ஆரல் – 10
“உன்னோட போன என்கிட்ட கொடுத்துட்டு போ..” என்றான் ஆரோன்.
யாராவும் அவளுடைய போனை அவன் கையில் கொடுத்தாள்.
“அந்த ரூம்ல நீ இருந்துக்கோ இந்த ரூம்ல நான் இருப்பேன்.
உனக்கு எதுவும் வேணும்னா என்ன கூப்பிடு..” என்றவன் அவள் கொடுத்த போனை வாங்கிக்கொண்டு தன்னுடைய அறைக்குச் சென்றவன், உடனே தன்னுடைய மொபைலை எடுத்து தன் நண்பன் ஷாமிற்க்கு அழைப்பு எடுத்து அவள் எண்ணிற்கு வந்த அந்த நம்பரை கொடுத்து அதைப் பற்றிய விவரங்களை ஆராயச் சொன்னான்.
ஷாமோ அவன் அனுப்பிய சிறிது நேரத்தில் அதை தனக்கு தெரிந்த ஹேக்கர் பிரண்ட் மூலம் அதை யாருடைய நம்பர் என்று அறிந்து கொண்டவன், முழு விவரத்தையும் ஆரோனிடம் கூறினான்.
அதைக் கேட்ட ஆரோனுக்கு அதிர்ச்சியாக இருந்தது.
“டேய் ஷாம் உடனே தூக்குடா அவன..”
“டேய் என்னடா சொல்ற.. கிட்னாப் பண்ணவா..”
“டேய் நான் சொன்னதை மட்டும் செய்..” என்று போனை வைத்துவிட, ஷாமோ மனதிற்குள் ‘இவன் நம்மள களி திண்ணாம விடமாட்டான் போல..’ என்று நினைத்துக் கொண்டாலும் அவன் சொன்ன வேலையை மிகச் சிறப்பாக செய்து முடித்து ஆரோனிற்கு அழைப்பு எடுத்தான்.
அவனுடைய அழைப்பிற்காகவே காத்திருந்தவன், கேஷுவல் உடைக்கு மாறிவிட்டு யாரா இருக்கும் அறையைப் பார்க்க, அவளோ தனக்கு இருக்கும் கவலைகளை தற்சமயம் புறம் தள்ளிவிட்டு ஆரோன் இருக்கும் தைரியத்தில் ஆழ்ந்த உறக்கத்திற்கு சென்றிருந்தாள்.
அதைப் பார்த்த ஆரோனோ சற்று நிம்மதி கொண்டு அவளுடைய அறைக் கதவை சத்தம் இல்லாமல் பூட்டியவன்,
“இதே மாதிரி நீ எப்பவும் எந்த கவலையும் இல்லாம இருக்கணும் அதுக்கு நான் பொறுப்பு..” என்று கூறிக் கொண்டவன் வாட்ச்மேனிடம் சற்று சுதாரிப்பாக இருக்கும் படி சொல்லிவிட்டு வேட்டையாட கிளம்பினான்.
ஊருக்கு ஒதுக்கப்புறமாக உள்ள ஒரு பாழடைந்த பங்களாவில் ஒரு நாற்காலியில் கை கால்களை கட்டி வாயிலும் துணியை வைத்து கட்டி வைக்கப்பட்டிருந்தார்
பிரின்சிபல் சிவப்பிரகாசம்.
அவரின் அருகில் மற்றும் ஒரு இருக்கையில் அமர்ந்து போனில் டோரிமான் பார்த்து சிரித்துக் கொண்டிருந்தான் ஷாம்.
சப் என அவனின் முதுகில் ஒரு அடி விழ, “ஆஆஆஆ..” என்று கத்தியவாறே பதறி எழுந்தவன், யார் என்று பார்க்க அங்கு ஆரோன் அவனை முறைத்து பார்த்துக் கொண்டிருந்தான்.
“டேய் மச்சி வந்துட்டியா..” என்று ஷாம் கேட்க,
“ஏண்டா எருமை மாதிரி வளர்ந்திருக்க இன்னும் டோரிமான் பார்த்துட்டு இருக்க இதுல சத்தமா சிரிக்க வேற செய்ற நீ உன்ன..” என்று அவனை திட்டிக் கொண்டிருக்க, இவ்வளவு நேரமும் மயக்கத்தில் இருந்த சிவப்பிரகாசமோ இவர்களின் சத்தத்தில் கண்விழித்தார்.
