குளித்து முடித்து ஆடைமாற்றிக்கொண்டு வீட்டிற்குள் வந்தாள் கன்னிமா…
வெளியில் குளியலறை இருந்ததால் நைட்டி தான் அணிந்திருந்தாள்… நேரமாவதை உணர்ந்து வேகமாக அடுப்படிக்குள் நுழைந்தவள் இருக்கும் பொருளை கவனித்தே கால் மணி நேரத்தை கடத்தினாள்…
வீட்டிற்குள் நுழைந்தான் ரகுவரன்…
அடுக்களையிலிருந்து வெளியில் வந்த கன்னிமா… “எங்கப்பா போனீங்க?” என்று கேட்டாள்…
“பின்னாடி பக்கம் போனேன் கன்னி… சொல்ல மறந்துட்டேன்… நம்ம வீட்டுல அவசரத்துக்கு பாத்ரூம் இல்லை… நீ கவனிச்சுருப்ப!… பின்னாடி பொதுக்கழிவறை தான் போகனும்” என்றான் சங்கடமாக…
“பரவாயில்லை ப்பா!… எங்க வீட்டுல அங்கையும் அப்படித்தான்… இதுல என்ன இருக்குது… சரி இப்போதைக்கு சேமியா பண்ணவா?… பொருள் அவ்வளவா இல்லை… காய்கறி கூட காஞ்சி போய் இருக்குது”…
“நாளு நாளைக்கு முன்னாடி வாங்கினது கன்னி… அக்கா சமைக்கிரண்ணு சொண்ணான்னு வாங்கியாந்தேன்… என்னாச்சின்னு தெரியலை சமைக்கல… சரி கன்னி நீ இருக்குறதை வச்சி எதையாவது பண்ணு” என்று ரகுவரன் சொன்னதும் அடுக்களைக்குள் புகுந்து கொண்டாள் கன்னிமா…
அறைக்குள் நுழைந்த ரகுவரன் அவனின் ஆடைகளை மடித்து பீரோவில் வைத்தான்… அது ஒன்றும் அவ்வளவு பெரிய அறையில்லை என்றாலும் தாராளமாக நான்கு பேர் தூங்கும் அளவிற்கு சவுறியமான அறைதான்…
கட்டில் பீரோ ஏற்கனவே இருக்க… கன்னிமாவின் வீட்டிலிருந்து டிரெஸ்ஸிங் டேபிள், பிரிஞ்ச், வாசிங் மிஷன் என இதர சில பொருட்கள் சீர்வரிசையாக கொடுத்திருந்தனர்…
டிரெஸ்ஸிங் டேபிள் மட்டும் அறையிலிருக்க… மற்றதெல்லாம் இன்னும் பிரிக்காமல் நடுக்கூடத்தில் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது…
கன்னிமா- வின் பையிலிருந்த ஆடைகளையும் எடுத்து அடுக்கி வைத்த ரகுவரன் இதர பொருட்களை ஸ்லாப்பில் வைத்துவிட்டு பையை தூக்கும் போது கனமாக இருப்பதை போல உணர்ந்து… சட்டென பையை கீழே வைத்து மீதிருந்த ஜிப்பை திறந்தான்…
“இதுல என்ன வச்சிருக்கா?” என்ற யோசனையுடன் ஜிப்பை சற்று விரிவாய் திறக்க… நகைப்பெட்டி இருந்தது… “நகையை இப்படியா வைப்பாங்க” என்று மனைவியை மனதிலேயே திட்டியவாரே அதையெல்லாம் எடுத்து பீரோ- வின் லாக்கரில் வைத்து பூட்டிவிட்டு சாவியை அவள் புடவைக்கு அடியில் வைத்துவிட்டு பீரோ- வை சாற்றினான்…
சமைத்தவற்றை எடுத்து வைத்தாள் கன்னிமா…
ரகு தயாராகி வந்து அமர்ந்தான்… கந்தசாமியும் வந்து சேர்ந்தார்…
“அப்பா முகம் கழுவிட்டு வாங்க சாப்பிடலாம்” என்று அழைத்தான் ரகு…
தண்ணீர் சொம்பை எடுத்து வைத்த கன்னிமா திரும்பி மாமனாரை கண்டு… “வாங்க மாமா சாப்பிடலாம்” என்றாள்…
“அவனுக்கு போட்டு அனுப்புமா!.. நான் பொறுமையா சாப்பிட்டுக்கரன்” என்ற கந்தசாமி வாசலில் அமர்ந்து கொண்டார்…
தட்டையில் சேமியா- வை வைத்து கணவனிடம் தட்டையை நீட்டினாள் கன்னிமா…
