அபயமளிக்கும் அஞ்சன விழியே!

5
(5)

வணக்கம் மக்களே!

நான் ஷம்லா பஸ்லி. என்னைப் பற்றி பெருசா சொல்ல ஒன்னும் இல்லை. குட்டி ரைட்டர். பிரதிலிபில ஆரம்பிச்சது என்னோட எழுத்துப் பயணம். இப்போ இந்த பக்கம் வந்திருக்கேன். உங்க சப்போர்ட்டை எதிர்பார்க்கிறேன்.

வாங்க கதைக்குள்ள போகலாம்.

 

🤍 அபயமளிக்கும் அஞ்சன விழியே! 🤍

👀 விழி 01

தன் பணியை சிறப்புறச் செய்து முடித்த கதிரவன் மேற்கில் சங்கமிக்க….

மேகங்களை விலக்கித் தள்ளி தன்னொளி பரப்பி விகசிக்கவே வெளிவந்தது நிலவு….

KN ரெஸ்ட்டாரண்ட்டில் ஓர் மீட்டிங்கில் பங்கு பற்றி முடித்து விட்டு தான் தங்கி இருக்கும் ரூமிற்குள் நுழைந்தான் அவன்….

அலுப்பு தீர குளித்து விட்டு இலகுவான கையில்லாத பனியன்… மற்றும் ஷாட்சை அணிந்து கொண்டு வந்தான் ஆடவன்.

அலை அலையாய் சுருண்டு நெற்றி தொட்டு விளையாடும் முடிகள், வில் போன்று வளைந்து ஒன்றை ஒன்று தீண்டி விடத் துடிக்கும் புருவங்கள், கூர் மூக்கு, இவன் எவ்வித கெட்ட பழக்கங்களும் அற்றவன் என்பதை பறைசாற்றும் சிவந்த உதடுகள், முறுக்கேறிய புஜங்கள் என ஆண்களுக்கே அழகனாய் விளங்கினான் நம் நாயகன்.

அவன் ருத்ரன் அபய்!

விழியசைவிலேயே எதிரில் இருப்போரை வீழ்த்தி விடும் வல்லவன்.

அவனது இதழ்களில் என்றுமே ஒரு வசீகரச் சிரிப்பு தற்காலிகமாக அன்றி நிரந்தரமாகவே தவறாது தவழ்ந்திடும்.

செல்வன் சித்ரா தம்பதியினரின் ஒரே புதல்வன் இவன்.

தொழிலில் கொடி கட்டி எட்டிடா உயரத்தை லாவகமாக தொட்டவன் ருத்ரன்…!!

டீ போட்டு எடுத்துக் கொண்டு பல்கோணிக்குச் சென்று ரசித்துக் குடித்தவன் வானைப் பார்த்தான்.

அதில் தன் இமைகள் மூடி மூடி ஒரு தாளத்துடன் திறக்க,

கருமணிகள் உருண்டு மிளிர்ந்திட,

முத்துப் பற்கள் பளிச்சென தெரிந்திட,

ஜிமிக்கிகளோ நர்த்தனம் ஆடிட,

அழகோவியமாய் கிளுக்கிச் சிரித்தாள் ஓர் பெண்ணவள்….!!

” காதல் நோய் வந்தாலே பார்க்கும் பொருள் எங்கிலும் தன் இணையின் முகமே தெரிந்து விடும் போல…. நோய் என்றாலும் அது ஒரு சுகமான இதமான இனிமை கொண்ட நோய் தான்” என்று நினைத்த ருத்ரனின் இதழ்களில் மென்னகை பூத்தது….

நிலவில் ஜொலித்த தன்னவளின் முகத்தைப் பார்த்து “அம்மு” என உச்சரித்தான் அவன்….

“அம்மு! எங்க பார்த்தாலும் உன் முகம் தான் டி தெரியுது. ஏன் டி என்ன இப்படி இம்சைப்படுத்துற? என் முன்னாடி வரவும் மாட்டேங்குற? என்னால முடியல டி. உன்ன பார்த்து இருக்கவே கூடாதோனு கூட நினைக்குது. சரியா ரெண்டு வருஷத்துக்கு முன்னால நான் உன்ன பார்த்தேன்.

நீ என்னைக் காணவே இல்ல. உனக்கு நான் யாருனு தெரியாது. உன்ன நெனச்சிட்டே உன் மேல ஒருத்தன் பைத்தியமாகி இருக்கதும் தெரியாதுல? உன்னைப் பார்க்க என் மனசு துடிக்குது அம்மு. ப்ளீஸ் அம்மு குட்டி என் கிட்ட வந்துரு டி…. நீ இல்லாம என்னால இருக்க முடியாது.

