ஆரல் – 23
மும்பையில் லால் திவாரியின் வீட்டில்.
தன்னுடைய பூஜை அறையில் பூஜையை முடித்துவிட்டு வெளியே வந்த திவாரியை காண அங்கு ஹாலில் பத்திற்க்கும் மேற்பட்ட ரவுடிகள் தங்கள் கைகளை கட்டி கொண்டு அவன் வருகைக்காக காத்திருந்தனர்.
அவனும் அவர்கள் அருகில் வந்தவன்,
“டேய் அந்த மதராசிக்காரன் என்கிட்ட சேலஞ்ச் பண்ணி இருக்கான். இன்னும் ஒரு வாரத்துக்குள்ள அந்த பொண்ணை நான் தூக்கியாகணும்..இல்லைனா நான் பண்ற தொழிலுக்கே அது அவமானம் இப்பவே நீங்க எல்லாரும் புறப்படுங்க.. அந்த பொண்ணு, அந்த மதராசிக்காரன் ரெண்டு பேரும் எங்க இருக்காங்கன்னு எனக்குச் சொல்லுங்க.. அதுக்கப்புறம் நானே அங்கு கிளம்பி வந்து அவனை கொன்னுட்டு அந்த பொண்ணைத் தூக்குறேன்.. அப்பதான் இந்த திவாரி யாருன்னு அவனுக்குப் புரியும்..” என்றான் திவாரி.
அவனுடைய அடியாட்களும் “டி கே பையா ஆப் டென்ஷன் மத் கையே நாங்க பார்த்துக்கிறோம்..” என்று அங்கிருந்து ஒரு படையே கிளம்பியது யாராவையும் ஆரோனையும் தேடி.
“அரே சாலா காத்திருடா இந்த திவாரி கையில தான் உன் சாவு இருக்கும்..”
***
‘நீ எங்கேயும் போகப் போறது இல்ல..’ என்று கூறி விட்டு ஆரோன் தனது உணவை உண்டு கொண்டு இருக்க யாராவுடைய மலர்ந்த முகமோ சட்டென வாடியது.
அவனுடைய கூற்றில் பாவம் போல் மற்றவரின் முகத்தையும் அவள் ஏறிட்டு பார்க்க, அவர்களோ தங்களுடைய கண்களால் தாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என்று சமாதானம் கூறினார்கள்.
ஆரோனின் தந்தையோ “டேய் அந்த பொண்ண எதுக்கு வரக்கூடாதுனு சொல்ற..?” என்று கேட்க,
“அது என் பிரச்சனை நீங்க ஏன் அதுல தலையிடுறீங்க.. அவ வரமாட்டாள்..” என்றான் ஆரோன்.
“டேய் அந்த பொண்ணு எங்க கிட்ட எல்லா விஷயத்தையும் சொல்லிட்டா.. நாங்க இத்தனை பேர் இருக்கும்போது அவங்க எப்படிடா அவளை கடத்த முடியும்.. நம்ம ஊர பத்தி தான் உனக்கு நல்லா தெரியுமே தப்பான எண்ணத்துல வர்றவன் ஒருத்தன் கூட உயிரோட போக முடியாது.. அப்படி இருக்கும்போது அவளுக்கு பாதுகாப்புக்கு எந்த பஞ்சமும் கிடையாது.. அதனால அவள் வரட்டும்..” என்றார்.
“ அதோட ஹோலி பண்டிகை முடிஞ்சதும் நம்ம ஊர் திருவிழா வேற அங்கு ஆரம்பிக்க போது நம்ம எல்லாருமே அங்க தான் போவோம். அப்படி இருக்கும்போது இந்த பொண்ணு மட்டும் இங்க எப்படிடா இருக்க முடியும்..” என்று கேட்க, அவனோ அதற்கு மேல் எதுவும் சொல்லாமல் “சரி உங்க இஷ்டம்..” என்று கூற,
அவரோ தன்னுடைய மனைவியிடம் “இங்க பாருமா உன் மகன் கிட்ட சொல்லிரு.. அந்த பொண்ணு மட்டும் இல்ல.. அவனும் நம்ம கூட வரனும்னு..” என்று சொல்ல, அங்கிருந்து நகர்ந்த ஆரோனோ சட்டென இவர்கள் புறம் திரும்பியவன் “முடியாது..” என்று கூறினான்.
