்து பயந்தவாறு அதில் அனைவரும் அவனை அதிர்ந்து பார்த்தனர்.. இதுவரை ஆதித் யாரையும் இப்படி எதற்காகவும் எதிர்த்து பேசியதில்லை… அதனாலே கூட ஆதியை யாரும் கண்டுக்கொள்ளாமல் இருந்தனர்.. ஆனால் முதல் முறை ஆதி அனைவரையும் எதிர்த்து கேள்வி கேட்கிறான் என்றால் அனைவருக்கும் கோவம் வரத்தானே செய்யும்.. அனைவரும் அவனை கோவமாக முறைக்க…. அவன் பயத்துடனே ஆஸ்வதி பின்னால் ஒழிய…… “ஓ…. இங்க பாத்திங்களா அப்பா.. இவ இந்த வீட்டுக்குள்ள வந்து 2 நாளு கூட இன்னும் ஆகல… ஆனா வந்ததும் இவனையே நமக்கு எதிரா திருப்பிவிட்டுடா. இதுக்கு தான ஆசப்பட்டிங்க…. கூடிய சீக்கரம் இந்த வீட்டையும் உங்க சொத்தையும் உங்க கிட்ட இருந்து வாங்கிட்டு உங்கள வெளில தொறத்த போறா”என்றார்…அஜய் அவளை கோவமாக முறைத்துக்கொண்டு.. அதனை கேட்டு ஆஸ்வதி தலையை மறுப்பாக ஆட்டிக்கொண்டே “இல்ல மாமா”என்று எதோ சொல்ல வந்தவளை “ம்ச் நீ கொஞ்சம் நிறுத்துறீயா.. நா அங்க பேசிட்டு இருக்கேன்..பெரியவங்க பேசிட்டு இருக்கும் போது குறுக்க பேச கூடாதுனு ஒரு இங்கிதம் தெரிதா உனக்கு.”என்றார் அஜய் அவளை கேலியாக பார்த்துக்கொண்டு… அதில் அவமானத்தில் தலையை கீழே குனிந்துக்கொண்டாள்.. அதை பார்த்த ரூபாவதி அவளை பார்த்துக்கொண்டே அஜயை பார்த்து “அஜய் இப்போ அவ என்ன பண்ணுனானு இப்டி அவள பேசுற……என்னடா இது அவ சாமி தான கும்பிட்டா அவள ஏன் இப்டி திட்டுற…”என்றார் ரூபாவதி.. “பாத்தீங்களா அஜு. இவ்வளவு நாள் உங்கள எதிர்த்து பேசாத உங்க அக்கா நேத்து வந்தவளுக்காக உங்ககிட்ட சண்ட போடுறாங்க….”என்றாள் ரியா அஜயின் மனைவி.. அதை கேட்ட ரூபாவதி ரியாவை பார்த்து ”ரியா. நா அவன்ட்ட பேசதான் வந்தேன். நீதான் இப்போ இத சண்ட ஆக்குற…..”என்றார் “அப்போ நா உங்க ரெண்டு பேருக்கும் சண்ட மூட்டுறேனு சொல்றீங்கலா.. என்ன எனக்கு இதுதான் வேலையா அஜூ. உங்க அக்கா என்னை சண்டக்காரினு சொல்றாங்க…..”என்றாள் முகத்தை கோவமாக வைத்துக்கொண்டு. அதில் பதறிய ரூபாவதி…”அய்யோ. என்ன ரியா இது…”என்று அவர் மேலே எதோ பேச வர…. உடனே அஜய்.. “அக்கா நீ கொஞ்சம் சும்மா இருக்கியா.. அவ யாரு நமக்குள்ள… நீ ஏன் அவளுக்கு சப்போர்ட் பண்ணிட்டு வர…..இங்க நடக்குறது உனக்கு ஒன்னும் தெரியாது.கொஞ்சம் பேசாம இரு.”என்ற அஜய். ஆஸ்வதியின் புறம் திரும்பி அவளை முறைக்க…. “என்னமா இன்னிக்கி காலையிலயே உன் வேலைய சிறப்பா ஆரம்பிச்சிட்ட போல இப்டிலா.. சாமி கும்பிட்டு எங்கள ஏமாத்தி எங்க சொத்த பறிக்க தான வந்துருக்க….”என்றார் பரத் அதை கேட்ட ஆஸ்வதி அவரை பார்த்து கண்ணில் கண்ணீர் வழிந்தவாறு.