உன்னை எப்போ பார்ப்பேன்….?? நீ எனக்கு கிடைக்க மாட்டியா.

அந்த பொண்ணு இந்த நேரம் யாரயாச்சும் கல்யாணம் பண்ணி கூட இருப்பா…. நீ ஒரு தடவை எதேர்ச்சையா கண்ட அந்த பொண்ண நெனச்சி ஏன் இப்படி காதல்னு துடிக்குற. ஒரு வேளை அவள் உனக்கு கிடைக்கலனா என்ன பண்ணுவ… இது மேஜிக் இல்ல ருத்ரா வாழ்க்கை…. நீ நினைச்சா அவ அவ மாயமா உன் முன்னாடி வந்து நிப்பாளா???” அப்டினு எங்க அப்பா சொல்லுறாரு….

ஆனா எனக்கு என் காதல் மேல அவ்ளோ நம்பிக்கை இருக்கு அம்மு… நீ எனக்கு கிடைப்பனு நான் நம்புறேன்…. என் நம்பிக்கைய பொய்யாக்காம வந்துடு அம்மு…. லவ் யூ டி…. ஐ லவ் யூ சோ மச் அம்மு…. என்று தன்னவளுடன் மானசீகமாக பேசினான்….

🤍🤍🤍🤍

At Rudhran Home

 

ருத்ரனின் வீட்டில் அவனது அறைக்குள் பூனை நடை போட்டு நுழைந்தாள் ஒருத்தி.

அவள் ஆலியா! சித்ராவின் அண்ணா மகள்.

புன்சிரிப்பை இதழ்களில் தவழ விட்டு ஆணழகனாய் இருக்கும் ருத்ரனின் போட்டோவை ஆசையுடன் வருடினாள் ஆலியா.

“மாமா….! ஏன் மாமா என்னைக் கண்டுக்கவே மாட்ற? நான் உன் மேல் உயிரையே வெச்சிருக்கேன். உன்ன இவ்ளோ நாள் தூரத்துல இருந்தே லவ் பண்ணேன். இன்னிக்கு தான் பெங்களூர்ல இருந்து உன்ன பார்க்க ஆசை ஆசையா ஓடி வந்தேன். ஆனா நீ இங்க இல்ல.

உன் கிட்ட என் லவ்வ சொல்ல பயமாவும் இருக்கு. நீ வேணானு சொன்னா நா…. நான் செத்தே போய்டுவேன்…. ஐ லவ் யூ மாமா” என்று பேசியவள் வெளியே சென்றாள்….

“ஆலியா! ஆலி கண்ணு எங்க இருக்க?” என அவளை தேடிக் கொண்டு வந்தார் சித்ரா…

ஆலியா “இதோ இருக்கேன் அத்தை”

“என்ன டா நீ? வந்ததும் வராததுமா எங்க ஓடிட்ட….?” என்று கேட்டார் அவள் தலையை வருடியவாறு….

“மாமாவ பார்க்க தான் வந்தேன் ருத்ரா மாமா எங்கே?” கேட்டாள் அவள்.

“அவன் பிசினஸ் பிசினஸ்னு அதயே கட்டிட்டு அலையுறான். நாளைக்கு வருவான் மா”

“ஆஹ்ஹ் ஓகே…. மாமாவும் இல்லைனா நீங்க தனியாவா இருக்கீங்க?”

“இல்ல டா. ருத்ராட ப்ரெண்ட் இருக்கான்ல அந்த நிதின் பையன். அவன் என் கூட தான் இவ்ளோ நேரமா இருந்தான்”

“ஓஹ்ஹ் நம்ம காஞ்ச பிஸ்கட்டா?” சிரிப்புடன்

“யெஸ் மை டியர் தீஞ்ச சோறு” என்ற சத்தம் கேட்டு ஆலியா சட்டென திரும்ப…..

அவளைப் பார்த்து தலை சாய்த்து சிரித்தான் நிதின்…!!

 

“அய்யய்யோ நீயா?” என நாக்கைக் கடித்துக் கொண்டாள்.

“எஸ்! நானே தான். என் சித்தும்மா முன்னாடியே என் இமேஜை டேமேஜ் பண்ணிட்டியே” என்று அவள் தலையில் நறுக்கென கொட்ட,

“டேய் வலிக்குது டா” என அவனது முடியை பிடித்து இழுத்தாள் அவள்.

“விளையாட்டு பிள்ளைங்க” என சிரித்து விட்டு சென்றார் சித்ரா.

