மீனா முழித்தாள்…. அவளை பார்த்து சிரித்த லலிதா… “என்னடி முழிக்கிற?” என்று கேட்டவள் ஃபோனை எடுத்து கணவனுக்கு பள்ளிக்கு வந்துவிட்டதாக குறுஞ்செய்தி அனுப்பினாள்…
“லலிதா!… நீ என்ன நினைக்கிற?… எனக்கு புரியல- டி… உன் தம்பி பொண்டாட்டி ஒர்த் இல்லைன்னு சொல்லுற ஆனா அவனுக்கு கல்யாணம் நடந்ததே பிடிக்காத மாறி பேசுற?… உன் மனசுல என்னதான் இருக்குது” என்று புரியாமல் கேட்டாள் மீனா…
“என் மனசுல ஒன்னுமில்லை மீனா… நான் டிரீட்மென்ட் ஸ்டார்ட் பண்ணலாம்னு இருக்கேன்… இதுதான் சரியான நேரமா இருக்கும்னு தோணுது… நீ உன் அக்காகிட்ட பேசிட்டு சொல்லு… சண்டே அவர் ஃப்ரீ தான்… அன்னைக்கு அப்பாயின்மென்ட் வாங்கிக்கொடுத்தா சவுறியமா இருக்கும்” என்றாள் லலிதா…
“நான் அக்கா- கிட்ட சொல்லுறதெல்லாம் இருக்கட்டும்… இப்போ நீ எதுக்கு திடீருண்ணு இதுல இறங்குற?… உன் கர்ப்பப்பை நார்மலா தான் இருக்குது… டேப்லட் சாப்பிடு டி!… இயற்கையாவே எல்லாம் தானா நடக்கும்… இப்படி செயர்க்கையா எதுக்கு போகனும்… அதுவுமில்லாம ஏற்கனவே ஒருமுறை டிரை பண்ணி பெயிலியரானதுல நீ மனசுடஞ்சு போனது மட்டுமில்லாம பணமும் வீனாப்போச்சி… முடியாம இருந்த உன்னை பாத்துக்க கூட ஆள் இல்லை… சோ யோசிச்சி இறங்கு” என்றாள் மீனா…
“நான் தெளிவா யோசிச்சிட்டேன் மீனா… என் தம்பிக்கு கண்ணாலமாகிடுச்சி… அவனும் அவளும் நேத்து நைட்டு உல்லாசமாக இருந்துருக்காங்கன்னு சத்தியா அண்ணி சிரிச்சிக்கிட்டே சொல்லும் போது எனக்கு வெறியானுச்சி!… அந்த கன்னிமாவுக்கு முன்னாடி நான் தாயாகனும் டி… இல்லைன்னா என் குடும்பமே என்னை தரமாட்டமா பாப்பாங்க… அப்பறம் பாத்துக்க தான் என் தம்பி பொண்டாட்டி இருக்காளே வேலைக்காரி” என்று கூறி சிரித்தாள் லலிதா…
“ஏண்டி உன் தம்பிக்கூட போட்டிப்போடுற? அவன்- லாம் ஒரு ஆளா?… நீ கவர்மென்ட் ஸ்கூல் டீச்சருடி… மாசம் ஒரு லட்சம் சம்பளம் வாங்குற?… உனக்கு அந்த வீட்டுல மரியாதை இல்லாம போயிருமா?” என்று மீனா கேட்க…
“கண்டிப்பா மீனா!… என் அப்பன் அவரவசரமா பொண்ணை பாத்ததே பேரன் பேத்தி முகத்தை பையன் மூலமா பாக்கலாம்னு தான்… எச்சி கிளாஸ் கழுவரவனுக்கு யாரு பொண்ணுக்கொடுப்பான்னு அசால்ட்டா இருந்துட்டேன் டி!… என் அப்பன் எல்லாத்தையும் கமுக்கமா முச்சிட்டான்… ஆனா ஒன்னு எனக்கு முன்னாடி அவ புள்ளை பெத்துட்டா நான் அவ கால் தூசிக்கு ஆகிடுவேன்… அந்த தப்பு நடக்க நான் விடமாட்டேன்” என்று அவசரமாக கூறினாள் லலிதா…
