அதிரும் ஆழி 🔥 எரியும் தேவி

5
(4)

 

அத்தியாயம் 01 

 

 

 

 

 

 

 

 

 

 

“காதல்” இந்த உலகத்தில் பல உயிர்களை உயிர்ப்போடு வாழ வைப்பதில் முதல் இடம் இதற்குத்தான் ஆனால் அதுவே பல பேரின் இதயத்தை அணு அணுவாக வதைக்கிறது என்றால் அந்த நிலை வார்த்தையால் கூட விவரிக்க முடியாத துயரத்தின் ஆழ் கடலில் மூழ்கி முத்தெடுப்பதற்கு சமம். கடல் நீரில் மூழ்கினாலே மூச்சு முட்டி  இறக்கும் நபர் மத்தியில் பெண் கண்ணீர் என்னும் துயர் கடலில் மூழ்கி காதல் என்னும் முத்தெடுத்து அவளோடு‌ இணைவது என்பது அத்தனை சுலபமான விஷயமா என்ன? அதில் எத்தனை தடைகள் இருக்கும், கடலை நெருங்க விடாத கரங்கள், தடுப்பாக அமைந்த கரையோர கற்கள், உறவு என்னும் ஆக்ரோஷ அலைகள்,  மூச்சை நிறுத்தக் கூடிய உணர்ச்சி குமிழிகள், கையில் சிக்காத நீரும், என் கரத்தில் சேராத அவளும் கடைசி வரை ஆழ்கடலில் புதைந்து இருக்கும் முத்து போல் பாதுகாப்பாகவே இருக்கின்றன. அவள் என்னும் ஆழ்கடலில் மூழ்கி இதயம் என்னும் சிப்பிக்குள் அடங்கி இருக்கும் காதல் என்னும் முத்தை எடுத்தால் தான் அவனுடைய காதல் முழுமை பெறும். இத்தனையும் செய்ய அவள் உறைபனியான  இதயத்தில் முதலில் உதயத்தை ஏற்படுத்த வேண்டும். சிலருக்கு காதல் கை நீட்டும் தூரத்தில் இருக்கும் இன்னும் சிலருக்கு ஐன்ஸ்டின்க்கு எப்படி ஆப்பிள் தானாக கீழே வந்து விழுந்ததோ அப்படி விழும் ஆனால் நம் நாயகனுக்கு உறைந்த பனிகடலான அவள் இதயத்தில் தன் விழியால் சூர்ய உதயத்தை கொடுத்து அதை உருகவிட்டு பின் காதல் என்னும் முத்தை எடுக்க வேண்டும். இத்தனையும் செய்ய அவள் என்ன பேரழகியா என்றால்? ஆம்! அவள் அழகி தான் ஆழியன் கண்ணிற்கு அவள் பேரழகி. இதுவரை கண்டிறாத பெண்ணும் அவள் தான். பார்த்த முதல் நாளே காதல் என்று சொல்லலாம் ஆனால் அவள் இதயத்தில் யாரை பார்த்தாலும் அதே ஒதுக்கும் தோரணை இருந்ததால் அவளை இன்னும் ஆழமாக காதலிக்கிறான். ஆழியன் நம் கதையின் நாயகன் ஒரு தனியார் மருத்துவமனையில் ஹார்ட் ஸ்பெஷலிஸ்டாக வேலை செய்கிறான். வயது முப்பது ஆன பிறகும் திருமணம் வேண்டாம் என்று அடம்பிடிக்கும் ஆணழகன். அவனுக்கு இந்த மருத்துவமனையும் , அவனை தேடி வரும் நோயாளிகளும் தான் உலகம் அந்த உலகத்தில் சிறு புள்ளி தான் அவனுடைய தாய், தந்தை இருவரும். தந்தை சிவன் அரசு வேலையில் இருந்தவர் இப்பொழுது வேலை ஓய்வு பெற்று வீட்டில் இருக்கிறார். தாய் பவாணி கணவருக்கு சேவை செய்தபடி வீட்டில் இருக்கிறார். இருவரையும் தன் சம்பளத்தில் நன்றாக தான் பார்த்துக்கொள்கிறான் ஆனால் அவர்களுடைய பெரிய குறை மகன் திருமணம் செய்ய மாட்டேன் என்கிறானே என்பது தான். அது ஒன்றை மட்டும் ஆழியன் மாற்றிக்கொண்டாள் இந்த உலகத்தில் இப்படி ஒரு நல்ல பிள்ளையா என்று அவர்கள் பெறுமை பட்டுக்கொள்வார்கள் ஆனால் அவன் சந்நியாசி ஆக நினைப்பவன் போல் அந்த வெண்மை நிற உடையிலே உலா வருகிறான். இன்றும் அதே உடையை அணிந்துக்கொண்டு மருத்துவமனைக்கு வந்துவிட்டான். தன் வண்டியை பார்க்கிங்கில் நிறுத்திவிட்டு உள்ளே வந்தவன் கண்ணில் பட்ட முதல் விஷயமே பேஷன்ட் செய்யும் தகராறு தான். என்ன நடக்கிறது? என்று புரியாமல் ஓரமாக நின்றிருந்த நர்ஸ்யை அழைத்தான்.

