ஆரலை அணைக்கும் ஆம்பல் அவளோ

4.8
(11)

ஆரல் – 27

 

ஊர் முழுக்க வாழைத் தோரணங்கள், வீடு முழுவதும் சொந்தங்கள் என அந்த ஊரே ஒரு வாரமாக ஜொலித்துக் கொண்டிருந்தன.

இன்று கடைசி நாள் திருவிழா என்பதால் அணைவருமே மிகுந்த ஆனந்தத் தோடு கோவிலுக்கு மதிய பூஜையைக் காண சென்று கொண்டிருந்தனர்.

இங்கு பங்கஜம் பாட்டியோ தங்கள் வாரிசுகள் அனைவரையும் அழைத்துக் கொண்டிருந்தார்.

அவரின் குரல் கேட்டு அனைவரும் அங்கு அசம்பல் ஆக, ஆரோன் மட்டும் இன்னும் கிழே வரவில்லை.

“சென்பா எங்க என் பேரனை காணோம்..”

“அம்மாடி யாரா ஆரோன் எங்கமா..?”

என்று சென்பகம் அவளிடம் கேட்க, அவளோ என்ன சொல்வது என்று தெரியாமல் முழித்துக் கொண்டிருந்தாள்.

அவள் என்ன சொல்வாள். அன்று கோலிப் பண்டிகையில் அவனுடன் ஒன்றாக இருந்ததிலிருந்து அவன் முகத்தை அவள் பார்க்கவே இல்லை.

அவன் தன்னிடம் எதுவும் கேட்டு விடுவானோ என்று பயந்தே இத்தனை நாட்களும் அவனைத் தவிர மற்ற எல்லோருடனும் சுற்றிக் கொண்டு இருந்தாள்.

இவள் மட்டுமா இப்படி என்றால் ஆரோன் இவளுக்கு மேல்.

அவனுக்கோ குற்ற உணர்ச்சியாக இருந்தது.

அவளை எக்காரணம் கொண்டும் தொடமாட்டேன் என்று கூறியவன், இப்பொழுது அவளுடைய அனுமதி இல்லாமல் முழுவதுமாக அவளை எடுத்துக் கொண்டதனால் அவன் மனம் வேதனை அடைந்தது.

எந்த முகத்தை வைத்துக்கொண்டு அவளைப் பார்ப்பது என்று நினைத்தவன், அவள் முன்னால் வரவே இல்லை.

அவள் அருகில் இருந்தால் அவன் மனம் தடுமாறுவதை அவனால் தடுக்கவும் முடியவில்லை.

அதனால் ஷாமுடன் எங்கேயாவது வெளியே கிளம்பி விடுவான்.

அவள் தூங்கிய பிறகு வருபவன் அவள் எழுவதற்கு முன்னரே கிளம்பி விடுவான்.

இப்படி கண்ணாமூச்சி ஆட்டம் ஆடிக் கொண்டிருக்க அவர்களுடைய ஆட்டத்தை முடித்து வைக்கும் நாளும் வந்தது.

செண்பகம் தன் மருமகளிடம் ஆரோனைப் பற்றி கேட்க அவளோ திக்கி திணறி ஏதோ கூற வர அதற்குள் பங்கஜம் பாட்டியோ அவளுடைய கையில் அவளுக்கும் ஆரோனுக்கும் என எடுத்து வைத்த பட்டுப்புடவை பட்டு வேஷ்டியை கையில் கொடுத்தவர்,

“இந்தாம்மா இது உங்க ரெண்டு பேருக்கும்.. சீக்கிரம் ரெடி ஆகிட்டு வாங்க..” என்று அனுப்பி வைத்தார். அவளும் அதை வாங்கிக் கொண்டு தனது அறைக்குச் சென்றவள், அவன் குளிக்கும் சத்தம் கேட்க எப்படி அவரிடம் பேசுவது என்று தயங்கிக் கொண்டு நிற்க, கதவைத் திறந்து கொண்டு இடுப்பில் துண்டைக் கட்டியவாறே வெளியே வந்தான் ஆரோன்.

அவனை அந்த கோலத்தில் கண்டதும் அவளுக்கோ படப்படவென்று வந்தது.

சொல்ல வந்த வார்த்தையையும் சொல்ல முடியாது போக, தலையை குனிந்தவாறே வேறு பக்கம் திரும்பி நின்று கொண்டாள் .

