ஆரலை அணைக்கும் ஆம்பல் அவளோ

4.9
(13)

ஆரல் -20

 

ஆரோனின் அறையைச் சுற்றிப் பார்த்த யாரா அங்கு இருந்த கண்ணாடியின் முன்னே நின்று தன் கழுத்தில் தொங்கிய மாங்கல்த்தையும், தன் நெற்றியில் அவன் வைத்த குங்குமத்தையும் தொட்டுப் பார்த்தவளுக்கு அது உண்மையா என்ற ஆச்சரியமே பெரிதாக இருந்தது.

அப்பொழுது ரீனாவின் உருவம் அவளுக்குத் தெரிந்தது.

“ரீனா..” என்று அவள் கூப்பிட,

ரீனாவே கண்கள் கலங்க அவளைப் பார்த்திருந்தாள்.

அதைப் பார்த்த யாராவிற்கோ ஒரு மாதிரியாகிவிட்டது.

“என்னாச்சு ஏன் உங்க முகம் ஒரு மாதிரி இருக்கு..?” என்று யாரா கேட்க,

ரீனாவோ “ஒன்னும் இல்லை.. நான் ஆரோனுடைய கையால தாலி வாங்கணும்னு நான் எவ்வளவு ஆசையா இருந்தேன் தெரியுமா..? ஆனால் அது கனவாவே போயிருச்சு.. எனக்கு அவர் கூட கடைசி வரைக்கும் வாழ கொடுத்து வைக்கவே இல்லை. இப்போ அவர் கையால உன் கழுத்துல தாலி ஏற்னதை பார்க்கும்போது எனக்கு சந்தோஷம்தான்.. இருந்தாலும் என்னால அது சட்டுன்னு ஏத்துக்க முடியல.. என்ன மன்னிச்சிடு யாரா.. நான் இப்படி பேசுறது தப்புதான்.. இதுக்கு அப்புறம் நீ தான் அவருடைய மனைவி..

யாரா நீ அவரை நல்லா பார்த்துக்கோ இதுக்கு அப்புறம் நான் உன் முன்னாடி வரமாட்டேன்.. நான் போறேன்..” என்று அவள் சொல்ல யாராவுக்கோ ஒரு மாதிரி ஆகிவிட்டது.

“ஒரு நிமிஷம் இருங்க ரீனா.. அவரு என்ன சொல்லி என் கழுத்துல தாலி கட்டினாருன்னு உங்களுக்கும் தெரிஞ்சிருக்கும்.. அவரோட மனசு ஃபுல்லா நீங்க தான் இருக்கீங்க.. அவரைப் பொறுத்த வரைக்கும் இது ஒரு வெறும் கயிறு தான்..”என்று சொல்ல ரீனாவோ தான் அவளிடம் கூறிய மடத்தனத்தைப் புரிந்து கொண்டவள்,

“ஐயோ யாரா என்னை மன்னிச்சிரு.. நான் தான் உன்ன அவர கல்யாணம் பண்ணிக்க சொல்லி கேட்டேன். இப்போ நானே உன்னை சங்கடப்படுத்திட்டேன். நான் சொன்னது எதையும் நீ மனசுல வச்சுக்காம அவர் கூட நீ சந்தோஷமா வாழனும். நான் உங்களுக்கு குழந்தையாக வந்து பிறக்கணும்.. ப்ளீஸ் யாரா.. இந்த ஆசையை நிறைவேற்றுவியா..?” என்று கேட்க, யாராவோ அதிர்ச்சியாக அவளைப் பார்த்தாள்.