 

“இங்கே என்ன நடக்குது? ஏன் பேஷன்ட் சண்டை போடுறாங்க”

 

“டாக்டர்! எப்பவும் போல தான் நம்ம கௌதம் டாக்டர் இன்னும் வரலை அதான் சண்டை போடுறார்”

 

“மணி பன்னிரண்டு ஆகுது இன்னுமா அந்த பைத்தியக்காரன் வரலை”

 

“இன்னும் வரலை டாக்டர்”

 

“சரி! நீங்க போங்க” அவளை அங்கிருந்து போக சொன்னவன் ஆழ்ந்த பெருமூச்சு ஒன்றை இழுத்துவிட்ட படி சண்டை போட்டுக்கொண்டிருந்த பேஷன்ட் அருகே வந்தான்.

 

“சார்” அவர் மேல் கை வைக்க

 

“நீ யார்?”

 

“சார்! நான் டாக்டர். ஆழியன் நீங்க கொஞ்சம் ப்ரச்சனை பண்ணாமல் வாங்க”

 

“நீ தான் அவனா?”

 

“இல்லை சார்! கொஞ்சம் ப்ரச்சனை பண்ணாமல் என் கூட வாங்க. நீங்க இப்படி கத்தி சண்டை போட்டால் இங்கே இருக்க பேஷன்ட் எல்லாருக்கும் தொந்தரவா இருக்கும்”

 

“நாங்க எவ்வளவு நேரம் உட்கார்ந்து இருக்க முடியும். அவன் வர வரைக்கும் நான் இங்கே இருந்து நகரப்போவதில்லை”

 

“சார்! ப்ளிஸ் கொஞ்சம் என் கூட வாங்க” தன் பலம் கொண்டு ஆழியன் அவனை இழுத்து சென்றான். இதுவரை அவனிடம் மாட்டி விழி பிதுங்கிக்கொண்டு நின்ற ரிசப்ஷனிஸ்ட் இப்பொழுது தான் மூச்சையே விட்டாள்.

 

‘தெய்வம் மாதிரி வந்தாரு டாக்டர் இல்லைன்னா இன்னைக்கு என் நிலமை அதோ கதியாகி இருக்கும்’ தன் மனதிற்குள்ளே அவனுக்கு கும்பிடு போட்டவள் உடனே கௌதம்க்கு அழைப்பு விடுத்தாள்.

 

“டாக்டர். கௌதம்”

 

“டாக்டர் எப்போ வருவீங்க? உங்களால் இங்கே ப்ரச்சனையே ஆகிடுச்சு சீக்கிரம் வாங்க”

 

“வந்துட்டேன் ரேக்கா! ஏன் கத்தற?”

 

“உங்களை கேட்டு கத்தியவரை ஆழியன் டாக்டர் கூட்டிட்டு போய் இருக்காரு. நீங்க சீக்கிரம் வரலை இந்த முறை ஹாஸ்பிடலை விட்டு வெளியே போறது கன்பார்ம்”

 

“யேய்! நீ என்ன பயமுடுத்தற?”

