ஆரல் – 28
திடிரென நடந்த விடயத்தை கிரகிக்க முடியாமல் அனைவரும் அதிர்ந்து நிற்க, காற்றை கிழித்துக் கொண்டு மூன்று கார்கள் வந்து நின்றன.
அங்கு திருவிழாவைப் பார்க்க வந்த அனைவருமே யார் என்று பார்த்துக் கொண்டிருக்க அப்பொழுது ஆடம்பரமான ஒரு காரில் இருந்து பான்பராக்கை வெளியே துப்பியவாறே இறங்கினான் லால் திவாரி.
அவன் காரை விட்டு கீழே இறங்கியதும் அவனுடைய பாடி காட்ஸ் அவன் பின்னே வந்து நின்று கொண்டனர்.
யாரா ஆரோன் கீழே விழுந்ததும் “ஆஆருஊஊஊ..” என்று கத்தியவாறே அவனைத் தூக்க முற்பட்டாள்.
அதற்குள் ஆரோனை அடித்த அந்த தடியனோ யாராவின் பின்னங்கழுத்தை கொத்தாக பிடித்தவன் தரதரவெனை இழுத்துக் கொண்டு திவாரியின் அருகில் நின்று கொண்டான்.
மற்றவர்களோ இதை சற்றும் எதிர்பார்க்கவில்லை.
அவர்கள் தங்களை சமப்படுத்தி கொள்வதற்கு முன்னரே அனைத்தும் நடந்து முடிந்திருந்தன.
யாராவோ அவர்கள் பிடியில் சிக்கி இருந்தாலும் கண்கள் கலங்கியவாறே ஆரோணை அழைத்துக் கொண்டே இருந்தாள்.
ஆரோனோ பின்னந்தலையில் பலமாக அடித்ததால் பாதி மயக்கத்திற்குச் சென்றவன் தன்னுடைய கையால் பின்னந்தலையை அழுத்தியவாறே முயன்று எழுந்து நின்றான்.
அதற்குள் ஷாமும் திவ்யாவின் கணவரும் அவன் அருகில் வந்து அவனை தாங்கலாக பிடித்துக் கொள்ள திவாரியோ, “ஹஹஹஹஹ..” என அந்த இடமே அதிரும் அளவிற்குச் சிரித்தவன்,
“ஹரே சாலா பொடியண்டா நீ என்கிட்ட இருந்து இவளை காப்பாத்தலாம்னு நினைச்சியா.. பார்த்தியா.. எப்படி உன்னை அடிச்சிட்டு இவளை தூக்குனேன்னு பார்த்தியா..” என்று அவன் கொக்கரித்துக் கொண்டிருக்க ஆரோனுக்கோ பின்னந்தலையில் வலி சுளிர் என்று இருக்க கண்ணை கட்டிக் கொண்டு வந்தது.
தன்னுடைய தலையை இரு பக்கமும் ஆட்டினான்.
ஆனாலும் அவனால் நிலையாக நிற்க முடியவில்லை.
கொஞ்சம் கொஞ்சமாக முழு மயக்கத்திற்கு செல்ல போக அவனுடைய கண்களோ திவாரியின் அடியாள் கையில் சிக்கி இருக்கும் யாராவை ஒரு நிமிடம் பார்த்தது.
கண்ணீர் கன்னத்தை தாண்டி வழிந்து கொண்டிருக்க இவனுடைய பெயரை அழைத்துக்கொண்டே இருந்த யாராவை பார்த்தவனுக்கோ இதயம் வலித்தது.
ஏற்கனவே ரீனா அவனைத் தனியே தவிக்க விட்டு சென்று விட்டாள்.
அவள் அவனை விட்டு பிரியும் பொழுது அவள் எதற்காக இறந்தாள் என்று கூட அவனுக்குத் தெரியாது.
இப்பொழுது அவன் கண் எதிரே ரீனாவின் சாவிற்கு யார் காரணமாக இருந்தானோ அவனுடைய கையில் யாராவையும் பறிக் கொடுக்க அவன் விரும்பவில்லை.
ஷாமிடமும் திவ்யாவின் கணவரிடமும் இருந்து சட்டென விடுபட்டவன் தன்னுடைய இரண்டு கையாலும் அவனுடைய கன்னத்தை வேகமாக மாறி மாறி அறைந்து கொண்டு தன்னை நிதானத்திற்கு கொண்டு வந்தான்.
