அத்தியாயம் 1

4.8
(4)

சூரியனின் செம்மை நிறக் கதிர்கள் பரவிக் கொண்டிருந்த அந்த அழகான இளம் காலை வேளையில் தன்னில்…

சிலு சிலுவென்று எதிர்வரும் இயற்கை தென்றல் காற்று தன் மேனியில் தழுவி செல்ல, நெற்றியிலோ முத்து முத்தாய் பூத்திருந்த வியர்வைத் துளிகள் அக்காலை நேர ஒளியில் பிரகாசிக்க…

பூமியின் இதமான ஈர்ப்புத் தன்மையை பாத சுவட்டின் வழியே யாக்கை தன்னில் உள்வாங்கு விதமாக வெறும் காலில் தனது காலை நேர ஓட்ட பயிற்சியில் எதிரில் வருபவர்களுக்கு இன்முகத்துடன் சிறு கீற்று புன்னகை சிந்தி தலை அசைப்புடன் தன் வணக்கத்தை வைத்து ஓடிக்கொண்டிருந்தான் , சந்தன திராவிட நிறம் ஒத்த, சீரான உடற்க்கோப்புடன் ஆறடி ஆண்மகனாய் நம் கதையின் நாயகன் இன்னுழவன்.

(இன்னுழவன் – இனிமையான உழவன்.)

ஓடிச் சென்றவன் தன் ஓட்டத்திற்கு தடை போட்டு பசுமையாய் தெரியும் நெற்கதிர்களுக்கு இடையில் தன் சிறு ஒளிக் கால்களால் வானில் மேல் நோக்கி நடந்து கொண்டிருக்கும் கதிரவனை பார்த்தவன்,

தனது கால் சட்டைக்குள் இருந்த அலைபேசியை உயிர்ப்பித்து அதனுடன் காதொலிப்பானை (head phone) இணைத்தவன் செவி மடலில் எதிர் புறத்திலிருந்து கேட்ட இனிமையான குரலில் இதழ்கள் தானாகப் பிரிந்தன… உள்ளிருக்கும் பற்கள் தெரியும் வண்ணம் மௌனமாய்.

“ஹாய் ஹலோ ஃப்ரெண்ட்ஸ் அண்ட் ஃபேமிலிஸ். உங்க எல்லாருக்கும் என் இனிமையான சந்தோஷமான காலை வணக்கங்கள்.” ரேடியோவில் நிகழ்ச்சி ஒளிபரப்பாகிக் கொண்டிருக்க,

“இதோ உங்கள் விருப்பமான மனம் கவர்ந்த காலை தேநீர் நேரத் தென்றல் நிகழ்ச்சியில் உங்களுடன் இணைவது நான் உங்கள் செல்லம் மேக விருஷ்டி” என தன் காந்த குரல் வளத்தால் அனைவரையும் ஒலிபெறுக்கி வாயிலாக கட்டி ஈர்த்துக் கொண்டிருந்தாள் நம் கதையின் நாயகி மேக விருஷ்டி.

மேக- மேகம், விருஷ்டி – மழை.

பத்தி இலக்க அலைபேசி எங்களைக் கூறியவள் “அப்புறம் இன்னும் என்ன எல்லாரும் வெயிட் பண்ணிட்டு இருக்கீங்க. சீக்கிரமா உங்களுடைய அழைப்பு கொடுத்து உங்களுடைய முதல் காலை வணக்கத்தை எனக்கு தெரிவிங்க.

இன்னைக்கு  யார் அந்த முதல் மற்றும் கடைசி அதிர்ஷ்டசாலின்னு பார்க்கலாம்” என்றவள் சொல்லி முடிக்க… அவள் எண்களை சொல்லி கொண்டிருக்கும் தருவாயிலேயே

இன்னுழவனும் தன் அலைபேசி வாயிலாக அழைத்திருந்தான்.

சரியாக தனது ரேடியோ அலையின் காற்றின் அலை கற்றைகள் வாயிலாக  இன்னுழவனின் அழைப்பை இணைத்திருந்தாள் மேக விருஷ்டி.

இது இன்று நடக்கும் எதார்த்தமல்ல! தினமும் நடக்கும் வாடிக்கையே. பல பேர் முயற்சிக்கும் இந்த நேரடியலை நிகழ்ச்சியில் தவறாது தன் முதல் அழைப்பை பதித்துக் கொண்டிருக்கின்றான்   இன்னுழவன்.

ஒவ்வொரு நாளும் முதலில்  மேக விருஷ்டியின் குரலும் அதில் அடையும்  இதமும் இன்னுழவன் மனதையும்  தேகத்தையும்  புத்துணர்ச்சிக்கும் உத்வேகத்திற்கும் அழைத்து செல்கின்றது மனதளவில்.