இல்லை என்று தலையை ஆட்டினாள்.. அவளை பார்க்க பாவமாக இருந்தது ரூபாவதிக்கு.. ஆனாலும் அவர் தன் தம்பிகளின் பேச்சிக்கு பயந்து அனைத்தையும் பார்த்துக்கொண்டு நின்றார்… ஆஸ்வதி அழுவதை கண்ட ஆதி “ஏஞ்சல் நீ அழாத… பெரியப்பா.. அவள ஏன் இப்டி அழ வைக்கிறீங்க…”என்றான் ஆதி “இங்க பாருடா.. ம்ம்.. ஏன் டா ஆதி இவ்வளவு நாள் நீ இருக்குற இடமே தெரியாம இருந்துச்சி. இப்போ என்ன திடிர்னு தைரியம் வந்துச்சி. .என்ன எங்கிட்ட வாங்குனத மறந்துட்டியா..”என்று ப்ரேம் கிண்டல் செய்தவாறு…அவன் அருகில் நின்ற ஆஸ்வதியை கேலியாக பார்த்தான் அதுவரை அமைதியாக தன்னை திட்டுபவர்களை அமைதியாக கேட்டுக்கொண்டு இருந்த ஆஸ்வதி ப்ரேம் தன்னவனை அடித்தான் என்பதை தெரிந்து ருத்ரகாளியாக மாறிவிட்டாள்.. இருந்தாலும் தன்னை அமைதிப்படுத்திக்கொண்டு ஆதியை காண….. அவனை பார்த்த ஆதி பயந்து கை கால் எல்லாம் நடுங்க நின்றிருந்தான்.. அதனை பார்த்த ஆஸ்வதி ஆதியை பார்த்தாள். அவன் அவனுக்கு பயந்து போய் அவளின் பின்னால் போய் ஒளிந்துக்கொண்டான் அங்கு ஆதி முன்னால் நின்றுக்கொண்டு இருந்த ஆஸ்வதி ப்ரேமை முறைத்து பார்த்துக்கொண்டு இருந்தாள். அப்போது.. அதனை பார்த்த ப்ரேம் அவளது முறைப்பில் மிரண்டு தான் போனான்.
அத்தியாயம்-9 அனைவரும் சாப்பிட்டுவிட்டு எழுந்தனர்.. விதுன் அங்கையே கெஸ்ட் ஹவுஸில் தங்கி இருந்ததால் அங்கயே சாப்பிட்டு கொள்வான். ஆனால் அவன் அங்கு இருப்பவர்கள் அனைவரும் சாப்பிட்டதற்கு பிறகு தான் சாப்பிட வருவான் ஆனால் அன்று அவன் ஆதியுடன் கீழே வந்ததினால் அவன் ஆதியை உட்கார வைத்துவிட்டு ஹாலுக்கு செல்ல முயல….. அதற்குள் ஆஸ்வதி.. “அண்ணா. எங்க போறீங்க….. உட்காருங்க… சாப்டலாம்…”என்ற் கூற….. அதை கேட்ட அங்கு உட்கார்ந்திருக்கும் பரத்.. அஜய்.. அபூர்வா முகம் கறுத்துவிட்டது.. ஆஸ்வதியை அனைவரும் முறைக்க… “ஆமா விதுன் உட்காருப்பா…”என்றார் தாத்தா.. அதில் தயங்குயவாறு விதுன்…”இல்ல தாத்தா நா அப்புறம் சாப்டுறேன்…”என்றான்.. “ம்ச். என்னப்பா. ஆரம்பத்துல ஒன்னா தானே உட்கார்ந்து சாப்டுவ….. திடிர்னு கொஞ்ச நாளா தான் இப்டி நடந்துக்குற…. இங்கையே தங்குனு சொன்னா கேட்காம கேஸ்ட் ஹவுஸ் போறேனு சொல்லிட்டு போற… இங்கையே சாப்டு சொன்னா எல்லாரும் சாப்டதுக்கு அப்புறம் சாப்டுறேனு சொல்ற…. என்னப்பா என்னாச்சி.”என்றார் தாத்தா அவர் பேசுவது மட்டும் தான் விதுனிடம் இருந்தது அவர் பார்வை முழுதும் அங்கு சுற்றி உட்கார்ந்திருந்தவர்களிடம் தான் இருந்தது. அவர் பார்வையில் அனைவரும் நிமிர்ந்து பார்க்காமல் கீழே குனிந்தவாறு உட்கார்ந்திருக்க….. பெரியவர் யூகித்துவிட்டார். இது எல்லாம் தன் குடும்பத்தார்கள் வேலை என்று.