யட்சனின் போக யட்சினி
—தன்வி ராஜ்—
போகம்-1
“ஹவ் டேர் யூ டு டிஸ்டர்ப் மீ…?!”,கோபத்தில் சிவந்த முகத்துடன் தன் காரியதரசியான மோனலிசாவை கன்னத்தில் அறைந்திருந்தாள்.
அவள் நம் பூங்காரிகை…
இல்லை இல்லை பூவும் புயலும் கலந்த பூவியல் காரிகை…!
“ஸா…ரீஈஈஈ ஸாரீஈஈ ஃபார் த இன்டரப்ஷன் மேம்…
ஆனால் இது ரொம்ப முக்கியமான விஷயம். உங்ககிட்ட நிச்சயம் இதை சொல்லனும் சொல்லியே ஆகனும் மேம். அப்படி இல்லாட்டி அதுவே நமக்கு பெரிய இஷ்ஷு ஆகலாம்…ஒன்லி யூ கேன் டீல் இட் மேம்…
இட்ஸ் வெரி வெரி அர்ஜண்ட் …”,என தன் எஜமானி மீது அக்கறை கொண்டு அவள் கூற…
“எப்படி இருந்தாலும் இப்படி டிஸைனிங் செய்யும் போது என்னை தொந்தரவு செய்யக்கூடாதுஉஉ சொல்லி இருக்கேன்ல…”, என்று சீறிவிட்டு…
“ஓகே…
சில்…
கூல்…
உஃப்…
ஃபைன் நௌ… ” என்று தனக்குதானே சொல்லிக் கொண்டு தன்னை சாந்தம் செய்யவென மூச்சை இழுத்துவிட்டு கொண்டாள்…
(ஆஹான்…)
“கமான்…இப்போ சொல்லு மோனா. என்ன விஷயம்…?!வை திஸ் அர்ஜண்ஸி???”, என மிகவும் தெளிவாக கூர்மையான பார்வையுடன் தன் கையை கட்டி கொண்டு ராணி தோரணையில் கேட்டாள்…
அவள்…
உலகின் பிற வளர்ந்துவிட்ட நாடுகளான அமெரிக்கா,ரஷ்யா மற்றும் அனைத்து நாடுகளிலும் உள்ள மாபெரும் நிபுணர்கள் பார்த்து ஆச்சர்யம் கொள்ளும் கொற்றவை…
உலகின் மிக பெரிய பத்திரிக்கையான “தி டவர்ப்ளஸ்” பத்திரிகையில் வோர்ல்ட்ஸ் தி மோஸ்ட் டிமாண்டிங் ஃபேமஸ் பெர்ஸன்ஸ் எனக் கூறப்படும் உலகின் மிகவும் அதி முக்கியமான உலகிற்கு தேவையான புகழ்பெற்ற மனிதர்களின் பட்டியலில் கடந்த ஆண்டுகளில் இரண்டாம் இடத்தில் இப்பொழுது இந்த வருடம் அந்த முதல் இடமும் யாருக்கும் தரமாட்டேன் என அவ்வித்தை பிடித்திருக்கும் பெருமைச்செல்வி…
உலக அழகி… பிரபஞ்ச அழகி… போன்ற பல பட்டங்களின் சொந்தகாரியான இருப்பதைந்து வயது சிற்பம்…
மாபெரும் ஆடை அமைப்பாளர் மற்றும் மாடலிங் துறையிலும் ராணியான “தி கிரேட் மாடல்”…
தனக்கென தனி அடையாளம் கொண்டு பல மங்கைகளுக்கு வழிகாட்டியாக இருந்து தன்னைப் போல பலப் பெண்களை உருவாக்கவே தனக்கென தனி நிறுவனம் கொண்டு வெற்றி நடை போடும் சிங்கபெண்…
நம் பாரத தேச இந்தியமே பெருமைப்பட்டு கொள்ளும் மல்டி ஆர்டிஸ்ட் உதயரகசியா…
அவள் அப்படிக்கேட்கவும்…
“மேம் அது வந்துஉஉஉ…”, பயத்திலும் பதட்டத்திலும் மோனாவிற்கு உடலெல்லாம் நடுங்க…
நெற்றியில் வியர்வை பூக்களுடன் கூற முயன்று கொண்டிருக்க…
நேரம் ஒதுக்க மாணிக்கத்தை கேட்பவளோ…
பொருமையற்று போய்