“ரீனா நீங்க என்ன பேசுறீங்கன்னு புரிஞ்சுதான் பேசுறீங்களா..? இதெல்லாம் நடக்கிற காரியமா..” என்று கேட்க,

ரீனாவோ “அதெல்லாம் கண்டிப்பா நடக்கும் யாரா.. இதோ உங்க கல்யாணம் இப்ப நடந்து முடிஞ்சிருச்சு.. அதே மாதிரி நீங்க கணவன் மனைவியா ஒரு நல்ல தம்பதியாகவும் வாழ ஆரம்பிப்பீங்க.. இனி நான் உன் முன்னாடி வந்தா உனக்கு தான் கஷ்டமா இருக்கும். அதனால நான் போறேன் யாரா.. நீ ஆரோனை பத்திரமா பாத்துக்கோ.. கூடிய சீக்கிரமே உங்க கைகளில் தவழ்றதுக்கு உங்க குழந்தையா நான் வருவேன்..” என்ற ரீனா அவளை வாழ்த்தி விட்டு இனி ஆரோன் ஒரு நல்ல வாழ்க்கை வாழ்வான் என்ற மன நிம்மதியில் அங்கிருந்து ஒரேயடியாக மறைந்து விட்டாள் ரீனா.

இங்கு ஆரோனோ வீட்டில் இருந்து கிளம்பியவன், நேராக அந்த நான்கு தடியர்களையும் அடைத்து வைத்திருந்த இடத்திற்கு வந்து சேர்ந்தான்.

“டேய் ஷாம்.. எங்கடா அவங்க..”என்று கேட்டவாறே உள்ளே வர, ஷாமோ அவர்கள் இருந்த அறையை காட்டினான்.

அந்த நான்கு பேரையும் அடி அடி என்று வெளுத்து விட்டு கயிறு வைத்துக் கட்டி போட்டிருந்தான்.

அவர்கள் முன்னால் வந்த ஆரோன் ஒரு நாற்காலியை எடுத்துப் போட்டு அமர்ந்தவன், கால் மேல் காலை போட்டுக் கொண்டு,

“டேய் உங்க பாஸ் யாரு..? எங்க இருக்கான்.. எனக்கு எல்லா டீடெயில்ஸும் இப்பவே வேணும்..” என்று உறுமினான்.

அதற்கு அந்த நால்வரிடமும் இருந்து எந்த பதிலும் வரவில்லை.

மௌனம் காத்தார்கள்.

ஆரோனோ அவர்கள் நால்வரையும் மீண்டும் அடி அடி என்று அடிக்க அவர்களிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை.

இவனுக்கோ ஆத்திரம் குறையவே இல்லை.

மீண்டும் மீண்டும் அடிக்க அப்பொழுது அந்த தடியர்களில் ஒருவருடைய போன் அலறியது.

“ஷாம் அந்த போனை எடுடா..” என்று ஆரோன் சொல்ல, ஷாமோ அந்த போனை எடுத்து அவன் கையில் கொடுக்க, அதை ஆன் செய்து ஸ்பீக்கரில் போட்டான் ஆரோன்.

“டேய் என்னடா பண்றீங்க.. ஒரு பொண்ண உங்களால தூக்கிட்டு வர முடியல.. இத்தனை நாளா என்னடா பண்றீங்க..” என்று ஒரு குரல் கேட்க,

ஆரோன் “ஹூ ஆர் யூ..” என்று கம்பீரமாகக் கேட்டான்.

“நீ யாருடா..” என்று கேட்டான் திவாரி.

“முதல்ல நீ யாருன்னு சொல்லு அப்புறம் நான் யாருன்னு சொல்றேன் உன்ன தான் ரொம்ப நாளா தேடிட்டு இருக்கேன்..” என்றான் ஆரோன்.

“ஹாஹஹ..” என்ற சிரிப்பின் சத்தம் அந்தப் பக்கம் கேட்டது.

அதில் கடுப்பேறிய ஆரோன் “டேய்**** முதல்ல நீ யாருன்னு சொல்லுடா..”

“ஹரே ஷாலா நான் யாருன்னு தெரிஞ்சு நீ என்னடா பண்ண போற..”

“ம்ம் பூ போட்டு கும்பிட போறேன்..”என்று இளக்காரமாகக் கூறினான் ஆரோன்.