 

“உண்மையை தான் சொல்றேன் லூசு டாக்டரே! ஒழுங்கு மரியாதையா சீக்கிரம் வந்து சேரு வேலை மட்டும் இல்லை லவ் கூட போய்டும்” அவனுடைய பதிலுக்கு காத்திருக்காமல் அழைப்பை துண்டித்திருந்தாள்.

 

“யேய்! லூசு” கௌதம் பேச முயல அது அப்பவே உயிர்ப்பற்று போனதை பார்த்தவன் ‘ச்ச! எப்பவும் என்னை அனுப்பறது லேட் இதில் ஏன் சீக்கிரம் வரலைன்னு கேள்வி வேற?’ தன் காரை அவசரமாக ஓட்டினான் கௌதம்.

இதுவரை ப்ரச்சனை செய்து கொண்டிருந்த நபர் ஆழியன் பேச்சில் அமைதியாகி காத்திருப்பு இருக்கையில் வந்தமர்ந்தார்.

 

“மே ஐ கம் இன் டாக்டர்” அவனுடைய அனுமதிக்காக ரேக்கா தலையை மட்டும் எட்டிப்பார்த்து கேட்க

 

“உள்ளே வாங்க”

 

“டாக்டர்! இந்த பையில் ஷேர்மன் சார் உங்ககிட்ட தர சொன்னார்”

 

“ம்ம்! கௌதம் வந்துட்டானா”

 

“வந்துட்டே இருக்கார் டாக்டர்”

 

“நேத்து எப்போ வீட்டுக்கு போனான்?”

 

“நைட்டு பத்து மணிக்கு”

 

“ஏன்?”

 

“டாக்டர்! நேத்து ஒரு கேன்சர் பேஷன்ட் இறந்துட்டாங்க அவங்களோட ரிப்போர்ட் ரெடி பண்ண லேட் ஆகிடுச்சு அதனால் ஜென்ரல் ஷிப்ட்ல அவரே இருந்து பார்த்தார் அதான் லேட் ஆகிடுச்சு”

 

“நான் தான் அவனை போன் பண்ண சொன்னேனே ஏன் பண்ணலை?”

 

“அது தெரியலை டாக்டர்”

 

“சரி! அவன் வந்து பேஷன்ட் பார்த்த பிறகு நான் வர சொன்னதா சொல்லுங்க”

 

“ஓகே டாக்டர்”

 

“நீங்க போகும் போது பேஷன்ட்யை உள்ளே வர சொல்லிட்டு போங்க”

 

“ஓகே டாக்டர்” அவனிடம் விடைபெற்றவள் வெளியே வந்து பேஷன்ட்யை உள்ளே அனுப்ப சொல்லி அவனுடைய இன்டனிடம் கூறிவிட்டு செல்ல அவளும் உள்ளே பேஷன்ட்டை அனுப்பினாள். மதிய உணவு இடைவெளியை கூட மறந்து வேலை பார்த்துக்கொண்டிருந்தான் ஆழியன். இரண்டு மணி மூன்றாக கடைசியில் ஈவ்னிங் ஸ்நாக்ஸ் நேரத்தில் தான் அவனுக்கு ஓய்வு கிடைத்தது. ஓய்வாக தலையை சாய்க்க உடனே கௌதம் உள்ளே நுழைந்தான்.

 

“மச்சா!”

 

“அப்படி சொன்ன வாயை உடைத்து விடுவேன். உங்கிட்ட சொல்லி இருக்கேன் இல்லை எக்ஸ்ட்ரா‌ ஷிப்ட் பார்ப்பதா இருந்தா எங்கிட்ட சொல்லு நான் பார்க்கிறேன்னு அதை கேட்காமல் நீ ஏன் நேத்து ஜென்ரல் ஷிப்ட் போன”

 

“அது ஒரு பெரிய கதை அதை விடு எனக்கு பசிக்குது வாயேன் கேன்டின் போய்ட்டு சாப்பிட்டு வரலாம்”

 

“கேன்டின்ல எதுவும் நல்லா இருக்காது உனக்கு பேஷன்ட் பார்க்க இருக்கா”

 

“இல்லையே!”

 

“அப்போ வா வெளியே போகலாம்”

 

“என்ன இப்பையா?”