நிதின் அவளையே கண் இமைக்காது பார்த்தான். அவனது குறு குறு பார்வையில் நெளிந்தாள் ஆலியா.

ஆலியா “நிதின்….”

அவனிடமோ மௌனமே பதிலானது.

“ஓய்ய் காஞ்ச பிஸ்கட்” என அவனை உலுக்க, “ஆங்ங் சொல்லு ஆலியா” என்று அவள் முகம் பார்த்தான்….

“என்ன சொல்லுனு சொல்லுற? நீ தான் சொல்லனும்”

“நான் என்ன சொல்லனும் உன் கிட்ட?”

“நீ எதுக்கு என்னை குறு குறுன்னு பார்க்குற?” இடுப்பில் கை வைத்துக் கேட்டாள்.

“என் கண்ணு. நான் எத வேணாலும் பார்ப்பேன் உனக்கென்ன?”

“நீ எதை பார்த்தாலும் எனக்கு கவலை இல்லை. எதுக்கு என்னைப் பார்த்த” விடுவதாக இல்லை அவள்.

“உண்மைய சொல்லட்டுமா?” புருவம் உயர்த்திக் கேட்டான் நிதின்.

“ம்ம் சொல்லு”

“இப்போலாம் நீ என் கண்ணுக்கு புதுசா தெரியுற ஆலி! நான் உன்னை லவ் பண்ணுறன்னு நெனக்கிறேன். இல்லை லவ் தான் பண்ணுறேன்”

அதைக் கேட்டு “ஹா ஹா” வெடித்துச் சிரித்தாள் பெண்.

“என்ன?” என கேள்வியாக நோக்கினான்.

“போடா போடா காமெடி பண்ணாத” என உள்ளே செல்ல, போகும் தன்னவளையே கண் கலங்க பார்த்தான் நிதின்….

♡♡♡♡♡

கட்டிலில் புரண்டு கொண்டிருந்த ருத்ரனின் தூக்கம் எங்கோ தூரச் சென்றிருந்தது.

அவன் நினைவுகளில் அவனவளே வலம் வந்தாள். அன்று கண்டது போல் தோகை மயிலென நடனம் ஆடினாள்.

அம்முவையே நினைத்துக் கொண்டிருந்த ருத்ரனின் செல்போன் அலறியது.

“ஹலோ நித்தி. என்ன டா இந்த நேரத்துல?” அழைப்பை ஏற்றான் அவன்.

“என்னால முடியல ருத்ரா” பாவமாக சொன்னான் நிதின்.

“என்ன முடியல உன்னால? உடம்பு கிடம்பு ஏதாச்சும் சரியில்லயா?”

“நான் எங்கே இருக்கேன்னு உனக்கு தெரியுமா?”

“நீ உன்ன வீட்டுல தானடா இருப்ப. இப்போ எதுக்கு மொக்க கேள்வி கேட்டு என் டைம வேஸ்ட் பண்ணுற?” கடுப்படித்தான் ருத்ரன்.

“என்னது நான் உன் டைமை வேஸ்ட் பண்ணுறேனா? அப்படி என்ன தலை போற வேலைல இருக்கீங்க சார்?” அதற்கு மேலாக கடுப்புடன் வினவினான் நண்பன்.

“என் அம்முவை நெனச்சு ட்ரீம் வேல்ட்ல இருக்கேன். நீ குறுக்க புகுந்துகிட்டு கரடி மாதிரி”

“அடேய் நாசமா போனவனே உனக்கு ஒரு கருமமுமே ஞாபகம் இல்லையா?”

“கொஞ்சம் புரியுற மாதிரி தான் பேசேன் டா”

“நான் உன் மாமன் மகள் ஆலியாவ லவ் பண்ணுறேன்ல. சோ அவளை கரக்ட் பண்ண உன் கிட்ட ஐடியா கேட்கவும் நீ இன்னிக்கு உன் வீட்டுக்கு வருவாள் எப்படியாவது அவள கரக்ட் பண்ணிடுனு சொன்ன தானே? இது எதுவுமே உனக்கு நினைவு இல்லயா?” படபடவென பொரிந்தான் நிதின்.

தலையில் தட்டிக் கொண்டே “ஆங்ங் இப்போ தான் கொஞ்ச கொஞ்சமா ஞாபகம் வருது” எனக் கூறினான் அவன்.

“சுத்தம். நீ எப்போ பாரு அம்மு கிம்முனு ட்ரீம்லயே கிட”

“சரி சரி கோச்சுக்காத டா. இனி ஸ்ரைட்டா விஷயத்திற்கு வா. ஆலியாவ கரக்ட் பண்ணிட்டியா?”

