ஆரல் – 22
“ச்சீ.. ஏன் சார் இப்படி இன்டீசன்டா நடந்துக்கிறீங்க.. ஒவ்வொரு தடவையும் உங்க மேல இருக்கிற நம்பிக்கையை நீங்க பறிச்சுக்கிட்டு இருக்கீங்க.. ஒரு பொண்ணு கிட்ட எப்படி நடந்துக்கணும்னு உங்களுக்கு ஏன் சார் புரியவே மாட்டேங்குது..” என்று அழுதவாறே கேட்டாள் யாரா.
ஆரோனுக்கோ அவளுடைய கேள்விகள் சுருக்கென்று தைக்க தன்னுடைய தவறை உணர்ந்து கொண்டவன், சட்டென தன் கையில் உள்ள புடவையால் அவளுடைய உடலை மூடியவன்,
“சாரி சாரி.. யாரா.. இது என்னோட தப்பு தான் என்ன மன்னிச்சிடு.. நீ இந்த சாரி கட்டிருக்கிறதைப் பார்த்ததும் எனக்கு சட்டுன்னு கோவம் வந்துட்டு.. அதான் பைத்தியக்காரத்தனமா இப்படி நடந்துக்கிட்டேன்..” என்று மன்னிப்பை வேண்டினான் ஆரோன்.
யாரா அவனிடம் எதுவும் பேசாமல் புடவையால் முழுவதும் தன்னை சுற்றிக்கொண்டு அங்கிருந்து குளியல் அறைக்குள் சென்றவள் வேறு ஒரு இலகுவான ஆடையை அணிந்துக் கொண்டு அந்த புடவையை நன்கு மடித்து கொண்டு வந்தவள் அவனிடம் நீட்டினாள்.
“சாரி சார்.. இந்த புடவையை எனக்கு திவ்யா அக்கா தான் கொடுத்தாங்க.. நான் அப்பவே அவங்க கிட்ட வேண்டாம்னு சொன்னேன்.. ஆனா அவங்க தான் என்ன கட்டாயப்படுத்தி இதை கட்டிக்க சொன்னாங்க.. வேற வழி இல்லாம தான் நான் கட்டிக்கிட்டேன். இனி ஒரு தடவை நான் அந்த தப்ப பண்ண மாட்டேன்.. என்ன மன்னிச்சிடுங்க.. இந்தாங்க உங்க புடவை.. அப்புறம் என்ன எவ்வளவு சீக்கிரம் இந்த பிரச்சனையில இருந்து என்னை காப்பாத்த முடியுமோ அவ்வளவு சீக்கிரம் காப்பாத்திட்டிங்கன்னா.. உங்களுக்கு ரொம்ப புண்ணியமா போகும்.. நானும் இந்த இடத்தை விட்டு போயிடுவேன்.. ப்ளீஸ் அதுவரைக்கும் என்கிட்ட இப்படி ரூடா நடந்துக்காதீங்க எனக்கு கஷ்டமா இருக்கு சார்..” என்று கண்கள் கலங்க கூறினாள் யாரா.
அவள் கூறுயதைக் கேட்டு அவனுக்கோ ஐயோ வென்றிருந்தது.
தன்னுடைய மடத்தனம் அவனுக்கு புரிந்தாலும் அவளிடம் ஒன்றும் சொல்லாமல் சரி என தலையை மட்டும் ஆட்டினான்.
அவளோ அந்த புடவையை அங்கு உள்ள பெட்டில் வைத்துவிட்டு கீழே சென்று விட்டாள்.
ஆரோனோ அந்தப் புடவையைப் பார்த்தவன் யாராவை ஒரு பார்வைப் பார்த்தான்.
“சாரி யாரா..” என்று முணுமுணுத்தன அவனுடைய உதடுகள்.
யாரா கீழே வரவும் அவளைப் பார்த்த திவ்யாவோ,
“என்ன யாரா.. ஏன் புடவையை மாத்திட்ட..?” என்று கேட்க,
அவளோ “இல்லக்கா மூச்சு முட்டுற மாதிரி இருந்துச்சு.. அதனால தான் மாத்திட்டேன்..” என்று சொன்னாள். அவளுடைய முகத்தைப் பார்த்த திவ்யாவோ,
“என்னாச்சு யாரா ..ஏதாவது சொன்னானா..” என்று கேட்க, அவளோ “ச்ச ச்ச.. அப்படி எல்லாம் இல்ல அக்கா அவர் எதுவும் சொல்லல.. நான் தான் மாத்திக்கிட்டேன்..” என்று தலையை குனிந்தவாறே சொல்ல,
அவளுடைய தாடையைப் பிடித்து தலையை உயர்த்திய திவ்யாவோ அவள் கண்கள் கலங்கி இருப்பதைப் பார்த்து “எனக்கு புரியுது யாரா.. அவன் உன்னை ஏதோ சொல்லி காயப்படுத்தி இருக்கான்.. அதுக்காக வருத்தப்படாதடா..” என்று சொல்ல அவளுக்கோ நின்ற கண்ணீர் அருவியாக வழிய ஆரம்பித்தன.
