மனிதர்கள் முதற்கொண்டு பட்சிகள் வரை ஓய்வெடுக்கும் அந்த இரம்மியமான இரவு வேளையில் பிரம்மாண்டத்தின் உச்சமாக பகலைப் போல வண்ண வண்ண விளக்குகளால் ஜொலித்துக் கொண்டிருந்தது அந்த கேளிக்கை வடுதி..!! எங்கும் எதிலும் ஆடம்பரம்.
யுவன் யுவதிகள் அங்கு ஹைப் பின்ச்சில் ஒலிக்கும் இசைக்கும் மது போதைக்கும் இசைந்து ஆடிக் கொண்டிருந்தனர்.
காதலர்கள் ஆகட்டும் நண்பர்களாகட்டும் வரைமுறை இன்றி யாரும் யாருடனும் ஆடிக் கொண்டிருந்தனர்.
சிலர் எல்லை மீறி அந்தரங்க அங்கங்களை உரசியவாறும் ஆடிக் கொண்டிருந்தனர்.
அந்த கூட்டத்தின் நடுவே நடு நாயகனாக ஒரு பெண்ணின் கழுத்து வளைவில் தன்னுடைய முகத்தைப் புதைத்துக் கொண்டு வலது கையால் இன்னொரு பெண்ணின் இடையை தடவியவாறே தன்னுடைய இடது கையால் மற்றுமொரு பெண்ணைத் தழுவியவாறே ஆடிக்கொண்டிருந்தான் அவன்.
அவன் ஆரோன். இருபத்தெட்டு வயது கட்டிளங்காளை. ஆறடி உயரத்தில் அழகான உடற்கட்டுடன் ஆண்களே பொறாமைப்படும் வகையில் அவ்வளவு வசீகரமான முகம்.
ஆண்களுக்கே அப்படி என்றால் பெண்களின் நிலையை சொல்லவா வேண்டும்..
அங்கு உள்ள பெண்கள் அனைவரும் அவனுடன் நடனமாட ஆவலாக பார்த்துக் கொண்டிருக்க, அவனோ நீங்கள் நினைத்தால் எல்லாம் என் அருகில் வர முடியாது. நான் நினைத்தால் மாத்திரமே என் நிழலை நீங்கள் தொட முடியும் என்பது போல அந்த கூட்டத்தில் இருந்த ஒரு மூன்று பெண்களை மட்டும் தன்னுடன் அழைத்து ஆடிக்கொண்டிருந்தான்.
அந்த பெண்களோ இதுதான் வாய்ப்பு என்று அவன் மேலே விழ, அவனோ வழிய கிடைக்கும் பதார்த்தத்தை யார் வீணடிப்பார்கள் என்பது போல தன் இஷ்டத்திற்கு அவர்களிடம் விளையாடினான்.
சில எல்லை மீறிய அவன் தொடுகையை அந்தப் பெண்கள் ரசித்தார்களே தவிர அவனைத் தடுக்கவில்லை.
அப்பொழுது அந்த மூன்று பெண்களில் ஒரு பெண் அவனுடைய உடலில் எல்லை மீறி தடவியவாறு அவன் காதில்,
“பேபி ரூமுக்கு போகலாமா..?” என்று கேட்க, மற்றைய ஒரு பெண்ணின் கழுத்து வளைவில் முகத்தை புதைத்திருந்தவனோ அந்த பெண்ணை தலைத் திருப்பிப் பார்த்து,
“ஓ எஸ் போகலாமே..” என்று அங்கிருந்து விலக, அப்பொழுது மற்றைய இரு பெண்களும் அவனுடைய இரண்டு கைகளைப் பிடித்து,
“பேபி நாங்களும் வருகிறோம்..” என்று சொல்ல, அவனோ நிதானமாக அந்த மூன்று பெண்களையும் மேலிருந்து கீழ் வரை பார்த்தவன், அதில் ஒரு பெண்ணை செலக்ட் செய்து அவளை மட்டும் கண்ணால் அழைக்க மற்றைய இரு பெண்களும்,
“பேபி என்ன பேபி.. அவ மட்டும் தான் வேணுமா.. நான் வேண்டாமா..?” என்று அவனுடைய உடலில் அவள் விரலால் கோலம் போட,
அவனோ “நோ பேபி.. இன்னைக்கு அவள் நாளைக்கு நீ வா.. நோ ப்ராப்ளம்..” என்று சொல்ல,
அந்த பெண்ணோ “நோ பேபி எனக்கு நீ இன்னைக்கே வேணும்..” என்று சொல்ல மற்றும் ஒரு பெண்ணோ,