உடனே அவனுடைய தந்தையோ “இங்க பாருடா நாங்க சொல்றபடி கேட்டா.. இந்த வீட்ல இருக்கலாம் இல்லேன்னா இந்த பொண்ண கூட்டிட்டு இப்பவே நீ வெளிய போயிடு..” என்று சொல்ல அவனோ தன்னுடைய பற்களைக் கடித்தவன், “என்ன என்னை பிளாக்மெயில் பண்றீங்களா..?” என்று கேட்க,
“நான் ஒன்னும் உன்னை பிளாக்மெயில் பண்ணல.. நீ அந்த பொண்ண பாதுகாக்க தானே நினைக்கிற.. அப்புறம் அந்த பொண்ணு எங்க கூட வந்ததுக்கு அப்புறம் நீ தனியா இங்க என்ன பண்ண போற அவ கூடவே இருந்து அவளை எப்பவும் பாதுகாக்கலாம்ல..” என்று சொல்ல அவனும் யோசித்துப் பார்த்தவன், “சரி வந்து தொலையிறேன்..” என்று தன்னுடைய அறைக்குச் சென்று விட்டான்.
இங்கு யாராவுக்கோ மீண்டும் சந்தோஷம் அலை மோதியது.
உடனே திவ்யாவை அணைத்துக் கொண்டவள்,
“ஐஐ அக்கா.. நல்லவேளை அவர் சம்மதிச்சிட்டாரு எங்கே கடைசி வரைக்கும் விட மாட்டாரோன்னு நினைச்சு ரொம்ப பயந்துட்டேன் நல்ல வேலை எப்படியோ சம்மதிச்சிட்டாரு அப்போ நாளையிலிருந்து பங்க்ஷன் முடியற வரைக்கும் செம ஜாலி தான்..” என்று சொல்லி குதித்தாள்.
அவளுடைய சந்தோஷத்தை பார்த்த மற்ற மூவருடைய முகத்திலோ புன்னகை அரும்பின.
இரவு உணவை உண்டு விட்டு தன்னுடைய அறைக்கு வந்தாள் யாரா.
அங்கு அவ்வளவு பெரிய படுக்கையில் யாருக்கும் இடம் தர மாட்டேன் என்பது போல கை கால்களை விரித்தபடி படுத்து உறங்கிக் கொண்டிருந்தான் ஆரோன்.
அதை பார்த்தவளுக்கோ சற்று சிரிப்பு கூட எட்டிப் பார்த்தது.
“சரியான மொசடு எவ்வளவு கோபம் வருது இவருக்கு.. ம்ம் நான் இவரை எப்படி சமாளிக்க போறேன்னு தெரியல..” என்று முனுமுனுத்தவாறே அங்கு உள்ள சோபாவில் தலையணையைப் போட்டு படுத்துக் கொண்டாள்.
“மாமா மாமா மாமா எழுந்திரு மாமா..” என்று படுக்கையில் குப்புற படுத்து கிடந்தவனின் முதுகில் சவாரி போட்டு படுத்துக்கொண்டு அவனுடைய காதில் கீச்சுட்டது ஒரு குட்டி குரல்.
அந்த சத்தத்தில் அசைந்தவன் திரும்பிப் படுக்க “ஐயோ மாமா திரும்பிடாதே.. நான் விழுந்துருவேன்..” என்று சொல்ல புன்னகைத்தவாறே தன் முதுகுக்கு பின்னால் கையைப் போட்டு அந்த குட்டியைப் பிடித்துக் கொண்டு அவனை கிழே விழாதவாறு தன் உடலை திருப்பியவன் அப்படியே அந்த குட்டி பஞ்சுக் குவியலைத் தன்னுடைய நெஞ்சில் போட்டுக் கொண்டு சிரித்தவாறே அவனுடன் பேசத் தொடங்கினான்.
“ ஹேய் தருண் குட்டி எப்ப வந்தீங்க..” என்று கேட்க,
“நானா இப்பதான் நானும், அப்பாவும் வந்தோம்.. வந்ததும் அம்மா நீ வந்திருக்கிறதா சொன்னாங்க.. அதான் நேரா உன்ன பார்க்க வந்துட்டேன்..” என்றான் தருண்.
