போகம் – 4
வானில் ஊர்வலம் செல்ல துவங்கியிருந்த வெண்மதியோ ‘இந்த அரண்மையில் அப்படி என்ன விஷேசம்’ என்று யோசித்த வேளையில்…
அங்கே கூடியிருந்த மாந்தர்கள் பேசிக் கொண்டிருந்ததை கேட்டதும்,
‘அப்படி ஒரு அழகிய ஜோடிகளா…??!!
என் பகலோனை விட கம்பீரமானவனா இவர்கள் கூறும் தலைவன்?!
என்னவிட வெண்பஞ்சு அழகியா அந்த தலைவியானவள்?!
பார்த்து விட்டுத்தான் செல்வோமே அவர்களை?!’
என்று மதியவள் அம்மாளிகை மேல் வானில் நின்று கொண்டு ருத்ரன் ரகசியாவிற்காக காத்திருந்த முன்னிரவு தொடங்கிய அழகான தருணம்தான் அது!!!
உதயரகசியா வாசற்படி தாண்டி பல முற்றம் கடந்து ஹாலிற்கு செல்வதற்குள் அவள் விழியில் விஜயன் பட…
ருத்ரன் அவனல்ல என்பதை எப்படி உணர்ந்தாள் இப்பெண்ணவள்…?!
விடை அவளறியாள்…!!!
பின்னே வந்த மோனாவை அழைத்தவள் விஜயனிடம் ருத்ரன் எங்கே என கேட்க சொல்லிவிட்டு சுற்றும் முற்றும் வீட்டின் உள்ளமைப்பை பார்த்துக் கொண்டே சற்று முன்னோக்கி நடந்து செல்லலானாள்.
மோனாவோ இவ்விரவு வேலை வீட்டிற்குள் வித்தியாசமான கூலர்ஸ் போட்டுக்கொண்டு சுவற்றில் கை வைத்து நின்று கொண்டிருந்த விஜயனை பார்த்ததும்,
“இவன் என்ன லூசா , ஹோ காட்?!” , என்று முணுமுணுத்துக் கொண்டவள், வேறுவழியின்றி அவனை நோக்கி சென்றாள்.
(அட திருவிழா கண்ணாடிங்க ஹிஹிஹி)
“க்கும் க்கும் எக்ஸ்கியூஸ்மி சா….ஆஆஆர்…”, தொண்டையை சரிசெய்து கொண்டு கேட்க…
“ஹோஓஓ எஸ்ஸ்ஸ்ஸ்… யாரும்மாஆஆ அது.…??” , என்று ஸ்லோ மோஷனில் திரும்பியவன் ,
” யூ…. மீ… ஐ…. சார் …. கால்… எஸ்ஸாஆஆ…”, பாவம் அவளுக்கு தான் படித்த இங்கிலிஷ் பிஹெச்டி இன்னும் கொஞ்சம் நேரம் இதை கேட்டால் காற்றோடு பறந்துவிடும் போல இருந்தது.
‘ஹோ கடவுளே… இதென்ன சோதனை…காப்பாத்துப்பா…’ என வேண்டிக் கொண்டு,
“எஸ்ஸ்ஸ் சா….ர் உங்களைதான் கூப்பிட்டேன்…”, என்றாள் முயன்று மனதின் கலவரத்தை மறைத்து.
“ஹான்… தேன்குஉஉஉ தேன்கு… இட்ஷ் மீஈஈஈ…
சொல்லுங்க சொல்லுங்க சொல்லுங்க… !
என்ன விஷயமாஆஆ வந்திருக்கீங்க…?! “, என்றவன் கூலர்ஸ் வழியாக நன்றாக மோனாவை சைட் அடிக்க…
பாவம் அறியாப்பிள்ளை அவளால் அதை கண்டுபிடிக்க முடியவில்லை.