ஷாம், ஆரோன் திவ்யாவின் கணவர் மூவரும் திவாரியின் முன்னே வர அதற்குள் திவாரி அவனுடைய ஆட்களுக்கு கண்ணை காட்ட அதில் யாராவின் கழுத்தில் கத்தியை வைத்திருந்தவனோ,
“இன்னும் ஒரு அடி யாராவது முன்னாடி எடுத்து வச்சீங்கன்னா.. இவளோட சங்க அறுத்துருவேன்..” என்று மிரட்டினான்.
அதில் முன்னே வந்த மூன்று ஆண்களுமே அடுத்த அடி எடுத்து வைக்காமல் திடுக்கிட்டு நின்றார்கள்.
அப்பொழுது ஆரோன் பேச ஆரம்பித்தான்.
“என்ன டா மிரட்டுரியா..? அவளை நீ கொல்ல மாட்ட.. அவ உனக்கு தேவை.. எனக்கு நல்லாவே ..” என்று ஆரோன் சொல்ல அதற்கு திவாரியோ,
“அவள் எனக்குத் தேவைதான் இல்லைன்னு நான் சொல்லல.. அதுக்காக என்னோட உயிருக்கு ஆபத்து வரும் போது அவளை பலி கொடுக்கறதுல நான் யோசிக்கவே மாட்டேன்..” என்றான்.
அந்த நேரம் சட்டென ஆரோனின் கண்கள் யாராவைப் பார்த்தன.
அவளும் அவனைத் தானே பார்த்துக் கொண்டிருந்தாள்.
இருவருடைய கண்களும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டிருந்தன.
ஆரோன் கண்களாலேயே ‘நான் இருக்கேன்’ என்று அவளுக்கு உணர்த்த அவளுக்கு அது புரிந்தாலும் தன்னை இந்த அரக்கனின் பிடியில் இருந்து சீக்கிரம் காப்பாற்றி உன்னுடைய கை சிறைக்குள் பொத்தி வைத்துக் கொள் என்று சொல்லாமல் சொல்லியது அவளுடைய கண்கள்.
தன்னுடைய ஆட்களில் இரண்டு பேரை அழைத்து,
“இவன் உசுரோடவே இருக்க கூடாது. அடிங்கடா இவனை..” என்று சொல்ல அவர்களோ அவனை நெருங்கும் சமயம் ஷாமும் திவ்யாவின் கணவரும் அவனை மறைத்தாற் போல தடுத்து நின்றார்கள்.
உடனே வேறு இருவர்கள் வந்து அவர்கள் இருவரையும் ஆளுக்கொரு பக்கமாக பிடித்துச் சென்றுவிட ஆரோனை அந்த இருவரும் அனைவரின் கண் முன்னாடியே அவனை அடி அடி என்று அடித்துக் கொண்டிருந்தார்கள்.
அதை பார்த்துக் கொண்டிருந்த அனைவருக்கும் அதிர்ச்சியாக இருந்தது.
யாராவோ அவன் அடி வாங்குவதை பார்த்து தாங்க முடியாதவளாய் “ப்ளீஸ் தயவு செஞ்சு அவரை அடிக்காதீங்க.. என்ன கொன்னுடுங்க.. தயவு செஞ்சு அவர அடிக்காதீங்க.. விட்டுடுங்க… என்னால அவர் அடி வாங்குறதை பார்க்க முடியல.. ப்ளீஸ் நிறுத்துங்க..” என்று கதறிக் கொண்டிருந்தாள்.
அதைப் பார்த்து இளக்காரமாக புன்னகைத்த திவாரியோ,
“இது எல்லாம் உன்னால தான் ஒழுங்கா நாங்க சொன்னபடியே நீ கேட்டு நடந்து இருந்தா.. இப்போ இவன் உயிரோட இருந்திருப்பான். என்னோட சீக்ரெட் பிசினஸை இப்படி வெளியே தெரியிற மாதிரி கொண்டு வந்து விட்ட உன்னை அவ்வளவு சீக்கிரம் சாக விட்டுவிடுவேனா.. முதல்ல இவனை கொன்னுட்டு வரேன்.. அதுக்கப்புறம் உனக்கு பனிஷ்மென்ட் வேற மாதிரி இருக்கும்..” என்று கூற அவளுக்கோ அவன் சொல்வதெல்லாம் காதில் விழவில்லை.