உடனே திவ்யாவை அணைத்துக் கொண்டவள்,
“அக்கா அவர் ரொம்ப மோசமாக நடந்துக்கிறாரு.. எனக்கு ஏன்டா அந்தப் புடவையை கட்டிக்கிட்டோம்ன்னு ஆயிடுச்சு.. நீங்க சொல்ற மாதிரி என்னால அவர் வாழ்க்கையை மாற்ற முடியுமான்னு எனக்கு தோணலக்கா.. அவரு ரீனா மேல பைத்தியமா இருக்காரு. அப்படிப்பட்டவரு என்னை எப்படி ஏத்துப்பாரு..” என்று தன்னுடைய ஆதங்கத்தை அவள் கூற, திவ்யாவோ அவளுடைய முதுகைத் தடவியவாறே அவளைத் தேற்றியவள்,
“இங்கு பாரு யாரா.. நீ எதையும் நெனச்சு கவலைப்படாதே, நான் உனக்கு துணையா இருக்கேன் சரியா.. சின்ன பிள்ளை மாதிரி இப்படி அழுகாத முதல்ல கண்ணை துடை..” என்றவள் அவளை தன்னிடம் இருந்து பிரித்து அவளுடையக் கண்களை துடைத்து விட்டவள்,
“சரி வா நேரம் ஆகுது சாப்பிடலாம்.. அவனை கூப்பிடு..” என்று கூற, “ஐயோ அக்கா ஆள விடுங்க.. இனி அவர் பக்கமே நான் போக மாட்டேன்.. நீங்களாட்சி உங்க தம்பியாச்சு நீங்களே போய் அவரை சாப்பிட கூப்பிடுங்க..” என்றவள்
அங்கிருந்து சென்று அவளுடைய மாமியாரின் அருகில் சென்று விட்டாள்.
திவ்யாவோ சிரித்தவள் தன்னுடைய தம்பியை அழைத்து வந்து சாப்பிட அமர்ந்தாள்.
அப்பொழுது ஆரோனின் தந்தையும் வந்து அங்கு அமர சென்பகம் அனைவருக்கும் பரிமாறிக் கொண்டிருந்தார்.
யாராவும் அவருக்குத் தேவையான உதவிகளை செய்து கொண்டிருந்தாள்.
இவனுடைய கண்களோ யாராவையே பார்த்துக் கொண்டிருந்தன.
அவளோ இவனைக் கண்டு கொள்ளவே இல்லை.
ஏன் இவன் பக்கம் திரும்பி பார்க்க கூட இல்லை.
தன்னுடைய வேலையை மட்டுமே செய்து கொண்டிருந்தாள்.
ஆரோனின் தந்தையோ ஆரோனை பார்த்தவர் எதுவும் சொல்லாமல் யாராவை அழைத்து தனக்கு அருகில் அமருமாறு கூற,
அவளோ “அப்பா நான் அம்மா கூட சேர்ந்து சாப்பிடுகிறேன்.. நீங்க சாப்பிடுங்க..” என்று சொல்ல ஆரோனோ திடுக்கிட்டு அவளைப் பார்த்தான்.
‘என்ன அப்பா அம்மாவா இது எப்பத்தில இருந்து..’ என்று ஆச்சரியமாக பார்த்தான். ஆனால் எதுவும் சொல்லவில்லை.
பின்பு அவனுடைய தந்தை திவ்யாவிடம்,
“திவ்யா மாப்பிள்ளை எங்க இன்னும் காணோம்.. தருணையும் கூட்டிட்டு போனாரு.. ரெண்டு பேரும் இன்னும் வரலையே எங்க போனாங்க..” என்று கேட்க,
திவ்யாவோ “அப்பா அவரு அவங்க வீட்டுக்கு போய்ருக்காருப்பா.. தருண் அங்கேயே தூங்கிட்டான் போல.. இன்னும் அவனை எழுப்பி கூட்டிட்டு வந்தா ராத்திரி தூங்காம அடம்பிடிப்பான்னு அவரும் அங்கேயே இருக்கிறதா சொல்லிட்டாரு.. அத்தை பாத்துக்குவாங்க.. காலைல வருவாங்க.. நீங்க சாப்பிடுங்கப்பா..” என்று சொன்னாள்.