“நானே யோசிச்சேன் லலிதா நீ வாயை திறந்து சொல்லிட்ட… எப்படி டி எச்சி கிளாஸ் களுவரவனை கட்டிக்க உன் நாத்தனார் சம்மதம் சொன்னா?… அதுவும் இந்த காலத்துல டீ மாஸ்டருக்கு பொண்ணு கிடைக்கிறதெல்லாம் அபூர்வம் தாண்டி” என்றாள் மீனா…
“ஹேய் மீனா அந்த கன்னிமா அதான் என் நாத்தி அவளும் பாத்தாப்பு தாண்டல டி!… ரெண்டுக்கும் சரியா இருக்கும்… அதான் ஒத்துப்போயிடுச்சி” என்றாள் லலிதா…
“ஓ!… சரிடி நீ கமுக்கமா வேலையை ஆரம்பி… இதுவரைக்கும் உன் தம்பி தனியாளா இருந்தான் நல்லா கறந்த?… இனிமே கறக்க முடியாது… அதுக்குன்னு அசலாட்டா இருந்துடாத.. எப்படியெல்லாம் அவங்களை பயன்படுத்தனும்னு கணக்கு போட்டு வை” என்றாள் மீனா…
“அதெல்லாம் அவங்க கல்யாணத்துக்கு முன்னாடியே நான் கணக்கு பண்ணிட்டேன்- டி!… அந்த கன்னிமா- வுக்கு சுவையா ஆக்கி அவிச்சி கொட்ட தெரியுமாம்… அவ ஆயா அதிசியமா புகழ்ந்து பேசினா?… எங்கப்பா அதை கேட்டு என்னை அசிங்கப்படுத்துறான்- டி!… எனக்கு சுவையா ஆக்க வரலை… அதுக்கு நான் என்ன பண்ணுறது” என்று எரிச்சலாக கூறினாள் லலிதா…
“சரி லலிதா!… அங்க நடந்ததையே நினைச்சி நினைச்சி புளுகாம அடுத்து என்னவோ அதை பாரு… எனக்கு கிளாஸ்- க்கு டைமாகிடுச்சி நான் போயிட்டு வரன்” என்றுவிட்டு கிளம்பினாள் மீனா…
தலையாட்டிய லலிதா… “அடியே கன்னிமா?… நீயா நானான்னு பாத்துடலாம்- டி!.. நீ மட்டும் எங்க வீட்டு வாசப்படியை மிதிக்காம இருந்திருந்தா அந்த வீடு எனக்கு சொந்தமாகியிருக்கும்… பொட்டப்புள்ளைய படிக்க வச்சி கட்டி வச்சிட்டோம்- ன்னு ஒத்த வார்த்தை சொல்லி சொத்துல பங்கு தர மாட்டாங்க… மொத்த சொத்தும் அந்த எச்சி கிளாஸ் கழுவுற நாயிக்கு விடுவனா?… நான் படிச்சி பட்டம் வாங்கினவ?… அந்த சொத்தை எப்படி புடுங்கனும்னு எனக்கு தெரியும்” என்று வாய்க்குள் முனகிக்கொண்டவள் ஃபோனை எடுத்து சத்தியாவுக்கு அழைத்தாள்…
அன்னத்திற்கு காஃபி கொண்டு வந்து கொடுத்தாள் கன்னிமா… கந்தசாமி சாப்பிட்டு விட்டு கோவில் பக்கம் சென்றுவிட்டார்…
“கன்னி நேத்து ராவு சந்தோஷமா தானே இருந்த” என்று கேட்ட அன்னம் அவள் கையிலிருந்த டம்ளரை வாங்கிக்கொண்டார்…