அதை கவனித்தவாறே அவள் அருகில் வந்தவன், அவளை கண்டுகொள்ளாமல் அங்கு பெட்டில் இருந்த அவனுக்கு என்று பாட்டி கொடுத்த ஆடையை எடுத்துக் கொண்டு அதை உடுத்தி விட்டு கீழே சென்று விட்டான்.

இவளோ கதவு திறக்கும் சத்தம் கேட்டு திரும்பியவள், அப்பொழுதுதான் அவன் இங்கிருந்து கிளம்பி விட்டான் என்று நினைத்து நிம்மதியாக பெருமூச்சு விட்டவள், அவளுக்கான உடையை உடுத்திக் கொண்டு கீழே வந்தாள். அவள் கீழே வந்ததும் யாருக்கும் தெரியாமல் ஆரோனைத் தேட அவனோ அங்கு இருக்கவில்லை.

ஷாமுடன் கோவிலுக்கு செல்வதாகக் கூறிவிட்டான்.

அவனைத் தேடி ஏமாற்றமே மிஞ்ச தலையை குனிந்தவாறே நின்று கொண்டாள்.

பின்பு அனைவரும் புறப்பட்டு கோவிலுக்குச் சென்றார்கள்.

அங்கு உள்ள அர்ச்சகர் இவர்கள் வரவிற்காகவே காத்திருந்தவர் போல இவர்கள் அனைவரும் உள்ளே வரவும் வரவேற்றவர் தீபம் காட்ட ஆரம்பித்தார்.

அனைவரும் கண்களை மூடி கைகூப்பி இறைவனை வழிபட இவளோ,

“அம்மா நான் சின்ன வயசுல இருந்தே அனாதையா வளர்ந்தவள், இப்போ இவ்ளோ பெரிய குடும்பத்துல நான் இருக்கேன். இவங்கள எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு இவங்க காட்ற பாசம் அக்கறை என்ன ரொம்ப பாதிக்குது. கடைசி வரைக்கும் இவங்க கூடவே இருக்கணும்னு ஆசைப்படறேன். அப்புறம் ஆரோன் அவர் கூடவே எப்பவும் இருக்கனும் போல இருக்கு.. நா எப்போ இருந்து இப்படி மாறுனேன்னு எனக்கே தெரியல..” என்றவள் தன்னை மறந்து கடவுளிடம் வேண்டிக் கொண்டு இருக்க,

“அம்மாடி யாரா அய்யர் தீபாராதனை காமிக்கிறாரு பாரு எடுத்துக்கோ..” என்று சென்பகம் சொல்ல கண்ணைத் திறந்து அவரிடம் தலையை ஆட்டிவிட்டு தீபாராதனை எடுத்துக்கொண்டாள்.

மற்ற அனைவரும் தீபாராதனை எடுத்து முடிக்க உள்ளே அம்மன் காலடில் இருந்த ஒரு தாம்பூலத்தை கொண்டு வந்தவர் பாட்டியின் முன் காண்பித்து,

“பெரியம்மா நீங்க சொன்னபடி அம்பாள் பாதத்துக்கு முன்னாடி வச்சு பூஜை பண்ணி எடுத்துட்டு வந்தாச்சி..” என்று அந்த ஐயர் கூற பாட்டியோ அவரிடம் புன்னகைத்தவர்,

“ஆரோண் இங்க வாப்பா..இங்க வந்து யாரா பக்கத்தில் நில்லு..” என்று கூப்பிட அவனோ சற்று தயங்கியவன் பின் அனைவர் முன்னால் காட்டிக் கொள்ளாமல் சாதாரணமாகவே வந்து அவள் அருகில் நின்றான்.

அவன் அருகில் வந்து நின்றதும் யாராவின் இதயம் வேகமாகத் துடித்தது.

அந்த சத்தம் அவனுக்கு கேட்டிருக்கும் போல சட்டென அவளைத் திரும்பி பார்க்க அவளோ தன் தலையை குனிந்துக் கொண்டாள்.

“ஆரோன் இந்த தாலிய யாரா கழுத்தில் கட்டுப்பா..” என்று பாட்டி கூற அவனோ அதிர்ந்துப் பாட்டியை பார்த்தான்.