“பேபி நாங்க மூணு பேருமே வரோம் உனக்கு ஓகேவா..?” என்று கேட்க,
“நோ, நோ நோ ஒரு நாளைக்கு ஒருத்தங்க தான்..” என்று சொல்ல அந்தப் பெண்களில் இருந்த ஒருத்தி,
“ஏன் பேபி உன்னால முடியாதா..?” என்று அவனைப் பார்த்து நக்கலாக கேட்க, அவனோ சட்டென அந்த பெண்ணை நிமிர்ந்து பார்த்தவன்,
“யார் சொன்னா என்னால முடியாதுன்னு.. ஒரே நேரத்தில பத்து பொண்ணுங்க கூட என்னால இருக்க முடியும்.. பட் எனக்கு அது பிடிக்காது.. நீ சொன்னதுக்காக எல்லாம் என்னால இருக்க முடியாது.. இன்னைக்கு நீ என் கூட இருந்து பாரு அப்புறம் பத்து நாளைக்கு கூட உன்னால எழுந்திரிக்க முடியாத அளவுக்கு என்னால பண்ண முடியும்.. உனக்கு ஓகே நா இப்பவே என் கூட வா.. நான் யாருன்னு காட்டுறேன்..” என்று அவன் சொல்ல அவனுடைய கூற்றில் அந்தப் பெண்களோ சற்று பயந்து பின் வாங்க அவனோ,
“உனக்கு எவ்வளவு தைரியம் இருந்தா.. என்ன பார்த்து நீ இப்படி சொல்லுவ இன்னைக்கு நீதான் என் கூட வர்ற..” என்றவன் அப்பெண்ணின் கையைப் பிடித்து தரதரவென்று இழுத்து சென்றவன் அவனுக்கெனவே அங்கு இருக்கும் மிக பிரம்மாண்டமான அறைக்குள் நுழைந்து கொண்டான்.
மறுநாள் அழகாக விடிந்தது. ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தான் ஆரோன். அவன் அருகில் அரை மயக்கத்தில் கிடந்தாள் நேற்றைய இரவு அவனை கேலிப் பேசிய அந்த பெண்.
அவளால் சற்றும் தன்னுடைய உடலை அசைக்க முடியவில்லை.
நேற்றைய இரவு அவளை அழைத்துக் கொண்டு வந்தவன் அவள் போதும் போதும் என்று கத்திய பிறகும் விடாமல் அவளை மிக மிக வன்மையாகவே கூடியதால் வந்த விளைவுதான் இது.
வெகு நேரமாக ஆரோனுடைய மொபைல் ரிங் ஆகிக்கொண்டே இருந்தது.
அதன் ஓசையில் சலித்தபடி எழுந்து கொண்டவன் அதை ஆன் செய்து காதில் வைத்து பல வண்ண வார்த்தைகளால் பச்சை பச்சையாக திட்டினான்.
அவனை தூக்கத்தில் யாரும் எழுப்பினால் அவனுக்கு சுத்தமாகப் பிடிக்காது.
அதனால் யாரும் அவனாக அழைக்கும் வரை அழைப்பு எடுக்க மாட்டார்கள்.
அப்படி அவனை தூக்கத்தில் எழுப்பினார்கள் என்றால் அது அவனுடைய நண்பன் ஷாமாகத்தான் இருக்கும்.
“டேய் டேய் டேய் போதும்டா..காது வலிக்குது ஹப்பா திட்டி முடிச்சிட்டியா..? மணிய பார்றா இன்னைக்கி முக்கியமான மீட்டிங் இருக்கு.. எப்பவும் வழக்கமா அந்த கருமத்தை முடிச்சிட்டு சீக்கிரம் வருவ.. இன்னைக்கு என்னடா இவ்ளோ நேரம் வராம இருக்க..” என்று அவனுடைய திட்டலை எல்லாம் வாங்கிக் கொண்டு அவனிடம் கேட்டான் ஷாம்.
அவன் கூறுவதைக் கேட்ட பின்பு தன்னுடைய நெற்றியை நீவியவன் வலது கையில் கட்டியிருந்த வாட்ச்சில் மணியைப் பார்க்க மணி ஒன்பது என்று காட்டியது.
பின் தன் அருகே பார்க்க அந்த பெண்ணோ இன்னும் எழாமல் படுத்துக் கிடந்தாள்.