“மிஸ்டர்.ருத்ரன் சார்ரை எங்க மேடம் மீட் செய்யனும் சார்…
அவர் எங்க இருக்காருனு சொன்னீங்கனா ரொம்ப உதவியாஆஆ இருக்கு…ம்”, என்றுவிட்டு அவன் பதிலுக்கு அட்டேன்ஷனில் காத்திருக்க…
“ருத்ரன் உள்ளாறதான் இருக்காப்ல…
உங்க மேடம் உள்ள போயி ரொம்ப நேரம் ஆயிருச்சே…
ஆமாவானு ஒருக்கா செக் பண்ணிக்கோமா பொண்ணுஉஉ…”, தெளிவாக கண்ணாடியை கழட்டாமல் அவளிடம் பேசிக் கொண்டிருந்தான் விஜயன்.
“எஸ் சார்… ஆமா போல… தேங்க்யூ ஸோ மச்…
நான் உள்ளே போறேன்…!”, என்றவள் அவனை தாண்டி நடக்கப்போக…
அவளை விஜயன் கையை மறைத்து தடுத்து நிறுத்தியவன்
“அட ஸ்வீட்டுஉஉஉ இரம்மா…
இங்க வாம்மா இங்க வா…
ருத்ரன் சாரும் உங்க மேடமும் பேசட்டும் …
எனக்கு சில டீடெய்ல்ஸ் தேவைப்படுது கொஞ்சம் சொல்றியாம்மா…”, என்றவாறு வெளியே தோட்டம் நோக்கி நடந்தான்.
“சா…ர் அதென்ன ஸ்வீட்டுஉஉ… என் பெயரு மோனாலிசா.” என்றாள் சட்டென காரம் லைட் காராசேவாய்.
‘உள்ளிருப்பவர்கள் இருவருக்கும் இது அலுவலக மீட்டிங். அதனால் ரகசியாவே அழைப்பாள் பேச வேண்டியதை பேசி முடித்தப்பின்’ என்று எண்ணியவள் தன்னிச்சையாக அவனை பின் தொடர்ந்தாள்.
அவன் எங்கே அவள் பெயரையும் அதில் காரத்தையும் இருந்த காரத்தையும் காதில் வாங்கினான்,’இவளை ஸைட் அடித்தது போதும். ருத்ரன் கண்ணில் அது பட்டால் செத்தான் இந்த சின்னகண்ணு…’என்று ருத்ரனை சரியாக உணர்ந்து, வெளியே தோட்டத்தின் கூட்டத்தினுள் கலர் கலராக கன்னிப் பெண்கள் தாவணியில் வலம் வரவும் அங்கே சென்று மறைந்துவிட்டான் .
மோனாவோ ‘உள்ளே செல்வதா…??!! வெளியே நிற்பதா..?!!’ என்று யோசனையில் இருக்க….
பொடிக்குட்டிகள் வந்து ‘அக்காஆஆ… யக்காஆஆஆ… யக்கோவ்வ்வ்…’, என்று சூழ்ந்து கொள்ள…
‘மழலைகளை நேசித்தாள் தானே அவள் பெண்….!’
அதன் வழிதான் மோனாவும்,மழலையாகவே மாறியே அவர்களுடன் லயித்துவிட்டாள்.
***************
பளபள பளிங்கு தரையில் ‘டொக் டொக்’ என்ற ரகசியா நடந்து வருவது உள்ளே இருந்த ருத்ரனுக்கு தெளிவாக கேட்டது.
‘எவ்ளோ கொழுப்பு இந்த தக்காளிஇஇக்கு…
செருப்போட உள்ளே வராளா…???
வாடிஇஇ என்ற கோட்டிச் சிறுக்கி…
உன்ற மாமன் உன்ன நல்லா சிறப்பாஆஆ வரவேற்கிறேன்…’ என்று நினைத்துக் கொண்டே சுற்றும் முற்றும் பார்த்தான்.
பார்த்தவன் கண்களுக்கு பக்கத்தில் ஒரு மேசையில் விளக்கேற்றும் நெய் மற்றும் நல்லெண்ணெய்யும் தெரிய…
“இவளுக்கு எண்ணெயே போதும்டா ருத்ராஆஆ…
நெய்ய வேஸ்ட் ஆக்க வேண்டாம்…”, என விரைந்து எடுத்தவன்…
ஒரு இடம் எனில் தப்பிக்க வாய்ப்பிருக்கும் என்று நினைத்து மூன்று வெவ்வேறு இடத்தில் அந்த இத்தாலி பளிங்கில் ஊற்றிவிட்டு,
‘அருமைடா ருத்ரா…
மினுக்கி தரைல மல்லாக்க விழுந்து நல்லா எண்ணெய்ல இன்னும் நல்லா மின்னட்டும்…’ என்றெண்ணியவன் கமுக்கமாக சென்று இருக்கையில் அதேபோல் அமர்ந்துவிட்டான்.