“ஹோஓஓ காட்… கமாண் மோனா குவிக்… எனக்கு டைம் இல்ல…
இந்த டிஸைனிங் பேட்டர்ன் முடிச்சிட்டுஉஉ நமக்கு ஒரு முக்கியமான மீட்டிங் இருக்குனு நீனுதான மார்னிங் சொன்ன…
ம்ம் சீக்கிரம் சொல்லுஉஉ…”, தன் மேஜையின் நுனியில் ஒயில் ஓவியமாக சாய்ந்து நம் நாயகி கேட்க…
“மே…ம் மீட்டிஇஇஇ..ங் கேன்சல் செய்துட்டா…ங்கஅஅஅ…” , என தன் ஐபேடை தன் நெஞ்சோடு அணைத்துக் கொண்டு ஒருவாரு மென்று முழுங்க…
கேட்டுக் கொண்டிருந்த ரகசியாவோ ஒரு நொடி அதிர்ச்சி அடைந்தாள் ஒரேஒரு நொடி பிம்பமே அஃது…
பின் சற்றும் தளராமல் மிடுக்குடன், “கம் அகெய்ன்…
ஒளராத… கொஞ்சம் தண்ணிய குடி அப்பறம் பேசு…
ரிலாக்ஸ்ஸ்ஸ்…”, என மோனாவிடம் கூற…
மோனாவோ டேபிளின் மேல் உள்ள தண்ணீர் பாட்டிலை திறந்து மடமடவென குடித்து முடித்தவள்…
ரகசியாவிடம், “மேம் ஐ ஆம் ஸாரிஇஇ… நிஜமாதான் சொல்றேன்…
அந்த பெரிய ஹாலிவுட் படத்தோட ப்ராஜக்ட் மீட்டிங் கேன்சல் பண்ணிட்டாங்க…”, என கடகடவென எப்படியோ கூறி முடித்தே விட்டாள்.
ஆனாலும் படபடப்பு குறைந்த பாடில்லை மோனாவிற்கு…
“வாட் தி ஹெல். ப்ளடி ____ ____
எப்படி இப்படி செய்யலாம் தட் இடியட்ஸ்…?!
ஷிட்… எப்படிஇஇஇ இது நடக்கும்…?!!!
வாய்ப்பேயில்லைஐஐஐ…
என்னாச்சு எக்ஸ்ப்ளைன் மீ கமான்?”, கிழிகிழியென என ஆங்கிலத்தில் அவர்களை கிழித்தவளும் கோபத்தின் எல்லையை தாண்டியே இருந்தாள் கூடவே ஏதோ தவிப்பும்…
ஏனெனில் இது அவள் இலக்குப் பட்டியலின் ஒன்றான மிகப் பெரிய ஹாலிவுட் பிக்சர்ஸின் ப்ராஜெக்ட். தன் இலட்ச்சியத்தின் நெடுந்தூரப் பயணத்தில் காத்திருந்து கிடைத்த ஒன்று.
இந்த திடீர் ஏமாற்றுத் திருப்பத்தை ஏற்றுக் கொள்ள முடியவில்லை ரகசியாவால்.இது சாத்தியமில்லை… அவர்களாக தேடி வந்து ஒப்பந்தம் போடப்பட பேசி இருந்த நிலையில் எப்படி சாத்தியம் ஆகக் கூடும்…என்னதான் ஆயிற்று இடையில்…?!! பல சிந்தனைகள் மூளை நரம்புகளுள்….
“அது மேம்… அதுஉஉஉ …
அவங்க நம்மோட டை அப் செய்தாக்கா அவங்க ரெபுடேஷன்(நற்பெயர்) ஸ்பாய்ல் ஆகிடுமாம் மேம்…”, என்று கூறி முடிக்க…
உதயரகசியாவின் விழி வீச்சு தாங்காமல் மோனா ஐபேடை அவள் கண்கள் நோக்கி நீட்டியவள், “மே…ம் இதை பாருங்க…” , என நடுக்கத்துடன் நீட்ட…
வெடுக்கென அதை பிடுங்கினாளே இந்த பிரபஞ்ச பேரழகி…
திரையை காணக் காண பவளக் கண்கள் ஜுவாலையாக மாற ,
“வாட் தி ஃ___ ,” என சீறிக் கொண்டு ஐபேடை தூக்கி போட்டாள்…
நல்லவேளையாக அது ஸோஃபாவில் ஸேஃபாக பதுங்கிவிட்டது இல்லையேல் வீசிய வீச்சுக்கு சல்லி சல்லியாக நொறுங்கியிருக்கும்.