அவருடைய அசைவில் நண்பர்கள் இருவரும் அவரைப் பார்க்க அவரும் இவர்கள் இருவரையும் பார்த்தார். அவருக்கு சற்று நிமிடம் எதுவும் புரியவில்லை.
தான் எங்கு இருக்கிறோம் ஏன் இங்கு இருக்கிறோம் என்று நினைத்தவருக்கு தான் எப்படி கடத்தப்பட்டோம் என்று நினைவு வந்தது.
சிவப்பிரகாசம் வெளி உலகத்துக்கு ரொம்ப நல்ல மனிதர்.
ஆனால், உள்ளுக்குள் அவரை விட கேவலமான மனிதர் யாரும் இருக்க முடியாது.
அவர் படித்த கல்லூரியிலேயே அவருடைய ஜூனியரை காதலித்து கல்யாணம் செய்து இருந்தார். அவருக்கு அந்த ஒரு காதலி மட்டும் போதவில்லை.
மற்ற பெண்களுடனும் அவர் தொடர்பில் இருக்க, அவருடைய காதல் மனைவிக்கு அது தெரியாமல் இருக்குமா..? அவருடைய லீலைகளை தெரிந்த அவருடைய மனைவியோ இதற்கு மேல் இவருடன் வாழ்வதில் அர்த்தமில்லை என்று நினைத்தவர், தன்னுடைய உயிரை மாய்த்துக் கொண்டார்.
தன்னுடைய காதல் மனைவி இருக்கும் பொழுதே பல பெண்களுடன் உல்லாசமாக இருந்தவர், அவர் இறந்த பின்பு அவருக்கு வசதியாக தானே இருக்கும். இஷ்டம் போல் வாழ்ந்தார்.
ஆனால், இவருடைய இந்த அந்தரங்கம் மற்ற யாருக்கும் தெரியாத வகையில் பார்த்துக் கொண்டார்.
அதே மாதிரி கல்லூரி முடிந்ததும் அவர் அடிக்கடி செல்லும் அவருடைய அந்தப் புறத்திற்கு சென்று குஜாலாக இருக்கும் பொழுது இடையில் கட்டையால் யாரோ தாக்க மனுஷன் சலஜா கூட ஜல்சா பண்ணலாம் என்று ஆசையில் இருந்தவர், அடியின் வீரியத்தில் உடனே மயக்கத்தை தழுவினார்.
ஷாமோ அவரை அப்படியே புளி மூட்டையைப் போல அள்ளிப் போட்டுக் கொண்டு வந்து விட்டான்.
நடந்த விடயங்கள் அனைத்தும் நினைவிற்கு வர அவர்கள் இருவரையும் கூர்ந்து பார்த்தார். பார்த்தவருக்கு அதிர்ச்சி..
அவருடைய பழைய மாணவர்களா தன்னை கடத்தியது என்று கேள்வியாக பார்த்தார் சிவப்பிரகாசம்.
அவர் மயக்கம் தெளிந்து தங்களை பார்ப்பதை பார்த்த ஆரோன் வேகமாக அவர் அருகில் சென்றவன், எதைப் பற்றியும் யோசிக்காது “பளார்..” என்று அவருடைய கண்ணத்தில் இடியென இறக்கினான்.
ஒரே அடியில் மிரண்டவர் வாயைத் திறக்கப் போக அவனோ பல வர்ண பச்சை வார்த்தைகளால் திட்டியவாறே மீண்டும் அவரை அடிக்கப் போக, அவரோ அதற்குள், “ஆரோன் நான் உன்னோட பிரின்ஸ்பல்..” என்று கூற,
“போடா தே*****” என்று திட்டியவன் மீண்டும் ஒரு அடி வைத்தான். “பிரின்ஸ்பலா அது உன்னோட உண்மையான முகம் வெளியில தெரியிற வரைக்கும் தான்.. எப்போ நீ ஒரு கேவலமான ஆள் தெரிஞ்சதோ உன்னை எல்லாம் உயிரோட கொளுத்தணும் போல ஆத்திரம் வருது..” என்றான் ஆரோன்.