உள்ளே சென்றவளின் விழிகளுக்கோ ஹாலில் ஸோஃபாவில் உயரமான நெடிய உருவம் ஒருபக்கமாக பட…
ருத்ரனின் புகைப்படத்தை மோனா காண்பித்திருந்தாலும் எங்கே இவள் அதனைப் பார்த்தாள்.
.
அதனால் யாரென்று பார்க்க எண்ணி முன்னே சற்று கழுத்தை எட்டிப் பார்த்தவள் நினைத்தது ‘இவன் ருத்ரனாகத்தான் இருக்கக்கூடும்!’.
டீபாயின் மீது காலை போட்டு திமிரும் தோரனையுமாக யார் இப்படி அமர்ந்திருக்ககூடும் என யூகித்துக் கொண்டாளோ அல்லது வேறென்னவோ…?!
‘இந்த நாட்டான்தான் இவ்ளோ வேலைய செஞ்சதா…?!
இடியட் இவன்டலாம் வந்து டீல் பேசனும்…
ஹோ காட் இட்ஸ் ஆல் மை ஃபேட்….’ , என நினைத்தவளுக்கு அஷ்ட கோணலாகியது முகமும் மனமும்…
தலைவதியை நாராசமாக கிழித்து தொங்கவிட்டவள் அவளின் இடபக்கம் அவனிருக்க,அவ்விடம் நோக்கி சென்ற வண்ணம் பொறுமையின்றி பக்கம் செல்லும் முன்னமே ருத்ரனை அழைக்க தொடங்கியபடி மிக சரியாக எண்ணெய் இருந்த மூன்றிலும் மாறிமாறி மிகசரியாய் காலை வைத்துவிட்டாள்…!
(எல்லாம் அவள் நேரம்… மீ நாட் ரீசன்…)
தகிடுதத்தோம் போட்டு பரதம் ஆடிக் கொண்டே , “ஹலோ ஓஓஓஓ மிஸ்டர்ர்ர்ர். ருத் ஆஆஆ…….” , என்று நேராக அவன் மடியிலேயே சென்று விழ…
சரியாக ருத்ரவேலனும் சத்தம் வந்த திசை நோக்கி நிமிர்ந்து பார்க்க…
பரதம் ஆடியதில் அவள் கழுத்து திரும்ப…
ரகசியாவின் இதழும் ருத்ரனின் இதழும் ‘பச்சக்’ ‘ம்ம்’ என இச்சூஸ் பச்சூஸாக ஒட்டிக் கொள்ள…
அவன் பெயரின் பிற எழுத்துக்கள் யாவும் இப்போது அவன் இதழ்களில்…!
மங்கையின் கண்மணி நயனங்களோ இங்குமங்கும் நாட்டியமாட, அவனின் பட்டை இதழில் மேலேயே பட்டும் தொட்டும் இவளின் தேனிழிதழ் ஊறிக்கொண்டிருக்க…
தானாக ருத்ரனினின் விழிகள் மூடிக்கொண்டது…!
அவனையும் மீறி ஏதோ ஒரு மாயை கட்டிப் போட்டிருந்தது.
மௌன நொடிகளே கடந்திருக்க…
ரகசியாதான் முதலில் நடப்புக்கு வந்தாள்.அவள்தான் மாயவுலகமோ இந்திரலோகமோ என எங்கும் செல்லவே இல்லையே…!!!
தன் இதழை எடுத்தவளின் முகத்தில் கோபம் தாறுமாறாக குடிக் கொண்டு ரோஸ் நிறத்தில் மாறியிருக்க,
” யூ….. யூ… யூ….. ப்ளடிஇஇஇ ரோஃக்…” , என அவனை அடிக்க போனவளின் கை அந்தரத்தில் நின்றிருந்தது ருத்ரனால்.
“வார்ரே…. என் ஜித்து ஜில்லாடிஇஇ… அடிக்க வாரிஹளோ…?!