 

“இப்போ தான் வா போகலாம்”

 

“சரி நான் என் ஆளுகிட்ட சொல்லிட்டு வர்றேன் நீ பார்க்கிங் போ”

 

“டேய்! என் கூட வண்டியில் தான் வர அதனால் கார் சாவியை ரேக்கா கிட்ட கொடுத்துட்டு வந்துடு”

 

“சரிடா! நீ போ நான் வந்துடறேன்” கௌதம் சந்தோஷமாக ஓட ஆழியன் தன் வண்டி சாவியை எடுத்துக்கொண்டு பார்க்கிங் வந்தான். கௌதம் வந்து விட இருவரும் பக்கத்தில் இருந்த ஹோட்டலுக்கு சென்றிருந்தனர். அங்கு உணவின் சுவை நன்றாக இருக்கும் என்பதால் எப்பவும் கூட்டமாகவே இருக்கும் இன்றும் அப்படித்தான் கூட்டமாகவே இருந்தது ஆனால் ஆழியன், கௌதம் இருவருக்கும் பசி எடுக்க எங்கே இடம் இருக்கிறது என்று கண்ணால் தேடினர். அந்த கூட்டத்தில் கூட தனி டேபிளில் தனியாளாக உணவு உண்டபடி அமர்ந்திருந்தாள் நம் நாயகி காஞ்சனா தேவி.

 

“மச்சா! அந்த டேபிள் ஓகேவா”

 

“ஓகே தான் ஆனால் அவங்க கூட யாராவது வருவாங்களா தெரியலையே! தனியா வர வாய்ப்பு இல்லை”

 

“நீ சொல்றதும் சரி தான் ஆனால் கேட்டு பார்க்கலாம்” கௌதம் சொல்ல அவனும் சரி என்று கூறினான். இருவரும் அவளருகே வந்து நின்றவர்கள் “மேம்!” கௌதம் தான் அழைத்தான் அதுவரை திரும்பி இருந்தவள் குரல் கேட்டு இவர்களை பார்த்தாள்.

 

“சொல்லுங்க சார்” பெண்ணவள் தன் தாமரை இதழ் திறந்து வினவ

 

“இங்கே வேற யாராவது வர்றாங்களா”

 

“இல்லை ஏன் கேக்கறீங்க?”

 

“மேம்! டேபிள் முழுக்க புல்லா இருக்கு எங்களுக்கு வேற பசிக்குது இங்க நீங்க மட்டும் தான் இருக்கீங்க அதான் உட்காரலாமான்னு கேட்டோம்”

 

“யாரும் வரலை நீங்க உட்கார்ந்துக்கோங்க” எதிரே வைத்திருந்த தன் பேக்கை எடுத்து பக்கத்தில் வைத்தவள் தான் ஆர்டர் செய்த உணவு வருவதற்காக காத்திருந்தாள். ஆனால் அவளை பார்த்து கண் இமைக்காமல் அமர்ந்திருந்தான் ஆழியன்.

 

“மச்சா! நீ என்ன சாப்பிடுற?” கௌதம் அவனுடைய நிலை புரியாமல் வினவ அதற்கு பதில் சொல்லாமல் பார்வையாலே எதிரே இருந்தவளை பருகி கொண்டிருந்தான். அவனை ஏறிட்டு பார்த்த கௌதம் ‘இவன் என்ன இப்படி பாக்குற? ஓ இந்த பொண்ணை தான் பாக்குறானா. அப்போ திரும்ப மாட்டான் இது தான் சந்தர்ப்பம் நாமலே ஆர்டர் பண்ணுவோம்’ தனக்கு கிடைத்த வாய்ப்பை ஏன் வீணாக்குவோம் என்ற ரீதியில் அவனே உணவை ஆர்டர் செய்தான். அவன் காதருகே வந்த கௌதம் “மச்சா! இன்னும் கொஞ்ச நேரத்தில் அந்த பொண்ணு போய்டும் அட்ரஸ் ஏதாவது வாங்கி தரவா?” அவனுடைய குரல் கேட்டு தன் நண்பனை பார்த்தவன்

 

“அதெல்லாம் ஒன்னும் இல்லை கௌதம்”

 

“அதான் உன் மூஞ்சிலே தெரியுதே இந்த பொண்ணு அழகா தான் இருக்கு அதுக்குன்னு இப்படியா கண்ணை கூட சிமிட்டாமல் பார்ப்ப. அந்த பொண்ணு என்ன நினைக்கும் உன்னை பற்றி?”