அவரோ தினறியவாறே,
“நீ நீ என்ன சொல்ற நா நான் என்ன தப்பு பண்ணேன்..?” என்று கேட்க, ஆரோனோ மீண்டும் ஒருமுறை அறைந்தவன், யாராவைப் பற்றி கூறினான்.
அவன் யாராவை பற்றி சொன்னதும் அவருக்கு அதிர்ச்சியாக இருந்தது.
இவனுக்கு எப்படி இந்த விடயங்கள் எல்லாம் தெரிந்தது என்று அவனை பார்க்க,
“என்ன உன்னோட இன்னொரு முகம் எங்களுக்கு தெரிஞ்சிருச்சேன்னு பாக்குறியா..? என்ன மனுஷன் டா நீ சின்ன பொண்ணுங்களோட வாழ்க்கையில இப்படி விளையாடிட்டு இருக்க, அதுவும் ஒரு குருவா இருந்துகிட்டு.. உன்ன மாதிரி ஒரு ஈனப்பிறவி உயிரோடவே இருக்க கூடாது ஆனா இப்போதைக்கு நீ உயிரோட இருந்து ஆகணும்..
உன்னால பாதிக்கப்பட்டிருக்கிறது யாரா மட்டும் தானா.. இல்ல வேற யாரும் பாதிக்கப்பட்டு இருக்காங்களான்னு தெரியாதே.. அப்படி மட்டும் இருந்துச்சு மவனே உனக்கு ஏன் கையால தான் சாவு..” என்றான் ஆரோன்.
பாவம் அவன் சொன்னது இன்னும் சற்று நேரத்தில் நிறைவேற போகிறது என்று அவனுக்கே தெரியவில்லை.
அந்த அளவிற்கு அவனுடைய மனது உடையப் போகிறது அதை தாங்குவானா ஆரோன்..?
“டேய் ஷாம் அவனோட மொபைல் அவனோட லேப்டாப் எல்லாம் எடுத்துட்டு வந்துட்ட தானே..?”
“ஆமாடா மச்சான் எல்லாம் எடுத்துட்டு வந்துட்டேன் இதோ இருக்கு பாரு..” என்று இரண்டையும் அவனுடைய கையில் கொடுத்தான்.
சிவப்பிரகாசத்தின் மொபைலை வாங்கியவன், அதை ஓபன் செய்ய அதுவோ பாஸ்வோர்ட் கேட்டு நின்றது.
சட்டென சிவப்பிரகாசத்தின் பின்னந்தலையை கொத்தாக பிடித்தவன், அவருடைய மொபைல் ஸ்க்ரீனுக்கு முன்னாக அவருடைய முகத்தை உயர்த்திப் பிடித்தான். சட்டென அவருடைய போன் திறந்து கொண்டது.
உடனே யாராவிற்கு அனுப்பிய வீடியோவை ஆராய்ந்தவன்.
அவை அனைத்தையும் டெலிட் செய்தான் பின்பு அந்த போனில் இருக்கும் அனைத்தையுமே ஆல் கிளியர் கொடுத்து அதை ஒன்றுக்கும் உதவாதது போல ஆக்கிவிட்டான்.
ஆம் யாராவுக்கு வந்த வீடியோக்கள் போட்டோக்கள் முதற்கொண்டு அனைத்தும் இந்த சிவபிரகாசம் தான் அனுப்பி இருந்தார்.
திரும்ப அவருடைய லேப்டாப்பை எடுத்தவன் அதையும் அதே போலவே ஓபன் செய்ய அதில் ஏகப்பட்ட போல்டர்கள் இருந்தது. அதை பார்த்தவன் சற்று அதிர்ந்தான்.
அதில் இருந்த அனைத்து போல்டர்களையும் ஒவ்வொன்றாக ஆராய்ந்தான்.
சிலது அவருடைய வேலை சம்பந்தப்பட்டதாக இருந்தது.
அதில் ஒரே ஒரு ஃபோல்டர் மட்டும் வித்தியாசமாக இருந்தது.
அதை அவன் ஓபன் செய்து பார்க்க உள்ளே வருடங்களை குறிப்பிட்ட சில பைல்கள் இருந்தது.
ஒவ்வொன்றாக பார்த்தவன் திகைத்து போனான்.