வாய்ப்பில்லம்மா வாய்ப்பே இல்ல…!
கையை இப்படியெலலாம் நீட்டகூடாது பார்த்துக்க…!
மீறிஇஇ வந்துச்சு…
இந்த ருத்ரனுக்கு எதையுமே கூடுதலாக் குடுத்துதான் பழக்கம், ரெண்டு கன்னமும் மாதுளம் பழமா மாறிடும்….
கல்யாண ஃபோட்டோலவும் கேவலமா இருக்கும்…
பிறகு உன் விருப்பம்டிஇஇ மினுக்கிஇ…
நல்லா யோஸிசிக்க…!”, என்று அழுத்தத்துடன் காரிகையின் கூர்விழி நோக்கி காரமாக தொடங்கி ஃபிள்டர் காஃப்பியாக முடித்திருந்தான்.
“யூ… யூஊஊஊ…
கையை விடுடாஆஆஆ …
ஹவ் டே…ர் யூ டு கிஸ் மீ இடியட்…??!!!
எவ்வளவு தைரியமா எனக்குஉஉ கிஸ் குடுப்ப…. “, என்றவள் தன் கையை அவனின் கைகளில் இருந்து பிரிக்க போராட…
“அடிங்… எதுஉஉஉ… நான் குடுத்தனாஆஆ…?!!
நீதான் நல்லா கரகாட்டகாரியா ஆட்டம் ஆடிட்டே வந்து இப்படி என் உதடு மேல உராசிகிட்டு இருந்த…
இப்போ கூட பாரு… நல்லா புஸுபுஸு ஸொகுசு பூனையா என் மடிமேல ஜம்முனு உலாவிக்கிட்டிருக்கிறது நீதான்டிஇஇ மினுக்கிஇ…!!!
நியாயப்படி நான்தான் உன்னைய அறையனும்…
ஒழுங்கா எந்திரிடிஇஇஇ… என் கற்பு கெட்டு போகும் போல…!”, நக்கலாக உதட்டில் மறைந்த கோணல் சிறிப்புடன் அவன் கூறி வைக்க.
அப்பொழுதுதான் அவன் மடியில் இருப்பதையே உணர்ந்தாளோ மங்கையவளும், ” ஹா..ன்… அதுஉஉஉ அதுஉஉஉ….
தரைஐஐஐ… தரைஐஐஐ…
ஸ்லிப்பாயிஇஇ…”, என்று திக்கிதிணறி துள்ளி குதித்து எழுந்திருந்தாள் அவனிடமிருந்து ரகசியா.
“ம்ம் ஸ்லிப்பாகும்டிஇஇஇ ஸ்லிப்பாகும்.இப்படி டொக் டொக்குனு செருப்போட உள்ள வந்தின்னா அப்படிதான் ஆகும்…”, என்று அவன் கூறியதன் பின்புதான் உணர்ந்தாள் சில்லென்ற உணர்வை தன் மென்பாதங்களில்.
ஆம்… அந்த ஹீல்ஸ்கள் அவனின் மடியில் விழும்பொழுதே அவளை விட்டு தனியே தன்னந்தனியே என பாட்டுப் பாடு பறந்திருந்தது …!
கோபத்தில் கொதித்தவளோ,உட்கார்ந்திருந்த ருத்ரனைப் பார்த்து,”ஒகே… ஃபைன்…
யூ ஷட் அப்… நம்ம விஷயத்துக்கு வருவோம்… உன்கிட்ட தனியா பேசணும்… “, என்றாள் மிடுக்காக.
“இப்போ இங்க யாரும் வரமாட்டாங்க மினுக்கி… நீ கரகாட்டம் ஆடாம டக்குனு கூவு…
தமிழ்ல கூவு மொதல்ல…
ஆஸ் பூஸ்னு காத்துல கத்துன ஜுஸ்தான் சொல்லிபுட்டேன்…”,என்றவாறு புருவம் உயர்த்தி ருத்ரன்.