அவர் முகம் கடுமையை காட்ட… பின் தன்னை சமாளித்துக்கொண்டு. “உட்காருப்பா.. இங்க யாரும் உன்ன எதும் சொல்ல முடியாது ஏனா. இவங்களே இங்க கெஸ்ட் மாறிதான் தங்கிருக்காங்க….. இவங்களா எப்போ வேணா அவங்க வீட்டுக்கு போய்டுவாங்க….”என்றார் அனைவரையும் ஒரு நக்கல் பார்வை பார்த்துவிட்டு. அதில் கடுப்பான அபூர்வா..”அப்பா இதலா சரி இல்லப்பா.. அஃப்ட்ரால் ஒரு வேலைக்காரன் அவன் முன்னாடி எங்கள இப்டி சொல்றது டூ மச்.”என்றார். அதை கேட்ட ஆஸ்வதி சடார் என்று விதுனின் முகம் காண அவன் முகம் எந்த உணர்ச்சியையும் காட்டாமல் இருந்தது அதே நேரம் அனிஷாவும் விதுனை பார்க்க.. அவன் முகத்தில் இருந்து எதையும் அவளால் கண்டுப்பிடிக்க முடியவில்லை அதே நேரம் இவ்வளவு நேரம் தாத்தா பேசியதை எல்லாம் காதில் வாங்காமல் தன்னவள் கையால் சாப்பிட்டு கொண்டு இருந்த ஆதி காதிலும் அபூர்வா சொல்வது விழ….. டேபிள் கீழ் இருந்த அவன் கை கோவத்தில் முறுக்கிக்கொண்டான்.. “அபூர்வா வார்த்தைய பார்த்து பேசு. அவன் ஒன்னும் இங்க வேலைக்காரனாவோ வேலைப்பார்க்கவோ வர்ல…. அவன் என்ன வேலையில இருக்கானு உனக்கே தெரியும் அதை எல்லாம் விட்டுட்டு அவன் இங்க வந்து உட்கார்ந்துருக்கானா அதுக்கு ஒரே காரணம் அவன் ஃப்ரண்ட் ஆதித் மட்டும் தான் இத ஆதித்க்கு நாம செஞ்சிருக்கனும். ஆனா நமக்கு தான் நம்ம அண்ண பையன்.. தம்பி பையன்லா எப்டி போனாலும் பரவா இல்லையே.. நமக்கு இந்த வீடு.. பிஸ்னஸ் தானே முக்கியம்…”என்றார் அபூர்வாவை குத்தலுடன்.. அதை கேட்டு இன்னும் கடுப்பான அபூர்வா எதோ பேச வர……”அப்பா இப்டி யாரோ தெரியாதவங்க முன்னாடி எல்லாம் எங்கள இப்டி பேசுறத நா ஏத்துக்க மாட்டேன்பா.”என்றார் பரத் அதில் ஆஸ்வதி தாத்தாவை ஒரு அடிப்பட்ட பார்வை பார்த்தாள்.. அவளுக்கு தான் தெரியுமே தன்னை தான் இவர்கள் இப்படி சொல்கிறார்கள் என்று. “யார்டா இங்க தெரியாதவங்க…. என் கண்ணுக்கு யாரும் அப்டி தெரிலையே.”என்றார் பெரியவர் “ம்ச் அப்பா இவ… இவ யாருப்பா.. இவ முன்னாடி எங்கள இப்டி பேசுறீங்க…..”என்றார் அபூர்வா “என்னமா அபூர்வா.. காலையில நா சொன்னதுலாம் மறந்திட்டியா இவ யாருனு கேட்குற….. இவ இந்த வீட்டோட மருமக…. அதுவுமா மறந்து போச்சி.. உனக்கு கூட பிறந்த உன் அண்ண பையன தான் மறந்து போய்டும்னு நினைச்சேன். இப்போ எல்லாரையும் மறக்குறீயே.”என்றார் கிண்டலாக…. அதில் அசிங்கப்பட்ட அபூர்வா…”அப்பா..”