ஏனென்றால் அந்த வருடங்கள் குறிப்பிட்டது அந்த வருடத்தில் படித்த மாணவிகளின் வீடியோக்கள் இருந்தன.
அதைப் பார்த்தவன் அப்படியே சிவப்பிரகாசத்தை எரிக்கும் அளவிற்கு முறைத்து பார்த்துக் கொண்டிருந்தான்.
ஒவ்வொன்றாக அனைத்தையும் டெலிட் செய்து வந்தவன் கண்ணில் பட்டது அவன் படித்த அதே வருடம். அதைப் பார்த்ததும் அவனுக்கு கைகள் நடுங்கியது.
ரீனாவின் நினைவுகள் அவன் கண் முன்னால் வந்து போயின.
அவன் மனதிற்குள் அவ்வாறு மட்டும் இருக்கக் கூடாது என்று மீண்டும் மீண்டும் சொல்லிக் கொண்டே இருந்தான்.
ஏனென்றால் இதற்கு முன்னர் அவன் பார்த்த அந்த வீடியோக்கள் அவனை பதற வைத்தது.
தன்னுடையக் கண்களை அழுந்த மூடித் திறந்தவன், திடமாக அவன் படித்த அந்த வருடத்திற்கான பைலை ஓபன் செய்தான்.
அதில் 10 பெண்களின் வீடியோக்கள் இருந்தன.
ஒவ்வொன்றாக பார்த்தவன் அனைத்தையும் அழிக்க இறுதியாக ஒரு பெண்ணின் வீடியோ இருந்தது. அதை ஓபன் செய்யும் முன்பே அவனுடைய இதயம் படபடவென அடித்துக் கொண்டது.
மீண்டும் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு அந்த வீடியோவை ஓபன் செய்தான்.
அவ்வளவுதான் முடிந்தது.
அவனோ அப்படியே உறைந்து போய் அமர்ந்து விட்டான்.
அவனுடைய கண்கள் அந்த வீடியோவில் இருந்து அசையவே இல்லை.
அதில் கண்ட காட்சி அவனை வேரோடு சாய்த்து விட்டது.
ஆரல் – 11
சிவப்பிரகாசத்தின் லேப்டாப்பை ஓபன் செய்து அதிலிருந்த அனைத்து வீடியோக்களையும் அழித்து வந்தவன் இறுதியில் ஒரு வீடியோவை பார்க்க, அதைப் பார்த்தவன் அப்படியே உறைந்து விட்டான்.
“ரீனாஆஆஆஆஆஆ..” என்று கத்தியவன் அந்த இடத்திலேயே மயக்கம் போட்டு விழுந்து விட்டான் ஆரோன்.
அவன் அருகில் இருந்த ஷாமோ அவன் சட்டென இப்படி மயக்கம் போட்டு விழுவான் என்று எதிர்பார்க்காதவன் அவனுடைய அருகில் சென்று தண்ணீரை அவனுடைய முகத்தில் தெளித்து அவனை எழுப்பினான்.
மயக்கம் தெளிந்து எழுந்தவனுக்கோ சற்று நேரம் எதுவுமே புரியவில்லை.
அவனுடைய இதயமோ வேகவேகமாக துடித்தது.
தனது கையைக் கொண்டு அதை மெதுவாக வருடி கொடுத்தவன் ரத்தம் தெறிக்கும் விழிகளோடு சிவப்பிரகாசத்தைப் பார்த்தான்.
மீண்டும் அந்த வீடியோவை ஓட விட்டான்.
அதில் வேறொரு பெண் உடலோடு ரீனாவின் முகம் மார்பின் செய்யப்பட்டிருந்த வீடியோ அது. இன்னொரு ஆணுடன் மிக நெருக்கமாக இருந்த வீடியோவை கண்டவனுக்கோ ரத்தம் கொதித்தது. என்னதான் அது மார்பின் செய்யப்பட்டிருந்தாலும் அச்சு அசலாக ரீனாவைப் போலவே இருந்தது.
சிறிது நேரம் அந்த வீடியோவை ஓட விட்டவன் அதன்பிறகு அதில் வந்த காட்சிகளை காண முடியாமல் சட்டென எழுந்து நின்றவன், தன்னுடைய இடுப்பில் சொருகி வைத்திருந்த லிட்டில் கன்னை எடுத்து சிவப்பிரகாசத்தின் நெற்றியில் பதித்தவன், இல்லாத பொறுமையை இழுத்து பிடித்துக் கொண்டு அவரிடம் கேட்டான்.