“சரி… ஐ வில் ட்ரைஐஐஐ… கமிங் டு த பாயிண்ட்…
போன போகட்டும்…
நடந்ததுக்கு அபாலஜைஸ் செஞ்சிட்டு…
ஒழுங்கா கேஸ் வாபஸ் வாங்கிட்டு…
அந்த சேனல்ல இது பொய்யான இன்பர்மேஷன்னு சொல்லிடுஉஉஉ… தட்ஸ் ஆல்…”, என்று ரகசியாவும் தோரணையாக கையை கட்டிக்கொண்டு கூறிவிட்டு ஓயிலாக வளைந்து அவனை பார்த்தாள்.
“த்தோடாஆ….வந்துட்டான்ங்க மேடம் மிரட்டுறதுக்கு…
அப்ஜைஸ்லாம் வேணாம் பஜ்ஜீஸ் ஓகேஏஏஏ…
சும்மாலாம் செய்ய முடியாது டீலிங் டீலிங் பேசுஉஉ…
அப்றம் வேணா யோசிக்கலாம்…”, என்ற எழுந்தவன் கையை உயர்த்தி இடுப்பை இப்படி அப்படி ஆட்டி சோமபல் எடுக்க.
நக்கலாக நகைத்துக் கொண்டே, ” ஹும்… பணத்துக்குதான இவ்ளோவும் செய்ற… எவ்ளோ வேணும் சொல்லு சீக்கிரம்… பிஃபிட்டி சி ஆர் ஹன்ட்ரெட் சி எவ்வளவு கோடி… ?!
இல்லாட்டி ப்ளான்க் செக் தரேன் எடுத்துக்கோ…”,விழிகளில் எள்ளலுடன் கூறினாள்.
“ஹாஹாஹா… ஹாஹாஹா…
உன் பெயர் புகழ்கு நூறு கோடி போதுமாஆ…
ஹாஹாஹா… ஹய்யோ ஹய்யோஓஓஓ….
இந்தா பாப்பாஆஆ நம்ம டீலிங்கே வேற கண்ணுஉஉ…. “, என்று அவளை பார்த்தவன் தன் மீசையை இடக்கைவிரலால் நீவிக்கொண்டே உதட்டை ஒரு பக்கமாக நகைத்த வணணம் அவளின் பவள விழிகளுடன் போரிட….
சற்று திணறித்தான் போனாள் நங்கையவள் அவனது பார்வையில்.
உடனே தெளிந்தவள் எரிச்சலாக,
“ஹோ காட் கமான் மேன்… என்ன வேணும்…!?
என்ன டீலிங்..?!
சொல்லித்தொலை… ஃபர்ஸ்ட் எதுக்காக இப்படி செய்தனும் சொல்லு ஐ வான்ட் த ரீஸன் பிஹைன்ட் இட்.”, என்றவள் அவனை விழியை நோக்கி பதிலுக்காக காத்திருக்க…
“ஹோஓஓ ஹோஓ… காரணம்தானே சொல்லிட்டா போச்சு… அதாவதுஉஉ…
இந்த பருத்தி இல்லை பருத்திஇஇ…
அதை நிலத்துல விதைச்சு…
எங்க பஞ்சு மில்லுலையே பஞ்சாக்கி…
நூலா திறிச்சு… நெய்யப்பட்ட துணிங்களை உன் கம்பெனிகூட கலந்து மார்க்கெட்ல உடையா விக்க வேண்டி டீல் பேசலாம்னு வந்தாஆஆ…
நீ என்ன பண்ண….????
உன்ற ஆளுகள வச்சி… எங்கள உள்ள விட்டு பேசக்கூட விடாம… மீட்டிங் போடாமா…
வில்லேஜ் அதாவது கிராமத்தாளுங்கனு சொல்லி சந்திக்கவே முடியாதுனிட்ட…
எனக்கு என்னையும் என்னை சேர்ந்தவர்களையும் சீண்டிட்டா கோபம் வந்துடும் பார்த்துக்க தக்காளி…!
அதனால நான் என்ன பண்ணேன் இந்த டிவில போலிஸ்ல இப்படி கம்ப்லெய்ன்ட் குடுத்துட்டேன்ல சிறப்பாக…
அதனால நீ என்ன பண்ண…?!