அவள் கண் முன்னே ஆரோன் அடி வாங்குவதைப் பார்க்க முடியாதவள் அவனை விடும்படி கதறிக் கொண்டிருந்தாள்.
“சார் எனக்காக நீங்க யாருகிட்டயும் அடி வாங்காதீங்க சார்.. ப்ளீஸ் தயவு செஞ்சு திருப்பி அடிங்க சார் நீங்க இப்படி அடி வாங்குவறதை என்னால பார்க்க முடியல.. என் மனசு எல்லாம் வலிக்குது.. ப்ளீஸ் சார் தயவு செஞ்சு திருப்பி அடிங்க..” என்று அவள் கூறிக் கொண்டிருக்க அவள் கூறிய அனைத்தையும் அவன் கேட்டுக் கொண்டே தான் இருந்தான்.
ஆனாலும் அவள் கழுத்தில் கத்தி இருக்க தான் இப்போது ஒரு அடி முன்னே எடுத்து வைத்தாலும் கூட அது அவளுடைய உயிரை பாதிக்கும் என்று நினைத்தவன், அவர்கள் அடிக்கும் அடியை ஏதோ அல்வாவை சாப்பிடுவது போல் வாங்கிக் கொண்டிருந்தான்.
இறுதியாக திவாரி தன் கையில் வைத்திருந்த ஒரு பெரிய வாளை எடுத்தவன் ஆரோனை நெருங்க அனைவருமே அதைப் பார்த்து ஸ்தம்பித்து போனார்கள்.
யாராவோ “ஆரோன்..” என்று கத்தியவள்,
“வேண்டாம் வேண்டாம் அவரை ஒன்னும் பண்ணாதீங்க ப்ளீஸ்.. தயவு செஞ்சு விட்டுருங்க..” என்று அவனிடம் இருந்து விடுபட போராடினாள்.
அப்பொழுது தருண் குட்டியோ என்ன நினைத்தானோ யாருக்கும் தெரியாமல் பதுங்கியவாறே யாரா அருகில் சென்றவன், அவளை கத்தியால் பிடித்திருந்தவனின் தொடையில் வலுவாக கடித்து வைத்தான்.
அனைவருடைய கவனமும் திவாரியின் மேலும் ஆரோனின் மேலும் நிலைத்திருக்க, இந்த சிறிய வாண்டின் மேல் யாருடைய கவனமும் பதியவில்லை.
அவன் கடித்த வேகத்தில் அந்த அடியாள் கத்தியை கீழே போட்டு என்னவென்று திரும்பி பார்க்க தன்னுடைய கழுத்தில் இருந்து அவன் கத்தியை எடுக்கவும் கூட்டில் இருந்து வெளியே வரும் பறவை போல அவனிடம் இருந்து விலகியவள் தருணைத் தூக்கிக்கொண்டு ஆரோனின் அருகே வர அப்பொழுது ஆரோனை வெட்ட சென்ற திவாரியோ யாரா அவனிடம் இருந்து தப்பித்ததை பார்த்தவன், கையில் வைத்திருந்த வாளை அவளை நோக்கி வீசினான். இவ்வளவு நேரமும் அடி வாங்கிக் கொண்டிருந்த ஆரோன்
திவாரி யாராவின் மேல் வாளை வீசுவதைப் பார்த்தவன் தன்னை அடித்துக் கொண்டிருந்த இரு தடியர்களையும் ஒரு உதை உதைத்தவன் வேகமாக வந்து அவளை தன்னோடு அனைத்தவன் அங்கிருந்து விலகி நின்றான்.
அவன் அணைத்ததும் அவனுடைய அணைப்பில் இருந்தவாறே “ஆரூ உங்களுக்கு ஒன்னும் ஆகலையே..” என்று அவள் கேட்க அவனும் “எனக்கு ஒன்னும் ஆகல.. நான் நல்லா தான் இருக்கேன்…” என்றவன் தருண் கன்னத்தில் முத்தமிட்டு,
“தேங்க்ஸ் டா தருண் குட்டி..” என்றவன் இருவரையும் தன்னுடைய பெற்றோரிடம் விட்டவன் நேரே திவாரியின் முன்னே வந்தவன் எதைப் பற்றியும் யோசிக்காமல் அவனை அடிக்க போக அதற்குள் அவனுடைய அடியாட்கள் வந்து அவனை தடுத்தனர்.