“என்னடி சேமியா சிவப்பு கலர்- ல இருக்குது… கன்னி உனக்கு சமைக்க தெரியும் தானே?” என்று சந்தேகமாக கேட்டவன் தட்டையை வாங்கிக்கொண்டான்…
“ம்… ஓரளவுக்கு பண்ணுவேன்- ப்பா!… எனக்கு சேமியா- வை இப்படி சாப்பிட்டா தான் பிடிக்கும்… வெள்ளை கலர்- ல இருந்தா சப்புன்னு இருக்குற மாறியே இருக்கும்… அதான் மிளகா தூளை போட்டு கொஞ்சம் சுறுக்குண்ணு பண்ணினேன்… சாப்பிட்டு பாருங்க நல்லா இருக்கும்” என்றாள் கன்னிமா…
சாப்பிட்டு விட்டு நிமிர்ந்து மனைவியை பார்த்த ரகுவரன்… “கன்னி நல்லா இருக்குதுடி… நான் இப்படி உணத்தியா தின்னதேயில்லை… ம்… இனிமே உனத்தியா சோறு திங்களாம்” என்று புன்னகையுடன் கூறினான்…
கன்னிமாவும் புன்னகைத்தாள்…
“கன்னி!… உன் பையிலருந்ததையெல்லாம் எடுத்து பீரோ- வுல வச்சிட்டன்… நகையை லாக்கர்- ல வச்சி பூட்டிட்டு சாவியை ஊதாக்கலர் புடவைக்குள்ள வச்சிருக்கேன்” என்றான் தகவலாக…
“சரிப்பா!… நானே எடுத்து வைக்கணும்னு நினைச்சேன்… ம்… எனக்கு ஒரு வேலையை மிச்சம் பண்ணிட்டீங்க” என்றாள் கன்னிமா…
“மத்ததையெல்லாம் ஒதுங்க வச்சிடு கன்னி… நான் ஆறுமணிக்கு ஊட்டுக்கு வந்துடுவேன்… மதியத்துக்கு மட்டும் சமாளிச்சி எதையாவது பண்ணு… நான் வரும் போது தேவையானதெல்லாம் கொஞ்சம் கொஞ்சம் வாங்கிட்டு வரன்” என்றான் ரகுவரன்…
“நான் லிஸ்ட் எழுதி தரவாப்பா” என்று கன்னிமா கேட்க…
“இருக்குற பணத்துக்கு சவுரியமா தேவையானதை வாங்கிட்டு வரன் கன்னி… லிஸ்ட் எதுவும் வேண்டாம்” என்றான் ரகுவரன்…
அவனை பார்த்து விழித்த கன்னிமா தலையை மட்டும் ஆட்டி வைத்தாள்… ரகுவரன் கிளம்பிவிட்டான்…
கந்தசாமிக்கு உணவை கொடுத்த கன்னிமா இருக்கும் வேலையை முடித்துவிட்டு வீட்டை ஒதுங்க வைத்து பதினொரு மணிக்கு மிச்சமிருந்த சேமியா- வை உண்டு விட்டு அடுக்களையில் நின்று மதிய உணவை தயாரிக்க ஆரம்பித்தாள்…
காய்கறி இல்லாததால் வெறும் பருப்பை கடைந்து சாப்பாட்டை வடித்து வைத்தவள் தொட்டுக்க மீன்மேக்கரை வணக்கி வைத்தாள்…
ஒருமணியானதும் கந்தசாமி கையைக்கழுவி விட்டு வந்து அமர்ந்தார்… அவருக்கு உணவை போட்டு வந்து கொடுத்த கன்னிமா பின் அறைக்குள் வந்து கட்டிலில் அமர்ந்தாள்…
ஆசுவாசமாக அமர்ந்து ஐந்து நிமிடம் கூட இருக்காது… “கன்னிமா” என்று கத்தி அழைத்தார் கந்தசாமி…
“வரன் மாமா” என்று குரல் கொடுத்த கையோடு வெளியில் வந்த கன்னிமா அன்னத்தை கண்டு “ஆயா வா!… வா உள்ள வா” என்று மலர்ந்த முகத்தோடு அழைத்தாள்…
“என்னடி துணி இது?… நாளு பேர் ஊட்டுக்கு வருவாங்க போவாங்க… இப்படி நைட்டியை போட்டுட்டு தான் வரவேற்பியா?… புடவை கட்டி பூ வச்சி அம்சமா இருக்கணும்னு அறிவில்லை… அம்மா அப்பா இல்லாம வளர்ந்தவன்னு நாளு பேர் பேசனுமா?” என்று திட்டியவாறே உள்ளே வந்தார் அன்னம்…
“ஆயா” என்று விழித்தவாரு அவரை கண்டாள் கன்னிமா…
“வாங்கம்மா சாப்பிடுங்க” என்றார் கந்தசாமி…