“ஓஓ அப்படியா சரி நீங்க கொஞ்ச நேரம் இருங்க மாமா போய் ரெடியாகிட்டு வந்துடுறேன்..” என்றவன் தருணுடைய கன்னத்தில் முத்தம் வைக்க அவனோ தன்னுடைய குட்டி கையால் கன்னத்தை துடைத்து விட்டு,
“ஐயோ மாமா டர்ட்டி கிஸ்.. போ மாமா..” என்று சினுங்க அவனோ கலகலவென்று சிரித்தவன், “அப்படியா டர்ட்டி கிஸ்ஸா இரு இரு உன்ன டர்ட்டி கிஸ்ஸாலையே குளிப்பாட்டுறேன்..” என்று எழுந்தவன் அவனைத் தூக்கப் போக அந்த வாண்டு குட்டியோ ஆரோன் அவன் அருகில் வருவதற்குள் கட்டிலில் இருந்து கீழே இறங்கியவன் அவனுக்கு தன்னுடைய இரண்டு கைகளையும் காதில் வைத்து அவனை கிண்டல் செய்தவாறே கீழே ஓடி விட்டான்.
ஆரோனோ புன்னகைத்தவாறே குளியல் அறைக்குள் நுழையும் சமயம் குளியலறை உள்ளே இருந்து யாரா வெளியே வந்தாள்.
அவளைப் பார்த்ததும் சிரித்த முகத்தை மறைத்து வைத்துக்கொண்டு அவளைக் கடந்து குளியலறைக்குள் சென்று விட்டான்.
யாராவோ அதை கண்டு கொள்ளாது பாட்டி ஊருக்கு கிளம்ப எந்த ஆடையை உடுத்தலாம் என்று யோசித்துக் கொண்டிருக்க அப்பொழுது அவர்களது அறைக்குள் வந்தாள் திவ்யா.
“யாரா இந்தா இந்த டிரஸ் போட்டுக்கோ..” என்று ஒரு வெள்ளை நிறத்தில் சிகப்பு கற்கள் பதிக்கப்பட்ட ஒரு புடவையை அவள் கையில் கொடுத்தாள்.
அதைப் பார்த்த யாரோவோ,
“அக்கா தயவு செஞ்சி எனக்கு இந்த புடவை வேண்டாம்..
நான் வேற ஏதாவது டிரஸ் போட்டுக்குறேன்..” என்று சொல்ல அவளுடைய கூற்றில் திவ்யா சிரித்தவள்,
“ அட மக்கு இது ஒன்னும் அவன் எடுத்து வச்ச புடவை கிடையாது. இது அம்மா கொடுத்து விட்டாங்க.. இன்னைக்கு ஹோலி பண்டிகைல்ல அதனால இதை கட்டிக்கோ.. அவன் எதுவும் சொல்ல மாட்டான் சரியா..” என்றவள் கையில் ஆடையை கொடுத்துவிட்டு அங்கிருந்து கிளம்பி விட்டாள் .
யாரா அந்த புடவையை கையில் எடுத்தவள், அதனுடைய அழகை கண்டு அவளுடைய வதனத்தில் புன்னகை அரும்பின.
பின்னர் குளியலறையில் இருந்து வெளியே வந்த ஆரோன் ஆடையை மாற்றிக் கொண்டு வெளியே சென்று விட, இவளோ கதவை சாத்திவிட்டு அந்த புடவையை உடுத்தினாள்.
ஆரோன் கீழே வருவதைப் பார்த்த அவனுடைய அம்மாவோ அவனை தன் அருகில் அழைத்து அவனுக்கு என எடுத்து வைத்த ஆடையை அவன் கையில் கொடுக்க,
“அம்மா இந்த டிரஸ்ஸே எனக்கு போதும்..” என்று அவன் சொல்ல, “ஆரோன் அம்மாவுக்காக டா கண்ணா போட்டுக்கோயேன்..” என்று சொல்ல,
“சரி..” என்று அந்த ஆடையை வாங்கிக்கொண்டு தன்னுடைய அறைக்கதவைத் திறந்து உள்ளே வர யாராவோ திடுக்கிட்டு திரும்பினாள். அவள் கதவைச் சரியாக பூட்டி விட்டேன் என்று நினைத்து ஆடையை மாற்றிக் கொண்டிருந்தாள்.
ஆனால் அதுவோ சரியாக லாக் ஆகாததால் அவன் திறந்ததும் சட்டென திறந்துக் கொண்டது.
அவன் உள்ளே வரும்பொழுது அவளோ பிளவுஸில் இருந்த ரோப்பை நாட் போட முயன்று கொண்டிருக்க இவனோ கதவைத் திறக்கவும் சட்டென இவன் புறம் திரும்பினாள்.