“எங்க செட் பண்ணுறது? அவள் தான் எதுக்கும் அசராம திரியுறாளே டா. நான் நொந்து நூடுல்ஸ் ஆகுறது தான் மிச்சம்”

“மச்சான்! அதுக்கெல்லாம் ஒரு திறமை வேணும் அழகு வேணும். உனக்கெல்லாம் அது புரியாது” வசனம் பேசினான் ருத்.

“வாயில நல்லா வருது. அவள கரக்ட் பண்ண ஐடியா சொல்ல சொன்னா நீ திறமை அழகுனு என் எரிச்சல கிளறுற” ஓய்ந்து போனான் நித்தி.

“எனக்கு தூக்கமா வருது டா. திங்க் பண்ணி டுமோரோ மாஸ் ஐடியா ஒன்னு சொல்லுறேன்” கொட்டாவி விட்டான்.

“யாரு நீயா? ஐடியா சொல்லுவியா?அதுவும் மாஸ் ஐடியா. ஐயாவுக்கு அம்முவை நெனச்சே டைம் போயிடும். சோ நானே ஏதாவது பண்ணிக்குறேன்”

“தட்ஸ் அ குட் பாய்ன்ட். இப்போ தெரியுதுல?! பின்ன எதுக்கு கால் பண்ணின”

“தப்பு தான். உன்ன பற்றி தெரிஞ்சும் நான் கால் பண்ணி ஐடியா கேட்டது மிகப் பெரிய தப்பு தான். அதுக்கு என்ன நானே செருப்பால அடிச்சிக்கனும்”

“அப்போ போய் நல்லா அடிச்சிக்க வேணும்னா இன்னும் எக்ஸ்ட்ராவா நாலஞ்சு செருப்பு வாங்கி தரேன்” என்றான் ருத்ரன்.

“டேய் நானே ரொம்ப பீலிங்ல இருக்கேன். அழுதுடுவேன்” தலைக்கு மேலால் கும்பிடு போட்டான் நண்பன்.

“ஓகே பாய் டா” என கட் பண்ணான்.

தலையணையை கட்டிக் கொண்ட ருத்ரனின் மனத்தில் அம்முவே நடனம் ஆடினாள். கிளுக்கிச் சிரித்தாள். நாக்கு கடித்து அவனை பார்த்தாள்.

அவன் இதயம் எனும் தண்டவாளத்தில் தடதடக்கும் ரயிலென ஓடினாள்.

அம்மு அம்மு என்றே அவனது ஒவ்வொரு அணுவும் துடித்தன….

“அம்மு ப்ளீஸ் டி. என் கிட்ட வந்துடு! லவ் யூ டி அம்மு” என்றவனை மேலும் தவிக்க விடாது

தன் கரங்கள் கொண்டு அரவணைத்து ஆசுவாசப்படுத்தினாள் நித்ரா தேவி.

♡♡♡♡♡

சூரிய தேவன் தன் பொற்கதிர்களை பரப்பிடவே கிழக்கும் செந்தணலென சிவந்து போக இரை தேடிச் செல்லும் பட்சிகளின் இன்னிசை கீதம் இனிமையாய் ஒலிக்க, எங்கும் புது ஒளியுடன் விகசிக்கத் தொடங்கியது….!

திங்கட்கிழமை என்பதால் எங்கும் பரபரப்பாக இருக்க அந்த தெருவின் கடைக் கோடியில் இருந்த அந்த வீடோ இன்னும் மூடியே இருந்தது.

அது ஓர் சிறிய வீடு.

வசதிகளற்ற ஏழ்மையான வீடு என்ற அளவுக்கு இல்லா விட்டாலும் சாதாரண வசதிகள் கொண்டதாகவே அது இருந்தது.

அந்த வீட்டின் ஓர் அறை மூலையில் இருந்த மேசையில் பல புத்தகங்கள் திறந்தவாறே இருக்க கதிரையில் இருந்தவாறே அந்த புத்தகங்கள் மேலேயே தலை வைத்து உறங்கிப் போய் இருந்தாள் ஓர் காரிகை….

யன்னல் வழியாக உள் நுழைந்த சூரிய கதிர்கள் அவளது முகத்தில் பட்டு விளையாடிக் கொண்டிருக்க அதில் துயில் கலைந்து படக்கென எழுந்தாள் அவள்.

திரும்பி நேரத்தைப் பார்க்க அதுவோ ஆறு மணி என காட்டியது.