அதில் கடுப்பேறிய திவாரியோ,

“ஏய் இங்க பாரு.. நான் லால் திவாரி மும்பை சிட்டியோட தாதா டா.. என்கிட்டயே நீ இப்படி பேசுறியா..?” என்று கேட்க,

“ஹாஹாஹா என்ன மும்பை தாதான்னா அது மும்பைக்கு மட்டும் தான் டா.. இங்க நீ வெறும் மை***க்கு சமம்..” என்றான் ஆரோன்.

ஆரோன் வேண்டுமென்றே அவனை கடுப்பேத்திக் கொண்டே இருந்தான். அது சரியாக அவன் இடம் வேலை செய்தது.

“ டேய் பொடியா என்னைப் பத்தி தெரியாம நீ பேசிகிட்டு இருக்க..”

“யாரு உன்னை பத்தி தெரியாம பேசிட்டு இருக்கா.. எனக்கு உன்ன பத்தி எல்லாம் தெரியும் டா.. பொண்ணுங்கள பிளாக் மெயில் பண்ணி அவங்கள சீப்பான தொழிலுக்கு உபயோகப்படுத்துற ஒரு கேவலமானவன் கிட்ட தான் பேசிகிட்டு இருக்கேன்னு.. எனக்கு நல்லாவே தெரியும்..” என்றான் ஆரோன்.

“ஓஓ எல்லாம் தெரியுமா உனக்கு.. ஓகே ஒன்னும் பிரச்சனை இல்ல.. அப்போ டைரக்டா உன் கிட்டயே டீல் பேசுறேன்.. எனக்கு அந்த பொண்ணு வேணும்.. உனக்கு எவ்வளவு பணம் வேணும்னாலும் நான் தரேன்.. எனக்கு அந்த பொண்ணு கண்டிப்பா வேணும்..” என்றான்.

அதைக் கேட்கவும் ஆரோனுக்கு நரம்புகள் புடைத்தன.

“என்ன மீறி அவளை உன்னால நெருங்க முடியாதுடா..?” என்றான் ஆரோன்.

“ஹேய் இங்க பாரு அந்த பொண்ணு எனக்கு கண்டிப்பா வேணும்.. நான் தூக்கி காட்டுறேன் டா..” என்று சவால் விட்டான் திவாரி.

ஆரோனோ “நீ தலைகீழா நின்னாலும் அந்த பொண்ணு உனக்கு கிடைக்க மாட்டா டா. ஓபன் சேலஞ்ச் டா..”

“டேய் பா** இந்த திவாரி கிட்டையே சேலஞ்ச் பண்றியா..? எண்ணி ஒரு வாரத்துக்குள்ள அந்த பொண்ண உன் கண்ணு முன்னால நான் தூக்கி காட்டல நான் லால் திவாரி இல்லடா..” என்றான் திவாரி. “பார்க்கலாம் டா நீ அந்த பொண்ண தூக்குறியா.. இல்ல நீ சொன்னா அதே ஒரு வாரத்துல உன்னோட தலைய நான் எடுக்கிறனான்னு பார்த்திடலாம்..” என்றான் ஆரோன்.

இதை அனைத்தையும் கேட்டுக் கொண்டிருந்த ஷாமோ ஆரோனின் கையைப் பிடிக்க அவனுடைய கையை தட்டி விட்டவன்,

“டேமிட் அவனை என் கையாலேயே குத்திக் கொல்லனும் போல.. ஆத்திரம் வருதுடா..” என்று உறுமினான் ஆரோன்.

“டேய் நீ என்ன பேசுறன்னு புரிஞ்சுதான் பேசுறியா..? அவன்கிட்ட இருந்து அவளைக் காப்பாத்துறதை விட்டுட்டு அவன்கிட்ட ஓபன் சேலஞ்ச் பண்ணிட்டு இருக்க.. சப்போஸ் அவன் சொன்ன மாதிரி பண்ணிட்டான்னா என்னடா பண்ணுவ..? அவன் ரொம்ப பெரிய தாதா டா அவனுக்கு இதெல்லாம் ஒரு சாதாரண விஷயம். அவன்கிட்ட இருந்து யாராவை நீ எப்படி காப்பாத்த போற..” என்றான் ஷாம்.