“ஓகேடா ஒரு பத்து நிமிஷம் இரு நான் வரேன்..” என்றவன் அவன் கேட்ட கேள்விக்கு பதில் அளிக்காது அவன் போனை வைத்துவிட்டு அங்கிருந்து வேகமாகக் கிளம்பி தன்னுடைய வீட்டிற்கு வந்தான்.
சிறிது நேரத்தில் கோட் சூட் அணிந்து டிப்டாப்பாக கிளம்பியவன் காரை எடுத்துக் கொண்டு அவனுடைய அலுவலகத்தை நோக்கிச் செல்லத் தொடங்கினான். அவனுடைய நேரமோ என்னவோ அங்கு சிக்னல் விழுந்திருக்க,
“ பட்ச் இது வேற.. நேரம் கெட்ட நேரத்துல..” என்று தன்னுடைய கையை ஸ்டேரிங்கில் குத்தியவாறு முனங்கி கொண்டிருந்தான் ஆரோன்.
அப்பொழுது ஷாம் திரும்பவும் அவனுக்கு அழைப்பு எடுக்க, அதில் கடுப்பேறியவன்,
“டேய் என்னடா ++++ பிரச்சனை உனக்கு.. சும்மா சும்மா போன் பண்ணிட்டு இருக்க..” என்று அவனைத் திட்ட, அவனோ ஒரு கையால் காதைக் குடைந்து விட்டு,
“டேய் போதும்டா காலையிலேயே இன்னைக்கு அதிகமா திட்டுற.. காது வலிக்குது மீதியை நாளைக்கு திட்டு டைம் ஆகுதுடா.. மீட்டிங்கிற்கு எல்லாருமே வந்துட்டாங்க. ஆனா அதுக்கு மெயினான நீ இன்னும் வராம இருக்க டா.. அவங்களை எவ்வளவு நேரமா நான் வெயிட் பண்ண சொல்லி இருக்கேன் தெரியுமா.. நீ என்னடா இவ்ளோ அஜாக்கிரதையா இருக்க, சீக்கிரம் வாடா..”
“இங்க பாரு டிராபிக் ஜாம்ல இருக்கேன்னு நானே செம்ம கடுப்புல இருக்கேன் சும்மா எதையாவது சொல்லி வாங்கி கட்டிக்காதே.. அவங்களுக்கு அவ்வளவு அவசரம்னா கிளம்பி போக சொல்லு.. நான் வர்ற நேரத்துக்கு தான் வருவேன்..”
“டேய் எப்பா சாமி தெரியாம சொல்லிட்டேன். நான் ஏதாவது சொல்லி சமாளிச்சி வைக்கிறேன்.. நீ வர்ற நேரத்துக்கே வா ராசா..”
“சரி போன வை..” என்று சொன்னவன் தனது மொபைலை வைத்து விட்டு சிக்னல் விளக்குகளை முறைத்து பார்த்துக் கொண்டிருந்தான்.
அது என்ன இவன் திட்டியதும் கேட்பதற்கு அவனுடைய நண்பன் ஷாமா..? அதுவோ தன்னுடைய இலக்கங்களை வெகு பொறுமையாகவே மாற்றிக் கொண்டிருந்தது.
இறுதியாக ஐந்திலிருந்து ஜீரோ வருவதற்குள் அவனுக்கோ ஏதோ பெரிய யுத்த களத்திற்கு சென்று திரும்பி இருந்ததைப் போலிருந்தது.
அங்கு சிக்னலில் ஒளித்துக் கொண்டிருக்கும் இலக்கங்கள் குறைந்து கொண்டே இருக்க எப்பொழுது பச்சை வண்ண விளக்கு எரியும் என்று பார்த்துக் கொண்டிருந்தவன், அது சரியாக வரும் நேரத்தில் அவனுடைய பார்வையில் விழுந்தாள் அந்த பால் வண்ண மங்கை.
அவளைப் பார்த்தவன் விழிகளோ சாசர் போல விரிந்தன.
சட்டென அவனுடைய உடலிலும் நடுக்கம் ஏற்பட்டது.
இவ்வளவு நேரம் அந்த பச்சை வண்ண விளக்கு எரிவதற்காக காத்துக் கொண்டிருந்தவன் இப்பொழுது அந்த விளக்கு வந்தும் கூட அசையாது அப்படியே அமர்ந்திருந்தான்.
அவன் பின்னே இருந்த வாகனங்கள் தங்களுடைய வாகனத்தின் ஒலியைத் தொடர்ந்து எழுப்பிக் கொண்டே இருந்தன.
ஆனால் அந்த சத்தம் யாவும் அவனுடைய செவியில் விழவே இல்லை.
nice
ஆதி மா 💌💌💌💌💌