 

“கௌதம்”

 

“புரியுது தான் வாயை மூடிட்டேன்” அவன் அமைதியாக அவர்கள் ஆர்டர் செய்த உணவு பதார்த்தம் கொண்டுவரப்பட்டு இருந்தது. காஞ்சனா தனக்கென கொண்டுவரப்பட்ட உணவை சாப்பிட அதை பார்க்கும் தன் நண்பனையும் பார்த்த கௌதமே பேச ஆரம்பித்தான்.

 

“மேம்”

 

“சொல்லுங்க சார்”

 

“மேம்! உங்களை எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கு. நீங்க ஏதாவது ஹாஸ்பிடலில் வேலை பாக்கறீங்களா என்ன?”

 

“இல்லை சார் நான் ஒரு ரைட்டர் இப்போ ஒரு டெலிவிஷன் சேனலில் ரைட்டரா இருக்கேன். நான் காய்ச்சல் வந்தா கூட ஹாஸ்பிடல் பக்கம் வர மாட்டேன்”

 

“ஏன் மேம்? ஹாஸ்பிடல் என்றால் பயமா?”

 

“ஹாஸ்பிடல் அப்படின்னா பயம் இல்லை ஊசின்னா தான் பயம்”

 

“மேம்! ஊசிக்கு பயமா”

 

“ஆமாம்! சின்ன வயசில் இருந்தே அப்படித்தான் மோஸ்டிலி ஹாஸ்பிடல் பக்கம் போக மாட்டேன். ஆமாம்! நீங்க என்ன பண்றீங்க?”

 

“நாங்க இரண்டு பேரும் டாக்டர் பக்கத்தில் இருக்க ஹாஸ்பிடலில் வேலை செய்றோம்”

 

“அப்போ உடம்பு சரியில்லைன்னா உங்க ஹாஸ்பிடல் வரலாம் போல.”

 

“தாராளமாக வாங்க”

 

“ஊசி எழுதி தரமாட்டிங்க இல்லை” மென்னகை புரிந்த படி கேட்க

 

“எழுதி தர நிலமை வந்தால் எழுதி தந்து தானே ஆகனும் ”

 

“அப்போ நாம மீட் பண்றது இது தான் கடைசியா இருக்கும்”

 

“என்ன மேம் இப்படி சொல்லிட்டிங்க?”

 

“ஏன் ஷாக் ஆகறீங்க?”

 

“ஒன்னும் இல்லை மேம்! எல்லாம் சொன்னீங்க உங்க பெயர் சொல்லவே இல்லையே”

 

“என் பெயர் காஞ்சனா தேவி. உங்க பெயர்”

 

“என் பெயர் கௌதம் இவன் என் ப்ரண்ட்‌ ஆழியன்”

 

“ஓ!”என்று காஞ்சனா அவனை பார்க்க அந்த நேரம் ஆழியன் தன் நண்பன் பக்கம் முகத்தை திருப்பி இருந்தான். அவர்களின் பேச்சு அதோடு நின்றிருக்க காஞ்சனா உணவு உண்டவள் இருவரிடம் விடை பெற்று சென்றிருந்தாள். இன்னும்‌ பாதி சாப்பாட்டோடு அமர்ந்திருந்தான் ஆழியன்.

 

“மச்சா! அந்த பொண்ணு போய்டுச்சு சாப்பிடு”

 

“அதான் போய்ட்டா இனி எங்கே தேட?”

 

“நீ ஏன் தேடப்போற உனக்குன்னு எழுதி இருந்தா கண்டிப்பா அவளை திரும்ப நீ மீட் பண்ணுவ” கௌதம் அவனிடம் நம்பிக்கையாக சொல்ல அரை மனதுடன் மீதி இருந்த உணவை உண்டுவிட்டு அவனோடு சென்றான். பாவம் அவனுக்கு தெரியவில்லை இந்த நொடி இவளை கண்டதால் விளையப்போகும் மாற்றத்தை அவன் அறிந்திருக்கவில்லை.

 

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 5 / 5. Vote count: 4

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!