“ரீனாவுக்கு என்ன நடந்துச்சு ரீனா எப்படி செத்துப்போனா.. இதுக்கும் உனக்குத் தெரியாம இருக்க வாய்ப்பே இல்லை மரியாதையா சொல்லு..” என்றான்.
“ இல்ல எனக்குத் தெரியாது..” என்று கூறினார் சிவப்பிரகாசம்.
அவனை விட்டால் தன் கையில் இருக்கும் துப்பாக்கியில் இருக்கும் அனைத்து புல்லட்டையும் ஒரே அழுத்தில் அவருடைய தலையில் இறக்கி விடுவது போல வெறியோடு நின்று கொண்டிருந்தான்.
“ இங்க பாரு என் பொறுமையை ரொம்ப சோதிக்காத.. மரியாதையா ரீனா இதுல எப்படி மாட்டினான்னு சொல்லு..” என்றான் அவன்.
அவன் அவ்வாறு கூறவும் எங்கே அவன் தன்னை கொன்று விடுவானோ.. என்ற பயத்தில்,
“சரி சரி நான் சொல்றேன். நீ என்னை எதுவும் பண்ணிடாத..” என்று கூறியவர்
“இது நீங்க நினைக்கிற மாதிரி சின்ன விஷயம் கிடையாது.. இதுக்கு பின்னாடி ஒரு பெரிய தலையே இருக்கு.. பொதுவா ஆசிரமத்தில இருக்கிற அனாதை பொண்ணுங்கள தான் அவங்க இந்த மாதிரி விஷயத்துக்கு இன்வால் பண்ணுவாங்க.. அப்படி இருக்கும் போது நான் காலேஜ்ல உள்ள அனாதை பொண்ணுங்க போட்டோவ அனுப்பும்போது, ரீனா ரொம்ப அழகா இருந்ததால அவளோட போட்டோவையும் தெரியாம அனுப்பிட்டேன்.. அவங்களுக்கு மத்த பொண்ணுங்கள விட ரீனாவ தான் ரொம்ப பிடிச்சி இருந்தது.
உடனே அவளைத்தான் ஃபர்ஸ்ட் டார்கெட் பண்ணாங்க.. நான் அவங்க கிட்ட சொன்னேன்.
அவா அணாத பொண்ணு கிடையாது தெரியாம அனுப்பிட்டேன்னு..
ஆனா அவங்க அத கேட்கவே இல்லை. எப்படியாவது ரீனாவ அவங்க வலைல சிக்க வைக்க ட்ரை பண்ணாங்க.. பட், அவ இப்படி தற்கொலை பண்ணி செத்துப் போய்ட்டா.. இந்த மாதிரி நிறைய நடக்கும்.. ஒரு சில பொண்ணுங்க வேற வழி இல்லாம அவங்க சொல்றபடி கேட்பாங்க.. சில பொண்ணுங்க அவங்களுக்கு மானம் தான் முக்கியம்னு தற்கொலை பண்ணி செத்துப் போயிடுவாங்க.. அதையும் அவங்களே மறைச்சிருவாங்க… இப்படித்தான் ரீனாவோட தற்கொலையும், எந்த சந்தேகமும் இல்லாம மாறிடுச்சு..” என்று அவர் சொல்ல, ஆரோனோ அவருடைய நெற்றியில் அழுத்திய துப்பாக்கியில் இருந்த அனைத்து புல்லட்டையும் ஒன்று விடாமல் அவருடைய தலையில் இறக்கினான்.
அவரோ அந்த நொடியே செத்து மடிந்தார்.
ஷாமோ, “டேய் என்னடா இப்படி கொன்னுட்ட..” என்று கேட்க, அவனோ கோபம் கொப்பளிக்கும் விழிகளோடு ஷாமைப் பார்த்தவன், “டேய் ரீனா என்ன விட்டுப் போனதுக்கு முழு காரணமும் இந்த பரதேசி தான் டா.. எந்த பாவமே செய்யாத என் ரீனா இப்போ இந்த உலகத்துல இல்லடா...
