அத்தியாயம் 4
மேக விருஷ்டியோ நிவர்த்தனன் கேள்வியில் சற்று அதிர்ந்தவள் அதை வெளி காட்டிக் கொள்ளாது, “டேய் எருமை என்னடா சொல்லிக்கிட்டு இருக்க காதல் காலர் அப்டின்னு லூசுத்தனமா உலறிக்கிட்டு இருக்க. நான் உன்கிட்ட கேள்வி கேட்டா, அதுக்கு பதில் சொல்லாம நீ என்கிட்ட இப்படி கேட்டு வைக்கிற” என்றவள் சீற… “ரிலாக்ஸ் ரிலாக்ஸ் சிசி எதுக்கு இவ்ளோ டென்ஷன் ஆக்குற” நிவர்த்தனன் வினவ… அவளோ தனலாய் முறைத்தவள், “அவரு என்னோட ஷோ காலர். ஜஸ்ட் காலர் மட்டும் தான். […]