தானா என் ஊரைத்தேடி அதாவது இந்த கிராமத்துக்கும்
கிராமத்தானான என்னையும் தேடி வந்துட்ட பார்த்தியாஆஆ இறங்கிஇஇ டீலிங் பேச…”, என்று ருத்ரன் அதி அழுத்தத்துடன் அதே சமயம் கூலாக கூறி கொண்டிருக்க…
‘போயும் போயும் இதற்காகவா இப்படி..’ என கோபத்தில் கொந்தளித்த ரகசியாவோ இடையிலேயே ,”ஷிட்…
ஸோ இப்போ என்ன டீலிங்…!
கம்பணிக் கூட டையப் செய்யனும் அதுதான….??!!!!”, என்று கேட்டவளைப் போலியாய் பாவமாய் பார்த்தான்.
பின் சில நொடிகள் சென்றதும் எள்ளி நகையாடி தன் உதட்டை பிதுக்கியவனோ,
“ப்ச் அது மட்டுமில்லை டீலிங் இப்போ… !
என்ன செய்றதுஉஉஉ ஜில்லாடி… டைம் கொஞ்சம் தப்பா மேட்ச் ஆகிட்டுச்சு பார்த்துக்க…!
நீனு லேட்டா வந்துட்ட மினுக்கிஇ ரொம்ப சரியான தப்பான டைம்ல…!
எல்லாம் விதி சரி விடுஉஉஉஉ என்னத்த சொல்ல…!
அதாகபட்டது என்னனா,
எனக்கு நாளைக்கு கல்யாணம் முடிவு செஞ்சிருக்காங்களா…
பார்த்துவச்ச அந்த பொண்ணு இருக்கு பாரு…
அவ தாய்மாமன்காரன் அந்த பொண்ணு எனக்குதான்னு சொல்லிபுட்டு நேத்திக்கு நைட்டு தூக்கிட்டு போயிட்டான் பார்த்துக்க…!
என் தாத்தா வேற ஹார்ட் பேஷன்ட் பாட்டி வேற வயிறு பேஷன்டா…
அவங்களால என்ற கல்யாணம் நின்னுச்சுனா தாங்க முடியாது பார்த்துக்க…!
அதனால முடிவு என்ன அப்படினாக்க வேற பொண்ணு ரெடிமேட் நூடுல்ஸ் வேணும்ல…!
அந்த பொண்ணா மாறி நீனுதான் மினுக்கிஇஇஇ என்னைய கட்டிக்க போற… கட்டிக்கன்னா… சும்மா இருக்கி அணைச்சு உம்மா தருமோட மட்டுமல்ல மைசூர் பாகு…
கல்யாணம் கட்டிக்க சொன்னேன்.
என்ன விளங்கியிருக்கும்ல…?!!
விளங்கும்….!!!”, என்று நய்யாண்டியுடன் ஆரம்பித்து நிச்சய மந்திரமாக கூறி முடித்திருந்தான் ருத்ரன்.
“வா……ஆஆஆஆஆஆஆஆட்ட்ட்ட்ட்ட்ட் டு யூ மீன்…??????
ஹோ காட்!!!!!
வாஆஆஆஆட்…????!!!!!!” ,என்று அதிர்ச்சியில் சிலையாகி ஹாலே அதிர கத்திவிட்டாள் ரகசியா.
(எதேஏஏஏ கண்ணாலமா…!!!! இது பெரிய கன்னிவெடியால்ல இருக்கு இது…?!! ஹிஹிஹி)
பக்கம்
வந்தவுடன்,
வெட்கம்
துறக்காமல்
அள்ளி
பூசிக்கொள்கிறாயே
செம்மை நிறத்தை…!!!
அது கோபத்திலா
வெட்கத்திலா
அல்லது
மோகத்திலா…?!
பெண்ணே நீ
அல்லிராணியா…?!
அல்லது என்
கனவுக்கன்னியா…?!
கூறடி என் யட்சினியே….!!!
(ஹரே பேபிஸ் சண்டகோழிஸ்கு கல்யாணம்ல, கல்யாணம்னா டூ டேஸ் முதல்ல பெண்ணழைப்பு அப்றம் கல்யாணம்ல,
இதோ பெண்ணை அழைச்சுட்டார்ல நம்ம ராசாஆஆ…
புது டைப் பெண்ணழைப்பு கிகிகி…)