அப்படி என்னடா இவங்களுக்கு பணத்து மேலேயும், இப்படி பொண்ணுங்க மேலயும் ஆசை.. இவங்களோட இந்த கேவலமான ஆசையினால எத்தனை அப்பாவி பொண்ணுங்க அவமானம் தாங்க முடியாமல் உயிரை விட்டிருக்காங்க.. அதுல என்னோட ரீனாவும் ஒருத்தியா போயிட்டாளே.. அவ என்கிட்ட அப்பவே இதுதான் பிரச்சனைன்னு சொல்லி இருந்தா.. அவளை அதிலிருந்து காப்பாத்தி என் கூடயே பொத்தி வச்சு பாதுகாத்திருப்பேன்.. இத்தனை வருஷமா அவை ஏன் என்னை விட்டு போனான்னு தெரியாம எத்தனை நாள் பைத்தியம் பிடிச்சு திரிஞ்சி இருக்கேன் தெரியுமா உனக்கு.. ஆனா, என் ரீனா சாவுக்கு பின்னாடி இப்படி ஒரு பிரச்சனை இருக்கும்னு சத்தியமா நான் எதிர்பார்க்கல டா.. இதுல சம்பந்தப்பட்ட ஒருத்தனையும் நான் உயிரோட விடமாட்டேன்.
அதுக்கு முதல் பலி இவன் தாண்டா இவன டிஸ்போஸ் பண்ணிடு..” என்றவன், அந்த லேப்டாப்பை எடுத்துக்கொண்டு தன்னுடைய இல்லத்திற்குச் சென்றான் ஆரோன். ஷாமோ அவன் சொன்னபடியே சிவப்பிரகாசத்தை அங்கேயே குழி தோண்டி புதைத்து விட்டு எந்த தடையமும் இல்லாமல் சென்று விட்டான்.
வீட்டிற்கு வந்த ஆரோனின் மனது ஒரு நிலையில் இல்லை.
ரீனாவே அவன் கண் முன்னால் வந்து கொண்டிருந்தாள்.
அவனுடைய கண்களோ கலங்கியது. “ரீனா.. ரீனா.. ஏன் ரீனா இப்படி பண்ண.. என் மேல உனக்கு துளி கூட நம்பிக்கையே இல்லையாடி.. இத நீ அப்பவே என்கிட்ட சொல்லி இருந்தா உன்ன நான் காப்பாத்திருப்பேனேடி..” என்று தனக்குள்ளே புலம்பியவன், அந்த வலி தாங்காது தன்னுடைய சுயம் இழக்கும் அளவிற்கு அதிகமாக மதுவை அருந்தினான்.
அவன் எவ்வளவுதான் மதுவை அருந்தினாலும் அவளுடைய நினைவு மட்டும் அவனை விட்டு நீங்கவே இல்லை.
தள்ளாடியப்படியே அவன் அறையில் இருந்து வெளியே வர இவ்வளவு நேரமும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த யாரா விழிப்பு வர, எழுந்து மணியை பார்த்தாள்.
அதுவோ அதிகாலை ஐந்து என்று காட்டியது.
பின்பு பெட்டில் இருந்து எழுந்தவள், அவளுடைய அறை கதவைத் திறக்க முற்பட கதவோ திறக்கவில்லை.
இரவு ஆரோன் பூட்டி சென்றப்படி இருந்தது.
‘என்ன கதவு திறக்க மாட்டேங்குது நைட்டு நான் பூட்டாம தான படுத்து இருந்தேன்.. இப்போ லாக் போட்டு இருக்கு.. யாரு பூட்டியிருப்பாங்க..?’ என்று யோசித்தவள் கதவை தட்டிக் கொண்டிருந்தாள்.
மித மிஞ்சிய போதையுடன் தள்ளாடிக்கொண்டே வந்த ஆரோன், கதவுத் தட்டும் சத்தம் கேட்க கதவை திறந்தான்.
அவன் கதவை திறந்ததும் யாரா அவனை பார்க்க, அவனோ நிற்க முடியாமல் தள்ளாடிக் கொண்டிருந்தான்.
“சார்.. என்னாச்சு சார் உங்களுக்கு.. ஏன் இப்படி இருக்கீங்க..” என்று கேட்டாள்.
அவனுடைய கண்களுக்கோ ரீனாவே அவன் கண் முன்னால் வந்தது போல இருந்தது.