“சாப்பிட்டு தான் கண்ணு வரன் நீ சாப்பிடு” என்ற அன்னம் பேத்தியை முறைத்தார்…
“அவளை ஏன்- மா முறைக்கிறிங்க?… இங்க யாரும் பொண்ணு மாப்பிள்ளையை பாக்க வரமாட்டாங்க… கல்யாணத்துக்கு கூப்பிட்டவங்களே வரலை… இதுல தனியா தான் வரப்போராங்களா?… என்னவோ பணம் இருந்தா தான் மதிக்கிராங்க” என்று புலம்பினார் கந்தசாமி…
“விடுப்பா! யானைக்கு ஒரு காலம் வந்தா பூனைக்கும் ஒரு காலம் வரும்… இப்படியே இருந்துட மாட்டோம்… நம்ம வாழ்க்கையும் என்னைக்காவது ஒருநாள் மாறும்… அதுசரி பேரன் எங்க?… மறுவீட்டுக்கு அழைக்கலாம்னு வந்தேன்” என்று பேச்சை தொடங்கினார் அன்னம்…
“அவன் வேலைக்கு போயிட்டான்- மா”…
“இன்னைக்கே- வா!… ஏன் கண்ணு நேத்து தானே கல்யாணம் ஆணுச்சி… மருவீட்டு அழைப்பு முடிஞ்சதும் போலாமில்ல” என்றார் அன்னம்…
“மேனேஜர் திட்டுறான்- மா!… நானே இன்னும் ரெண்டு நாள் ஊட்டுல இருக்கட்டும்னு தான் நினைச்சேன்… ஆனா காலையிலயே ஃபோனை போட்டு கத்துறான்… அதான் அவனை போக சொன்னேன்” என்றார் கந்தசாமி…
“ஓ!… சரிப்பா… மருவீட்டுக்கு அழைக்கத்தான் ஆசையா வந்தேன்… பரவாயில்லை!… இன்னொரு நாள் அழைச்சிக்கரன்… எங்க லதாவை கானம்” என்று அன்னம் கேட்க…
“நேத்தே ஊருக்கு போயிட்டா- மா!”…
“ஓ” என்று இழுத்த அன்னம் பேத்தியை கவலையாக பார்த்தார்… ‘இந்த பிள்ளைக்கு தாயிருந்தா இந்நேரம் கூட இருந்து நல்லது கெட்டதையெல்லாம் சொல்லிக்கொடுத்திருப்பா… தாயும் இல்லை தகப்பனும் இல்லாம மூணு பசங்களுக்கு மத்தியில வளர்ந்த புள்ளைக்கு குடும்பம் நடத்துற அளவுக்கு சத்தியையும் சாமார்த்தியத்தையும் கடவுள் தான் கொடுக்கணும்’ என்று மனதிலேயே நினைத்துக்கொண்டார்…
ஸ்கூட்டியை நிறுத்திவிட்டு ஹாட்பேக்கை மாட்டிக்கொண்டு அவளின் கேபினுக்கு வந்து அமர்ந்தாள் லலிதா…
“ஹேய் லலிதா” என்றவாறு வந்த அவளின் தோழி மீனா… “என்னடி இன்னைக்கே வந்துட்ட?… தம்பி கல்யாணம்னு போன! எப்படியும் வரத்துக்கு ஒருவாரம் ஆகும்னு நினைச்சேன்… நீ என்னன்னா அடுத்த நாளே வந்து நிக்கிற” என்று கேட்டவள் அங்கிருந்த இருக்கையில் அமர்ந்தாள்…
“அவன் கல்யாணத்துக்கு ஒருநாள் லீவ் போட்டதே பெருசு- டி!… இப்போ அவனுக்கு கல்யாணம் பண்ணலன்னு தான் குறையா இருக்குற மாறி அவசரவசரமா கண்ணாலத்தை பேசி முடிச்சிட்டாங்க” என்று எரிச்சலாக கூறினாள் லலிதா…
“என்னடி இவ்வளவு துடுக்கா பேசுற?… நீ இன்னைக்கு இங்க இவ்வளவு துணிவா உக்காந்திருக்கண்ணா அதுக்கு காரணம் உன் தம்பி தானே?… நடந்த கல்யாணம் பிடிக்காத மாறியே பேசுறியே?… பொண்ணு கொஞ்சம் திமிரானவளா?” என்று சந்தேகமாக கேட்டாள் மீனா…
“க்கூம்!… திமிரா? அதுக்கு புத்தி இருக்குமான்னே தெரியலை… சரியான சத்துணவு ஆயா- டி அவ… என் தம்பிக்கு தகுதியானவ தான்” என்று இகழ்ச்சியாக கூறினாள் லலிதா…
அவள் சொன்னதை கேட்டு புரியாமல் முழித்தாள் மீனா..
தொடரும்….!