என்றார் அழுத்தமாக “என்னமா நா சொல்றது உண்மைதானே..”என்றார் அபூர்வாவை பார்த்து “அப்பா.”என்று அஜய் எதோ சொல்ல வர… “விதுன் இங்க உட்காருப்பா..”என்றார் ஆஸ்வதிக்கு பக்கத்தில் இருந்த இடத்தை காட்டி… அதை கேட்டு அனைவரும் தாத்தாவை எரிக்கும் பார்வை பார்க்க….. விதுன் தயங்கினான். “என்னப்பா உன் ஃப்ரண்டு ஆதித் சொன்னாதான் கேட்பியா.. இந்த தாத்தா சொன்னாலாம் கேட்க மாட்டியா.அப்போ உன் ஃப்ரண்டையே சொல்ல சொல்றேன். ஆதித் கண்ணா.,. உன் ப்ரண்டு சாப்டாம நிக்குறான் பாரு,. அவன உட்கார்ந்து சாப்ட சொல்லு..”என்றார் அதை கேட்டு ஆதியும்..”ம்ம். நா சொன்னா அவன் கேட்பான் நாங்கதான் இப்போ ஃப்ரண்ட் ஆகிட்டோமே.. ஃப்ரண்ட் சொன்னா எல்லாம் கேட்கனுமாம். ஏஞ்சல் சொன்னா..”என்றான் ஆஸ்வதியை பார்த்தவாறு அதில் ஆஸ்வதி புன்னகைக்க……ஆதி விதுன் புறம் திரும்பி.”ம்ம்ம். வா விது. இன்னிக்கி வினிஜா ஆன்ட்டி பூரி போற்றுக்காங்க…. நெய் போட்டு.. வா நல்லா இருக்கு சாப்டலாம்..”என்றான். ஆதி சப்புக்கொட்டி சாப்பிட்டுக்கொண்டு. அதை கேட்ட தாத்தா..”ஹாஹா.. அப்புறம் என்னடா விதுன் உன் ஃப்ரண்டே டிஸ்க்கு ரிவ்யூ சொல்லி சாப்ட சொல்லிட்டான் வா சாப்டு…”என்றார்.. அதில் ஆஸ்வதி. அனுஷா. விஷால் புன்னகைக்க….விதுனும் புன்னகையுடன் ஆஸ்வதி அருகில் உட்கார்ந்தான். அதை பார்த்த அனைவரும் கடுகடுவென முகத்தை வைத்துக்கொண்டு அங்கிருந்து எழுந்து செல்ல…. இஷானா தன் எதிரில் உட்கார்ந்திருந்த ஆஸ்வதியை முறைத்துக்கொண்டே எழ….. அவள் அருகில் உட்கார்ந்திருந்த ராம் மட்டும் தட்டில் கவனமாக பூரியை அடிக்கி சாப்பிட்டுக்கொண்டிருந்தான். அதை பார்த்து தலையில் அடித்துக்கொண்ட இஷானா. அவன் கையை பிடித்து இழுத்துக்கொண்டு போனாள். இதை பார்த்த விதுன் முகம் சுருங்க.,. அதை பார்த்த தாத்தா…”அவங்களா போதுமான அளவு சாப்டுறுபாங்க விதுன். நீ சாப்டு.”என்று சாப்பிட்டு முடித்துவிட்டு கை கழுவ எழுந்து சென்றார்.. அப்போதும் விதுன் உண்ணாமல் அப்படியே உட்கார்ந்திருக்க….”அண்ணா. கார்ல வரும் போது தாத்தா எனக்கு என்ன சொன்னாங்கனு நியாபகம் இருக்கா…”என்றாள் அவனை கூர்மையாக பார்த்தவாறே அதை கேட்ட விதுன் அவளை புரியாமல் பார்க்க……”நாம ஒதுங்கி போக ஒதுங்கி போக தான் எல்லாரும் நம்மள ஏறி மிதிப்பாங்க….. அத கேட்டு நானும் என் கணவனுக்காக என்னை மாத்திக்கிட்டேன். இப்போ நீங்க என்ன செய்றதா இருக்கீங்க……”என்றாள் ஆஸ்வதி அர்த்தமாக அவனை பார்த்தவாறே. அதை கேட்டு புன்னகைத்த விதுன் “இப்போ சாப்டலாம்னு இருக்கேன்மா..”