“பாட்டி அவளுக்கு ஏற்கனவே தாலி கட்டி இருக்கேன். இது என்ன புதுசா..” என்று கேட்க,

“இல்லப்பா அதனால எதுவும் பிரச்சினை கிடையாது.. இது இந்த ஒரு வாரமும் பூஜைல இருந்து பூஜிக்கப்பட்ட தாலி ரொம்ப விசேஷமானது.. இத நீ அவள் கழுத்தில் கட்டும் போது உங்க ரெண்டு பேரோட இந்த பந்தம் ஜென்ம ஜென்மத்துக்கும் நீடிக்கும்.

இது அவ கழுத்துல கட்டு..” என்று சொல்ல அவனோ தங்கியவாறே நின்றுக் கொண்டிருந்தான்.

உடனே பாட்டி உட்பட எல்லாரும், “அவள் உன் பொண்டாட்டி தானே அவள் கழுத்துல தாலி கட்டுறதுக்கு நீ ஏன் இவ்வளவு யோசிக்கிற.. நல்ல நேரம் முடியறதுக்குள்ள தாலியை எடுத்து அவ கழுத்துல கட்டுப்பா..” என்று சொல்ல ஆரோனோ அதற்கு மேலும் முடியாது என்று சொல்லாமல் கண்களை மூடி திறந்தவன் கைகள் நடுங்க அந்த மாங்கல்யத்தை எடுத்து அவள் கழுத்தில் கட்டினான். யாராவிற்கு ஏக சந்தோஷம். ஆனந்தத்தில் அவள் கண்ணில் கண்ணீர் கூட வந்தது.

அதில் இரண்டு சொட்டு அவனுடைய கையை நனைக்க தன்னுடைய கையில் அவளுடைய கண்ணீர் விழவும் அவளை நிமிர்ந்து பார்த்தவன், “சாரி..” என்று அவளுக்கு மட்டும் கேட்கும்படி கூறினான்.

அவனுக்கோ அவளை மேலும் மேலும் இக்கட்டான சூழ்நிலையில் மாட்டி விடுகிறோம் என்று தோன்றியது.

அதனால் அவளிடம் மன்னிப்பை வேண்டினான்.

ஆனால் யாராவோ அவன் மன்னிப்பு கூறவும் அவளுடைய மனம் சட்டென உடைந்தது.

அப்போ அவருடைய மனதில் நான் இல்லையா..? என்று நினைத்துக் கொண்டாள்.

“ தம்பி இந்த குங்குமத்தை எடுத்து அந்த பொண்ணோட நெத்தியில வைங்கோ..” என்று அவன் முன்னே குங்குமத்தை நீட்ட அவனோ அதை மெதுவாக எடுத்து அவளுடைய நெற்றி வகுட்டில் அழகாக வைத்து விட்டான்.

அதை பார்த்த மற்ற அனைவரும் சந்தோஷப்பட்டனர்.

அதன் பின் ஐயர் ஒரு வஸ்திரத்தை எடுத்துக் கொண்டு வந்தவர்,

“தம்பி உங்க கையை முன்னாடி நீட்டுங்க..” என்று கூற அவனும் தன்னுடைய வலது கையை அவர் முன்னால் நீட்டினான்.

பின்பு யாராவிடம்,

“அம்மாடி நீயும் உன்னோட கையை தம்பியோட கை மேல வச்சுக்கோ..” என்று கூற அவளும் தன்னுடைய வலது கையை எடுத்து ஆரோனுடைய கை மேல் வைத்தாள்.

உடனே ஐயர் அந்த வஸ்திரத்தை கொண்டு இருவர் கையையும் இணைத்தபடி அதைச் சுத்தி கட்டி முடிச்சு போட்டுவிட்டு,

“தம்பி நீங்க ரெண்டு பேரும் இந்த கோவிலை மூணு முறை சுத்தி வாங்க.. கையைப் பிரிச்சி விடக்கூடாது இப்படியே இருக்கணும்..” என்று கூற அவனோ பாட்டியை ஏறிட்டு பார்க்க பாட்டியோ, “என்னப்பா போயிட்டு வா.. இது எல்லாம் உங்க நல்லதுக்காக தான்..” என்று கூறினார்.

அவனும் வேறு வழியில்லாமல் யாராவை அழைத்துக் கொண்டு அந்த கோவிலை சுற்றிவர ஆயத்தமானான்.