“டேய் அவன் எவ்வளவு பெரிய தாதாவா இருந்தாலும் அவனுக்கு சாவு என் கையால தான். என்னைக்கு என் கண்ணு முன்னால அவன் வர்றானோ அன்னைக்கு தான் அவனோட கடைசி நாள்.. யாராவை அவன் கிட்ட இருந்து நிச்சயம் நான் காப்பாத்துவேன்.. அப்படி காப்பாத்தலைன்னா என் உயிர் என் உடம்புல இருக்காது. இது என் ரீனா மேல சத்தியம் டா..” என்றவன்,

“இவங்க நாலு பேரையும் சோறு தண்ணி கொடுக்காமல் இந்த குடோன்லையே அடிச்சு வை பசியிலேயே சாகட்டும்..” என்றவன் தன்னுடையக் காரை எடுத்துக் கொண்டு கிளம்பினான்.

போகும் வழியெங்கும் அவனுக்கு ரீனாவின் ஞாபகமே வந்தது.

காலையில் அவன் தந்தை கூறியதும் யாராவின் கழுத்தில் அவன் தாலியை கட்டி விட்டான் தான்.

ஆனால் அது அவன் ரீனாவுக்கு செய்யும் துரோகமாகவே எண்ணியவன்.

மானசீகமாக ரினாவிடம் மன்னிப்பை யாசித்தான்.

“சாரி ரீனா.. அந்த பொண்ணை காப்பாத்துறதற்காகத் தான் அவள் கழுத்துல நான் தாலி கட்டினேன். என்னை மன்னிச்சுடு ரீனா.. ஊர் அறிய மிகப்பிரமாண்டமா ஏற்பாடு பண்ணி சர்வ அலங்காரத்தோட என் பக்கத்துல நீ இருக்க.. முகம் நிறைய சந்தோஷத்தோட அந்த மாங்கல்யத்தை உன் கழுத்துல கட்டணும்னு எவ்வளவு ஆசையா இருந்தேன். ஆனா, இப்போ என் கையால உன் கழுத்துக்கு வரவேண்டிய தாலி இன்னொரு பொண்ணு கழுத்துல ஏறிடுச்சு என்னால இதை ஏத்துக்க முடியல ரீனா. நான் பண்ணுது சரியா..? தப்பா..? எனக்கு தெரியல.. என்ன மன்னிச்சிடு ரீனா.. என்னை மன்னிச்சிடு..” என்று ரீனாவிடம் மன்னிப்பு யாசித்தான் ஆரோன்.

 

ஆரல் -21

 

யாராவோ சிறிது நேரம் கழித்து கீழே வர அப்பொழுது கீழே இருந்த மூவருமே அவளைத் தான் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

பின் அவளும் கீழே வந்தவள் அவர்கள் முன்னே சென்று,

“சார் நீங்க நினைக்கிற மாதிரி நான் தப்பான பொண்ணு எல்லாம் கிடையாது..” என்று ஆரம்பித்தவள், ஆரோனை சந்தித்தது முதல் அவளுக்கு நேர்ந்தப் பிரச்சினை வரை அனைத்தையும் கூறினாள். அதைக் கேட்ட அவர்களுக்கோ அதிர்ச்சியாக தான் இருந்தன.

“இதனால் தான் சார் அவரு என்ன இங்க கூட்டிட்டு வந்தாங்க, இந்த தாலி கூட நீங்க கட்டாயப்படுத்தியதனால் தான் கட்டினாரு..” என்று அவள் சொல்லிக் கொண்டிருக்கும் போதே அவனுடைய அக்கா எழுந்து வந்து அவளை ஆதரவாக அணைத்துக் கொண்டவள்,

“எங்களுக்குத் தெரியும்மா அவன் மனசு புல்லா ரீனா தான் நிறைஞ்சி இருக்கா.. இந்த சந்தர்ப்பத்தை விட்டா அவனை புடிக்க முடியாதுன்னு தான் அப்பா விடாப்பிடியா இந்த கல்யாணத்தை பண்ணி வச்சாரு.. இனி நீ தான் முடிவு எடுக்கணும் இந்த கல்யாணத்தை ஏத்துக்கிட்டு அவனுக்கு ஒரு நல்ல வாழ்க்கையை குடுப்பியாமா..?” என்று கேட்க, அவளோ ஆரோனின் பெற்றோரை பார்க்க அவர்களோ அவள் சரி என்று சொல்லிவிடமாட்டாளா.. என்று ஏக்கமாகப் பார்த்து கொண்டிருந்தனர்.