“ஓஹ் காட்! ஆறு மணியா? நைட் ரொம்ப நேரமா எழுதிட்டு அப்படியே தூங்கிட்டேன் போல. வர வர நீ ரொம்ப தூங்கு மூஞ்சியாகிட்டே வர்ர. இது நல்லா இல்ல டி” என்று தனக்குத் தானே கூறி தன் தலையில் தட்டிக் கொண்டு குளியலறைக்குள் நுழைந்தாள்.

குளித்து முடித்து விட்டு வந்தவள் கிட்சனுக்கு சென்று ப்ரிட்சை திறக்க அதில் நேற்று எடுத்து மிஞ்சிய சேன்ட்விச் துண்டுகளே இருந்தது.

“கொலைப்பசி வேற என்னை பாடா படுத்துது. பட் டைம் இல்ல. சீக்கிரமா ஸ்கூல்கு போகனும். இந்த ப்ரெட்ட இப்போதைக்கு சாப்பிடலாம். என்ன இருந்தாலும் வயிற்றுக்கு துரோகம் செய்யக் கூடாதுனு சொல்லுவாங்க. அத என்னால செய்ய முடியாது. இப்போ பொறுத்துகிட்டு கென்டீன் போய் சாப்பிட வேண்டியது தான்” என்று இருந்த உணவை சடசடவென உள்ளே தள்ளினாள்.

பெற்றோர்கள் உடன்பிறந்தவர்கள் உறவுகள் என யாராவது இருந்து இருந்தால் இவள் இப்படி இருக்க மாட்டாளோ.

இவளது பெற்றோர் வீட்டை எதிர்த்து காதலித்து திருமணம் செய்தவர்கள். அவர்களுக்கும் உடன்பிறப்புகள் மற்றும் தூரத்து உறவுகளும் உறவை முறித்துக் கொண்டன.

உறவுகள் என பலர் சூழ்ந்து பொழிய வேண்டிய பாசத்தை தாமே குறையாது வழங்கி ஒரு இளவரசியாகவே இவளை வளர்த்தனர் பெற்றோர்.

ஆனால் ஐந்து வயதிலேயே தாய் ஆக்சிடன்ட்டில் இறந்து விட தந்தை பிரபாகரனே யாதுமாகி போனார்.

அது கூட நிலைக்காது சில வருடங்களிலேயே நோய் வாய்ப்பட்டு படுத்த படுக்கையாகிய பிரபாகரன் ஒரு வருடத்துக்கு முன்னால் உயிர் துறந்தார்.

அன்றிலிருந்து தனக்கு தான் மட்டுமே என்ற கொள்கையுடன் தன்மானத்துடன் தனித்து நின்று தனக்கென துணை எதுவும் இன்றி வாழ்கிறாள் பெண்ணவள்….

தயாராகி வந்தவள் கதவை மூடிக் கொண்டு வெளியே வந்தாள்.

இவள் கதையின் நாயகி.

பிறை நெற்றி, கயல் விழிகள், மொழு மொழு கன்னங்கள் மற்றும் ஸ்ட்ரோபரி உதடுகளுக்கு சொந்தக்காரி.

பேரழகு என இல்லா விட்டாலும் எளிமையான அழகி தான் அவள்.

நீல நிற சாரியில் கூந்தலை கிளிப் இற்குள் அடக்கி சிறு ஹேன்ட் பேக்கை இடது தோளில் போட்டு, மற்றொரு கையில் புக்கை எடுத்துக் கொண்டு தேவதையென விளங்கினாள்.

அவள் அஞ்சனா!

அஞ்சனா ஓர் பாடசாலையில் தமிழ் ஆசிரியையாக பணி புரிகிறாள். தனியாய் பல இழப்புகளுக்கு மத்தியில் வாழும் இவளுக்கு பாடசாலையும் அவளிடம் கல்வி கற்கும் குட்டி மாணவர்களுமே உயிர்ப்பு சந்தோஷம் எல்லாமே.

தந்தையை இழந்து தவித்தவள் ஆசிரியையாக கடமை புரிய தொடங்கிய பிறகே சற்று தன் வலிகளை மறந்து வாழ ஆரம்பித்தாள்.

“ஹாய் டீச்சர்! குட் மார்னிங்” என்று பேசிய மாணவியைப் பார்த்து,

“குட் மார்னிங் குட்டி” முழுதாய் இதழ் விரித்து சிரித்துக் கொண்டே கையசைத்தாள் அஞ்சனா.

தொடரும்……♡

 

பர்ஸ்ட் எபி எப்படி? கமண்ட்ல சொல்லுங்க டியர்ஸ். 🤍

 

ஷம்லா பஸ்லி

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 5 / 5. Vote count: 5

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!