என்றான் அதை கேட்ட ஆஸ்வதி விதுனை பார்த்து புன்னகைக்க… அவனும் அவளை பார்த்து தலை ஆட்டிவிட்டு சாப்பிட்டான்.. அவனின் ஒவ்வொரு செய்கையையும் அவனுக்கு எதிரில் உட்கார்ந்து அனு ரசித்துக்கொண்டிருந்தாள்.. இப்படியாக அந்த நாள் ஓட….. இரவும் அது போல தான் அனைவரும் ஆஸ்வதியை முறைத்துக்கொண்டே சாப்பிட்டனர் திரும்ப அவர்களால் வாய் கொடுத்து பெரியவரிடம் வாங்கிக்கட்டிக்கொள்ள விரும்பவில்லை. அவர் அவர்கள் சாப்பிட்டு தங்கள் அறைக்குள்ளே சென்றுவிட்டனர் அப்போது தான் ஆஸ்வதி ஆதியுடன் பேசிக்கொண்டே அவனுக்கு சாப்பாடு ஊட்ட அதை சாப்பிட்ட பின்பு “ஏஞ்சல் எனக்கு தூக்கம் வருது நா போய் தாத்தாட்ட படுத்துக்கவா..தாத்தா நா இல்லாமா தூங்க மாட்டாரு.”என்றான். ஆதி அவளும் சரி சொல்லி அனுப்பி வைத்தாள்.. அங்கு தாத்தா என்ன சொன்னாரோ முகத்தை தொங்கப்போட்டுக் கொண்டு வந்தான் ஆதி அதை பார்த்து”என்னங்க ஆச்சி ஆதி”என்றாள் ஆஸ்வதி “இல்ல தாத்தூ உன் ரூம்லயே படுனுசொல்லிடுச்சி அதான் நா எப்டி ஏஞ்சல் தனியா படுப்பேன்.. அந்த பப்ளு இல்ல….. அவன் என்ட சொன்னான் ஒரு நாளு இங்க அவ பேய் பாத்தானாம் அது என்ன மாறி குட்டி புள்ளைங்களலா தூக்கிட்டு போய்டும்னு”என்றான் உதட்டை பிதிக்கியவாறு. அதை கேட்டுக்கொண்டே வந்த விதுன்,,,,, “இல்ல ஆதி இங்க அது மாறிலா ஒன்னும் இல்ல நீ பயப்படாத…. இனி உங்கூட உன் ஏஞ்சல் இருப்பாங்க அவங்க உன்ன விட்டு எப்போதும் பிரியமாட்டாங்க….அவங்களும் உன் ரூம் தானே சோ பயப்படகூடாது.”என்றான் விதுன். அவன் பேசியதிலே இனி உன்னவிட்டு பிரியமாட்டாள் என்பதை மட்டும் ஆதி பிடித்துக்கொண்டு..ஆஸ்வதியை ஒரு மாதிரி பார்த்துக்கொண்டே “ஏஞ்சல் உண்மையாவா..” என்றான் ஆச்சரியமாக….. ஆஸ்வதி அவன் எதை உண்மை என்று கேட்கிறான் என்பதை புரிந்தும் அவன் வாயில் இருந்து வர வைக்க “எது ஆதி உண்மை…”என்றாள் அவனை ஏக்கமாக பார்த்துக்கொண்டு.. அதில் தன்னவளின் ஏக்கத்தை புரிந்துக்கொண்ட ஆதி முகம் இறுகிப்போனது. பின் முகத்தை திருப்பிக்கொண்டே… தன் ஏஞ்சலிடம் திரும்பி “விது உண்மையா சொல்றானா.இனி நீ எங்கூடதானே இருப்ப…..”என்றான் “ஆமா ஆதித் அண்ணா அண்ணி இனி உன் கூடதான் எப்போதும் இருப்பாங்க…. உன்னவிட்டு இனி ஆஸ்வதி அண்ணி எங்கையும் போகமாட்டாங்க அண்ணா”என்றாள் அனி.. “லூசு விது என் ஏஞ்சல தான சொல்றான் நீ யார சொல்ற”என்றான் ஆதி…அழகாக உதட்டை பிதுக்கிக்கொண்டு எதுவும் தெரியாதது போல….. அதை கேட்டு சிரித்த அனைவரும்.. ஆஸ்வதி அவனை பார்த்து பக்கத்தில் உட்கார வைத்து “ஆதி உங்களுக்கு ஆதினு ஒரு பேரு இருக்குல… அது மாறி எனக்கும் ஒரு பேரு இருக்குமே..”