அவர்களின் பார்வையின் அர்த்தத்தைப் புரிந்தவள்,

“சரி..” என்று ஒத்துக் கொண்டாள்.

அவள் சம்மதம் சொன்னதும் அவர்கள் மூவரின் முகத்திலும் அப்படி ஒரு சந்தோஷம்.

யாரா அவர்களின் அருகே சென்றவள்,

“ஆன்டி, அங்கிள் என்ன ஆசிர்வாதம் பண்ணுங்க..” என்று அவர்களின் காலில் விழ அவர்களுக்கோ மனம் நிறைந்து அவளை ஆசீர்வாதம் செய்தார்கள்.

பின்னர் ஆரோனின் தாய் அவளை தன் அருகே அழைத்து தன் கழுத்தில் போட்டிருந்த ஒரு செயினை கழட்டி அவள் கழுத்தில் போட்டு விட்டு,

“இது என்னோட பரிசு என் மகனோட வாழ்க்கையை அழகாக்க வந்த என்னுடைய மருமகளுக்கு நான் முதல் தடவையா கொடுக்குற பரிசு.. இத எப்பவும் நீ கழட்டவே கூடாது சரியா..”

“சரி ஆன்ட்டி..” என்று புன்னகைத்தாள்.

‘என்னது இது ஆன்ட்டி அங்கிள்னு அத்தைன்னு கூப்பிடு..” என்று சொல்ல,

அவளோ “ஆன்டி நீங்க தப்பா எடுத்துக்கலைன்னா என்னோட சின்ன வயசுலயே என்னோட அம்மா அப்பா என்ன விட்டு போயிட்டாங்க.. நான் உங்களை அம்மா அப்பான்னு கூப்பிடட்டுமா..?” என்று தயக்கமாக கேட்க, அவரோ அவளைத் தன்னோடு அணைத்துக் கொண்டவர்,

“இதுல என்னமா தயக்கம்.. இனி எப்பவுமே நாங்க உனக்கு அப்பா அம்மா தான். இனி உன் மனசுல அந்த கவலை இருக்கவே கூடாது. உனக்கு என்ன வேணுமோ தயங்காம இந்த அம்மாகிட்ட கேட்கலாம் சரியா.. அதே மாதிரி என் பையன் கொஞ்சம் முரடன் கொஞ்சம் பார்த்து நடந்துக்கோம்மா.. சட்டுனு எடுத்து எறிஞ்சி பேசிருவான்.. ஆனா, ரொம்ப பாசக்காரன் ஒருத்தவங்க மேல பாசம் வச்சுட்டான்னா.. அவங்களுக்காக என்ன வேணா செய்வான்..” என்று சொல்ல, அவளோ “புரியுதுமா.. நான் பாத்துக்குறேன். எனக்காக எவ்வளவு அழகான ஒரு குடும்பத்தை கொடுத்திருக்காரு உங்க புள்ள.. அவர நான் நல்லா பார்த்துக்க மாட்டேனா..” என்று கூற, அதன் பிறகு அவர்கள் நால்வரும் சகஜமாக பேசிக் கொண்டிருந்தார்கள்.