சட்டென எதைப் பற்றியும் யோசிக்காது அவளுடைய முகத்தை தன் இருக் கைகளால் தாங்கியவன், “ஏன்.. ரீனா ஏன் உனக்கு என் மேல நம்பிக்கையே இல்லையா..நான் உனக்கு அந்த நம்பிக்கையை கொடுக்கலையா டி..” என்று போதையில் உளறிக் கொண்டிருக்க, அவளுக்கோ ஒன்றும் புரியவில்லை. “சார்.. நீங்க என்ன பேசுறீங்க.. நான் உங்க ரீனா கிடையாது. நான் யாரா..” என்றாள் யாரா.
ஆனால், அவனோ அவள் சொல்வதை கேட்கும் நிலையில் இல்லை.
யாராவை அவன் ரீனா என நினைத்துக் கொண்டே அவளுடைய இதழில் முத்தமிடப் போக, அவளோ அவனின் செய்கையை புரிந்து கொண்டு, தன்னிலிருந்து அவனை விலக்கப் போராடினாள்.
அவளால் அந்த வலிமை மிக்க ஆடவனை சற்று கூட அசைக்க முடியவில்லை.
அதேசமயம் அவனுடைய இழுப்பிற்கும் அவளால் செல்ல முடியவில்லை.. என்ன செய்வதென்று தெரியாமல் அவனுடைய கன்னத்தில் “பளார்..” என்று ஒரு அறை விட்டாள்.
அதில் அதிர்ந்தவன் சட்டென அவளுடையக் கழுத்தைப் பிடித்தான். “ஏய் இப்ப எதுக்குடி என்னை அடிச்ச..” என்று அவன் கேட்க, அவளோ, “நீங்க என்ன பண்றீங்கன்னு உங்களுக்கு புரியுதா..? என்ன அவங்க கிட்ட இருந்து காப்பாத்துறேன்னு சொல்லிட்டு நீங்களே என்கிட்ட தப்பா நடக்க முயற்சி பண்றீங்க.. ச்சை உங்கள என்னமோ நினைச்சேன். ஆனா, நீங்களும் சராசரி ஆளைப்போல இப்படி கேவலமா நடந்துக்கிறீங்க..” என்று அவள் வார்த்தைகளைக் கடித்து துப்ப, இவனோ அவ்வளவு நேரமும் ரீனாவின் ஞாபகத்தில் உழன்று கொண்டிருந்தவன், அவளுடைய இந்த கேவலமான பேச்சில் விழித்துக் கொண்டான்.
“என்னடி சொன்ன.. என்ன சொன்ன திரும்ப சொல்லு..?” என்று அவன் கண்களை இடுக்கிக் கொண்டு கேட்க,
அவளோ அசராமல் “ஆமா சார்.. நான் சொல்வேன் நீங்க அப்படித்தான் நடந்துக்கிறீங்க.. யார் கண்டா நீங்க ரீனா கிட்டையும் இப்படித்தான் நடந்து இருப்பீங்க போல.. அதான் அவங்க உங்களை விட்டுப் போய்ட்டாங்க..” என்று அவள் அவன் தன்னிடம் தவறாக நடக்க வந்த கோபத்தில் வாய்க்கு வந்ததை சொல்ல.. அவ்வளவுதான் அவள் கழுத்தில் இருந்து கையை எடுத்தவன், பளார்.. என்று அவளை ஓங்கி அறைந்தான்.
“இன்னொரு வார்த்தை என் ரீனாவைப் பத்தி உன் வாயிலிருந்து ஒரு வார்த்தை வந்துச்சு உன்ன உயிரோட நானே புதைச்சுடுவேன்.. ச்சை.. இப்ப பீல் பண்றேன்டி என் ரீனாவோட ஆர்கன்ச எதுக்கு உனக்கு வச்சாங்கன்னு.. ஏன் ரீனா எப்படிப்பட்ட பொண்ணு தெரியுமா டி.. அவளோட கண்களும், இதயமும் உனக்குள்ள இருந்தாலும் நீ அவ ஆகிவிட முடியாது. என் ரீனா தேவதைடி.. தேவதை..” என்று உணர்ந்து சொன்னவன், ரீனாவைப் பற்றி சொல்ல ஆரம்பித்தான்.
Super sis 💞