என்றாள் யோசித்துக்கொண்டு “ஆமால உன் பேரு என்ன ஏஞ்சல்.”என்றான் ஆர்வமாக… “ஆஸ்வதி”என்றாள் அழகாக சிரித்தவாறு அதில் ஆதி முகம் அவளை அப்பட்டமாக ரசித்தது.. இதை இரு கண்கள் மனதில் குறித்துக்கொண்டது.. “அய் உன் பேரு என் பேரு மாறி அழகா இருக்கு”என்றான்.. அவளை ஒரு மாதிரி பார்த்துக்கொண்டு.. ஆஸ்வதி அவனின் இந்த விழி வீச்சில் அதிர்ந்து பின் அவனை கூர்மையாக பார்க்க….. அதற்குள் ஆதி முகத்தை திருப்பிக்கொண்டான். பின் அனைவரும் சாப்பிட்டு விட்டு அவர் அவர் அறைக்கு சென்றுவிட்டனர்… ஆஸ்வதியும் ஆதியை அழைத்துக்கொண்டு தன் அறைக்கு அழைத்து சென்றாள். அங்கு சென்றதும்,.. அவனை ஒரு நிமிடம் பார்த்துவிட்டு பின் எங்கே படுப்பது என்று பார்க்க…. ஆதி அவளை தான் ஆழமாக பார்த்துக்கொண்டிருந்தான்.. ஒரு பக்கம் அவளது முகத்தை ரசித்தாலும் இன்னோரு பக்கம் அவளது நிலை உணர்ந்து வருந்தினான் எப்படி இருக்க வேண்டியவள் தன்னவள்.. இந்த வீட்டில் உரிமையாக நடமாட வேண்டியவள் ஆனால் தன்னால் தான் அவள் இப்போது அனைத்து பேச்சியும் வாங்க வேண்டியது உள்ளது ஆனால் அவனாலும் முழுதும் இதில் இருந்து வர முடியவில்லை.. அவன் இழப்புக்கு அவர்கள் பதில் சொல்லியே ஆக வேண்டுமே, பரவாயில்லை.. சிறிது நாட்கள் தன்னவள் தனக்காக கொஞ்சம் தாங்கித்தான் ஆக வேண்டும். அதன் பின் தன்னவளை பூ போல தாங்க வேண்டும் என்று நினைத்தான் ஆதி ஆஸ்வதியை பார்க்க… அவள் அவன் அருகில் வந்து கைப்பிடித்து அழைத்து சென்று மேலே படுக்க சொல்லிவிட்டு அவள் கீழே ஒரு சிறு பேட்டை போட்டு படுக்க ஆயுதமானாள். ஆதி கட்டிலில் படுத்துக்கொண்டே ஆஸ்வதியின் செயல்களை காண .. ஆஸ்வதி கொஞ்சம் தன்னை சமாளித்து உறங்க முற்பட….. அவளுக்கு இன்று நடந்தது அனைத்தும் மனதில் ஓடிக்கொண்டு இருந்தது தன் சித்தி ஏன் தன் தங்கை போல இல்லை தன் தாத்தாவாது ஆதிதான் மாப்பிள்ளை என்று சொல்லிருக்கலாம் அதனால் தானே இன்று ஆதியுடனான தன் திருமணத்தை தன்னால் ரசிக்க முடியவில்லை.. தன் தங்கை விஷாலி தன்னை அன்னை போல அல்லவா பார்த்துக்கொண்டாள்.. அவளிடம் கடைசியாக கூட ஒரு வார்த்தை சொல்ல முடியவில்லையே.. அதும் இந்த சித்தியால் தானே.. விஷாலியிடம் அவள் சித்தி தான் சொல்லவிடாமல் செய்தார் என்பதும் ஒரு காரணம் என்றால்.. விஷாலி தன்னை இந்த திருமணம் செய்ய சம்மதித்திருக்கமாட்டாள் என்பது வேறு ஒன்று. அவள் மட்டும் இந்த திருமணத்தை நடக்கவிடாமல் செய்திருந்தால் அவளது கனவு படிப்பு அவளுக்கு கிடைத்திருக்காது.. இன்னொன்று தன் ஆதியுடன் இப்படிபட்ட முடிச்சி விழாமலே போய் இருக்கும் அல்லவா.