“என்னதிது…. என்ன நடக்குது…?!
வாட் த ஷிட் இஸ் ஹாப்பனிங்…??
ஆஹ்ன்…
மோனா கமான் சீக்கிரம் சொல்லு” என உலுக்கியெடுத்தாள் மோனாவை…
“மேம்… நம்ம கேர்ள்ஸ தப்ப்…பாஆஆஆ யூஸ் செய்றது போல ஒரு நியூஸ் சேனலுக்கு இன்ஃபோ குடுத்திருக்காங்க மேம்…
அவங்களும் டிஆர்பிக்காக அதை விசாரிக்காம அப்படியே டெலிகாஸ்ட் செய்துட்டாங்க …
மேகஸின்ஸ்லையும் போட்டுட்டாங்க மேம்…
நம்ம லீகல் டீம் கிட்ட சொல்லியாச்சு…
அவங்க இதோ இப்போ நமக்கு அப்டேட் பண்ணிடுவாங்க…”, என்று மோனா வேகவேகமாக கூறி முடிக்க…
ஆடாம் பாமாய் வெடிக்கவா எனும் நிலையில் உதயரகசியா…
(இது கலவர பூமி பேபிஸ்… ஹெஹேய்…)
அதற்குள் ரகசியாவிற்கு அழைப்புகள் வந்துவிட்டது. அவளின் லீகல் வக்கீல் லைனில், “மேம்…நம்ம கேஸ் கொடுப்பதுக்கும் முன்னாடியே அவங்க கேஸ் போட்டு வச்சிருக்காங்க… போலிஸ் நம்ம கம்பெனிய ஆய்வு செய்ய வரற்தா சொல்றாங்க…
நான் அதுக்கு மட்டும் பெயில் வாங்கிட்டேன்…
இது நம்ம கைய தாண்டிருச்சி… கேஸ் குடுத்தவங்க யாரோ அவங்களா வாபஸ் செய்தாகனும்…
நமக்கு அது ஒரே வழிதான் இப்போ கரெக்டா இருக்கும்…
ஐ ஆம் சாரி ஃபார் திஸ் அன்ஃபேவரபில் சிட்டுவேஷன் மேம்”, என்றவுடன் ஃபோனை வீசியதில் சுவற்றில் பட்டுத் தெறித்துபாவம் சொர்கலோகம் சென்றிருந்தது அது…!
(அட ஒரு ஐஃபோன் போச்சே… ஹோ நோ…)
“ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ…..” என தன் தலையை பற்றிக்கொண்டு இந்த இடிமின்னல் கொடி கத்த…
என்ன நடக்க போகுதோ என ரொம்பவே பயந்துதான் போனாள் மோனாவும் …!
“யாருஉஉஉஉ… யாருஉஉ…
இதை செய்தது… கமான் டெல் மீஇஇஇஇ… நௌவ்…” , என தன் முன்னிருந்த மேசையை தட்டியதில் அதன் அதிர்வின் சத்தம் அறையெங்கும் சுவற்றில் பட்டு பேரொலியை எழுப்ப…
“வே… ருத்ர… மிஸ்டர்.ருத்ரவேலன்… ஃப்ரம் சிம்மநல்லூர்…”, என்றவளுக்கும்தான் உள்ளுக்குள்ளாக பதற்றியது உண்மை…!
“வாஆஆஆ….ட்….?!?!?!?!