சொல்லப்போனால் அவள் குரலில் போதையையும் கண்டான் இன்னுழவன். அவள் குரலில் மட்டுமா…? இல்லை அவளிளுமா என்ற கேள்விக்கு பதில் அவனிடமே!

“ஹாய் ஹலோ வணக்கம். லைன்ல இருக்கும் அந்த காலை நேர அதிர்ஷ்டசாலி யாரு?” மேக விருஷ்டி குரல் எழுப்ப…

“இனிய காலை வணக்கம் ரெயினி ஏஞ்சல் மேடம்” என எப்போதும் போல் தன் முதற்கண் வணக்கத்தை வைத்தான் இன்னுழவன் இனிமையாய்.

அவன் குரலில் அதிர்ந்தவள், “ஓ காட்… இன்னுழவன் சார் இன்னைக்கும் நீங்களா?” என்றாள் மேக விருஷ்டி ஆச்சரியம் குறையாமல்.

“எஸ் ரெயினி ஏஞ்சல் மேம் நானே தான்” என முத்துப்பல் தெரிய சிரித்தான்  இன்னுழவன் நெற்றி வருடியவனாய்.

“இத நான் ஆச்சரியமாக சொல்லையா… அதிசயம் சொல்லலையா… இல்லன்னா இதுல ஏதும் உள்குத்தா எப்படி சொல்லனு எனக்கு தெரியல. எல்லா நாளும் உங்களோட இந்த முதல் அழைப்பு மட்டும்தான் எனக்கு வந்துட்டு இருக்கு, நான் ஷோ ஆரம்பிச்சதுல இருந்து. உங்களோட குரல தான் எல்லா நாளும் முதல்ல கேட்குறேன்.

ஆனா, பாருங்க இதோ உங்களால முயற்சி பண்ற மத்த எல்லாருமே ரொம்ப பீல் பண்ணுவாங்க இல்ல லைன் கிடைக்கலன்னு” என்றவளின் குரலில் சற்று தளர்வு மேலோங்கியிருந்தது.

அதை உணர்ந்தவன், “அப்போ என் ரெயினி ஏஞ்சல்” என்றவனின் ஒருமை அழைப்பை அவள் கவனித்தாலும் கவனிக்காதது போல் இருக்க, “அப்போ என்ன போல தினமும் உங்க குரலையும், பேச்சையும் கேட்ட பிறகு தான் என்னோட நாள நான் ஆரம்பிக்கிற மாதிரி நீங்களும் என்னோட குரல கேட்டு ஆரம்பிக்கிறீயா ரெயினி ஏஞ்சல்”

அவளோ, “ஐயோ… அது” பேச வருவதற்கு முன்…

கள்ள புன்னகை உதிர்த்தவனாய், “நான் என்ன பண்றது அழுத்த குரலில் என்  ரெயினி ஏஞ்சல். நானும் எல்லாரும் போல தான் போன் ஆன் பண்ணி உங்களுக்கு போன் பண்றேன். நீங்க அத்தனை பேர் க்காலையும் விட்டு கரெக்ட்டா என்னோட க்கால் தான் அட்டென்ட் பண்றீங்க. இதுல என்கிட்ட எந்த உள் குத்தும் இல்ல ஏஞ்சல் மேடம். எல்லாம் அந்த கடவுளோட ப்ளனோ என்னவோ” என்றவன் நகைக்க…

“என்கிட்ட எந்த உள்குத்தும் இல்ல சார். கடவுள் எதுக்கு பிளான் போடணும் தினமும் நம்ம பேச?” என்றவள் வினவ…

“அத நீங்க கடவுள் கிட்ட தான் கேட்கணும் ரெயினி ஏஞ்சல் மேடம்” என்றவன் பதில் சாட…

“ஓ… அந்த கடவுள் மட்டும் கிடைச்சாரு உங்களுக்கும் எனக்கும்….”

“உங்களுக்கும் எனக்கு…” இடை புகுந்தவன் வார்த்தை இழுக்க,

அப்பொழுது தான் பேசும் செயல் சூழல் புரிந்தவள் அதை அப்படியே நிலுவையில் விட்டுவிட்டு “ஏனிவே உங்க கிட்ட பேசி ஜெயிக்க முடியுமா. சுதாரிச்சிட்டா அவன் இதழுக்குள் முணு முணுக்க, சரி உங்களுக்கு இன்னைக்கு என்ன பாட்டு வேணும் இன்னுழவன் சார். பாட்டோட பெயர சொல்றீங்களா? இல்ல வழக்கம் போல பாடிய காட்டுறீங்களா?” என்றாள் ஆர்வமாய்.