இது அனைத்தும் ஆஸ்வதியின் சித்தியால் தான்.அதும் அவள் சித்தி. ஆதியை பற்றி சொன்னாள் தான். அதனுடன் சேர்த்து தான் இந்த திருமணத்தை மறுக்காத அளவிற்கு விஷாலியின் படிப்பையும் சேர்த்து அல்லவா க்கு வைத்து முடித்தார் அதுவும் நல்லதற்கு தான் இல்லை என்றால் தன்னுடைய ஆதியுடன் கனவில் மட்டுமே வாழ்ந்துருப்பாள்..ஆஸ்வதி இதை எல்லாம் நினைத்துக்கொண்டே படுத்திருக்க… ஆதி கொஞ்ச நேரம் அவள் படுத்திருப்பதையே கூர்மையாக பார்த்துக்கொண்டே இருந்தான்.. ஆஸ்வதியின் முகம் யோசனையில் சுருங்குவதை பார்த்துக்கொண்டே இருந்தான் பின் ஆதி இறங்கி வந்து அவளிடம் படுத்துக்கொண்டான் தன் அருகில் எதோ அரவம் தெரியவும் அதுவரை யோசனையில் இருந்தவள் அதிர்ந்து திரும்பி பார்த்தாள் அங்கு ஆதி இவளது புடவையின் நுனியை கைகளில் பிடித்துக்கொண்டு படுத்திருந்தான். அவன் படுத்திருக்கும் நிலையை கண்ட ஆஸ்வதி மனம் நெருடியது.. ஏனென்றால் ஆதரவற்ற குழந்தை படுத்திருப்பது போல காலை சுருட்டிக்கொண்டு ஒரு கையை தன் தலையின் கீழே வைத்துக்கொண்டு ஒரு கையில் அவள் புடவையை இறுக்கிக்கொண்டு படுத்திருந்தான். அவன் உடல் ஆஸ்வதியின் உடல் இன்னும் ஒரு இன்ச் நகர்ந்தால் உரசுவது போல தான் படுத்திருந்தான். அதில் ஆஸ்வதியின் உடல் சிலிர்த்து படபடத்தது…அவன் மூச்சிக்காற்று வேறு அவளது பின் கழுத்தில் உரசிக்கொண்டு அவளது உடலை சுட்டது. இருந்தும் அவன் படுத்திருந்த கோலம் அவள் மனதை நெருட….. அவன் பக்கம் முழுதாக திரும்பி. “என்னாச்சி.. ஆதி இங்க ஏன் படுக்கிறீங்க”என்றாள். அவனது கேசத்தை கையால் அளந்துக்கொண்டு அதில் ஆதியின் உடல் நெகிழ்ந்து போனது தன்னவளின் அருகாமை அவனையும் பித்தம் கொள்ள செய்தது தான். ஆனாலும் தன்னை கட்டுப்படுத்திக்கொண்டான்.. அவளின் முகத்தை பார்க்க முகம் சிவந்து போய் இருந்தது அவன் அருகாமையில். ஆதி அவளின் முகமாற்றத்தை ரசித்தவாறே…“ஏஞ்சல் நா மட்டும் தனியா படுத்ததில்லை தாத்தூ தான் நா தூங்குற வர பக்கத்துல படுத்துருப்பாங்க……எனக்கு இருட்டுனா பயம் தாத்தூ இன்னிக்கி என்னை இங்க தூங்க சொல்லிட்டாங்க…. ஆனா நீ என்னை தனியா விட்டுட்டு இங்க படுத்துட்ட……”என்றான் அவள் புடவை நுனியை கையில் சுருக்கிக்கொண்டு… “ஓஓ….சாரி ஆதி.. எனக்கு தெரியாதுல.. நா நெனைச்சேன் ஆதி ரொம்ப தைரியமானவருனு.. அதா நா இங்க படுத்தேன்….சரி அப்போ வாங்க மேல நா நீங்க தூங்குற வர உங்க பக்கத்துலயே இருக்கேன்”என்று ஆஸ்வதி எழ… “நா தைரியமானவன் தான் ஏஞ்சல்.. ஆனா எனக்கு இருட்டு, டாக், அப்புறம் பேய்னா தான் பயம்.”