“ஆயா” என்று கன்னிமா சிணுங்க… “சந்தோசம் டி ஆத்தா!… படிப்புல தான் கோட்டை வுட்டுட்ட? வாழ்க்கையை எப்படி வழி நடத்துவியோ- ன்னு பயந்தேன்… இப்போ அந்த பயம் இல்லை… சீக்கிரம் உன் வயித்துல புழு பூச்சி உண்டாகணும்- டி… பேரனோ? பேத்தியோ? கண்ணுல பாத்துட்டனா நான் நிம்மதியா கண்ணை மூடுவேன்” என்றார் நா தழுத்தழுக்க…
“என்ன ஆயா பேசுற?… நீ போயிட்டா எங்களுக்குண்ணு யாரு இருக்கா… நானாவது கண்ணாலம் பண்ணி வந்துட்டேன்… இன்னும் அண்ணனுங்களுக்கு ஒரு நல்லது நடக்கல… அதுக்குள்ள அம்போன்னு விட்டுட்டு போரதை பத்தி யோசிக்கிற?” என்று முறைத்தவாரு கூறினாள் கன்னிமா…
“அடப்போடி போக்கத்தவளே!… எனக்கு கவலையே உன்னை பத்தி மட்டும் தான்… அவனுங்க ஆம்பளைங்க டி… எப்படியாவது எங்கேயாவது பொலச்சிப்பாங்க… சின்னவனுங்க ரெண்டு பேரும் எவளையோ காதலிக்குறானுங்களாம்… பெரியவனுக்கு மட்டும் பொண்ணை தேடினா போதும்… அதையும் சின்னவனுங்களே பாத்துடுவானுங்க… அப்பறம் என்ன பருப்புக்குடி நான் அவனுங்களை நினைச்சி வெசனப்படனும்” என்றார் அன்னம்…
“அதெல்லாம் சரிதான் ஆயா… ஆனா அவங்க மூலமா வர வாரிசை நீ பாக்க வேண்டாமா?… அப்பா அம்மா போனதுலருந்து நீதானே எங்களை வளத்து ஆளாக்கின?… நீயும் சொர்க்கத்துக்கு ஓடுலாம்னு நினைச்சா என்ன அர்த்தம்” என்றாள் கன்னிமா கவலையாக…
“சரி… சரி… மூஞ்சை மூன்றையடி நீளத்துக்கு இளுக்காத… அவனுங்க மூணு பேருக்கும் ஒரே மேடையில கண்ணாலத்தை பண்ணி வாரிசை பாத்ததுக்கு அப்பறம் தான் கண்ணை மூடுவேன்… நீ நைட்டியை போடாம புடவையை கட்டுற பழக்கத்துக்கு வா!… உன் நாத்தனார் புருஷன், உன் மாமனாரு இருக்காங்க… ஆம்பளைங்க இருக்குற வீடு அடக்கமா இரு… நான் போயிட்டு வரன்” என்ற அன்னம் டம்ளரை கீழே வைத்துவிட்டு எழுந்தார்…
“பாத்து போயிட்டுவா ஆயா!… அண்ணனுங்களுக்கு வேலை இல்லைன்னா ஒரெட்டு வரசொல்லு… நீ அவங்களுக்கு நாக்குக்கு ஒனத்தியா ஆக்கிப்போடு சரியா” என்றாள் கன்னிமா…
“நீ உன் புருஷனை கவனிச்சிக்கோ?… நான் என் பேரனுங்களை பாத்துக்கரன்” என்றுவிட்டு கிளம்பினார் அன்னம்…
மதிய உணவை முடித்துவிட்டு சற்று நேரம் ஓய்வெடுத்தாள் கன்னிமா… அவளுக்கு ஆப்பு வைக்க தம்பிக்காரனுக்கு ஃபோனை போட்டாள் லலிதா…
