Love and Romantic

அத்தியாயம் 8

விழிகளில் நீருடன் நின்றவரை தோள் பிடித்து தன் புறம் திருப்பினான், இன்னுழவன். “என்ன மா…?” அவன் அவர் விழி நீர் துடைக்க “என் தம்பிக்கும் எப்படியும் உங்கள மாதிரி வயசுல பிள்ளைங்க இருக்கும் இல்லடா இன்னுழவா…” இன்னுழவன் ஆமோதிப்பாய் தலையசைக்க… “எங்க இருக்கானோ? எப்படி இருக்கானோ? நான் சாகறதுக்குள்ள அவன பாக்கவே முடியாதாடா?” என அவன் தோள் சாய்ந்து குலுங்கி அழுத்தார் கோதாவரி. இன்னுழவனோ அவரை நிமிர்த்தி தன் விழி பார்க்க வைத்தவன், “உன் தம்பி நல்லா […]

அத்தியாயம் 8 Read More »

அத்தியாயம் 7

நிவர்த்தனன் பேசியதை கேட்ட இயலாமையில் விரக்தியாய் பெருமூச்சு விட்ட சோமசுந்தரமோ, அப்பொழுதே கவனித்தார் தன் கையில் இருந்த அலைபேசியில் இன்னும் இணைப்பில் இன்னுழவன் இருக்கின்றான் என்பதையே…! பேசிய அனைத்தையும் அறிந்து கொண்டான் என அவர் அறிந்தபோதும் அதை வெளிக்காட்டி கொள்ளாதவராய், “ஹலோ இன்னுழவன்ங்களா என் பொண்ணு கல்யாண விஷயமா பேசணும்.” என்றார் அவரின் இன்னு என்ற ஒருமை அழைப்பை மாற்றி. இன்னுழவனோ அதையும் அவதானித்தவன் “ம்ம்… சொல்லுங்க, உங்க பொண்ணுக்கு எப்ப கல்யாணம். எந்த தேதியில கல்யாணம்

அத்தியாயம் 7 Read More »

அத்தியாயம் 4

மேக விருஷ்டியோ நிவர்த்தனன் கேள்வியில் சற்று அதிர்ந்தவள் அதை வெளி காட்டிக் கொள்ளாது, “டேய் எருமை என்னடா சொல்லிக்கிட்டு இருக்க காதல் காலர் அப்டின்னு லூசுத்தனமா உலறிக்கிட்டு இருக்க. நான் உன்கிட்ட கேள்வி கேட்டா, அதுக்கு பதில் சொல்லாம  நீ என்கிட்ட இப்படி கேட்டு வைக்கிற” என்றவள் சீற… “ரிலாக்ஸ் ரிலாக்ஸ் சிசி எதுக்கு இவ்ளோ டென்ஷன் ஆக்குற” நிவர்த்தனன் வினவ… அவளோ தனலாய் முறைத்தவள், “அவரு என்னோட ஷோ காலர். ஜஸ்ட் காலர் மட்டும் தான்.

அத்தியாயம் 4 Read More »

அத்தியாயம் 3

மாலைப் பொழுதானது நெருங்க கண்ணாடி அறையில் தீவிரமாக கணிணியின் முன்  இருந்து வேலை செய்து கொண்டிருந்தான், இன்னுழவன். “டேய் முடிஞ்சுதா… மணி 5:30” என கதவைத் திறந்து கொண்டு உள்ளே நுழைந்திருந்தான் அகரன். “இதோ முடிஞ்சுது”  என  நிமிராது பதில் அளித்து ஒரு மின்னஞ்சலை அனுப்பியவன் எழும்ப, அவர்களின் முன் வந்து நின்றார் மேனேஜர். “சொல்லுங்க பிரசாந்த் சார்” இன்னுழவன் கேட்க, “சார் ஜெர்மன் பைனல் பெமெட் கோட்டேஷன் பைல், நீங்க இதுல சைன் பண்ணனும். அகரனை

அத்தியாயம் 3 Read More »

அத்தியாயம் 2

இனிதுழனியிடம் கூறியது போல் அடுத்த பத்து நிமிடத்தில் வெள்ளை வேஷ்டி வெள்ளை சட்டை சகிதம் நெற்றியில் சந்தனக்கீற்றுடன் முழங்கை சட்டையை மடக்கி கையில் இருக்கும் காப்பினை மேல் நோக்கி ஏற்றிவிட்ட வண்ணம் மிடுக்கான தோரணையில் கீழ் இறங்கி வந்தான் இன்னுழவன். இறங்கி வருபவனுக்காக காத்துக் கொண்டிருந்தனர் வீட்டின் முன் கூடத்தில் ஊர் பெரியவர்கள். முன் கூடம், நடு கூடம், சுற்றிலும் வாழை, தென்னை, தோட்டம், கீழே பூஜை அறை மற்றும் சமையலை  அறையுடன் கூடிய மூன்று அறைகள்,

அத்தியாயம் 2 Read More »

அத்தியாயம் 1

சூரியனின் செம்மை நிறக் கதிர்கள் பரவிக் கொண்டிருந்த அந்த அழகான இளம் காலை வேளையில் தன்னில்… சிலு சிலுவென்று எதிர்வரும் இயற்கை தென்றல் காற்று தன் மேனியில் தழுவி செல்ல, நெற்றியிலோ முத்து முத்தாய் பூத்திருந்த வியர்வைத் துளிகள் அக்காலை நேர ஒளியில் பிரகாசிக்க… பூமியின் இதமான ஈர்ப்புத் தன்மையை பாத சுவட்டின் வழியே யாக்கை தன்னில் உள்வாங்கு விதமாக வெறும் காலில் தனது காலை நேர ஓட்ட பயிற்சியில் எதிரில் வருபவர்களுக்கு இன்முகத்துடன் சிறு கீற்று

அத்தியாயம் 1 Read More »

error: Content is protected !!