அவன் தினமும் கேட்கும் பாடலுக்கு அவளோ அவனறியா அடிமையவள். காரணம் அவன் கேட்கும் பாடலும் அவளுக்கென்றே பாடி வடிவமைத்து வழங்கபட்டது போல் இருக்கும். அவளும் தனக்கென தான் என உள்ளுக்குள் போலியாய் யூகித்துக் கொண்டிருக்கிறாள்.

இன்னுழவன் இது நாள் வரை கேட்கும், கேட்ட பாடல்கள் அத்துணையும் அவளுக்காக மட்டுமே. இது போலி இல்லை நிதர்சனம் என்று அறிவாளா! இல்லை அறிய வைப்பானா?

“என் குரல்ல பாட்டு கேக்க அவ்வளவு ஆசையா?” நக்கலாய் விழிகள் மின்ன இன்னுழவன்.

“ஹிம்… ஆசைத்தான்…” என்றவள்  சலித்துக் கொண்டாலும் உள்ளுக்குள் இன்பித்துக் கொள்ள தான் செய்தாள்.

“பார்ரா என் குரல்ல பாட்டு கேக்க இவ்வளவு ஆர்வம் வச்சிருக்கீங்க. வாய் திறந்து ஆசைதான்னு வேற கேக்குறீங்க.” என்றவன் இரு பொருள் அர்த்தம் கொண்டு வசை பாட…

“ஐயோ நான் அப்படி சொல்லல…” என்றவள் வேகமாய் இடை மறிக்க,

“எப்படி சொன்னாலும் உங்க வாய் நிறைய ஆசைன்னு வந்துருச்சு. அதனால உங்க ஆசைய நான் நிறைவேற்றாம விட்டா எப்படி?” என்றவன் துள்ளளாய் நகைக்க.

“ஹலோ ஹலோ சார் இங்க நான் ஷோ பண்றேனா? நீங்க ஷோ பண்றீங்களா? ஏன்னா நான் தான் சார் இந்த டயலாக் எல்லாம் பேசணும்” என்றவள் சற்று சினம் கொண்டாள் செல்லமாய்.

மூக்கு நுனில கோவம் சட்டுன்னு வந்துரும் என அவள் கேட்கா கூறி தலை சாய்த்து பிடரி வருடியவன், “இருக்கட்டும் ஏஞ்சல்”

“ஏஞ்சல் மேடம் அல்லனா மேக விருஷ்டி மேடம்” அவள் திருத்த,

இதழுக்குள் வசீகரமாய் புன்னகைத்தவன், “ஓகே… ஓகே… நீ கேட்குறது வேற, நான் கேட்குறது வேறையா?” அதாவது நீ வேறு நான் வேறா என பொருள் பட அவன் பேச… சில நொடி கழித்தே அதன் அர்த்தம் உணர்ந்தவள்

“வாட்… ஹெலோ மிஸ்டர் இன்னுழவன்” அவள் ஏகத்திற்க்கும் ஏகிற…

இதழ் பிரிய மௌனப் புன்னைகையுடன் சுதாரித்து கொண்டவன், “நீ மட்டும் ம்… என்றால்…

உடலோடு உடல் மாற்றம் செய்வேனே…

நீ மட்டும் போ என்றால்…

அப்போதே உயிர் விட்டு செல்வேனே…

அடி பருவ பெண்ணே நீயும்…

ஒரு பங்கு சந்தை போலே…

சில ஏற்ற இறக்கங்கள்…

அட உந்தன் மேனி மேலே…

ஏதோ ஏதோ வலி

எந்தன் ஐம்புலன்களில்

ஏன்…

மழை மழை…

என் உலகத்தில் வருகின்ற…

முதல் மழை… நீ முதல் மழை…

அலை அலை…

என் இதயத்தில் அடிக்கின்ற…

முதல் அலை… நீ முதல் அலை…

என தன் கேட்க இருந்த பாடலை அவள் கேட்டு மயங்கும் குரலில் பாடி அழைப்பை துண்டித்து இருந்தான் இன்னுழவன் வழக்கம் போல்.

மேக விருஷ்டியும் இன்னுழவன் அழைப்பு துண்டிக்கப்பட்டதை திரையில் பார்த்தவள், “ஓகே ஃப்ரெண்ட்ஸ் அண்ட் ஃபேமிலிஸ் இன்னைக்கும் இன்னுழவன் சார் உங்களுக்கு முன்னாடி முந்திகிட்டாரு… முந்திரி கொட்டை” என  பல்லிட்டுக்கில் அவனை வாட்டி வதைத்தவள்,

தொடர்ந்து முயற்சி பண்ணிக்கிட்டே இருங்க. கண்டிப்பா உங்களோட அழைப்பும் ஒருநாள் ஏற்கப்படும். அப்போ நீங்களும் என்னோட பேசி உங்க மனம் கவர்ந்த பாடலை கேட்டு சந்தோசபடுவீங்க. ஆல் தே பெஸ்ட்.