ஆரோன் இருக்கும் வெறியில் தன்னைத் தடுக்க வந்த அத்தனை தடியர்களையும் புரட்டி புரட்டி எடுத்தான்.
அவர்கள் அனைவரும் இவ்வளவு நேரம் தாங்கள் அடிக்கும்போது அடி வாங்கியவனா இவன் என்று யோசிக்கும் அளவிற்கு இருந்தது அவனுடைய ஒவ்வொரு அடியும். சிறிது நேரத்தில் அனைவரையும் அவன் அடித்து வீழ்த்தியவன் திவாரியையும் வெளு வெளு என்று வெளுத்து விட்டான்.
அவனுக்கு இறுதியில் உயிர் மட்டுமே மிச்சம் இருக்க, அங்கு கீழே கிடந்த வாளை தன் காலால் எத்தி கையில் பிடித்தவன் இன்னொரு காலால் திவாரியின் நெஞ்சின் மீது அழுத்தமாக மிதித்து அந்த வாளை அவனுடைய கழுத்தில் பதித்தவாறே, “உன்னால பல வருஷத்துக்கு முன்னாடி என்னோட உயிருக்கும் மேலானவளை நான் இழந்துட்டேன் திரும்பவும் இன்னொருத்திய உன்கிட்ட இழக்குறதுக்கு நான் என்ன முட்டாளா..?” என்று அவன் கேட்க திவாரியோ அவனை புரியாமல் பார்த்தான்.
“என்ன அப்படி பார்க்கிற..? நீ என்ன கண்டுபிடிச்சி இங்க வந்தியா.. ஹஹஹ.. உன்னை இங்க வர வச்சதே நான் தாண்டா.. எப்படின்னு கேட்கிறாயா உன் ஆளுங்க என்னை தேடிக்கிட்டு இருக்கும் போது என் பிரண்ட அவங்க கண்ணுல படுற மாதிரி இந்த ஊருக்கு வர வெச்சதே நான்தான் டா.. நான் நினைச்ச மாதிரியே அவங்களும் அவனை பின்தொடர்ந்து வந்து நான் இங்க இருக்கிறதை கண்டுபிடிச்சு உனக்கு சொன்னாங்க.. நீயும் ஏதோ நீயே கண்டுபிடிச்ச மாதிரி பெரிய இவனாட்டும் இங்க வந்து நின்ன.. சோ நான் போட்ட பிளான் சக்சஸ் புல்ல முடிஞ்சிட்டு ஆனா என்ன கொஞ்சம் நான் அசந்துட்டேன். அதுல நீ ஜெயிச்சிடலாம்னு நினைச்சியா.. விடமாட்டேன் டா உன்ன உயிரோட இனி ஒரு நிமிஷம் கூட விட மாட்டேன்..” என்றவன் அந்த வாளை அவனுடைய கழுத்தில் வைத்து வேகமாக அழுத்த போக அதற்குள் ஷாம் வந்து அவனைப் பிடித்துக் கொண்டான்.
“ டேய் என்னடா பண்ற போதும்டா விடுடா.. இவனை கொன்னுட்டு நீ ஜெயிலுக்கு போகவா.. இவ்வளவு கஷ்டப்பட்டோம்..
அதான் போலீஸை வர சொல்லி இருக்கோம் தானே அவங்க வந்து பார்த்துப்பாங்க..” என்று ஷாம் சொல்ல அவனோ,
“டேய் விடுடா இவன மாதிரி ஒரு ஆள் இந்த பூமியில் வாழ தகுதியே இல்லை.. இவனால எத்தனை பொண்ணுங்க பாதிக்கப்பட்டு இருக்காங்க அதனால இவன உயிரோட நான் விடவே மாட்டேன்..” என்றவன் அவனிடம் இருந்து திமிரிக் கொண்டிருக்க அப்பொழுது அங்கு போலீஸ் ஜீப் இவர்களை நோக்கி வந்து கொண்டிருந்தது.
Athakalam dhan ponga.