முன்னே அவன் செல்ல அவன் பின்னே அவனுடன் கையை இணைத்தவாறு யாரா நடந்து கொண்டிருந்தாள்.

அவர்கள் இருவரும் அந்த கோவிலைச் சுற்றிவர அங்கு திருவிழாவைப் பார்க்க வந்த அனைவருடைய பார்வையும் அவர்கள் இருவர் மீதே விழுந்ததன. இருவரும் மனம் ஒத்த ஜோடி போல நடந்து செல்ல அவர்களைப் பார்த்த அனைவருமே “நல்ல ஜோடி இல்ல.. எவ்வளவு அழகா இருக்காங்க..” என்று பேசும் வார்த்தைகள் அவர்கள் இருவருடைய காதிலும் விழுந்தது.

ஆனால் அவர்கள் எதையும் கண்டுகொள்ளாமல் அந்த கோவிலை மூன்று முறை சுற்றிக் கொண்டிருந்தார்கள்.

அவர்கள் சுத்தி முடித்து உள்ளே வர ஐயர் அந்த வஸ்திரத்தை பிரித்துவிட்டு,

“இனி உங்க வாழ்க்கையில ரொம்ப சந்தோஷமா இருப்பீங்க ரெண்டு பேரும்.. உங்களுடைய இந்த பந்தம் ஜென்ம ஜென்மத்துக்கும் தொடர்ந்து கொண்டே இருக்கும் அதுக்கு இந்த அம்பாள் உங்களுக்குத் துணையா இருப்பா சந்தோஷமா போயிட்டு வாங்க..” என்று கூறினார்.

பின்பு அனைவரும் ஒன்று இணைந்தாற் போல் கைகூப்பி அம்மனை வணங்கி விட்டு கோவிலை விட்டு வெளியே வந்தார்கள்.

தருண் ஆரோனிடம் ஓடி வந்தவன், “மாமா என்ன தூக்கு..” என்று கூற அவனோ அந்த குட்டி வாண்டைத் தூக்கி தன்னுடைய கையில் வைத்துக் கொண்டான்.

தருணோ தன்னுடைய பிஞ்சு கையால் அவனுடைய கன்னம் வருடியவன்,

“மாமா இன்னைக்கு நீ ரொம்ப அழகா இருக்க..” என்று அவன் கன்னத்தில் முத்தம் பதிக்க, அவனுடையத் தாடி அடர்ந்த இதழ்களோ புன்னகையில் விரிந்தன.

பின்பு அவனும் தருணுக்கு முத்தமிட்டான்.

அதன் பின் தருண் ஆரோனிடம் இருந்து கொண்டே யாராவை அழைத்து அவளுடைய கண்ணைத்திலும் முத்தம் பதிக்க, யாராவும் அதே போல தருணுக்கு முத்தம் வைக்கப் போக சரியாக அந்த நேரம் தருணோ தன்னுடைய தலையை பின்னால் சாய்த்துக் கொண்டான்.

அதனால் அவளுடைய முத்தம் ஆரோனின் கன்னத்தில் பதிந்தது. அதில் இருவருமே திடுக்கிட்டு ஒருவரை ஒருவர் பார்க்க தருணோடு சேர்ந்து மற்ற அனைவரும் சிரித்தார்கள்.

பின்பு தருண் ஆரோனிடமிருந்து இறங்கி கீழே வந்தவன் நேராக ஷாமின் அருகே சென்று அவனோடு ஹைபை அடித்துக் கொண்டான்.

அவனும் அவனுடைய கன்னம் கிள்ளி முத்தம் வைத்து அவனை தூக்கிக் கொண்டான்.

அவர்கள் அனைவரும் சந்தோஷமாக காரை நோக்கிச் சென்று கொண்டிருக்க இவ்வளவு நேரமும் அவர்களை கண்காணித்து கொண்டிருந்த இருவரில் ஒருவர் ஆரோனின் பின்னந்தலையில் கட்டையால் ஓங்கி அடித்தான்.

திடிரென்று நடந்த தாக்குதலில் ஆரோன் முன்னே குப்புற விழுந்தான். 

அதைக் கண்ட அனைவரும் அதிர்ச்சியில் உறைந்து நின்றார்கள்.

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.8 / 5. Vote count: 11

No votes so far! Be the first to rate this post.

2 thoughts on “ஆரலை அணைக்கும் ஆம்பல் அவளோ”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!