சிம்மநல்லூராஆஆ…?! காட்…
ஆஃப்ட்ரால் ஒரு கிராமத்து ஆளா…?!”,என கூறி முடிக்கவும் அடுத்த நிமிடம் மோனாவின் பேண்ட் பேக்கெட்டில் இருந்த மொபைல் அலறவும் சரியாய் இருந்தது…
எடுத்தவள் காதில் வைக்க…
உதறலுடன் அடுத்த நொடியே நீட்டியிருந்தாள் அதனை தற்போது எஜமானியாக இருக்கும் தன் தோழியிடம்…
மோனாவின் விழிகள் எதையோ கூறவும் மொபைலை வாங்கி தன் காதில் வைத்த ரகசியாவோ, “ஹலோ… உதயரகசியா ஹியர்… எஸ்…”, என மனம் சற்றும் தளராமல் குரலில் தன்னம்பிக்கையுடன் மிடுக்கு குறையாமல் பேச…
இப்பெண் மானின் தேன் குரல் கேட்டதும்…
எதிரில் இருந்த இந்த உலகில் எப்பேர்ப்பட்டவர்களுடைய ஆளுகைக்கும் அடங்காத அரசனும்…
யாரும் ஆள முடியாத அப்பெரும் வனத்தையே தன் ஆளுகையில் வைத்துள்ள அரிமாவாவிற்கு இணையான இல்லை இவன் அரிமாவேதான்…
முடிசூடா இளங்கோவான அவனுக்கும்மே சற்று ஆச்சர்யம்தான்…
தான் சீண்டும் புள்ளிமான் மட்டும் பல நேரங்களில் நெஞ்சை நிமிர்த்தும் பெண் அரிமாதான் என்ற வியப்பே அது…! அப்படியானால் அவளை இரசித்தானோ…?! நிச்சயம் இல்லை என்பான்…
பெண்களின் தைரியம் தன்னம்பிக்கை மிக முக்கியம்.அதை இவளிடம் கற்றுக் கொள்ளனும் பிறரும். அவ்வளவே… என்பதே அவன் கூற்று…!
(அடிப்பொழி சாரே…)
இருந்தும் அதை துளியும் நல்வழியாக வெளிப்படுத்தாமல் அவளை வார்த்தையால் ஊசி கொண்டு தைக்க எண்ணினான் போலும் இந்த வேட்டையாடும் இளவரசன்…
“வார்ரேஏஏ… சபாஷ்டிஇஇ…
என் மைசூர் தக்காளிஇஇஇ…
என் மேனா மினுக்கிஇஇஇ…
இன்னும் தளராம இருக்கியேஏஏஏ…
இந்த அடியேனின் பாராட்டுக்கள் உனக்கு…
காசா பணமா…வச்சிக்க வச்சிக்க…
அது சரி இந்த மாமன நினைச்ச போல…ஹான்… “,எனத் தன் மறுப்பக்க காதை குடைந்து கொண்டு கம்பீரக்குரலில் இளக்காரம் என்பது சிறிதும் குறைவின்றி ரகசியாவிடம் பேசினான்.
இந்த பக்கம் இவளுக்கு உடலெல்லாம் கொதியாய் கொதிக்க தொடங்க,
“ஹவ் டேர் யூ ப்ளடி ராஸ்கல்…
ஹீ த ஹெல் ஆர் யூ இடியட் பா______ ?”, என தஸ்புஸ்ஸென ஆங்கிலத்தில் அவனை புஸுபுஸுக்க….
“ஹே… ஹே… ஓரம்கட்டு ஓரம்கட்டு…
இந்தாருடி… இந்த தாம்தூம் தஸ் புஸ்ஸூனு என்கிட்ட எல்லாம் இனிமே இப்படி கத்தக்கூடாது…
கத்துன கொண்டைய ஆஞ்சிபுடுவன் ஆஞ்சி….
அழகா நம்ம செம்மொழியான செந்தமிழ்ல கொஞ்சம் கூவுறியா… கூவோனும்ம்ம்…
விளங்குதா கண்ணு…”,என்று அவன் கூறிய தினுசில் தானாகவே தன்னை மீறி தனக்கு தமிழ் இப்போது கொட்டும் என அவள் கனவா கண்டாள்…
“டேய்… யாருடா நீ பொறுக்கி… இப்போவே உன்ன ட்ராக் செய்து பிடிக்கிறேன் இரு… போலிஸ்ட களி தின்னு நல்லா…” , என கோபத்தில் முக்கு நுனி சிவக்க உதயரகசியா கத்த…
“ஹா..ஹா..ஹா… போலிஸாஆஆ? மொதல்ல உன்னை காப்பாத்துடி என்ற மேனா மினுக்கி…!!! சிரிப்பு காமிச்சுகிட்டு ஹாஹாஹாஆஆ…
அப்றம் என்ன கேட்ட நான் யாராஆஆஆ? சரி சொல்றேன்…
நல்லா கேட்டுக்க…
இப்போ கிராமத்தானானு கேட்டு அந்த கத்து கத்துனியே அந்த சொல்லுக்கு சொந்தக்காரன்…
இப்படி செஞ்சது யாரு யாருன்னு கேட்டு கத்திட்டிருக்கியே அந்த வேலைக்கு செயல்காரன் வேலன்…
ருத்ரவேலன்…
உன் திமிர அடியோடு பிடிங்கி எறிய வந்த உன்னோட வருங்கால இல்லை இல்லை இன்னும் அரை நாள்ல இருந்து புருஷனாக போறவன்…
ஏன் இப்போவே புருஷன்னே வச்சிக்கோடிஇஇஇ…
என் ஆசை ரத்தினமேஏஏஏ…
உம்மாஆஆஆஆ…
அத்தான் அணைக்கவாஆஆ…ஆஹ்ன்????