இப்போ இன்னுழவன் சார் ஆசையோடு பாடிய அந்த அழகான பாடல் உங்களுக்காக. சோ ஸ்டேட் டியூன் தேநீர் நேரத் தென்றலில் நான் உங்கள் செல்லம் மேக விருஷ்டி”

பாடலை ஒலிக்க விட்டு செவிமடலில் இருந்து ஒலிவாங்கியை (head microphone) கழற்றி கழுத்தில் போட்டவள், “யாருடா இவன்” என பொறுமிக் கொண்டாலும் அவன் குரல்வள இசையில் மயக்கம் கொள்ளத்தான் செய்தாள் பாவையவள் அனுதினமும்.

செவியோலிப்பானில்  அவள் ஒலிப்பித்த இசையையும்  அவளையும் மனதில் ஓட விட்டவன், தனது ஓட்ட பயிற்சி மீண்டும் தொடர்ந்தான் வீட்டை நோக்கி.

சரியாக பாடல் வரிகள் முற்றுப்பெற பெருமூச்சுடன் வீட்டை அடைந்திருந்தான்  இன்னுழவன்.

உள்ளே வந்தவன் விழிகள் அவன் தாயை கோதாவரியை தேட, அவரோ சப்தமில்லா முணுமுணுப்புடன்  பூஜை அறையில் ஆழ்ந்த பிரார்த்தனையில் இருக்க, அதைக் கண்டு புன்முறுவலுடன் தாவி குதித்து படியேறி சென்று தன் அறைக்குள் அடைந்து கொண்டான்.

குளியலறைக்குள் புகுந்து தன் காலை நேர கடமைகளை செய்து முடித்தவன் வெளியே வர கதவு தட்டப்பட்டது.

அதன் ஓசையில் பிடரி முடி சொட்டிய நீர்தன்னை தோளில் கிடக்கும் பூத்துவாலை கொண்டு துடைத்தவனாய் கதவை திறக்க, வாசலில் பாவாடை தாவணி சகிதம் நிறைமதியாய் பொண் சிரிப்புடன் நின்று கொண்டிருந்தாள் கையில் காபி கப்புடன் இனிதுழனி

இனிதுழனி – இன்னிசை போன்ற குரல் கொண்டவள். இன்னுழவனின் செல்ல தமக்கை.

அதே புன்சிரிப்பு கிஞ்சித்தும் தாளமல் அவளிடம் இருந்து காபியை வாங்கிக் கொண்டவனிடம், இதழ்கள் பிரியா  கைகள் அசைத்து அவன் விழி பார்த்தவள்  சைகையில் அவள் சில விஷயங்களை கூற…

அதன் பொருள் உணர்ந்தவன்,  “சரி நீ கீழ போ நான் ஒரு பத்து நிமிஷத்துல வரேன். அம்மாட்ட சொல்லி அவங்களுக்கு காபி கொடுக்க சொல்லு” என்றவன்,

“உனக்கு இன்னைக்கு காலேஜ் கல்ச்சுரல்ஸ் இருக்குல்ல” ஆமோதிப்பாய் அவள் தலையசைக்க,

“நீயும் பார்ட்டிஸ்ஃபேட்  பண்றது தான எத்தனை மணிக்கு?” என்ற அவனிடம்,

தன் விரல்களால் நிகழ்ச்சியின் நேரத்தை அவள் குறிப்பிட்டுச் சொல்ல, “ஓகேடா கண்டிப்பா அண்ணன் அந்த டைம்க்கு அங்க இருப்பேன் ஒகேவா” என்றவனுக்கு…

விழிகள் மின்ன  முத்தத்தை காற்றில் பறக்க விட்டாள்.

தலை வருடி  அவன் அறைக்குள்  செல்ல, அவளும் கீழே இறங்கினாள் நிலம் தழுவிய பாவாடையை கையில் ஏந்திய வண்ணம் புள்ளி மானாய்.

பெயரில் இனிய குரல் என்ற அர்த்தத்தை பெற்றவளுக்கு  நிதர்சனத்தில் அக்குரல் வளத்தை சூறையாடி இருந்தார் கடவுள்.

செங்கோதை மணம் வீசும்…

டியர் ஃப்ரெண்ட்ஸ் story படிச்சிட்டு மறக்காம கமெண்ட் பண்ணுங்க.

I’m waiting for  Golden comments and like Friend’s 🤗😍😍.

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.8 / 5. Vote count: 4

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!