அவனோ அவள் ஆடை மாற்றிக் கொண்டிருக்கிறதைப் பார்க்காமல் வந்த தனது மடத்தனத்தை நொந்து கொண்டவன்,
“சாரி பார்க்காம வந்துட்டேன்..” உடனே யாராவோ,
“இல்ல சார் நான் டிரஸ் மாத்திட்டேன்.. நீங்க வாங்க..” என்று கூற அவனும் உள்ளே வந்தவன் தன்னுடைய ஆடையை மாற்றிக் கொண்டு அங்கிருந்துச் செல்ல போக அவளோ அங்கேயே அமர்ந்திருந்தாள்.
பின்னர் ஆரோன் அவளை கேள்வியாக பார்த்து,
‘ஆடை மாற்றிவிட்டேன் என்றாள் ஆனால் தான் ஆடை மாற்றியும் இன்னும் இவள் ஏன் இங்கையே அமர்ந்திருக்காள்..?’ என்று யோசித்தவன்,
“நீ வரலையா..? என்று கேட்க, அவளோ தலையை குனிந்து கொண்டே,
“இல்ல சார் நீங்க போங்க நான் வரேன்..” என்றாள்.
இவனோ புருவங்கள் முடிச்சுட்டவாறே,
“என்னாச்சு உனக்கு ஏன் ஒரு மாதிரி இருக்கிற..?” என்று கேட்க,
அவளோ “இல்ல சார் பிளவுஸ்ல நாட் போட முடியல அதான் நீங்க போங்க நான் அப்புறம் வரேன்..” என்று சொல்ல அவனோ,
“சரி திரும்பு நான் போட்டு விடுறேன்..” என்று அவன் சாதாரணமாக கூற, அவளோ திடுக்கிட்டு அவனை நிமிர்ந்து பார்த்தவள்,
“இல்ல வேணாம் சார்.. நானே பார்த்துக்கிறேன் நீங்க போங்க..” என்று கூறினாள்.
“இங்க பாரு யாரா நாட் தான போடணும்.. அதை நானே போட்டு விடுறேன் திரும்பி நில்லு..” என்றவன் அவள் அருகே வர அவளோ,
“இல்ல சார் வேண்டாம்..” என்று பின்னால் நகர்ந்தாள்.
அவனோ விடாமல் அவள் அருகில் வர அவன் நாட் போடாமல் இங்கிருந்து செல்ல மாட்டான் என்று நினைத்தவள்,
“சரி சார் ஆனால் நான் திரும்ப மாட்டேன்.. நீங்க பார்க்காம அப்படியே போட்டு விடனும்..” என்று சொன்னாள்.
தன்னுடைய புருவங்களைச் சுருக்கி அவளை விசித்திரமாக பார்த்தான். “இ.. இல்ல எனக்கு கூ.. கூச்சமா இருக்கு இப்படி போடுறதா இருந்தா ஓகே போட்டு விடுங்க இல்லனா நானே பார்த்துக்கிறேன்..” என்றாள் யாரா.
அவனோ “சரி இங்க கிட்ட வா..” என்று அவளைத் தன் முன்னால் தன்னைப் பார்க்கும்படி நிற்க வைத்தவன் தன்னுடைய கைகளை அவளின் முதுகுப் புறமாக கொண்டு வந்து நாட்டை போட அவளோ அவனுடைய கண்களைத் தான் பார்த்துக் கொண்டிருந்தாள்.
பாவம் அவளோ அவன் தன் வெற்று முதுகை பார்க்க கூடாது என்று நினைத்து சொல்ல, அந்த கள்வனோ அவளுக்குப் பின்புறம் இருந்த கண்ணாடியில் தெரிந்த அவளுடைய வெற்று முதுகை லட்சையின்றி பார்த்துக் கொண்டே நாட்டை போட்டு விட்டான்.
அப்பொழுது அவனுடைய கரங்கள் அவளுடைய வெற்று முதுகை உரச பெண்ணவளோ வெட்கிச் சிவந்தாள்.
அவளுடைய கன்னங்கள் சிவப்பேற அதைக் கண்ட ஆரோனோ தன்னையும் மீறி மெல்ல குனிந்து அவளுடைய கழுத்தில் முத்தம் பதித்தான்.
Super sis 💞