திவ்யா கையில் ஒரு புடவையை கொண்டு வந்து யாராவிடம் கொடுத்தவள்,

“இங்கு பாரு யாரா இது என் தம்பி அவனோட ரீனாவுக்காக வாங்குன புடவை.. இத அவளுக்கு கல்யாண பரிச கொடுக்கலாம்னு வச்சிருந்தான். ஆனால், அது நடக்காமலே போயிட்டு இப்போ இத உனக்கு கொடுக்கிறேன். இனி இது உனக்கு தான் சொந்தம். இத கட்டிக்கோ..” என்று கொடுக்க,

அவளோ “ஐயோ அக்கா இது ரீனாவுக்கு வாங்கியதுன்னு சொல்றீங்க. இத நான் கட்டி இருந்தா அவரு கோபப்படுவார் அக்கா எனக்கு வேண்டாமே..” என்று கூற,

“ப்ச்.. அப்படி எல்லாம் சொல்லாதே யாரா.. ரீனா தான் இந்த உலகத்திலேயே இல்லையே ஏதோ அவகிட்ட இருந்து பரிச்சி உன்கிட்ட கொடுத்த மாதிரி பேசுற.. இது உனக்குன்னு தான் எழுதி இருக்கு.. அதை யாரால் மாற்ற முடியும். இன்னைக்கு இந்த புடவையை நீ கட்டிக்கோ அவ்வளவுதான்..” என்றாள் திவ்யா.

யாராவோ வேறு வழியில்லாமல் அந்த புடவையை வாங்கி அழகாகக் கட்டி கூந்தலை பின்னலிட்டு மல்லிகை பூ வைத்து நெற்றி வகுட்டில் குங்குமம் வைத்து அழகாக மிளிர்ந்தாள்.

அவளை இப்பொழுது பார்க்கும் எந்த ஆண்மகனாக இருந்தாலும் அவளை அப்படியே தூக்கிக் கொண்டு போகத்தான் தோன்றும்.

ஆனால் நமது நாயகன் தூக்கிக்கொண்டு போவானா..? அல்லது தூக்கிப்போட்டு எரிவானா..? என்று பொறுத்திருந்து பார்ப்போம். ஏனென்றால் அவனுடைய டிசைன் அப்படி.

யாரா இரவு உணவை அவர்களோடு சாப்பிட்டு முடித்தவள், ஆரோனுடைய அறைக்கு வந்து அந்த கட்டிலில் அமர்ந்தவள், ஒரு நாவல் புத்தகத்தை எடுத்து வாசித்துக் கொண்டிருந்தாள்.

அந்த நாவல் ஸ்ரீ வினிதாவின் “தீண்டாதே தீம்புனலே” கதையை வாசித்துக் கொண்டிருந்தாள்.

அதை வாசித்தவள் “ஓ மை காட் என்னடா இது.. இந்த கதையில் உள்ள ஹீரோவும் இவ்வளவு ரூடா பிகேவ் பண்றாரு.. ஓ மை காட்‌. இப்பவே பயமா இருக்கு.. இன்னும் அவர் வந்தாருன்னா என்ன இந்த கோலத்தில் பார்த்துட்டு என்ன பண்ண காத்திருக்கிறாரோ கடவுளே‌.. எது நடந்தாலும் எனக்கு துணையாக இருங்கப்பா..” என்று மனதில் நினைத்துக் கொண்டாள்.

அவளுடைய நாயகனோ அவள் எதிர்பார்த்தது போலவே வீட்டிற்குள் வந்தவன், நேராகத் தன்னுடைய அறைக்கு வந்து சேர்ந்தான்.

உள்ளே வந்தவன் அவள் இருப்பதையே மறந்து விட்டு நேராக குளியலறைக்குச் சென்று விட்டான். இவளுக்கோ பக் என்று இருந்தது.

“என்னடா நம்மள பாத்தாரா பாக்கலையா.. ஒரு ரியாக்ஷனும் இல்லாம நேரா உள்ள போயிட்டாரு..

இப்போ நான் என்னன்னு எடுத்துக்கிறது கடவுளே..

ஏன் என்னை இப்படி குழப்பத்திலேயே சுத்த விடுற சரி..வெளியே வரட்டும் பார்க்கலாம்..” என்று தனக்குள் பேசியவள், அவனுடைய வருகைக்காக காத்திருந்தாள்.

ஆனால், அவளுடைய கை கால்கள் எல்லாம் கிடுகிடுவென ஆடிக் கொண்டிருந்தன.