ஃபோனை சொன்னேன்ன்ன்….”, என்றவன் தன் மீசையை இடக்கடையில் ஆட்காட்டி விரலால் மேல் நோக்கி நீவிவிட்டபடி…
பெண்களிடம் அத்துமீறல் துணிந்ததால் தன் காலடியில் கிடந்த மங்கூஸ் மண்டையனின் கையை உடைக்க எலும்பு நொறுங்கிய சத்தத்துடன்,
‘ஆஆஆஆஆஆ..’, என்ற ஒருவனின் அலறல் சத்தத்துடன் ,”பீங் பீங் பீங்” லைனும் கட்டாகியிருக்க…
சிலையாகி போயிருந்தாள் த்ரிலோக சுந்தரியான உதயரகசியா…
(அரே அவளை அணைச்சிக்கறேன்னு சொல்லுய்யா…
சின்னபுள்ளையாவே இருக்கியே ராசா…கிகிகி)
“நீயா இங்க இப்போ வருவடி…அதுக்குதான இந்த ருத்ரன் காத்திருக்கேன்… வா வா… இன்னும் நிறைய இருக்குஉஉஉ…”, என்று தன் மொபைல் திரையில் அவள் புன்னகை முகத்தை கண்டு கர்ஜித்துக் கொண்டான்.
அதனை தூக்கி பின்னால் தன் நேசனான விஜயனிடம் போட்டுவிட்டு முறுக்கிய தங்கக்காப்பை தன் நரம்போடும் கைகளில் மேலேற்றி வேட்டியை தூக்கிக் கட்டினான்…
கார்கால வர்ண பகவானின் நிறத்தில்,
உயரத்தில் இவனுக்கு நிகர் அந்த கரிகால சோழன்தான் எனும் வகையில் இருக்க…
அவனின் சிகையும் அவன் நடையில் அதிரும்…
சிம்மராஜ நடை என்றால் இதுதானோ என எண்ணிக் கொள்ளலாம் நாம்…
இவன் உடற்கட்டை கொண்டுதான் ஆண் உடலின் அமைப்பை இதுதான் வடித்தார் போல பிரம்மன்தேவனும்…
ஆஹா…அவன் சிரித்தால் பொன்விளையும் பூமியும் கூட வைரத்தை ஈட்டுமே… ஆனால் இவன் புன்னகை குறிஞ்சிப்பூ என அதன் தடயம் காட்டமாட்டானே எளிதாக…!
பெண் மனம் கொள்ளை கொள்வதில் மன்மதனும், அடிதடியில் அர்ஜூனபிமனும்(மிக்ஸிங்) ஆன ருத்ரவேலனோ தன் பென்ஸ் ஜி க்ளாஸ் கருவண்ண ஜீப்பை நோக்கி சென்றான் கூர் விழிகளில் அக்னியுடன் …
என்று
எப்போது!?
மோதல்
காதலாக?!
கோபம்
போகமாக?!
ஊடல்
கூடலாக?!
என்று எப்போது
மாறுவது என
நீ அறிவாயோ
என் யட்சினியே?!!!
(அடடடடா இப்படி அடிச்சிக்கிட்டா எப்படியா சென்ஸார் காட்சி குடுக்க…
ஷப்பாஆஆ… ஆரம்பமே ரோம்கு சதி செய்ய பார்க்குஹளே…
என்னா பேபிஸ் ஸேம் பீலிங்கா…. ஹைஃபையூஊஊ ஹிஹிஹி?!)
Good
அன்புகள் நன்றிகள் பல தோழரே💗