உடனே ஆரோனோ “அட ஆமா இல்ல.. நான் எப்படி தருண் குட்டியை மறந்தேன்..” என்று அவன் கேட்க,
அதற்கு அவனுடைய தந்தையோ “ம்கூம் எங்களை எல்லாம் ஞாபகம் இருந்தா தானே ஆச்சரியம்.. இதுல நீ மறந்ததுல என்ன ஆச்சரியம் இருக்கு..” என்று அவனிடம் வம்பு இழுக்க அவனோ அவரை முறைத்துப் பார்த்து அவனுடைய அம்மாவிடம்,
“அம்மா உங்க வீட்டுக்காரர கொஞ்ச நேரம் சும்மா இருக்க சொல்லுங்க..” என்று சொல்ல,
அதற்கு அவரோ “நான் எப்படி இருக்கணும்னு நீ ஒன்னும் சொல்ல வேண்டாம்.. நீ முதல்ல ஒழுங்கா இரு..” என்று கூற அவனோ இருக்கையை விட்டு எழுந்திருக்க போனான்.
சட்டென அவனுடைய அன்னையோ அவனைப் பிடித்து அமர்த்தியவர் “என்னங்க கொஞ்ச நேரம் சும்மா இருங்களேன்.. அவன் முதல்ல சாப்பிடட்டும்..” என்று அவரைக் கடிந்தவர் “நீ சாப்பிடு கண்ணா.. அவர் அப்படித்தான்னு உனக்கு தெரியும் தானே.. அப்புறம் ஏன் அவர் பேச்சை காதுல வாங்குற..” என்று கூறியவாறே அவனுக்கு இட்லியை எடுத்து தட்டில் வைத்தவர்,
“சாம்பார் ஊத்தவா.. சட்னி ஊத்தவா..” என்று கேட்க அவனோ அவனுடைய அன்னையை முறைக்க,
“இதுக்கு ஏன்டா இப்படி பாசமா பார்க்கிற.. சட்னி ஊத்தவா சாம்பார் ஊத்தவான்னு தானே கேட்டேன்.. சரி சரி விடு ரெண்டையும் ஊத்துறேன்..” என்றவர் சட்டினியும் சாம்பாரையும் அவனுடையத் தட்டில் ஊற்றிவிட்டு அவனைச் சாப்பிடுமாறு கூற, அவனும் அமைதியாக சாப்பிட்டான்.
பல நாள் கழித்து தங்களுடைய மகன் தங்கள் முன்னே அமர்ந்து சாப்பிடுவதை ஆச்சரியமாக பார்த்துக் கொண்டிருந்தார்கள் அவருடைய பெற்றோர்கள்.
“அம்மா நாளைக்கு ஹோலி பண்டிகை தானே நாம பாட்டி வீட்டுக்கு போறோம் தானே..” என்று திவ்யா கேட்க,
அவரும் “இதுல என்னம்மா சந்தேகம் நம்ம எப்பவும் போறது தானே.. நாளைக்கு போகத்தான் போறோம்..” என்றார்.
யாராவோ உடனே “ஐ அப்போ நாளைக்கு நம்ம ஹோலி பண்டிகை கொண்டாட போறோமா..” என்று சந்தோஷமாக கேட்க,
திவ்யா “ஆமா யாரா எங்க பாட்டி ஊர்ல ஹோலி பண்டிகையை சிறப்பா கொண்டாடுவாங்க.. அதனால நாங்க வருஷ வருஷம் அங்க போயிடுவோம்.. ஹோலி பண்டிகை முடிஞ்சதும் அங்க கோவில் திருவிழா ஒரு வாரம் நடக்கும்.. ரொம்ப ஜாலியா இருக்கும் இந்த வருஷம் நீயும் எங்க கூட வா எப்படி இருக்குன்னு பாரு ரொம்ப என்ஜாய் பண்ணுவ..” என்று சொல்ல,
யாராவோ “நிஜமாவா அக்கா அப்ப நான் கண்டிப்பா வருவேன்..” என்றாள்.
ஆரோனோ “யாரா நீ எங்கேயும் போகப் போறது கிடையாது..” என்றான்.
அவன் அப்படி சொல்லவும் அவளுக்கோ இருந்த சந்தோஷம் அத்தனையும் மொத்தமாக வடிந்தது. அவர்கள் அனைவரையும் ஏக்கமாக ஒரு பார்வைப் பார்த்தாள் யாரா.
ஆரோனோ எதுவும் நடவாதது
போல சாப்பாடு சாப்பிட்டுக் கொண்டிருந்தான்.
Super sis