என்றான் உதட்டை சுருக்கியவாறு அதில் ஆஸ்வதி இவ்வளவு நேரம் இருந்த யோசனையை கைவிட்டு அவனை பார்த்து காதலாக சிரித்தாள்.. அதில் ஆதியின் முகம் சற்று இறுகி பின் இளகியது.பின் அவன் உட்கார்ந்தவாறே அவளை தூக்கி விடுமாறு கை நீட்ட…..அவளும் புன்னகையுடன் அவன் கையை பிடித்து தூக்கிவிட்டாள். அவனும் சிறுபிள்ளை போல கோணலாக ஒரு சிரிப்பை சிந்திவிட்டு எழுந்தான்… பின் அவனை மேலே படுக்க வைத்து அவன் அருகில் உட்கார்ந்து தட்டிக்கொடுத்தாள். அவன் வெகுநேரம் அவளையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக்கொண்டு இருந்தான். இதில் என்னவென்றால் இருவரின் கைகளும் இன்னும் இணைந்து தான் இருந்தது.. ஆனால் அதனை இருவரும் உணர வில்லை.. பின் சிறிது நேரத்தில் ஆதி கண்கள் தானாக சொக்கியது அவளின் அருகாமை அது அவனுக்கு நிம்மதியாக இருந்ததோ என்னமோ நல்ல ஆழ்ந்த உறக்கத்திற்கு சென்றுவிட்டான் ஆஸ்வதி உட்கார்ந்து அவன் முகத்தையே பார்த்துக்கொண்டு இருந்தாள்.. ஒரே நாளில் தனது வாழ்க்கை இப்படி ஆகிவிட்டதை நினைத்து ஆஸ்வதி ஒரு பெருமூச்சை மட்டுமே விட முடிந்தது…அதும் ஆதியை நினைத்து.. அவன் ஏன் இப்படி உள்ளான் எதனால் இப்படி இருக்கிறான். . இந்த வீட்டுல அவனை ஏன் எல்லாரும் ஒரு மாறியே நடத்துறாங்க…. இங்க என்னமோ ஒன்னு சரி இல்ல…. என்ன ஆனாலும் சரி நா உங்களுக்கு எதும் ஆக விடமாட்டேன். என்று ஆதியை பார்த்தவாறே சொல்ல…..பின் யோசனையாக அவளுக்கு இங்கு எதோ சரியில்லாததை போல் தான் தோன்றியது அதும் கீழே சாப்பிடும் போதும் அவளை அனைவரும் பார்த்த பார்வையில் எதோ ஒன்று என்ன அது.. அதும் தன் கணவனை அவர்கள் பார்க்கும் பார்வையில் துளியும் அன்பு, பாசம், எதுமே இல்லயே…“என்று அவளிடமே மானசிகமாக பேசிக்கொண்டு இருந்தாள்.. சிறிது நேரத்தில் அவளும் அவன் மீதே சாய்ந்து உறங்கிவிட்டாள் நடுனிசி 2 மணி இருக்கும். நன்றாக உறங்கிக்கொண்டு இருந்த ஆஸ்வதிக்கு தண்ணீர் தாகத்தால் விழிப்பு வர எழுந்து அமர்ந்தாள்.. அப்போது தான் தான் ஆதி பேட்டுலயே படுத்துவிட்டதை நினைத்து தலையில் அடித்துக்கொண்டு. ஆதியை திரும்பி பார்த்தாள்.. ஆனால் அவன் அங்கு இல்லை. “எங்க போனாங்க இந்த நேரத்துல”என்று யோசித்தவாறு பாத்ரூம் அறையில் இருப்பாறோ என்று தள்ளிப்பார்க்க அதும் உடனே திறந்துக்கொண்டது…அங்கு அவன் இல்லை.”இங்கையும் இல்லையே எங்க போய் இருப்பாரு”என்று யோசித்தவாறு அறையை விட்டு வெளியில் வந்தாள்.. அப்போது ஆஸ்வதி இருட்டில் யாரோ ஒரு முரட்டு உருவத்தின் பிடியில் வலுவாக சிக்கிக்கொண்டு இருந்தாள்..