அதைச் சேலைக்குள் மறைத்துக் கொண்டாள் மங்கை அவள்.

“இது வேற சும்மா சும்மா ஆடிட்டு இருக்கு.. நானே தைரியமா இருக்கிற மாதிரி காட்டிக்கிட்டாலும் இதுவே என்ன காட்டி கொடுத்திடும் போல இருக்கு..”

குளியலறைக்குள் சென்ற ஆரோனோ குளித்து முடித்து இடுப்பில் ஒரு டவலோடு வெளியே வந்தவன், தன்னுடைய கபோடைத் திறந்து ஒரு டி-ஷர்ட்டை எடுத்து அணிந்து கொண்டு திரும்ப சர்வ அலங்காரத்தோடு நின்ற யாராவைப் பார்த்து அதிர்ந்தான்.

அந்த அழகு அவனை ஒரு நிமிடம் கவர்ந்தது உண்மை.

அவன் ரீனாவுக்காக பார்த்து பார்த்து வாங்கிய புடவை அது.

பல தடவை இந்த புடவையை ரீனா உடுத்தியிருந்தால் எப்படி இருக்கும் என்று கற்பனை செய்து வைத்திருந்தான்.

தேவதையாக மிளிர்வாள் அவனின் காதல் காரிகை.

ஆனால் இப்போது அவனுடைய கற்பனைக்கும் அப்பாற்பட்ட அழகியாக இருந்தாள் யாரா.

தன்னை மறந்து அவளுடைய அழகில் மயங்கி நின்றான்‌ ஒரு நிமிடம்.

ஒரே நிமிடம்தான்.

அவளை மேல் இருந்து கீழாக அவன் பார்வையால் வருடினான்.

அவளுடை முகத்தில் இருந்து பார்வை கழுத்துக்கு கீழே இறங்க அவனுடைய ரசனைப் பார்வை கோவப் பார்வையாக மாறியது.

பின்னர் அவனுடைய கண்கள் சிவப்பேற அவள் அருகே நெருங்கி வந்தவன்,

“இந்த புடவையை உன்னை யார் கட்டிக்க சொன்னது.. முதல்ல கழட்டு..” என்று சொல்ல,

அவளோ “சார் ஒரு நிமிஷம் இருங்க..” என்று ஏதோ சொல்ல வர அவனுக்கோ அந்த புடவை அவள் உடலில் இருப்பது பிடிக்கவில்லை.

அவள் சொல்ல வருவதை காது கொடுத்து கேட்காமல் அவனே அவளுடைய முந்தானையை பிடித்து அவள் உடலில் இருந்த அந்த புடவையை வலுக்கட்டாயமாக உருவ ஆரம்பித்தான்.

அவளோ அந்த முந்தானையை மார்போடு இறுக்கிப்பிடித்தவள், கண்கள் கலங்கியவாறே,

“சார் என்ன பண்றீங்க சார்..” என்று கேட்க, அவனோ அவளுடைய வார்த்தையை காதில் வாங்காதவன் போல் அந்த புடவையை முழுவதும் உருவி எடுத்தான்.

அவளோ ஒரு ஆணின் முன்னால் என்னதான் தனக்கு தாலி கட்டி இருந்தாலும் தான் இப்படி ஒரு கோலத்தில் நிற்பதை விரும்பாதவள், கூனி குறுகிப் போய் நின்றிருந்தாள்.

என்னதான் தாலி கட்டிய கணவனாகவே இருந்தாலும் அவனுடைய இந்த அநாகரிகமான செயலில் முற்றிலுமாக உடைந்து போனாள் யாரா.

அவனோ புடவையை அவிழ்த்தது மட்டுமல்லாமல் அவளுடைய மேல் சட்டையையும் அவிழ்க்கப் போக சட்டென அவனுடையக் கன்னத்தில் “பளார்..” என்று அறைந்தாள் யாரா.

 

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.9 / 5. Vote count: 13

No votes so far! Be the first to rate this post.

1 thought on “ஆரலை அணைக்கும் ஆம்பல் அவளோ”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!