“சொல்லுக்கா” என்று முதல் ரிங்கிலே ஃபோனை எடுத்து பேசினான் ரகு…
“என்ன ரகு வேலைக்கு போயிட்டியாம்?… ஏண்டா இன்னும் ரெண்டு நாள் ஊட்டுல இருக்கக்கூடாதா?… புதுப்பொண்டாட்டியை விட்டுட்டு வந்து அப்படி என்ன வேலை வேண்டிக்கடக்குது” என்று பாசமுள்ள அக்கா போல பேசினாள் பச்சோந்தி…
“எனக்கு மட்டும் வர ஆசையாக்கா… எல்லாம் அந்த மேனேஜர் பண்ணுற வேலை… ம்… சரி அதைவிடு வேலை பண்ணலன்னா தான் எனக்கு ஒரு கை வேலை செய்யாத மாறி இருக்கும்… நானே உனக்கு ஃபோன் பண்ணலாம்னு நினைச்சேன் நீயே பண்ணிட்ட… ஒரு ஆயிர ரூவா பணம் இருந்தா கொடுக்கா மூணு நாள் கழிச்சி தரன்” என்றான் ரகு…
“காலையிலயே கேட்க மாட்டியா ரகு… நான் ஆஸ்பித்திரிக்கு போயிட்டு வந்தேன் டா… இருக்குற பணமெல்லாம் செலவாகிடுச்சி… நானே அப்பாவுக்கு மாசம் போடுவாங்கல்ல ஆயிரம் அதை கேட்கலாம்னு நினைச்சேன்… நீ என்னன்னா என்கிட்ட கடன் கேட்கிற” என்ற லலிதாவின் அக்கவுண்டில் லட்சக்கணக்கில் பணம் இருந்தது என்பது உண்மை…
“திரும்பவும் ஆஸ்பித்திரிக்கு போறியா- க்கா?” என்று ரகு கேட்க…
“ஆமாண்டா!… உன் மாமா தான் போலாம்னு ராவுடி பண்ணினாரு… அதான் இன்னைக்கு போய் டெஸ்ட் எடுத்துட்டு ரெண்டு லட்சம் முன்பணம் கட்டிட்டு வந்தோம்… அதான் சுத்தமா இல்லை”…
“சரிக்கா… நீ அப்பாகிட்ட வாங்கிக்கோ?… நான் இங்க யாருட்டயாவது கேட்டுக்கரன்”…
“ஆமா எதுக்கு ஆயிரம்”…
“வீட்டு செலவு பண்ணத்தான்- க்கா… கன்னியை சாயந்தரம் கோயிலுக்கு கூட்டிட்டு போலாம்னு நினைச்சேன்… அவளுக்கு எதாவது வாங்கித்த்ரணுமில்ல அதான்” என்று இழுத்தான் ரகு…
‘எச்சி கிளாஸ் கழுவுற நாயி பொண்டாட்டி- க்கு பூ வாங்கிக்கொடுக்க நான் பணம் தரணுமா?’ என்று மனதிலே பொருமிய லலிதா… “சரிடா அதனால என்ன?… சும்மா கூட்டிட்டு போயிட்டு வா… குடும்ப சூழ்நிலை அறிஞ்சி நடந்துக்கோ… நான் ஒன்னு சொல்லனும்னு தான் ஃபோன் பண்ணினேன்… காலையில சத்தியா அண்ணி- கிட்ட பேசினேன்… உன் பொண்டாட்டியோட பாட்டி மருவீட்டுக்கு அழைக்க வந்துச்சாம்… அதென்னடா அவங்க மட்டும் தனியா வரது… அதுவும் வயசான கட்டை… இதெல்லாம் சரியில்லை ரகு… உன் பொண்டாட்டி அம்மா வீட்டு பக்கம் சாயாம கடுபிடியா நடத்து… நான் வைக்கிறேன்” என்று ஒண்ணுக்கு ரெண்டாக கொளுத்தி போட்டுவிட்டு ஃபோனை வைத்தாள்…
தொடரும்…!